அத்தியாயம் 47

சர்வ வல்லமையுள்ள நீதியின் தேவனே—சர்வ வல்லவரே! உம்மில் முற்றிலும் எதுவும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. ஆதிகாலம் முதல் நித்தியம் வரை, ஒருபோதும் மனுஷர்களால் வெளிப்படுத்தப்படாத ஒவ்வொரு இரகசியமும், உம்மில் வெளிப்படுத்தப்பட்டு, முற்றிலும் தெளிவாக இருக்கிறது. நாங்கள் இனி தேடவும் தடுமாறவும் வேண்டிய தேவையில்லை, ஏனென்றால், இன்று உம்முடைய ஆள்தத்துவமானவர் எங்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார், நீரே வெளிப்படுத்தப்பட்டிருக்கிற இரகசியமாக இருக்கிறீர், நீரே நடைமுறைத் தேவனாகவும் இருக்கிறீர்; இன்று நீர் எங்களிடத்தில் நேருக்கு நேர் வந்திருக்கிறதாலும், உம்முடைய ஆள்தத்துவமானவரை நாங்கள் பார்க்கிறதாலும், ஆவிக்குரிய உலகின் ஒவ்வொரு இரகசியத்தையும் நாங்கள் காண்கிறோம். உண்மையில் இது யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது! இன்று நீர் எங்கள் மத்தியிலும், எங்களுக்குள்ளும் கூட, எங்களுக்கு மிக மிக நெருக்கமாகவும் இருக்கிறீர்; அது விளக்கத்திற்குச் சவால் விடுகிறது! உள்ளே உள்ள இரகசியமானது ஒப்பற்றது!

சர்வ வல்லமையுள்ள தேவன் தமது நிர்வாகத் திட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். அவர் பிரபஞ்சத்தின் ஜெயம் பெற்ற ராஜாவாக இருக்கிறார். எல்லா விஷயங்களும், எல்லாக் காரியங்களும் அவருடைய கரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எல்லா ஜனங்களும் ஆராதிக்கும்படி முழங்கால்படியிட்டு, சர்வவல்லவராகிய—மெய்யான தேவனுடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளினால், எல்லாம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் ஏன் மிகவும் மந்தமாகவும், அவருடன் சேர்ந்து உற்சாகமாகக் கிரியை செய்வதற்கும், அவருடன் நெருக்கமாகச் சேர்வதற்கும், மற்றும் அவருடன் மகிமைக்குள் பிரவேசிப்பதற்கும் இயலாதவர்களாகவும் இருக்கிறீர்கள்? நீங்கள் பாடு அனுபவிக்க ஆயத்தமாக இருப்பதாலா? துரத்தப்பட விருப்பமாய் இருப்பதாலா? உண்மையாகவே எனக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் யார், எனக்காகத் தங்களையே ஒப்புக்கொடுத்திருக்கிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அறியாமை! முட்டாள்களே! உங்களால் எனது நோக்கங்களை நிறைவேற்ற முடியாது, இன்னும் எனது பாரங்களுக்கு நீங்கள் அக்கறை காட்டவும் முடியாதவர்களாய் இருக்கிறீர்கள், என்னை எப்போதும் உங்களைக் குறித்தே கவலையடையச் செய்து, உங்களுக்காகவே பாடுபடும்படி செய்கிறீர்கள். அது எப்போது முடிவடையும்?

எல்லாவற்றிலும் என்னை வாழ்ந்து காட்டுவது என்பதும், எல்லாவற்றிலும் எனக்குச் சாட்சியாக இருப்பது என்பதும்—உங்கள் வாய்களைத் திறந்து சில வார்த்தைகளைக் கோர்வையாக இணைத்துப் பேசுவதைப் போல அவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறதா? நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாது! நீங்கள் செய்யும் காரியத்தில் என்னைத் தவிர்த்து விடுகிறீர்கள், மற்றும் உங்களது அன்றாட வாழ்க்கைகளில் நான் இன்னும் குறைவாகவே இருக்கிறேன். நீங்கள் தேவனை விசுவாசிப்பதை ஒரு முக்கியமான விஷயமாகக் கருதுவதில்லை என்று எனக்குத் தெரியும், எனவே இவையே நீங்கள் தரும் கனிகளாய் இருக்கின்றன! நீங்கள் இன்னும் விழித்திருக்கவில்லை, நீங்கள் இப்படியே செல்வீர்களானால், என் நாமத்துக்கு அவப்பெயரைக் கொண்டுவருவீர்கள்.

நீ பேசும்போது, நான் உன்னுடன் இருக்கிறேனா? நீ புசிக்கும் போதோ அல்லது உடுத்திக் கொள்ளும் போதோ, என்னுடைய வாக்குத்தத்தம் இருக்கிறதா? என்று உன்னையே நீ கேட்டுக் கொள். உண்மையிலேயே, நீங்கள் சிந்தனையற்றவர்கள்! எப்போதெல்லாம் உங்கள் பிரச்சனைகள் நேரடியாகக் கூறப்படவில்லையோ, அப்போது நீங்கள் உங்களது உண்மையான நிறங்களைக் காட்டுகிறீர்கள், மேலும் உங்களில் யாரும் இணங்கிச் செல்வதில்லை. அப்படி இல்லாவிட்டால், நீங்கள் உங்களைப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்வீர்கள், மேலும் உங்களுக்குள் பல விஷயங்களை நீங்கள் கொண்டிருப்பதாக எண்ணுவீர்கள். உங்களுக்குள்ளே, உங்களை நிரப்புவது, சாத்தானின் அசிங்கமான தோற்றம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவை அனைத்தையும் வெளியே ஊற்றிவிடுவதற்கு என்னுடன் இணைந்து கிரியை செய்யுங்கள். நான் என்னவாக இருக்கிறேனோ, அப்படியே முழுமையாக உங்களை உள்ளாக ஆக்கிரமிக்க அனுமதியுங்கள்; அதனால் மட்டுமே நீங்கள் என்னை வாழ்ந்து காட்ட முடியும், மேலும் அதிக யதார்த்தத்துடன் எனக்குச் சாட்சி பகர முடியும், மேலும் திரளான ஜனங்கள் என்னுடைய சிங்காசனத்திற்கு முன்பாகத் தங்களை சமர்ப்பிப்பதற்கான காரணமாக இருக்க முடியும். உங்கள் தோள்களில் உள்ள சுமையானது எவ்வளவு பாரமாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: கிறிஸ்துவை உயர்த்துதல், கிறிஸ்துவை வெளிப்படுத்துதல், கிறிஸ்துவுக்கு சாட்சி பகருதல், இதனால் எண்ணற்ற ஜனங்கள் இரட்சிப்பைப் பெறுவார்கள், அதனால் என் ராஜ்யம் உறுதியாகவும் அசையாமலும் இருக்கும். இன்றைய கிரியையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் வெறுமனே குழப்பமடைய வேண்டாம் என்பதற்காக இவை அனைத்தையும் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

சூடான வாணலியில் உள்ள எறும்புகள், வட்ட வட்டமாக இங்கும் அங்கும் ஓடுவதைப் போல, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது உதவியற்றவர்களாக இருக்கிறீர்கள்: இதுவே உங்களது மனநிலையாக இருக்கிறது. வெளிப்புறமாக, நீங்கள் பெரியவர்களைப் போல தெரிகிறீர்கள், ஆனால் உங்கள் உள்ளான வாழ்க்கை ஒரு குழந்தையின் வாழ்க்கையைப் போல உள்ளது; உங்களுக்கு செய்யத் தெரிந்ததெல்லாம், பிரச்சனையை உண்டாக்கி என் பாரத்தைக் கூட்டுவதுதான். நான் அக்கறை காட்டாத சிறிய விஷயம் இருந்தால் கூட, நீங்கள் பிரச்சனை செய்து விடுகிறீர்கள். அது அப்படித்தான் இல்லையா? சுய நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டாம். நான் சொல்வது தான் சத்தியம். நான் ஏதோ வெறுமனே உரத்த சத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்து, நான் உங்களுக்குத் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்போதும் நினைக்க வேண்டாம். இதுவே உங்களுடைய உண்மையான நிலைமையாக இருக்கிறது.

முந்தைய: அத்தியாயம் 46

அடுத்த: அத்தியாயம் 48

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக