தங்கள் மனநிலையில் மாற்றம் அடைந்தவர்களே தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பவர்கள்

மனுஷனிடத்தில் பரிசுத்த ஆவியானவருடைய பாதையின் முதல் படி என்னவென்றால், எல்லாவற்றிற்கும் முன்பாக ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் காரியங்கள் ஆகியவற்றிலிருந்து மனுஷனின் இருதயத்தை இழுத்து, தேவனுடைய வார்த்தைகளாலே தேவனுடைய வார்த்தைகள் யாவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும், முற்றிலும் உண்மையானவை என்றும் மனுஷனின் இருதயத்தை விசுவாசிக்க வைப்பதாகும். நீ தேவனை விசுவாசித்தால், நீ அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும்; தேவன் மீதான பல வருட விசுவாசத்திற்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாதையை நீ அறியாமலேயே இருந்தால், உண்மையிலேயே நீ ஒரு விசுவாசிதானா? தேவனுடன் ஒரு சரியான உறவைக் கொண்டுள்ள ஓர் இயல்பான மனித ஜீவியத்தை—அடைவதற்கு, நீ முதலில் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும். ஜனங்களில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் முதல் படியை நீ அடையவில்லை என்றால், அப்போது உன்னிடம் எந்த அஸ்திபாரமும் இருக்காது. குறைந்தபட்ச கோட்பாடுகள் கூட உனக்கு அப்பால் இருந்தால், நீ எப்படி முன்நோக்கிய பாதையில் நடப்பாய்? தேவன் மனுஷனை பரிபூரணப்படுத்தும் சரியான பாதையில் அடியெடுத்து வைப்பதென்பது பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் சரியான பாதையில் பிரவேசிப்பது என்று அர்த்தமாகும், அதாவது பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொள்ளும் பாதையில் அடியெடுத்து வைப்பது என்று அர்த்தமாகும். இப்போது, பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்படும் பாதையே தேவனுடைய தற்போதைய வார்த்தைகளாகும். ஆகவே, ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால், அவர்கள் கீழ்ப்படிய வேண்டும், மாம்சமான தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். அவர் செய்யும் கிரியையானது வார்த்தைகளின் கிரியையாக இருக்கிறது. சகலமும் அவருடைய வார்த்தைகளிலிருந்து துவங்குகிறது, சகலமும் அவருடைய வார்த்தைகளின் மீது, அவருடைய தற்போதைய வார்த்தைகளால் கட்டப்பட்டுள்ளது. மாம்சமான தேவனைப் பற்றி உறுதியாக இருந்தாலும் அல்லது மாம்சமான தேவனை அறிந்துகொண்டாலும், அவருடைய வார்த்தைகளில் ஒவ்வொருவரும் அதிக முயற்சியை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், ஜனங்களால் எதையும் நிறைவேற்ற முடியாது மற்றும் ஒன்றுமில்லாமல் விடப்படுவார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுதல் என்ற அஸ்திபாரத்தின் மீது கட்டி, இதன் மூலம் அவரைத் தெரிந்துகொண்டு, அவரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டுமே, ஜனங்களால் தேவனுடன் படிப்படியாக ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மனுஷனைப் பொறுத்தவரையில், அவருடைய வார்த்தைகளைப் புசித்து பானம்பண்ணி அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் தேவனுடனான நல்ல ஒத்துழைப்பு எதுவுமில்லை. இதுபோன்ற பயிற்சி மூலம் தேவனுடைய ஜனங்களாகத் தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க முடிகிறது. ஜனங்கள் புரிந்துகொண்டு தேவனுடைய தற்போதைய வார்த்தைகளின் சாராம்சத்துக்கு கீழ்ப்படியும்போது, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கான பாதையில் அவர்கள் ஜீவிக்கின்றனர், மேலும் தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்கும் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். முன்னர், தேவனுடைய கிருபையை நாடுவதன் மூலம் அல்லது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாடுவதன் மூலம் தேவனுடைய கிரியையை ஜனங்களால் எளிதாகப் பெற முடிந்தது, ஆனால் இப்போது காரியங்கள் வேறுபட்டதாக இருக்கின்றன. மாம்சமான தேவனுடைய வார்த்தை இல்லாமல், அவருடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தம் இல்லாமல், ஜனங்களால் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது, மேலும் எல்லோரும் தேவனால் புறம்பாக்கப்படுவார்கள். ஓர் இயல்பான ஆவிக்குரிய ஜீவியத்தை அடைவதற்கு, ஜனங்கள் முதலில் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், அதன்பின், இந்த அஸ்திபாரத்தின் மீது, தேவனுடன் ஓர் இயல்பான உறவை ஏற்படுத்த வேண்டும். நீ எப்படி ஒத்துழைக்கிறாய்? தேவனுடைய ஜனங்களின் சாட்சியில் நீ எவ்வாறு உறுதியாக இருக்கிறாய்? நீ தேவனுடனான ஓர் இயல்பான உறவை எவ்வாறு உருவாக்குகிறாய்?

நீ உன் அன்றாட ஜீவியத்தில் தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கிறாயா என்பதைப் பார்ப்பது எப்படி:

1. தேவனுடைய சொந்த சாட்சியை நீ நம்புகிறாயா?

2. தேவனுடைய வார்த்தைகள் உண்மையானவையாகவும் பிழையற்றவையாகவும் இருக்கின்றன என்பதை நீ உன் இருதயத்தில் நம்புகிறாயா?

3. அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிற ஒருவனாய் நீ இருக்கிறாயா?

4. நீ அவர் அளித்த ஒப்புவிப்புக்கு உண்மையுள்ளவனாக இருக்கிறாயா? அவர் அளித்த ஒப்புவிப்புக்கு உண்மையுள்ளவனாக இருப்பதற்கு நீ என்ன செய்கிறாய்?

5. நீ செய்யும் சகலமும் தேவனைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவருக்கு உண்மையுள்ளவனாக இருப்பதற்குமாக இருக்கிறதா?

மேலே பட்டியலிடப்பட்டுள்ள காரியங்களின் மூலம், தற்போதைய கட்டத்தில் நீ தேவனுடன் இயல்பான உறவு வைத்திருக்கிறாயா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

தேவன் அளிக்கும் ஒப்புவிப்பை உன்னால் ஏற்றுக்கொள்ளவும், அவருடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்ளவும், பரிசுத்த ஆவியானவரின் பாதையைப் பின்பற்றவும் முடியுமானால், அப்போதுதான் நீ தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுகிறாய். உனக்குள் பரிசுத்த ஆவியானவரின் பாதையை நீ தெளிவாக அறிந்திருக்கிறாயா? இப்போது, நீ பரிசுத்த ஆவியானவரின் பாதைக்கு இணங்க செயல்படுகிறாயா? உன் இருதயம் தேவனுக்கு அருகில் வருகிறதா? பரிசுத்த ஆவியானவரின் புதிய ஒளியுடன் இணங்கிப்போக நீ விரும்புகிறாயா? நீ தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீ பூமியின் மீது தேவனுடைய மகிமையின் வெளிப்பாடாக மாற விரும்புகிறாயா? தேவன் உன்னிடம் கேட்பதை அடைவதற்கான மனவுறுதி உன்னிடம் உள்ளதா? தேவனுடைய வார்த்தைகள் பேசப்படும் போது, உனக்குள் ஒத்துழைக்கும் மனவுறுதி மற்றும் தேவனை திருப்திப்படுத்தும் மனவுறுதி இருந்தால், இதுவே உன் மனநிலையாக இருந்தால், தேவனுடைய வார்த்தைகள் உன் இருதயத்தில் கனி தந்துள்ளது என்று அர்த்தமாகும். உன்னிடம் இத்தகைய மனவுறுதி இல்லையென்றால், உன்னிடம் பின்தொடர்வதற்கான இலக்குகள் எதுவுமில்லாதிருந்தால், உன் இருதயம் தேவனால் ஏவப்படவில்லை என்று அர்த்தமாகும்.

ஜனங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசித்ததும், அவர்களிடம் தேவன் வைக்கும் கோரிக்கைகள் உயர்மட்ட அளவிற்கு உயருகிறது. இந்த உயர் கோரிக்கைகளை எந்த அளவில் பார்க்கலாம்? முன்பு, ஜனங்களிடம் ஜீவன் இல்லை என்று கூறப்பட்டது. இன்று, அவர்கள் ஜீவனைத் தேடுகின்றனர், தேவனுடைய ஜனங்களாக மாறவும், தேவனால் ஆதாயப்படுத்திக்கொள்ளப்படவும், பரிபூரணப்படுத்தப்படவும் அவர்கள் தேடுகின்றனர். இது ஓர் உயர் மட்டம் இல்லையா? உண்மையில், தேவன் ஜனங்களிடம் வைக்கும் கோரிக்கைகள் வழக்கமாக இருப்பதை விட எளிதானவை. ஜனங்கள் சேவை செய்பவர்களாக இருக்கவோ அல்லது மரிக்கவோ அவர்களிடம் கேட்கப்படவில்லை, அவர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் தேவனுடைய ஜனங்களாக வேண்டும் என்பதேயாகும். இது எளிதானதல்லவா? நீ செய்ய வேண்டியதெல்லாம் தேவனிடம் உன் இருதயத்தைக் கொடுத்து, அவருடைய வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அப்பொழுது சகலமும் பலன் தரும். நீ ஏன் இதை மிகவும் சிரமமாக உணருகிறாய்? இன்று பேசப்படுகிற ஜீவ பிரவேசம் முன்பை விடத் தெளிவாக உள்ளது. கடந்த காலத்தில், ஜனங்கள் குழப்பமடைந்திருந்தனர், அவர்களுக்கு உண்மையின் யதார்த்தம் என்னவென்று தெரியவில்லை. உண்மையில், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது எதிர்வினையாற்றுகிறவர்கள், பரிசுத்த ஆவியானவரால் அறிவூட்டப்படுகிறவர்கள், தேவனுக்கு முன்பாக அவருடைய பரிபூரணத்தைப் பெறுகிறவர்கள், மனநிலையில் மாற்றம் கண்டவர்கள், இவர்கள் எல்லோரும் ஜீவனைக் கொண்டிருக்கிறவர்கள். தேவன் ஜீவனுள்ளவற்றை விரும்புகிறார், மரித்துப்போன காரியங்களை அல்ல. நீ மரித்துப்போனால், உன்னிடம் ஜீவன் இருக்காது, தேவன் உன்னிடம் பேசமாட்டார், அவருடைய ஜனங்களில் ஒருவனாக உன்னை உயிர்ப்பிக்கவும் மாட்டார். நீங்கள் தேவனால் உயர்த்தப்பட்டிருப்பதனால், அவரிடமிருந்து ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பதனால், நீங்கள் எல்லோரும் ஜீவனைக் கொண்டுள்ள ஜனங்கள் என்பதையும், தேவனிடமிருந்து வரும் ஜீவனைக் கொண்டுள்ள ஜனங்கள் என்பதையும் இது காண்பிக்கிறது.

ஒருவருடைய ஜீவியத்தின் மனநிலையிலுள்ள மாற்றத்தை நாடுவதில், நடைமுறைப் பாதை எளிதானது. உன் நடைமுறை அனுபவத்தில், பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளை உன்னால் பின்பற்றவும், தேவனுடைய கிரியையை அனுபவிக்கவும் முடிந்தால், அப்போது உன் மனநிலை மாற்றத்துக்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது. நீ பரிசுத்த ஆவியானவர் சொல்லும் எல்லாவற்றையும் பின்பற்றி, பரிசுத்த ஆவியானவர் சொல்லும் அனைத்தையும் தேடினால், அப்போது நீ அவருக்குக் கீழ்ப்படிகிற ஒருவனாக இருக்கிறாய், உன் மனநிலையில் ஒரு மாற்றம் இருக்கும். பரிசுத்த ஆவியானவருடைய தற்போதைய வார்த்தைகளால் ஜனங்களுடைய மனநிலைகள் மாறுகின்றன. நீ எப்போதும் உன்னுடைய பழைய அனுபவங்களையும் கடந்த கால விதிமுறைகளையும் பற்றிக்கொண்டிருந்தால், உன் மனநிலை மாற முடியாது. சகல ஜனங்களும் இயல்பான மனிதத்தன்மையுடன் ஜீவனுக்குள் பிரவேசிக்கும்படி, பரிசுத்த ஆவியானவருடைய இன்றைய வார்த்தைகள் கேட்டிருந்தும், நீ வெளிப்புற காரியங்களில் உறுதியாக இருந்து, யதார்த்தத்தைப் பற்றிக் குழப்பமடைந்து அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாதிருப்பாயானால், அப்போது நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைக் கடைப்பிடிக்கத் தவறிய ஒருவனாகவும், பரிசுத்த ஆவியானவருடைய வழிகாட்டுதலின் பாதையில் பிரவேசிக்காத ஒருவனாகவும் இருப்பாய். நீ பரிசுத்த ஆவியானவருடைய தற்போதைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறாயா இல்லையா என்பதையும் உன்னிடம் மெய்யான அறிவு இருக்கிறதா இல்லையா என்பதையும் பொறுத்துதான் உன் மனநிலை மாற முடியுமா முடியாதா என்பது உள்ளது. இது நீங்கள் முன்பு புரிந்துகொண்டதைப் போன்றது அல்ல. நீ முன்பு புரிந்துகொண்ட உன் மனநிலையின் மாற்றம் என்னவென்றால், விரைவாக நியாயந்தீர்க்கும் நீ தேவனுடைய தண்டனையின் மூலம் சிந்திக்காமல் பேசுவதை நிறுத்தியிருக்கிறாய், ஆனால் அது மாற்றத்திற்கான ஓர் அம்சமாகும். இப்போது, மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது: தேவன் சொல்கிற எல்லாவற்றையும் பின்பற்று, அவர் சொல்வதனைத்திற்கும் கீழ்ப்படி. ஜனங்களால் தங்கள் சொந்த மனநிலையை மாற்ற முடியாது; அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்புக்கும், சிட்சைக்கும், துன்பத்திற்கும், சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும், அல்லது அவருடைய வார்த்தைகளால் கையாளப்பட வேண்டும், ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், கிளைநறுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் உண்மையையும் அடைய முடியும், மேலும் அவரைக் குறித்த அக்கறையில்லாமல் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தைகளின் சுத்திகரிப்பின் கீழ் தான் ஜனங்களுடைய மனநிலைகள் மாறுகிறது. அவருடைய வார்த்தைகளின் வெளிப்பாடு, நியாயத்தீர்ப்பு, ஒழுக்கம் மற்றும் கையாளுதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர்கள் இனிமேல் மூர்க்கமாக செயல்படத் துணியாமல், மாறாக உறுதியானவர்களாகவும் அமைதியானவர்களாகவும் மாறுவார்கள். மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால் அவர்களால் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுக்கும், அவருடைய கிரியைக்கும் கீழ்ப்பணிய முடிகிறது. அது மனித கருத்துக்களுக்கு ஒத்துப்போகாவிட்டாலும் கூட, அவர்களால் இந்தக் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு விருப்பத்துடன் கீழ்ப்படிய முடிகிறது. கடந்த காலங்களில், மனநிலையின் மாற்றங்களைப் பற்றிய பேச்சு முக்கியமாக ஒருவரைக் கைவிடுவது, மாம்சத்தைத் துன்பப்பட அனுமதிப்பது, ஒருவரின் சரீரத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஒருவரின் மாம்ச விருப்பங்களை நீக்குவது ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஒரு வகையான மாற்றமாகும். மனநிலையின் மாற்றத்தின் உண்மையான வெளிப்பாடு என்பது தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதும், அவருடைய புதிய கிரியையை உண்மையாக அறிந்துகொள்வதுமே என்பது இன்று எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு, தங்கள் சொந்தக் கருத்துக்களால் நிறமிடப்பட்டுள்ள தேவனைப் பற்றிய முந்தையப் புரிதலை நீக்கிவிடலாம், மேலும் அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் கீழ்ப்படிதலையும் அடைய முடியும். இது மட்டுமே மனநிலையின் மாற்றத்தின் உண்மையான வெளிப்பாடாகும்.

ஜீவனுக்குள் பிரவேசிப்பதில் ஜனங்களுடைய நாட்டமானது தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையிலானதாகும். முன்னதாக, அவருடைய வார்த்தைகளால் சகலமும் நிறைவேறும் என்று கூறப்பட்டது, ஆனால் இந்த உண்மையை யாரும் பார்க்கவில்லை. தற்போதைய படியை அனுபவிப்பதற்குள் நீ பிரவேசித்தால், எல்லாமே உனக்குத் தெளிவாகிவிடும், மேலும் எதிர்கால உபத்திரவங்களுக்கு ஒரு நல்ல அஸ்திபாரத்தை நீ கட்டுவாய். தேவன் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்து. தேவன் ஜனங்களைச் சிட்சிக்க ஆரம்பிப்பார் என்று சொல்லும்போது, அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள். தேவன் ஜனங்களை மரித்துப்போகுமாறு கேட்டுக்கொண்டாலும், அந்த உபத்திரவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ எப்போதும் அவருடைய புதிய வார்த்தைகளுக்குள் ஜீவித்தால், தேவனுடைய வார்த்தைகள் உன்னை முடிவில் பரிபூரணமாக்கும். நீ எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்கிறாயோ, அவ்வளவு விரைவாக நீ பரிபூரணமாக்கப்படுவாய். ஐக்கியத்திற்கு ஐக்கியம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து அதற்குள் பிரவேசியுங்கள் என்று நான் ஏன் உங்களிடம் கேட்கிறேன்? நீ தேவனுடைய வார்த்தைகளைப் பின்தொடர்ந்து அவற்றை அனுபவித்து, அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கும் போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறார். ஆகையால், தேவன் கிரியை செய்யும் ஒவ்வொரு முறையிலும் நீங்கள் எல்லோரும் பங்கேற்பாளர்கள், உங்கள் துன்பத்தின் அளவு என்னவாக இருந்தாலும், இறுதியில் நீங்கள் எல்லோரும் ஒரு “நினைவுப் பரிசு” பெறுவீர்கள். உங்கள் இறுதிப் பரிபூரணத்தை அடைய, நீங்கள் தேவனுடைய எல்லா வார்த்தைகளுக்குள்ளும் பிரவேசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைப் பரிபூரணமாக்குவது ஒருதலைப்பட்சமானது அல்ல, அவருக்கு ஜனங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, எல்லோரும் அவருடன் உளமார ஒத்துழைக்க வேண்டும். தேவன் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இது உங்கள் ஜீவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சகலமும் உங்கள் மனநிலையில் மாற்றத்தை அடைவதற்குத்தான். நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்கும்போது, உன் இருதயம் அவரால் ஏவப்படும், மேலும் தேவனுடைய கிரியையின் இந்த படியில் அவர் அடைய விரும்பும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் திறன் பெற்றவனாக இருப்பாய், மேலும் அதை அடைவதற்கு உனக்கு மனவுறுதி கிடைக்கும். சிட்சையின் போது, இது ஒரு கிரியை முறை என்று நம்பியவர்களும், தேவனுடைய வார்த்தைகளை நம்பாதவர்களும் இருந்தனர். இதன் விளைவாக, அவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படவில்லை, எதையும் பெறாமல் அல்லது புரிந்துகொள்ளாமல் சிட்சிப்பின் காலத்திலிருந்து வெளிப்பட்டனர். சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த வார்த்தைகளுக்குள் உண்மையிலேயே பிரவேசித்த சிலர் இருந்தனர், இவர்கள் தேவனுடைய வார்த்தைகள் மாசற்ற சத்தியம் என்றும், மனுக்குலம் சிட்சிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தையும் தங்களுடைய விதியையும் விட்டுவிட்டு அதில் ஒரு குறிப்பிட்ட காலம் போராடினார்கள், அவர்கள் வெளிவந்தபோது, அவர்களுடைய மனநிலைகள் சில மாற்றங்களுக்கு உள்ளாகின, மேலும் அவர்கள் தேவனைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றனர். சிட்சையிலிருந்து வெளிவந்த எல்லோரும் தேவனுடைய சௌந்தரியத்தை உணர்ந்தனர், மேலும் இந்தக் கட்ட கிரியை தேவனுடைய பெரிதான அன்பு தங்களுக்குள் இறங்குவதை உள்ளடக்கியுள்ளதை உணர்ந்தனர், அது தேவனுடைய அன்பின் வெற்றியாகவும் இரட்சிப்பாகவும் இருந்தது. தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நல்லவை என்றும், தேவன் மனுஷனில் செய்யும் சகலமும் அன்பிலிருந்து வந்தவை, வெறுப்பு அல்ல என்றும் அவர்கள் சொன்னார்கள். தேவனுடைய வார்த்தைகளை நம்பாதவர்கள், அவருடைய வார்த்தைகளைச் சார்ந்திருக்காதவர்கள் சிட்சை காலத்தில் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படவில்லை, இதன் விளைவாக, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இல்லை, அவர்கள் எதையும் பெறவில்லை. சிட்சிப்பின் காலத்திற்குள் பிரவேசித்தவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் மறைந்திருந்து கிரியை செய்கிறார், இதன் விளைவாக அவர்களுடைய ஜீவியத்தின் மனநிலை மாற்றப்பட்டது. சிலர் நாள் முழுவதும் எல்லா வெளிப்புற தோற்றங்களிலும் மிகவும் நேர்மறையாகவும், நன்கு மகிழ்ச்சியுடன் தோன்றுகின்றனர், ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் சுத்திகரிப்பு நிலைக்குள் பிரவேசிப்பதில்லை, இதனால் அவர்கள் மாறவே இல்லை, இதுவே தேவனுடைய வார்த்தைகளை விசுவாசிக்காததன் பின்விளைவாக இருந்தது. நீ தேவனுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்ய மாட்டார். தேவன் தமது வார்த்தைகளை விசுவாசிக்கிற எல்லோரிடமும் தோன்றுகிறார், அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறவர்களால் அவருடைய அன்பைப் பெற முடியும்!

தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு, நீ நடைமுறையின் பாதையைக் கண்டறியவும், தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளவும் வேண்டும். இவ்வாறு மட்டுமே உங்கள் ஜீவியத்தின் மனநிலையில் ஒரு மாற்றம் இருக்கும், இந்த பாதையின் மூலம் மட்டுமே நீங்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட முடியும், இவ்விதமாக தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அவருடைய சித்தத்திற்கு இணக்கமாக இருக்க முடியும். புதிய ஒளியைப் பெற, நீங்கள் அவருடைய வார்த்தைகளுக்குள் ஜீவிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டும், ஆனால் ஒரு முறை கூட செய்யவில்லை என்றால், நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். ஒரு முறை ஏவப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய உள்ளார்ந்த ஆர்வம் தூண்டப்படுகிறது, அவர்கள் தேட விரும்புகின்றனர், ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க முடியாது, அவர்கள் தொடர்ந்து பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட வேண்டும். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுடைய ஆவிகளை ஏவலாம், இதனால் அவர்கள் தங்கள் ஜீவியத்தின் மனநிலையில் மாற்றங்களைப் பின்தொடரலாம், மேலும் தேவனால் ஏவப்படுவதை நாடுகிற வேளையில், அவர்கள் தங்கள் சொந்தக் குறைபாடுகளைப் புரிந்துகொள்ளலாம், மேலும் அவருடைய வார்த்தைகளை அனுபவிக்கும் செயல்முறையில் தங்களிடமுள்ள அசுத்தங்களை (சுயநீதி, அகந்தை, கருத்துக்கள் மற்றும் இது போன்றவற்றை) வீசி எறிந்துவிடலாம் என்ற எனது நம்பிக்கையைக் கடந்த காலங்களில் நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். புதிய ஒளியைப் பெறுவதில் ஊக்கமாக இருப்பது மட்டுமே இதைச் செய்யும் என்று நினைக்காதீர்கள், நீங்கள் எதிர்மறையானவற்றை எல்லாம் வீசி எறிந்துவிட வேண்டும். ஒருபுறம், நீங்கள் நேர்மறையான அம்சத்திலிருந்து பிரவேசிக்க வேண்டும், மறுபுறம், எதிர்மறையான அம்சத்திலிருந்து அசுத்தமான அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்க வேண்டும். உனக்குள் எவ்வகையான அசுத்தங்கள் இன்னும் இருக்கின்றன என்பதைப் பார்க்க நீ தொடர்ந்து உன்னையே ஆராய வேண்டும். மனுக்குலத்தின் மதக் கருத்துக்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள், சுயநீதி மற்றும் அகந்தை ஆகிய அனைத்தும் அசுத்தமான காரியங்கள். உன்னிடம் எந்த மதக் கருத்துக்கள் உள்ளன என்பதைப் பார்க்க உனக்குள்ளேயே பார், தேவனுடைய வெளிப்பாட்டு வார்த்தைகள் அனைத்துடனும் எல்லாவற்றையும் அருகருகே வை. நீ அவற்றை உண்மையாக அடையாளம் காணும்போது மட்டுமே உன்னால் அவற்றைத் தூக்கி எறிய முடியும். சிலர் சொல்கின்றனர்: “பரிசுத்த ஆவியானவருடைய தற்போதைய கிரியையின் ஒளியைப் பின்பற்றுவதற்கு இப்போது இதுவே போதுமானதாக இருக்கிறது. வேறு எதையும் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.” ஆனால், உன் மதக் கருத்துக்கள் எழும்போது, நீ அவற்றை எப்படி நீக்குவாய்? இன்று தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றுவது என்பது செய்வதற்கு சாதாரண காரியம் என்று நினைக்கிறாயா? நீ மதத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தால், உன் மதக் கருத்துக்களிலிருந்தும், உன் இருதயத்திலுள்ள பாரம்பரிய இறையியல் கோட்பாடுகளிலிருந்தும் இடையூறுகள் ஏற்படலாம், இவை ஏற்படும்போது, புதிய காரியங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதில் இது குறுக்கிடுகிறது. இவையெல்லாம் உண்மையான பிரச்சினைகள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளை மட்டுமே நீ பின்தொடர்ந்தால், உன்னால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியை நீ பின்தொடர்கிற அதே சமயத்தில், நீ எந்தக் கருத்துக்கள் மற்றும் நோக்கங்களை வைத்திருக்கிறாய் என்பதையும், என்ன மனித சுயநீதி உன்னிடம் உள்ளது, எந்த நடத்தைகள் தேவனுக்குக் கீழ்ப்படியாதவை என்பதையும் நீ அடையாளம் காண வேண்டும். இந்த காரியங்களையெல்லாம் நீ அடையாளம் கண்ட பிறகு, நீ அவற்றைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். உன் முந்தைய செயல்களையும் நடத்தைகளையும் கைவிட்டுவிடுவது எல்லாம் பரிசுத்த ஆவியானவர் இன்று பேசும் வார்த்தைகளைப் பின்பற்ற உன்னை அனுமதிப்பதற்காகவேயாகும். ஒருபுறம், தேவனுடைய வார்த்தைகள் மூலம் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது, மறுபுறம், அதற்கு மனிதத்தன்மையின் பகுதியில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியை உள்ளது, அதன்பின் மனித நடைமுறை உள்ளது, இரண்டுமே தவிர்க்க இயலாதவை.

உன் எதிர்கால ஊழியப் பாதையில், உன்னால் தேவனுடைய சித்தத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜீவனுக்குள் பிரவேசிக்க நாடுவதும், மனநிலையில் ஒரு மாற்றத்தை நாடுவதும், சத்தியத்திற்குள் ஆழமாக பிரவேசிக்க நாடுவதுமே ஆகும், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதையும், ஆதாயப்படுத்தப்படுவதையும் அடைவதற்கு இதுவே பாதையாகும். நீங்கள் எல்லோரும் தேவனின் ஒப்புவிப்பைப் பெறுபவர்கள், ஆனால் என்ன வகையான ஒப்புவிப்பு? இது அடுத்த கட்ட கிரியையுடன் தொடர்புடையதாகும். அடுத்த கட்ட கிரியையானது பிரபஞ்சம் முழுவதிலும் செய்யப்படும் மாபெரும் கிரியையாக இருக்கும், ஆகவே இன்று, நீங்கள் உங்களுடைய ஜீவியத்தின் மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும், இதனால் எதிர்காலத்தில் நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய ஆதாரமாகி அவருடைய கிரியை மூலமாக மகிமையைப் பெற்று, அவருடைய எதிர்கால கிரியைக்கு உங்களை முன்மாதிரியாக்கலாம். இன்றைய நாட்டம் என்னவென்றால் முற்றிலும் எதிர்கால கிரியைக்காக அஸ்திபாரம் போடுவதாகும், இதனால் நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படலாம், மேலும் அவருக்கு சாட்சி பகரலாம். நீ இதை உன் நாட்டத்தின் இலக்காகக் கொண்டால், உன்னால் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைப் பெற முடியும். நீ எவ்வளவு உயரமாக உன் நாட்டத்தின் இலக்கை அமைக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக நீபரிபூரணமாக்கப்பட முடியும். நீ எவ்வளவு அதிகமாகச் சத்தியத்தைப் பின்தொடர்கிறாயோ, அவ்வளவு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார். நீ எவ்வளவு அதிகமாக உன் நாட்டத்தில் சக்தியைப் பயன்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக நீ பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை அவர்களுடைய உள்ளான நிலைக்கு ஏற்பப் பரிபூரணப்படுத்துகிறார். சிலர் தாங்கள் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கோ அல்லது அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கோ தயாராக இல்லை என்று கூறுகிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் மாம்சத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறார்கள், எந்த துரதிர்ஷ்டத்திலும் துன்பப்பட விரும்பவில்லை. சிலர் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க விரும்பவில்லை, ஆனாலும் பாதாளக் குழிக்குள் இறங்க விரும்புகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், தேவனும் உன் விருப்பத்தை அருளிச் செய்வார். நீ எதை நாடினாலும், தேவன் அதை வாய்க்கச் செய்வார். ஆகவே நீ தற்போது நாடுவது என்ன? பரிபூரணமாக்கப்படுவதையா? உனது தற்போதைய செயல்களும் நடத்தைகளும் தேவனால் பரிபூரணமாக்கப்படும்படியாகவும் அவரால் ஆதாயப்படுத்தப்படும்படியாகவும் உள்ளனவா? உன் அன்றாட ஜீவியத்தில் நீ தொடர்ந்து உன்னையே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீ உன் முழு இருதயத்தையும் ஒரே இலக்கை நாடுவதிலேயே பயன்படுத்தினால், தேவன் உன்னை நிச்சயமாகவே பரிபூரணப்படுத்துவார். பரிசுத்த ஆவியானவரின் பாதை இத்தகையதாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை வழிநடத்தும் பாதையானது அவர்களுடைய நாட்டத்தின் மூலம் அடையப்படுகிறது. தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்டு ஆதாயப்படுத்தப்பட வேண்டுமென்று நீ எவ்வளவு அதிகமாகத் தாகமுள்ளவனாக இருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்வார். நீ எவ்வளவு அதிகமாகத் தேடத் தவறுகிறாயோ, எவ்வளவு அதிகமாக எதிர்மறையானவனாக மற்றும் பிற்போக்கானவனாக இருக்கிறாயோ, நீ அவ்வளவு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கான வாய்ப்புகளை இழக்கிறாய். காலம் செல்லச் செல்ல, பரிசுத்த ஆவியானவர் உன்னைக் கைவிடுவார். நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்புகிறாயா? நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட விரும்புகிறாயா? நீ தேவனால் பயன்படுத்தப்பட விரும்புகிறாயா? தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கும், ஆதாயப்படுத்தப்படுவதற்கும், பயன்படுத்தப்படுவதற்கும் நீங்கள் சகலத்தையும் செய்ய வேண்டும், இதன்மூலம் தேவனுடைய செயல்கள் உங்களில் வெளிப்படுவதைப் பிரபஞ்சமும் சகலமும் பார்க்கலாம். நீங்கள்தான் சகலத்திற்கும் எஜமானாக இருக்கிறீர்கள், மேலும் எல்லாவற்றிற்கும் மத்தியில், தேவன் உங்கள் மூலமாகச் சாட்சியத்தையும் மகிமையையும் அனுபவிக்க நீங்கள் அனுமதிப்பீர்கள், நீங்கள் எல்லா தலைமுறையினர்களிலும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு இதுவே சான்று!

முந்தைய: தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்

அடுத்த: தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக