தேவனிடத்தில் மெய்யாகவே அன்பு கூர்கிறவர்களே அவருடைய நடைமுறைக்கு முற்றிலும் கீழ்ப்படியக்கூடியவர்கள்
நடைமுறை அறிவைப் பெறுதல் மற்றும் தேவனுடைய கிரியையைப் பற்றிய முழுமையான புரிதல் ஆகிய இவை இரண்டும் அவருடைய வார்த்தைகளில் காணப்படுகின்றன, மேலும் இந்த உரைகளின் மூலமாக மட்டுமே உன்னால் அறிவூட்டுதலைப் பெற முடியும். ஆகவே நீ தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு உன்னை அதிகமாக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஐக்கியத்தில் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய உன் புரிதலைப் பற்றி பேசு. இவ்வாறு, உன்னால் மற்றவர்களுக்கு அறிவூட்டவும், அவர்களுக்கு ஒரு வழியைக் கொடுக்கவும் முடியும், இது ஒரு நடைமுறைப் பாதையாகும். தேவன் உனக்கு ஒரு சூழலை ஏற்பாடு செய்வதற்கு முன், நீங்கள் ஒவ்வொருவரும் முதலில் அவருடைய வார்த்தைகளைக் கொண்டு உங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். இது எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்றாகும், இது ஓர் அவசரமான முன்னுரிமையாகும். முதலில், தேவனுடைய வார்த்தையை எப்படி புசித்துப் பானம்பண்ண வேண்டுமென்று உங்களுக்குத் தெரிந்த ஓர் இடத்தை அடையுங்கள். உங்களால் செய்ய முடியாத எதற்கும், நடைமுறைப் பாதைக்காக அவருடைய வார்த்தைகளைத் தேடுங்கள், உங்களுக்குப் புரியாத எந்த பிரச்சனைகளுக்கும் அல்லது உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் இந்த உரைகளை ஆராய்ந்து பாருங்கள். தேவனுடைய வார்த்தைகளை உன் ஆதாரமாக மாற்று, உன் நடைமுறைச் சிரமங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்க உனக்கு உதவ அவற்றை அனுமதி, மேலும் அவருடைய வார்த்தைகள் ஜீவியத்தில் உன் உதவியாக மாற அனுமதி. இந்தக் காரியங்களுக்கு உன் பக்கமிருந்து முயற்சி தேவைப்படும். தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணுவதில், நீங்கள் பலன்களை அடைய வேண்டும். அவருக்கு முன்பாக உங்கள் இருதயம் உங்களால் அமைதிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும், மேலும் நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கூறியதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். நீ எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாதபோது, அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணுவதைப் பற்றி மட்டுமே நீ அக்கறை கொள்ள வேண்டும். சில நேரங்களில் நீ ஜெபம் செய்யலாம், தேவனுடைய அன்பைப் பற்றி சிந்திக்கலாம், அவருடைய வார்த்தைகளைப் பற்றிய உன் புரிதலை ஐக்கியத்தில் பகிர்ந்து கொள்ளலாம், உனக்குள் நீ அனுபவிக்கும் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பற்றியும், இந்த உரைகளைப் படிக்கும்போது உனக்கு ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் பேசலாம். மேலும், நீ ஜனங்களுக்கு ஒரு வெளியேறும் வழியைக் கொடுக்கலாம். இது மட்டுமே நடைமுறைக்கேற்றது. இதைச் செய்வதன் குறிக்கோள் என்னவென்றால் தேவனுடைய வார்த்தைகளை உன் நடைமுறை ஆகாரமாக மாற அனுமதிப்பதேயாகும்.
ஒரு நாளைக்கு, நீ உண்மையிலேயே தேவனுக்கு முன்பாக எத்தனை மணிநேரம் செலவழிக்கிறாய்? உன் நாளில் எவ்வளவு நேரம் உண்மையிலேயே தேவனுக்குக் கொடுக்கப்படுகிறது? மாம்சத்திற்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது? ஒருவருடைய இருதயம் எப்போதும் தேவனுக்கு நேராக இருப்பதே அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான சரியான பாதையில் செல்வதற்கான முதல் படியாகும். உன்னால் உன் இருதயம், சரீரம் மற்றும் தேவன் மீதான உன் உண்மையான அன்பு முழுவதையும் தேவனுக்கு அர்ப்பணிக்க முடிந்தால், அவற்றை அவருக்கு முன்பாக வை, அவருக்கு முற்றிலும் கீழ்ப்படி, அவருடைய சித்தத்தை முழுமையாகக் கருத்தில் கொள், இதை மாம்சத்திற்காக அல்ல, குடும்பத்திற்காக அல்ல, உன் சொந்த விருப்பங்களுக்காக அல்ல, ஆனால் தேவனுடைய வீட்டின் நலன்களுக்காக, சகலத்திலும் தேவனுடைய வார்த்தையை கொள்கையாகவும் அஸ்திபாரமாகவும் எடுத்துக்கொள்வதற்காக ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம், உன் நோக்கங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் எல்லாம் சரியான இடத்தில் இருக்கும், அதன்பின் நீ தேவனுடைய பாராட்டைப் பெறும் ஒரு நபராக இருப்பாய். முற்றிலும் தேவனை நோக்கி இருப்பவர்களே தேவன் விரும்பும் ஜனங்கள், அவர்களால் தான் அவருக்கு மட்டுமே அர்ப்பணிப்போடு இருக்க முடியும். தேவனுக்கு நேராக அரை மனதுடன் இருக்கிறவர்களையும், அவருக்கு எதிராகக் கலகம் செய்பவர்களையும்தான் அவர் வெறுக்கிறார். அவருக்காகத் தங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் அவரை நம்பி அவர் அளிக்கும் நன்மைகளை எப்போதும் அனுபவிக்க விரும்புகிறவர்களை அவர் வெறுக்கிறார். அவரிடத்தில் அன்பு கூருவதாகச் சொல்லியும் தங்கள் இருதயங்களில் அவருக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை அவர் வெறுக்கிறார். வஞ்சகத்தில் ஈடுபட நாவன்மையுள்ள, அலங்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர்களை அவர் வெறுக்கிறார். தேவனுக்குத் தங்களை உண்மையாக அர்ப்பணிக்காதவர்கள் அல்லது அவருக்கு முன்பாக உண்மையாக கீழ்ப்படியாதவர்கள் துரோகிகளாகவும் இயல்பாகவே மிகவும் ஆணவக்காரர்களாகவும் இருக்கின்றனர். இயல்பான, நடைமுறை தேவனுக்கு முன்பாக உண்மையாகவே கீழ்ப்படிய முடியாதவர்கள் இன்னும் அதிகமான ஆணவக்காரர்களாக இருக்கின்றனர், அவர்கள் குறிப்பாக பிரதான தூதனின் கடமையுணர்ச்சியுள்ள சந்ததியினராக இருக்கின்றனர். தேவனுக்காக உண்மையிலேயே தங்களை ஒப்புக்கொடுக்கும் ஜனங்கள் தங்களை முழுவதுமாக அவருக்காக அர்ப்பணிக்கின்றனர் மற்றும் அவர்கள் அவரை முன்வைக்கின்றனர். அவர்களால் அவருடைய எல்லா வார்த்தைகள் மற்றும் கிரியைகளுக்கு கீழ்ப்படிய முடிகிறது, மேலும் அவர்களால் அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவர முடிகிறது. அவர்களால் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தங்களுடைய வாழ்வுக்கான அஸ்திபாரமாக எடுத்துக் கொள்ள முடிகிறது, மேலும் எந்தெந்தப் பகுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிய தேவனுடைய வார்த்தைகளுக்குள் அவர்களால் வாஞ்சையோடு தேட முடிகிறது. இத்தகையவர்களே உண்மையில் தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜனங்கள். நீஇவ்வாறு பயிற்சி செய்தால், இது உன் வாழ்க்கைக்கு நன்மை பயப்பதாக இருக்கும், அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலம் உன் உள் தேவைகளையும் பற்றாக்குறைகளையும் பூர்த்தி செய்ய முடியும், இதனால் உன் ஜீவிதத்தின் மனநிலைமாற்றப்படும், அதன்பின் இது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும். நீ தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்டால், நீ மாம்சத்தைத் திருப்திப்படுத்தாமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றினால், இதில் நீ அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்திருப்பாய். தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்தல் என்பதற்கு உன்னால் உன் கடமையைச் செய்து தேவனுடைய கிரியையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அர்த்தமாகும். இவ்வகையான நடைமுறைச் செயல்களை மட்டுமே அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்தல் என்று அழைக்க முடியும். இந்த யதார்த்தத்திற்குள் உன்னால் பிரவேசிக்க முடிந்தால், அப்போது நீ சத்தியத்தைக் கொண்டிருப்பாய். இதுதான் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான ஆரம்பமாகும். நீ முதலில் இந்த பயிற்சியை எடுக்க வேண்டும், அப்போதுதான் உன்னால் இன்னும் ஆழமான யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும். கட்டளைகளை எவ்வாறு கைக்கொள்ளுவது என்பதையும், தேவனுக்கு முன்பாக எவ்வாறு உண்மையாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில்கொள், உன்னால் எப்போது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதைப் பற்றி இடைவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டாம். உன் மனநிலை மாறவில்லை என்றால், அப்போது சிந்திக்கிறது எதுவும் பயனற்றதாக இருக்கும்! தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு, நீ முதலில் உன் கருத்துக்களும் எண்ணங்களும் தேவனுக்கானதாக இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும். இதுவே அடிப்படைத் தேவையாகும்.
தற்போது, உபத்திரவத்திற்கு மத்தியிலும், தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளாமலும் பலர் உள்ளனர், ஆனால் நான் உனக்குச் சொல்கிறேன்: உனக்கு அது புரியவில்லை என்றால், அப்போது நீ அதைப் பற்றி நியாயத்தீர்ப்புகளை செய்யாமலிருப்பது நல்லது. ஒருவேளை சத்தியம் முழுவதுமாக வெளிச்சத்திற்கு வரும் ஒரு நாள் வரும், அப்போது நீ புரிந்துகொள்வாய். நியாயத்தீர்ப்புகளைச் செய்யாமலிருப்பது உனக்கு பயனளிக்கும், ஆனாலும் நீ மந்தமாக காத்திருக்க முடியாது. நீ தீவிரமாக பிரவேசிக்க முற்பட வேண்டும், அப்போதுதான் நீ உண்மையிலேயே பிரவேசிக்கிற ஒருவனாக இருப்பாய். ஜனங்கள் தங்களுடைய கலகத்தன்மையின் காரணமாக, எப்போதுமே நடைமுறை தேவனைப் பற்றிய கருத்துக்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். சகல ஜனங்களும் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது அவசியமாகும், ஏனென்றால் நடைமுறை தேவனானவர் மனுக்குலத்திற்கு மிகப்பெரியதொரு உபத்திரவமாக இருக்கிறார். உன்னால் உறுதியாக நிற்க முடியவில்லை என்றால், அப்போது எல்லாம் முடிந்தது. உனக்கு நடைமுறை தேவனுடைய நடைமுறையைப் பற்றிய ஒரு புரிதல் இல்லையென்றால், அப்போது நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட முடியாது. ஜனங்களை பரிபூரணப்படுத்த முடியுமா இல்லையா என்ற ஒரு முக்கியமான படியே தேவனுடைய நடைமுறையைப் பற்றிய அவர்களுடைய புரிதலாக இருக்கிறது. பூமிக்கு வரும் மாம்சமான தேவனின் நடைமுறை ஒவ்வொரு நபருக்கும் ஓர் உபத்திரவமாகும். இது சம்பந்தமாக உன்னால் உறுதியாக நிற்க முடிந்தால், அப்போது நீ தேவனை அறிந்த ஒருவனாக, அவரில் உண்மையாக அன்புகூரும் ஒருவனாக இருப்பாய். இது சம்பந்தமாக உன்னால் உறுதியாக நிற்க முடியவில்லை என்றால், நீ ஆவியானவரை மட்டுமே நம்பி, தேவனுடைய நடைமுறையை உன்னால் நம்ப முடியவில்லை என்றால், தேவன் மீதான உன் விசுவாசம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது பயனற்றதாக இருக்கும். உன்னால் காணக்கூடிய தேவனை நம்ப முடியவில்லை என்றால், உன்னால் தேவனுடைய ஆவியானவரை நம்ப முடியுமா? நீ தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? நீ காணக்கூடிய மற்றும் நடைமுறையான தேவனுக்கு முன்பாக கீழ்ப்படியவில்லை, ஆகவே உன்னால் ஆவியானவருக்கு முன்பாக கீழ்ப்படிய முடிகிறதா? ஆவியானவர் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் தொட்டுணர முடியாதவராகவும் இருக்கிறார், ஆகவே நீ தேவனுடைய ஆவியானவருக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லும்போது, நீ முட்டாள்தனமாகப் பேசவில்லையா? கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு முக்கியமானது என்னவென்றால் நடைமுறை தேவனைக் குறித்த ஒரு புரிதலைக் கொண்டிருப்பதாகும். நடைமுறை தேவனைக் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றதும், உன்னால் கட்டளைகளைக் கைக்கொள்ள முடியும். அவற்றைக் கைக்கொள்ள இரண்டு காரியங்கள் உள்ளன: ஒன்று, ஆவியானவருடைய சாராம்சத்தைக் கொண்டிருப்பதாகும், மேலும் ஆவியானவருக்கு முன்பாக, ஆவியானவரின் சோதனையை ஏற்றுக்கொள்ள முடிய வேண்டும். மற்றொன்று மனுவுருவான மாம்சத்தைப் பற்றிய உண்மையான புரிதலைக் கொண்டிருக்கவும், உண்மையான கீழ்ப்படிதலை அடையவும் முடிய வேண்டும். மாம்சத்திற்கு முன்பாகவோ அல்லது ஆவியானவருக்கு முன்பாகவோ, ஒருவர் எப்போதும் தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் பயபக்தியையும் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற ஒன்று மட்டுமே பரிபூரணப்படுத்தப்பட தகுதியானது. நடைமுறை தேவனுடைய நடைமுறையைப் பற்றிய ஒரு புரிதல் உனக்கு இருந்தால், அதாவது, இந்த உபத்திரவத்தில் நீ உறுதியாக நின்றிருந்தால், அப்போது எதுவும் உனக்கு அதிகமாக இருக்காது.
“கட்டளைகளைக் கைக்கொள்வது எளிதானது, தேவனுக்கு முன்பாக இருக்கும்போது நீங்கள் வெளிப்படையாகவும் பக்தியுடனும் பேச வேண்டும், எந்த சைகைகளையும் காட்டக்கூடாது, இதுவே கட்டளைகளைக் கைக்கொள்வதாகும்” என்று சிலர் சொல்கின்றனர். அது சரியா? அப்படியானால், தேவனுக்குப் பின்னால் உள்ள அவரை எதிர்க்கும் ஒரு சில காரியங்களை நீ செய்தால், அது கட்டளைகளைக் கைக்கொள்வதாக கருதப்படுமா? கட்டளைகளைக் கைக்கொள்வதில் தொடர்புடையது என்ன என்பதைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலை நீ கொண்டிருக்க வேண்டும். இது நீ தேவனுடைய நடைமுறை குறித்த உண்மையான புரிதலைக் கொண்டிருக்கிறாயா இல்லையா என்பதோடு தொடர்புடையது. உனக்கு நடைமுறையைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தால், இந்த உபத்திரவத்தின்போது தடுமாறி விழாமல் இருந்தால், அப்போது உன்னை வலுவான சாட்சியம் கொண்டவனாகக் கருத முடியும். தேவனுக்கு ஒரு சிறந்த சாட்சி பகருவது என்பது முக்கியமாக உனக்கு நடைமுறை தேவனைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறதா இல்லையா என்பதோடும், சாதாரணமாக மட்டுமின்றி இயல்பாகவும் இருக்கும் இந்த நபருக்கு முன்பாக உன்னால் கீழ்ப்படிய முடிகிறதா இல்லையா என்பதோடும், மேலும் மரணபரியந்தம் கீழ்ப்படிய முடிகிறதா என்பதோடும் இந்த நபருக்கு முன்பாக உன்னால் கீழ்ப்படிய முடிகிறதா தொடர்புடையதாகும். இந்தக் கீழ்ப்படிதல் மூலம், நீ உண்மையிலேயே தேவனுக்கு சாட்சி பகருகிறாய் என்றால், நீ தேவனால் பெறப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமாகும். நீ மரணபரியந்தம் கீழ்ப்படிந்து, அவருக்கு முன்பாக, குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்து, நியாயத்தீர்ப்பு செய்யாமலும், அவதூறு செய்யாமலும், எந்தக் கருத்துக்களையும் கொண்டிராமலும், எந்த உள்நோக்கங்களையும் கொண்டிராமல் இருந்தால், அப்போது தேவன் இவ்விதமாக மகிமையைப் பெறுவார். மனுஷனால் இழிவாகப் பார்க்கப்படும் ஒரு வழக்கமான நபருக்கு முன் கீழ்ப்படிவதும், எந்தக் கருத்துக்களும் இல்லாமல் மரணபரியந்தம் கீழ்ப்படிய முடிவதும் உண்மையான சாட்சியாகும். ஜனங்களைப் பிரவேசிக்குமாறு தேவன் கேட்டுக்கொள்ளும் யதார்த்தம் என்னவென்றால் அவருடைய வார்த்தைகளுக்கு உன்னால் கீழ்ப்படியவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும், நடைமுறை தேவனுக்கு முன்பாக தலைவணங்கவும் மற்றும் உன்சொந்த சீர்கேட்டை அறிந்துகொள்ளவும், அவருக்கு முன்பாக உன் இருதயத்தைத் திறக்கவும், இறுதியாக அவருடைய இந்த வார்த்தைகள் மூலமாக அவரால் ஆதாயப்படுத்தப்படவும் முடியும் என்பதாகும். இந்த வார்த்தைகள் உன்னை ஜெயங்கொண்டு உன்னை அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியச் செய்யும்போது தேவன் மகிமையைப் பெறுகிறார், இதன் மூலம், அவர் சாத்தானை வெட்கப்படுத்தி, தமது கிரியையை முடிக்கிறார். மாம்சமான தேவனுடைய நடைமுறை பற்றி உன்னிடம் எந்தக் கருத்துக்களும் இல்லாதபோது, அதாவது, இந்த உபத்திரவத்தில் நீ உறுதியாக நின்றிருக்குபோது, நீ இந்தச் சாட்சியை நன்றாகப் பகர்ந்திருக்கிறாய். நீ நடைமுறை தேவனைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலைக் கொண்டு, பேதுரு செய்தது போலவே மரணபரியந்தம் கீழ்ப்படியக்கூடிய ஒரு நாள் வந்தால், அப்போது நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்படுவாய். உன் கருத்துக்களோடு உடன்படாத தேவன் செய்யும் எதுவும் உனக்கான ஓர் உபத்திரவமாகும். தேவனுடைய கிரியை உன் கருத்துக்களுக்கு இணக்கமாக இருந்தால், நீ துன்பப்படவோ அல்லது சுத்திகரிக்கப்படவோ வேண்டியதில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை மிகவும் நடைமுறையானது, உன் கருத்துக்களுக்கு இணக்கமானது அல்ல, ஆகவே நீ இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிட வேண்டும். இதனால்தான் இது உனக்கு ஓர் உபத்திரவமாக உள்ளது. தேவனுடைய நடைமுறையின் காரணமாகவே சகல ஜனங்களும் உபத்திரவங்களின் மத்தியிலேயே உள்ளனர். அவருடைய கிரியை நடைமுறையானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. எந்தக் கருத்துக்களும் இல்லாமல் அவருடைய நடைமுறை வார்த்தைகளையும் அவருடைய நடைமுறை பேச்சுக்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வதன் மூலமும், அவருடைய கிரியை இன்னும் நடைமுறையாக வளரும்போது அவரில் உண்மையாக அன்புகூர முடிவதன் மூலமும், நீ அவரால் ஆதாயப்படுத்தப்படுவாய். தேவன் ஆதாயப்படுத்தும் ஜனக்கூட்டமே தேவனை அறிந்தவர்கள், அதாவது, அவருடைய நடைமுறையை அறிந்தவர்கள். மேலும், அவர்களே தேவனுடைய நடைமுறை கிரியைக்கு கீழ்ப்படியக்கூடியவர்கள்.
தேவன் மாம்சமாக இருக்கும் காலத்தில், அவர் ஜனங்களிடம் கோருகின்ற கீழ்ப்படிதலானது அவர்கள் கற்பனை செய்வது போல நியாயத்தீர்ப்புகளை செய்வதையோ அல்லது எதிர்ப்பதையோ விட்டு விலகுவதுடன் தொடர்புடையது அல்ல. மாறாக, ஜனங்கள் தமது வார்த்தைகளை ஜீவிப்பதற்கான தங்களது கொள்கையாகவும், தாங்கள் உயிர்வாழ்வதற்கான அஸ்திபாரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும், அவருடைய வார்த்தைகளின் சாராம்சத்தை அவர்கள் முற்றிலும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அவருடைய சித்தத்தை அவர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோருகிறார். மனுவுருவான தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஜனங்களிடம் கோருவதன் ஓர் அம்சம் அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதைக் குறிக்கிறது, அதேநேரத்தில் மற்றொரு அம்சம் அவருடைய இயல்பு மற்றும் நடைமுறைக்குக் கீழ்ப்படிய முடிவதைக் குறிக்கிறது. இவை இரண்டும் முழுமையானதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் அடையக்கூடிய எல்லோருமே தங்கள் இருதயங்களில் தேவன் மீது உண்மையான அன்பை உடையவர்கள். அவர்கள் எல்லோருமே தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள், அவர்கள் எல்லோருமே தங்கள் சொந்த ஜீவனை நேசிப்பதைப் போலவே தேவனையும் நேசிக்கிறார்கள். மனுவுருவான தேவன் தமது கிரியையில் இயல்பான மற்றும் நடைமுறையான மனிதத்தன்மையைக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, இயல்பான மற்றும் நடைமுறையான மனிதத்தன்மை என்ற அவருடைய இரண்டு வெளிப்புற தோற்றங்களும் ஜனங்களுக்கு ஒரு மிகப்பெரிய உபத்திரவமாகிறது, அது அவர்களுக்கு மாபெரும் சிரமமாகிறது. ஆனாலும், தேவனுடைய இயல்பான தன்மையையும் நடைமுறைத்தன்மையையும் தவிர்க்க முடியாது. அவர் தீர்வைக் காண சகலத்தையும் முயற்சி செய்தார், ஆனால் இறுதியில் அவரால் அவருடைய இயல்பான மனிதத்தன்மை என்ற வெளிப்புறத் தோற்றத்தை விட்டுவிட முடியவில்லை. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மாம்சமான தேவன், பரலோகத்திலுள்ள ஆவியானவரின் தேவன் அல்ல. அவர் ஜனங்களால் பார்க்க முடியாத தேவன் அல்ல, ஆனால் ஒரு சிருஷ்டிப்பின் தோற்றத்தை அணிந்த தேவனாக இருக்கிறார். ஆகவே, அவருடைய இயல்பான மனிதத்தன்மை என்ற தோற்றத்தைப் போக்குவது எவ்விதத்திலும் எளிதாக இருக்காது. ஆகவே, எதுவாக இருந்தாலும், மாம்சத்தின் கண்ணோட்டத்தில் அவர் செய்ய விரும்பும் கிரியையை இன்னும் அவர் செய்கிறார். இந்தக் கிரியை இயல்பான மற்றும் நடைமுறையான தேவனுடைய வெளிப்பாடாகும், அப்படியானால் ஜனங்கள் கீழ்ப்படியாமல் இருப்பது எப்படி சரியாக இருக்கும்? தேவனுடைய செயல்களைப் பற்றி ஜனங்களால் பூமியில் என்ன செய்ய முடியும்? அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார். அவர் எதிலெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அது அப்படியே இருக்கிறது. ஜனங்கள் கீழ்ப்படியவில்லை என்றால், அப்போது அவர்களால் வேறு என்ன நல்ல திட்டங்களைக் கொண்டிருக்க முடியும்? இதுவரை, கீழ்ப்படிதல் மூலம் மட்டுமே ஜனங்களை இரட்சிக்க முடிந்திருக்கிறது. யாருக்கும் வேறு எந்தப் பிரகாசமான யோசனைகளும் இருந்ததில்லை. தேவன் ஜனங்களை சோதிக்க விரும்பினால், அவர்களால் என்ன செய்ய முடியும்? ஆனாலும், இவையெல்லாம் பரலோகத்திலுள்ள தேவனால் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை, ஆனால் இது மனுவுருவான தேவனால் கருதப்பட்டது. அவர் இதைச் செய்ய விரும்புகிறார், ஆகவே எந்த நபரும் அதை மாற்ற முடியாது. பரலோகத்திலுள்ள தேவன் மாம்சமான தேவன் செய்பவற்றில் தலையிடுவதில்லை, ஆகவே ஜனங்கள் ஏன் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கு இது இன்னும் அதிக காரணம் அல்லவா? அவர் நடைமுறையானவர் மற்றும் இயல்பானவர் என்றாலும், அவர் முற்றிலும் மாம்சமான தேவனாக இருக்கிறார். அவருடைய சொந்த யோசனைகளின் அடிப்படையில், அவர் விரும்பிய எதையும் செய்கிறார். பரலோகத்திலுள்ள தேவன் அவரிடம் எல்லா பணியையும் ஒப்படைத்திருக்கிறார், அவர் செய்கிற எதற்கும் நீ கீழ்ப்படிய வேண்டும். அவர் மனிதத்தன்மையை உடையவராயிருந்து, மிகவும் இயல்பானவராக இருந்தபோதிலும், இவை அனைத்தையும் ஆழ்ந்தாலோசித்தே ஏற்பாடு செய்திருக்கிறார், அப்படியானல் ஜனங்களால் எப்படி தங்கள் விரிந்த கண்களால் மறுப்புத்தெரிவித்து அவரைப் பார்க்க முடியும்? அவர் இயல்பாக இருக்க விரும்புகிறார், ஆகவே அவர் இயல்பாக இருக்கிறார். அவர் மனிதத்தன்மைக்குள் ஜீவிக்க விரும்புகிறார், ஆகவே அவர் மனிதத்தன்மைக்குள் ஜீவிக்கிறார். அவர் தெய்வீகத்தன்மைக்குள் ஜீவிக்க விரும்புகிறார், ஆகவே அவர் தெய்வீகத்தன்மைக்குள் ஜீவிக்கிறார். ஜனங்கள் அதை எப்படி விரும்பினாலும் அப்படிப் பார்க்க முடியும், ஆனால் தேவன் எப்போதும் தேவனாகவும், மனுஷர் எப்போதும் மனுஷராகவும் இருப்பார்கள். சில சிறிய விவரங்கள் காரணமாக அவருடைய சாராம்சத்தை மறுக்க முடியாது, ஒரு சிறிய காரியத்தின் நிமித்தமாக அவரை தேவனுடைய “ஆள்தத்துவத்துக்கு” வெளியே தள்ளவும் முடியாது. ஜனங்களுக்கு மனுஷன் என்ற சுதந்திரம் உண்டு, தேவனுக்கு தேவன் என்ற மேன்மை உண்டு; இவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுவதில்லை. ஜனங்களால் தேவனுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க முடியாதா? தேவனின் இருப்பு இன்னும் கொஞ்சம் சாதாரணமாக இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாதா? தேவனிடம் இவ்வளவு கண்டிப்பாக இருக்கவேண்டாம்! ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும், அப்போது சகலத்துக்கும் தீர்வு காணப்படாதா? ஏதேனும் மனப்பிணக்கு இன்னும் இருக்குமா? இத்தகையதொரு சிறிய விஷயத்தை ஒருவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால், “ஒரு படகில் பயணம் செய்ய ஒரு பிரதமரின் இருதயம் போதுமான அளவு பெரியதாக இருக்கிறது” என்பதைப்போன்ற எதையும் அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்? அவர்களால் எப்படி உண்மையான மனுஷனாக இருக்க முடியும்? மனுக்குலத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துவது தேவன் அல்ல, ஆனால் மனுக்குலம்தான் தேவனுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மடுவை மலையாக்குவதன் மூலமே அவர்கள் எப்போதும் காரியங்களை கையாளுகின்றனர். அவர்கள் உண்மையில் ஒன்றுமில்லாததில் இருந்து எதையாவது செய்கிறார்கள், அது மிகவும் தேவையற்றது! தேவன் இயல்பான மற்றும் நடைமுறையான மனிதத்தன்மைக்குள் கிரியை செய்யும் போது, அவர் செய்வது மனுக்குலத்தின் கிரியை அல்ல, ஆனால் தேவனுடைய கிரியையாகும். ஆனாலும், மனுஷர் அவருடைய கிரியையின் சாராம்சத்தைப் பார்ப்பதில்லை. அவர்கள் எப்போதும் அவருடைய மனிதத்தன்மையின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றனர். அவர்கள் இதுபோன்ற மாபெரும் கிரியையைக் கண்டதில்லை, ஆனால் அவர்கள் அவருடைய சாதாரண மற்றும் இயல்பான மனிதத்தன்மையைப் பார்க்கவேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள் மற்றும் அதை விட்டு விடுவதில்லை. இதை எப்படி தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிவது என்று அழைக்க முடியும்? பரலோகத்திலுள்ள தேவன் இப்போது பூமியிலுள்ள தேவனாக “மாறிவிட்டார்”, பூமியிலுள்ள தேவன் இப்போது பரலோகத்திலுள்ள தேவனாக இருக்கிறார். அவர்களுடைய வெளிப்புறத் தோற்றங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்பது முக்கியமல்ல, அவர்கள் எவ்வளவு சரியாக கிரியை செய்கின்றனர் என்பதும் முக்கியமல்ல. இறுதியில், தேவனுடைய சொந்த கிரியையைச் செய்கிறவர் தேவனாகவே இருக்கிறார். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கீழ்ப்படிய வேண்டும், இது நீ விரும்பித் தேர்வுசெய்யக்கூடிய ஒரு விஷயம் அல்ல! தேவனுக்கு மனுஷர் கீழ்ப்படிய வேண்டும், சிறிதளவும் பாசாங்கு இல்லாமல் மனுஷர் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும்.
மாம்சமான தேவன் இன்று ஆதாயப்படுத்த விரும்பும் ஜனக்கூட்மே அவருடைய சித்தத்தை உறுதிப்படுத்துகிறவர்கள். அவர்கள் அவருடைய கிரியைக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும், பரலோகத்திலுள்ள தேவனுடைய கருத்துக்களுடன் தங்களைப் பற்றி தொடர்ந்து கவலைப்படுவதையும், தெளிவற்ற நிலையில் ஜீவிப்பதையும், மாம்சத்தில் தேவனுக்குக் காரியங்களை கடினமாக்குவதையும் நிறுத்த வேண்டும். அவருக்குக் கீழ்ப்படியக்கூடியவர்களே அவருடைய வார்த்தைகளை முற்றிலுமாக கேட்டு அவருடைய ஏற்பாடுகளுக்கு கீழ்ப்படிகிறவர்கள். இத்தகையவர்கள் பரலோகத்திலுள்ள தேவன் உண்மையில் எப்படி இருக்கக்கூடும் அல்லது பரலோகத்திலுள்ள தேவன் தற்போது மனுஷர் நடுவில் என்ன வகையான கிரியைகளைச் செய்கிறார் என்பது குறித்து சிறிதளவும் கவலைப்படுவதில்லை. அவர்கள் பூமியில் தங்கள் இருதயங்களை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கின்றனர், அவர்கள் தங்களை முழுவதுமாக அவருக்கு முன் வைக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கு எந்தக் கவனமும் செலுத்துவதில்லை, மாம்சத்தில் தேவனுடைய இயல்பான தன்மை மற்றும் நடைமுறைத்தன்மை குறித்து அவர்கள் ஒருபோதும் வம்பு செய்வதில்லை. மாம்சத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாலேயே அவரால் பரிபூரணப்படுத்த முடியும். பரலோகத்திலுள்ள தேவனை நம்புகிறவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ஏனென்றால், அது பரலோகத்திலுள்ள தேவன் அல்ல, ஆனால் ஜனங்களுக்கு வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்கும் பூமியிலுள்ள தேவன். பூமியிலுள்ள தேவனை வெறும் ஒரு சராசரி மனிதனாக பார்க்கும்போது ஜனங்கள் எப்போதும் பரலோகத்திலுள்ள தேவனை புகழக்கூடாது, இது நியாயமற்றது. பரலோகத்திலுள்ள தேவன் அற்புத ஞானமுள்ள பெரியவராகவும், அற்புதராகவும் இருக்கிறார், ஆனாலும் இது எதுவும் இல்லை. பூமியிலுள்ள தேவன் மிகவும் சராசரியானவர் மற்றும் முக்கியத்துவமில்லாதவராகவும், மிகவும் சாதாரணமானவராகவும் இருக்கிறார். அவருக்கு அசாதாரண மனது கிடையாது அல்லது பூமியைச் சிதறடிக்கும் செயல்களைச் செய்வதில்லை. அவர் மிகவும் இயல்பாகவும் நடைமுறையாகவும் பேசுகிறார். அவர் இடி மூலமாக பேசாவிட்டாலும் அல்லது காற்றையும் மழையையும் அழைக்காவிட்டாலும், அவர் உண்மையிலேயே பரலோகத்திலுள்ள தேவனுடைய மாம்சமாவார், மேலும் அவர் உண்மையிலே மனுஷர் மத்தியில் ஜீவிக்கும் தேவனாவார். ஜனங்கள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத, தேவனாக தங்கள் சொந்த கற்பனைகளுக்கு ஒத்திருக்கிற ஒருவரை அவர்கள் மகிமைப்படுத்தக் கூடாது, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவரைப் பார்க்கும்போது, தாழ்ந்தவராக முற்றிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது. இவையெல்லாம் ஜனங்களுடைய கலகத்தனத்திலிருந்து வருகிறது. இவையெல்லாம் தேவனை மனுக்குலம் எதிர்ப்பதற்கான ஆதாரமாக இருக்கிறது.