ஓர் இயல்பான நிலைக்குள் பிரவேசிப்பது எப்படி?

தேவனுடைய வார்த்தைகளை மக்கள் எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அவ்வளவு அதிகமாக அறிவொளி பெற்றவர்களாகவும், அவரை அறிந்து கொள்வதில் அவ்வளவு அதிகமாகப் பசியும் தாகமும் கொண்டிருப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்கள் உயரிய மற்றும் மிகவும் ஆழமான அனுபவங்களைப் பெற்றிருக்க திராணியுள்ளவர்காக இருப்பார்கள், மேலும் அவர்கள் மட்டும்தான் எள் மலர்களைப் போன்று தொடர்ந்து வளரக்கூடிய வாழ்வைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஜீவனை நாடும் அனைவரும் இதைத் தங்கள் முழுநேர வேலையாகக் கருத வேண்டும்; “தேவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது; தேவன் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது; தேவன் இல்லாமல் எல்லாம் வெறுமையாக உள்ளது” என்று அவர்கள் உணர வேண்டும். ஆகவே, “பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் நான் ஒன்றும் செய்ய மாட்டேன், தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றால், நான் எதையும் செய்வதில் அலட்சியமாக இருக்கிறேன்” என்ற தீர்மானத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களைத் தேவையற்றச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை அனுபவங்கள் தேவனுடைய ஞானம் மற்றும் வழிநடத்துதலிலிருந்து வருகின்றன, அவை உங்கள் உண்மையான முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாகும். நீங்கள் கோர வேண்டியது இதுதான்: “வாழ்க்கை அனுபவம் என்று வரும் போது, எனக்கு நானே ஓர் இலவச நுழைவுச் சீட்டைக் கொடுக்க முடியாது.”

சில நேரங்களில், அசாதாரண சூழ்நிலைகளில், நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழக்கிறீர்கள், மேலும் நீங்கள் ஜெபிக்கும் போது அவரை உணர முடியாமல் போகிறது. இது போன்ற சமயங்களில் பயப்படுவது இயல்பானதுதான். நீங்கள் உடனடியாக அவரைத் தேட ஆரம்பிக்க வேண்டும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், தேவனானவர் உன்னிடமிருந்து விலகி இருப்பார், மேலும் நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமில்லாமல் இருப்பாய், மேலும் ஒருநாள், இரண்டு நாட்கள், ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருப்பாய். இந்தச் சூழ்நிலைகளில், எல்லாவிதமான செயல்களையும் நீங்கள் செய்யக்கூடிய அளவிற்கு நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உணர்ச்சியற்றவர்களாகி, சாத்தானால் மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் செல்வத்தின் மீது பேராசைப்படுகிறீர்கள், உங்கள் சகோதர சகோதரிகளை ஏமாற்றுகிறீர்கள், திரைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கிறீர்கள், மஹ்ஜாங் விளையாடுகிறீர்கள், ஒழுக்கமின்றி புகைபிடிக்கிறீர்கள், மது அருந்துகிறீர்கள். உங்களுடைய இருதயம் தேவனைவிட்டு விலகி வெகுதொலைவில் சென்றிருக்கிறது, நீங்கள் இரகசியமாக உங்கள் சொந்த வழியில் சென்றிருக்கிறீர்கள், தேவனின் கிரியை குறித்து நீங்கள் உங்களுடைய தன்னிச்சையான நியாயத்தீர்ப்பை வழங்கி உள்ளீர்கள். சில சந்தர்ப்பங்களில், பாலியல்ரீதியான பாவங்களைச் செய்வதில் மக்கள் எந்த அவமானத்தையும் சங்கடத்தையும் உணராத அளவுக்கு மிகவும் இழிவானவர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனிதர் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டிருக்கிறார்; உண்மையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது நீண்ட காலமாக அத்தகைய மனிதரிடத்தில் இல்லை. தீமையின் கைகள் எப்போதும் அதிகமாக நீண்டு கொண்டே செல்வது போல, அவர்கள் சீர்கேட்டுக்குள் இன்னும் ஆழமாக மூழ்குவதை மட்டுமே ஒருவரால் காண முடியும். இறுதியில், அவர்கள் இந்த வழியில் இருப்பதை மறுக்கிறார்கள், அவர்கள் பாவம் செய்யும் போது சாத்தானால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். உன்னிடம் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மட்டுமே உள்ளது, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லை என்பதை நீ கண்டறிந்தால், அது ஏற்கனவே ஓர் ஆபத்தான சூழ்நிலையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உன்னால் உணர முடியாத போது, நீ மரணத்தின் விளிம்பில் இருக்கிறாய். நீ மனந்திரும்பாவிட்டால், நீ முற்றிலும் சாத்தானிடம் திரும்பிச் சென்றிருப்பாய், மேலும் நீ புறம்பாக்கப்பட்டவர்களில் ஒருவனாக இருப்பாய். ஆகவே, நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மட்டுமே இருக்கும் நிலையில்தான் நீ இருக்கிறாய் (நீ பாவம் செய்யாமல், உன்னை நீயே கட்டுக்குள் வைத்திருந்து, தேவனுக்கு எதிரான அப்பட்டமான எந்த எதிர்ப்பினையும் செய்யாமல் இருக்கிறாய்), ஆனால் உன்னிடம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லை (நீ ஜெபிக்கும் போது நீ ஏவப்படுதலை உணருவதில்லை, தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணும் போது நீ வெளிப்படையான அறிவொளியையோ அல்லது வெளிச்சத்தையோ பெறுவதில்லை, தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலும் நீ அலட்சியமாக இருக்கிறாய், உன் வாழ்க்கையில் ஒருபோதும் எந்த வளர்ச்சியும் இருப்பதில்லை, மற்றும் நீ நீண்ட காலமாகவே மாபெரும் வெளிச்சத்தை இழந்து காணப்படுகிறாய்) என்பதை நீ கண்டுபிடிக்கும் இது போன்ற சமயங்களில், நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது, மேலும் உங்கள் சொந்த குணாதிசயத்தை நீங்கள் கடிவாளமின்றி விட்டு விடக் கூடாது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் எந்த நேரத்திலும் மறைந்து போகக் கூடும். இதனால் தான் இத்தகைய நிலைமை மிகவும் ஆபத்தானது. நீ இந்த மாதிரியான நிலையில் இருப்பதை அறிந்தால், உன்னால் முடிந்தவரை நிலைமைகளை மாற்ற முயற்சி செய். முதலில், நீங்கள் ஒரு மனந்திரும்புதல் ஜெபத்தைச் சொல்லவேண்டும், மேலும் தேவனானவர் தம்முடைய இரக்கத்தை உங்கள் பேரில் மீண்டும் ஒருமுறை காட்டும்படி கேட்க வேண்டும். மேலும் தேவனின் வார்த்தைகளை அதிகம் புசித்துப் பானம்பண்ணுவதற்கு ஊக்கத்துடன் ஜெபியுங்கள், உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துங்கள். இதன் அடிப்படையில் நீங்கள் ஜெபத்தில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்; பாடுவதிலும், ஜெபிப்பதிலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலும், உங்கள் கடமையைச் செய்வதிலும் உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள். நீ மிகவும் பெலவீனமாக இருக்கும் போது உனது இருதயம் சாத்தானால் மிகவும் எளிதாக ஆட்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நிகழும்போது, உனது இருதயமானது தேவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு சாத்தானிடத்திற்குத் திரும்புகிறது, இதனால் நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமின்றி இருக்கிறாய். இதுபோன்ற சமயங்களில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் திரும்பப் பெறுவதற்கு இருமடங்கு கடினமாகி விடுகிறது. பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கும் போதே அவருடைய கிரியையைத் தேடுவது சிறந்தது, இது தேவன் உன் மீது அவருடைய அறிவொளியை அதிகமாக அருளச் செய்வதற்கும், அவர் உன்னைக் கைவிடாமல் இருக்கச் செய்வதற்கும் உதவும். ஜெபம் செய்தல், பாடல்களைப் பாடுதல், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுதல் ஆகிய இவை அனைத்தும் சாத்தான் தனது கிரியையைச் செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமல் பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்வதற்காகவே செய்யப்படுகின்றன. நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இந்த வழியில் மீண்டும் பெறாமல் வெறுமனே காத்திருந்தால், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீ இழந்திருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட முறையில் உன்னை ஏவாத பட்சத்தில் அல்லது தனிப்பட்ட முறையில் உனக்கு வெளிச்சத்தையும் அறிவொளியையும் வழங்காத பட்சத்தில், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைத் திரும்பப் பெறுவது என்பது எளிதாக இருக்காது. ஆகையால், அந்த நிலையினை ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் திரும்பப் பெற முடியாது. சில சமயங்களில் எதையும் திரும்பப் பெறாமலே ஆறு மாதங்கள்கூட கடந்து போகலாம். இது எதனாலென்றால், மக்கள் யாவற்றையும் மிகவும் சுலபமாக அடைய நினைத்து, காரியங்களை இயல்பான வழியில் அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள், இதனால் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுகின்றனர். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் திரும்பப் பெற்றாலும், தேவனின் தற்போதைய கிரியை இன்னும் உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை, ஏனென்றால் உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் நீங்கள் பத்தாயிரம் மைல்கள் பின்னால் விடப்பட்டதைப் போல நீங்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறீர்கள். இது ஒரு பயங்கரமான காரியம் அல்லவா? இருப்பினும், அத்தகையவர்களுக்கு மனந்திரும்புவதற்கு தாமதமாகவில்லை, ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று நான் சொல்கிறேன்: நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், சோம்பலில் ஈடுபடக் கூடாது. மற்றவர்கள் ஒரே நாளில் ஐந்துமுறை ஜெபித்தால், நீ பத்துமுறை ஜெபிக்க வேண்டும்; மற்றவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணினால், நீ நான்கு அல்லது ஆறு மணி நேரம் அவ்வாறு செய்ய வேண்டும்; மற்றவர்கள் இரண்டு மணி நேரம் துதிப் பாடல்களைக் கேட்டால், நீ குறைந்தபட்சம் அரைநாள் கேட்க வேண்டும். நீங்கள் ஏவப்படும் வரை, உங்களது இருதயம் தேவனிடம் திரும்பும் வரை, நீங்கள் இனி தேவனிடமிருந்து விலகிச் செல்லத் துணியாமல் இருக்கும் வரை, தேவனுக்கு முன்பாக அடிக்கடி சமாதானமாக இருங்கள், அவருடைய அன்பைப் பற்றி சிந்தியுங்கள், அப்போது தான் உங்கள் நடத்தை பலனளிக்கும்; அப்போது தான் உங்கள் முந்தைய, இயல்பான நிலையை மீட்டெடுக்க முடியும்.

சிலர் தங்கள் முயற்சியில் மிகுந்த உற்சாகம் காட்டுகிறார்கள், ஆனால் சரியான பாதையில் பிரவேசிக்கத் தவறி விடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனக் குறைவாக இருக்கிறார்கள், ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்துவதில்லை. தேவனின் வார்த்தைகளை எவ்வாறு அனுபவிப்பது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் பிரசன்னம் என்னவென்று தெரிவதில்லை. அத்தகையவர்கள் உற்சாகமானவர்களாக இருந்தாலும், முட்டாள்களாக இருக்கிறார்கள்; அவர்கள் ஜீவனைப் பின்தொடர்வதில்லை. ஏனென்றால், உனக்கு ஆவியானவரைப் பற்றிய சிறிதளவு அறிவுகூட இல்லை, பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் வளர்ச்சி பற்றி உனக்கு எதுவும் தெரியாது, மேலும் உன் சொந்த ஆவிக்குள்ளான நிலையைப் பற்றியும் நீ அறியாதவனாக இருக்கிறாய். அத்தகையவர்களின் விசுவாசம் ஒரு முட்டாள்தனமான விசுவாசம் அல்லவா? அத்தகையவர்களின் பின்தொடர்தல் இறுதியில் எந்தப் பலனையும் அளிக்காது. தேவன் மீதான உனது விசுவாசத்தில், வாழ்க்கையின் வளர்ச்சியை அடைவதற்கு, உன் அனுபவத்தில் தேவன் என்ன செய்கிறார் என்பதை அறிந்துகொள்வதும், தேவனுடைய அன்பைக் காண்பதும், தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்வதும், நீ தேவனுடைய ஏற்பாடுகள் யாவற்றுக்கும் இணங்கும் விதத்திலும், தேவனுடைய வார்த்தைகள் உன் வாழ்வாகும்படி அவற்றை உனக்குள் கிரியை செய்ய வைத்து அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்துவதும் முக்கியமானதாகும். உன் விசுவாசம் ஒரு முட்டாள்தனமான விசுவாசமாக இருந்தால், ஆவிக்குரிய காரியங்களிலும் உன் வாழ்க்கை மனநிலைகளின் மாற்றங்களிலும் நீ கவனம் செலுத்தவில்லை என்றால், சத்தியம் தொடர்பான எந்த முயற்சியையும் நீ எடுக்கவில்லை என்றால், தேவனுடைய சித்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா? தேவன் என்ன கேட்கிறார் என்பது உனக்குப் புரியவில்லை என்றால், நீ அனுபவிக்க இயலாதவனாக இருப்பாய், இதனால் நடப்பதற்கான பாதை எதுவும் உனக்கு இருக்காது. தேவனின் வார்த்தைகளை நீ அனுபவிக்கும் போது அவை உன்னில் உருவாக்கும் பலன்களிலேயே நீ கவனம் செலுத்த வேண்டும், இதனால் தேவனின் வார்த்தைகளிலிருந்து நீ அவரை அறிந்து கொள்ளலாம். தேவனின் வார்த்தைகளை வாசிக்க மட்டுமே உனக்குத் தெரிந்திருந்து, அவற்றை எவ்வாறு அனுபவிப்பது என்று தெரியவில்லை என்றால், நீ ஆவிக்குரிய காரியங்களை அறியாதவன் என்பதை இது காட்டவில்லையா? தற்சமயம், பெரும்பாலான மக்களால் தேவனின் வார்த்தைகளை அனுபவிக்க இயலவில்லை, இதனால் அவர்களுக்கு அவருடைய கிரியையைப் பற்றி தெரியவில்லை. இது அவர்களின் நடத்தையின் தோல்வியல்லவா? அவர்கள் இப்படி தொடர்ந்தால், எந்தக் கட்டத்தில் அவர்கள் தங்கள் செல்வத்தின் முழுமையில் விஷயங்களை அனுபவித்து தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய முடியும்? இது வெற்றுப் பேச்சுக்கு மட்டும் பொருந்துவது ஆகாதா? கோட்பாட்டில் கவனம் செலுத்தி, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாமலும், ஆனால் தேவனால் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கும், அவரால் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஆசைப்படும் பலர் உங்களில் உள்ளனர். இது முற்றிலும் யதார்த்தமற்றது! ஆகவே, இந்தத் தோல்விக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான பாதையில் பிரவேசிக்கவும், உண்மையான அனுபவங்களைப் பெறவும், தேவனின் வார்த்தைகளைப் பற்றிய யதார்த்தத்திற்குள் உண்மையிலேயே பிரவேசிக்கவும் உங்கள் யாவராலும் முடியும்.

முந்தைய: துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

அடுத்த: தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக