அத்தியாயம் 22 மற்றும் 23
இன்று, அனைவரும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் தேவனுடைய மனநிலையை அறிந்து கொள்ளவும் விருப்பமாய் இருக்கிறார்கள், ஆனால் தாங்கள் செய்ய விரும்புவதை ஏன் செயல்படுத்த முடியாமல் போகிறது மற்றும் தங்களின் இருதயங்கள் ஏன் எப்போதும் தங்களுக்கு துரோகம் செய்கிறது என்றும், தாங்கள் விரும்புவதை அடைய முடியாமலும் போகிறது என்பவற்றுக்கான காரணத்தையும் ஒருவரும் அறியார்கள். இதன் விளைவாக, அவர்கள் பயங்கரமான மனஅழுத்தத்தினால் மீண்டும் ஒரு முறை பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த முரண்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல், அவர்கள் சோகத்தில் தலை கவிழ்ந்து இடைவிடாமல் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள மட்டுமே முடிகிறது: “தேவன் என்னைப் பிரகாசிப்பிக்காமல் இருக்க முடியுமா? தேவன் என்னை ரகசியமாக கைவிட்டு இருக்க முடியுமா? ஒருவேளை மற்ற எல்லாரும் நலமாக இருக்கிறார்கள், தேவன் என்னைத் தவிர அனைவரையும் பிரகாசிப்பித்திருக்கிறார். தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது நான் ஏன் எப்போதும் தொந்தரவு அடைகிறேன்—எப்போதும் என்னால் ஏன் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை?” இத்தகைய எண்ணங்கள் ஜனங்களின் மனதில் இருந்தாலும், அவற்றை வெளிப்படுத்த யாரும் துணிவதில்லை; அவர்கள் வெறுமனே உள்ளத்தில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், தேவனைத் தவிர வேறு யாராலும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது அவருடைய உண்மையான சித்தத்தைக் கிரகித்துக்கொள்ளவோ முடியாது. ஆயினும், ஜனங்கள் எப்போதும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் கேட்கிறார்—இது ஒரு வாத்தை கட்டாயப்படுத்தி அமரவைக்க முயற்சிப்பது போல் இல்லையா? மனுஷனின் தோல்விகளை தேவன் அறியாதிருக்கிறாரா? இது தேவனுடைய கிரியையில், ஜனங்கள் புரிந்துகொள்ளத் தவறுகிற ஒரு சந்தர்ப்பமாகும், எனவே தேவன் கூறுகிறார், “மனுஷன் வெளிச்சத்தின் மத்தியில் வாழ்கிறான், ஆனாலும் வெளிச்சத்தின் விலைமதிப்பற்ற தன்மையை அவன் அறியவில்லை. வெளிச்சத்தின் பொருள் பற்றியும், அதன் மூலத்தைப் பற்றியும், மேலும், அது யாருடையது என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை.” தேவனுடைய வார்த்தைகள் மனுஷனிடம் சொல்வதன் படியும், அவைகள் அவனிடம் கேட்பதன் படியும், யாரும் பிழைக்க மாட்டார்கள், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் எதுவும் மனுஷனின் மாம்சத்தில் இல்லை. எனவே, தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய முடிகிறது, தேவனுடைய வார்த்தைகளை நேசிக்கவும் மற்றும் அவைகளுக்காக ஏங்கவும் முடிகிறது, மற்றும் மனிதனின் நிலை முதல் சொந்த நிலைமைகள் வரை சுட்டிக்காட்டி, அதன் மூலம் தங்களையே அறிந்து கொள்ள வைக்கும் தேவனுடைய அந்த வார்த்தைகளை அப்பியாசப்படுத்த முடிகிறது—இதுவே மிக உயர்ந்த தரமாகும். ராஜ்யம் இறுதியில் உணரப்படும் போது, மாம்சத்தில் வாழும் மனுஷன், இன்னும் தேவனுடைய சித்தத்தைக் கிரகிக்க இயலாமல் இருப்பான், இன்னும் அவருடைய தனிப்பட்ட வழிநடத்துதல் தேவைப்படும்—ஆனாலும் ஜனங்கள் சாத்தானின் குறுக்கீடு இல்லாமல் இருந்து, மனுஷனின் இயல்பான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வார்கள்; சாத்தானைத் தோற்கடிப்பதில் தேவனுடைய நோக்கம் இதுதான், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனுடைய உண்மையான சாராம்சத்தை மீட்பதற்காக அவர் முக்கியமாக இதைச் செய்கிறார். தேவனுடைய மனதில், “மாம்சம்” என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவனுடைய சாராம்சத்தை அறிய இயலாத தன்மை; ஆவிக்குரிய உலகின் காரியங்களைக் காண இயலாத தன்மை; மேலும், இன்னும் அதிகமாக, சாத்தானால் சீர்கேடு அடைந்தும், இன்னும் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிற திறன் ஆகியவையாகும். இது தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மாம்சத்தின் சாரமாகும். இயற்கையாகவே, இது மனிதகுலத்தின் வாழ்க்கையில் ஒழுங்கின்மையினால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதையும் குறிக்கிறது. தேவன் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறாரோ, மேலும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜனங்கள் புரிந்துகொள்கிறார்கள். ஜனங்கள் தங்களை அறியாமலேயே மாறுகிறார்கள், மற்றும் தங்களை அறியாமலே ஒளியில் வாழ்கிறார்கள், இதனால், “வெளிச்சத்தின் காரணமாக, அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் மற்றும் இருளை விட்டுவிட்டார்கள்.” இது ராஜ்யத்தின் அழகான காட்சி, மற்றும் அவ்வப்போது பேசப்பட்ட “மரணத்திலிருந்து விலகி ஒளியில் வாழ்தல்” என்பதாகும். சீனீம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் போது—ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் போது—பூமியின் மீது இனி யுத்தம் இருக்காது; பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் மற்றும் பூகம்பங்கள் ஆகியவை இனி ஒருபோதும் இருக்காது; ஜனங்கள் ஆயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்துவார்கள்; அனைவரும் சமாதானத்துடனும் ஸ்திரத்தன்மையுடனும் வாழ்வார்கள்; மேலும் ஜனங்களிடையே இயல்பான பரிவர்த்தனைகளும், நாடுகளுக்கிடையே சாதாரண பரிவர்த்தனைகளும் இருக்கும். ஆனால் தற்போது இதற்கு எந்த ஒப்பீடும் இல்லை. வானத்தின் கீழ் அனைத்தும் குழப்பத்தில் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாட்டிலும் கலகங்கள் படிப்படியாக எழத் தொடங்குகின்றன. தேவனுடைய வாக்கியங்களின் எழுச்சிக்குப் பிறகு, ஜனங்கள் படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள், மேலும், ஒவ்வொரு நாடும் மெதுவாக உள்ளுக்குள் பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது. மணல் மீது இருக்கும் ஓர் அரண்மனையைப் போல, பாபிலோனின் நிலையான அஸ்திபாரங்கள் நடுங்கத் தொடங்குகின்றன, மேலும் தேவனுடைய சித்தம் மாறுகிறபடியால், உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் கவனிக்கப்படாமலேயே நிகழ்கின்றன, மேலும் எல்லா விதமான அறிகுறிகளும் எந்த நேரத்திலும் தோன்றி, உலகத்தின் கடைசி நாள் வந்துவிட்டது என்று ஜனங்களுக்குக் காட்டும்! இது தேவனுடைய திட்டம்; அவர் கிரியைசெய்யும் படிகள் இவைகளே, ஒவ்வொரு நாடும் நிச்சயமாக துண்டு துண்டாக்கப்படும். பழைய சோதோம் இரண்டாவது முறையாக அழிக்கப்படும், இதனால் தேவன் கூறுகிறார், “உலகம் வீழ்ச்சியடைகிறது! பாபிலோன் முடங்கி உள்ளது!” தேவனைத் தவிர வேறு யாராலும் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனங்களின் விழிப்புணர்வுக்கு ஒரு வரம்பு உள்ளது. உதாரணமாக, உள்நாட்டு விவகார அமைச்சர்கள் தற்போதைய சூழ்நிலைகள் நிலையற்றவை மற்றும் குழப்பமானவை என்பதை அறிந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவற்றைக் குறிப்பிட இயலாத நிலையில் உள்ளனர். அவர்கள், தங்கள் தலையை நிமிர்த்தி நிற்கக்கூடிய நாளுக்காகவும், கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து, தேசம் முழுவதையும் பிரகாசிப்பிக்கும் மற்றும் இந்தக் காரியங்களின் பரிதாபகரமான நிலையை மாற்றியமைக்கும் நாளுக்காகவும் தங்கள் இருதயத்தில் நம்பிக்கையுடன் இருந்து அதன் போக்கில் மட்டுமே நடத்த முடியும். இருப்பினும், சூரியன் இரண்டாவது முறையாக உதிக்கும்போது, அதன் எழுச்சி பழைய நிலையை மீட்டெடுப்பதற்காக அல்ல—அது ஒரு மறுமலர்ச்சி, அதாவது ஒரு முழுமையான மாற்றம் என்பது அவர்களுக்குத் தெரியாது. முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய திட்டம் இதுதான். அவர் ஒரு புதிய உலகத்தைக் கொண்டு வருவார், ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் முதலில் மனுஷனைப் புதுப்பிப்பார். இன்று, மிக முக்கியமானது என்னவென்றால், மனிதகுலத்தை தேவனுடைய வார்த்தைகளுக்குள் கொண்டுவருவதுதான், வெறுமனே அவர்களை அந்தஸ்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கச் செய்வது அல்ல. மேலும், தேவன் சொல்வது போல், “ராஜ்யத்தில், நான்தான் ராஜா—ஆனால் என்னை அதன் ராஜாவாகக் கருதுவதற்குப் பதிலாக, மனுஷன் என்னை ‘வானத்திலிருந்து இறங்கிவந்த இரட்சகர்’ என்று கருதுகிறான். இதன் விளைவாக, நான் அவனுக்கு தருமம் கொடுக்க வேண்டும் என்று ஏங்குகிறான், ஆனால் என்னைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை.” எல்லா ஜனங்களின் உண்மையான நிலைமைகளும் இதுதான். இன்று, முக்கியமானது என்னவென்றால், மனுஷனின் தீராத பேராசையை முற்றிலுமாக அகற்றுவதுதான், இதுவே, ஜனங்களை எதையும் கேட்காமல் தேவனை அறியச் செய்கிறது. அப்படியானால், தேவன் சொல்வதில் ஆச்சரியமில்லை, “பிச்சைக்காரர்களைப் போல அநேகர் எனக்கு முன்பாக மன்றாடினர்; அநேர் தங்கள் ‘சாக்குகளை’ என்னிடம் திறந்துகாட்டி, தப்பிப்பிழைக்க அவர்களுக்கு உணவு கொடுக்கும்படி என்னிடம் வேண்டிக்கொண்டார்கள்.” இது போன்ற நிலைகள் ஜனங்களின் பேராசையைச் சுட்டிக்காட்டுகின்றன, மேலும் ஜனங்கள் தேவனை நேசிக்கவில்லை, மாறாக, அவரிடம் கோரிக்கைகளை வைக்கிறார்கள் அல்லது அவர்கள் விரும்பும் விஷயங்களை அடைய முயற்சி செய்கிறார்கள் என்பதை அவைகள் காட்டுகின்றன. ஜனங்கள் பசியோடு இருக்கும் ஓநாயின் சுபாவம் கொண்டவர்கள்; அவர்கள் அனைவரும் தந்திரமானவர்களாயும் பேராசையுடையவர்களாயும் இருக்கிறார்கள், இதனால் தேவன் அவர்களிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வைக்கிறார், தங்களது பேராசையுள்ள இருதயங்களை ஒப்படைத்துவிட்டு, உண்மையுள்ள இருதயத்துடன் தேவனை நேசிக்கும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார். உண்மையில், இன்றுவரை, ஜனங்கள் தங்களது முழு இருதயத்தையும் தேவனிடத்தில் கொடுக்கவில்லை; அவர்கள் இரண்டு படகுகளில் இதில் ஒரு காலும் அதில் ஒரு காலும் வைத்திருக்கிறார்கள், தேவனை முற்றிலும் நம்பியிராமல், சில சமயங்களில் தங்களைச் சார்ந்தும், சில சமயங்களில் தேவனைச் சார்ந்தும் இருக்கிறார்கள். தேவனுடைய கிரியை ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன், எல்லா ஜனங்களும் உண்மையான அன்பு மற்றும் விசுவாசத்தின் மத்தியில் வாழ்வார்கள், மேலும் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படும்; எனவே, தேவனுடைய கோரிக்கைகள் அதிகமாக இல்லை.
தேவதூதர்கள் தேவனுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்களிடையே தொடர்ந்து உலாவுகின்றனர், பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் விரைந்து, ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய உலகத்திற்குத் திரும்பிய பிறகு மனித உலகத்திற்கு இறங்கி வருகின்றனர். இது அவர்களின் கடமை, இதனால், ஒவ்வொரு நாளும், தேவனுடைய குமாரர்களும் ஜனங்களும் மேய்க்கப்படுகிறார்கள், இவ்வாறு அவர்களின் வாழ்க்கை படிப்படியாக மாறுகிறது. தேவன் தமது ரூபத்தை மாற்றும் நாளில், பூமியில் தேவதூதர்களின் கிரியை அதிகாரப்பூர்வமாக முடிவடையும், மேலும் அவர்கள் பரலோகத்தின் எல்லைக்குத் திரும்புவார்கள். இன்று, தேவனுடைய அனைத்து குமாரர்களும் ஜனங்களும் ஒரே நிலைமையில் உள்ளனர். வினாடிகள் கடந்து செல்லும்போது, எல்லா ஜனங்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள், மேலும் தேவனுடைய குமாரர்களும் ஜனங்களும் படிப்படியாக முதிர்ச்சியடைகிறார்கள். ஒப்பிடுகையில், அனைத்து கலகக்காரர்களும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு முன்பாக மாறுகிறார்கள்: ஜனங்கள் இனி சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள், மற்றும் அசுத்த ஆவிகள் இனி அதன் ஏற்பாடுகளைப் பின்பற்றுவதில்லை. அதற்குப் பதிலாக, அவைகள் “தங்களுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன, ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்கின்றன.” இவ்வாறு, தேவன் கூறுகையில், “பூமியில் உள்ள நாடுகள் எவ்வாறு அழியாமல்போகும்? பூமியில் உள்ள நாடுகள் எப்படி வீழாமல்போகும்?” பரலோகம் ஒரு நொடியில் இறங்கி வருகிறது…. இது ஒரு அச்சுறுத்தும் உணர்வு மனிதகுலத்தின் முடிவை முன்னிறுத்துவதைப் போன்றதாகும். இங்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட பல்வேறு அச்சுறுத்தும் அடையாளங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் துல்லியமாக நிகழ்கின்றன, மேலும் பூமியில் யாரும் தப்பிக்க முடியாது. தேவனுடைய வார்த்தைகளில் உள்ள தீர்க்கதரிசனம் இத்தகையதாகும். இன்று, எல்லா ஜனங்களுக்கும் காலம் குறுகியிருக்கிறது என்று ஒரு முன்னறிவிப்பு உள்ளது, மேலும் தங்களுக்கு ஒரு பேரழிவு வர இருப்பதை அவர்கள் உணர்வதாகத் தெரிகிறது—ஆனாலும் அவர்களுக்குத் தப்பிக்க வழி இல்லை, இவ்விதமாக, அவர்கள் அனைவரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். தேவன் கூறுகிறார், “ஒவ்வொரு நாளும் நான் என் ராஜ்யத்தின் ‘உள் அறையை’ அலங்கரிக்கும்போது, என் கிரியைக்கு இடையூறு விளைவிக்க யாரும் திடீரென்று என் ‘கிரியை அறைக்குள்’ அத்துமீறி நுழைவதில்லை.” உண்மையில், தேவனுடைய வார்த்தைகளின் அர்த்தமானது வெறுமனே ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளில் அவரை அறியலாம் என்று சொல்வதற்கு மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு நாளும், தேவன் தனது கிரியையின் அடுத்த பகுதிக்கு ஊழியம் செய்ய பிரபஞ்சம் முழுவதும் அனைத்து வகையான முன்னேற்றங்களையும் ஏற்பாடு செய்கிறார் என்பதை அவைகள் குறிப்பிடுகின்றன. “என் கிரியைக்கு இடையூறு விளைவிக்க யாரும் திடீரென்று என் ‘கிரியை அறைக்குள்’ அத்துமீறி நுழைவதில்லை” என்று அவர் சொல்வதற்குக் காரணம், தேவன் தெய்வீகத்தில் கிரியை செய்கிறார், ஜனங்கள் விரும்பினாலும் கூட, அவருடைய கிரியையில் பங்கேற்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். நான் உன்னிடம் கேட்கிறேன்: முழு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு வளர்ச்சியையும் உன்னால் உண்மையிலேயே ஏற்பாடு செய்ய முடியுமா? உன்னால் பூமியில் உள்ள ஜனங்களை அவர்களின் மூதாதையர்களை மீறச் செய்ய முடியுமா? தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்ய பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்களை உன்னால் திட்டமிட்டு நடத்த முடியுமா? சாத்தான் கலவரம் செய்ய நீ காரணமாக இருக்க முடியுமா? உலகம் தனித்து வெறுமையாக இருப்பதை ஜனங்களை உணர வைக்க உன்னால் முடியுமா? ஜனங்கள் இத்தகைய விஷயங்களுக்குத் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த காலத்தில், சாத்தானின் “திறமைகள்” இன்னும் முழுமையாக வெளிவராதபோதே, அது தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்போதும் தலையிடும்; இந்தக் கட்டத்தில், சாத்தான் தந்திரங்களை இழந்துவிட்டான், மேலும் எல்லா ஜனங்களும் அதை அறியும்படியாக, தேவன் அதனுடைய உண்மையான வண்ணங்களைக் காட்ட அதை அனுமதிக்கிறார். இந்த வார்த்தைகளின் சத்தியம் இதுதான் “என் கிரியைக்கு யாரும் இடையூறு செய்ததில்லை.”
ஒவ்வொரு நாளும், திருச்சபையின் ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும், அவர்கள் “அறுவைச் சிகிச்சை மேஜை” மீது வெட்டப்படும் கிரியைக்கு உட்படுகிறார்கள். உதாரணமாக, “தங்கள் நிலையை இழந்துபோகுதல்”, “நீக்கம் செய்யப்படுதல்”, “அவர்களின் அச்சங்கள் நீங்கி, அமைதி திரும்புகிறது,” “கைவிடப்படுதல்” மற்றும் “‘உணர்வு’ இல்லாதது”—பரியாசம் செய்யும் வார்த்தைகள் “ஜனங்களை வேதனைக்குள்ளாக்குகின்றன” மற்றும் வெட்கத்தால் அவர்களை ஊமையாக்குகின்றன. இது அவர்களின் முழு சரீரத்தின் எந்தப் பகுதியும்—தலை முதல் கால் வரை, உள்ளிருந்து வெளியே—தேவனுடைய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதைப் போல இருக்கிறது. தேவன் ஏன் அவருடைய வார்த்தைகளாலேயே ஜனங்களுடைய வாழ்க்கையை உரிந்து களைந்துபோடுகிறார்? தேவன் வேண்டுமென்றே ஜனங்களுக்கு விஷயங்களைக் கடினமாக்குகிறாரா? எல்லா ஜனங்களுடைய முகங்களும் கழுவ முடியாத சேற்றால் பூசப்பட்டது போல் உள்ளன. ஒவ்வொரு நாளும், தலை குனிந்து, அவர்கள் மோசடி கலைஞர்களைப் போல, தங்கள் பாவங்களுக்குக் கணக்கு ஒப்புவிக்கிறார்கள். ஜனங்கள் தங்கள் சொந்த உண்மையான நிலைகளை முழுமையாக அறியக் கூடாத அளவுக்கு சாத்தானால் சீர்கெட்டு இருக்கிறார்கள். ஆனால் தேவனைப் பொறுத்தவரை, சாத்தானின் விஷம் அவர்களது சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அவர்களது மஜ்ஜையிலும் கூட இருக்கிறது; இதன் விளைவாக, தேவனுடைய வெளிப்பாடுகள் எவ்வளவு ஆழமாக இருக்கின்றனவோ, அவ்வளவு பயமுள்ளவர்களாக ஜனங்கள் மாறுகிறார்கள், இதனால் எல்லா ஜனங்களும் சாத்தானை அறியவும், சாத்தானை மனுஷனில் பார்க்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சாத்தானை வெறும் கண்களால் பார்க்க இயலாமல் இருந்திருக்கின்றனர். மேலும் அனைத்தும் யதார்த்தத்திற்குள் நுழைந்திருப்பதால், தேவன் மனுஷனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறார்—அதாவது, அவர் சாத்தானின் சாயலை வெளிப்படுத்துகிறார்—இப்படியாக, மனுஷன் உண்மையான, தொட்டு உணரக்கூடிய சாத்தானைப் பார்க்கவும், நடைமுறை தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும் என்ற அவர்களது நன்மைக்காகவே செய்கிறார். தேவன் தாம் மாம்சத்தில் இருப்பதை மனுஷனை அறிந்துகொள்ளச் செய்கிறார், மேலும் அவர் சாத்தானுக்கு வடிவம் கொடுத்து, ஜனங்களுடைய மாம்சத்தில் உள்ள உண்மையான, தொட்டு உணரக்கூடிய சாத்தானை அறிந்துகொள்ள மனுஷனை அனுமதிக்கிறார். பேசப்பட்டிருக்கிற பல்வேறு நிலைகள் அனைத்தும் சாத்தானுடைய கிரியைகளின் வெளிப்பாடுகளாகும். எனவே, மாம்சத்தினாலாகிய அனைவரும் சாத்தானுடைய சாயலின் பிரதிநிதித்துவங்கள் என்று கூறலாம். தேவன் தன் சத்துருக்களுடன் ஒத்துப்போவதில்லை—அவர்கள் ஒருவருக்கொருவர் விரோதமாகவும், மேலும் இரண்டு மாறுபட்ட வல்லமைகளாகவும் இருக்கிறார்கள்; எனவே, பிசாசுகள் என்றென்றும் பிசாசுகளாகவும், மற்றும் தேவன் என்றென்றும் தேவனாகவும் இருக்கிறார்; அவர்கள் அக்கினி மற்றும் தண்ணீரைப் போல ஒத்துப்போகாது இருக்கின்றனர், அவர்கள் வானத்தையும் பூமியையும் போல எப்போதும் பிரிந்தே இருக்கின்றனர். தேவன் மனுஷனைப் படைத்தபோது, ஒரு வகையான ஜனங்கள் தேவதூதர்களின் ஆவிகளைக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் மற்றொரு வகையானவர்களுக்கு ஆவி இல்லை, இதனால் பிந்தையவர்கள் பிசாசினுடைய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர், எனவே அவர்கள் பிசாசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இறுதியாக, தேவதூதர்கள் தேவதூதர்களாக இருக்கிறார்கள், பிசாசுகள் பிசாசுகளாக இருக்கின்றன—மற்றும் தேவன் தேவனாகவும் இருக்கின்றார். ஒவ்வொன்றும் தன் வகைக்கு ஏற்ப இதைத்தான் அர்த்தப்படுத்துகின்றன, அதாவது, தேவதூதர்கள் பூமியில் ஆளுகை செய்து ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது, தேவன் தமது வசிப்பிடத்திற்குத் திரும்புகிறார், மீதமுள்ளவர்களாகிய—தேவனுடைய எதிரிகள்—சாம்பலாக்கப்படுகிறார்கள். உண்மையில், எல்லா ஜனங்களும் வெளிப்புறமாக தேவனை நேசிப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அவர்களின் சாராம்சத்தில்தான் வேர் இருக்கிறது—தேவதூதர்களின் சுபாவத்தை உடையவர்கள் தேவனுடைய கரத்திலிருந்து தப்பி பாதாளத்திற்குள் எப்படி விழ முடியும்? மேலும் பிசாசுகளுடைய சுபாவத்தை உடையவர்கள் எப்போதும் தேவனை எப்படி உண்மையாக நேசிக்க முடியும்? அத்தகைய ஜனங்களுடைய சாராம்சம் தேவனின் உண்மையான அன்பின் ஒன்றல்ல, எனவே அவர்கள் எப்படி ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்பை எப்போதும் பெற்றிருக்க முடியும்? தேவன் உலகத்தை சிருஷ்டித்தபோது, அனைத்தும் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேவன் சொல்வதைப் போல்: “நான் காற்று மற்றும் மழையின் மத்தியில் முன்னேறுகிறேன், மனுஷர்களிடையே ஒவ்வொரு ஆண்டாகக் கழித்துவிட்டு, சரியான நேரத்தில் இன்றைய தினத்திற்கு வந்துள்ளேன். இவை எனது நிர்வாகத் திட்டத்தின் சரியான நடவடிக்கைகள் இல்லையா? எனது திட்டத்தில் யாராவது எதையாவது சேர்த்துள்ளனரா? எனது திட்டத்தின் நடவடிக்கைகளில் இருந்து யாரால் விலக முடியும்?” மாம்சமாகிய பின்பு தேவன் மனுஷனுடைய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்—இது நடைமுறை தேவனுடைய நடைமுறைப் பக்கம் அல்லவா? மனுஷனின் பெலவீனத்தின் நிமித்தமாக தேவன் மனுஷனிடமிருந்து எதையும் மறைக்கவில்லை; மாறாக, “நான் மனுஷர்களிடையே ஒவ்வொரு ஆண்டாகக் கழித்துவிட்டேன்.” என்று தேவன் சொல்வது போல், அவர் மனுஷனுக்கு சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். இது துல்லியமாக தேவனானவர் மாம்சமாகிய தேவனாக மாறி இருப்பதால் தான், அவர் ஒவ்வொரு வருஷத்தையும் பூமியில் கடந்து சென்றிருக்கிறார்; அதன்படி, அனைத்து விதமான செயல்முறைகளுக்கும் உட்பட்ட பின்னரே, அவர் மனுவுருவான தேவன் என்று கருதப்பட முடியும், அதன் பின்னரே அவர் மாம்சத்திற்குள் தெய்வீகத்தில் கிரியை செய்ய முடியும். பின்னர், அனைத்து இரகசியங்களையும் வெளிப்படுத்திய பிறகு, அவரால் தமது ரூபத்தை மாற்றிக்கொள்ள முடியும். இது தேவன் நேரடியாக குறிப்பிட்ட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையின் விளக்கத்தின் மற்றொரு அம்சமாகும்.
தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளின் தொகுப்பையும் கடமைக்காக அல்லாமல், நிறைவேற்றுவது மிகவும் அவசியம். இதுவே தேவனுடைய கட்டளையாகும்!