தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது

நீங்கள் அடைவதற்கு அநேக காரியங்கள் உள்ளன என நான் நம்புகிறேன், ஆனாலும் நான் கேட்பதை நிறைவேற்ற, உங்கள் கிரியைகள் அனைத்தாலும், உங்கள் ஜீவனைக் குறித்த அனைத்தாலும் முடியவில்லை, எனவே நான் நேராகக் கருத்துக்கு வந்து என் சித்தத்தை உங்களுக்கு விளக்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களின் பகுத்தறிதல் மோசமானதாக இருப்பதாலும் மற்றும் உங்களின் புரிதல் இதேபோல் மோசமானதாக இருப்பதாலும், நீங்கள் எனது மனநிலையையும் சாராம்சத்தையும் முற்றிலும் அறியாதவர்களாக இருக்கின்றீர்கள். ஆகவே அவற்றைக் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது ஓர் அவசர காரியமாகும். இந்தச் சிக்கல்களை எந்த அளவிற்கு நீ முன்பு புரிந்து கொண்டாலும் பரவாயில்லை, நீ எவ்வளவு புரிந்துகொள்ள விரும்பினாலும், அவற்றை நான் இன்னும் விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும். இந்தச் சிக்கல்கள் உங்களுக்கு முற்றிலும் அந்நியமானவை அல்ல, ஆனாலும் உங்களுக்கு அவற்றில் உள்ள அர்த்தத்தைக் குறித்து அதிகப் புரிதலும், அதிக பரிச்சயமும், இருப்பதில்லை. உங்களில் அநேகருக்கு அதைக் குறித்து தெளிவில்லாத மற்றும் ஓரளவு மற்றும் அரைகுறையாக புரிதல் மட்டுமே உள்ளது. சத்தியத்தை நன்றாக கைக்கொள்ள, அதாவது என் வார்த்தைகளை நன்றாக கைக்கொள்ள உங்களுக்கு உதவுவதற்கு இந்தப் பிரச்சனைகளைத்தான் நீங்கள் முதலும் முக்கியமாக அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் விசுவாசம் தெளிவற்றதாகவும், பாசாங்குத்தனமாகவும், மதத்தின் கண்ணிகளால் நிரப்பப்பட்டதாகவும் இருக்கும். தேவனின் மனநிலையை நீ புரிந்து கொள்ளாவிட்டால், நீ அவருக்காகச் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது உனக்கு சாத்தியமில்லை. தேவனின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ அவரிடம் பயபக்தியையும் பயத்தையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, கவனக்குறைவான வேடிக்கையான தன்மையும் இரண்டகம் பேசுவதும் மேலும், திருத்த முடியாத தேவதூஷணமும் மட்டுமே இருக்கும். தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது உண்மையில் முக்கியமானது என்றாலும், தேவனின் சாரத்தை அறிந்து கொள்வதை கவனிக்காதிருக்க முடியாது என்றாலும், இந்த பிரச்சினைகளைக் குறித்து யாரும் முழுமையாக ஆராயவோ அல்லது அதற்குள் மூழ்கிடவோ இல்லை. நான் வழங்கிய நிர்வாகக் கட்டளைகளை நீங்கள் அனைவரும் தள்ளிவிட்டீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது பெரும்பாலும் நிகழக்கூடியதே. அவருடைய மனநிலைக்கு இடறலுண்டாக்குவது தேவனின் கோபத்தைத் தூண்டுவதற்கு ஒப்பாகும், இந்நிலையில் நிர்வாகக் கட்டளைகளை மீறுவதே உன்னுடைய கிரியைகளின் கடைசிப் பலனாக இருக்கும். தேவனின் சாராம்சத்தை நீ அறிந்திருக்கும்போது, அவருடைய மனநிலையையும் நீ புரிந்துகொள்ள முடியும் என்பதை இப்போது நீ உணர வேண்டும். அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ளும்போது, நிர்வாகக் கட்டளைகளையும் நீ புரிந்துகொள்வாய். நிர்வாகக் கட்டளைகளில் உள்ளவற்றில் பெரும்பாலானவை தேவனின் மனநிலையைத் தொடுகிறது என்று சொல்லத் தேவையில்லை, ஆனால் அவருடைய மனநிலை எல்லாம் நிர்வாகக் கட்டளைகளுக்குள் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, தேவனின் மனநிலையைப் பற்றிய உங்கள் புரிதலை வளர்ப்பதில் நீங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.

சாதாரண உரையாடலைப் போல இல்லாமல் நான் இன்று உங்களுடன் பேசுகிறேன், எனவே என் வார்த்தைகளை கவனமாக அணுகவும், மேலும், அவை மீது ஆழமாக பிரதிபலிக்கவும் உங்களை கடமைக்குள்ளாக்குகிறது. இதனால் நான் கூறுவது என்னவென்றால், நான் பேசியிருக்கிற வார்த்தைகளுக்கு நீங்கள் மிகக் குறைந்த முயற்சியை அர்ப்பணித்திருக்கிறீர்கள். தேவனின் மனநிலையைப் பற்றி சிந்திக்க நீங்கள் இன்னும் குறைவாகவே விருப்பம் கொண்டிருக்கிறீர்கள். அதை யாராவது அரிதாகவே முயற்சி செய்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக உங்கள் விசுவாசம் மாயப் பேச்சு முறையே தவிர வேறில்லை என்று நான் சொல்கிறேன். இப்போது கூட, உங்களில் ஒருவர் கூட உங்கள் மிக முக்கியமான பலவீனத்திற்கு எந்தவொரு தீவிர முயற்சியையும் அர்ப்பணிக்கவில்லை. நான் உங்களுக்காக அனைத்து வலிகளையும் ஏற்றுக் கொண்ட பிறகும், நீங்கள் என்னைத் தாழ்த்திவிட்டீர்கள். நீங்கள் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை மற்றும் உங்கள் வாழ்க்கை சத்தியமற்றது என்பதில் ஆச்சரியமில்லை. அத்தகையவர்களை எவ்வாறு புனிதர்களாகக் கருத முடியும்? இதுபோன்ற ஒரு காரியத்தைப் பரலோகத்தின் பிரமாணம் பொறுத்துக்கொள்ளாது! உங்களுக்கு இதைப் பற்றி மிகக் குறைவான புரிதல் இருப்பதால், மூச்சை அதிகமாகப் பிரயோகிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

தேவனின் மனநிலை என்பது அனைவருக்கும் மிகச்சுருக்கமாகத் தெரியும் ஒரு காரியமாகும், மேலும், அது யாரும் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானதல்ல, ஏனென்றால் அவருடைய மனநிலை ஒரு மனிதனின் குணாதிசயத்தைப் போன்றதல்ல. தேவனும், தனது சொந்த உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார், ஆனால் இந்த உணர்ச்சிகள் மனிதனின் உணர்ச்சிகளிலிருந்து வேறுபடுகின்றன. தேவன் தேவன்தான், அவரிடம் உள்ளவற்றையே அவர் பெற்றிருக்கிறார். அவர் வெளிப்படுத்துவதும் மற்றும் தெரியப்படுத்துவதும் எல்லாம் அவருடைய சாராம்சமாகும் மற்றும் அவரது தனித்துவத்தை உருவகப்படுத்துபவையாகும். அவர் என்னவாக இருக்கிறார், அவரிடம் உள்ளவை எவை, அத்துடன் அவருடைய சாராம்சம் மற்றும் தனித்துவத்துவம் ஆகியவை எந்தவொரு மனிதனாலும் மாற்ற முடியாத காரியங்களாகும். அவரது மனநிலையானது மனிதகுலத்தின் மீதான அவரது அன்பு, மனிதகுலத்தின் மீதான ஆறுதல், மனிதகுலத்தின் மீதான வெறுப்பு மற்றும் இன்னும் அதிகமாக, மனிதகுலத்தைப் பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதலை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், மனிதனின் குணாதிசயம் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பானதாகவும், உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம். தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, மேன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத ஓர் அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்). அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது. ஆனால் மனிதனின் குணாதிசயம் என்பது மிருகத்தின் மீதான மனிதனின் சிறிய மேன்மையின் வெறும் அடையாளத்திற்கு மேலானதல்ல. மனிதனுக்கு அவனுக்குள்ளும், அவனைப் பற்றியும், எந்த அதிகாரமும் இல்லை, சுய உரிமையும் இல்லை, சுயத்தை மீறும் திறனும் இல்லை, ஆனால் அவனது சாராம்சத்தில் ஜனங்களின் எல்லா வகையான நடத்தைகளின், நிகழ்வுகளின் மற்றும் காரியங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழானவனாக முடங்கிப்போகிறான். இருள் மற்றும் தீமைகள் அழிக்கப்படும் காரணத்தால் நீதியும் வெளிச்சமும் இருப்பதும் மற்றும் வெளிப்படுவதும் தேவனின் சந்தோஷம் ஆகும். மனிதகுலத்திற்கு வெளிச்சத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவருவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவரது மகிழ்ச்சி ஒரு நீதியான மகிழ்ச்சி, நேர்மறையானவை அனைத்தும் இருப்பதற்கான அடையாளமாகவும், அதைவிட, ஜெயத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தீமை மற்றும் இருள் இருப்பதாலும், சத்தியத்தை விரட்டும் காரியங்கள் இருப்பதாலும், இன்னும் அதிகமாக, நன்மையான மற்றும் அழகாக இருப்பதை எதிர்க்கும் காரியங்கள் இருப்பதாலும், அநீதியின் நிகழ்வும் மற்றும் குறுக்கீடும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தீங்கே தேவனின் கோபத்திற்கு காரணமாகும். அவருடைய கோபமானது எதிர்மறையானவை எல்லாம் இனி இருக்காது என்பதற்கான அடையாளமாகும், அதற்கும் மேலாக, அது அவருடைய பரிசுத்தத்தின் அடையாளமாகும். அவருடைய துக்கம் மனிதகுலத்தினால் ஏற்படுகிறது, அவனுக்காக அவர் நம்பிக்கை வைத்துள்ளார், ஆனால் அவன் இருளில் விழுந்திருக்கிறவன், ஏனென்றால் அவர் மனிதனில் செய்யும் கிரியை அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்காது, மேலும் அதனால் அவர் நேசிக்கும் மனிதகுலத்தவர் அனைவருமே வெளிச்சத்தில் வாழ முடியாது. குற்றமற்ற மனிதகுலத்துக்காகவும், நேர்மையான ஆனால் ஏதுமறியாத மனிதனுக்காகவும், நல்லவனாக இருந்தும் தன் சொந்தக் கருத்துக்கள் இல்லாதவனுக்காகவும் அவர் துக்கப்படுகிறார். அவரது துக்கமானது அவருடைய நற்குணம் மற்றும் அவரது இரக்கத்தின் அடையாளமாகும், இது அழகு மற்றும் தயவின் அடையாளமாகும். அவருடைய மகிழ்ச்சி, நிச்சயமாக, அவருடைய எதிரிகளைத் தோற்கடித்து, மனிதனின் நேர்மையான எண்ணங்களை ஆதாயமாக்குகிறது. இதை விட, இது எதிரியின் அனைத்து வல்லமைகளையும் வெளியேற்றுவதிலிருந்தும் அழிப்பதிலிருந்தும் எழுகிறது, ஏனென்றால் மனிதகுலம் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையைப் பெறுகிறது. தேவனின் மகிழ்ச்சி மனிதனின் மகிழ்ச்சியைப் போன்றதல்ல. மாறாக, இது நல்ல பழங்களைக் களஞ்சியத்தில் சேர்ப்பது போன்ற உணர்வாகும், இது மகிழ்ச்சியை விட பெரிய உணர்வாகும். இவரது மகிழ்ச்சி, இந்த நேரத்திலிருந்து மனிதகுலம் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான அடையாளமாகும், மேலும் மனிதகுலம் வெளிச்சத்தின் உலகத்தில் நுழைவதின் அடையாளமாகும். மறுபுறம் மனிதகுலத்தின் உணர்ச்சிகள் எல்லாம், நீதிக்காகவோ, வெளிச்சத்திற்காகவோ அல்லது அழகானதற்காகவோ, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தால் வழங்கப்பட்ட கிருபைக்காகவோ அல்ல, அவனது சொந்த நலன்களுக்காகவே தோன்றுகின்றன. மனிதகுலத்தின் உணர்ச்சிகள் சுயநலமானவை மற்றும் இருளின் உலகத்தைச் சேர்ந்தவை. அவை தேவனுடைய சித்தத்தின் பொருட்டும் இல்லை, தேவனின் திட்டத்தின் பொருட்டும் இல்லை, எனவே மனிதனையும் தேவனையும் ஒருசேர்ந்தாற்போலப் பேச முடியாது. தேவன் என்றென்றும் உயர்ந்தவர், எப்போதும் மேன்மையுள்ளவர், அதே சமயம் மனிதன் என்றென்றும் இழிவானவன், என்றென்றும் பயனற்றவன். இது ஏனென்றால், தேவன் என்றென்றும் தியாகங்களைச் செய்கிறார், மனிதகுலத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிறார். இருப்பினும், மனிதன் என்றென்றும் தனக்காக மட்டுமே மேற்கொண்டு முயலுகிறான். மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர். தேவன் நீதியானதும், நல்லதும், அழகானதுமான எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார், அதே நேரத்தில் மனிதன் எல்லா அருவருப்புகளையும் தீமையையும் வெளிப்படுத்துவதில் வெற்றியடைகிறான். தேவன் ஒருபோதும் தனது நீதியின் மற்றும் அழகின் சாராம்சத்தை மாற்றமாட்டார், ஆனாலும் மனிதன் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதிக்குத் துரோகம் செய்யவும் தேவனிடமிருந்து விலகிச் செல்வதற்கும் மிகவும் திறனுள்ளவனாக இருக்கிறான்.

நான் பேசிய ஒவ்வொரு வாக்கியத்திலும் தேவனின் மனநிலை இருக்கிறது. நீங்கள் என் வார்த்தைகளைக் கவனமாக நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து பெரிதும் ஆதாயம் அடைவீர்கள். தேவனின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம், ஆனால் உங்கள் அனைவருக்கும் தேவனின் மனநிலையைப் பற்றி குறைந்தபட்ச கருத்தாவது இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படியானால், நீங்கள் மேலும் தேவனின் மனநிலையைப் புண்படுத்தாமல் நீங்கள் செய்தவற்றை எனக்கு அதிகமாகக் காண்பிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்போது எனக்கு உறுதியளிக்கப்படும். உதாரணமாக, தேவனை எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தில் வைத்திரு. நீ கிரியை செய்யும்போது, அவருடைய வார்த்தைகளின்படி செய். எல்லாவற்றிலும் அவருடைய நோக்கங்களைத் தேடு, தேவனை அவமதிக்கும் மற்றும் அவமானமான கிரியைகளைச் செய்வதைத் தவிர். உன் இருதயத்தில் எதிர்கால வெறுமையை நிரப்ப தேவனை சிறிதளவேனும் உன் மனதின் பின்புறத்தில் வைக்கக் கூடாது. நீ இதைச் செய்தால், நீ தேவனின் மனநிலையைப் புண்படுத்தியிருப்பாய். மீண்டும், உன் வாழ்நாள் முழுவதும் நீ ஒருபோதும் தேவனுக்கு எதிராக இழிவுபடுத்தும் கருத்துக்களையோ, புகார்களையோ கூறுவதில்லை என்பதாலும், மறுபடியும், அவர் உன்னிடம் ஒப்படைத்த எல்லாவற்றையும் நீ சரியாக வெளிப்படுத்த முடிகிறது என்பதாலும், மற்றும் அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் உன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்க முடிகிறது என்பதாலும், நீ நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக மீறுவதைத் தவிர்ப்பாய். உதாரணமாக, “அவர் தேவன் என்று நான் ஏன் நினைக்கவில்லை?” “இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் சில ஞானத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்,” “என் கருத்துப்படி, தேவன் செய்யும் எல்லாம் சரியானதாக இருக்க அவசியமில்லை,” “தேவனின் மனிதத்தன்மை என்னுடையதை விட உயர்ந்ததல்ல,” “தேவனின் வார்த்தைகள் வெறுமனே நம்பமுடியாதவை,” அல்லது இதுபோன்ற வேறு தவறானக் கருத்துக்களை நீ எப்போதாவது கூறியிருந்தால், உன் பாவங்களை அடிக்கடி அறிக்கையிட்டு மனந்திரும்பும்படி நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இல்லையெனில், நீ ஒருபோதும் மன்னிப்பிற்கான வாய்ப்பைப் பெற மாட்டாய், ஏனென்றால் நீ ஒரு மனிதனை அல்ல, ஆனால் தேவனையே புண்படுத்துகிறாய். நீ ஒரு மனிதனை நியாயந்தீர்க்கிறாய் என்று நீ நம்பலாம், ஆனால் தேவனுடைய ஆவியானவர் அதை அவ்வாறு கருதுவதில்லை. அவருடைய மாம்சத்திற்கு நீ இடறலுண்டாக்குவது அவரை அவமதிப்பதற்கு சமம். இது அப்படியே இருப்பதால், நீ தேவனின் மனநிலையை புண்படுத்தியிருக்கவில்லையா? தேவனுடைய ஆவியானவரால் செய்யப்படும் எல்லாம் மாம்சத்தில் அவருடைய கிரியையைப் பாதுகாப்பதற்காகவும், இந்தக் கிரியை சிறப்பாகச் செய்யப்படுவதற்காகவும் செய்யப்படுகிறது என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இதைப் புறக்கணித்தால், நீ தேவனை விசுவாசிப்பதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாத ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ தேவனின் கோபத்தைத் தூண்டிவிட்டாய், எனவே அவர் உனக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப் பொருத்தமான தண்டனையைப் பயன்படுத்துவார்.

தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வது அற்பமான காரியம் அல்ல. அவருடைய மனநிலையை நீ புரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில், நீ படிப்படியாகவும் அறியாமலும் தேவனின் சாராம்சத்தை அறிந்து கொள்வாய். இந்த அறிவுக்குள் நீ நுழைந்ததும், உயர்ந்த மற்றும் அழகான நிலைக்குள் நீ அடியெடுத்து வைப்பதை நீ காண்பாய். முடிவில், நீ உன் அருவருப்பான ஆத்துமாவைப் பற்றி வெட்கப்படுவாய், மேலும், உன் அவமானத்திலிருந்து மறைந்து கொள்ள இடமில்லை என்று உணருவாய். அந்த நேரத்தில், தேவனின் மனநிலையைப் புண்படுத்துவது குறைவாகவும் அதற்கான உன் நடத்தையும் குறைவாகவும் இருக்கும், உன் இருதயம் தேவனின் இருதயத்திற்கு அருகில் நெருக்கமாக வரும், மேலும் உன் இருதயத்தில் அவர் மீதான அன்பு படிப்படியாக வளரும். இது மனிதகுலம் ஓர் அழகான நிலைக்குள் நுழைவதற்கான அறிகுறியாகும். ஆனால் இதுவரை, நீங்கள் இதை அடைந்திருக்கவில்லை. உங்கள் விதியின் பொருட்டு நீங்கள் அனைவரும் விரைந்து செல்லும்போது, தேவனின் சாராம்சத்தை அறிய முயல்வதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? இது தொடர வேண்டுமா, ஏனென்றால் நீங்கள் தேவனின் மனநிலையை மிகக் குறைவாகவே புரிந்துகொள்வதால் நீங்கள் அறியாமலேயே நிர்வாக கட்டளைகளுக்கு எதிராக அத்துமீறுவீர்கள். எனவே, நீங்கள் இப்போது செய்வது தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் குற்றங்களுக்கு ஓர் அஸ்திபாரத்தை அமைக்கிறது அல்லவா? நீங்கள் தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது எனது கிரியையிலிருந்து விலகியிருக்கவில்லை. நிர்வாகக் கட்டளைகளுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி அத்துமீறினால், உங்களில் யார் தண்டனையிலிருந்து தப்புவார்கள்? அப்போது எனது கிரியை முற்றிலும் வீணாகியிருக்கும் அல்லவா? எனவே, நான் இன்னும் கேட்கிறேன், உங்கள் சொந்த நடத்தையை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் உங்களிடம் முன்வைக்கும் உயரிய கோரிக்கையும் இதுதான், நீங்கள் அனைவரும் இதைக் கவனமாகக் கருத்தில் கொண்டு உங்கள் ஊக்கமான நோக்கத்தை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கிரியைகள் என் ஆத்திரத்தை மிகவும் தூண்டுகிற ஒரு நாள் வந்தால், பின்விளைவுகள் உங்களுடையதாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், உங்களுக்குப் பதிலாக தண்டனையைத் தாங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

முந்தைய: மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்

அடுத்த: பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக