அத்தியாயம் 99

என் கிரியையின் வேகம் அதிகரித்து வருவதால், யாராலும் என் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வரமுடியாது. என் மனதை யாராலும் ஊடுறுவ முடியாது. இருந்தாலும் இதுவே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழியாகும். இது ஏற்கனவே பேசப்பட்டுள்ள “மரித்தோரிடத்தில் இருந்து எழுந்திருத்தல்” என்ற சொற்றொடரில் இருக்கும் “மரித்தோர்” (என் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமை, என்னுடைய வார்த்தைகளில் நான் அர்த்தப்படுத்துவதை புரிந்து கொள்ள முடியாமை; “மரித்தோர்” என்பதற்கு இது இன்னொரு விளக்கம். இது “என் ஆவியால் கைவிடப்படுதல்” என்பதைக் குறிக்காது) ஆகும். நீங்களும் நானும் இந்தக் கட்டத்தில் இருந்து சரீரத்துக்கு மாறிய பின்னர், “மரித்தோரிடத்தில் இருந்து எழுந்திருத்தல்” என்பதன் உண்மையான அர்த்தம் நிறைவேறும் (அதாவது, இதுவே மரித்தோரிடத்தில் இருந்து எழுந்திருத்தல் என்பதன் உண்மையான அர்த்தமாகும்). இப்போது, நீங்கள் எல்லோரும் இருக்கும் நிலை இதுதான்: உங்களால் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாததோடு என் அடிச்சுவடுகளையும் கண்டறிய முடிவதில்லை. மேலும், உங்களால் உங்கள் ஆவியில் அமைதியாக இருக்க முடிவதில்லை. ஆகையால் மனதில் சஞ்சலத்தை உணர்கிறீர்கள். இந்த வகையான நிலை தான் நான் சரியாகக் குறிப்பிட்ட “பாடுகள்” ஆகும். ஜனங்களால் தாங்கிக் கொள்ள முடியாத இந்தப் பாடுகளுக்குள் ஒருபுறம் உங்கள் சொந்த எதிர்காலத்தையும் மறுபுறத்தில் என் சுட்டெரித்தலையும் என் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். இது உங்களை எல்லாத் திசைகளில் இருந்தும் மோதித் தாக்குகிறது. அதோடுகூட, நான் பேசும் தொனி மற்றும் முறையில் இருந்து உங்களால் எந்த விதிகளையும் புரிந்து கொள்ள முடியாது. மேலும் ஒரு நாள் பேச்சில் பலவகையான தொனிகள் இருக்கும். இதனால் நீங்கள் அதிகமாகப் பாடடைவீர்கள். இவையே என் கிரியையின் படிநிலைகளாகும். இதுவே என் ஞானம் ஆகும். வருங்காலத்தில், இந்த வகையில் நீங்கள் அதிகப் பாடுகளை அனுபவிப்பீர்கள். இவை எல்லாம் எல்லா மாயக்காரர்களையும் வெளிப்படுத்தத்தான்—இப்போது இது தெளிவாக இருக்க வேண்டும்! இவ்வகையில் தான் நான் கிரியை செய்கிறேன். இந்த வகையான பாடுகளின் ஊக்குவிப்பால், மேலும் மரணத்துக்குச் சமமான இந்த வலியை அனுபவித்தப் பிறகுதான் நீங்கள் இன்னொரு பகுதிக்குள் பிரவேசிப்பீர்கள். நீங்கள் சரீரத்துக்குள் பிரவேசிப்பீர்கள், மேலும் என்னுடன் எல்லா தேசங்களையும் எல்லா ஜனங்களையும் அரசாளுவீர்கள்.

சமீபத்தில் நான் ஏன் அதிகக் கடுமையான தொனியில் பேசியிருக்கிறேன்? ஏன் என் தொனி அடிக்கடி மாறியிருக்கிறது? நான் கிரியை செய்யும் முறையும் ஏன் அடிக்கடி மாறியிருக்கிறது? இந்த விஷயங்களில்தான் என் ஞானம் இருக்கிறது. இந்த நாமத்தை ஏற்றுக்கொண்ட அனைவருக்காகவும் என்னுடைய வார்த்தைகள் பேசப்படுகின்றன (அவர்கள் விசுவாசிக்கிறார்களோ இல்லையோ என் வார்த்தைகள் நிறைவேறும்). இதனால் ஒவ்வொருவராலும் என் வார்த்தைகள் கேட்கவும் பார்க்கவும் படும். மேலும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும். ஏனெனில் எனக்கென கிரியை செய்யும் முறையும் எனக்கென ஞானமும் உண்டு. ஜனங்களை நியாயந்தீர்க்கவும், ஜனங்களுக்கு வெளிப்படுத்தவும், மனுஷ சுபாவத்தை வெளியரங்கமாக்கவும் நான் என் வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். அதன்மூலம், என்னால் அடையாளம் காணப்படுபவர்களை நான் தெரிந்தெடுக்கிறேன். என்னால் முன்குறிக்கப்படாதவர்கள் அல்லது தெரிந்தெடுக்கப்படாதவர்களை நான் புறம்பாக்குகிறேன். இவை எல்லாம் என் ஞானம். மேலும் இதுவே என் கிரியையின் அதிசயம். என் கிரியையின் இந்தக் கட்டத்தில் இதுவே என் வழிமுறையாகும். என்னுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவன் மனுஷர்களின் மத்தியில் யாராவது இருக்கிறானா? என் பாரத்தின் மேல் அக்கறையுள்ளவன் மனுஷர்களின் மத்தியில் யாராவது இருக்கிறானா? கிரியையைச் செய்கிற தேவனாகியவர் நானே. என்னுடைய இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் முற்றிலுமாக அறிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். நான் இந்த வார்த்தைகளை ஏன் பேச விரும்பினேன் என்பது உங்களுக்கு முற்றிலுமாகத் தெளிவாகும். என்னுடைய ஞானம் முடிவில்லாதது, எல்லையில்லாதது, அளவிட முடியாதது. அது மனுஷர்களால் முற்றிலுமாக உள் நுழைய முடியாதது. நான் செய்யும் விஷயங்களில் இருந்து ஒரு பகுதியைத் தான் மனுஷர்களால் பார்க்க முடியும், ஆனால் அவர்கள் பார்ப்பது பிழையானதும் முழுமையடையாததும் ஆகும். நீங்கள் இந்தக் கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முற்றிலுமாக மாறும் போது, உங்களால் அதைத் தெளிவாகப் பார்க்க முடியும். ஞாபகத்தில் வைத்திருங்கள்! இப்போது தான் மிகவும் அருமையான யுகம்—நீங்கள் மாம்சமாக இருக்கும் கடைசிக் கட்டம் இது தான். இப்போதைய உங்கள் வாழ்க்கை உங்கள் உடல்ரீதியான வாழ்க்கையின் இறுதியாகும். மாம்சத்தில் இருந்து நீங்கள் ஆவிக்குரிய உலகத்தில் பிரவேசிக்கும் அந்தச் சமயத்தில் எல்லா வலிகளும் உங்களை விட்டு அகலும். நீங்கள் பெரிதும் களிகூர்ந்து மகிழ்வீர்கள். நிற்காமல் ஆனந்தத்தால் குதிப்பீர்கள். ஆனால் நான் பேசும் இந்த வார்த்தைகள் முதற்பேறான குமாரர்களுக்கு மட்டுமே என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆசீர்வாதத்துக்கு முதற்பேறான குமாரர்களே தகுதியுடையவர்கள். ஆவிக்குரிய உலகத்தில் பிரவேசிப்பதே மாபெரும் ஆசீர்வாதமும், உன்னத ஆசீர்வாதமும் ஆகும். மேலும் அனுபவிக்கக் கூடிய மிகவும் விலையுயர்ந்த விஷயமாகும். இப்போது உங்களுக்குப் புசிக்கவும் உடுத்தவும் கிடைப்பதெல்லாம் மாம்சத்தின் இன்பங்கள்தான்; அவை கிருபையாய் இருக்கின்றன. இந்த விஷயங்களை நான் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அடுத்தக் கட்டத்தின் மீது தான் என் கவனம் இருக்கிறது (ஆவிக்குரிய உலகத்திற்குள் பிரவேசித்துப் பிரபஞ்ச உலகத்தை எதிர்கொள்ளுவது).

சிவப்பான பெரிய வலுசர்ப்பம் ஏற்கனவே என்னால் கீழே தள்ளப்பட்டு நசுக்கப்பட்டதை நான் கூறியிருக்கிறேன். என் வார்த்தைகளை எப்படி உங்களால் நம்பாமல் இருக்க முடியும்? எனக்காக நீங்கள் ஏன் இன்னும் துன்புறுத்தலையும் தீங்கையும் தாங்கிக் கொள்ள விரும்புகிறீர்கள்? இது நீங்கள் செலுத்த வேண்டிய தேவையற்ற கிரயம் அல்லவா? நான் தனிப்பட்ட முறையில் என் கிரியையைச் செய்யும்போது நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டும் என்று பல முறை உங்களை ஞாபகப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க மிக ஆவலாக இருக்கிறீர்கள்? எப்படி அனுபவித்து மகிழ்வது என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை! நான் உங்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறேன்—அதைக் கோரிப் பெற உங்களில் யாரும் ஏன் என்னிடம் வரவில்லை? நான் கூறியதைப் பற்றி நீங்கள் இன்னும் உறுதியற்றவர்களாக இருக்கிறீர்கள்! நீங்கள் இன்னும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை! நான் பேசுவது வெறும் வெற்று வேடிக்கைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் குழப்ப சிந்தனைக்காரர்கள்! (நான் கூறும் முழு ஆயத்தம் என்னவென்றால் நீங்கள் இன்னும் அதிகமாக என்னை நோக்கிப் பார்த்து எனக்கு முன்னால் ஜெபிக்க வேண்டும், அதே நேரத்தில் நான் என்னை எதிர்க்கும் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் சபித்து உங்களைத் துன்புறுத்தும் எல்லோரையும் தண்டிக்கும் கிரியை செய்வேன்). என் வார்த்தைகளைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது! நான் என் இரகசியங்களை எல்லாம் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன், ஆனால் உங்களில் எத்தனை பேர் அவற்றை உண்மையிலேயே புரிந்து கொள்ளுகிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் அவற்றை ஆழமாய் புரிந்து கொள்ளுகிறீர்கள்? என்னுடைய சிங்காசனம் என்ன? என்னுடைய இருப்புக் கோல் என்ன? உங்கள் மத்தியில் யார் அறிவீர்கள்? என்னுடைய சிங்காசனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, நான் அதில் உட்காருவதாக, அல்லது அது என் வாசஸ்தலத்தை, அல்லது என்னை, ஆள்தத்துவமான என்னைக் குறிப்பதாக பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். இவையெல்லாம் பிழையானப் புரிதல்கள்—சொல்லப்போனால் தவறானப் புரிந்து கொள்ளுதல்கள்! இந்த விளக்கங்களில் ஒன்று கூட சரியானவை இல்லை, அப்படித்தானே? இந்த வகையில்தான் நீங்கள் எல்லாம் புரிந்து அறிந்து கொள்ளுகிறீர்கள்—இது புரிந்து கொள்ளுதலின் மிக அதிகபட்ச விலகல் ஆகும். அதிகாரம் என்றால் என்ன? அதிகாரத்துக்கும் சிங்காசனத்துக்கும் இடையில் இருக்கும் சம்பந்தம் என்ன? சிங்காசனமே என் அதிகாரம். என்னுடைய முதற்பேறான குமாரர்கள் என்னுடைய சிங்காசனத்தை உயர்த்திப் பிடிக்கும் நேரம் தான், என்னுடைய முதற்பேறான குமாரர்கள் என்னிடத்தில் இருந்து அதிகாரத்தைப் பெறும் நேரமாக இருக்கும். என்னிடம் மட்டும்தான் அதிகாரம் உள்ளது, ஆகவே என்னிடம் மட்டுமே சிங்காசனம் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நான் துன்பப்பட்ட விதமாகவே என் முதற்பேறான குமாரர்களும் துன்பப்பட்ட பின்னர், நான் என்னவாக இருக்கிறேன் நான் என்ன கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள், மேலும் என்னிடத்தில் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வார்கள்; முதற்பேறான குமாரர்கள் அந்தஸ்தை அவர்கள் அடையும் செயல்முறை இதுதான். என்னுடைய சிங்காசனத்தை என் முதற்பேறான குமாரர்கள் உயர்த்திப் பிடிக்கும் நேரம் அதுவே, மேலும் அவர்கள் என்னிடத்தில் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நேரமும் அதுவாகவே இருக்கும். இப்போது நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்! நான் சொல்லுவதெல்லாம் தெளிவாக இருக்கின்றன, மற்றும் முற்றிலும் சந்தேகம் இல்லாமல் இருக்கின்றன, அதனால் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள். உங்கள் சொந்தக் கருத்துக்களைத் தள்ளி வையுங்கள், நான் உங்களுக்கு வெளிப்படுத்தும் இரகசியங்களை ஏற்றுக்கொள்ளக் காத்திருங்கள்! ஆகவே இருப்புக் கோல் என்பது என்ன? முந்திய கட்டத்தில், அது என் கடுமையான வார்த்தைகளைக் குறித்தது, ஆனால் அது இப்போது கடந்த காலத்தை விட வேறுபட்டது: இப்போது இருப்புக் கோல் என் செய்கைகளைக் குறிக்கிறது, அவை அதிகாரம் நிரம்பியப் பெரும் பேரழிவுகள் ஆகும். ஆகவே, எப்போதெல்லாம் இருப்புக் கோல் குறிப்பிடப் படுகிறதோ, அப்போதெல்லாம அது என்னுடைய அதிகாரத்துடன் இணைந்ததாக இருக்கிறது. இருப்புக் கோல் என்பதன் மூல அர்த்தம், பெரும் பேரழிவுகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது—அது என் அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். எல்லாரும் இதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். அவ்வாறு தான் என்னுடைய சித்தத்தைப் புரிந்து என்னுடைய வாத்தைகளில் இருந்து வெளிப்பாடுகளைப் பெற முடியும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை யாரிடம் இருக்கிறதோ அவன் தன் கையில் இருப்புக் கோலைப் பிடித்திருக்கிறான். அவனே அதிகாரம் உடையவனாக இருக்கிறான், மேலும் எந்த ஒரு பேரழிவையும் செயல்படுத்த உரிமை கொண்டவனாய் இருக்கிறான். இதுவும் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளில் ஒன்றாகும்.

ஒவ்வொன்றும் எல்லாமும் உங்களுக்குத் திறந்திருக்கின்றன (தெளிவாகக் குறிப்பிடப்பட்ட பகுதியை இது குறிக்கிறது), மேலும் ஒவ்வொன்றும் எல்லாமும் உங்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன (இது என்னுடைய வார்த்தைகளின் இரகசியமான பகுதியைக் குறிக்கிறது). நான் ஞானத்தோடு பேசுகிறேன்: என்னுடைய சில வார்த்தைகளின் நேரடி அர்த்தத்தை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்ள அனுமதிக்கிறேன், அதே நேரத்தில் பிறவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அனுமதிக்கிறேன் (ஆனால் பெரும்பான்மையான மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை), ஏனெனில் இதுதான் என் கிரியையின் தொடர்ச்சியாகும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை நீங்கள் அடையும் போது மட்டுமே என்னால் உங்களுக்கு என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைக் கூற முடியும். இதுவே என் ஞானம். இவையே என் அதிசயமானச் செய்கைகள் (அதனால் உங்களைப் பரிபூரணப்படுத்தவும், சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்கவும், பிசாசுகளை வெட்கப்படுத்தவும் முடியும்). இன்னொரு பகுதிக்குள் நீங்கள் பிரவேசிக்கும் வரை உங்களால் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய கருத்துக்களில் ஜனங்களால் அளந்தறிய முடியாத பல விஷயங்கள் இருப்பதனால், நான் இதை இவ்விதமாகச் செய்ய வேண்டியுள்ளது. நான் தெளிவாகப் பேசினாலும் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஜனங்களுடைய மனங்கள் வரையறைக்குட்பட்டவை. நீங்கள் ஆவிக்குரிய உலகத்திற்குள் பிரவேசித்த பின்னரே உங்களுக்கு என்னால் தெரிவிக்கக் கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன; இல்லாவிட்டால் மனித மாம்சம் உரிய திறன் கொண்டது இல்லை என்பதால் என்னுடைய நிர்வாகத்துக்கு இது இடையூறு மட்டுமே செய்யும். நான் சொல்லும் “என் கிரியையின் தொடர்வரிசை” என்பதன் உண்மையான அர்த்தம் இதுவே. உங்கள் கருத்துக்களில் நீங்கள் எவ்வளவு தூரம் என்னைப் புரிந்து கொள்ளுகிறீர்கள்? உங்கள் புரிந்து கொள்ளுதல் பிழையில்லாமல் இருக்கிறதா? அது ஆவிக்குள் இருக்கும் அறிவா? ஆகவே, நீ என் கிரியையை முடிப்பதற்கும் என் சித்தத்தைச் செய்வதற்கும் இன்னொரு பகுதிக்கு மாறுவதை நான் அனுமதிக்க வேண்டும். ஆகவே இந்த இன்னொரு பகுதி என்பது சரியாக எது? அது உண்மையில் ஜனங்கள் நினைப்பது போல் ஒரு வகையான எல்லைக் கடந்த காட்சியா? அது உண்மையில் பார்க்க அல்லது உணர முடியாத காற்று போன்ற ஒன்றா? நான் கூறியபடி, சரீரத்தில் இருக்கும் நிலை என்பது மாம்சம் மற்றும் எலும்பைக் கொண்டிருப்பதும், வடிவத்தையும் உருவத்தையும் கொண்டிருப்பதும் ஆகும். இது முற்றிலும் உண்மை மற்றும் சந்தேகத்துக்கு இடமற்றது. இதை எல்லோரும் நம்ப வேண்டும். இதுவே சரீரத்தில் இருக்கும் உண்மை நிலை. மேலும், மக்கள் வெறுக்கும் எந்த வஸ்துவும் சரீரத்தில் இல்லை. ஆனால் சரியாக இந்த நிலை என்பது என்ன? ஜனங்கள் மாம்சத்தில் இருந்து சரீரத்துக்கு மாறும்போது, ஒரு பெரிய குழு தோன்ற வேண்டும். அதாவது, அவர்கள் தங்கள் மாம்ச ரீதியான வீட்டில் இருந்து விடுபடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வகையைப் பின்பற்றுவார்கள்: மாம்சம் மாம்சத்தோடு சேரும், சரீரம் சரீரத்தோடு சேரும். தங்கள் வீடு, தங்களுடைய பெற்றோர்கள், மனைவிகள், கணவன்கள், மகன்கள், மற்றும் மகள்கள் ஆகியோரிடமிருந்து விடுபடுபவர்கள் ஆவிக்குரிய உலகத்துக்குள் பிரவேசிக்கத் தொடங்குவார்கள். முடிவில், அது இப்படி இருக்கும்: ஆவிக்குரிய உலகின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்றால், முதற்பேறான குமாரர்கள் ஒன்றாகச் சேர்ந்து, பாடி ஆடி, துதித்து, என் பரிசுத்த நாமத்தைப் போற்றுவார்கள். இந்தக் காட்சி அழகாகவும் என்றும் புதிதாகவும் இருக்கும். எல்லோரும் என் நேச குமாரர்கள். இடைவிடாமல் என்னை என்றென்றும் துதிப்பவர்கள். என்றென்றும் என்னுடைய நாமத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள். ஆவிக்குரிய உலகத்துக்குள் பிரவேசித்தபின் இருக்கும் சூழ்நிலை இதுதான். ஆவிக்குரிய உலகத்துக்குள் பிரவேசித்த பின் இது தான் கிரியையும் கூட. இது தான் நான் பேசிய சூழ்நிலையும், ஆவிக்குரிய உலகத்தில் சபையை மேய்ப்பதும் ஆகும். மேலும், என் நபர்எல்லா நாடுகளையும் எல்லா மக்களையும் ஆள என் அதிகாரத்தையும், என் கோபத்தையும், என் நீதியையும் இன்னும் அதிகமாக, என் இருப்புக் கோலையும் தாங்கி பிரபஞ்சத்தின் எல்லாத் தேசங்களிலும், எல்லா தேசங்களின் மற்றும் மக்களின் மத்தியிலும் தோன்றுவது என்பது இதுதான். இது எல்லா மக்களின் மத்தியிலும், முழு பிரபஞ்சத்திலும், எனக்குச் சாட்சி அளிக்கிறது. அது வானத்தையும் பூமியையும் அசைக்கிறது. எல்லா மக்களையும், மலைகளிலும், நதிகளிலும், ஏரிகளிலும், பூமியின் கடையாந்தரங்களிலும் உள்ள எல்லாவற்றையும் என்னைத் துதித்து மகிமைப்படுத்தவும், எல்லவற்றையும் சிருஷ்டித்து, எல்லாவற்றையும் வழிநடத்தி, எல்லாவற்றையும் நிர்வகித்து, எல்லாவற்றையும் நியாயந்தீர்த்து, எல்லாவற்றையும் நிறைவேற்றி, எல்லாவற்றையும் தண்டித்து, எல்லாவற்றையும் அழிக்கும் ஒரே தேவனான என்னை அறியவும் செய்கிறது. அப்படியானால், இதுவே என்னுடைய ஆள்தத்துவத்தின் மெய்யான தோற்றமாகும்.

முந்தைய: அத்தியாயம் 98

அடுத்த: அத்தியாயம் 100

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக