பயிற்சி (7)

உங்கள் மனிதத்தன்மை மிகவும் குறைவுபட்டிருக்கிறது, உங்கள் வாழ்க்கை முறை மிகவும் தாழ்வானதும் மற்றும் கீழ்த்தரமானதுமாயிருக்கிறது, உங்களுக்கு மனிதத்தன்மை இல்லை, உங்களுக்கு நுண்ணறிவு இல்லை. அதனால்தான் நீங்கள் இயல்பான மனிதத்தன்மையின் விஷயங்களால் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மனசாட்சி, பகுத்தறிவு மற்றும் நுண்ணறிவைக் கொண்டிருத்தல்; விஷயங்களைப் பேசவும் பார்க்கவும் அறிந்திருத்தல்; தூய்மையில் கவனம் செலுத்துதல்; ஒரு சாதாரண மனிதனைப் போல செயல்படுதல்—ஆகிய இவைகள் அனைத்தும் இயல்பான மனிதத்தன்மையின் அறிவின் அம்சங்களாகும். இந்த விஷயங்களில் நீங்கள் சரியான முறையில் நடந்து கொள்ளும்போது, நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க மனிதத்தன்மையின் நிலைகொண்டிருப்பவராகக் கருதப்படுகிறீர்கள். நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பூமியின் மீதான தேவனுடைய கிரியையின் முழுமையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவருடைய வார்த்தைகளின் அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவருடைய ஏற்பாடுகளுக்கு எவ்வாறு கீழ்ப்படிவது என்பதையும் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் உயிரினத்தின் கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையும் நீ அறிந்திருக்க வேண்டும். இன்று நீ பிரவேசிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் இவைகளே—மனிதத்தன்மையின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல், மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கான பயிற்சி செய்தல். இரண்டுமே தவிர்க்க முடியாதவைகளாகும்.

சிலர் அபத்தமானவர்கள்: அவர்களுக்கு மனிதத்தன்மையின் அம்சங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக்கொள்ள மட்டுமே தெரியும். அவர்களின் தோற்றத்தில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க இயலாது; அவர்கள் சொல்லும் விஷயங்களும் அவர்கள் பேசும் விதமும் பொருத்தமானவையாகவும், மற்றும் அவர்களின் உடுப்பு மிகவும் கண்ணியமானதாகவும் முறையாதாகவும் இருக்கிறது. ஆனால் அவர்களோ தங்களுக்குள் வெறுமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்; அவர்கள் வெறுமனே வெளிப்புறத்தில் இயல்பான மனிதத்தன்மையைப் பெற்றிருப்பவர்களைப்போலத் தெரிகிறார்கள். சிலர் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். தரையைத் துடைப்பது, படுக்கையை அமைப்பது மற்றும் பொதுவான தூய்மை ஆகியவற்றில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துபவர்களும் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றிலும் அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாய் இருக்கலாம், ஆனால் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை, அல்லது சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு, அல்லது உபத்திரவங்கள் மற்றும் புடமிடுதல் பற்றிய அவர்களின் அறிவைக் குறித்துப் பேசும்படி நீ அவர்களிடம் கேட்டாயானால், சிறிய அனுபவத்தைக் கூட அவர்களால் விளக்கிக்காட்ட இயலாது. நீ அவர்களிடம் கேட்கலாம்: “பூமியில் தேவனுடைய பிரதானமான கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இருக்கிறதா? இன்று மனுவுருவான தேவனுடைய கிரியையானது இயேசுவின் கிரியையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? யெகோவாவின் கிரியையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? அவர்கள் ஒரே தேவனா? அவர் இந்தக் காலத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவர வந்தாரா? அல்லது மனுக்குலத்தை இரட்சிக்க வந்தாரா?” ஆனால் இத்தகைய ஜனங்களுக்கு இந்த விஷயங்களைப் பற்றி சொல்ல எதுவும் இருக்காது. சிலர் தங்களை அழகாக, ஆனால் மேலோட்டமாக அலங்கரிக்கிறார்கள்: சகோதரிகள் தங்களைப் பூக்களைப் போல அழகாக அலங்கரிக்கிறார்கள், சகோதரர்கள் இளவரசர்கள் அல்லது பணக்கார வாலிப டாம்பீகர்களைப் போல ஆடை அணிகிறார்கள். தாங்கள் புசிக்கும் மற்றும் உடுத்தும் விஷயங்களைப் போன்ற வெளிப்புற விஷயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறைகொள்கிறார்கள்; தங்களுக்குள்ளோ, அவர்கள் வறுமையானவர்களும் தேவனைப் பற்றிய அறிவை சிறிதளவும் பெற்றிராதவர்களுமாய் இருக்கிறார்கள். இதில் என்ன அர்த்தம் இருக்கக் கூடும்? அதன்பின்பு, ஏழைப் பிச்சைக்காரர்களைப் போல உடையணிந்திருக்கும் சிலர் உள்ளனர்—அவர்கள் உண்மையில் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த அடிமைகள் போல் இருக்கிறார்கள்! நான் உங்களிடம் என்ன கேட்கிறேன் என்பது உங்களுக்கு உண்மையில் புரியவில்லையா? உங்களுக்குள் ஐக்கியத்துடன் இருங்கள்: நீங்கள் உண்மையில் எதை அடைந்தீர்கள்? இத்தனை ஆண்டுகளாக நீங்கள் தேவனை விசுவாசித்தீர்கள், இருப்பினும் நீங்கள் அறுவடை செய்ததெல்லாம் இதுதான்—உங்களுக்குச் சங்கடமாக இல்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இத்தனை வருடங்களாக நீங்கள் உண்மையான வழியைப் பின்பற்றி வருகிறீர்கள், ஆனால் இன்றும் உங்களது வளர்ச்சி ஒரு குருவியினுடையதைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது! உங்கள் மத்தியிலுள்ள இளம் பெண்களைப் பாருங்கள், உங்கள் உடைகள் மற்றும் ஒப்பனைகளில் மிக அழகாக இருந்து, ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்—நீங்கள் எதை ஒப்பிடுகிறீர்கள்? உங்கள் மகிழ்ச்சியையா? உங்கள் தேவைகளையா? நவநாகரீகமாக அலங்கார ஆடை அணிந்தவர்களைத் தேர்ந்தெடுக்க நான் வந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு வெட்கமே இல்லை! உங்கள் வாழ்க்கை எங்கே? நீங்கள் பின்தொடர்வது உங்கள் சொந்த ஆடம்பரமான ஆசை மட்டுமல்லவா? நீ மிகவும் அழகாக இருப்பதாக நினைக்கிறாய், ஆனால் நீ எல்லா விதத்திலும் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தாலும், உண்மையில் நீ சாணக் குவியலில் பிறந்து, நெளிந்துவரும் புழு அல்லவா? இன்று, நீ இந்தப் பரலோக ஆசீர்வாதங்களை அனுபவிப்பது உன் அழகான முகத்தால் அல்ல, மாறாக, தேவன் உன்னை உயர்த்துவதன் மூலம் விதிவிலக்கை உண்டாக்குவதால் ஆகும். நீ எங்கிருந்து வந்தாய் என்பதில் இன்னும் நீ தெளிவற்று இருக்கிறாயா? ஜீவனைப் பற்றிக் குறிப்பிடும் போது, நீ வாயை மூடிக்கொண்டு, ஊமையான ஒரு சிலையைப் போல எதுவும் பேசவில்லை, என்றாலும் இன்னும் கூட உன்னையே உடுத்திக்கொள்ள துணிகரத்தை வைத்திருக்கிறாய்! இன்னும் நீங்கள் உங்கள் முகத்தைப் பளபளப்பாக்கி முகப்பூச்சைத் தடவ முனைகிறீர்கள்! மேலும், உங்கள் மத்தியிலுள்ள, வழிதவறிய மனிதர்களாகிய, நாள் முழுவதும் வீணாக சுற்றித்திரிந்து, கட்டுக்கடங்காமல், தங்கள் முகத்தில் அலட்சிய பாவனைகளுடன் இருக்கிற டாம்பீகர்களைப் பாருங்கள். ஒரு நபர் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமா? உங்கள் மத்தியிலிருக்கிற ஒவ்வொருவரும், ஆணோ பெண்ணோ, உங்கள் கவனத்தை நாள் முழுவதும் எதில் செலுத்துகிறீர்கள்? நீங்கள் உங்களை போஷிக்க யாரை சார்ந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உன்னுடைய ஆடைகளைப் பார், உன்னுடைய கைகளில் நீ அறுவடை செய்ததைப் பார், உன் வயிற்றைத் தேய்த்துக் கொள்—விசுவாசத்தின் இத்தனை வருடங்களாக நீ செலுத்திய இரத்தம் மற்றும் வியர்வையாகிய விலைக்கிரயத்தில் இருந்து உனக்கு என்ன லாபம் கிடைத்திருக்கிறது? நீ இன்னும் வேடிக்கை பார்க்கச் செல்ல நினைக்கிறாய், உன் துர்நாற்றம் வீசும் மாம்சத்தை அழகுபடுத்த நினைக்கிறாய்—வீணான பின்தொடருதல்கள்! நீ சாதாரண நிலையிலுள்ள ஒரு நபராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாய், இருப்பினும் இப்போது, நீ வெறுமனே அசாதாரணமானவன் அல்ல, நீ பிறழ்ந்தவன். இத்தகைய நபர் எப்படி என் முன் வருவதற்குத் துணிச்சலைப் பெற்றிருக்க முடியும்? இதைப் போன்ற ஒரு மனிதத்தன்மையுடன், உன் அழகைக் காட்சிப்படுத்தி, உன் மாம்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி, எப்போதும் மாம்சத்தின் இச்சைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்—நீ அருவருப்பான பிசாசுகள் மற்றும் பொல்லாத ஆவிகளின் சந்ததியல்லவா? அத்தகைய அருவருப்பான பிசாசுகள் நீண்ட காலம் இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்! உன் இருதயத்தில் நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது என்று நினைக்க வேண்டாம். உன்னுடைய இச்சை மற்றும் உன்னுடைய மாம்சத்தை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கலாம், ஆனால் உன் இருதயத்தில் நீ கொண்டிருக்கும் எண்ணங்களை நான் எப்படி அறியாது இருக்கக் கூடும்? உன் கண்கள் விரும்பும் அனைத்தையும் நான் எப்படி அறியாது இருக்கக் கூடும்? இளம் பெண்களாகிய நீங்கள் உங்கள் மாம்சத்தைக் காட்சிப்படுத்துவதற்காக உங்களை அழகாக மாற்றிக் கொள்ளவில்லையா? ஆண்களால் உங்களுக்கு என்ன நன்மை? அவர்கள் உண்மையிலே உங்களைத் துன்பக் கடலில் இருந்து காப்பாற்ற முடியுமா? உங்கள் மத்தியிலுள்ள டாம்பீகர்களைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் உங்களைப் பண்புள்ளவர்களாகவும் தனித்துவமாகவும் காண்பிக்கும்படி ஆடை அணிகிறீர்கள், ஆனால் இது உங்கள் கவர்ச்சியான தோற்றத்திற்கு கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சி அல்லவா? நீங்கள் யாருக்காக இதைச் செய்கிறீர்கள்? பெண்களால் உங்களுக்கு என்ன நன்மை? உங்கள் பாவத்தின் ஆதாரம் அவர்கள் அல்லவா? ஆண்களும் பெண்களுமாகிய உங்களுக்கு, நான் அநேக வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன், ஆனால் அவற்றில் சில வார்த்தைகளுக்கு மட்டுமே நீங்கள் இணங்கினீர்கள். உங்கள் காதுகள் கேட்பதற்குக் கடினமானதாக உள்ளன, உங்கள் கண்கள் மங்கலாகிவிட்டன, மேலும் உங்கள் இருதயமானது, உங்கள் இச்சையைத் தவிர வேறு எதுவும் சரீரத்தில் இல்லாத அளவிற்குக் கடினமுள்ளதாகிவிட்டது, அதாவது நீங்கள் அதில் சிக்கி, தப்பிக்க இயலாதிருக்கிறீர்கள். அருவருப்பு மற்றும் அழுக்கில் நெளியும் புழுக்களாகிய நீங்கள், யார் உங்கள் அருகில் எங்காவது வர விரும்புவார்கள்? நீங்கள் சாணக் குவியலில் இருந்து நான் எழுப்பியவர்களைத் தவிர வேறில்லை என்பதை மறந்துவிடாதீர்கள், நீங்கள் ஆதியிலிருந்தே இயல்பான மனிதத்தன்மை கொண்டவர்களாக இருக்கவில்லை. நான் உங்களிடம் கேட்பது நீங்கள் முதலில் பெற்றிராத இயல்பான மனிதத்தன்மையையே, நீங்கள் உங்கள் இச்சையை வெளிப்படுத்திக் காட்டுவதும் அல்ல, அநேக ஆண்டுகளாக பிசாசால் பயிற்றுவிக்கப்பட்ட உங்கள் வெறித்தனமான மாம்சத்திற்கு இலவசக் கட்டுப்பாட்டை வழங்குவதும் அல்ல. நீங்கள் உங்களை அவ்வாறு அலங்கரிக்கும் போது, நீங்கள் இன்னும் ஆழமாக சிக்கிவிடுவீர்கள் என்று உங்களுக்கு பயமில்லையா? நீங்கள் முதலில் பாவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் சரீரங்கள் இச்சையால் நிரம்பியுள்ளன என்பதும் அது உங்கள் உடையின் மூலம் கசிந்து வெளிவந்து, உங்கள் அசுத்தமான மற்றும் அருவருப்பான பிசாசுகளின் சகித்துக்கொள்ள முடியாத நிலைமையை வெளிப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இது உங்களுக்கு மற்ற யாரையும் விட மிகத் தெளிவாகத் தெரியும் அல்லவா? உங்கள் இருதயங்கள், உங்கள் கண்கள், உங்கள் உதடுகள்—இவை அனைத்தும் அருவருப்பான பிசாசுகளால் தீட்டுப்பட்டிருக்கவில்லையா? உங்களுடைய இந்த அவையவங்கள் அசுத்தமானதாக இல்லையா? நீ செயல்படாத வரை, நீ மிகவும் பரிசுத்தமானவன் என்று நினைக்கிறாயா? அழகான ஆடைகளை அணிந்து கொள்வதால் உங்கள் அருவருப்பான ஆத்துமாக்களை மறைக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது அப்படி ஆகாது! மிகவும் யதார்த்தமாக இருக்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்: மோசம்போக்குபவராகவும் மற்றும் போலியானவராகவும் இருக்காதீர்கள், உங்களைக் காட்சிக்காக வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் உங்கள் இச்சையை ஒருவருக்கொருவர் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறீர்கள், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் பெறுவதெல்லாம் முடிவில்லாத துன்பம் மற்றும் இரக்கமற்ற தண்டனையே ஆகும்! ஒருவருக்கொருவர் உங்கள் கண்களை அடித்துக் காதலில் ஈடுபட உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது? இதுதான் உங்கள் நேர்மையின் அளவா, மற்றும் உங்கள் உத்தமத்தின் அளவா? உங்கள் மத்தியில் தீய மருத்துவம் மற்றும் சூனியத்தில் ஈடுபடுபவர்களை நான் வெறுக்கிறேன். உங்கள் மத்தியில் தங்கள் சொந்த மாம்சத்தை நேசிக்கும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை நான் வெறுக்கிறேன். நீங்கள் உங்களை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டீர்கள், ஏனென்றால், நீங்கள் இப்போது இயல்பான மனிதத்தன்மை உடையவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள், மேலும் நீங்கள் உங்கள் இச்சையை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை—ஆனாலும் உங்களால் கூடிய எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக்கொள்கிறீர்கள், ஏனெனில் உங்கள் மாம்சம் மிகுதியாகவும், உங்கள் இச்சை மிக அதிகமாகவும் உள்ளது.

மேலோட்டமாக, உங்களது மனிதத்தன்மையின் ஜீவிதமானது மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஜீவனைப் பற்றிய உங்கள் அறிவைப் பற்றி பேசும்படி கேட்டால் உங்களுக்கு சொல்வதற்கென்று எதுவும் இருப்பதில்லை; மேலும் இதில் நீங்கள் வறுமையில் இருக்கிறீர்கள். நீங்கள் சத்தியத்தால் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்! உங்கள் மனிதத்தன்மையின் ஜீவிதமானது சிறப்பாக மாறியிருக்கிறது, அதைப்போலவே, உங்களுக்குள் உள்ள ஜீவனும் மாற வேண்டும்; உங்களுடைய எண்ணங்களை மாற்றுங்கள், தேவன் மீதான விசுவாசத்தைக் குறித்த உங்களுடைய பார்வையை மாற்றுங்கள், உங்களுக்குள் இருக்கும் அறிவையும் சிந்தனையையும் மாற்றுங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களுக்குள் இருக்கிற தேவனைப் பற்றிய அறிவை மாற்றுங்கள். கையாளப்படுதலின் மூலம், வெளிப்படுத்துதல் மற்றும் போஷிப்பின் மூலம் உங்களைப் பற்றிய, மனுஷ ஜீவியம் பற்றிய மற்றும் தேவன் மீதான நம்பிக்கை பற்றிய உங்கள் அறிவை படிப்படியாக மாற்றுங்கள்; உங்களுடைய புரிந்துகொள்ளுதலைத் தூய்மைக்கு ஏதுவாக மாற்றுங்கள். இவ்வழியில், மனுஷனுக்குள் உள்ள எண்ணங்கள் மாறுகின்றன, அவன் விஷயங்களைப் பார்க்கும் விதம் மாறுகின்றன, அவனுடைய மனப்பாங்கு மாறுகிறது. இதை மட்டுமே வாழ்க்கை மனநிலையில் மாற்றம் என்று அழைக்கலாம். ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கவோ அல்லது துணிகளைத் துவைத்து சுத்தம் செய்யவோ நீ கேட்டுக்கொள்ளப்படவில்லை. இயல்பான மனிதத் தன்மையுடைய ஒரு வாழ்க்கை இயற்கையாகவே குறைந்தபட்சம் சகித்துக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதோடுகூட, வெளிப்புற விஷயங்களைக் கையாளும் போது, நீ இன்னும் சில நுண்ணறிவையும் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும்; ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீ வாழ்க்கையின் சத்தியத்துடன் மேம்பட்டு இருக்க வேண்டும். ஜீவனுக்கென்று உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது, நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் பானம்பண்ணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும், நீ தேவனைப் பற்றிய அறிவு, மனித வாழ்க்கை பற்றிய உன் பார்வைகள் மற்றும் குறிப்பாக, கடைசி நாட்களின் போது தேவனால் செய்யப்பட்ட கிரியை குறித்த உன்னுடைய அறிவு ஆகியவற்றைப் பற்றிப் பேசக் கூடியவனாக இருக்க வேண்டும். நீ ஜீவனைப் பின்தொடர்வதால், நீ இந்த விஷயங்களால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது, அவைகளுக்கு எதிராக உன் சொந்த நிலையின் யதார்த்தத்தை நீ அளவிட வேண்டும். அதாவது, உன்னுடைய உண்மையான அனுபவத்தின் போக்கில் உன் குறைகளை நீ கண்டறியும்போது, நடைமுறைக்கு ஒரு பாதையைக் கண்டறியவும், உன் தவறான உந்துதல்கள் மற்றும் கருத்துக்களைப் புறக்கணிக்கவும் நீ திறமை உள்ளவனாக இருக்க வேண்டும். நீ எப்போதும் இந்த விஷயங்களுக்காகப் பாடுபட்டு அவற்றை அடைய மனதார செயல்பட்டால், அப்போது நீ பின்பற்ற ஒரு பாதை இருக்கும், நீ வெறுமையாக உணர மாட்டாய், இவ்வாறு, நீ இயல்பான நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்போதுதான் நீங்கள் உங்கள் சொந்த ஜீவனில் ஒரு பாரத்தை சுமப்பவராக, விசுவாசம் உடையவராக இருப்பீர்கள். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பின்னர் ஏன் சில ஜனங்களால் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை? மிக முக்கியமான விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாததால் அல்லவா? அவர்கள் ஜீவனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளாததால் அல்லவா? முக்கியமான விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாததற்கும், நடைமுறைக்கான பாதையைப் பெற்றிராததற்கும் காரணம், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவர்களால் தங்கள் சொந்த நிலைகளை அவைகளுடன் தொடர்புபடுத்தவும் முடிவதில்லை, அவர்கள் தங்கள் சொந்த நிலைகளில் தேர்ச்சி அடையவும் முடிவதில்லை. சில ஜனங்கள் சொல்கிறார்கள்: “நான் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, என் நிலையை அவைகளுடன் தொடர்புபடுத்துகிறேன், நான் சீர்கெட்டு இருக்கிறேன் மற்றும் திறமையற்றவனாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற என்னால் இயலாது.” நீ மேலோட்டமாக மட்டுமே பார்த்திருக்கிறாய்; உனக்குத் தெரியாத அநேக உண்மையான விஷயங்கள் உள்ளன: மாம்சத்தின் இன்பங்களை எப்படி ஒதுக்கி வைப்பது, சுய-நீதியை எப்படி ஒதுக்கி வைப்பது, உங்களை எப்படி மாற்றுவது, இந்த விஷயங்களுக்குள் எப்படிப் பிரவேசிப்பது, எப்படி உங்கள் திறமையை வளரச் செய்வது, மற்றும் எந்த அம்சத்திலிருந்து தொடங்குவது போன்ற இவைகளேயாகும். நீ மேலோட்டமாக சில விஷயங்களை மட்டுமே புரிந்துகொள்கிறாய், உனக்குத் தெரிந்ததெல்லாம் நீ உண்மையில் மிகவும் சீர்கெட்டவன் என்பதுதான். நீ உன் சகோதர சகோதரிகளைச் சந்திக்கும் போது, நீ எவ்வளவாய் சீர்கேடு அடைந்திருக்கிறாய் என்பதைப் பற்றி பேசுகிறாய், மேலும் உன்னை நீயே அறிந்திருப்பதைப் போலவும், உன் வாழ்க்கைக்கான பெரும் பாரத்தைச் சுமப்பதைப் போலவும் தெரிகிறது. உண்மையில், உன் சீர்கெட்ட மனநிலை மாறியிருக்கவில்லை, இது நீ நடைமுறைப்படுத்துவதற்கான பாதையைக் கண்டுபிடிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ ஒரு திருச்சபையை வழிநடத்துகிறாய் என்றால், நீ சகோதர சகோதரிகளின் நிலைகளைப் புரிந்துகொண்டு அவைகளைச் சுட்டிக்காட்டக் கூடியவனாக இருக்க வேண்டும். “நீங்கள் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் பின்மாற்றமடைந்த ஜனங்கள்!” என்று சொன்னால் மட்டும் போதுமா? போதாது, நீ அவர்களின் கீழ்ப்படியாமை மற்றும் பின்மாற்றத்தின் தன்மை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிக் குறிப்பாகப் பேச வேண்டும். நீ அவர்களின் கீழ்ப்படியாத நிலைகள், கீழ்ப்படியாத நடத்தைகள் மற்றும் அவர்களின் சாத்தானிய மனநிலைகளைப் பற்றி பேச வேண்டும், மேலும் உன் வார்த்தைகளில் உள்ள உண்மையை அவர்கள் முழுமையாக நம்பும் வகையில் நீ இந்த விஷயங்களைப் பேச வேண்டும். உன்னுடைய கருத்துக்களைச் சொல்ல யதார்த்தங்களையும் மற்றும் உதாரணங்களைப் பயன்படுத்து, மேலும் அவர்கள் கலகத்தனமான நடத்தையிலிருந்து எவ்வாறு விலகிச் செல்ல முடியும் என்பதைச் சரியாகச் சொல், மேலும் நடைமுறைக்கான பாதையைச் சுட்டிக்காட்டு—இப்படித்தான் ஜனங்களை நம்ப வைக்க வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் மட்டுமே மற்றவர்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்; அவர்கள் மட்டுமே சத்திய யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

உங்களுக்கு இப்போது ஐக்கியத்தின் மூலம் பல சத்தியங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் நீ அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எத்தனை சத்தியங்கள் உள்ளன என்பதை உன்னால் தீர்மானிக்க முடிய வேண்டும். ஒருவன் பெற்றிருக்க வேண்டிய இயல்பான மனிதத்தன்மையின் பல அம்சங்கள், ஒருவருடைய வாழ்க்கையின் மனநிலை மாற்றங்களுக்கான முக்கியமான அம்சங்கள், தரிசனங்களை விரிவுபடுத்துதல், இவ்வளவு காலங்களாக ஜனங்கள் கிரியை செய்திருப்பதை அறிந்து கொள்ளும் மற்றும் அனுபவிக்கும் பிழையான வழிமுறைகள் ஆகியவற்றை நீ அறிந்து, அதை நீயே வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால்—அப்போதுதான் நீ சரியான பாதையில் இருப்பாய். மதவாத ஜனங்கள் வேதம்தான் தேவன் என்பதைப் போல அதை வணங்குகிறார்கள்; குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களை அவர்கள் இயேசுவின் நான்கு வெவ்வேறு முகங்களாகக் கருதுகின்றனர், மேலும் அவர்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் திரித்துவத்தைப் பற்றிப் பேசுகின்றனர். இது மிகவும் அபத்தமானது, நீங்கள் அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்; அதற்கும் மேலாக, தேவன் மாம்சமாகும் சாராம்சம் மற்றும் கடைசி நாட்களின் கிரியையைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். பயிற்சி செய்யும் பழைய வழிமுறைகள், பயிற்சி தொடர்பான தவறான மற்றும் மாறுபாடான உபதேசங்கள் அதாவது—ஆவியில் ஜீவிப்பது, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுதல், எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல், அதிகாரத்திற்கு அடங்கி இருத்தல் ஆகியவைகளே—நீங்கள் இவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்; ஜனங்கள் முன்பு எப்படிப் பயிற்சி செய்தார்கள், இன்று ஜனங்கள் எப்படிப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். திருச்சபையில் தலைவர்களும் பணியாட்களும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்; சுய நீதி மற்றும் மற்றவரைக் கீழாக நடத்துவது ஆகியவற்றை எப்படி ஒதுக்கி வைப்பது; சகோதர சகோதரிகள் ஒருவரோடொருவர் எப்படி வாழ வேண்டும்; மற்ற ஜனங்களுடனும் தேவனுடனும் இயல்பான உறவை ஏற்படுத்துவது எப்படி; மனுஷீக ஜீவியத்தில் இயல்பான நிலையை அடைவது எப்படி; ஜனங்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் எதைப் பெற்றிருக்க வேண்டும்; தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் எப்படிப் புசித்துப் பானம்பண்ண வேண்டும்; தேவனுடைய வார்த்தைகளில் எது அறிவுடன் தொடர்புடையது, எது தரிசனங்களைப் பற்றியது, அவைகளில் எது பயிற்சிக்கான பாதையுடன் தொடர்புடையது—இவை அனைத்தும் உரைக்கப்படவில்லையா? இந்த வார்த்தைகள் சத்தியத்தைப் பின்தொடர்பவர்களுக்கு வெளிப்படையாக இருக்கிறது, மேலும் யாருக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இன்று, நீங்கள் சுயாதீனமாக வாழும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், சார்ந்திருக்கும் மனநிலையை நம்ப வேண்டாம். எதிர்காலத்தில், உங்களுக்கு வழிகாட்ட ஆள் இல்லாதபோது, என்னுடைய இந்த வார்த்தைகளை நீ நினைவுகூருவாய். உபத்திரவ காலங்களில், திருச்சபையின் ஜீவியத்தை நடத்த முடியாதபோது, சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாதபோது, அவர்களில் பெரும்பாலோர் தனியாக வசிக்கிறபோது, அதிகபட்சமாக, தங்கள் உள்ளூர் ஜனங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், இந்த நேரத்தில், உங்கள் தற்போதைய வளர்ச்சியைக் கொண்டு, நீங்கள் உறுதியாக நிற்க முடியாது. உபத்திரவங்களுக்கு மத்தியில், உறுதியாக நிற்பதைப் பலர் கடினமாக எண்ணுவார்கள். ஜீவ பாதையை அறிந்தவர்கள் மற்றும் சத்தியத்தால் தங்களைப் போதுமான அளவு ஆயத்தப்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே தொடர்ந்து முன்னேறவும், படிப்படியாக சுத்திகரிப்பையும் மறுரூபத்தையும் அடையவும் முடியும். உபத்திரவங்களின் வழியாகக் கடந்து செல்வது எளிதான காரியம் அல்ல; குறுகிய சில நாட்களில் நீ அவைகளைக் கடந்து வந்துவிடலாம் என்று நீ நினைப்பாயானால், உன் சிந்தனை எவ்வளவு அனுபவம் இல்லாதது என்பதை இது நிரூபிக்கிறது! உபதேசங்களை அதிகமாகப் புரிந்துகொள்வதன் மூலம், நீ உறுதியாக நிற்க முடியும் என்று நினைக்கிறாய், ஆனால் அது அப்படியல்ல! தேவனுடைய வார்த்தைகளில் உள்ள அத்தியாவசியமான விஷயங்களை நீ கண்டு உணரவில்லை என்றால், சத்தியத்தின் முக்கிய அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், பயிற்சி செய்ய வழியைக் கொண்டிருக்கவில்லை என்றால், நேரம் வந்து உனக்கு ஏதாவது நடக்கும் போது, நீ குழப்பத்தில் மூழ்கிப்போவாய். சாத்தானின் சோதனையையோ அல்லது புடமிடுதலின் தொடக்கத்தையோ உன்னால் தாங்க முடியாது. உன்னில் சத்தியம் இல்லாதிருந்தால், தரிசனங்களில் நீ குறைவுபட்டிருந்தால், நேரம் வரும்போது, நீ விழுந்துபோவதை உன்னால் தடுக்க முடியாது. நீங்கள் எல்லா நம்பிக்கையையும் விட்டுவிட்டு, “சரி, நான் எப்படியாயினும் மரிக்கப் போகிறேன் என்றால், நான் இறுதிவரைக்கும் கூட தண்டிக்கப்படலாம்! அது சிட்சையாக இருந்தாலும் சரி அல்லது அக்கினிக் கடலுக்கு அனுப்பப்படுவதாக இருந்தாலும் சரி—அது வரும்போது நான் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வேன்!” இது ஊழியம் செய்பவர்களின் காலத்தில் இருந்ததைப் போன்றது: நாம் ஊழியம் செய்பவர்கள், நாம் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று சிலர் நம்பினர், எனவே அவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பின்தொடரவில்லை. அவர்கள் புகைபிடித்து, குடித்து, தங்கள் மாமிசத்தை திருப்திப்படுத்தி, தாங்கள் விரும்பியதைச் செய்தார்கள். சிலர் வெறுமனே வேலை செய்யும்படி உலகிற்குத் திரும்பினர். விரும்பத்தகாத சூழலும் இவ்வாறுதான் உள்ளது; நீ அதை மேற்கொள்ள முடியாவிட்டால், உன் மீதான உன்னுடைய பிடியை சிறிதளவு தளர்த்தும்போது, நீ எல்லா நம்பிக்கையையும் கைவிட்டுவிடுவாய். சாத்தானுடைய ஆதிக்கத்தை உன்னால் மேற்கொள்ள முடியாவிட்டால், நீ அதை அறியும் முன் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் அழிவுக்கு அனுப்பப்படுவாய். எனவே, இன்று நீ சத்தியத்தால் உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்; நீ சுயாதீனமாக வாழ வேண்டும்; மேலும், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நீ பயிற்சிக்கான ஒரு பாதையைக் காண முடிய வேண்டும். உங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் உங்களை மேய்ப்பதற்கும் தலைவர்கள் அல்லது ஊழியர்கள் இல்லை என்றாலும், நீ இன்னும் பின்பற்றுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும், உன் சொந்த குறைகளைக் கண்டுபிடித்து, நீ உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்படியாக சத்தியத்தைத் தேடி பயிற்சி செய்யவும் முடிய வேண்டும். பூமிக்கு வந்த பிறகு தேவன் இடைவிடாமல் மனுஷனுடன் தொடர்பில் இருக்க முடியுமா? தங்களது எண்ணங்களில், சில ஜனங்கள் இவ்வாறு நம்புகிறார்கள்: “தேவனே, நீர் எங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கொண்டு வரவில்லையென்றால் என்றால், உமது கிரியையை நிறைவுற்றதாகக் கருத முடியாது, ஏனென்றால் சாத்தான் உம்மை குற்றம் சாட்டுகிறான்.” நான் உனக்குச் சொல்கிறேன், நான் என் வார்த்தைகளைப் பேசி முடித்தவுடன், என் கிரியை வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லாதிருந்தால், அப்பொழுது என் கிரியை முடிவடையும். எனது கிரியையின் முடிவானது சாத்தானின் தோல்விக்குச் சான்றாக இருக்கும், எனவே, சாத்தானிடமிருந்து எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல், அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்று கூறலாம். ஆனால் என் கிரியை முடிவடைந்திருக்கும் போதும் உங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றால், உங்களைப் போன்றவர்கள் இரட்சிப்புக்குத் தூரமானவர்கள், மேலும் நீங்கள் புறம்பாக்கப்படுவீர்கள். தேவைக்கு மேல் நான் எந்தக் கிரியையும் செய்ய மாட்டேன். உங்களை ஒரு குறிப்பிட்ட அளவு ஜெயங்கொள்ளும் வரைக்கும், மேலும் நீங்கள் அனைவரும் சத்தியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தெளிவாக அறிந்து, மற்றும் உங்கள் திறமை வளர்ச்சி அடைந்து, உள்ளும் புறமும் சாட்சி பகரும் வரைக்கும் நான் பூமியில் என் கிரியையைத் தொடர மாட்டேன். அது சாத்தியமற்றதாயிருக்கும்! இன்று, நான் உங்களில் செய்யும் கிரியையானது உங்களை இயல்பான மனிதத்தன்மைக்குள் வழிநடத்திச் செல்வதற்கே ஆகும்; இது ஒரு புதிய காலத்தைக் கொண்டுவருவதும், புதிய காலத்தின் ஜீவிதத்திற்குள்ளாக மனுக்குலத்தை வழி நடத்துவதுமான கிரியை ஆகும். படிப்படியாக, இந்தக் கிரியை செயல்படுத்தப்பட்டு உங்கள் மத்தியில், இவ்வாறு நேரடியாக வளர்ச்சி அடைகிறது: நான் உங்களுக்கு நேருக்கு நேர் கற்பிக்கிறேன்; நான் உங்களை கரம் பிடிக்கிறேன்; உங்களுக்குப் புரியாதது எதுவாக இருந்தாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்குக் குறைவுபட்டிருப்பது எதுவாக இருந்தாலும் நான் அதை உங்களுக்குக் கொடுக்கிறேன். இது, உங்களைப் பொறுத்தவரை, இந்தக் கிரியை அனைத்தும் உங்கள் ஜீவனுக்கான முன்னேற்பாடாக இருக்கவும், உங்களை இயல்பான மனிதத்தன்மைக்குள் வழிநடத்துவதற்காகவுமே என்று கூறலாம்; இது குறிப்பாக கடைசி நாட்களில் இந்த ஜனக் கூட்டத்தின் ஜீவனுக்கான வாழ்வாதாரத்தை வழங்குவதற்காகவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, இந்தக் கிரியைகள் அனைத்தும் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, புதியதைக் கொண்டுவருவதாகும்; சாத்தானைப் பொறுத்தவரை, துல்லியமாக நான் அதைத் தோற்கடிப்பதற்காக மாம்சமாகிவிட்டேன். உங்கள் மத்தியில் நான் இப்போது செய்யும் கிரியையானது இன்றைய உங்களது வாழ்வாதாரத்திற்காகவும் சரியான காலத்தில் உங்களது இரட்சிப்பிற்காகவுமே, ஆனால் இந்தச் சில குறுகிய ஆண்டுகளில், நான் உங்களுக்கு எல்லா சத்தியங்களையும், ஜீவிதத்தின் முழுமையான வழியையும், மேலும் எதிர்காலத்தின் கிரியையையும் கூட உங்களுக்குச் சொல்வேன்; உங்களை எதிர்காலத்தில் காரியங்களைச் சாதாரணமாக அனுபவிக்க வைப்பதற்கு இது உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். நான் உங்களிடம் ஒப்படைத்துள்ளவைகள் என்னுடைய எல்லா வார்த்தைகள் மட்டுமே ஆகும். நான் வேறு எந்த புத்திமதியையும் சொல்வதில்லை; இன்று, நான் உன்னிடம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் உன்னைக் குறித்த என் அறிவுரை, ஏனென்றால் நான் பேசும் பல வார்த்தைகளில் இன்று உனக்கு அனுபவம் இல்லை, மேலும் அவற்றின் உள் அர்த்தத்தை நீ புரிந்துகொள்வதில்லை. இன்று நான் பேசியது போல் ஒரு நாள், உங்கள் அனுபவங்கள் பலனளிக்கும். இந்த வார்த்தைகளே இன்றைய நாட்களின் உங்களது தரிசனங்களும், இவைகளே எதிர்காலத்தில் நீங்கள் சார்ந்து கொள்பவைகளுமாகும்; அவை இன்றைய வாழ்க்கைக்கான வாழ்வாதாரமாகவும் எதிர்காலத்திற்கான அறிவுரையாகவும் உள்ளன, மேலும் எந்த அறிவுறுத்தலும் இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. ஏனென்றால், நான் பூமியில் கிரியை செய்ய வேண்டிய நேரமானது நீ என் வார்த்தைகளை அநுபவிக்கப் பெற்றிருப்பதைப் போன்ற நீண்ட காலம் அல்ல; நான் வெறுமனே என் கிரியை முடிக்கிறேன், ஆனால் நீங்களோ வாழ்வைப் பின்தொடர்கிறீர்கள், இது வாழ்க்கை முழுவதும் நீண்ட பயணத்தை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். பல விஷயங்களை அனுபவித்த பின்னரே நீங்கள் ஜீவ பாதையை முழுமையாகப் பெற முடியும்; அப்போதுதான் இன்று நான் பேசும் வார்த்தைகளின் உள் அர்த்தத்தை உங்களால் பார்க்க முடியும். எனது வார்த்தைகளை உங்கள் கைகளில் வைத்திருக்கும் போது, உங்களில் ஒவ்வொருவரும் எனது அனைத்துக் கட்டளைகளையும் பெற்றுக்கொண்டபோது, என்னால் ஒப்புவிக்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களிடத்தில் ஒப்புவித்தவுடன், மேலும் வார்த்தைகளின் கிரியை முடிவுக்கு வந்திருக்கும்பொழுது, எவ்வளவு பெரிய பலன் அடையப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், அப்பொழுது தேவனுடைய சித்தத்தைச் செயல்படுத்துவதும் கூட அடையப்பெற்றிருக்கும். நீ ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மாற்றப்பட வேண்டும் என்பது, நீ கற்பனை செய்வது போல் அல்ல; தேவன் உன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்றபடி செயல்படுவதில்லை.

ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு சில நாட்களுக்குள் வளர்ச்சியை அடைந்துவிட முடியாது. அவர்கள் நாள்தோறும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணினாலும், இது போதாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு வளர்ச்சிக்கான காலகட்டத்தைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும். இது மிகவும் தேவையான ஒரு செயல்முறையாகும். இன்று ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் திறமையைக் கொண்டு, அவர்களால் எதை சாதிக்க முடியும்? தேவன் ஜனங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்கிறார், இயற்கையாய் அமைந்திருக்கிற அவர்களது திறமையின் அடிப்படையில் பொருத்தமான கோரிக்கைகளை வைக்கிறார். ஒரு வேளை இந்தக் கிரியை அதிக திறமை கொண்ட ஒரு ஜனக் கூட்டத்தின் மத்தியில் செயல்படுத்தப்படுமானால்: உரைக்கப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு உரைக்கப்பட்டவைகளை விட உயர்ந்தவைகளாக இருக்கும், தரிசனங்கள் உயர்ந்தவைகளாக இருக்கும், மேலும் சத்தியங்கள் மிகவும் உயர்ந்தவைகளாக இருக்கும். சில வார்த்தைகள் மிகவும் கடுமையானதாக, மனுஷர்களுடைய வாழ்க்கைக்கானவைகளை வழங்குவதற்கு அதிகத் திறன் கொண்டவையாக, இரகசியங்களை வெளிப்படுத்தும் அதிகத் திறன் கொண்டவையாக இருக்கக் கூடும். அத்தகைய ஜனங்கள் மத்தியில் பேசும்போது, தேவன் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்குவார். இன்று உங்களிடத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மிகவும் வற்புறுத்துகிறவை என்று அழைக்கப்படலாம்; இந்தக் கிரியையானது அதிகத் திறமை உள்ளவர்கள் மீது செயல்படுத்தப்படுமானால், அப்போது கோரிக்கைகள் இன்னும் அதிகமாக இருக்கும். தேவனுடைய அனைத்து கிரியைகளும் இயற்கையாய் அமைந்திருக்கும் ஜனங்களுடைய திறமைகளுக்கு ஏற்ப செய்யப்படுகின்றன. இன்று ஜனங்கள் மாற்றமடைந்திருக்கிற அல்லது ஜெயங்கொள்ளப்பட்ட உச்சகட்ட அளவே, சாத்தியமான மிக உயர்ந்த உச்சகட்ட அளவாகும்; கிரியையின் இந்தக் கட்டமானது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை அளவிட உங்கள் சொந்த எண்ணங்களைப் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் இயற்கையாகவே எதை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் உங்களைப் பற்றி மிகவும் உயர்வாக சிந்திக்கக் கூடாது. உண்மையிலேயே, உங்களில் ஒருவர்கூட ஜீவனைப் பின்தொடரவில்லை, மாறாக, தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களாக இருந்தீர்கள். நீ கற்பனை செய்யும் அளவிற்கு, உங்கள் அனைவரையும் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கச் செய்து, நீங்கள் ஏதோ சாத்தியமற்ற ஒரு மிகப்பெரிய தரிசனத்தைப் பார்த்தது போல் முற்றிலும் நம்பச் செய்து, தேவன் அந்த அளவிற்கு உங்களைக் கொண்டு வருவது சாத்தியமற்றது! ஏனென்றால் தேவனுடைய அற்புதங்களைப் பார்க்காத ஒருவர் நான் சொல்கிற அனைத்தையும் முழுமையாக நம்ப முடியாது. நீங்கள் என் வார்த்தைகளை உன்னிப்பாக ஆராய்ந்தாலும், நீங்கள் அவற்றை முற்றிலும் நம்ப மாட்டீர்கள்; இதுவே மனுஷனுடைய சுபாவம் ஆகும். சத்தியத்தைப் பின்தொடருபவர்கள் சில மாற்றங்களுக்கு உட்படுவார்கள், அதே சமயத்தில் ஒரு காலத்தில் பெற்றிருந்த சத்தியத்தைப் பின்தொடராதவர்களின் விசுவாசம் குறைந்து போய்விடும், மேலும் மறைந்தும் கூடப் போய்விடலாம். உங்களுடைய மிகப்பெரிய சிரமம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தைகளின் நிறைவேறுதலைப் பார்க்காமல் உங்களால் முழுமையாக விசுவாசிக்க முடியாது, அவருடைய அற்புதங்களைப் பார்க்காமல் நீங்கள் ஒப்புரவு ஆவதில்லை. இதுபோன்ற விஷயங்களைப் பார்க்காமல், யார் தேவனுக்கு முற்றிலும் விசுவாசமாக இருக்க முடியும்? அதனால் நீங்கள் விசுவாசிப்பது தேவனை அல்ல, அற்புதங்களை என்று நான் சொல்கிறேன். நான் இப்போது சத்தியத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தெளிவாகப் பேசியுள்ளேன்; இவை ஒவ்வொன்றும் முழுமையானது, இவை அனைத்திற்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. நீங்கள் அவைகளைப் பார்த்திருக்கிறீர்கள், இப்போது நீ அவைகளை செயல்படுத்த வேண்டும். இன்று நான் உனக்குப் பாதையைக் காட்டுகிறேன், மேலும் எதிர்காலத்தில், அதை நீயாகவே செயல்படுத்த வேண்டும். நான் இப்போது பேசும் வார்த்தைகள் ஜனங்களின் உண்மையான சூழ்நிலைகளின் அடிப்படையில் கோரிக்கைகளை எழுப்புகின்றன, மேலும் அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் விஷயங்களுக்கு ஏற்ப நான் கிரியை செய்கிறேன். நடைமுறை தேவன் நடைமுறைக் கிரியையைச் செய்யவும், ஜனங்களுடைய உண்மையான சூழ்நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்யவும் பூமிக்கு வந்திருக்கிறார். அவர் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவரல்ல. தேவன் செயல்படும்போது, அவர் ஜனங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. உதாரணமாக, நீ திருமணம் செய்துகொள்வாயோ இல்லையோ, உன்னுடைய சூழ்நிலைகளின் யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; சத்தியமானது உனக்குத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது, நான் உன்னைக் கட்டுப்படுத்துவதில்லை. சிலரது குடும்பத்தினர்கள் அவர்கள் திருமணம் செய்தாலொழிய தேவனை விசுவாசிக்க முடியாதபடி அவர்களை ஒடுக்குகின்றனர். இந்த சூழ்நிலையில், திருமணம், மாற்றுவழியில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். மற்றவர்களுக்குத் திருமணம் எந்த நன்மையையும் தராது, ஆனால் ஒரு காலத்தில் அவர்கள் பெற்றிருந்ததை இழக்கச்செய்யும். உன் சொந்தக் காரியமானது உன்னுடைய உண்மையான சூழ்நிலைகள் மற்றும் உன்னுடைய சொந்த மன உறுதியினால் தீர்மானிக்கப்பட வேண்டும். விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கற்பித்து அதன்மூலம் உங்களிடம் கோரிக்கைகளை வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. பலர் தொடர்ந்து கூப்பிடுகிறார்கள், “தேவன் நடைமுறைக்குரியவர்; அவருடைய கிரியை யதார்த்தத்திலும், நமது சூழ்நிலைகளின் யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்டது”—ஆனால் அதை எது உருவாக்குகிறது, உண்மையிலேயே, யதார்த்தமா என்று உனக்கு தெரியுமா? போதும் உங்கள் வெற்று வார்த்தைகள்! தேவனுடைய கிரியை உண்மையானதும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதுமாயிருக்கிறது; அதற்கு உபதேசம் இல்லை, ஆனால் முற்றிலும் இலவசம், அவை அனைத்தும் வெளிப்படையான மற்றும் மறைக்கப்படாதவையாகும். இந்த சில உபதேசங்களின் குறிப்பிடத்தக்க விவரங்கள் என்ன? தேவனுடைய கிரியையின் எந்தப் பகுதிகள் அப்படிப்பட்டவைகள் என்று நீ சொல்ல முடியுமா? நீ விரிவாகப் பேச வேண்டும், உன்னிடம் பலவிதமான அனுபவ சாட்சிகள் இருக்க வேண்டும், மேலும் தேவனுடைய கிரியின் இந்த விசேஷ அம்சத்தைப் பற்றி நீ மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்—நீ அதை அறிந்திருக்க வேண்டும், அப்போதுதான் நீ இந்த வார்த்தைகளைப் பேசத் தகுதி பெறுவாய். உன்னிடம் யாராவது கேட்டால் உன்னால் பதில் கூற முடியுமா: “கடைசி நாட்களின் போது மனுவுருவான தேவன் பூமியின் மீது என்ன கிரியை செய்தார்? நீங்கள் ஏன் அவரை நடைமுறை தேவன் என்று அழைக்கிறீர்கள்? இங்கே ‘நடைமுறை’ என்றால் என்ன? அவரின் நடைமுறைக் கிரியையை, அதிலும் குறிப்பாக அது எதை உள்ளடக்குகிறது என்பதைப் பற்றி நீ பேச முடியுமா? இயேசுவே மனுவுருவான தேவன், மேலும் இன்றைய தேவனும் மனுவுருவான தேவனாக இருக்கிறார், ஆகவே அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? மற்றும் ஒற்றுமைகள் என்ன? அவர்கள் ஒவ்வொருவரும் என்ன கிரியை செய்தார்கள்?” இவை அனைத்தும் சாட்சி பகருவதைச் சார்ந்தது! இந்த விஷயங்களைப் பற்றி குழப்பமடைய வேண்டாம். மற்றவர்கள் சொல்கிறார்கள்: “இன்றைய தேவனுடைய கிரியை உண்மையானது. இது ஒருபோதும் அற்புதங்கள் மற்றும் அதிசயங்களின் காட்சி அல்ல.” அவர் உண்மையில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யவில்லையா? உனக்கு உறுதியாகத் தெரியுமா? உண்மையிலேயே என் கிரியை என்னவென்று உனக்குத் தெரியுமா? அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வதில்லை என்று ஒருவர் கூறலாம், ஆனால் அவர் செய்யும் கிரியை மற்றும் அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் அற்புதங்கள் அல்லவா? அவர் அற்புதங்கள் மற்றும் அதிசயங்களைச் செய்யவில்லை என்று ஒருவர் கூறலாம், ஆனால் அது எவ்வாறு விளக்கப்படுகிறது மற்றும் யாருக்குக் கற்பிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது இது. திருச்சபைக்குச் செல்லாமல், அவர் ஜனங்களுடைய நிலைகளை வெறுமனே வெளிப்படுத்தினார், பேசுவதைத் தவிர வேறு எந்த கிரியையையும் செய்யாமல், அவர் ஜனங்களை முன்னோக்கிச் செல்லும்படி தூண்டிவிட்டார்—இவை அற்புதங்கள் இல்லையா? வார்த்தைகளால் மட்டும், அவர் ஜனங்களை வென்றுள்ளார், மேலும் ஜனங்கள் எதிர்பார்ப்புகள் அல்லது நம்பிக்கைகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பின்பற்றுகிறார்கள்—இதுவும் ஓர் அதிசயம் இல்லையா? அவர் பேசும்போது, அவருடைய வார்த்தைகள் ஜனங்களில் ஒரு குறிப்பிட்ட மனநிலையைத் தூண்டுகின்றன. அவர்கள் மகிழ்ச்சியாக உணரவில்லை என்றால் அவர்கள் விசனமாக உணர்கிறார்கள்; அவர்கள் புடமிடுதலுக்கு உட்படுத்தப்படாவிட்டால், அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஒரு சில கடுமையான வார்த்தைகளால், அவர் ஜனங்கள் மீது தண்டனையைக் கொண்டு வருகிறார்—இது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா? மனுஷர்களால் இத்தகைய காரியத்தை செய்ய முடியுமா? இத்தனை வருடங்களாக நீ வேதத்தைப் படித்திருக்கிறாய், ஆனால் நீ எதையும் புரிந்துகொள்ளவில்லை, எந்த நுண்ணறிவையும் பெறவில்லை; நீங்கள் காலாவதியான, பாரம்பரிய நம்பிக்கை முறைகளில் இருந்து உங்களைத் தனியாக பிரித்துக்கொள்ளத் திறமையற்றவர்களாக இருந்தீர்கள். வேதத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு வழி இல்லை. ஆயினும் அவர் வேதத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்—இது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா? தேவன் பூமிக்கு வந்தபோது அவரைப் பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட எதுவும் இல்லை என்றால், அவர் உங்களை வெல்ல முடியுமா? அவருடைய அசாதாரணமான, தெய்வீகக் கிரியை இல்லாமல், உங்களில் யார் நம்புவீர்கள்? உன்னுடைய பார்வையில், ஒரு சாதாரண நபர் உங்களுடன் கிரியை செய்து வாழ்வதைப் போலத் தோன்றுகிறது—மேலோட்டமாக, அவர் ஓர் இயல்பான, சாதாரண நபராகத் தோன்றுகிறார்; நீங்கள் பார்ப்பது இயல்பான மனிதத்தன்மையின் முகப்பாகும், ஆனால் உண்மையில், அது கிரியையில் தெய்வீகமானது. இது இயல்பான மனிதத்தன்மை அல்ல, தெய்வீகத்தன்மை; தேவன் தாமே கிரியை செய்கிறார், அவர் இயல்பான மனிதத்தன்மையைப் பயன்படுத்திக் கிரியை செய்கிறார். இவ்வாறு, அவரது கிரியைகள் இயல்பானதும் இயற்கைக்கு அப்பாற்பட்டதுமாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையை மனுஷனால் செய்ய முடியாது; இதைச் சாதாரண ஜனங்களால் செய்ய முடியாததால், இது ஓர் அசாதாரணமான மனுஷனால் செய்யப்படுகிறது. இது அசாதாரணமான தெய்வீகத் தன்மையாக இருந்தபோதிலும், இது மனிதத்தன்மை அல்ல. தெய்வீகத் தன்மை மனிதத்தன்மையிலிருந்து வேறுபட்டது. பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படும் நபரும் கூட சாதாரணமான, இயல்பான மனிதத்தன்மை கொண்டவரே, ஆனால் அவர்கள் இந்த கிரியையைச் செய்ய திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள். இங்கேதான் வித்தியாசம் உள்ளது. நீ இவ்வாறு கூறலாம்: “தேவன் ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன் அல்ல; அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதையும் செய்வதில்லை. நமது தேவன் நடைமுறையான மற்றும் உண்மையான வார்த்தைகளைப் பேசுகிறார். அவர் உண்மையான மற்றும் நடைமுறையான கிரியை செய்ய திருச்சபைக்கு வருகிறார். ஒவ்வொரு நாளும், அவர் நம்முடன் நேருக்கு நேர் பேசுகிறார், மேலும், நேருக்கு நேர் நம் நிலைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்—நம் தேவன் உண்மையானவர்! அவர் நம்முடன் வாழ்கிறார், அவரைப் பற்றிய அனைத்தும் முற்றிலும் இயல்பானது. அவரது தோற்றத்தில் எதுவும் அவரை தேவனாக வேறுபடுத்திக் காட்டவில்லை. அவர் கடுங்கோபமடையும் நேரங்களும் உள்ளன, அவருடைய உக்கிர கோபத்தின் மகத்துவத்தை நாம் பார்க்கிறோம், சில சமயங்களில் அவர் புன்னகைக்கிறார், அவருடைய புன்னகைக்கும் நடத்தையை நாம் கவனிக்கிறோம். அவர் தாமே வடிவமும் உருவமும் கொண்ட தேவன், மாம்சம் மற்றும் இரத்தத்தால் ஆனவர், அவர் மெய்யானவரும் உண்மையானவருமாய் இருக்கிறார்.” நீ இவ்வாறு சாட்சி பகரும்போது, அது ஒரு முழுமையற்ற சாட்சியாகும். இது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்? உள் சம்பவத்திற்கும் தேவன் தாமே கிரியையின் சாரமாக இருக்கிறார் என்பதற்கும் நீ சாட்சி பகர முடியாவிட்டால், உன்னுடைய “சாட்சி” நற்பெயரைப் பெற்றிராது!

தேவனுக்கு சாட்சி பகருவது என்பது முதன்மையாக தேவனுடைய கிரியைப் பற்றிய உன்னுடைய அறிவு, தேவன் ஜனங்களை எப்படி வெல்கிறார், அவர் ஜனங்களை எப்படி இரட்சிக்கிறார், அவர் ஜனங்களை எப்படி மாற்றுகிறார் என்பது பற்றி பேசுவது ஆகும்; சத்திய யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும், அவர்கள் அவரால் வெல்லப்படவும், பரிபூரணப்படுத்தப்படவும், அவரால் இரட்சிக்கப்படவும் அவர்களை அனுமதித்து, அவர் ஜனங்களை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப்பற்றி பேசுவதாகும். சாட்சி பகர்வது என்பது அவருடைய கிரியை மற்றும் நீ அனுபவித்த அனைத்தையும் பற்றிப் பேசுவதாகும். அவருடைய கிரியை மட்டுமே அவரைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும், மேலும் அவருடைய கிரியை மட்டுமே அவரது முழுமையில், அவரை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும்; அவரது கிரியை அவருக்கு சாட்சிப் பகருகிறது. அவருடைய கிரியை மற்றும் பேச்சுக்கள் நேரடியாக ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; அவர் செய்யும் கிரியை ஆவியானவரால் நிறைவேற்றப்படுகின்றன, அவர் பேசும் வார்த்தைகள் ஆவியானவரால் பேசப்படுகிறவைகளாய் இருக்கின்றன. இந்த விஷயங்கள் வெறுமனே மனுவுருவான தேவனுடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில், அவை ஆவியானவரின் வெளிப்பாடுகளாகும். அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும் அவர் பேசும் அனைத்து வார்த்தைகளும் அவருடைய சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. மாம்சத்தினால் தன்னை உடுத்திக்கொண்டு, மனுஷர்களுக்கு மத்தியில் வந்த பின்பும், தேவன் பேசாமலும் அல்லது கிரியை செய்யாமலும் இருந்து, பின்னர் அவருடைய உண்மைத் தன்மை, சாதாரண நிலை மற்றும் அவரது சர்வ வல்லமையை அறிந்துகொள்ளும்படி கேட்டால், உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? ஆவியானவரின் சாரம் என்ன என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? அவருடைய மாம்சத்தின் பண்புகள் என்ன என்பதை உன்னால் அறிய முடியுமா? அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் நீங்கள் அனுபவித்திருப்பதால் மட்டுமே, நீங்கள் சாட்சி பகரும்படி அவர் உங்களிடம் கேட்கிறார். நீங்கள் அத்தகைய அனுபவம் இல்லாமல் இருந்தால், நீங்கள் சாட்சி பகர வேண்டும் என்று அவர் வலியுறுத்த மாட்டார். இவ்வாறு, நீ தேவனுக்கு சாட்சி பகரும்போது, நீ அவருடைய இயல்பான மனிதத்தன்மையின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்லாமல், அவர் செய்யும் கிரியைக்கும் அவர் உன்னை வழிநடத்தும் பாதைக்கும் சாட்சி பகருகிறாய்; அவரால் நீ எவ்வாறு வெல்லப்பட்டாய், எந்த அம்சங்களில் நீ பரிபூரணமாக்கக்கப்பட்டாய் என்பதற்கு நீ சாட்சி பகர வேண்டும். நீ பகர வேண்டிய சாட்சி இவ்வகையானதேயாகும். நீ எங்கு சென்றாலும், நீ சத்தமிட்டு: “எங்கள் தேவன் கிரியை செய்ய வந்துவிட்டார், அவருடைய கிரியை உண்மையிலேயே நடைமுறைக்குரியது! இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் இல்லாமல், முற்றிலும் அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள் எதுவும் இல்லாமல் அவர் எங்களை ஆதாயப்படுத்தி இருக்கிறார்!” என்று கூறினால், மற்றவர்கள் கேட்பார்கள்: “அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யவில்லை என்று நீ சொல்வதன் அர்த்தம் என்ன? அற்புதங்கள் மற்றும் அதிசயங்களைச் செய்யாமல் அவர் உன்னை எப்படி வென்றார்?” மேலும் நீ சொல்கிறாய்: “அவர் பேசுகிறார், மேலும், எவ்வித அதிசயங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தாமல், அவர் எங்களை வென்றார். அவருடைய கிரியை எங்களை வென்றது.” இறுதியில், நீ சாராம்சத்தைப் பற்றி எதையும் சொல்ல முடியாவிட்டால், நீ பிரத்தியேகமானவைகளைப் பற்றி பேச முடியாவிட்டால், இது உண்மையான சாட்சியா? மனுவுருவான தேவன் ஜனங்களை வெல்லும்போது, அவருடைய தெய்வீகத் தன்மையுள்ள வார்த்தைகள் அதைச் செய்கின்றன. மனிதத்தன்மையால் இதை சாதிக்க முடியாது; அழிந்து போகக் கூடிய எதுவும் இதை சாதிக்க முடியாது, சாதாரண ஜனங்களில் மிக உயர்ந்த திறமை உள்ளவர்கள் கூட இதற்குத் தகுதியற்றவர்கள், ஏனென்றால் அவருடைய தெய்வீகத்தன்மையானது சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினத்தையும் விட உயர்ந்ததாக இருக்கிறது. இது ஜனங்களுக்கு அசாதாரணமானது; சிருஷ்டிகர், எல்லாவற்றிற்கும் மேலாக, சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவன்களையும் விட உயர்ந்தவர். சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் சிருஷ்டிகரை விடவும் உயர்ந்தவையாக இருக்க முடியாது; நீ அவரை விட உயர்ந்தவனாக இருந்தால், அவர் உன்னை வெல்ல முடியாது, மேலும் அவர் உன்னை விட உயர்ந்தவராக இருப்பதால் மட்டுமே உன்னை வெல்ல முடிகிறது. அனைத்து மனித இனத்தையும் வெல்லக்கூடியவரே சிருஷ்டிகர், அவரைத் தவிர வேறு யாராலும் இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. இந்த வார்த்தைகளே “சாட்சி”—நீ பகர வேண்டிய சாட்சியாகும். படிப்படியாக, நீ சிட்சை, நியாயத்தீர்ப்பு, புடமிடுதல், சோதனைகள், பின்னடைவுகள் மற்றும் உபத்திரவங்களை அனுபவித்திருக்கிறாய், மேலும் நீ ஜெயங்கொள்ளப்பட்டாய்; நீ மாம்சத்தின் வாய்ப்புகள், உன் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் மாம்சத்தின் மிக நெருக்கமான விருப்பங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துள்ளாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தைகள் உன் இருதயத்தை முழுமையாக வென்றுள்ளன. அவர் கேட்கும் அளவுக்கு உன் வாழ்க்கையில் நீ வளரவில்லை என்றாலும், இவை அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய், மேலும் அவர் என்ன செய்கிறார் என்பதில் நீ உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிறாய். இவ்வாறு, இதையே சாட்சி என்று அழைக்கலாம், யதார்த்தமான மற்றும் உண்மையான சாட்சி இதுவே ஆகும். தேவன் செய்யும்படி வந்திருக்கிற கிரியையாகிய, நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கான கிரியை, மனுஷனை ஜெயங்கொள்வதற்காக, ஆனால் அவர் தமது கிரியையை முடித்து, காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நிறைவு செய்யும் கிரியையையும் செயல்படுத்துகிறார். அவர் முழுக் காலத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனம் முழுவதையும் இரட்சித்து, மனித இனத்தைப் பாவத்திலிருந்து முழுமையாக இறுதியில் விடுவிக்கிறார்; அவர் சிருஷ்டித்த மனித இனத்தை அவர் முழுவதுமாக ஆதாயப்படுத்திக்கொள்கிறார். இவை அனைத்திற்கும் நீ சாட்சி பகர வேண்டும். நீ தேவனுடைய கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறாய், நீ அதை உன் சொந்தக் கண்களால் பார்த்துத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய்; நீ இறுதி முடிவை நெருங்கியவுடன், உன் மீதான பொறுப்பிற்கான செயல்பாட்டை நீ செய்ய இயலாமல் போய்விடக்கூடாது. அது எவ்வளவு பரிதாபமாக இருக்கும்! எதிர்காலத்தில், சுவிசேஷம் பரவும் போது, நீ உன் சொந்த அறிவைப் பற்றி பேசவும், உன் இருதயத்தில் நீ ஆதாயப்படுத்திக் கொண்ட அனைத்திற்கும் சாட்சி பகரவும், மேலும் எந்த முயற்சியையும் விட்டுவிடாமலும் இருக்க வேண்டும். இதைத்தான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் அடைய வேண்டும். தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தின் உண்மையான முக்கியத்துவம் என்ன? அதன் விளைவு என்ன? மேலும் அது மனுஷனில் எவ்வளவு நிறைவேற்றப்படுகிறது? ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? மனுவுருவான தேவன் பூமிக்கு வந்ததிலிருந்து செய்த அனைத்து கிரியைகளையும் உங்களால் தெளிவாகப் பேசக் கூடுமானால், உங்கள் சாட்சி முழுமையானதாக இருக்கும். இந்த ஐந்து விஷயங்களாகிய: அவருடைய கிரியையின் முக்கியத்துவம்; அதன் உள்ளடக்கம்; அதன் சாரம்; அது பிரதிபலிக்கும் மனநிலை; மற்றும் அதன் கொள்கைகள் ஆகிய இவைகளை நீ தெளிவாகப் பேசக் கூடுமானால், அப்பொழுது நீ தேவனுக்கு சாட்சி பகரத் திறமை உள்ளவனாய் இருக்கிறாய் மற்றும் நீ உண்மையிலேயே அறிவைப் பெற்றுள்ளாய் என்பதை அது நிரூபிக்கும். உங்களிடமான எனது தேவைகள் மிக உயர்ந்தவை அல்ல, மேலும் உண்மையாகப் பின்தொடர்பவர்கள் அனைவராலும் அடையக் கூடியதாகும். தேவனுடைய சாட்சிகளில் ஒருவராக இருக்க நீ தீர்மானித்தால், தேவன் எதை வெறுக்கிறார் மற்றும் தேவன் எதை விரும்புகிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ அவருடைய பெரும்பாலான கிரியையை அனுபவித்திருக்கிறாய்; இந்தக் கிரியையின் மூலம், நீ அவருடைய மனநிலையை அறிந்து, அவருடைய சித்தத்தையும் மனுக்குலத்திற்கான அவரது தேவைகளையும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த அறிவைப் பயன்படுத்தி அவரைப் பற்றிச் சாட்சி பகர்ந்து உன் கடமையைச் செய்ய வேண்டும். நீ வெறுமனே சொல்லலாம்: “நாங்கள் தேவனை அறிவோம். அவரது நியாயத்தீர்ப்பும் தண்டனையும் மிகவும் கடுமையானவை. அவருடைய வார்த்தைகள் மிகவும் கண்டிப்பானவை; அவை நீதியுள்ளவை மற்றும் மகத்துவமானவை, மேலும் அவை எந்த மனுஷனாலும் இடறலுண்டாக்க இயலாதவை,” ஆனால் இந்த வார்த்தைகள் இறுதியில் மனுஷனுக்கு எதையாவது வழங்குமா? ஜனங்கள் மீது அவற்றின் தாக்கம் என்ன? இந்த நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியை உனக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது என்பதை நீ உண்மையில் அறிவாயா? தேவனுடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் உன்னுடைய கலகத்தனத்தையும் சீர்கேட்டையும் வெளிப்படுத்துகின்றன, இல்லையா? உனக்குள் இருக்கும் அந்த அசுத்தங்கள் மற்றும் சீர்கேடு நிறைந்த விஷயங்களை அவற்றால் சுத்தம் செய்து வெளியேற்ற முடியும், அல்லவா? நியாயத்தீர்ப்பும் தண்டனையும் இல்லாவிட்டால், உன்னுடைய நிலை என்னவாகும்? சாத்தான் உன்னை மிக ஆழமான அளவிற்குச் சீர்கேடு அடையச் செய்துவிட்டான் என்ற உண்மையை நீ உண்மையிலேயே உணர்கிறாயா? இன்று, நீங்கள் இந்த விஷயங்களால் உங்களை மேம்படுத்தி அவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இன்றைய நாளின் தேவன் மீதான விசுவாசமானது, தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, ஜெபித்து, பாடி, நடனமாடி, உங்கள் கடமையைச் செய்து, மற்றும் இயல்பான மனிதத்தன்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தால் போதுமானது என்று நீங்கள் கற்பனை செய்யும் ஒரு விசுவாசம் அல்ல. விசுவாசம் மிகவும் எளிமையானதாக இருக்க முடியுமா? முடிவுகளே முக்கியமானது. விஷயங்களைச் செய்ய உனக்கு எத்தனை வழிகள் உள்ளன என்பது அல்ல; மாறாக, எவ்வளவு சரியாக நீ சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதே முக்கியமானதாகும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு உன் அறிவில் சிலவற்றை விளக்க முடியலாம், ஆனால் நீ அவற்றை ஒதுக்கி வைக்கும்போது, நீ சொல்வதற்கு ஒன்றுமிருக்காது. இது நீ எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிப் பேசும் திறனை மட்டும் கொண்டவனாயிருப்பதையும், அனுபவ அறிவு இல்லாதவனாயிருப்பதையும் காட்டுகிறது. இன்றைக்கு, நீ முக்கியமானதைப் புரிந்து கொள்ளத் தவறினால் ஒன்றும் செய்ய முடியாது—இது யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு மிக முக்கியமானது! இவ்வாறு உன்னைப் பயிற்றுவிக்கத் துவங்கு: முதலில், தேவனுடைய வார்த்தைகளை வாசி; அவைகளுக்குள் இருக்கும் ஆவிக்குரிய வார்த்தைகளை நன்கு அறிந்து கொள்; அவைகளுக்குள் இருக்கும் முக்கிய தரிசனங்களைக் கண்டறிய; நடைமுறையுடன் தொடர்புடைய பகுதிகளை அடையாளம் காணு; இந்த அனைத்துப் பகுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்; உன்னுடைய அனுபவத்துடன் அவற்றுள் பிரவேசி. நீ புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைகளே ஆகும். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது செய்யவேண்டிய மிக முக்கியமான பயிற்சி இதுதான்: தேவனுடைய வார்த்தைகளின் ஓர் அத்தியாயத்தைப் படித்த பிறகு, தரிசனங்கள் தொடர்பான முக்கியமான பகுதிகளை நீங்கள் கண்டுபிடிக்க இயல வேண்டும், மேலும் நடைமுறையுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகளையும் நீங்கள் கண்டுபிடிக்க இயல வேண்டும்; தரிசனங்களை அடித்தளமாகப் பயன்படுத்துங்கள், மற்றும் பயிற்சியை வாழ்க்கையில் உங்கள் வழிகாட்டியாகப் பயன்படுத்துங்கள். இவைகளே உங்களது பெரும்பாலான குறைபாடுகளும், உங்களது மிகப்பெரிய சிரமமும் ஆகும்; உங்கள் இருதயங்களில், நீங்கள் உண்மையாகவே அவைகள் மீது எந்த ஒரு கவனத்தையும் செலுத்துவதில்லை. பொதுவாக, நீங்கள் அனைவரும் சோம்பலான, உற்சாகமில்லாத, தனிப்பட்ட விதத்தில் தியாகம் செய்ய விரும்பாத நிலைக்குள்ளேயே இருக்கிறீர்கள்; அல்லது நீங்கள் செயலற்ற நிலையில் காத்திருக்கிறீர்கள், மேலும் சிலர் குறைகூறவும் செய்கிறீர்கள்; தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வது அவர்களுக்குக் கடினமாக உள்ளது. அத்தகைய ஜனங்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள் மற்றும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவரையும் பரிபூரணப்படுத்தவும் முடியாது, ஒருவரும் பிழைத்துக்கொள்ளவும் முடியாது. சாத்தானின் வல்லமைகளை எதிர்ப்பதற்கான ஒரு குறைந்தபட்ச மனஉறுதி கூட ஜனங்களுக்கு இல்லையென்றால், அப்பொழுது அவர்கள் நம்பிக்கைக்கு தூரமானவர்களாவர்!

இப்போது, உங்களது பின்தொடர்தல் பயனுள்ளதாக இருந்ததா இல்லையா என்பதை நீங்கள் தற்போது உடைமையாக்கியிருப்பவைகளின் மூலம் அளவிடப்படுகிறது. இதுவே உங்கள் பலனைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது; அதாவது கூற வேண்டுமானால், உங்கள் பலனானது நீங்கள் செய்த தியாகங்கள் மற்றும் நீங்கள் செய்த காரியங்களில் வெளிப்படுகிறது. உங்கள் பின்தொடர்தல், உங்கள் விசுவாசம் மற்றும் நீங்கள் செய்திருப்பவைகள் மூலம் உங்களது பலன் தெரியப்படுத்தப்படும். உங்கள் எல்லோருக்கும் மத்தியில், ஏற்கனவே இரட்சிப்புக்கு தூரமானவர்கள் பலர் உள்ளனர், ஏனென்றால் இன்று ஜனங்களின் பலன்களை வெளிப்படுத்தும் நாள், என் கிரியையில் நான் குழப்பமடைய மாட்டேன்; இரட்சிப்புக்கு முற்றிலும் தூரமானவர்களை அடுத்த காலத்திற்குள் நான் வழிநடத்திச் செல்ல மாட்டேன். என் கிரியை முடிவடைந்துவிடும் ஒரு காலம் வரும். இரட்சிக்கவே முடியாத அந்த துர்நாற்றம் வீசும், ஆவி இல்லாத அந்தப் பிணங்களில் நான் கிரியைசெய்ய மாட்டேன்; இப்போது மனுஷனுடைய இரட்சிப்பின் கடைசி நாட்கள், நான் பயனற்ற கிரியையைச் செய்யமாட்டேன். பரலோகத்திற்கும் பூமிக்கும் எதிராக முறையிடாதே—உலகத்தின் முடிவு வருகிறது. அது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டன, அவைகளைத் தடுத்து நிறுத்த ஒரு மனுஷனாக நீ எதுவும் செய்ய முடியாது; நீ விரும்புகிறபடி விஷயங்களை மாற்றியமைக்க முடியாது. நேற்று, நீ சத்தியத்தைப் பின்தொடர ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்தவுமில்லை நீ நம்பிக்கைக்குரியவனாக இருக்கவும் வில்லை; இன்று, காலம் வந்துவிட்டது, நீ இரட்சிப்புக்குத் தூரமாய் இருக்கிறாய்; மற்றும் நாளை, நீ புறம்பாக்கப்படுவாய், மேலும் உன் இரட்சிப்புக்கு எந்தப் பக்கவழியும் இருக்காது. என் இருதயம் தயையுள்ளதாக இருந்து, உன்னை இரட்சிக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்து கொண்டிருந்தாலும், நீ உன் சார்பாகப் போராடாமலும் உன்னைக் குறித்து சிந்திக்காமலும் இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? தங்கள் மாம்சத்தை மட்டுமே நினைப்பவர்கள் மற்றும் இன்ப வாழ்வை அனுபவிப்பவர்கள்; விசுவாசிப்பதைப் போல காணப்படுபவர்கள் ஆனால் உண்மையிலேயே விசுவாசிக்காதவர்கள்; தீய மருத்துவம் மற்றும் சூனியத்தில் ஈடுபடுபவர்கள்; விபச்சாரக்காரர்கள், கெட்டுப்போனவர்கள் மற்றும் சீரழிந்தவர்கள்; யெகோவாவுக்கு பலியிடப்பட்டவைகளையும் அவருடைய உடைமைகளையும் திருடுபவர்கள்; லஞ்சத்தை விரும்புபவர்கள்; பரலோகத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும் என்று வெறுமனே கனவு காண்பவர்கள்; அகந்தை மற்றும் தற்பெருமை கொண்டவர்கள், தனிப்பட்ட புகழ் மற்றும் செல்வத்திற்காக மட்டுமே பாடுபடுபவர்கள்; அவமதிப்பான வார்த்தைகளைப் பரப்புபவர்கள்; தேவனையே தூஷிப்பவர்கள்; தேவனுக்கு எதிராக நியாயத்தீர்ப்புகள் மற்றும் தேவனையே அவதூறு செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யாதவர்கள்; உட்பிரிவுகளை உருவாக்கி சுயாதீனத்தைத் தேடுபவர்கள்; தேவனுக்கு மேலாகத் தங்களை உயர்த்திக் கொள்பவர்கள்; விபச்சாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அற்பமான வாலிப, நடுத்தர வயது மற்றும் வயது முதிர்ந்த புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள்; தனிப்பட்ட புகழ் மற்றும் செல்வத்தை அனுபவிக்கும் மற்றும் மற்றவர்கள் மத்தியில் தனிப்பட்ட அந்தஸ்தை நாடுகிற புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள்; பாவத்தின் கண்ணியில் அகப்பட்டு மனந்திரும்பாத ஜனங்கள்—இவர்கள் அனைவரும், இரட்சிப்புக்கு மிகவும் தூரமானவர்கள் அல்லவா? விபச்சாரம், பாவம், தீய மருந்து, சூனியம், அவதூறு மற்றும் இழிவான வார்த்தைகள் அனைத்தும் உங்கள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்துகின்றன; மேலும் சத்தியமும் ஜீவ வார்த்தைகளும் உங்கள் மத்தியில் மிதிக்கப்படுகின்றன, மேலும் பரிசுத்த பாஷையானது உங்கள் மத்தியில் அசுத்தமாக்கப்பட்டிருக்கிறது. புறஜாதியாராகிய நீங்கள், அசுத்தத்தினாலும் கீழ்ப்படியாமையினாலும் நிரம்பி இருக்கிறீர்கள்! உங்கள் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? மாம்சத்தை நேசிப்பவர்கள், மாம்சத்தில் சூனியம் செய்பவர்கள் மற்றும் விபச்சாரப் பாவத்தில் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி தொடர்ந்து வாழ்வதற்கான துணிச்சலைப் பெற்றிருக்க முடிகிறது! உங்களைப் போன்ற ஜனங்கள் இரட்சிப்புக்கு மிகவும் தூரமான புழுக்களைப் போல இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாதா? இதையும் அதையும் அதிகாரத்துடன் கேட்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றுவரை, சத்தியத்தை நேசிக்காத மற்றும் மாம்சத்தை மட்டுமே நேசிப்பவர்களில் சிறிதளவு மாற்றமும் இல்லை—அத்தகைய ஜனங்கள் எவ்வாறு இரட்சிக்கப்படக் கூடும்? ஜீவ பாதையை நேசிக்காதவர்கள், தேவனை உயர்த்தாதவர்கள் மற்றும் அவருக்கு சாட்சி பகராதவர்கள், தங்கள் சொந்த அந்தஸ்துக்காக திட்டமிடுபவர்கள், தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்பவர்கள்—அவர்கள் இன்று வரை அப்படியே இருக்கிறார்கள் அல்லவா? அவர்களை இரட்சிப்பதில் என்ன மதிப்பு இருக்கிறது? நீ இரட்சிக்கப்பட முடியுமா என்பது உன் மூப்பு நிலை எவ்வளவு அதிகமானது அல்லது எத்தனை ஆண்டுகள் நீ கிரியை செய்துகொண்டிருக்கிறாய் என்பதைப் பொறுத்தது அல்ல, மேலும் நீ எத்தனை நற்சான்றுகளைப் பெற்றிருக்கிறாய் என்பதைப் பொறுத்ததும் அல்ல. மாறாக, உன் பின்தொடர்தல் பலனளித்ததா என்பதைப் பொறுத்ததாகும். இரட்சிக்கப்பட்டவர்கள் கனி தரும் “மரங்கள்”, பசுமையான இலைகள் மற்றும் ஏராளமான பூக்களுடன் இருந்தும் இன்னும் கனி தராத மரங்கள் அல்ல என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ அநேக வருடங்கள் தெருக்களில் அலைந்து நேரத்தை செலவழித்திருந்தாலும், அதினால் காரியம் என்ன? உன் சாட்சி எங்கே? தேவன் மீதான உன்னுடைய பயபக்தியானது உன் மீதான உன்னுடைய அன்பு மற்றும் உன்னுடைய இச்சை நிறைந்த விருப்பங்களை விட மிகவும் குறைவானதாகும்—இத்தகைய நபர் சீரழிந்தவன் அல்லவா? அவர்கள் எப்படி இரட்சிப்பிற்கான மாதிரிச் சான்று மற்றும் மாதிரியாக இருக்க முடியும்? உன் இயல்பு திருத்த முடியாதது, நீ மிகவும் கலகத்தனமுள்ளவன், நீ இரட்சிப்புக்குத் தூரமானவன்! அப்படிப்பட்டவர்கள் புறம்பாக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? எனது கிரியை முடிவடைந்த சமயமானது உன் கடைசி நாளின் வருகைக்கான நேரமல்லவா? நான் உங்கள் மத்தியில் இவ்வளவு அதிகமான கிரியை செய்துள்ளேன், மற்றும் அநேக வார்த்தைகளைப் பேசியுள்ளேன்—அதில் எவ்வளவு உண்மையாக உங்கள் காதுகளில் நுழைந்தது? அதில் நீங்கள் எந்த அளவிற்கு, எப்பொழுது கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்? எனது கிரியை முடிவடையும் சமயமே, நீ என்னை எதிர்ப்பதை நிறுத்தும் மற்றும் நீ எனக்கு விரோதமாக நிற்பதை நிறுத்தும் சமயமாகும். நான் கிரியை செய்யும் போது, நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுகிறீர்கள்; நீங்கள் ஒருபோதும் என் வார்த்தைகளுக்கு இணங்குவதில்லை. நான் என் கிரியையைச் செய்கிறேன், நீயோ உன் சொந்த சிறிய ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டு, உன் சொந்த “கிரியையை” செய்கிறாய். நீங்கள் எனக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யும், நரி மற்றும் நாய்களின் கூட்டமே அல்லாமல் வேறல்லர்! தங்களது ஏகஅன்பை உங்களுக்கு வழங்குவோரை உங்கள் அரவணைப்பில் கொண்டு வர நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள்—உங்களது பயபக்தி எங்கே? நீங்கள் செய்வதெல்லாம் வஞ்சகக் கிரியை! உங்களுக்கு கீழ்ப்படிதலோ அல்லது பயபக்தியோ இல்லை, நீங்கள் செய்வதெல்லாம் வஞ்சகம் நிறைந்ததாகவும் தூஷணமாகவும் இருக்கிறது! இத்தகையவர்கள் இரட்சிக்கப்பட முடியுமா? விபச்சாரக்காரர்கள் மற்றும் காமவிகாரத்தினால் நிறைந்தவர்கள் எப்போதும் தங்கள் சொந்த இன்பத்திற்காகப் போலியான நேசமுடைய விபச்சாரிகளைத் தங்களிடம் ஈர்க்க விரும்புகிறார்கள். இதுபோன்ற விபச்சாரக்காரர்களாகிய பிசாசுகளை நான் நிச்சயமாகவே இரட்சிக்க மாட்டேன். அசுத்தமான பிசாசுகளாகிய உங்களை நான் வெறுக்கிறேன், உங்களது காமவிகாரம் மற்றும் உல்லாசம் உங்களை நரகத்தில் மூழ்கடிக்கும். உங்களுக்காக நீங்கள் சொல்வதற்கென்று என்ன இருக்கிறது? இழிவான பிசாசுகள் மற்றும் அசுத்த ஆவிகளாகிய நீங்கள் அருவருப்பானவர்கள்! நீங்கள் வெறுக்கத்தக்கவர்கள்! இத்தகைய குப்பைகள் எப்படி இரட்சிக்கப்படக் கூடும்? பாவத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்னும் இரட்சிக்கப்பட முடியுமா? இன்று, இந்த சத்தியம், இந்த வழி, மற்றும் இந்த ஜீவன் உங்களை ஈர்ப்பதில்லை; மாறாக, நீங்கள் பாவத்தன்மைக்கு; பணத்திற்கு; நிலைநிற்றல், புகழ் மற்றும் ஆதாயத்திற்கு; மாம்சீக இன்பங்களுக்கு; ஆண்களின் அழகிற்கும் பெண்களின் வசீகரிப்புக்கும் ஈர்க்கப்படுகிறீர்கள். என் ராஜ்யத்தில் பிரவேசிக்க உங்களைத் தகுதியாக்குவது எது? உங்களது சாயல் தேவனுடையதை விடவும் பெரியது, உங்களது அந்தஸ்து தேவனுடையதை விடவும் உயர்ந்தது, மனிதர்கள் மத்தியில் உங்கள் கவுரவத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை—ஜனங்கள் வழிபடும் விக்கிரகமாக நீங்கள் மாறிவிட்டீர்கள். நீ பிரதானதூதனாக மாறிவிட்டாய் அல்லவா? ஜனங்களின் முடிவுகள் வெளிப்படும் போது, இரட்சிப்பின் கிரியை அதன் முடிவை நெருங்கும் போது, உங்களில் பலர் இரட்சிப்புக்குத் தூரமான பிணங்களாக இருப்பார்கள், அவர்கள் புறம்பாக்கப்பட வேண்டும். இரட்சிப்பின் கிரியையின் போது, நான் எல்லா ஜனங்களிடத்திலும் தயையுள்ளவராகவும் நல்லவராகவும் இருக்கிறேன். கிரியை முடிவடைந்து, பல்வேறு வகையான ஜனங்களின் முடிவுகள் வெளிப்படும் போது, அந்த நேரத்தில், நான் தயையுள்ளவராகவும் நல்லவராகவும் ஒருபோதும் இருக்க மாட்டேன், ஏனென்றால் ஜனங்களின் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், மேலும் அவரவர்கள் தங்கள் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருப்பார்கள், மற்றும் இரட்சிப்பின் கிரியையைச் செய்வதில் அதன்பின் எந்தப் பயனும் இருக்காது, ஏனென்றால் இரட்சிப்பின் காலம் கடந்துபோயிருக்கும், மேலும் கடந்து சென்றவுடன், இனி அது திரும்பி வராது.

முந்தைய: பயிற்சி (6)

அடுத்த: நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க ஏன் விருப்பமில்லாதிருக்கிறாய்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக