அத்தியாயம் 33

நேர்மையானவர்கள், மாய்மாலமோ அல்லது வஞ்சகமோ இல்லாதவர்கள் என் ராஜ்யத்திற்குத் தேவைப்படுகிறார்கள். உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் உலகில் பிரபலமில்லாதவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? நான் தான் நேர் எதிராக இருக்கிறேன். நேர்மையானவர்கள் என்னிடம் வருவது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது; இத்தகைய நபரில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனக்கும் கூட இத்தகைய நபர்தான் தேவைப்படுகிறார். இது துல்லியமாக என் நீதியாகும். சிலர் அறிவில்லாதவர்கள்; அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உணர முடியாது, மேலும் என் சித்தத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் தங்களது குடும்பம் மற்றும் தங்களது சுற்றுப்புறங்கள் இருக்கும் சூழலைத் தெளிவாகக் காண முடியாது, மேலும் அவர்கள் கண்மூடித்தனமாக விஷயங்களைச் செய்து, கிருபையை அடைவதற்கான பல வாய்ப்புகளை இழக்கிறார்கள். காலங்காலமாக, அவர்கள் தங்கள் செயல்களுக்காக வருந்துகிறார்கள், மற்றும் அவர்கள் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும்போது, மறுபடியும் அவர்களால் அதைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. சில சமயங்களில் அவர்கள் ஒரு வெற்றியைப் பெற தேவனைச் சார்ந்திருக்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள், ஆனால் அதே மாதிரியான விஷயத்தை அவர்கள் சந்திக்கும் போது, பழைய நோய் மீண்டும் வருகிறது, மேலும் அவர்களால் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் நான் இவற்றைப் பார்ப்பதில்லை, மேலும் உங்களது மீறுதல்களை நான் நினைவில் கொள்வதில்லை. மாறாக, இந்த ஒழுக்கக் கேடான தேசத்திலிருந்து உங்களை இரட்சித்து, உங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்க உங்களுக்கு உதவ விரும்புகிறேன். நான் மீண்டும் மீண்டும் உங்களை மன்னித்திருக்கிறேன். இருப்பினும், இப்போது மிக முக்கியமான படியாகும். உங்களால் இனி ஒருபோதும் குழப்பத்துடன் இருக்க முடியாது, மேலும் அப்படியே விட்டுவிட்டுச் செல்வதைப் போல, இனி முன்னோக்கிச் செல்லவும் முடியாது. நீங்கள் எப்போது இலக்கை அடையக் கூடியவர்களாவீர்கள்? நீங்கள் நிற்காமல் இறுதிக் கோட்டை நோக்கி ஓட உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். மிகவும் இக்கட்டான நேரத்தில் தளர்ந்துவிடாதீர்கள், தைரியமாக முன்னோக்கிச் செல்லுங்கள், உங்களுக்கு முன் ஒரு சிறப்பான விருந்து இருக்கிறது. உங்களது திருமண வஸ்திரங்களையும் நீதியின் அங்கிகளையும் விரைவாக அணிந்து கொண்டு, கிறிஸ்துவின் திருமண விருந்தில் கலந்து கொள்ளுங்கள்; குடும்ப மகிழ்ச்சியை நித்திய நித்தியமாக அனுபவியுங்கள்! இனி நீ முன்பு போல் மனச்சோர்வுடனும், சோகத்துடனும், பெருமூச்சுடனும் இருக்க மாட்டாய். அந்தக் காலத்திற்குரிய அனைத்தும் புகை போல மறைந்து போயிருக்கும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவன் மட்டுமே உனக்குள் வல்லமை பெற்றிருக்கும். உனக்குள், சுத்திகரித்தல் மற்றும் கழுவுதல் மூலமாக தூய்மையாக்கப்பட்ட ஒரு தேவாலயம் இருக்கும், மேலும் நீ பெற்றிருக்கிற உயிர்த்தெழுதலின் ஜீவனானது உன்னில் என்றென்றும் தங்கியிருக்கும்!

முந்தைய: அத்தியாயம் 32

அடுத்த: அத்தியாயம் 34

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான உபத்திரவங்களைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “உபத்திரவம்” என்னும் சொல்லைத்...

உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஓர்...

மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை

எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய...

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது,...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக