அத்தியாயம் 35

சிங்காசனத்திலிருந்து ஏழு இடிமுழக்கங்கள் எழுந்து, பிரபஞ்சத்தை அதிரச் செய்து, வானத்தையும் பூமியையும் கவிழ்த்து, வானத்தில் எதிரொலிக்கின்றன! ஒலியானது காதைத் துளைக்கிறது, மற்றும் ஜனங்களால் அதிலிருந்து தப்ப முடியாது, அல்லது அவர்களால் அதனிடமிருந்து ஒளிந்து கொள்ள முடியாது. இடிமுழக்கமும் மின்னலும் சடுதியில் தோன்றுகின்றன, உடனடியாக, வானமும் பூமியும் மாறுகின்றன, மற்றும் ஜனங்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். பின்னர் மின்னல் வேகத்தில், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் வானத்திலிருந்து பொழியும் ஒரு பலத்த புயல் மழையால் மூடப்படுகிறது! பூமியின் தொலைதூர மூலைகளில், முற்றிலுமான ஒரு மழைப் பொழிவு போல், அது அனைத்தையும் தலை முதல் கால் வரை கழுவியதால் அது கறைபடிய விடவில்லை; அதனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது, அல்லது அதனிடமிருந்து எந்தவொரு நபரையும் மூடி மறைக்கவும் முடியாது. மின்னல் ஒளிகள் போன்று இடிமுழக்கங்கள் குளிரான ஒளியுடன் பிரகாசித்து மனிதர்களை அச்சத்தில் நடுங்க வைக்கின்றன! கூர்மையான இருபுறமும் கருக்குள்ள பட்டயமானது கலகக்காரர்களின் குமாரர்களை வெட்டி வீழ்த்துகிறது, மற்றும் எதிரியானவன் ஒளிந்து கொள்ள இடமின்றிப் பேரழிவை எதிர்கொள்கிறான்; காற்று மற்றும் மழையின் வேகத்தில் அவர்கள் திகைப்புற்று, அதன் தாக்கத்தால் தத்தளிக்கின்றனர், ஓடும் நீரில் அவர்கள் ஒரேடியாக மரித்து அடித்துச் செல்லப்படுகின்றனர். மரணம் மட்டுமே உள்ளது, அவர்கள் உயிர் பிழைக்க வழியே இல்லை. ஏழு இடிமுழக்கங்களும் என்னிடமிருந்து சென்று, எகிப்தின் மூத்த குமாரர்களை அடித்து வீழ்த்தி, பொல்லாதவர்களுக்குத் தண்டனை கொடுத்து, என் திருச்சபைகளைச் சுத்தப்படுத்தும் என் நோக்கத்தை தெரிவிக்கின்றன, அதன் மூலம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கலாம், தங்களுக்கு உண்மையாகச் செயல்படலாம், என்னுடன் ஒரே இருதயம் கொண்டவர்களாக இருக்கலாம், மற்றும் அதனால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் திருச்சபைகளையும் ஒன்றாகக் கட்டியெழுப்ப முடியும். இதுவே என் நோக்கம்.

இடிமுழக்கங்கள், மற்றும் ஒப்பாரி சத்தங்கள் அதன் பின்னால் புரண்டு வருகின்றன. சிலர் தங்களின் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டுள்ளனர், பெரிதாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, அவர்கள் தங்கள் ஆத்துமாக்களில் ஆழமாகத் தேடி, சிங்காசனத்தின் முன் விரைவாகத் திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்களின் பரவலான தந்திரங்களையும் மூர்க்கத்தனமான செயல்களையும் நிறுத்துகிறார்கள்; அத்தகைய ஜனங்களை எழுப்புவதற்கு இன்னும் தாமதமாகவில்லை. நான் சிங்காசனத்திலிருந்து பார்க்கிறேன். நான் மனிதரின் இருதயங்களுக்குள் ஆழமாகப் பார்க்கிறேன். ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் என்னை விரும்புபவர்களை நான் இரட்சிப்பேன், மற்றும் அவர்கள் மீது நான் பரிதாபம் கொள்கிறேன். தங்கள் இருதயத்தில் மற்ற அனைத்தையும் விட என்னை நேசிப்பவர்கள், என் சித்தத்தைப் புரிந்து கொண்டு இறுதி வரை என்னைப் பின்தொடர்பவர்கள் உள்ளிட்டவர்களை நித்தியத்திற்குள் நான் இரட்சிப்பேன். என் கரம் அவர்களைப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொள்ளும், எனவே அவர்கள் இந்தக் காட்சியை எதிர்கொள்ள மாட்டார்கள் மற்றும் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. சிலர், மின்னும் மின்னலின் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, அவர்களின் இருதயங்களில் விவரிக்க முடியாத துயரத்தைக் கொண்டிருப்பர் மற்றும் தீவிரமாக வருந்துவர். அவர்கள் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டால், இது அவர்களுக்கு மிகவும் தாமதமாகிவிடும். ஓ, சகல காரியங்களே! அவை அனைத்தும் செய்து முடிக்கப்படும், இதுவும் கூட, எனது இரட்சிப்பின் வழிகளில் ஒன்றாகும். என்னை நேசிப்பவர்களை நான் இரட்சித்து, பொல்லாதவர்களை அடிப்பேன், பூமியில் என் ராஜ்யத்தை நான் அசையாததாகவும் நிலையானதாகவும் ஆக்குவேன், மற்றும் நானே மகத்துவம், நானே எரியும் அக்கினி, நானே எவ்வொரு மனிதனின் உள் இருதயத்தைத் தேடும் தேவன் என்பதை அனைத்துத் தேசங்களும், அனைத்து ஜனங்களும், பிரபஞ்சத்தில் மற்றும் பூமியின் கடையாந்தரங்கள் வரை உள்ள அனைவரும் அறியட்டும். இப்போதிருந்து, பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பு வெளிப்படையாகப் பெருங்கூட்டத்திற்கும், அனைத்து ஜனங்களுக்கும் வெளிப்படுத்தப்படும், நியாயத்தீர்ப்பு வழங்கத் துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது! அந்த வார்த்தைகள் அனைத்தும் இருதயப்பூர்வமானதல்ல என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது, சந்தேகம் கொள்பவர்கள் மற்றும் உறுதியுடன் இருக்கத் துணியாதவர்கள், என் விருப்பங்களை அறிந்தும் அதை நடைமுறைப்படுத்த விரும்பாமல் நேரத்தை வீணடிப்பவர்கள் அனைவரும் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். உங்களின் சொந்த எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை ஆராய்வதில் கவனம் செலுத்த வேண்டும், மற்றும் உங்களின் சரியான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்; என் வார்த்தைகளை வாஞ்சையோடு கடைப்பிடிக்க வேண்டும், உங்களின் வாழ்க்கை அனுபவத்தை மதிக்க வேண்டும், மற்றும் மேலோட்டமான உற்சாகத்துடன் செயல்பட வேண்டாம், ஆனால் உங்களின் வாழ்க்கைகளை வளர்ந்த, முதிர்ந்த, நிலையான மற்றும் அனுபவமிக்கதாக்க வேண்டும். அதன் பின்னர் மட்டும் தான் நீங்கள் என் இருதயத்திற்கு ஏற்றவராக இருப்பீர்கள்.

நான் கட்டமைத்ததை இடையூறு செய்து அழிக்கும் சாத்தானின் ஊழியக்காரர்கள் மற்றும் பொல்லாத ஆவிகளுக்கு, விஷயங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படும். அவர்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட வேண்டும்; அவர்களைக் கூர்மையான ஒரு வாளைக் கொண்டு மட்டுமே கையாள முடியும். எதிர்காலப் பிரச்சனையைத் தடுப்பதற்காக, மோசமானவர்கள் உடனடியாக வேரறுக்கப்பட வேண்டும். மேலும், திருச்சபையானது குறைபாடுகளின்றிப் பரிபூரணப்படுத்தப்படும், மேலும், அது ஆரோக்கியமாகவும், உற்சாகம் மற்றும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கும். ஒளிரும் மின்னலையும், ஒலிக்கும் இடிமுழக்கத்தையும் பின்தொடருங்கள். நீங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது, மற்றும் நீங்கள் கைவிடக்கூடாது, ஆனால் அதை அடைவதற்காக உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், மேலும், என் கரம் என்ன செய்கிறது, நான் எதைப் பெறுகிறேன், எதை நான் நிராகரிக்கிறேன், எதை நான் பரிபூரணப்படுத்துகிறேன், எதை நான் வேரறுக்கிறேன், எதை நான் அடிக்கிறேன் என்பதை நிச்சயமாக உங்களால் பார்க்க முடியும். இவை அனைத்தும் உங்கள் கண்களின் முன்னே வெளிப்படுத்தப்படும், இது என் சர்வவல்லமையை நீங்கள் தெளிவாகக் காண அனுமதிக்கிறது.

சிங்காசனத்திலிருந்து பிரபஞ்சம் மற்றும் பூமியின் கடையாந்தரங்கள் வரை, ஏழு இடிமுழக்கங்களும் எதிரொலிக்கின்றன. மிகப்பெரிய ஜனக்கூட்டம் இரட்சிக்கப்பட்டு என் சிங்காசனத்தின் முன் அடங்கி இருப்பர். வாழ்வின் இந்த ஒளியைப் பின்தொடர்ந்து, உயிர்பிழைப்பதற்கான ஒரு வழியை ஜனங்கள் தேடுகிறார்கள், ஆனால் முழங்காற்படியிட்டு வழிபடுவதற்கும், சர்வவல்லமையுள்ள உண்மையான தேவனின் நாமத்தை அவர்களின் வாய்களால் அழைப்பதற்கும், அவர்கள் மன்றாடுவதற்கும் அவர்கள் என்னிடம் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் என்னை எதிர்ப்பவர்களுக்கு, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திக் கொள்பவர்களுக்கு, இடிமுழக்கமானது அவர்களின் காதுகளில் எதிரொலிக்கும், மற்றும் எந்தவொரு சந்தேகமுமின்றி அவர்கள் அழிய வேண்டும். இது வெறுமனே அவர்களுக்காகக் காத்திருக்கும் விளைவு ஆகும். ஜெயங்கொண்ட என் நேசத்திற்குரிய குமாரர்கள் சீயோனில் தங்குவார்கள், மேலும், அவர்கள் எதைப் பெறுவார்கள் என்பதை அனைத்து ஜனங்களும் காண்பார்கள், மற்றும் உங்கள் முன் மகத்தான மகிமை தோன்றும். உண்மையில், இது ஒரு மாபெரும் ஆசீர்வாதம் ஆகும், மற்றும் இது தொடர்புபடுத்தக் கடினமான இனிமையைக் கொண்டதாகும்.

முழங்கும் ஏழு இடி முழக்கங்களின் சத்தமும் என்னை நேசிப்பவர்கள், உண்மையான இருதயங்களுடன் என்னை விரும்புபவர்களின் இரட்சிப்பு ஆகும். என்னைச் சார்ந்தவர்கள், நான் முன் நிர்ணயித்து தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவராலும் என் நாமத்தின் கீழ் வர முடியும். அவர்களால் என் குரலைக் கேட்க முடியும், அதுவே அவர்களுக்கான தேவனின் அழைப்பு ஆகும். நான் நீதியுள்ளவர், நான் உண்மையுள்ளவர், நான் தயை கொண்டவர், நான் மனதுருக்கம் உடையவர், நான் மகத்துவமானவர், நான் பொங்கி வழியும் அக்கினி, இறுதியாக, நான் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு என்பதைப் பூமியின் கடையாந்தரங்களில் உள்ளவர்கள் பார்க்கட்டும்.

நானே உண்மையான மற்றும் பரிபூரணமான தேவன் என்பதை உலகில் உள்ள அனைவரும் பார்க்கட்டும். மனிதர்கள் அனைவரும் முழுமையாக விசுவாசிக்கின்றனர், யாரும் என்னை மீண்டும் எதிர்க்கவோ, என்னை மதிப்பிடவோ அல்லது மீண்டும் என்னை அவதூறு செய்யவோ துணிவதில்லை. இல்லையெனில், உடனடியாக அவர்கள் மீது சாபங்கள் வரும், மற்றும் அவர்களுக்குப் பேரழிவு ஏற்படும். தங்களின் சொந்த அழிவைக் கொண்டுவந்துள்ளதால், அவர்களால் அழவும், அவர்களின் பற்களைக் கடிக்கவும் மட்டும் தான் முடியும்.

சர்வவல்லமையுள்ள தேவன் தாமே ஒன்றான மெய்த்தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்து கொள்ளட்டும், பிரபஞ்சம் முழுவதிலும், பூமியின் கடையாந்தரங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும், அனைத்து ஜனங்களாலும் அது அறியப்படட்டும். அனைவரும், ஒருவர் பின் ஒருவராக, மண்டியிட்டு என்னை வழிபடுவர், இப்போதுதான் பேசக் கற்றுக்கொண்ட குழந்தைகள் கூட “சர்வவல்லமையுள்ள தேவனே” என்று அழைப்பார்கள்! அதிகாரத்தைப் பயன்படுத்திய அந்த அதிகாரிகளும் தங்கள் முன் தேவன் தோன்றுவதை அவர்களின் சொந்தக் கண்களால் பார்ப்பார்கள், மேலும் இரக்கம் மற்றும் மன்னிப்பு வேண்டி, அவர்களும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள், ஆனால் இது உண்மையிலேயே மிகவும் தாமதமாகிவிட்டது, ஏனெனில் அவர்களின் மரணத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது. அவர்களை அழித்துவிட்டு, புரிந்து கொள்ள முடியாத படுகுழியில் தண்டனையை மட்டும் தான் பெற முடியும். நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து, என் ராஜ்யத்தை மேலும் வலுப்படுத்துவேன். அனைத்துத் தேசங்களும் ஜனங்களும் நித்தியத்திற்கும் என் முன் கீழ்ப்படிந்திருப்பர்!

முந்தைய: அத்தியாயம் 34

அடுத்த: அத்தியாயம் 36

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக