மனுக்குலத்தை நிர்வகிப்பதன் நோக்கம்

மனித வாழ்க்கையின் சரியான பாதையையும், மனுக்குலத்தின் தேவனுடைய நிர்வாகத்தின் நோக்கத்தையும் ஜனங்கள் உண்மையிலேயே தெளிவாகக் காண முடிந்தால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தையும் விதியையும் தங்கள் இருதயத்தில் ஒரு பொக்கிஷத்தைப் போல கொண்டிருக்க மாட்டார்கள். பன்றிகள் மற்றும் நாய்களை விட மோசமான தங்கள் பெற்றோருக்கு ஊழியஞ்செய்வதில் அவர்கள் அதன்பின் ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள். பேதுருவின் “பெற்றோர்” என்று இந்நாளில் பெயரளவில் அழைக்கப்படுகிற மனிதனின் எதிர்காலமும் விதியும் அல்லவா? அவை மனிதனின் மாம்சம் மற்றும் இரத்தத்தைப் போன்றவையே ஆகும். மாம்சத்தின் இலக்கும் எதிர்காலமும் என்னவாக இருக்கப் போகிறது? அது உயிருடன் இருக்கும்போது தேவனை தரிசிப்பதற்காகவா அல்லது மரித்த பிறகு ஆத்துமா தேவனை சந்திப்பதற்காகவா? மாம்சமானது ஒரு பெரிய உபத்திரவங்களின் சூளையிலோ அல்லது பெரும் அக்கினியிலோ நாளை முடிவடையுமா? இதுபோன்ற கேள்விகள் தற்போதைய காலங்களில் மூளை இருக்கும் மற்றும் விவேகமுள்ள எவரும் மிகவும் அக்கறை கொள்ளத்தக்க கேள்விகளான மனிதனின் மாம்சம் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்குமா அல்லது மிகப் பெரிதான செய்தியினால் பாடுகளை அனுபவிக்குமா என்பதோடு தொடர்புடையவையல்லவா? (இங்கே பாடுகள் என்பது ஆசிர்வாதங்களைப் பெறுவதைக் குறிக்கிறது; அதாவது எதிர்கால உபத்திரவங்கள் மனிதனின் இலக்குக்கு நன்மை பயக்கும் என்பதாகும். துரதிர்ஷ்டம் என்பது உறுதியாக நிற்க முடியாமல் இருப்பது அல்லது வஞ்சிக்கப்படுகிறதைக் குறிக்கிறது; அல்லது ஒருவர் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை சந்திப்பார் என்றும் பேரழிவிற்கு மத்தியில் தன் ஜீவனை இழப்பார் என்றும் ஒருவரின் ஆத்துமாவுக்கு ஏற்ற முடிவு எதுவும் இல்லை என்பதும் இதன் பொருளாகும்.) மனிதர்களுக்கு நல்ல அறியும் திறன் இருந்தாலும், ஒருவேளை அவர்கள் நினைப்பது அவர்கள் அறியும் திறனை சித்தப்படுத்துவதுடன் முற்றிலுமாய் சம்பந்தப்பட்டது அல்ல. அவர்கள் அனைவரும் பெரிதும் குழப்பமடைந்து விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இதன் காரணமாகும். அவர்கள் அனைவருக்கும் தாங்கள் எதற்குள் பிரவேசிக்கப் போகிறோம் என்பதைப்பற்றிய முழுமையான புரிந்து கொள்ளுதல் இருக்க வேண்டும், மேலும் குறிப்பாக, உபத்திரவத்தின்போது (சூளையில் சுத்திகரிக்கப்படும் போது) எதற்குள் நுழைய வேண்டும் என்பதையும், அக்கினிச் சோதனைகளின் போது அவர்கள் எதைக்கொண்டு ஆயத்தப்படவேண்டும் என்பதையும் அவர்கள் வகைப்படுத்த வேண்டும். பன்றிகள் மற்றும் நாய்களைப் போன்றும், எறும்புகள் மற்றும் வண்டுகளை விடவும் மோசமான உங்கள் பெற்றோரை (மாம்சத்தைக் குறிக்கிறது) எப்போதும் சேவித்துக் கொண்டிருக்காதீர்கள். அதைக்குறித்து வேதனைப்பட்டு, அளவுக்கு அதிகமாக யோசித்துக் கொண்டு, உங்கள் மூளைகளைப் பெரிதும் வருத்திக்கொண்டிருப்பதன் பயன் என்ன? மாம்சமானது உனக்குரியதாயிராமல், உன்னை ஆளுகை செய்வது மட்டுமல்லாமல் சாத்தானுக்கும் கட்டளையிடும் தேவனுடைய கரங்களில் உள்ளது. (இதன் அர்த்தமானது மாம்சம் முதலில் சாத்தானுக்குச் சொந்தமானது. ஏனென்றால் சாத்தானும் கூட தேவன் தம்முடைய கரங்களில் இருப்பதால், இதை இவ்வழியில் தான் வார்த்தைகளாக்க முடியும். ஏனென்றால் அதை அப்படிச் சொல்வதே அதிகம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது; மனிதர்கள் முற்றிலும் சாத்தானுடைய ஆளுகையின் கீழில்லாமல், தேவன் தம்முடைய கரங்களில் இருக்கிறார்கள் என்று அது அறிவுறுத்துகிறது.) நீ மாம்சத்தின் வேதனையின் கீழ் வாழ்கிறாய்—ஆனால் அந்த மாம்சம் உனக்குரியதா? இது உன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதா? ஏன் அதைக்குறித்து உங்கள் மூளைகளை வருத்திக் கொள்கிறீர்கள்? அசுத்தமான ஆவிகளால் நீண்ட காலமாக ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட, சபிக்கப்பட்ட, தீட்டுப்படுத்தப்பட்ட உன்னுடைய அசுத்தமான மாம்சத்திற்காக நீ ஏன் பிடிவாதமாய் தேவனிடத்தில் மன்றாடுகிறாய்? சாத்தானின் கூட்டாளிகளை எப்போதும் உன் இருதயத்திற்கு மிக நெருக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? உன்னுடைய உண்மையான எதிர்காலத்தையும், உன்னுடைய அற்புதமான நம்பிக்கைகளையும், உன்னுடைய வாழ்க்கையின் உண்மையான இலக்கையும் மாம்சமானது அழிக்கக்கூடும் என்று நீ கவலைப்படவில்லையா?

இன்றைய பாதை நடப்பதற்கு சுலபமானதல்ல. அதன் வழியே வருவது சற்று கடினம் என்று கூறலாம், மேலும் காலங்காலமாக அது மிக அரிதாகவே இருந்தது. இருப்பினும் ஒரு மனிதனை அழிக்க அவனுடைய மாம்சம் மட்டுமே போதுமானது என்று யார் நினைத்திருக்கக் கூடும்? இன்றைய கிரியை நிச்சயமாக ஒரு வசந்தகால மழையைப் போலவே விலைமதிப்பற்றது, மேலும் மனிதனிடம் தேவன் காட்டிய தயவைப் போலவே மதிப்புமிக்கது. இருப்பினும், மனிதன் தன்னுடைய தற்போதைய கிரியையின் நோக்கத்தை அறிந்திராவிட்டால் அல்லது மனுக்குலத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால், பின் அதன் விலைமதிப்பற்ற தன்மையையும் மதிப்புமிக்க தன்மையையும் குறித்து எவ்வாறு பேச முடியும்? மாம்சமானது மனிதர்களுக்கே சொந்தமானது அல்ல, எனவே அதனுடைய இலக்கு உண்மையில் எங்கு இருக்கும் என்பதை ஒருவராலும் தெளிவாகக் காண முடியாது. ஆயினும்கூட, சிருஷ்டிப்பின் கர்த்தர் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தை அவர்களது உண்மை நிலைக்குத் திருப்பி, அவர்கள் சிருஷ்டிக்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் உண்மையான சாயலை மீட்டெடுப்பார் என்பதை நீ நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர் மனிதனுக்குள் ஊதிய சுவாசக்காற்றை முழுவதுமாகத் திரும்பப் பெற்று, அவனது எலும்புகளையும் மாம்சத்தையும் திரும்பவும் பெற்று, எல்லாவற்றையும் சிருஷ்டிப்பின் கர்த்தரிடத்திற்குத் திரும்பப் பண்ணுவார். அவர் மனுக்குலத்தை முழுவதுமாக மறுரூபப்படுத்தி, புதுப்பிப்பார், மேலும் மனுக்குலத்திற்குச் சொந்தமல்லாமல் தேவனுக்கு உரியதான தேவனுடைய முழுமையான சுதந்திரத்தையும் மனிதனிடத்தில் இருந்து திரும்பப் பெற்று, அதைத் திரும்ப ஒருபோதும் மனுக்குலத்திடம் ஒப்படைக்க மாட்டார். ஏனென்றால் முதலாவது அந்த விஷயங்கள் எதுவுமே மனுக்குலத்திற்குச் சொந்தமானவை அல்ல. அவர் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்வார்—இது நியாயமற்ற கொள்ளை அல்ல; மாறாக வானத்தையும் பூமியையும் அவற்றின் உண்மை நிலைகளுக்கு மீட்டெடுப்பதற்கும், அதோடுகூட மனிதனை மறுரூபமாக்கவும், புதுப்பிக்கவும் அது செய்யப்படுகிறது. இதுவே மனிதனுக்கான நியாயமான இலக்காகும், இருப்பினும் அது ஜனங்கள் கற்பனை செய்யக்கூடியது போல, சிட்சிக்கப்பட்ட பின்பு மாம்சத்தின் மறுஒதுக்கீடாக இருக்காது. மாம்சத்தின் அழிவுக்குப் பிறகு அதன் எலும்புக்கூடுகள் தேவனுக்கு அவசியமில்லை; ஆரம்பத்தில் தேவனுக்குச் சொந்தமாக இருந்த மனிதனின் அசல் கூறுகளை அவர் விரும்புகிறார். எனவே, அவர் மனிதகுலத்தை நிர்மூலமாக்கவோ அல்லது மனிதனின் மாம்சத்தை முற்றிலுமாக ஒழிக்கவோ மாட்டார், ஏனென்றால் மனிதனின் மாம்சம் அவருடைய தனிப்பட்டச் சொத்து அல்ல. மாறாக மனுக்குலத்தை நிர்வகிப்பது தேவனுடைய உதவியாளராகும். அவர் மனிதனின் மாம்சத்தை அவருடைய “மகிழ்ச்சிக்காக” எப்படி அழிக்க முடியும்? இப்போது, நீ உண்மையிலேயே ஒரு பைசாகூட மதிப்பில்லாத உன்னுடைய மாம்சத்தின் முழுமையை விட்டு விட்டாயா? கடைசி நாட்களில் முப்பது சதவிகித கிரியைகளை உன்னால் புரிந்து கொள்ள முடிந்தால் (இந்த வெறும் முப்பது சதவிகிதம் என்பது இன்று பரிசுத்த ஆவியின் கிரியையையும், கடைசி நாட்களில் தேவனுடைய வார்த்தையின் கிரியையையும் கூட புரிந்து கொள்வதாகும்), அப்போது நீ, இன்று இருப்பது போல, பல வருடங்களாக சீர்கெட்ட மாம்சமான உன்னுடைய மாம்சத்திற்குத் தொடர்ந்து “ஊழியஞ்செய்யவோ” அல்லது “மகவுஉரிமை சார்ந்த கடமையையோ” செய்ய மாட்டாய். இப்போது மனிதர்கள் முன் எப்போதும் இல்லாத நிலைக்கு முன்னேறி உள்ளனர் என்பதையும், அவர்கள் வரலாற்றுச் சக்கரங்களைப் போல இனி முன்னோக்கி உருண்டு செல்ல மாட்டார்கள் என்பதையும் நீ தெளிவாகக் காண வேண்டும். உன்னுடைய பூசணம் பூத்திருக்கிற மாம்சமானது நீண்டகாலமாக ஈக்களால் மூடப்பட்டிருக்கிறது, ஆகவே இன்றுவரை தொடரும்படி தேவன் இயலச்செய்த வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னோக்கி நகர்த்தும் வல்லமையை அது எவ்வாறு கொண்டிருக்க முடியும்? கடைசி நாட்களில் அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தை மீண்டும் எப்படி அதனால் நகர்த்த முடியும், மற்றும் அதன் முட்களை வலஞ்சுழியாக எப்படி நகர்த்த முடியும்? அடர்த்தியான மூடுபனிக்குள் மூடப்பட்டிருப்பதாகத் தோன்றும் உலகத்தை அது எவ்வாறு முன் உருவத்திற்கே மாற்றியமைக்க முடியும்? உன்னுடைய மாம்சத்தால் மலைகளையும் ஆறுகளையும் புதுப்பிக்க முடியுமா? ஒரு சிறிய செயல்பாட்டை மட்டுமே கொண்ட உன்னுடைய மாம்சம் நீ ஏங்கின மனித உலகின் மாதிரியை உண்மையில் மீட்டெடுக்க முடியுமா? “மனிதர்களாக” மாறுவதற்கு உன் சந்ததியினருக்கு நீ உண்மையாகவே கற்பிக்க முடியுமா? உனக்கு இப்போது புரிகிறதா? உன்னுடைய மாம்சம் உண்மையாகவே எதற்குரியது என்று? மனிதனைக் காப்பாற்றுவதற்கும், மனிதனை முழுமையாக்குவதற்கும், மனிதனை மாற்றுவதற்குமான தேவனுடைய உண்மையான நோக்கமானது உனக்கு அழகான தாயகத்தை வழங்குவதற்காகவோ அல்லது மனிதனுடைய மாம்சத்திற்குச் சமாதானமான ஓய்வைக் கொடுப்பதற்காகவோ அல்ல; மாறாக அது அவருடைய மகிமைக்காகவும், அவருடைய சாட்சிகளுக்காகவும், எதிர்காலத்தில் மனுக்குலத்தின் சிறந்த மகிழ்ச்சிக்காகவும் அதனால் அவர்கள் சீக்கிரத்தில் இளைப்பாறக்கூடும் என்பதற்காகவே. இருந்தபோதும், அது உன்னுடைய மாம்சத்திற்காக அல்ல, ஏனென்றால் தேவனுடைய நிர்வாகத்தின் மூலதனம் மனிதனே, மேலும் மனிதனுடைய மாம்சம் வெறும் ஓர் இணைக்கப்பட்ட பொருளே. (மனிதன் என்பவன் ஆவி மற்றும் சரீரம் இரண்டையும் கொண்ட ஒரு பொருள், அதே சமயம் மாம்சம் என்பது அழிந்து போகும் ஒரு பொருளாகும். அதாவது மாம்சமானது நிர்வாகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.) தேவனுடைய பரிபூரணம், நிறைவு மற்றும் மனிதர்களை ஆதாயப்படுத்துதல் ஆகியவை ஒன்றையும் செய்யாமல் அவர்கள் மாம்சத்தின் மேல் பட்டயங்கள், அடிகள், அதோடுகூட முடிவில்லாத துன்பங்கள், பெரும் அக்கினி, இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு, சிட்சை, சாபங்கள் மற்றும் எல்லையற்ற சோதனைகளைக் கொண்டுவரும் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனிதனை நிர்வகிக்கும் கிரியையின் உள்ளான கதை மற்றும் உண்மையும் இதுதான். இருப்பினும், இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் மாம்சத்தை நோக்கி இயக்கப்படுகின்றன, மேலும் பகைமையின் அம்புகள் அனைத்தும் இரக்கமின்றி மனிதனின் மாம்சத்தை நோக்கியே குறிவைக்கப்படுகின்றன (ஏனென்றால் மனிதன் குற்றமற்றவன்). இவை அனைத்தும் அவருடைய மகிமைக்காகவும், சாட்சிக்காகவும் மற்றும் அவருடைய நிர்வாகத்துக்காகவுமே. ஏனென்றால், அவருடைய கிரியை மனுக்குலத்திற்காக மட்டுமல்ல, மாறாக அது முழுமையான திட்டத்துக்காகவும், அதேபோல் அவர் மனுக்குலத்தைச் சிருஷ்டித்தபோது அவர் கொண்டிருந்த உண்மையான சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும் ஆகும். ஆகையால் மனிதன் அனுபவிக்கும் தொண்ணூறு சதவிகித காரியங்களும் துன்பங்களையும், அக்கினியான பாடுகளையும் சோதனைகளையும் கொண்டுள்ளன, மேலும் அது மனிதனுடைய மாம்சம் ஏக்கங்கொண்ட இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நாட்களைச் சொற்பமாக அல்லது ஒன்றும் கூட இல்லாத நாட்களையே கொண்டுள்ளன. மனிதன் தேவனுடன் அழகான தருணங்களை செலவழித்து, மாம்சத்தில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க கூடியதுது மிகக்குறைவான நாட்களே. மாம்சம் அசுத்தமானதால் மனிதனின் மாம்சம் பார்ப்பது அல்லது அனுபவிப்பது அறிவற்றது போலத் தோன்றுகிற, சாதகமற்றதாக மனிதனுக்குக் காணப்படுகிற, தேவனுடைய சிட்சையைத் தவிர வேறில்லை. ஏனென்றால் மனிதனால் விரும்பப்படாத, மனிதனுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளாத, எதிரிகளை வெறுக்கிற அவருடைய நீதியான மனநிலையை தேவன் வெளிப்படுத்துவார். தேவன் தம்முடைய முழு மனநிலையையும் தேவையான எந்த வகையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் மனுக்குலம் முழுவதற்குமான இரட்சிப்பு மற்றும் பழைய சாத்தானுடைய அழிவு ஆகிய கிரியையான சாத்தானுடனான ஆறாயிர ஆண்டுகால யுத்தத்தின் கிரியையை முடிக்கிறார்.

முந்தைய: உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

அடுத்த: மனுஷனின் சாராம்சமும் அடையாளமும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக