அத்தியாயம் 47

மனுஷனும் நானும் ஒரு பொதுவான இலட்சியத்தைப் பகிரவும், பலன்களை அடைவதற்காகவும் மனுஷனின் ஜீவிதத்தை முதிர்ச்சிபெற வைக்க நான் எப்போதும் மனுஷர்களை மன்னித்து, அவர்கள் என் வார்த்தையில் இருந்து ஊட்டத்தையும் நிலைத்தன்மையையும் அடையவும் என்னுடைய ஏராளமான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளவும் அவர்களை அனுமதித்திருக்கிறேன். மனுஷன் சங்கடப்படும்படியான காரியத்தை நான் ஒருபோதும் கொடுத்ததில்லை, இருந்தாலும் மனுஷன் ஒருபோதும் என் உணர்வுகளை எண்ணிப்பார்த்தது இல்லை. இது ஏனென்றால் மனிதர்கள் உணர்வதில்லை மற்றும் என்னைத் தவிர எல்லாவற்றையும் “வெறுக்கிறார்கள்”. அவர்களது குறைபாட்டின் காரணமாக, நான் அவர்களுக்காக மிகவும் அனுதாபப்படுகிறேன்; எனவே நான் மனுதர்கள் உலகில் இருக்கும் காலத்தில் பூமியின் நிறைவை அவர்களது இருதய விருப்பத்தின் படி அனுபவிப்பதற்காக மிக அதிகமான முயற்சியை எடுத்திருக்கிறேன். நான் ஜனங்களை நியாயமற்ற முறையில் நடத்துவதில்லை. பல ஆண்டுகளாக என்னைப் பின்பற்றி வந்ததைக் கருத்தில் கொண்டு என்னுடைய இருதயம் அவர்களுக்காக இளகியிருக்கிறது. இந்த மனுஷர்களிடம் என்னால் கிரியை செய்ய முடியாததுபோல் இருக்கிறது. இவ்வாறு, தங்களை நேசிப்பதைப் போல என்னையும் நேசிக்கும் இந்த நோஞ்சான்களான ஜனங்களைப் பார்க்கும்போது என் இருதயத்தில் எப்போதும் ஒரு விவரிக்க முடியாத வலியை உணர்கிறேன். ஆனால் இதற்காக மரபுகளை யாரால் உடைக்க முடியும்? இதற்காக தன்னைத்தானே யார் தொந்தரவு செய்து கொள்வார்கள்? இருந்தாலும் கூட மனுஷன் நிறைவாக அனுபவிக்க என்னுடையவைகள் ஏராளமானவற்றை வழங்கி இருக்கிறேன், மேலும் இந்த விஷயத்தில் நான் மனுஷனைத் தவறாக நடத்தவில்லை. இதனால்தான் மனுஷன் இன்னும் என்னுடைய இரக்கமுள்ள மற்றும் நன்மைதரும் முகத்தைப் பார்க்கிறான். நான் எப்போதும் பொறுமையாக இருப்பதோடு எப்போதும் காத்திருக்கவும் செய்கிறேன். மனுஷர்கள் போதுமான அளவு அனுபவித்துச் சலிப்படைந்த பின்னர், அந்த நேரத்தில் நான் அவர்களது வேண்டுகோள்களை “நிறைவேற்றி” எல்லா மனுஷர்களும் தங்கள் வெறுமையில் இருந்து விடுபட அனுமதிப்பேன். அதற்குப் பின் மனுஷனுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன். பூமியில், மனுஷனை விழுங்க நான் கடல் நீரைப் பயன்படுத்தினேன், பஞ்சத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தினேன், பூச்சிகளின் வாதையால் பயமுறுத்தினேன், பலத்த மழையால் அவர்களுக்குத் “தண்ணீர்” அளித்தேன், ஆனாலும் அவர்கள் ஒருபோதும் ஜீவியத்தின் வெறுமையை உணரவில்லை. இப்போதும் கூட, ஜனங்கள் பூமியில் ஜீவிப்பதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய பிரசன்னத்தில் வாழ்வது மனுஷ வாழ்க்கையின் ஆழமான முக்கியத்துவமாக இருக்குமோ? எனக்குள் இருப்பது ஒருவரைப் பேரழிவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கிறதா? பூமியின் மேல் இருக்கும் மாம்ச சரீரங்களில் எத்தனை சுய மகிழ்ச்சி என்னும் விடுதலை நிலையில் வாழ்ந்திருக்கின்றன? மாம்சத்தில் வாழும் வெறுமையில் இருந்து தப்பியுள்ளது யார்? இருப்பினும் இதை அறிந்துகொள்ளக் கூடியது யார்? மனுக்குலத்தை நான் சிருஷ்டித்ததில் இருந்து பூமியில் மிகவும் முக்கியத்துவமான ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ முடியவில்லை, மேலும் இதனால் மனுக்குலம் எப்போதும் முற்றிலும் முக்கியத்துவம் அற்ற வாழ்க்கையைச் சோம்பேறித்தனமாக வாழ்ந்து வந்துள்ளது. இருப்பினும் இந்தத் தப்பிக்க முடியாத நிலையில் இருந்து ஒருவரும் தப்பிக்க விரும்பவில்லை, மற்றும் இந்த வெறுமையான மற்றும் களைப்படைந்த வாழ்க்கையைத் தவிர்க்க ஒருவரும் விரும்பவில்லை. மனுஷர்களின் அனுபவத்தில், என்னில் மகிழ்ச்சியாய் இருப்பதை அவர்கள் சாதகமாக்கிக் கொண்டாலும், மாம்சத்தில் வாழ்கிற யார் ஒருவரும் மனுஷ உலகத்தின் பழக்கவழக்கங்களில் இருந்து தப்பிப்பது இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இயற்கை தன் போக்கை எடுப்பதை அனுமதித்து அவர்கள் தங்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மனுக்குலத்தின் இருப்பை நான் ஒருமுறை முடித்துவிட்டால், பூமியில் “துன்புறுத்தலை” சகித்துக்கொள்ள ஒருவரும் இருக்க மாட்டார்கள்; அப்போதுதான் என்னுடைய பெரும் கிரியை முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டது என்று சொல்வது சாத்தியமாக இருக்கும். கடைசி நாட்களில் நான் மனுவுருவாக இருக்கும்போது, மாம்சத்தில் ஜீவிப்பதின் வெறுமையை ஜனங்களைப் புரிந்துகொள்ள வைப்பதே நான் நிறைவேற்ற விரும்பும் கிரியை, மேலும் நான் இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி மாம்சத்தை ஒழிப்பேன். அப்போதில் இருந்து, பூமியில் மனுஷர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், பூமியின் வெறுமையைக் குறித்து யாரும் கூக்குரலிட மாட்டார்கள், மாம்சத்தின் கஷ்டங்களைப் பற்றி யாரும் ஒருபோதும் மீண்டும் பேச மாட்டார்கள், நான் நியாயமாய் இல்லை என்று யாரும் ஒருபோதும் மீண்டும் குறை கூற மாட்டார்கள், மற்றும் எல்லா ஜனங்களும் பொருட்களும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். மனுஷர்கள் தங்களுக்கென பொருத்தமானதொரு சென்றடையும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பதால், அதன் பின்னர் அவர்கள் பரபரப்பாக ஓடித்திரிய மாட்டார்கள், பூமியில் அங்கும் இங்கும் தேடியலைய மாட்டார்கள். அந்தச் சமயத்தில், அவர்கள் முகங்களில் எல்லாம் புன்னகைகள் தோன்றும். அதன் பின் நான் மனுஷனிடம் அதிகமாக எதுவும் கேட்க மாட்டேன், மேலும் அவர்களோடு எனக்குத் தகராறு எதுவும் இருக்காது; எங்களுக்கு இடையில் இனிமேலும் சமாதான உடன்படிக்கை எதுவும் இருக்காது. நான் பூமியில் இருப்பேன், மனுஷர்கள் பூமியில் ஜீவித்திருப்பார்கள்; நான் அவர்களோடு ஜீவித்துத் தங்கி இருப்பேன். என்னுடைய பிரசன்னத்தின் இன்பத்தை அவர்கள் உணர்வார்கள், அதனால் காரணமின்றி அவர்கள் விட்டுச்செல்ல விரும்ப மாட்டார்கள், அதற்குப் பதிலாக நான் இன்னும் கொஞ்ச காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிந்துகொள்வார்கள். உதவி செய்ய ஒரு விரலைக் கூடத் தூக்காமல் பூமியின் அழிவை நான் எவ்வாறு நின்று பார்க்க முடியும்? நான் பூமியைச் சேர்ந்தவர் இல்லை; பொறுமையின் மூலம் இந்நாள் வரை நான் இங்கிருக்கும்படி என்னையே நான் வற்புறுத்தி வந்திருக்கிறேன். மனுஷனின் முடிவற்ற வேண்டுதல்கள் இல்லாமல் இருந்திருந்தால், நான் வெகுகாலத்துக்கு முன்னரே சென்றிருப்பேன். தற்போது ஜனங்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள முடியும். ஜனங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டதால் அவர்களுக்கு நான் ஊட்டவேண்டிய அவசியம் இல்லாததால் என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவை இல்லை. ஆகவே, நான் மனுஷர்களுடன் ஒரு “வெற்றி விழாவைக்” கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்குப் பின் நான் அவர்களிடம் இருந்து விடைபெறுவேன், அதனால் அவர்கள் அறியமாட்டார்கள். நிச்சயமாக, மோசமான உறவுடன் விடைபெறுதல் நல்ல விஷயம் அல்ல, ஏனெனில் எங்களுக்கு இடையில் எந்த ஒரு வெறுப்பும் இல்லை. இவ்வாறு, எங்களுக்கிடையில் இருக்கும் நட்பு என்றென்றைக்கும் இருக்கும். நாங்கள் பிரிந்தவுடன், மனுஷர்களால் என் “சுதந்தரத்தைத்” தொடர்ந்து கொண்டுசெல்ல முடியும், மேலும் என் ஜீவிதத்தில் நான் வழங்கிய போதனைகளை மறக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டார்கள் என்றும் என்னுடைய வார்த்தையைக் கவனத்தில் வைத்திருப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். நான் சென்ற பின்னர் மனுஷர்கள் என்னைத் திருப்திப்படுத்த தங்களால் முடிந்ததை எல்லாம் முயற்சி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்; அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு என்னுடைய வார்த்தையை அஸ்திபாரமாகப் பயன்படுத்துவார்கள், என்னுடைய நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில் என்னுடைய இருதயம் எப்போதும் மனுஷர்கள் பால் அக்கறையுள்ளதாக இருக்கிறது, நான் எப்போதும் அவர்களோடு இணைந்திருக்கிறேன். ஒருகாலத்தில் மனுஷனும் நானும் ஒன்று சேர்ந்தோம், பரலோகத்தில் இருக்கும் அதே ஆசீர்வாதங்களைப் பூமியில் அனுபவித்தோம். நான் மனுஷர்களோடு இணைந்து வாழ்ந்தேன், அவர்களோடு தங்கி இருந்தேன்; மனுஷர்கள் எப்போதும் என்னை நேசித்தார்கள், மற்றும் நானும் அவர்களை நேசித்தேன். எங்களுக்கிடையில் ஓர் இணக்கம் இருந்தது. மனுஷர்களோடு நான் ஒன்றாக இருந்த என்னுடைய காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது, எங்கள் நாட்கள் சிரிப்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்ததை நான் நினைவு கூருகிறேன், மேலும் சண்டைகளும் இருந்தன. இருந்தாலும், இந்த அடிப்படையிலேயே எங்களுக்கிடையில் அன்பு ஸ்தாபிக்கப்பட்டது, மற்றும் எங்கள் இருவருக்கும் இடையில் தொடர்புகள் ஒருபோதும் துண்டிக்கப்படவில்லை. எங்களது பல ஆண்டுகள் தொடர்பின் மத்தியில், மனுஷன் என் மீது ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறான். நானும் மனுஷன் அனுபவிப்பதற்காக அதிகமான விஷயங்களை அளித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் எப்போதும் என்னிடம் இரட்டிப்பு நன்றியுணர்வுடன் இருக்கிறார்கள், இப்போது, எங்கள் கூட்டம் முன்போல இருக்காது; எங்கள் பிரிவின் இந்தக் கணத்தை விட்டு யாரால் ஓடிப்போக முடியும்? மனுஷர்கள் என்னிடத்தில் ஆழமான அன்பு வைத்திருக்கிறார்கள், நானும் அவர்களிடத்தில் முடிவில்லாத அன்பு வைத்திருக்கிறேன்—ஆனால் அதை வைத்து என்ன செய்ய முடியும்? பரலோகத் தந்தையின் தேவைகளை மீற யார்தான் துணிவார்கள்? நான் என் வாசஸ்தலத்துக்குத் திரும்பிச் செல்வேன். அங்கு என் கிரியையின் இன்னொரு பகுதியைச் செய்துமுடிப்பேன். மீண்டும் ஒருமுறை நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மனுஷர்கள் மிக அதிகமாக வருத்தப்பட மாட்டார்கள் என்றும் பூமியில் அவர்கள் என்னைத் திருப்திப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்; பரலோகத்தில் இருக்கும் என் ஆவி அவர்கள் மேல் அடிக்கடி கிருபையை அளிக்கும்.

சிருஷ்டிப்பின் போது, கடைசி நாட்களில் என்னோடு ஒரே மனதாக இருக்கும் ஒரு கூட்ட ஜனங்களை நான் உண்டாக்குவேன் என்று தீர்க்கதரிசனம் உரைத்தேன். கடைசி நாட்களில் பூமியில் ஒரு முன்மாதிரியை நிறுவிய பின்னர், நான் என் வாசஸ்தலத்துக்குச் திரும்பிச் செல்வேன் என்று நான் முன்னுரைத்தேன். எல்லா மனுஷர்களும் என்னைத் திருப்திப்படுத்தியதும், நான் அவர்களிடம் கேட்டிருப்பதை அவர்கள் அடைந்திருப்பார்கள், மேலும் அதற்குமேல் அவர்களிடம் இருந்து எனக்கு வேறு எதுவும் தேவைப்படாது. அதற்குப் பதிலாக, மனுஷர்களும் நானும் பழைய நாட்களைப் பற்றிய கதைகளைப் பரிமாறுவோம், மேலும் அதற்குப் பிறகு நாங்கள் பிரிவோம். நான் இந்தக் கிரியையை ஆரம்பித்துவிட்டேன். மனுஷர்கள் உளவியல் ரீதியாகத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ளவும், என்னுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ளவும் நான் அவர்களை அனுமதித்திருக்கிறேன். இல்லை என்றால் அவர்கள் என்னைக் கொடூரமானவர் என்றும் இதயமற்றவர் என்றும் தவறாகப் புரிந்துகொள்வார்கள், அது என் எண்ணமல்லவே. மனுஷர்கள் என்னை நேசிக்கிறார்கள், இருந்தாலும் எனக்கு ஒரு பொருத்தமான ஓய்விடத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்களா? அவர்கள் எனக்காகப் பரலோகப் பிதாவிடம் மன்றாட விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்களா? மனுஷர்கள் எனக்காகப் பரிதபித்துக் கண்ணீர் சிந்தவில்லையா? பிதா மற்றும் குமாரனாகிய எங்களுக்கு இடையில் ஒரு துரிதமான மறு ஐக்கியத்தை அடைய அவர்கள் உதவி செய்யவில்லையா? பின் ஏன் அவர்கள் இப்போது விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்? பூமியில் என் ஊழியம் நிறைவடைந்துவிட்டது, மனுஷனிடம் இருந்து பிரிந்து சென்ற பிறகும், நான் இனிமேலும் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வேன்; இது நல்லதில்லையா? என் கிரியை சிறந்த பலன்களை அடைய, மேலும் அதனால் ஒருவருக்கொருவர் நன்மை பயப்பதாயிருக்க, வேதனையாக இருந்தாலும் நாங்கள் பிரிந்தாக வேண்டும். நம்முடைய கண்ணீர் அமைதியாகச் சிந்தட்டும்; நான் இனிமேலும் மனுஷனைக் கடிந்துகொள்ள மாட்டேன். கடந்த காலத்தில், நான் பல காரியங்களை ஜனங்களுக்குச் சொன்னேன், அவை எல்லாம் அவர்கள் இருதயங்களில் நிரம்பி இருந்து அவர்களை வேதனையின் கண்ணீரைச் சிந்த வைக்கிறது. அதற்காக நான் மனுஷர்களிடம் வருத்தம் தெரிவித்து அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அவர்கள் என்னை வெறுக்கக் கூடாது என்று அவர்களைக் கேட்கிறேன், ஏனெனில் இவை எல்லாம அவர்களுடைய நன்மைக்கே. ஆகையினால் மனுஷர்கள் என் இருதயத்தைப் புரிந்துகொள்ளுவார்கள் என்று நான் நம்புகிறேன். முந்தைய காலங்களில் நமக்குள் தகராறுகள் இருந்தன, ஆனால் பின்னோக்கிப் பார்க்கும்போது நாம் இருசாராருமே நன்மைகள் அடைந்திருக்கிறோம். இந்த தகராறுகளின் காரணமாக தேவனும் மனுஷனும் ஒரு நட்புப் பாலத்தைக் கட்டியுள்ளனர். நம்முடைய இணைந்த முயற்சியின் பலனல்லவா இது? நாம் எல்லாரும் இதை அனுபவிக்க வேண்டும். என்னுடைய முந்தைய “தவறுகளை” மன்னிக்கும்படி நான் மனுஷர்களிடம் கேட்கிறேன். அவர்களுடைய மீறுதல்களும் கூட மன்னிக்கப்படும். எதிர்காலத்தில் அவர்கள் எனக்கு அன்பைப் பதிலாகக் கொடுக்கும் வரை, பரலோகத்தில் அது என் ஆவிக்கு ஆறுதலை அளிக்கும். இது தொடர்பாக மனுஷனின் தீர்மானம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை—கடைசி வேண்டுகோளில் ஜனங்கள் என்னை திருப்திப்படுத்தப் போகிறார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என்னை நேசிக்க வேண்டும் என்பதைத் தவிர நான் அவர்களிடம் வேறு எதையும் கேட்கவில்லை. அது போதும். இதை அடைய முடியுமா? நமக்கு இடையில் நிகழ்ந்த எல்லா மகிழ்ச்சியற்ற விஷயங்களையும் கடந்த காலத்திலேயே விட்டு விடுவோம்; நமக்கு இடையில் எப்போதும் அன்பு மட்டுமே இருக்கட்டும். நான் மனிதர்களிடம் ஏரளமான அன்பைக் காட்டியிருக்கிறேன், மேலும் என்னை நேசிக்க அவர்கள் அதிக விலைக்கிரயத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி, எங்களுக்கு இடையில் இருக்கும் திடமானதும் தூயதுமான அன்பை மனுஷன் பொக்கிஷமாகப் போற்றுகிறான் என நான் நம்புகிறேன். இதனால் எங்கள் அன்பு மனுஷ உலகம் முழுவதும் நீட்டிக்கப்படும் மற்றும் என்றென்றைக்கும் கொண்டுசெல்லப்படும். நாம் மறுபடியும் சந்திக்கும்போது, நாம் இன்னும் அன்பாலே இணைந்திருப்போம். இதனால் நம் அன்பு நித்தியத்துக்குள்ளும் தொடரும். எல்லா ஜனங்களாலும் புகழப்பட்டு பரப்பப்படும். இது என்னைத் திருப்திப்படுத்தும். நான் என் புன்னகைக்கும் முகத்தை மனுஷனுக்குக் காண்பிப்பேன். மனுஷர்கள் என் அறிவுரைகளை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஜூன் 1, 1992

முந்தைய: அத்தியாயம் 46

அடுத்த: அத்தியாயம் 1

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக