அத்தியாயம் 7

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களின் வளர்ச்சியானது ஆவிக்குள் நமது பின்வாங்குதலை வேகப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர் வருத்தப்படுகிறாரா இல்லையா என்பதைப் புறக்கணித்து, கடினமான இருதயத்துடன் செயல்பட வேண்டாம், மற்றும் அறிவாளியாக இருக்க முயற்சிக்க வேண்டாம். மனநிறைவு மற்றும் சுய திருப்தி அடைய வேண்டாம் அல்லது உன் சொந்தக் கஷ்டங்களை அதிகமாக்க வேண்டாம். செய்ய வேண்டிய ஒரே விஷயம் ஆவியிலும் உண்மையிலும் தேவனை வழிபடுவதாகும். தேவனின் வார்த்தைகளை உன்னால் விட்டுவிட முடியாது அல்லது அவற்றைக் கேட்காதிருக்கவும் முடியாது; நீ அவற்றைக் கவனமாகக் கண்டறிய வேண்டும், உன் ஜெப வாசிப்புகளை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும், மற்றும் வார்த்தைகளுக்குள் இருக்கும் ஜீவனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஜீரணித்துக் கொள்ள உனக்கு நேரம் வழங்காமல் அவற்றை வேகமாக உட்கொண்டு வீண் செயல்களில் ஈடுபட வேண்டாம். அனைத்திலும் நீ தேவனின் வார்த்தைகளைச் சார்ந்திருக்கிறாயா? ஒரு குழந்தையைப் போல் தற்பெருமை பேசி, பிறகு ஒரு பிரச்சனை தோன்றும்போது குழப்பமடைய வேண்டாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் நீ உன் ஆவியை உபயோகிக்க வேண்டும்; ஒரு கணம் கூட நீ ஓய்வெடுக்கக்கூடாது. நீ ஒரு முனைப்பான ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். நீ எந்த நபரை, நிகழ்வை, அல்லது விஷயத்தை எதிர்கொள்கிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ தேவன் முன் வந்தால், நீ பின்பற்றுவதற்கான ஒரு பாதையைப் பெறுவாய். நீ ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும், அலட்சியமாக இல்லாமல் அவற்றின் அர்த்தத்தைக் கண்டறிய வேண்டும், அதிக முயற்சியை மேற்கொண்டு, மிகவும் கடைசி விவரம் வரை விஷயங்களைப் பெறவும், மற்றும் தேவனின் சித்தத்தைத் தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக முழுமையான சத்தியத்துடன் உன்னை ஆயத்தப்படுத்தவும் வேண்டும். நீ உன் அனுபவத்தின் அளவை விரிவடையச் செய்து, தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் மூலமாக, தேவனைப் பற்றி உன்னால் இன்னும் உறுதியாக இருக்க முடியும்; அனுபவம் இல்லாமல், அவரைக் குறித்து உறுதியாக இருப்பதாகக் கூறுவது வெறுமனே வெற்று வார்த்தைகள் ஆகும். நாம் தெளிவான மனதுடையவர்களாக இருக்க வேண்டும்! விழிப்புடன் இருக்க வேண்டும்! இனியும் மந்தமாக இருக்க வேண்டாம்; சிரத்தையற்ற முறையில் விஷயங்களை நீ கையாண்டால், முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை என்றால், நீ உண்மையில் மிகவும் குருடனாக இருக்கிறாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் நீ கவனம் செலுத்த வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் குரலை நீ கவனமாகக் கேட்க வேண்டும், தேவனின் வார்த்தைகளுக்கு உன் செவிகளைச் சாய்க்க வேண்டும், உனக்கென எஞ்சியிருக்கும் காலத்தைப் போற்றி, விலைக்கிரயம் எதுவாக இருந்தாலும் அதைக் கொடுக்க வேண்டும். உன்னிடம் இரும்பு இருக்கும்போது, ஒரு வலுவான கத்தியை உருவாக்குவதற்காக, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இடத்தில் அதைப் பயன்படுத்து; முக்கியமானவற்றை நன்றாகப் பற்றிக் கொண்டு, தேவனின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்து. நீ தேவனின் வார்த்தைகளை விட்டுவிட்டால், நீ வெளியே எவ்வளவு நன்றாகச் செய்தாலும், அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும். உதட்டளவில் மட்டும் செயல்படுவது தேவனால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல; உன் நடத்தை, மனநிலை, விசுவாசம், துணிவு மற்றும் நுண்ணறிவு மூலமாக மாற்றம் வர வேண்டும்.

நேரம் நெருங்கிவிட்டது! இந்த உலகின் சிறந்த விஷயங்களும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். எத்தகைய சிரமங்களும் அல்லது ஆபத்துகளும் நம்மை அச்சுறுத்த முடியாது, அல்லது வானமே இடிந்து விழுந்தாலும் நம்மை அழிக்க முடியாது. இத்தகைய மனவுறுதி இல்லாமல், நீ முக்கியத்துவம் மிக்கவனாக மாறுவது கடினமாக இருக்கும். இளகிய மனம் கொண்டவர்கள் மற்றும் கோழைத்தனமாக வாழ்க்கையுடன் ஒட்டியிருப்பவர்கள் தேவன் முன் நிற்கத் தகுதியானவர்கள் அல்ல.

சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு நடைமுறை தேவன். நாம் எந்த அளவு அறிவற்றவர்களாக இருந்தாலும் சரி, அவர் இன்னும் நம் மீது இரக்கம் கொள்வார், அவரது கரங்கள் நிச்சயமாக நம்மை இரட்சிக்கும், மேலும், அவர் இன்னும் நம்மைப் பரிபூரணமாக்குவார். தேவனை உண்மையிலேயே நேசிக்கும் இருதயங்களை நாம் கொண்டிருக்கும் வரை, நாம் நெருக்கமாகப் பின்பற்றி ஊக்கம் கெடாத வரை, மற்றும் நாம் அவசர உணர்வுடன் தேடும் வரை, அவர் முற்றிலுமாக நம்மில் யாரையும் அநியாயமாக நடத்த மாட்டார்; நம்மிடம் இல்லாததை அவர் நிச்சயமாக நமக்குக் கொடுத்து, நம்மைத் திருப்திப்படுத்துவார். இவை அனைத்தும் சர்வவல்லமையுள்ள தேவனின் தயை ஆகும்.

யாராவது பேராசையுடன் சோம்பேறியாக இருந்து, அவர்களின் வயிற்றை எப்போதும் நிரப்பி வைத்திருக்கும் வாழ்க்கையை நடத்தி, அனைத்திலும் அலட்சியமாக இருந்தால், இழப்பைத் தவிர்ப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கும். சர்வவல்லமையுள்ள தேவன் அனைத்துக் காரியங்கள் மீதும், நிகழ்வுகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார்! எப்போதும் நம் இருதயத்தில் அவருக்கு மதிப்பளித்து, ஆவி மற்றும் ஐக்கியத்தில் அவருடன் பிரவேசிக்கும் வரை, நாம் தேடும் அனைத்து விஷயங்களையும் அவர் நம் அனைவருக்கும் காட்டுவார், மற்றும் அவரது சித்தம் நிச்சயமாக நமக்கு வெளிப்படுத்தப்படும். பின்னர் நம் இருதயங்கள் மகிழ்ச்சியிலும், சமாதானத்திலும், சரியான தெளிவுடன் நிலையாக இருக்கும். அவரது வார்த்தைகளுக்கு இணங்கச் செயல்படுவது மிகவும் முக்கியமாகும். அவரது சித்தத்தைப் புரிந்து கொண்டு அவரது வார்த்தைகளைச் சார்ந்து வாழும் திறமையைக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மையான அனுபவமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நாம் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டால் மட்டும் தான், தேவனின் வார்த்தைகளின் சத்தியம் நமக்குள் பிரவேசித்து, நம் ஜீவனாக முடியும். எந்தவொரு நடைமுறை அனுபவமும் இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் உன்னால் எப்படிப் பிரவேசிக்க முடியும்? உன்னுடைய ஜீவனாக தேவனுடைய வார்த்தைகளை உன்னால் பெற முடியவில்லை என்றால், பின்னர் உன் மனநிலையை மாற்ற முடியாது.

பரிசுத்த ஆவியானவரின் கிரியை வேகமாக முன்னேறுகிறது! நீ நெருக்கமாகப் பின்தொடர்ந்து, பயிற்சி பெறவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் முன்னோக்கிச் செல்லும்போது, அவரது வேகத்திற்கு இணையாகச் செல்வதென்பது உனக்குக் கடினமானதாக இருக்கும். நீ சாத்தானால் மிதிக்கப்பட்டு, தப்பிக்க வழி இல்லாத அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் நீ பிரவேசிக்காதபடிக்கு விரைந்து முழுமையான மாற்றத்தைக் கொண்டுவா. இப்போது சென்று, நீ ஒதுக்கப்படாதபடிக்கு உன்னால் முடிந்தவரை தேடு.

முந்தைய: அத்தியாயம் 6

அடுத்த: அத்தியாயம் 8

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக