அத்தியாயம் 42

சர்வ வல்லமையுள்ள தேவனுடைய செயல்கள் மகத்துவமானவை! எவ்வளவு அதிசயமானவையாய் இருக்கின்றன! எவ்வளவு ஆச்சரியமானவையாய் இருக்கின்றன! ஏழு எக்காளங்களும் முழங்குகின்றன, ஏழு இடிமுழக்கங்களும் முழங்குகின்றன, ஏழு கலசங்களும் ஊற்றப்படுகின்றன—இவை உடனடியாக வெளிப்படையாக வெளிப்படுத்தப்படும், மேலும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. தேவனுடைய அன்பு நமக்கு தினமும் கிடைக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும்; நாம் துரதிர்ஷ்டத்தைச் சந்திக்கிறோமா அல்லது ஆசீர்வாதத்தைச் சந்திக்கிறோமா என்பது முற்றிலும் அவரிடமே உள்ளது, மேலும் மனுஷர்களாகிய நம்மிடம் இதைத் தீர்மானிக்க வழியே இல்லை. தங்கள் முழு இருதயத்தோடும் தங்களை அர்ப்பணிப்பவர்கள் நிச்சயமாக ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், அதே சமயம் தங்கள் ஜீவனைக் காத்துக் கொள்ள முயல்பவர்கள் தங்கள் ஜீவனை இழந்து போவார்கள்; எல்லா விஷயங்களும் எல்லா காரியங்களும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரங்களில் உள்ளன. இனி ஒருபோதும் உங்களது முன்னேறிச் செல்லுதலை நிறுத்த வேண்டாம். வானத்திலும் பூமியிலும் மிகப்பெரிய மாற்றம் வருகிறது, அதிலிருந்து மனுஷன் மறைந்து கொள்ள முடியாது. கசப்பான வேதனையில் புலம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்காது. இன்று பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையைப் பின்பற்றுங்கள். மற்றவர்களால் நினைவூட்டப்பட வேண்டிய அவசியமின்றி, அவருடைய கிரியை எந்தப் படிக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பற்றி உங்களுக்குள் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்களால் முடிந்தவரை அடிக்கடி சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமூகத்திற்கு இப்போதே திரும்புங்கள். எல்லாவற்றிற்காகவும் அவரிடம் கேளுங்கள். அவர் நிச்சயமாகவே உன்னை உள்ளாகப் பிரகாசிப்பிப்பார், மேலும் முக்கியமான தருணங்களில், அவர் உன்னைப் பாதுகாப்பார். பயப்பட வேண்டாம்! அவர் ஏற்கனவே உன்னுடைய முழு இருப்பையும் வைத்திருக்கிறார். அவருடைய பாதுகாப்பு மற்றும் அவரது கவனிப்பு இருப்பதால், நீ பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்று தேவனுடைய சித்தத்திற்கான பலன் நெருங்கி விட்டது, பயப்படுகிற எவனும் நஷ்டமடைவான். நான் உனக்குச் சொல்வது சத்தியமாகும். உன்னுடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்துபார்: பரலோகம் ஒரு நொடிப் பொழுதில் மாறிப் போகலாம், ஆனால் நீ பயப்பட வேண்டியது என்ன? அவரது கரத்தின் சிறிய அசைவால், வானமும் பூமியும் உடனடியாக அழிக்கப்படுகின்றன. அப்படியென்றால், மனுஷன் வருத்தப்படுவதன் மூலம் எதை அடைய முடியும்? எல்லாம் தேவனுடைய கரங்களில் இல்லையா? வானமும் பூமியும் மாறும்படி அவர் கட்டளையிடுவாரானால், அப்பொழுது அவைகள் மாறிவிடும். நாம் முழுமையடைய வேண்டும் என்று அவர் கூறுவாரானால், அப்போது நாம் முழுமையடைந்துவிடுவோம். மனுஷன் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் அமைதியாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும். ஆயினும்கூட, நீங்கள் உங்களால் முடிந்தவரை கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். பரலோகம் ஒரு நொடிப்பொழுதில் மாறிப்போகலாம்! இருப்பினும், மனுஷன் தன் திறந்திருக்கும் கண்களை எவ்வளவு விரிவாகத் திறந்தாலும், அவனால் எதையும் அதிகமாகப் பார்க்க முடியாது. இப்போது விழிப்புடன் இருங்கள். தேவனுடைய சித்தம் நிறைவேறியிருக்கிறது, அவருடைய செயல்திட்டம் நிறைவேறியிருக்கிறது, அவருடைய திட்டம் வெற்றியடைந்திருக்கிறது, அவருடைய குமாரர்கள் அனைவரும் அவருடைய சிங்காசனத்திற்கு வந்துவிட்டார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுடன் இணைந்து அனைத்துத் தேசங்களையும் அனைத்து ஜனங்களையும் நியாயந்தீர்க்க அவர்கள் ஒன்றாக வருகிறார்கள். திருச்சபையைத் துன்புறுத்தி, தேவனுடைய குமாரர்களுக்குத் தீங்கு விளைவித்துக் கொண்டிருப்பவர்கள் கடுமையான தண்டனையைச் சந்திப்பார்கள்: அது நிச்சயம்! தேவனுக்கென்று உண்மையாக தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுப்பவர்களையும், எல்லாவற்றையும் பற்றிக்கொள்பவர்களையும், தேவன் ஒருபோதும் மாறாதவராய், நிச்சயமாய் என்றென்றும் அவர்களை நேசிப்பார்!

முந்தைய: அத்தியாயம் 41

அடுத்த: அத்தியாயம் 43

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த...

தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள...

மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்

பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக...

தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

“மக்களின் திறனை வளர்த்தல்” என்பதற்கு “நீங்கள் உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்று அர்த்தமாகும். இதன் மூலம் உங்களால்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக