அத்தியாயம் 69

என்னுடைய சித்தம் வெளிப்படும் போது, எதிர்க்கத் துணிகிற யாராக இருந்தாலும், நியாயந்தீர்க்க அல்லது சந்தேகிக்கத் துணிகிற யாராக இருந்தாலும், நான் உடனடியாக வெளியேற்றுவேன். இன்று, என் சித்தத்திற்கு ஏற்றபடி செயல்படாதவர்கள், அல்லது என் சித்தத்தைத் தவறாகப் புரிந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் என் ராஜ்யத்திலிருந்து புறம்பாக்கப்படவும் நீக்கப்படவும் வேண்டும். என் ராஜ்யத்தில் வேறு யாரும் அல்ல; அனைவரும் என் குமாரர்களும்—நான் நேசிக்கும் மற்றும் என் மீது கரிசனை கொண்ட ஜனங்களுமே ஆவர். மேலும், அவர்கள் என் வார்த்தையின்படி செயல்படுபவர்களும், என் சார்பாக எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் நியாயந்தீர்க்கும்படி, அதிகாரத்துடன் ஆட்சி செய்யக் கூடியவர்களுமாய் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் குற்றமில்லாதவர்கள் மற்றும் ஜீவனுள்ளவர்களும், எளிமையானவர்கள் மற்றும் திறந்த மனதுடையவர்களும் மற்றும் நேர்மையானவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களுமாய் இருக்கிற முதற்பேறான குமாரர்களின் கூட்டத்தினர் ஆவர். என் சித்தம் உங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, மேலும் நான் செய்ய விரும்புவது உங்களில் பிழையின்றியும், முற்றிலும் வெளிப்படையாகவும் மற்றும் வெளிப்படுத்தப்பட்டதாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தவறான எண்ணங்களையும் நோக்கங்களையும் கொண்டவர்களை, நான் கைவிட ஆரம்பித்திருக்கிறேன், அவர்களை ஒவ்வொருவராக விழுந்து போகச் செய்வேன். அவர்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு நான் அவர்களை ஒரே நேரத்தில் அழிப்பேன்—இவை அனைத்தும் அவர்களுடைய ஆவிகள், அவர்களுடைய ஆத்துமாக்கள் மற்றும் அவர்களுடைய சரீரங்களைக் குறிக்கிறது.

என் கரத்தின் செயல்களாகிய—ஏழைகளை ஆதரிப்பது, என்னை நேசிப்பவர்களைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது, என் நிர்வாகத்தில் குறுக்கிடாத குற்றமில்லாமலும் வைராக்கியத்துடனும் இருப்பவர்களை இரட்சிப்பது, என்னை எதிர்ப்பவர்களையும், என்னுடன் உற்சாகமாக ஒத்துழைக்காதவர்களைத் தண்டிப்பது—ஆகிய இவை அனைத்தும் என்னுடைய வார்த்தைகளின்படியே ஒவ்வொன்றாக உறுதிப்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள். நீ என்னை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனாய் இருக்கிறாயா? நீ உண்மையாகவே எனக்காக உன்னையே அர்ப்பணிக்கும் ஒருவனாய் இருக்கிறாயா? நீ என் சொல்லைக் கேட்டு அதன்படி நடக்கும் ஒருவனாய் இருக்கிறாயா? நீ எனக்கு எதிராக இருக்கும் ஒருவனா அல்லது என்னுடன் ஒத்துப்போகும் ஒருவனா? உள்ளத்தின் ஆழத்தில், இந்த விஷயங்களைப் பற்றி உனக்குத் தெளிவான கருத்து இருக்கிறதா? நான் சொல்லியிருக்கிற ஒவ்வொரு விஷயத்துக்கும் உன்னால் பதில் சொல்ல முடியுமா? உன்னால் முடியாவிட்டால், நீ ஆர்வத்துடன் தேடுகிறவனாய், ஆனால் என் சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாய் இருக்கிறாய். அத்தகையவர்கள் எனது நிர்வாகத்தில் மிக எளிதாகத் தலையிட்டு எனது சித்தத்தைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் ஒரு கணம் கூட தவறான நோக்கம் கொண்டிருந்தால், அவர்கள் என் வெளியேற்றத்துக்கும் அழிவுக்கும் உள்ளாக நேரிடும்.

என்னில், புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற இரகசியங்கள் உள்ளன. எனது திட்டத்தின்படி அவற்றை ஒவ்வொன்றாக ஜனங்களுக்கு வெளிப்படுத்துவேன். அதாவது, நான் என் முதற்பேறான குமாரர்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவேன். நான் அவிசுவாசிகளையும் என்னை எதிர்ப்பவர்களையும் அப்படியே, அவர்களின் போக்கில் செல்ல அனுமதிப்பேன்; இருப்பினும், இறுதியில், நானே மகத்துவமானவர் மற்றும் நியாயந்தீர்ப்பவர் என்பதை அவர்களுக்கு நான் புரிய வைக்க வேண்டும். இன்றைய அவிசுவாசிகள் தங்கள் கண்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் என் சித்தத்தை அறியவில்லை. என் குமாரர்களும்—நான் நேசிக்கும் ஜனங்களும் மட்டுமே—என் சித்தத்தை அறிந்து புரிந்து கொள்கிறார்கள். என் குமாரர்களுக்கு, நான் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறேன்; சாத்தானுக்கு, நான் மகத்துவமும் நியாயத்தீர்ப்பளிப்பவருமாய் இருக்கிறேன், ஒருபோதும் மறைந்திருக்கவில்லை. இந்த நாட்களில், என் முதற்பேறான குமாரர்கள் மட்டுமே என் சித்தத்தை அறியத் தகுதியானவர்களாவர்; வேறு எவருக்கும் தகுதி இல்லை—இவை அனைத்தையும் நான் சிருஷ்டிப்புக்கு முன்பே ஏற்பாடு செய்திருந்தேன். ஆரம்பத்திலேயே, யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள், யார் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நான் சரியாக ஏற்பாடு செய்தேன்; இதைப் பற்றி நான் தெளிவாக இருந்தேன், இன்று அது ஏற்கனவே முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் தண்டிக்கப்படுவர்கள் பேரழிவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். தண்டிக்கப்படுவதை விரும்பாதவர்கள் இருப்பார்கள் என்ற போதிலும், இதைத் தான் நான் நியமித்தேன் மற்றும் எனது ஆட்சிமுறை ஆணைகளின் கரங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. எப்படிப்பட்ட நபர் துல்லியமாக ஆசீர்வதிக்கப்படுகிறார், எப்படிப்பட்ட நபர் தண்டிக்கப்படுகிறார்? இவற்றை நான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்; இது உங்களுக்கு ஒரு இரகசியமாக இல்லை, மாறாக, அது வெட்டவெளிச்சமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது: என்னை ஏற்றுக் கொண்டாலும், தவறான நோக்கம் கொண்டவர்கள்; என்னை ஏற்றுக்கொண்டாலும் என்னைத் தேடாதவர்கள்; என்னை அறிந்தும், எனக்குக் கீழ்ப்படியாதவர்கள்; என்னை ஏமாற்றுவதற்காக அக்கிரமம் மற்றும் துரோகத்தில் ஈடுபடுபவர்கள்; என் வார்த்தைகளைப் படித்து எதிர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்துபவர்கள், தங்களைத் தாங்களே அறியாதவர்கள், தாங்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை அறியாதவர்கள், தங்களைத் தாங்களே மிகவும் பெரியவர்களாக நினைப்பவர்கள், மற்றும் தாங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருதுபவர்கள் (சாத்தானின் உதாரணம்)—இத்தகைய ஜனங்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதற்கான நபர்களாக இருக்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்பவர்களும், என்னுடைய நோக்கங்களைச் சார்ந்திருப்பவர்களும் (மற்றும், அவர்கள் குறுக்கீடுகளை ஏற்படுத்தினால், அவர்களின் மீறுதல்களை நான் நினைவில் கொள்ள மாட்டேன்—ஆனால் அவர்களின் நோக்கங்கள் சரியாக இருக்க வேண்டும், அவர்கள் எப்போதும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், ஒழுக்கக்கேடு அடையாமலும் இருக்க வேண்டும்; அவர்கள் எப்போதும் எனக்குச் செவிசாய்க்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் சித்தம் கொண்டிருக்க வேண்டும்); தூய்மையானவர்களாய் இருப்பவர்களும்; திறந்த மனதுள்ளவர்களும்; நேர்மையானவர்களும்; எந்த ஒரு நபராலோ, பொருளாலோ அல்லது காரியத்தாலோ கட்டுப்படுத்தப்படாதவர்களும்; மற்றும் வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்தாலும் தோற்றத்தில் குழந்தை போல் இருப்பவர்களும்—இவர்களே என் அன்புக்குரியவர்களும் என் ஆசீர்வாதங்களுக்கான நபர்களும் ஆவர். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நிலைமைக்கு ஏற்ப உரிய இடத்தைப் பெறுவீர்கள். மேலும், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது தண்டிக்கப்பட்டவனா என்பதை நீ அறிவாய்; அதை நான் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் களிகூர்ந்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் தண்டிக்கப்படுபவர்கள் துன்பப்படக் கூடாது. இரண்டுமே என் கரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இருப்பினும், என்னைக் குற்றப்படுத்த வேண்டியதில்லை: இது என்னுடன் செயலில் ஒத்துழைக்காத உன் சொந்த குறைபாடும், அதோடு கூட, நான் மனுஷனின் உள்ளான இருதயத்தைத் தேடும் தேவன் என்பதை நீ புரிந்து கொள்ளத் தவறுவதுமே ஆகும். இதைத்தான் நான் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறேன், உன் சொந்த சிறு தந்திரத்தின் மூலம் நீயே உனக்குத் தீங்கிழைத்துக் கொண்டாய்; இதை நீயே உன் மீது கொண்டு வந்தாய்! நீ பாதாளத்திற்குள் விழ வேண்டும் என்பது உன்னுடைய தவறான நடத்தை அல்ல! இதுதான் உன்னுடைய முடிவாக இருக்கிறது; இதுவே உன்னுடைய பலனாகும்!

ஆசீர்வதிக்கப்பட்ட முதற்பேறான குமாரர்களே! விரைந்து எழும்பி களிகூறுங்கள்! விரைந்து எழும்பி துதியுங்கள்! இனிமேல் கசப்புமில்லை துன்பமுமில்லை; அனைத்தும் நம் கரங்களில் உள்ளது. யாருடைய எண்ணங்கள் என்னுடையதுடன் முழுமையாக ஒத்துப்போகிறதோ அவன் நான் நேசிக்கும் ஒரு நபராவான், மேலும் பேரழிவைச் சந்திக்க மாட்டான். உன் இருதயத்தின் விருப்பம் எதுவாக இருந்தாலும், நான் அதை (அது தன்னிச்சையாக இருக்க முடியாது என்றாலும்) நிறைவேற்றுவேன்; இதுவே என் கிரியையாகும்.

முந்தைய: அத்தியாயம் 68

அடுத்த: அத்தியாயம் 70

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக