அத்தியாயம் 57
உன் சிந்தனைகள் மற்றும் யோசனைகள் ஒவ்வொன்றையும், உன் ஒவ்வொரு செயலையும் நீ ஆராய்ந்து பார்த்திருக்கிறாயா? இவற்றில் எவை எனது சித்தத்திற்கு இணங்கியுள்ளன மற்றும் எவை இணங்கவில்லை என்பது குறித்த ஒரு தெளிவான அறிவு உனக்கு உள்ளதா? நீ இதை முற்றிலும் பகுத்தறியும் திறனற்றவன்! நீ ஏன் என் முன் வரவில்லை? நான் உன்னிடம் கூற மாட்டேன் என்பதற்காகவா, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவா? நீ இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்! அலட்சியமாக இருப்பவர்களால் என் சித்தத்தை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது அல்லது எந்தவொரு பெரிய ஒளியையோ அல்லது வெளிப்பாட்டையோ பெற முடியாது.
திருச்சபை ஊட்டம் பெறாமல் இருப்பதற்கும், மெய்யான ஐக்கியம் இல்லாததற்கும் காரணங்கள் என்ன என்று நீ கண்டறிந்தாயா? இதற்கு வழிவகுத்த காரணங்களில் உன்னுடன் தொடர்புடையவை எத்தனை என்று நீ அறிந்திருக்கிறாயா? வாழ்க்கையை வழங்கி என் குரலை வெளியிடுமாறு நான் உன்னை அறிவுறுத்தினேன். இவற்றை நீ செய்தாயா? வாழ்க்கையில் உன் சகோதர சகோதரிகளின் முன்னேற்றத்தைத் தாமதித்ததற்காக நீ பொறுப்பேற்றுக் கொள்கிறாயா? நீ பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, அமைதியாகவும், உறுதியாகவும் இருப்பதற்குப் பதிலாக, நீ கலக்கத்துடன் இருக்கிறாய். நீ உண்மையில் அலட்சியத்துடன் இருக்கிறாய்! எனது குரலானது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அடக்கக் கூடாது, மற்றும் தள்ளிப்போடுவதன் மூலம் என்னை தாமதப்படுத்தக் கூடாது; அவற்றில் எதுவும் யாருக்கும் பயனளிக்காது. உன்னை நீ எனக்கு முழுவதுமாக சரீர ரீதியாகவும் மனதளவிலும் அர்ப்பணிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், இதனால் உன்னுடைய ஒவ்வொரு சிந்தனையும் யோசனையும் எனக்கானதாக இருக்கும், இதனால் நீ என் சிந்தனைகளையும் அக்கறைகளையும் பகிர்ந்து கொள்வாய், மற்றும் இதனால் நீ செய்யும் அனைத்தும் இன்றைய ராஜ்யம் மற்றும் எனது நிர்வாகத்திற்காக செய்யப்படும், உனக்காக அல்ல. அது மட்டும் தான் என் இருதயத்தைத் திருப்திப்படுத்தும்.
நான் செய்த எதுவும் ஆதாரம் இல்லாமலில்லை. நீ ஏன் என்னைப் பின்பற்றவில்லை? நீ செய்யும் செயல்களுக்கு ஏன் ஆதாரம் தேடவில்லை? நான் இன்னும் என்ன கூற வேண்டும்? நான் உன் கையைப் பிடித்துக் கற்றுத் தந்தேன், இருப்பினும் உன்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை. நீ மிகவும் முட்டாளாக இருக்கிறாய்! அனைத்தையும் மீண்டும் தொடங்க வேண்டும் என நீ விரும்புகிறாயா? மனமுடைந்து போக வேண்டாம். நீ மீண்டும் ஒருமுறை உன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, பரிசுத்தவான்களால் பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் சார்பாக உன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை நினைவில் கொள்: “எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.”
நீ எதைச் செய்தாலும் ஒழுங்கான முறையில் செய்ய வேண்டுமே தவிர ஒழுங்கற்ற முறையில் அல்ல. பரிசுத்தவான்களின் நிலை உனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறுவதற்கு நீ உண்மையில் துணிகிறாயா? உனக்கு ஞானம் இல்லை என்பதையும், நீ இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், மற்றும் நீ அதில் நேரத்தைச் செலவிடவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதில் உண்மையில் நீ உன் முழு நேரத்தையும் செலவிட்டிருந்தால், பின்னர் உன் உள்ளார்ந்த நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீ பார்த்திருப்பாய். தீவிரமான முயற்சிகளை எடுக்க நீ முற்படவில்லை; நீ என் சித்தத்தின் மீது சிறிதளவு கூட அக்கறை காட்டாமல் வெறும் மேலோட்டமான காரணங்களையே தேடிக்கொண்டிருந்தாய். அது என்னை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது! இப்படியே தொடராதே! நான் உனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களை நீ தான் ஏற்றுக் கொள்ளவில்லையா?
ஓ, தேவனே! உம் பிள்ளை உமக்குக் கடன்பட்டிருக்கிறான். நான் உம் கிரியையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை அல்லது உம் சித்தத்தில் அக்கறை காட்டவில்லை, அல்லது உம் உபதேசங்களுக்கு நான் உண்மையுள்ளவனாக இருக்கவில்லை. உம் பிள்ளை இவை அனைத்தையும் மாற்ற விரும்புகிறான். நீர் என்னைக் கைவிட்டு விடாதிரும், மற்றும் நீர் உமது கிரியையை என் மூலமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஓ, தேவனே! உம் பிள்ளையைத் தனியாக விட்டுவிடாதேயும்! மாறாக, ஒவ்வொரு தருணத்திலும் அவனுடன் இருந்தருளும். ஓ தேவனே! நீர் என்னை நேசிப்பது உம் பிள்ளைக்குத் தெரியும், எனினும், என்னால் உம் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை; உம் பாரத்தின் மீது எப்படி அக்கறை காட்டுவதென்றோ அல்லது நீர் என்னிடம் ஒப்படைத்ததை எப்படி நிறைவேற்றுவது என்றோ எனக்குத் தெரியவில்லை. திருச்சபையை எப்படி வழிநடத்துவதென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. நான் இது குறித்து மனமுடைந்து, வருத்தப்படுகிறேன் என்பதை நீர் அறிவீர். ஓ, தேவனே! எல்லா நேரங்களிலும் என்னை வழிநடத்தும். என்னிடம் எவ்வளவு குறைகள் உள்ளன என்பதை நான் இப்போது தான் உணர்கிறேன்—என்னிடம் அதிகமான குறைகள் உள்ளன! எவ்வளவு என்பதை என்னால் வெறுமனே விவரிக்க முடியாது. உம் சர்வவல்லமையுள்ள கரம் உம் பிள்ளைக்குக் கிருபை காட்டட்டும், எல்லா நேரங்களிலும் என்னை ஆதரிக்கட்டும், மற்றும் இனி என் சொந்த விருப்பங்களைச் செய்யாமலும், என் சொந்தச் சிந்தனைகள் அல்லது யோசனைகள் இல்லாமலும், உம் முன்பாக நான் முழுவதுமாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க எனக்கு உதவட்டும். ஓ, தேவனே! முழுவதும் உமக்காகவும், இன்றைய ராஜ்யத்திற்காகவும் அனைத்தையும் செய்ய உம் பிள்ளை விரும்புவதை நீர் அறிவீர். இந்தத் தருணத்தில் நான் என்ன சிந்திக்கிறேன் என்றும், நான் என்ன செய்கிறேன் என்றும் உமக்குத் தெரியும். ஓ தேவனே! என்னை நீரே தேடும். நான் செய்யும் அனைத்திலும் உம் பெலன் இருக்கும் வகையில், நீர் என்னுடன் நடந்து, எல்லா நேரங்களிலும் என் வாழ்க்கையில் இருந்தருளும்.