அத்தியாயம் 115

உன் நிமித்தமாக, என் இருதயம் பெரிதும் களிகூரும்; உன் நிமித்தமாக, என் கரம் ஆனந்தத்தில் நடனமாடும், உனக்கு நான் முடிவில்லா ஆசீர்வாதங்களை அருளுவேன். ஏனெனில் நீ சிருஷ்டிப்பின் காலத்திற்கு முன்பே என்னில் இருந்து வந்தாய். இன்று நீ என் பக்கத்திற்குத் திரும்ப வேண்டும், ஏனெனில் நீ இந்த உலகத்துக்கோ பூமிக்கோ உரியவன் அல்ல, ஆனால் எனக்குரியவன். உன்னில் நான் என்றும் அன்பு கூருவேன், உன்னை நான் என்றும் ஆசீர்வதிப்பேன், மேலும் உன்னை நான் என்றும் பாதுகாப்பேன். என்னில் இருந்து வந்தவர்கள் மட்டுமே என்னுடைய சித்தத்தை அறிகிறார்கள்; அவர்கள் மட்டுமே என் பாரத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். நான் செய்ய விரும்பும் விஷயங்களை அவர்கள் மட்டுமே செய்வார்கள். இன்று, எல்லாமே நிறைவேற்றப்பட்டுள்ளன. என்னுடைய நேச குமாரர்கள் என்னுடன் சீக்கிரமாக மறுபடியும் சேரவும், என் ஆள்தத்துவம் முற்றிலுமாக சீக்கிரம் சீயோனுக்குத் திரும்பி வரவும் ஏங்கி என் இருதயம் ஓர் அக்கினிப் பந்தைப் போல் இருக்கிறது. உனக்கு இதைப் பற்றி சிறிது அறிவு இருக்கிறது. நம்மால் ஆவியில் அடிக்கடி ஒருவரை ஒருவர் பின்தொடர முடியாவிட்டாலும், நம்மால் ஒருவருக்கொருவர் ஆவியில் இணைந்து மாம்சத்தில் சந்திக்க முடியும். பிதாவும் குமாரர்களும் என்றென்றைக்கும் பிரிக்க முடியாதவர்கள்; அவர்கள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர். சீயோன் மலைக்குத் திரும்பி வரும் நாள் வரை உன்னை யாராலும் என் பக்கத்தில் இருந்து நீக்கி விட முடியாது. என்னில் இருந்து வந்த எல்லா முதற்பேறான குமாரர்களையும் நான் நேசிக்கிறேன். என்னை எதிர்க்கும் எல்லா எதிரிகளையும் நான் வெறுக்கிறேன். நான் நேசிப்பவர்களை சீயோனுக்கு மறுபடியும் கொண்டு வருவேன். நான் வெறுப்பவர்களைப் பாதாளத்துக்குள்ளும் நரகத்துக்குள்ளும் தள்ளுவேன். என்னுடைய எல்லா ஆட்சிமுறை ஆணைகளின் முக்கிய கொள்கை இதுவே. எனது முதற்பேறான குமாரர்கள் சொல்லும் அல்லது செய்யும் எல்லாம் என் ஆவியின் வெளிப்பாடே. இதைப் பற்றிய தெளிவானப் புரிதலோடு எல்லோரும் என் முதற்பேறான குமாரர்களுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். இதுவே என் கிரியையின் அடுத்தக் கட்டமாகும், யாராவது எதிர்த்தால் நான் என்னுடைய நேச குமாரர்களை அவர்களைக் கையாளப் பண்ணுவேன். முன்பை விட இப்போது வேறாக இருக்கிறது. நான் நேசிக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பின் ஒரு வார்த்தையைப் பேசினால், உடனே பாதாளத்தில் சாத்தான் மரிக்கிறான். ஏனெனில் நான் ஏற்கனவே என் முதற்பேறான குமாரர்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறேன். இப்போதிலிருந்து, என் முதற்பேறான குமாரர்களும் நானும் ஒன்றாக ஆளுகை செய்யும் காலம் இதுவே என்று இதற்குப் பொருள். (இது மாம்சத்தின் கட்டத்தில் உள்ளது, இது சரீரத்தில் ஒன்றாக ஆளுகை செய்வதில் இருந்து சிறிது வேறானது.) சிந்தனையில் கீழ்ப்படியாத யாரொருவரும் நானேயாகிய என்னை எதிர்ப்பவர்கள் அடையும் பலனையே அடைந்து துன்புறுவர். என்னை நடத்துவது போலவே என்னுடைய முதற்பேறான குமாரர்களும் நடத்தப்பட வேண்டும், ஏனெனில் நாங்கள் ஒரே சரீரமாக இருக்கிறோம், மேலும் ஒருபோதும் எங்களைப் பிரிக்க முடியாது. கடந்த காலத்தில் எனக்கு சாட்சி இருந்தது போல, இன்று என் முதற்பேறான குமாரர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இது என் ஆட்சிமுறை ஆணைகளில் ஒன்று; எல்லோரும் எழுந்து சாட்சி அளிக்க வேண்டும்.

என்னுடைய ராஜ்யம் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் பரவியுள்ளது. என் முதற்பேறான குமாரர்கள் என்னுடன் பூமியின் கடைமுனை வரை பயணிக்கிறார்கள். உங்களுடைய மாம்சத்தின் தடை காரணமாக, நான் பேசியிருந்தாலும் பல வார்த்தைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆகவே சீயோனுக்குத் திரும்பி வந்த பிறகே பெரும்பாலான கிரியைகள் முடிக்கப்பட வேண்டும். இந்த திரும்பிவருதல் வெகு தொலைவில் இல்லை என்பதை என் வார்த்தைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்—உண்மையில் அந்தக் கணம் ஏறக்குறைய வந்து விட்டது. அதனால் தான் நான் தொடர்ந்து சீயோனையும் சீயோனில் உள்ள விஷயங்களையும் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய வார்த்தைகளின் நோக்கம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பழைய யுகத்தை முற்றிலுமாக முடிக்கவும், பூமியில் நம்முடைய ஜீவிதத்தை முடிக்கவும் (ஏனென்றால் நான் பூமிக்குரிய ஜனங்களை, வஸ்துகளை, பொருட்களை வெறுக்கிறேன் மற்றும் மாம்சத்தின் ஜீவிதத்தை இன்னும் அதிகமாக வெறுக்கிறேன், மேலும் மாம்சத்தின் இடைஞ்சல்கள் மிக அதிகமாக உள்ளன; சீயோனுக்கு திரும்பிச் சென்ற பின்னர் தான் எல்லாம் செழிப்பாகும்), ராஜ்யத்தில் நமது ஜீவிதத்தை மீட்கவும் நான் சீக்கிரத்தில் சீயோனுக்குத் திரும்பிச் செல்ல என் இருதயம் ஏங்குகிறது. என்னுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலுக்கு அஸ்திவாரத்தை அமைப்பதே என் முதல் மனுவுருவெடுத்தலின் நோக்கமாக இருந்தது. இதுவே செல்ல வேண்டிய பாதையாக இருந்தது. என்னை முற்றிலுமாகச் சாத்தனுக்குக் ஒப்படைத்த பின்னரே உங்களை என்னால் மீட்க முடியும், இதனால் இறுதிக் கட்டத்தின் போது நீங்கள் என்னுடைய சரீரத்துக்குள் திரும்பி வர முடியும். (எனது முதல் மனுவுருவெடுத்தல் இல்லாமல் இருந்திருந்தால், என்னால் மகிமையை அடைந்திருக்க முடியாது, என்னால் பாவநிவிர்த்தி பலியைத் திருப்பி எடுத்திருக்க முடியாது, அதனால் நீங்கள் உலகுக்குள் பாவிகளாக வந்திருப்பீர்கள்.) எனக்கு எல்லையற்ற ஞானம் இருப்பதால், உங்களை நான் சீயோனில் இருந்து வெளியே அழைத்துச் சென்ற நிகழ்வின் அர்த்தம் என்னவென்றால் மறுபடியும் உங்களையும் சீயோனுக்குக் கொண்டு வருவேன் என்பதே. வழியைத் தடுக்கும் சாத்தானின் முயற்சிகள் வெற்றி பெறாது, ஏனென்றால் என் மாபெரும் கிரியை வெகு காலத்திற்கு முன்னரே நிறைவேற்றப்பட்டு விட்டது. என் முதற்பேறான குமாரர்களும் என்னைப் போன்றவர்களே—அவர்கள் பரிசுத்தமானவர்களும் கறையற்றவர்களுமாம். ஆகவே இன்னும் என்னுடைய முதற்பேறான குமாரர்களுடன் சீயோனுக்குத் திரும்புவேன். நாங்கள் ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டோம்.

என்னுடைய முழு நிர்வாகத் திட்டமும் உங்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது. எல்லா தேசங்களிலும் எல்லா ஜனங்களின் மத்தியிலும் என்னுடைய கிரியையைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். நான் சீயோனுக்குத் திரும்பிச் செல்வது வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு இது போதுமான நிரூபணம் ஆகும், ஏனெனில் எல்லாத் தேசங்களிலும் எல்லா ஜனங்களின் மத்தியிலும் என் கிரியையைச் செய்வது என்பது சீயோனுக்கு திரும்பிச் சென்றபின் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். என்னுடைய வேகம் துரிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. (நான் சீயோனுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் நெருங்கி வருவதால், நான் திரும்பிச் செல்வதற்கு முன் பூமியில் என்னுடைய கிரியையை முடிக்க நான் விரும்புகிறேன்.) என்னுடைய கிரியையில் நான் எப்போதும் ஓய்வில்லாமல் அதிக அதிகமாய் ஈடுபடுகிறேன், எனினும் நான் பூமியில் செய்ய வேண்டிய கிரியை குறைவாகவே உள்ளன—ஏறத்தாழ இப்போது ஒன்றுமே இல்லை. (என் சுறுசுறுப்புத்தன்மை ஆவியில் செய்யப்படும் கிரியையை இலக்காகக் கொண்டது, அதை மனிதனின் புறக்கண்களால் காண முடியாது, ஆனால் என்னுடைய வார்த்தைகளில் இருந்து சேகரிக்கப்பட வேண்டும்; என்னுடைய சுறுசுறுப்புத்தன்மை மாம்சத்தில் பரபரப்பாக இருப்பது இல்லை, ஆனால் என்னுடைய பல பணிகளைத் திட்டமிடுவதைக் குறிக்கிறது). இது ஏனென்றால், நான் கூறியது போல், பூமியில் என் கிரியை ஏற்கனவே முற்றிலுமாக முடிக்கப்பட்டுவிட்டது, நான் சீயோனுக்குத் திரும்பும் வரை என்னுடைய மீதிக் கிரியை காத்திருக்க வேண்டும். (எதிர்காலக் கிரியையை மாம்சத்தில் இருந்து நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தால் கிரியை செய்ய நான் சீயோனுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது, மேலும் இந்தக் கிரியை மாம்சத்தில் செய்யப்பட்டால், அது என் நாமத்தைக் கனவீனப்படுத்தும்.) நான் என் எதிரிகளை முறியடித்து சீயோனுக்குத் திரும்பும் போது, காலங்களுக்கு முன் இருந்ததை விட ஜீவிதம் இன்னும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கும். (இது ஏனென்றால் நான் உலகத்தை முற்றிலுமாக ஜெயித்துவிட்டேன், மேலும் எனது முதல் மனுவுருவெடுத்தலுக்கும் என் இரண்டாவது மனுவுருவெடுத்தலுக்கும் நன்றி, நான் முழுமையான மகிமையை அடைந்தேன். என் முதல் மனுவுருவெடுத்தலில், நான் என் மகிமையில் ஒரு பகுதியைத் தான் அடைந்தேன், ஆனால் என் இரண்டாவது மனுவுருவெடுத்தலில் என் ஆள்தத்துவம் முழு மகிமையை அடைந்தது, ஆகவே சுரண்டி ஏமாற்றுவதற்கு இனிமேலும் சாத்தானுக்கு வாய்ப்புகள் இல்லை. ஆகவே, சீயோனில் வருங்கால வாழ்க்கை இன்னும் அதிக அழகாகவும் அமைதியாகவும் இருக்கும்.) சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை அவமானப்படுத்துவதற்காக உலகத்திற்கும் சாத்தானுக்கும் முன் என் ஆள்தத்துவம் இன்னும் அதிக மகிமையோடு தோன்றுவார்; இதுவே என் ஞானத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது. புற விஷயங்களைப் பற்றி நான் அதிகமாகப் பேசும்போது, உங்களால் அதிகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது; மனிதர்களால் பார்க்க முடியாத சீயோனைப் பற்றிய விஷயங்களை நான் அதிகமாகப் பேசும்போது, இந்த விஷயங்கள் அதிக வெறுமையாக இருப்பதாக நீங்கள் எண்ணுவீர்கள், மேலும் அவை உங்களுக்குக் கற்பனை செய்ய அதிகக் கடினமாக இருக்கும்; நான் தேவதைக் கதைகளைச் சொல்வதாக நீங்கள் எண்ணுவீர்கள். இருப்பினும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். என் வாயில் வெற்றுச் சொற்கள் எதுவும் இல்லை; என் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் நம்பத் தகுந்தவை. நீங்கள் சிந்திக்கும் முறையில் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மையாகும். (மாம்சத்தின் வரம்புகளின் காரணமாக, நான் கூறுவதை மனுஷர்களால் முழுமையாகவும் முற்றிலுமாகவும் புரிந்து கொள்ள முடியாது, மேலும் நான் சொன்னவற்றில் பல விஷயங்களை, நான் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும், நான் சீயோனுக்குத் திரும்பிய பின்னர், நான் விளக்க வேண்டிய தேவை இருக்காது; நீங்கள் இயல்பாகவே புரிந்து கொள்ளுவீர்கள்.) இதை இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

மனுஷ மாம்சத்துக்கும் எண்ணங்களுக்கும் வரையறைகள் இருந்தாலும், நான் இன்னும் உங்கள் மாம்சப்பிரகாரமான சிந்தனையை மேம்படுத்தவும் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களின் வாயிலாக உங்கள் எண்ணங்களுக்கு எதிராகப் போராடவும் விரும்புகிறேன், ஏனெனில், நான் பல முறை சொன்னது போல, இது என்னுடைய கிரியையின் ஒரு படியாகும் (சீயோனுக்குள் பிரவேசிக்கும் வரை இந்தக் கிரியை நிறுத்தப்படாது). ஒவ்வொரு நபரின் மனதுக்குள்ளும் ஒரு “சீயோன் மலை” உள்ளது, அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது. நான் தொடர்ந்து சீயோன் மலையைக் குறிப்பிடுவதால், நான் உங்களுக்கு அதைப் பற்றிய சில பொதுவான தகவலை அளிப்பேன், இதனால் அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம். சீயோன் மலையில் இருப்பது என்பது ஆவிக்குரிய உலகத்துக்குத் திரும்பி வருவதாகும். அது ஆவிக்குரிய உலகத்தைக் குறிப்பிட்டாலும், அது மனுஷர்கள் பார்க்க அல்லது தொட முடியாத ஓர் இடம் அல்ல; இது சரீரத்துக்குப் பொருந்தும். இது முற்றிலும் கண்ணுக்குப் புலனாகாததோ அருவமானதோ அல்ல, ஏனெனில் சரீரம் தோன்றும் போது. அதற்கு உருவமும் வடிவமும் இருக்கும், ஆனால் சரீரம் தோன்றாதபோது, அதற்கு உருவமும் வடிவமும் இருக்காது. சீயோன் மலையில், உணவு, உடை, அன்றாடகத் தேவைகள், அல்லது உறைவிடம் பற்றிய கவலைகள் இருக்காது அல்லது திருமணமும் குடும்பமும் இருக்காது, அங்குப் பாலினப் பிரிவும் இருக்காது (சீயோன் மலையில் இருப்பவர்கள் யாவரும் என்னுடையவர்கள், ஒரே சரீரத்தில் இருப்பவர்கள், அதனால் திருமணமோ, குடும்பமோ அல்லது பாலினமோ இருக்காது), மேலும் என்னுடைய ஆள்தத்துவம் பேசும் யாவும் சாத்தியமாகும். ஜனங்கள் எதிர்பாராமல் இருக்கும் போது, என் ஆள்தத்துவம் அவர்கள் மத்தியில் தோன்றும், ஜனங்கள் கவனம் செலுத்தாத போது, என் ஆள்தத்துவம் மறைந்து விடும். (மாம்சமும் இரத்தமும் கொண்ட ஜனங்கள் செய்ய முடியாத ஒன்றிது, ஆகவே இதை இப்போது உங்களால் கற்பனை செய்வது கடினம்.) எதிர்காலத்தில், இன்னும் ஒரு சூரியனும், ஒரு சந்திரனும், ஒரு பௌதீக வானமும் பூமியும் இருக்கும், ஆனால் சீயோனில் என் ஆள்தத்துவம் இருப்பதால், சூரியனின் சுட்டெரிப்பு இருக்காது, பகல் பொழுது இருக்காது, மேலும் இயற்கைப் பேரிடர்களினால் துன்பம் இருக்காது. நமக்கு விளக்கு அல்லது சூரியனுடைய வெளிச்சம் வேண்டுவதில்லை ஏனெனில் தேவனே நம் மேல் பிரகாசமாய் இருப்பார் என்று கூறியபோது, நான் சீயோனில் இருப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். மனுஷ எண்ணங்களின்படி, பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே அகற்றப்பட வேண்டும், மேலும் எல்லா ஜனங்களும் என் வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டும். அவர்கள் “நமக்கு விளக்கு அல்லது சூரியனுடைய வெளிச்சம் வேண்டுவதில்லை ஏனெனில் தேவனே நம் மேல் பிரகாசமாய் இருப்பார்” என்பதன் உண்மையான அர்த்தம் இது தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் உண்மையில், இது ஒரு தவறான விளக்கம். “மாதந்தோறும், அந்த விருட்சம் பன்னிரண்டு விதமான கனிகளைக் கொடுக்கும்” என்று நான் கூறிய போது, சீயோனில் இருக்கும் விஷயங்களைக் குறிப்பிட்டேன். இந்த வாக்கியம் சீயோனின் வாழ்க்கை நிலையை அதன் முழுமையோடு குறிக்கிறது. சீயோனில் நேரம் வரையறுக்கப்படாது, அதுமட்டுமல்லாமல் நிலவியலும் வெளியும் கூட அங்கு வரையறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் “மாதந்தோறும்” என்று கூறினேன். “பன்னிரண்டு விதமான கனிகள்” என்பது இன்று நீங்கள் வாழும் நடத்தையைக் குறிக்கவில்லை; மாறாக, அது சீயோனின் சுதந்திர வாழ்க்கையைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் சீயோனில் உள்ள ஜீவிதத்தின் பொதுமையாக்கம். இதில் இருந்து, சீயோனின் வாழ்க்கை வளமானதும் பல்வகைப்பட்டதுமாகும் என்று ஒருவரால் பார்க்க முடியும் (ஏனெனில் இங்கு, “பன்னிரண்டு” என்பது முழுமையைக் குறிக்கிறது). துன்பமும் கண்ணீரும் இல்லாத வாழ்க்கை அது, மேலும் அங்குச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் இருக்காது, ஆகவே எல்லோரும் விடுதலை பெற்று சுதந்திரமாக இருப்பார்கள். இதற்குக் காரணம் யார் ஒருவராலும் பிரிக்க முடியாமல், எல்லாம் என் ஆள்தத்துவத்துக்குள் உள்ளது, மேலும் எல்லாமே அழகின் காட்சியாகவும் நித்தியப் புதுமையாகவும் இருக்கும். எல்லாம் ஆயத்தமாக இருக்கும் ஒரு காலமாக அது இருக்கும், நாம் சீயோனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு நம் ஜீவிதத்தின் ஆரம்பமாக இருக்கும்.

பூமியில் என்னுடைய கிரியை முற்றிலுமாக முடிவடைந்த போதிலும், பூமியில் கிரியை செய்ய என் முதற்பேறான குமாரர்கள் எனக்குத் தேவை, ஆகவே என்னால் இன்னும் சீயோனுக்குத் திரும்ப முடியாது. சீயோனுக்கு என்னால் தனியாகத் திரும்பி வர முடியாது. என்னுடைய முதற்பேறான குமாரர்கள் பூமியில் தங்கள் கிரியையைச் செய்து முடித்த பின்னர் அவர்களோடு நான் சீயோனுக்குத் திரும்பி வருவேன். இவ்வாறு, நாங்கள் ஒன்றாக மகிமையடைகிறோம் என்று சரியாகக் கூறலாம்; என்னுடைய ஆள்தத்துவத்தின் முழுமையான வெளிப்பாடு இதுவே. (என் முதற்பேறான குமாரர்களின் கிரியை பூமியில் இன்னும் முடியவில்லை என்று நான் சொல்லுகிறேன் ஏனெனில் என் முதற்பேறான குமாரர்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தக் கிரியை இன்னும் உண்மையான நேர்மையான ஊழியம் செய்பவர்களால் செய்யப்பட வேண்டும்.)

முந்தைய: அத்தியாயம் 114

அடுத்த: அத்தியாயம் 116

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக