அத்தியாயம் 3

இன்றைய நாட்களானது கிருபையின் காலமும் அல்ல, இரக்கத்தின் காலமும் அல்ல, ஆனால் தேவனுடைய ஜனங்கள் வெளிப்படும் ராஜ்யத்தின் காலமாகவும், தேவன் நேரடியாக தெய்வீகத்தின் மூலம் காரியங்களைச் செய்யும் காலமாகவும் இருக்கிறது. இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகளின் இந்த அத்தியாயத்தில், தேவன் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்களை ஆவிக்குரிய மண்டலத்திற்குள் வழிநடத்திச் செல்கிறார். தொடக்கப் பத்தியில், அவர் இந்த ஆயத்தங்களை முன்கூட்டியே செய்கிறார், மேலும் ஒருவன் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தால், முலாம்பழத்தைப் பெற ஒரு திராட்சைக் கொடியைப் பின்தொடர்வான், மேலும் தேவன் தமது ஜனங்களிடத்தில் எதை அடைய விரும்புகிறார் என்பதை நேரடியாகப் புரிந்துகொள்வான். முன்பு, “ஊழியம் செய்பவர்கள்” என்ற பெயரில் ஜனங்கள் சோதிக்கப்பட்டனர், இன்று, அவர்கள் உபத்திரவத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான், அவர்களின் பயிற்சி முறையாகத் தொடங்குகிறது. இதுதவிர, ஜனங்கள் கடந்த கால வார்த்தைகளின் அடித்தளத்தின் அடிப்படையில் தேவனுடைய கிரியையைப் பற்றிய அதிக அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் வார்த்தைகள் மற்றும் ஆள்தத்துவம், ஆவியானவர் மற்றும் ஆள்தத்துவம் ஆகியவற்றைப் பிரிக்க முடியாத முழுமையாய்—ஒரே வாய், ஒரே இருதயம், ஒரே செயல் மற்றும் ஒரே ஆதாரம் எனப் பார்க்க வேண்டும். சிருஷ்டிப்பு முதல் இந்தக் கோரிக்கையே தேவன் மனுஷனிடம் வைத்திருக்கும் மிக உயர்ந்த கோரிக்கையாகும். இதிலிருந்து, தேவன் தமது முயற்சிகளில் ஒரு பகுதியைத் தம் ஜனங்களுக்காகச் செலவிட விரும்புகிறார் என்பதையும், அவற்றில் சில அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்ட விரும்புகிறார் என்பதையும், மேலும் முக்கியமாக, எல்லா ஜனங்களையும் தேவனுடைய முழு கிரியைக்கும் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியச் செய்ய விரும்புகிறார் என்பதையும் பார்க்கலாம். ஒரு வகையில், தேவனே தம்முடைய சாட்சியை நிலைநிறுத்துகிறார், மற்றொரு வகையில், அவர் தம்முடைய ஜனங்களிடம் கோரிக்கைகளை வைத்திருக்கிறார், மேலும் ஜனங்களுக்கு நேரடியாக தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளை வெளியிட்டிருக்கிறார்: எனவே, நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், காரியங்கள் வழக்கமாக இருப்பதைப் போல இல்லை; நீங்கள் என் ஆவியானவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் என் கிரியையை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும்; நீங்கள் என் ஆவியையும் என் மாம்சத்தையும் பிரிக்கலாகாது, ஏனென்றால், நாங்கள் இயல்பாகவே ஒன்றாகவும், இயற்கையால் பிரிக்கப்படாதவர்களாகவும் இருக்கிறோம். இதில், மனுவுருவான தேவனை ஜனங்கள் புறக்கணிப்பதைத் தடுக்க, “நாங்கள் இயல்பாகவே ஒன்றாகவும், இயற்கையால் பிரிக்கப்படாதவர்களாகவும் இருக்கிறோம்” என்ற வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; இத்தகைய புறக்கணிப்பு மனுஷனின் தோல்வி என்பதால், இது மீண்டும் தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, “இழப்பைச் சந்திப்பார்கள், மேலும் எந்த மாற்று வழியும் இல்லாமல், தங்கள் சொந்தக் கசப்பான கோப்பையிலிருந்து மட்டுமே பானம் பண்ண முடியும்” என்று எதையும் மறைக்காமல், தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை தேவன் ஜனங்களுக்குத் தெரிவிக்கிறார். மனுஷன் பலவீனமானவனாக இருப்பதால், இந்த வார்த்தைகளைக் கேட்டபின் அவனால் அவனது இருதயத்தில் தேவனைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால், ஜனங்களைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கக் “கசப்பான கோப்பை” போதுமானது. தேவன் பேசும் இந்தக் “கசப்பான கோப்பை” பற்றி ஜனங்களிடம்: வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படுதல் அல்லது ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்படுதல், அல்லது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குத் தனிமைப்படுத்தப்படுதல், அல்லது ஒருவருடைய மாம்சம் சாத்தானால் கெடுக்கப்பட்டு, பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்படுதல் அல்லது தேவனுடைய ஆவியானவரால் கைவிடப்படுதல், அல்லது ஒருவருடைய மாம்சமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பாதாளத்திற்குப் போகும்வரை அழிக்கப்படுதல் ஆகிய இப்படிப்பட்ட பல விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்கள் ஜனங்களுடைய சிந்தனையால் அடையக்கூடியவை, எனவே அவர்களின் கற்பனையில், ஜனங்களால் அவற்றைத் தாண்டிச் செல்ல இயலாது. ஆனால் தேவனுடைய எண்ணங்கள் மனுஷனுடைய எண்ணங்களைப் போல் இல்லை; அதாவது, “கசப்பான கோப்பை” என்பது, மேலே உள்ள எந்த விஷயத்தையும் குறிக்கவில்லை, ஆனால் தேவனுடைய நடத்துதலைப் பெற்ற பிறகு தேவனைப் பற்றிய ஜனங்களுடைய அறிவின் அளவைக் குறிக்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒருவர் தன்னிச்சையாக, தேவன் தாமே உடுத்தியிருக்கிற தேவனுடைய ஆவியையும் அவருடைய வார்த்தைகளையும் பிரித்துப்பார்த்தால், அல்லது வார்த்தைகளையும் ஆள்தத்துவத்தையும், அல்லது ஆவியையும் மாம்சத்தையும் பிரித்துப்பார்த்தால், இந்த நபரால் தேவனுடைய வார்த்தைகளில் தேவனை அறிய இயலாது, ஆனால் அதோடு கூட, அவர்கள் தேவன் மீது சிறிது சந்தேகம் கொண்டால், அவர்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் குருடர்களாகிவிடுவார்கள். அவர்கள் நேரடியாக துண்டிக்கப்படுவார்கள் என்று ஜனங்கள் கற்பனை செய்வது போல் அல்ல; மாறாக, அவர்கள் படிப்படியாக தேவனுடைய சிட்சையில் விழுகின்றனர்—அதாவது, அவர்கள் பெரும் தண்டனைகளில் விழுகிறார்கள், மேலும் யாரும் அவர்களுடன் இணக்கமாக இருக்க முடியாது, அவர்கள் பொல்லாத ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் போலவும், தலையற்ற ஈயைப் போலவும், அவர்கள் போகிற இடமெல்லாம் விஷயங்களுக்கு எதிராக கிரியை செய்கிறார்கள். இருந்த போதிலும், அவர்கள் இன்னும் விட்டுவிட முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் இருதயங்களில், விஷயங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கடினமானவையாக இருக்கின்றன, அவர்களின் இருதயத்தில் சொல்ல முடியாத துன்பங்கள் இருப்பது போல், அவர்களால் வாயைத் திறக்க முடிவதில்லை, மேலும் அவர்கள் தேவனை உணர முடியாமல் நாள் முழுவதும் மயக்கத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகள் அவர்களை அச்சுறுத்துகின்றன, அதனால் அவர்கள் எந்த இன்பமும் இல்லாவிட்டாலும் திருச்சபையை விட்டு வெளியேறத் துணிய மாட்டார்கள்—இது “உள் மற்றும் வெளிப்புறத் தாக்குதல்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஜனங்கள் இதைத் தாங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இங்கு சொல்லப்பட்டிருப்பது ஜனங்களுடைய கருத்துக்களிலிருந்து வேறுபட்டது—அதனால்தான், அந்தச் சூழ்நிலைகளில், அவர்கள் இன்னும் தேவனைத் தேடத் தெரிந்திருக்கிறார்கள், மேலும் தேவன் அவர்களைப் புறக்கணிக்கும்போது இது நிகழ்கிறது, மேலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஓர் அவிசுவாசியைப் போல, அவர்கள் தேவனை முற்றிலும் உணர முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை தேவன் நேரடியாக இரட்சிப்பதில்லை; அவர்களுடைய கசப்பான கோப்பை காலியாகிவிட்டால், அதுவே அவர்களுடைய கடைசி நாள் வந்துவிட்ட சமயமாகும். ஆனால் இந்த நேரத்தில், அவர்கள் இன்னும் தேவனுடைய சித்தத்தைத் தேடுகிறார்கள், இன்னும் கொஞ்சம் அதிகமாக அனுபவிக்க விரும்புகிறார்கள்—ஆனால், விசேஷித்த சூழ்நிலைகள் இல்லாவிட்டால், இந்த நேரம் கடந்த காலத்திலிருந்து வேறுபட்டதாகிறது.

இதைத் தொடர்ந்து, தேவன் அனைவருக்கும் நேர்மறையான அம்சங்களை விளக்குகிறார், இதனால் அவர்கள் மீண்டும் ஒருமுறை ஜீவனைப் பெறுகிறார்கள்—ஏனென்றால், கடந்த காலங்களில், ஊழியம் செய்பவர்களுக்கு ஜீவன் இல்லை என்று தேவன் கூறினார், ஆனால் இன்று தேவன் திடீரென்று “அவர்களுக்குள் இருக்கும் ஜீவன்” பற்றி பேசுகிறார். ஜீவனைப் பற்றி பேசுவதன் மூலம் மட்டுமே ஜனங்கள் இன்னும் தேவனுடைய ஜீவன் அவர்களுக்குள் இருக்க முடியும் என்பதை அறிவார்கள். இந்த வழியில், தேவன் மீதான அவர்களின் அன்பு பல மடங்கு அதிகரிக்கிறது, மேலும் அவர்கள் தேவனுடைய அன்பு மற்றும் இரக்கத்தைப் பற்றிய அதிக அறிவைப் பெறுகிறார்கள். இவ்வாறு, இந்த வார்த்தைகளைப் பார்த்த பிறகு, எல்லா ஜனங்களும் தங்கள் முந்தைய தவறுகளுக்காக வருந்தி, மறைவில் வருந்தி கண்ணீர் சிந்துகிறார்கள். பெரும்பாலானவர்கள், தேவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று அமைதியாக தங்கள் மனதைச் சீர்படுத்துகிறார்கள். சில சமயங்களில், தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களுடைய உள்ளான இருதயத்தைக் குத்தி, ஜனங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதைக் கடினமாக்குகின்றன, மேலும் ஜனங்கள் சமாதானத்துடன் இருப்பதைக் கடினமாக்குகின்றன. சில சமயங்களில், தேவனுடைய வார்த்தைகள் உண்மையானவையாகவும், ஊக்கமளிப்பவையாகவும், ஜனங்களுடைய இருதயங்களை அரவணைப்பவையாகவும் இருக்கின்றன, அதாவது ஜனங்கள் அவற்றை வாசித்த பிறகு, பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன ஆட்டுக்குட்டி மீண்டும் தனது தாய் ஆட்டைப் பார்ப்பது போல் இருக்கும். அவர்களின் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது, அவர்கள் உணர்ச்சிவசத்தால் மேற்கொள்ளப்படுகிறார்கள், மேலும் தேவனுக்குத் தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, பல ஆண்டுகளாக தங்கள் இருதயங்களில் இருந்த விவரிக்க முடியாத வலியை விடுவித்து, சோகத்துடன் தேவனுடைய அரவணைப்பில் தங்களைத் தாங்களே தூக்கி எறியத் துடிக்கிறார்கள். பல மாத சோதனையால், பல வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருந்த உதவாதவராய் இருக்கும், நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் போல, கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறவர்களாய் ஆகிவிட்டார்கள். தேவனுடைய வார்த்தைகளின் மீதான அவர்களது விசுவாசத்தில் உறுதியாக இருக்க, பலமுறை தேவன் பின்வரும் வார்த்தைகளை வலியுறுத்துகிறார்: “எனது கிரியையின் அடுத்த கட்டம் சுமூகமாகவும் தடையின்றியும் தொடர, என் வீட்டில் உள்ள அனைவரையும் சோதிக்க வார்த்தைகளின் புடமிடுதலைப் பயன்படுத்துகிறேன்.” இங்கே, தேவன் “என் வீட்டில் உள்ள அனைவரையும் சோதிக்க” என்று கூறுகிறார்; ஜனங்கள் ஊழியம் செய்பவர்களாகச் செயல்படும்போது, அவர்கள் இன்னும் தேவனுடைய வீட்டிற்குள் இருக்கும் ஜனங்கள்தான் என்பதை அதிகக் கவனத்துடனான வாசிப்பு நமக்குச் சொல்கிறது. மேலும், இந்த வார்த்தைகள், ஜனங்களுடைய இருதயங்களில் ஓரளவு நிம்மதியைக் கொண்டுவருவதன் மூலம் “தேவனுடைய ஜனங்கள்” என்ற பட்டத்திற்கு நேராக தேவனுடைய உண்மைத் தன்மையை வலியுறுத்துகின்றன. அப்படியிருக்க, தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு அல்லது “தேவனுடைய ஜனங்கள்” என்ற பட்டம் இன்னும் வெளிப்படுத்தப்படாதபோது, ஜனங்களுடைய பல வெளிப்பாடுகளை தேவன் ஏன் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்? தேவன் மனுஷனுடைய இருதயத்தின் ஆழத்தை நோக்கிப் பார்க்கும் தேவன் என்று காட்டுவதற்கு மட்டுமா? இது காரணத்தின் ஒரு பகுதி மட்டுமே—இங்கே, இது இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. எல்லா ஜனங்களையும் முழுவதுமாக நம்ப வைப்பதற்காகவும், ஒவ்வொரு நபரும், தேவனுடைய வார்த்தைகளில் இருந்து, தங்கள் சொந்தக் குறைபாடுகளை அறிந்து கொள்ளவும், வாழ்க்கையைப் பற்றிய முந்தைய குறைபாடுகளை அறிந்து கொள்ளவும், மேலும் முக்கியமாக, அடுத்த கட்டக் கிரியைக்கான அடித்தளத்தை அமைக்கவும் தேவன் அவ்வாறு செய்கிறார். ஜனங்களால் தேவனை அறியவும், தங்களைத் தாங்களே அறியும் அடித்தளத்தின் அடிப்படையில் தேவனுடைய முன்மாதிரியைப் பின்பற்றவும் மட்டுமே முயற்சி செய்ய முடியும். இந்த வார்த்தைகளின் காரணமாக, ஜனங்கள் எதிர்மறையாகவும் செயலற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து நேர்மறையாகவும் செயல்திறனுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள், மேலும் இது தேவனுடைய கிரியையின் இரண்டாம் பகுதி வேரூன்றுவதற்கு உதவுகிறது. கிரியையின் இந்தக் கட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, தேவனுடைய கிரியையின் இரண்டாம் பகுதி ஓர் எளிதான காரியமாக மாறுகிறது, ஆனால் சிறிய முயற்சி தேவைப்படுகிறது என்று சொல்லலாம். இவ்வாறு, ஜனங்கள் தங்கள் இருதயங்களில் உள்ள சோகத்தை வெளியேற்றி, நேர்மறையாகவும், செயல்திறனுள்ளவர்களாகவும் மாறும்போது, தேவன் தம்முடைய ஜனங்களுக்கான மற்ற கோரிக்கைளை நிறைவேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்: “எனது வார்த்தைகள் எந்த நேரத்திலும் அல்லது எந்த இடத்திலும் வெளியிடப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன, எனவே, நீங்கள் உங்களையே எனக்கு முன்பாக எப்பொழுதும் அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைய தினமானது இதற்கு முன்பு வந்ததைப் போல அல்ல, மேலும் நீ விரும்புவதெல்லாவற்றையும் இனி நிறைவேற்றிவிட முடியாது. மாறாக, என் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ், நீங்கள் உங்கள் சரீரத்தை அடிபணியச் செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்; நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் முக்கிய ஆதாரமாக பயன்படுத்த வேண்டும், நீங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படலாகாது.” இதில், தேவன் முதன்மையாக “என் வார்த்தைகளை” என்று வலியுறுத்துகிறார்; கடந்த காலத்திலும், அவர் “என் வார்த்தைகளை” என்று பலமுறை குறிப்பிட்டார், இதனால், ஒவ்வொரு நபரும் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. தேவனுடைய கிரியையின் அடுத்த கட்டத்தின் முக்கிய அம்சம் இவ்வாறு சுட்டிக்காட்டப்படுகிறது: எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்புவார்கள், மேலும் வேறு எந்த அன்பையும் கொண்டிருக்க மாட்டார்கள். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது; ஒரு நபர் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, பலர் ஆமென் சொல்லி கீழ்ப்படிந்தால், திருச்சபையில் காணப்பட்ட முந்தைய சூழ்நிலைகள் முடிவுக்கு வரும். அந்தக் காலத்தில், ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை அறியவில்லை, ஆனால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் ஆயுதமாக அவற்றை எடுத்துக் கொண்டனர். இதை மாற்றியமைக்க, பூமியில் இருக்கிற தேவன் மனுஷனிடம் புதிய, உயர்ந்த கோரிக்கைகளை வைக்கிறார். தேவனுடைய உயர்ந்த தராதரங்களையும் கடுமையான கோரிக்கைகளையும் கண்டு ஜனங்கள் எதிர்மறையாகவும் செயலற்றவர்களாகவும் மாறுவதைத் தடுக்க, தேவன் பலமுறை ஜனங்களை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “இன்றைய நாளில் இருப்பதைப்போல இத்தகைய சூழ்நிலைக்கு காரியங்கள் வந்துவிட்டதால், உங்கள் கடந்த காலக் கிரியைகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் அதிக மனவேதனையையும் வருத்தத்தையும் உணரத் தேவையில்லை. என் மகத்துவம் கடல்கள் மற்றும் ஆகாயவிரிவைப் போல எல்லையற்றது—மனுஷனுடைய திறன்களும் என்னைக் குறித்த அறிவும் என் சொந்தக் கரத்தின் பின்புறத்தைப் போல எப்படி எனக்குப் பரிச்சயம் இல்லாதிருக்க முடியும்?” ஊக்கமளிக்கிறதும் நேர்மையானதுமான இந்த வார்த்தைகள் திடீரென்று ஜனங்களுடைய மனதைத் திறந்து, நேர்மறையானவர்களாகவும் செயல்திறனுள்ளவர்களாகவும் இருக்கும்படிக்கு, உடனடியாக அவர்களை விரக்தியிலிருந்து தேவன் மீதான அன்பிற்கு அழைத்துச் செல்கின்றன, ஏனென்றால், தேவன் ஜனங்களுடைய இருதயங்களில் உள்ள பலவீனத்தைப் பறித்துக் கொண்டு பேசுகிறார். இதைப் பற்றி அறியாமல், ஜனங்கள் தங்கள் கடந்தகால செயல்களுக்காக எப்போதும் தேவனுக்கு முன்பாக அவமானப்படுவதாக உணர்கிறார்கள், மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் மனதின் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு, தேவன் இந்த வார்த்தைகளைக் குறிப்பாக இயல்பாகவும் சாதாரணமாகவும் வெளிப்படுத்துகிறார், இதனால், தேவனுடைய வார்த்தைகள் கடினமானவையாகவும் மந்தமானவையாகவும் இல்லாமல், மாறாக, அவை கண்டிப்பானவையாகவும் மென்மையானவையாகவும் மற்றும் தெளிவானவையாகவும் உயிரோட்டமுள்ளவையாகவும் இருப்பதை ஜனங்கள் உணர்கின்றனர்.

சிருஷ்டிப்பு முதல் இன்று வரை, தேவன் ஆவிக்குரிய உலகில் இருந்து மனுஷனுக்கான அனைத்தையும் அமைதியாக ஏற்பாடு செய்துள்ளார், மேலும் ஆவிக்குரிய உலகின் உண்மையைப் பற்றி மனுஷனுக்கு ஒருபோதும் விவரிக்கவில்லை. ஆயினும்கூட, இன்று, தேவன் திடீரென்று அதற்குள் நடக்கும் யுத்தத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைத் தருகிறார், இது இயற்கையாகவே ஜனங்களைத் தலையைச் சொறிய வைக்கிறது, தேவன் ஆழமானவர் மற்றும் புரிந்துகொள்ள முடியாதவர் என்ற அவர்களின் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது, மேலும் தேவனுடைய வார்த்தைகளின் ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதை அவர்களுக்குக் கடினமாக்குகிறது. ஆவிக்குரிய உலகின் யுத்தத்திற்கு ஏதுவான நிலை அனைத்து ஜனங்களையும் ஆவிக்குள் கொண்டுவருகிறது என்று கூறலாம். இது எதிர்காலக் கிரியையின் முதல் முக்கியமான பகுதியாகும், மேலும் இது ஆவிக்குரிய மண்டலத்திற்குள் நுழைவதற்கு ஜனங்களுக்கு உதவும் குறிப்பாகும். இதிலிருந்து, தேவனுடைய கிரியையின் அடுத்த கட்டமானது முக்கியமாக ஆவியை இலக்காகக் கொண்டுள்ளது என்பதைக் காணலாம், இதன் முதன்மை நோக்கம் அனைத்து ஜனங்களுக்கும் மாம்சத்தில் உள்ள தேவனுடைய ஆவியின் அற்புதக் கிரியைகளைப் பற்றிய அதிக அறிவைக் கொடுப்பதாகும், அப்படியே, தேவனுக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு சாத்தானின் மூடத்தனத்தையும் இயல்பையும் பற்றிய அதிக அறிவைக் கொடுப்பதாகும். அவர்கள் ஆவிக்குரிய உலகில் பிறக்கவில்லை என்றாலும், அவர்கள் சாத்தானைப் பார்த்தது போல் உணர்கிறார்கள், இந்த உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டவுடன், தேவன் உடனடியாக வேறொரு பேச்சு முறைமைக்கு மாறுகிறார்—ஜனங்கள் இந்தச் சிந்தனையை அடைந்தவுடன், தேவன் கேட்கிறார்: “நான் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவசரமாகப் பயிற்சி அளிக்கிறேன்? ஆவிக்குரிய உலகின் உண்மைகளை நான் ஏன் உங்களுக்குச் சொல்கிறேன்? நான் ஏன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டி அறிவுறுத்துகிறேன்?” மற்றும் பல உள்ளன—ஜனங்கள் மனதில் அநேகக் கேள்விகளை எழுப்பும் கேள்விகளின் முழுத் தொகுப்பு இதோ: தேவன் ஏன் இந்தத் தொனியில் பேசுகிறார்? திருச்சபையின் கட்டுமானக் காலத்தில் அவர் ஜனங்களுடைய கோரிக்கைகளைப் பற்றி பேசாமல், ஆவிக்குரிய உலகின் விஷயங்களைப் பற்றி ஏன் பேசுகிறார்? இரகசியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தேவன் ஏன் ஜனங்களுடைய கருத்துக்களைத் தாக்குவதில்லை? இன்னும் கொஞ்சம் சிந்தனையுடன் இருப்பதன் மூலம், ஜனங்கள் தேவனுடைய கிரியையின் படிகளைப் பற்றிய சிறிதளவு அறிவைப் பெறுகிறார்கள், இதனால், அவர்கள் எதிர்காலத்தில் சோதனைகளைச் சந்திக்கும்போது, சாத்தான் மீது உண்மையான வெறுப்பு உணர்வு அவர்களுக்குள் பிறக்கிறது. எதிர்காலத்தில் அவர்கள் உபத்திரவங்களைச் சந்தித்தாலும் கூட, அவர்கள் இன்னும் தேவனை அறிந்து கொள்ளவும் சாத்தானை மிகவும் ஆழமாக வெறுக்கவும் முடிகிறது. இவ்வாறு, சாத்தானை சபிக்கிறார்கள்.

இறுதியில், தேவனுடைய சித்தம் மனுஷனுக்கு முற்றிலுமாக வெளிப்படுத்தப்படுகிறது: “எனது வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உன் ஆவிக்குள் வேரூன்றி மலரச் செய்யவும், கனி தரச் செய்யவும் மேலும் முக்கியமாக, அதிகக் கனியைத் தரச் செய்யவும் அனுமதிக்கிறேன். ஏனென்றால் நான் பிரகாசமான, செழிப்பான பூக்களைக் கேட்கவில்லை, மாறாகத் தன் முதிர்ச்சியை இழக்காத அபரிமிதமான கனியைக் கேட்கிறேன்.” தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் திரும்பத் திரும்பக் கோரும் கோரிக்கைகளில், இதுவே எல்லாவற்றிலும் மிகவும் விரிவானதும், இதுவே மையப் புள்ளியாக இருக்கிறதும், மேலும் நேரடியான முறையில் முன்வைக்கப்படுகிறதுமாய் இருக்கிறது. நான் சாதாரண மனுஷீகத்தில் கிரியை செய்வதிலிருந்து முழுமையான தெய்வீகத்தில் கிரியை செய்வதற்கு மாறியிருக்கிறேன்; எனவே, கடந்த காலத்தில், நேரடியாகப் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு, மேலும் விளக்கங்களைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும், பெரும்பாலான ஜனங்களால் எனது வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் விளைவு என்னவென்றால், அப்போது, ஜனங்கள் என் வார்த்தைகளை அறிந்துகொள்பவர்களாகவும், யதார்த்தத்தைப் பேசக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற தேவையே ஆகும். இருப்பினும், இந்தக் கட்டமானது மிகவும் வித்தியாசமானதாகும். எனது தெய்வீகம் முழுவதுமாக ஆளுகைக்கு வந்திருக்கிறது, மேலும், ஒரு பங்கைக் கூட ஆற்ற மனுஷீகத்திற்கு இடமளிக்கவில்லை. இவ்வாறு, என் ஜனங்களிடத்தில் உள்ளவர்கள் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனது வார்த்தைகள் மூலம் மட்டுமே அவர்கள் வெளிச்சத்தையும் அறிவொளியையும் பெற முடியும், அது இந்த வழியின் மூலம் இல்லையென்றால், எனது வார்த்தைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் எந்த எண்ணங்களும் வெற்று பகல் கனவுகளாகும். எனது வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லா ஜனங்களும் என்னைப் பற்றி அதிக அறிவைப் பெற்றிருக்கும் சமயமே, என் ஜனங்கள் என்னை வாழ்ந்து காட்டும் நேரமும், அதுவே, மாம்சத்தில் என் கிரியை முடிவடையும் நேரமும், மேலும் எனது தெய்வீகம் முழுவதுமாக மாம்சத்தில் வாழ்ந்து காட்டும் நேரமும் ஆகும். இந்த நேரத்தில், எல்லா ஜனங்களும் என்னை மாம்சத்தில் அறிவார்கள், மேலும் தேவன் மாம்சத்தில் தோன்றுகிறார் என்று உண்மையிலேயே சொல்ல முடியும், மேலும், இதுவே பலனாக இருக்கும். திருச்சபையைக் கட்டுவதில் தேவன் சோர்வடைந்துவிட்டார் என்பதற்கு இது கூடுதல் சான்றாகும்—அதாவது, “ஒரு பசுமையான தோட்டத்தில் உள்ள பூக்கள் நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவையாக இருந்து, பாராட்டும் கூட்டம் அனைத்தையும் ஈர்த்தாலும், அவை வாடிப்போனவுடன், அவை சாத்தானின் வஞ்சகத் திட்டங்கள் சிதைந்து போவதைப் போல ஆகிவிடுகின்றன, அவைகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.” திருச்சபைக் கட்டப்பட்ட காலத்தில் தேவனும் தனிப்பட்ட முறையில் கிரியை செய்திருந்தாலும், அவர் எப்போதும் புதியவராக மற்றும் ஒருபோதும் பழையவராக இல்லாத தேவன் என்பதால், கடந்த கால விஷயங்களுக்காக அவர் எந்த ஏக்கமும் கொண்டிருக்கவில்லை. ஜனங்கள் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதைத் தடுக்க, அவர் “அவை சாத்தானின் வஞ்சகத் திட்டங்கள் சிதைந்து போவதைப் போல ஆகிவிடுகின்றன,” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார், இது தேவன் உபதேசத்திற்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதைக் காட்டுகிறது. சிலர் தேவனுடைய சித்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு கேட்கலாம்: அது தேவனால் செய்யப்பட்ட கிரியையாக இருந்தபோதிலும், “பூக்கள் வாடிப்போனவுடன், அவைகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை” என்று அவர் ஏன் சொன்னார்? இந்த வார்த்தைகள் ஜனங்களுக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கின்றன. மிக முக்கியமானது என்னவென்றால், எல்லா ஜனங்களும் ஒரு புதிய மற்றும் சரியான தொடக்கப் புள்ளியைப் பெற்றிருக்க அவை அனுமதிக்கின்றன; அப்போதுதான் அவர்களால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். இறுதியில், தேவனுடைய ஜனங்கள், உண்மையான, கட்டாயப்படுத்தப்படாத, மேலும் அவர்களின் இருதயங்களிலிருந்து வருகிற துதியை தேவனுக்குச் செலுத்த முடியும். இதுவே தேவனுடைய 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் மையமாக உள்ளது. அதாவது, இதுவே இந்த 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் படிகமயமாக்கல் ஆகும்: தேவனுடைய மனுவுருவாதலின் முக்கியத்துவத்தை எல்லா ஜனங்களுக்கும் தெரியப்படுத்துவது—தேவன் மாம்சமாக மாறுவதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வைப்பது, அதாவது, மாம்சத்தில் இருக்கிற தேவனுடைய கிரியைகள்—அவர்கள் தெளிவற்ற தேவனை மறுத்து, இன்றும், நேற்றும் அதைவிட, நாளையும் இருக்கிற தேவனையும், யதார்த்தத்திலேயும், உண்மையிலேயும் நித்திய நித்தியமாக இருந்த தேவனையும் அறிந்து கொள்வார்கள். அப்போதுதான், தேவன் இளைப்பாறுதலில் பிரவேசிப்பார்!

முந்தைய: அத்தியாயம் 1

அடுத்த: அத்தியாயம் 4

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக