மனுஷனின் சாராம்சமும் அடையாளமும்

உண்மையில் இஸ்ரவேலர்கள் ஏமாற்றம் அடையவில்லை; கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக தேவனால் செய்யப்படும் கிரியையை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், ஏனெனில் நான் அவர்களைக் கைவிடவில்லை. மாறாக, அவர்களுடைய மூதாதையர்கள், பொல்லாங்கனால் அவர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியைப் புசித்ததால், அவர்கள் பாவத்துக்காக என்னைக் கைவிட்டார்கள். நன்மை எப்போதும் எனக்குச் சொந்தமாக இருந்து வருகிறது, அதே நேரத்தில் தீமை பொல்லாங்கனுக்குச் சொந்தமாக இருக்கிறது. அது பாவத்துக்காக என்னைப் பசப்பி ஏமாற்றுகிறது. நான் மனிதர்களைக் குற்றம் சொல்ல மாட்டேன், கொடுமையாக நிர்மூலம் ஆக்கவும் மாட்டேன், மற்றும் இரக்கமில்லாத சிட்சைக்கு உட்படுத்தவும் மாட்டேன், ஏனெனில் ஆதியில் தீமை மனிதனுக்கு உரியதாக இல்லை. ஆகையினால், மேசியாவும் யேகோவாவும் வரக் காத்திருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த இஸ்ரவேலர்கள் பகிரங்கமாக என்னை சிலுவையில் அறைந்த போதிலும், என்னுடைய வாக்குத்தத்தத்தை ஒருபோதும் மறக்கவில்லை: ஏனெனில் நான் அவர்களைக் கைவிடவில்லை. எப்படி இருந்தாலும், மனுக்குலத்துடன் நான் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையின் சான்றாக இரத்தத்தை எடுத்துள்ளேன்; இந்த உண்மை “இரத்த உடன்படிக்கையாகி” இளைஞர்கள் மற்றும் குற்றமற்றவர்களின் இருதயத்தில் ஒரு வணிகக் குறியைப் போலவும் வானத்தையும் பூமியையும் போன்று நித்தியமாக ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதாகவும் செதுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், என்னால் முன்குறிக்கப்பட்டு, தெரிந்தெடுக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு ஆதாயப்படுத்தப்பட்டு, பொல்லாங்கனை நேசித்ததை விட அதிகமாக என்னை நேசித்து, என்னுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து என்னைச் சந்திக்க உற்சாகத்துடன் காத்திருக்கும் துயரமான ஆத்துமாக்களை நான் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. இரத்தத்தினால் அவர்களுடன் நான் ஏற்படுத்திய உடன்படிக்கையை ஒருபோதும் அழிக்காததால், அவர்கள் எனக்காக ஆவலுடன் காத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளாகக் காணாமால் போயிருக்கும் இந்த ஆட்டுக்குட்டிகளை நான் திருப்பிக் கொண்டுவருவேன், ஏனெனில் நான் மனுக்குலத்தை எப்போதும் நேசித்திருக்கிறேன்; அவர்களில் இருக்கும் நன்மையுடன் தீமையின் கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. வெகு காலமாக என்னால் நேசிக்கப்படும், என்னை நேசிக்கும் அப்பாவி ஆத்துமாக்களை நான் ஆதாயம் செய்வேன், ஆனால் என்னை ஒருபோதும் நேசிக்காமல் எதிரிகளைப் போல நடந்துகொண்ட அந்தத் தீயவர்களை என்னுடைய வீட்டுக்கு என்னால் எப்படி கொண்டுவர முடியும்? மனுக்குலத்துடன் இரத்தத்தால் நான் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும், என்னை வெறுக்கும், எதிர்க்கும், தடுக்கும், தாக்கும், சபிக்கும் அந்தப் பிசாசின் சந்ததியினரை, விரியன்களை என்னுடைய ராஜ்யத்துக்குள் நான் கொண்டுவர மாட்டேன். என்னுடைய கிரியையின் நோக்கத்தையும், யாருக்காக அதை நான் செய்கிறேன் என்பதையும் நீ சரியாக அறிந்துகொள்ள வேண்டும். உன்னுடைய அன்பில் அடங்கியிருப்பது நன்மையா தீமையா? என்னைப் பற்றிய உன் அறிவு தாவீதையும் மோசேயையும் போன்றிருக்கிறதா, இல்லையா? எனக்கு நீ செய்யும் ஊழியம் ஆபிரகாமைப் போன்றதாக இருக்கிறதா இல்லையா? உண்மையில் நீ என்னால் பரிபூரணப்படுத்தப்பட்டிருக்கிறாய். ஆனால் நீ யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துவாய், அத்தோடு யாருடைய முடிவை நீ பகிர்வாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். உன் வாழ்க்கை முழுவதும் என்னுடைய கிரியையின் உன் அனுபவத்தில் நீ ஒரு மகிழ்ச்சிகரமான, ஏராளமான அறுவடையை அறுத்திருக்கிறாயா? அது ஏராளமாகவும் பலனளிப்பதாகவும் இருக்கிறதா? உனக்குள் நீயே சிந்திக்க வேண்டும்: எனக்காக நீ பல ஆண்டுகள் உழைத்திருக்கிறாய், ஆனால் எப்போதாவது நீ எதையாவது பெற்றிருகிறாயா? நீ ஏதேனும் மறுரூபம் அடைந்திருக்கிறாயா அல்லது எதையாவது பெற்றிருக்கிறாயா? உன் கடினமான அனுபவங்களுக்கு ஈடாக சிலுவையில் அறையப்பட்ட பேதுருவைப் போல ஆகியிருக்கிறாயா, அல்லது கீழே வீழ்த்தப்பட்டு ஒரு பேரொளியைப் பெற்ற பவுலைப் போல ஆகியிருக்கிறாயா? இந்த விஷயங்களைப் பற்றி கொஞ்சம் உணர்வுள்ளவனாக நீ இருக்க வேண்டும். ஒரு கடுகு விதையை விட மிகச்சிறியதும் மண் துகளைப் போல் சிறியதுமான உன் வாழ்க்கையைப் பற்றி நான் தொடர்ந்து பேசுவதில்லை அல்லது சிந்திப்பதுமில்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் நிர்வகிப்பது மனுக்குலத்தைத்தான். இருப்பினும், ஒரு காலத்தில் என்னால் வெறுக்கப்பட்டு பின்னர் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட மனுஷனின் ஜீவிதத்தை நான் என் நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதுவதில்லை. உங்களுடைய முந்தைய அடையாளத்தின் உண்மையான சுபாவத்தை மட்டுமல்லாமல் நீங்கள் அடிமைகளாக யாருக்குச் சொந்தமாய் இருந்தீர்கள் என்பதையும் பற்றிய ஒரு தெளிவான எண்ணம் உனக்கு இருக்க வேண்டும். இப்படி, சாத்தானுடையது போலவே இருக்கும் மனித முகங்களை, ஜனங்களை நிர்வகிக்க நான் மூலப் பொருட்களாக பயன்படுத்துவதில்லை, ஏனெனில் மனுஷர்கள் ஒருபோதும் விலையுயர்ந்த பொருட்கள் அல்ல. ஆரம்பத்தில் உங்களைப் பற்றிய என் சிந்தையையும் அப்போது நான் உங்களை அழைத்ததையும் நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்கவேண்டும்—நடைமுறை முக்கியத்துவம் இல்லாத ஒரு பெயர் அல்ல அது. நீங்கள் அணியும் அடையாளங்களுக்கு அதனுடைய காரணங்கள் இல்லாமல் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தேவனுக்கு உரியவர்கள் இல்லை என்பதையும் முன்னரே சாத்தானால் பிடிக்கப்பட்டு அதன் வீட்டில் உண்மையுள்ள ஊழியர்களாக ஊழியம் செய்தீர்கள் என்பதையும் நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்; அதற்கும்மேலாக, வெகு காலத்திற்கு முன்னரே நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள், ஏனெனில் வெகு காலமாக நீங்கள் என் வீட்டுக்கு வெளியே பொல்லாங்கனின் கைகளில் இருந்தீர்கள். வெகு காலத்திற்கு முன்னரே என்னால் முன்குறிக்கப்பட்டு என்னால் மீட்கப்பட்டவர்களே என்னால் இரட்சிக்கப்படும் மனுஷர்கள். அதே சமயம், அந்த விதிக்கு விதிவிலக்காக மனுக்குலத்திற்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கிற அப்பாவி ஆத்துமாக்களே நீங்கள். நீங்கள் தாவீது அல்லது யாக்கோபின் வீட்டைச் சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் புறஜாதியர்களில் ஒரு கோத்திரமான மோவாபின் உறுப்பினர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நான் உங்களோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தவில்லை, ஆனால் கிரியை மட்டுமே செய்தேன், உங்கள் மத்தியில் பேசினேன், உங்களை வழிநடத்தினேன். உங்களுக்காக என் இரத்தம் சிந்தப்படவில்லை, என்னுடைய சாட்சியின் நிமித்தம் வெறுமனே உங்கள் மத்தியில் என் கிரியை மட்டுமே நடத்தி வந்தேன். இது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்த இயேசுவுக்கு ஒத்ததாக உண்மையிலேயே என் கிரியை இருக்கிறதா? உங்களுக்காகப் பெரும் அவமானங்களைச் சகித்துக்கொண்ட எனக்கு முதலில் அது மதிப்புள்ளது அல்ல. முற்றிலும் பாவமற்ற தேவன் மனித வாழ்க்கைக்குத் தகுதியற்ற ஒரு பன்றிகள் மற்றும் நாய்களின் உலகமான மிகவும் வெறுப்பளிக்கும் அருவருப்பான ஒரு இடத்துக்கு நேரடியாக வந்ததோடு மட்டுமல்லாமல், என் பிதாவின் மகிமைக்காகவும் நித்திய சாட்சிக்காகவும் இந்த எல்லாக் கொடூரமான அவமானங்களையும் நான் சகித்துக்கொண்டேன். உங்கள் நடத்தை என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் நீங்கள் “பணக்கார, அதிகாரம் வாய்ந்த குடும்பங்களில்” பிறந்த குழந்தைகள் இல்லை, ஆனால் வெறும் கைவிடப்பட்ட சாத்தானின் சந்ததிகள் என்பதைப் பாருங்கள். நீங்கள் மனுக்குலத்தின் கோத்திரத் தலைவர்கள் அல்ல, அதுமட்டுமல்லாமல் மனித உரிமைகளும் சுதந்திரமும் இல்லாதவர்கள். உண்மையிலே உங்களுக்கு மனுக்குலத்திற்கான எந்த ஓர் ஆசீர்வாதத்திலோ அல்லது பரலோக ராஜ்யத்திலோ எந்த ஒரு பங்கும் இல்லை. இது ஏனெனில் நீங்கள் மனுக்குலத்தின் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறீர்கள், மேலும் நான் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்ததே இல்லை. ஆகையால், இது என்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னர் இருந்தாலும் இன்று உங்களைப் பரிபூரணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு முன்னெப்போதும் செய்யப்பட்டிராத பணி, ஏனெனில் உங்கள் நிலை மிகவும் கீழானதாக இருக்கிறது மற்றும் உண்மையிலேயே உங்களுக்கு மனுக்குலத்தில் ஒரு பங்கும் இல்லாமல் இருந்தாது. இது மனுஷனுக்கு நிச்சயமாக ஓர் ஆசீர்வாதம் அல்லவா?

வெகு காலத்திற்கு முன் நான் சுத்திகரிப்பு ஸ்தலத்தில் இருந்து விடுவித்த ஆத்துமாக்களை மட்டுமல்லாமல் வெகுகாலத்துக்கு முன் நான் வந்தபோது என்னால் தெரிந்துகொள்ளப்பட்டுத் தங்கள் மத்தியில் நான் மறுபடியும் தோன்றுவதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஆத்துமாக்களையும் நான் இரட்சிக்கிறேன். அவர்கள் என்னை நேசித்தார்கள் மற்றும் நான் அவர்களைச் சிநேகித்ததால், நான் இரத்தத்தால் ஏற்படுத்திய என் உடன்படிக்கையை தங்கள் இருதயங்களில் பதித்துக்கொண்டார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக என்னைத் தேடிக்கொண்டிருக்கும் காணாமல் போன ஆட்டுக்குட்டியைப் போன்றவர்கள், மற்றும் அவர்கள் நல்லவர்கள்; அதனால் நான் அவர்களை நல்ல இஸ்ரவேலர்கள் என்றும் அன்பான சிறு தேவதூதர்கள் என்றும் அழைக்கிறேன். நான் அவர்கள் மத்தியில் இருந்திருந்தால் இத்தகைய அவமானத்தை அடைந்திருக்க மாட்டேன். தங்கள் சொந்த ஜீவனை நேசிப்பதை விட அவர்கள் என்னை அதிகமாக நேசிப்பதால், நான் அவர்களை எல்லாவற்றின் மத்தியிலும் மிகவும் அழகானவர்களாக நேசிக்கிறேன். இது ஏனென்றால் அவர்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்களும் எனக்குச் சொந்தமானவர்களும் ஆவார்கள்; அவர்கள் என்னை ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களின் அன்பு உங்கள் அன்பை விஞ்சுகிறது, நீங்கள் உங்கள் சொந்த ஜீவனை நேசிப்பதை விட அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். வானத்துக்கு அழகிய சிறு புறாக்கள் கீழ்ப்படிவது போல அவர்கள் எனக்குக் கீழ்ப்படிகிறார்கள், உங்கள் இருதயங்களில் இருப்பதை விட அதிகமான கீழ்ப்படிதல் அவர்களின் இருதயங்களில் இருக்கிறது. மேலும் அவர்கள் யாக்கோபின் சந்ததியார்களாக, ஆதாமின் வம்சமாக, இருப்பதோடு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நடுவில் இருப்பதால், நீண்டகாலமாக நான் அவர்களை நேசித்திருக்கிறேன்—மற்றும் உங்களை நேசிப்பதை விட இன்னும் அதிகமாக அவர்களை நேசித்தேன்; இது ஏனெனில் நீங்கள் மிகவும் கலகக்காரர்களாக இருப்பதாலும், உங்களிடம் கடுமையான எதிர்ப்பு இருப்பதாலும், நீங்கள் என்னை மிகவும் தாழ்வாகப் பார்ப்பதாலும், நீங்கள் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் உணர்வற்றவர்களாக இருப்பதாலும், நீங்கள் என்னை மிகவும் குறைவாக நேசிப்பதாலும் மற்றும் நீங்கள் என்னை அதிகமாக வெறுப்பதாலும் ஆகும். நீங்கள் என் கிரியையை அலட்சியப்படுத்தி என் செய்கைகளை அதிகமாக வெறுக்கிறீர்கள். அவர்களைப் போல் அல்லாமல் நீங்கள் என் செய்கைகளைப் போற்றியது இல்லை. அதற்குப் பதில் நீங்கள் அவற்றை வெறுக்கிறீர்கள், சாத்தானைப் போலவே கவலையால் உங்கள் கண்கள் சிவப்பாக இருக்கின்றன. உங்கள் கீழ்ப்படிதல் எங்கே? உங்கள் ஒழுக்கம் எங்கே? உங்கள் அன்பு எங்கே? உங்களுக்குள் இருக்கும் அன்பின் மூலப்பொருட்களை நீங்கள் எப்போது வெளிக்காட்டியிருக்கிறீர்கள்? எப்போது நீங்கள் என் கிரியையை தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து, எனக்காகத் தீவிரமாகக் காத்திருப்பதால் பெரிதும் துன்பப்படும் அழகான தேவதூதர்களின் மேல் பரிதாபம் கொள்கிறேன், ஏனெனில் நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். இருந்தாலும், இன்று நான் மனிதர்களோடு சம்பந்தமற்ற ஒரு மனிதத்தன்மையற்ற உலகைப் பார்க்கிறேன். வெகு காலத்திற்கு முன்னரே உங்கள் மனசாட்சி உணர்வற்று உணர்ச்சியை இழந்துவிட்டதைப்பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? அந்த அழகான தேவதூதர்களோடு என் மறு ஐக்கியத்தைத் தடுக்கும் அழுக்கு நீங்கள்தான் என்று சிந்திக்கவில்லையா? நான் திரும்பி வருவதை எப்போது அவர்கள் எதிர்பார்க்காமல் இருந்திருக்கிறார்கள்? என்னோடு மறு ஐக்கியம் கொள்வதற்காக எப்போது அவர்கள் காத்திருக்கவில்லை? என்னோடு ஒன்றாக அழகான நாட்களைக் கழித்து என்னோடு உணவருந்த எப்போது எதிர்பார்க்காமல் இருந்தார்கள்? நீங்கள் இன்று செய்துகொண்டு இருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா: உலகம் முழுவதும் வெறியாட்டம் போடுகிறீர்கள்; ஒருவருக்கு எதிராக ஒருவர் சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்; ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறீர்கள்; நம்பிக்கைத் துரோகமாக, இரகசியமாக, வெட்கக்கேடாக நடந்துகொள்கிறீர்கள்; சத்தியத்தை அறியாமல் இருக்கிறீர்கள்; நேர்மையற்றும் வஞ்சகத்தோடும் செயல்படுகிறீர்கள்; முகத்துதியில் ஈடுபடுகிறீர்கள்; மற்றவர்களைவிட நீங்கள் நியாயமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக உங்களை நீங்களே கருதிக்கொள்ளுகிறீர்கள்; மூர்க்கத்தனமாக இருக்கிறீர்கள்; மலையின் மிருகங்களைப் போல காட்டுமிராண்டித்தனமாகவும் விலங்குகளின் ராஜாவைப் போல கொடூரமாகவும் செயல்படுகிறீர்கள்—இந்த நடத்தைகள் மனித இனத்துக்குப் பொருத்தமானவைகளா? நீங்கள் முரட்டுத்தனமாகவும் அநியாயக்காரர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் என் வார்த்தைகளை மதித்தது இல்லை, ஆனால் அதற்குப் பதிலாக அவற்றைப் பொறுத்தவரையில் ஓர் இழிவான போக்கைக் கடைபிடிக்கிறீர்கள். இதில் இருந்து சாதனைகளும் ஓர் உண்மையான மனித வாழ்க்கையும், அழகிய நம்பிக்கைகளும் எப்படி உருவாகும்? உனது அதீதக் கற்பனை புலியின் வாயில் இருந்து உன்னைக் காப்பாற்றுமா? எரியும் பிழம்புகளில் இருந்து அது உண்மையாக உன்னைக் காப்பாற்றுமா? என்னுடைய கிரியையை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக நீ கருதி இருந்தால் இந்த நிலையில் விழுந்துகிடப்பாயா? உன்னுடைய விதியை உண்மையிலேயே மாற்ற முடியாதா? இத்தகைய வருத்தங்களுடன்தான் நீ சாக விரும்புகிறாயா?

முந்தைய: மனுக்குலத்தை நிர்வகிப்பதன் நோக்கம்

அடுத்த: மனிதனின் உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவனது மதிப்பு: அவை உண்மையில் என்ன மாதிரியானவை?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக