அத்தியாயம் 74

என் வார்த்தைகளைப் படித்து அவை நிறைவேறும் என்று நம்புகிறவர்கள் பாக்கியவான்கள். நான் உன்னைத் தவறாக நடத்த மாட்டேன்; நீ நிறைவேறும் என்று நம்புகிறதை நான் உன்னில் நிறைவேற்றுவேன். உன் மேல் வருகிற என்னுடைய ஆசீர்வாதம் இதுவே. ஒவ்வொரு நபரிடமும் மறைத்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்களை என் வார்த்தைகள் முழுமையாக உணரச் செய்யும். அனைவருக்கும் மரணக்காயங்கள் உள்ளன, நான் அவற்றைச் சுகப்படுத்தும் நல்ல மருத்துவர்: வெறுமனே நீ என் சமூகத்தில் வா. எதிர்காலத்தில் இனி துக்கமும் கண்ணீரும் இருக்காது என்று நான் ஏன் சொன்னேன்? அது இந்தக் காரணத்திற்காகவே. என்னில் எல்லாமே நிறைவேற்றப்பட்டன, ஆனால் மனிதரில், அனைத்தும் கலகம் நிறைந்தவையாக, வெறுமையானதாக மற்றும் மனிதரை வஞ்சிப்பதாக இருக்கின்றன. என் சமூகத்தில் நீ எல்லாவற்றையும் பெறுவது உறுதி, மேலும் நீ ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத எல்லா ஆசீர்வாதங்களையும் உன்னால் நிச்சயமாய்ப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியும். என் முன் வராதவர்கள் நிச்சயமாகக் கலகக்காரர்களும், என்னை முற்றிலும் எதிர்ப்பவர்களுமாவர். நான் நிச்சயமாக அவர்களை லேசாக விடமாட்டேன். அத்தகையவர்களை நான் கடுமையாகத் தண்டிப்பேன். இதை நினைவில் கொள்! அது கிருபையாக மாத்திரம் இருந்தாலும் கூட, எத்தனை அதிகமாக ஜனங்கள் என் முன் வருகிறார்களோ, அத்தனை அதிகமாக அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் அவர்கள் இன்னும் பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.

உலகத்தை உருவாக்குவதற்கு, நான் இந்த மனிதர்களை, அதாவது இன்றைய உங்களை முன்னரே தீர்மானித்து தேர்வு செய்யத் தொடங்கினேன். உங்கள் மனோபாவம், திறமை, தோற்றம் மற்றும் அந்தஸ்து, நீங்கள் பிறந்த உன் குடும்பம், உன் வேலை, மற்றும் உங்கள் திருமணம் உன் முடியின் நிறம் மற்றும் உன் தோல், மற்றும் உன் பிறந்த நேரம் என அனைத்தும் என் கரங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. நீ செய்யும் காரியங்களையும், ஒவ்வொரு நாளும் நீ சந்திக்கும் மனிதர்களையும் நான் என் கரத்தால் ஏற்பாடு செய்தேன். உன்னை இன்று என் முன்னிலையில் கொண்டு வருவது உண்மையில் எனது ஏற்பாட்டின் விளைவு என்ற உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உன்னை ஒழுங்கின்மைக்குள் கொண்டு செல்லாதே. நீ அமைதியாகத் தொடர வேண்டும். இன்று நான் உன்னை அனுபவிக்க அனுமதித்தது உனக்குத் தகுதியான ஒரு பங்காகும். இது, உலகத்தைச் சிருஷ்டிக்கையில் என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். மனிதர்கள் அனைவரும் மிகத் தீவிரமானவர்கள்: ஒன்று அவர்கள் அதிகப்படியான தலைக்கனமுள்ளவர்கள் அல்லது முற்றிலும் வெட்கமில்லாதவர்கள். என்னுடைய திட்டம் மற்றும் ஏற்பாடுகளுக்கு ஏற்ப அவர்களால் காரியங்களைச் செய்ய முடிவதில்லை. இதை இனி ஒரு போதும் செய்ய வேண்டாம். எனக்குள், அனைத்தும் விடுவிக்கப்பட்டன. உன் வாழ்வு இழந்து போகும்படி உன்னை நீயே கட்டிப் போடாதே, இதை நினைவில் கொள்!

அனைத்தும் என் கையில் இருப்பதாக நம்புங்கள். கடந்த காலத்தில் நீங்கள் இரகசியங்களாகக் கருதிய அனைத்தும் இன்று வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை இனி மறைக்கப்படுவதில்லை (ஏனென்றால் எதிர்காலத்தில் எதுவும் மறைக்கப்படாது என்று நான் சொல்லியிருக்கிறேன்). ஜனங்கள் பெரும்பாலும் பொறுமையற்றவர்கள்; அவர்கள் காரியங்களை முடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர், என் இருதயத்தில் இருப்பதை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. நீங்கள் என் பாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி, என் வீட்டை நிர்வகிக்கும்படி நான் உங்களைப் பயிற்றுவிக்கிறேன். உங்களை விட இளைய சகோதரர்களை நீங்கள் வழிநடத்தும்படி நீங்கள் சீக்கிரமாக வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் பிதாவும் குமாரரும் மீண்டும் பிரியாதபடி சீக்கிரத்தில் ஒன்றிணைய முடியும். இது என் நோக்கங்களை நிறைவேற்றும். இரகசியங்கள் ஏற்கனவே எல்லா ஜனங்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன எதுவும் மறைக்கப்படவில்லை: இயல்பான மனிதத் தன்மையையும் முழுமையான தெய்வீகத் தன்மையும் கொண்ட முழுமையான தேவனாகிய நான் இன்று உங்கள் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறேன். என் முழு இருப்பும் (உடை, வெளிப்புறத் தோற்றம் மற்றும் சரீர வடிவம்) தேவனுடைய முழுமையான வெளிப்பாடாகும். உலகம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து மனிதர்கள் கற்பனை செய்ததும், ஆனால் ஒருவரும் பார்த்திராததுமான தேவ மனிதனின் உடலாகும். எனது இயல்பான மனிதத்தன்மையும் முழுமையான தெய்வீகத்தன்மையும் ஒன்றுக்கொன்று இயைந்து செல்வதால், என் செயல்கள் என் வார்த்தைகளைப் போலவே நல்லதாக இருக்கின்றன. மேலும், இது ஒரு சாதாரண மனிதர் உண்மையில் அத்தகைய மிகப் பெரிய வல்லமையைக் கொண்டிருப்பதை அனைத்து ஜனங்களையும் பார்க்க அனுமதிக்கிறது. உங்களில் என்னை உண்மையாக நம்புகிறவர்கள் அவ்வாறு செய்கிறீர்கள், ஏனென்றால் என்னை நேசிக்கும்படி உங்களுக்கு ஒரு உண்மையான இருதயத்தை நான் கொடுத்தேன். நான் உன்னைக் கையாளும்போது, உன் மேல் என் வெளிச்சத்தை வீசி, உன்னை பிரகாசமாக்குகிறேன், இதன் மூலம் நீ என்னை அறிந்து கொள்ள உன்னை அனுமதிக்கிறேன். இதன் விளைவாக, நான் உன்னுடன் எவ்வாறு நடந்து கொண்டாலும், அதைப் பொருட்படுத்தாமல், நீ தப்பி ஓட மாட்டாய்; அதற்குப் பதிலாக நீ என்னைப் பற்றி மேலும் மேலும் உறுதியாவாய். நீ பலவீனமாக இருக்கும்போது, இதுவும் என்னுடைய ஏற்பாடே, நீ என்னை விட்டு விலகினால், நீ மரித்து, வாடிப்போவாய் என்பதைப் பார்க்க இது உன்னை அனுமதிக்கிறது. அதிலிருந்து நான் தான் உன்னுடைய ஜீவன் என்பதை நீ அறிந்து கொள்ளலாம். பலவீனத்தில் இருந்து நீ பலமாகும்போது, பலவீனமாக இருப்பது அல்லது பெலத்துடன் இருப்பது உன்னைப் பொறுத்தது அல்ல, அது முற்றிலும் எனக்குரியது என்பதை நீ பார்க்க அனுமதிக்கப்படுவாய்.

அனைத்து இரகசியங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன. என் வழிமுறைகளை உங்கள் எதிர்கால நடவடிக்கைகளில் செயல்முறை வாரியாக உங்களுக்குத் தருவேன். நான் தெளிவற்று இருக்க மாட்டேன், நான் முற்றிலும் வெளிப்படையாக இருப்பேன், உங்களுடன் நேரடியாகப் பேசுவேன்; ஏனென்றால் நீங்கள் என் நிர்வாகத்து இடையூறு செய்யாத வகையில் உங்கள் சொந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. இந்தக் காரணத்தினாலேயே இனிமேல் எதுவும் மறைக்கப்பட மாட்டாது என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

முந்தைய: அத்தியாயம் 73

அடுத்த: அத்தியாயம் 75

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக