பாதை … (1)
தங்கள் வாழ்நாளில், தாங்கள் எத்தகைய பின்னடைவுகளைச் சந்திக்கப் போகிறோம், அல்லது எந்த வகையான சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. சிலருக்கு அது அவர்களின் வேலையில் உள்ளது, சிலருக்கு அது அவர்களின் எதிர்கால வாய்ப்புகளில் உள்ளது, சிலருக்கு அவர்கள் பிறந்த குடும்பத்தில் உள்ளது, இன்னும் சிலருக்கு அது அவர்களின் திருமணத்தில் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இன்று, இந்த ஜனக் கூட்டமாகிய நாம், தேவனுடைய வார்த்தையின் மத்தியில் துன்பப்படுகிறோம். அதாவது, தேவனுக்கு ஊழியம் செய்யும் ஜனங்களாக, அவரை விசுவாசிக்கும் பாதையில் நாம் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம், இதுவே எல்லா விசுவாசிகளும் செல்கிற பாதையும் நம் அனைவருடைய பாதங்களுக்கும் கீழேயுள்ள சாலையுமாக இருக்கிறது. இந்த இடத்திலிருந்தே நாம் அதிகாரப்பூர்வமாக தேவனை விசுவாசிப்பதற்கான நம்முடைய பயிற்சியைத் தொடங்குகிறோம், அதிகாரப்பூர்வமாக மனுஷ வாழ்க்கையிலுள்ள திரைச்சீலையை உயர்த்தி, சரியான வாழ்க்கைப் பாதையில் கால் வைக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அப்பொழுதுதான் சாதாரண மனுஷர்கள் செல்லும் பாதையான, மனுஷனுடன் சேர்ந்து வாழும் தேவனுடைய சரியான பாதையில் நாம் கால் பதிக்கிறோம். தேவனுக்கு முன்பாக நின்று அவருக்கு ஊழியம் செய்யும் ஒருவரைப்போல—தேவாலயத்தில் ஆசாரியரின் அங்கியை அணிந்து, தேவனுடைய மேன்மை, அதிகாரம் மற்றும் மாட்சிமையை உடைமையாக்கிக் கொண்டிருக்கிற ஒருவரைப் போல—நான் குறிப்பாக எல்லா ஜனங்களுக்கும் பின்வரும் பிரகடனத்தைச் செய்கிறேன்: தேவனுடைய மகிமையான முகம் என் மகிமை, அவருடைய நிர்வாகத் திட்டமே எனக்கு முக்கியமானது. வரவிருக்கும் உலகத்தில் நான் நூறு மடங்கு ஆதாயப்படுத்திக்கொள்ள நாடவில்லை, ஆனால் இந்த உலகத்தில் தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய வேண்டும், அதனால் நான் மாம்சத்தில் மேற்கொண்ட அற்ப முயற்சிகளின் நிமித்தமாக, அவரால் பூமியில் அவருடைய மகிமையின் ஒரு சிறிய பகுதியை அனுபவிக்க முடியும். இது மட்டுமே எனது வாஞ்சையாக இருக்கிறது. என் கருத்துப்படி, இது மட்டுமே எனது ஆவிக்குரிய ஆகாரமாக இருக்கிறது. மாம்சத்தில் வாழும் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒருவரின் “இறுதி வார்த்தைகள்” இவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இன்று என் பாதத்திற்கு கீழ் உள்ள பாதை இதுவே ஆகும். என்னுடைய இந்தக் கண்ணோட்டமானது மாம்சத்தில் எனது இறுதி வார்த்தைகளாக இருக்கின்றன என்று நான் நம்புகிறேன், மேலும் ஜனங்கள் என்னைப் பற்றிய கருத்துகளோ அல்லது வேறு எண்ணங்களோ கொண்டிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்திருந்தாலும், பரலோகத்தில் இருக்கிற தேவனுடைய சித்தத்தை நான் இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறேன். நான் அளவிட முடியாத வருத்தத்தில் இருக்கிறேன். ஏன் இது மாம்சத்தின் சாராம்சமாக இருக்கிறது? இவ்வாறு, கடந்த காலத்தில் நான் செய்த காரியங்களால் மற்றும் தேவன் என்னில் நிறைவேற்றிய ஜெயங்கொள்ளுதலின் கிரியையின் விளைவாகவும் மட்டுமே, மனிதகுலத்தின் சாராம்சத்தைப் பற்றி ஆழமான புரிதலை அடைந்தேன். அதன்பிறகுதான் நான்: தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய நாடுவதற்கும், அதற்காக என்னை முழுவதும் கொடுப்பதற்கும், என் மனசாட்சியை பாரமாக்குகிற எதையும் பெற்றிராமல் இருப்பதற்கும் எனக்கான மிக அடிப்படையான தரத்தை அமைத்தேன். தேவனுக்கு ஊழியம் செய்யும் மற்றவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதில் நான் கவனம் செலுத்துவதில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அவருடைய சித்தத்தைச் செய்வதிலேயே நான் என் இருதயத்தை அமைத்துள்ளேன். தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்யும் அவருடைய சிருஷ்டிகளில் ஒருவராக—தேவனால் இரட்சிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டுமிருக்கிற, அவருடைய அடியை சகித்தும் இருக்கிறவராகிய என்னுடைய அறிக்கை இதுவேயாகும். தேவனால் கண்காணிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு, பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒருவரின் அறிக்கையும் இதுவேயாகும். இது முதற்கொண்டு, தேவனால் எனக்கு ஒப்புவிக்கப்பட்ட முக்கியமான பணியை முடிக்கும் வரை நான் இந்தப் பாதையில் செல்வேன். ஆனால் என் கருத்துப்படி, சாலையின் முடிவு நெருங்கிவிட்டது, ஏனென்றால் அவருடைய கிரியை நிறைவேறிவிட்டது, இன்றைய நிலவரப்படி, ஜனங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டார்கள்.
சீனாவின் பிரதான நிலப்பகுதியில் இந்த மீட்பின் தொடர் ஓட்டத்திற்குள் நுழைவது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மையமாகக் கொண்ட உள்ளூர் திருச்சபைகளுக்கு படிப்படியாக எழுப்புதலைக் கொடுத்தது. இந்த உள்ளூர் திருச்சபைகளில் தேவன் இடைவிடாமல் கிரியை செய்திருக்கிறார், ஏனென்றால் இந்த நேரத்தில் பிறந்த திருச்சபைகள் வீழ்ச்சியடைந்த ஏகாதிபத்திய குடும்பத்தில் தேவனுடைய மையமாக மாறிவிட்டன. தேவன் அத்தகைய குடும்பத்தில் உள்ளூர் திருச்சபைகளை நிறுவுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது—அது அவருக்கு சொல்வதற்கு அரிய ஒரு சந்தோஷமாக இருக்கிறது. சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ளூர் திருச்சபைகளை நிறுவி, உலகெங்கிலும் உள்ள மற்ற உள்ளூர் திருச்சபைகளில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு இந்த நற்செய்தியைப் பரப்பிய பிறகு, தேவன் மிகவும் உற்சாகமாக இருந்தார்—இது சீனாவின் பிரதான நிலப்பகுதியில் அவர் செய்ய நினைத்திருந்த கிரியையின் முதல் படியாகும். இதுவே முதல் செயலாக இருந்தது என்றும் கூறலாம். மேலும் இது போன்ற—எந்த மனுஷனாலோ அல்லது பொருளாலோ அணுக முடியாத ஒரு கோட்டையாகிய பிசாசுகளின் கோட்டையில், அவரது கிரியையின் முதல் படியைத் தொடங்கும் அவரது திறனானது—தேவனுடைய மிகப் பெரிய வல்லமை அல்லவா? இந்தக் கிரியையை மீட்டெடுப்பதற்காக, எண்ணற்ற சகோதர சகோதரிகள் பிசாசுகளின் கசாப்புக் கத்தியின் கீழ் மரித்து, இரத்த சாட்சிகளாகியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதை இப்போது கொண்டு வருவது எனக்கு வேதனையாகவும் கோபமாகவும் இருக்கிறது, ஆனால் பெரும்பாலும், துன்பத்தின் நாட்கள் கடந்துவிட்டன. இன்று என்னால் தேவனுக்காகக் கிரியை செய்ய முடிவது, இன்று நான் இருக்கும் நிலையை அடைய முடிந்திருப்பது எல்லாமே தேவனுடைய மகா வல்லமையினாலேயாகும். இரத்தசாட்சிக்காக தேவன் தேர்ந்தெடுத்தவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்; அவர்களால் தேவனுடைய சித்தத்தை செய்ய முடிந்தது மற்றும் தேவனுக்காகத் தங்களை பலியாக அர்ப்பணிக்க முடிந்தது. உண்மையைச் சொல்வதென்றால், தேவனுடைய கிருபையும் இரக்கமும் இல்லையென்றால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே சேற்றில் விழுந்திருப்பேன். தேவனுக்கு நன்றி! நான் தேவனுக்கு எல்லா மகிமையையும் கொடுக்க விரும்புகிறேன், அதன்மூலம் அவரால் இளைப்பாறுதலில் இருக்க முடியும். சிலர் என்னிடம் கேட்கிறார்கள்: “உமது நிலையின் நிமித்தமாக, நீர் மரிக்கக்கூடாது. தேவன் மரணத்தைக் குறிப்பிடும் போது நீர் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்?” நேரடியாக பதிலளிப்பதற்குப் பதிலாக, நான் ஒரு சிறிய புன்னகையை உதிர்த்து, “நான் பின்தொடர வேண்டிய, மற்றும் நான் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய பாதை இதுதான்” என்று கூறுகிறேன். எனது பதிலால் ஜனங்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பற்றிய கொஞ்சம் சந்தேகத்தால், என்னை ஆச்சரியத்தோடு மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும், இது நான் தேர்ந்தெடுத்த பாதை என்பதாலும், தேவனுக்கு முன்பாக நான் செய்துகொண்ட தீர்மானம் என்பதாலும், சிரமங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நான் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இது தேவனுக்கு ஊழியம் செய்பவர்களால் உறுதி செய்யப்பட வேண்டிய வாக்குறுதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்—மேலும் அவர்கள் தங்கள் வார்த்தையில் சிறிதளவுகூடப் பின்வாங்கக் கூடாது. இது நீண்ட காலத்திற்கு முன்பே, நியாயப்பிரமாணத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட, தேவனை விசுவாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய விதியும் ஒழுங்குமுறையுமாக இருக்கிறது. என் அனுபவத்தில், தேவனைப் பற்றிய எனது அறிவு பெரிதாக இல்லாமல், நான் உண்மையில் அனுபவித்திருப்பது மிகவும் அற்பமானதும், குறிப்பிடுவதற்குக் கூடத் தகுதியற்றதுமாய் இருந்தாலும்—அதாவது என்னிடம் பேசுவதற்கு புத்திசாலித்தனமான நுண்ணறிவு இல்லையென்றாலும்—தேவனுடைய வார்த்தைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் மீறப்படக்கூடாது. நேர்மையாகச் சொல்லப்போனால், எனது சொந்த நடைமுறை அனுபவங்கள் அற்பமானவைகளாக இருக்கின்றன, ஆனாலும் தேவன் எனக்குச் சாட்சி பகர்வதாலும், நான் இருக்கிற ஆள்தத்துவத்தின் மீது ஜனங்கள் எப்போதும் குருட்டு நம்பிக்கை வைத்திருப்பதாலும், நான் என்ன செய்ய முடியும்? ஆயினும் ஜனங்கள் தேவனை நேசிப்பது குறித்த தங்கள் கருத்துக்களைச் சரிசெய்வார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். நான் இருக்கும் ஆள்தத்துவமானது ஒரு பொருட்டாக எண்ணப்படவில்லை; ஏனென்றால், நானும் தேவன் மீதான விசுவாசப் பாதையைப் பின்பற்றுகிறேன், நான் நடக்கும் பாதையும் தேவனை விசுவாசிக்கும் பாதையைத் தவிர வேறில்லை. ஓர் ஆள்தத்துவம் நன்றாக இருக்கலாம், ஆனால் வழிபாட்டிற்குரிய ஒரு பொருளாக இருக்கக்கூடாது—அவைகள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக மட்டுமே செயல்பட முடியும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை, ஆனால் நான் தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன் என்று ஜனங்களுக்கு அறிவிக்கிறேன்; ஆவியானவருடைய மகிமையை நான் மாம்சத்திற்குக் கொடுப்பதில்லை. இது குறித்த எனது உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனது பொறுப்பைத் தவிர்ப்பது நான் அல்ல, இது முழு சம்பவமாக மட்டுமே இருக்கிறது. இது தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும், எனவே இது மீண்டும் பேசப்படாது.
இன்று, நான் தேவனுக்கு முன்பாகப் பிரகாசிக்கப்பட்டிருக்கிறேன். இரட்சிப்பின் கிரியையானது பூமியின் மீதான தேவனுடைய கிரியையாக இருக்கிறது. அது வேறு எதினாலும் கறைபடாதது. சிலர் வேறுவிதமாக நினைக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு கட்ட கிரியையை—அதாவது இரட்சிப்பின் கிரியை மட்டுமே செய்கிறார்—மற்றும் வேறு எந்தக் கிரியையும் செய்வதில்லை என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இது தெளிவாக இருக்க வேண்டும். இப்போதுதான் சீனாவின் பிரதான நிலத்தில் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை தெளிவாகியுள்ளது. மேலும் ஏன் தேவன் எல்லா பாதைகளையும் திறந்து வைத்து பிசாசுகள் தலைவிரித்தாடும் இதுபோன்ற ஓர் இடத்தில் கிரியை செய்ய விரும்ப வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார் என்பதை இது காட்டுகிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், இது முக்கியமாக ஜெயங்கொள்ளுதலின் கிரியை ஆகும். ஆரம்பத்தில் இருந்தே இயேசுவின் நாமம் அழைக்கப்படுகிறது. (சிலர் இதை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் இது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஒரு படியாக இருந்தது என்று நான் சொல்கிறேன்.) இது கிருபையின் காலத்து இயேசுவை விட்டு விலகுவதற்காக இருந்தது, எனவே ஜனங்களில் ஒரு பகுதியினர் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் அந்தத் தேர்ந்தெடுத்தல் குறைக்கப்பட்டது. அதன்பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் விட்னஸ் லீயின் பெயர் அழைக்கப்பட்டது, இது சீனாவின் பிரதான நிலத்தில் மீட்பின் கிரியைக்கான பரிசுத்த ஆவியானவருடைய இரண்டாவது பகுதியாக இருந்தது. இது ஜனங்களை முதலில் ஒன்று திரட்டி அவர்களை மேய்க்கும் மேய்ப்பருக்காகக் காத்திருக்க பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிய கிரியையின் முதல் கட்டமாக இருந்தது; அந்த ஊழியத்தைச் செய்ய “விட்னஸ் லீ” என்பவரின் பெயர் பயன்படுத்தப்பட்டது. தேவன் தனிப்பட்ட முறையில் “வல்லமையுள்ளவர்” என்ற நாமத்தின் சாட்சியின் மீது தமது கிரியையைச் செய்தார், அதற்கு முன், அது ஓர் ஆயத்த நிலையில் இருந்தது. எனவே அது சரியா தவறா என்பது முக்கியமல்ல, தேவனுடைய திட்டத்திற்குள் இது முக்கிய பிரச்சினையும் அல்ல. “வல்லமையுள்ளவர்” என்ற நாமத்திற்கு சாட்சி பகர்ந்த பின்பு, தேவன் அதிகாரப்பூர்வமாக தமது சொந்தக் கிரியையைச் செய்யத் தொடங்கினார், அதன் பிறகு, மாம்சத்தில் இருக்கிற தேவனாக அவரது கிரியைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. “வல்லமையுள்ள கர்த்தர்” என்ற நாமத்தின் மூலம், அவர் கலகக்காரர்களாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் இருந்த அனைவரையும் கட்டுப்படுத்தினார். ஜனங்கள் இருபத்தி மூன்று அல்லது இருபத்து நான்கு வயதாகும்போது தாங்கள் பெரியவர்களைப் போல் தோன்றத் தொடங்குவதைப் போலவே, அவர்கள் மனுஷர்களின் சாயலாக மாறத் தொடங்கினர்; அதாவது, ஜனங்கள் ஒரு சாதாரண மனுஷனின் வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தார்கள். ஊழியம் செய்பவர்களுடைய உபத்திரவத்தின் மூலம், தேவனுடைய கிரியை இயற்கையாகவே தெய்வீகக் கிரியையைச் செய்யும் நிலைக்கு மாறியது. கிரியையின் இந்தக் கட்டம் மட்டுமே அவருடைய பெரும்பாலான கிரியைகளின் மையத்தை உருவாக்குகிறது என்றும் அது அவருடைய கிரியையின் முதன்மைக் கட்டம் என்றும் கூறலாம். ஜனங்கள் தங்களை அறிந்து, தங்களையே வெறுக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே சபித்துக் கொள்ளக்கூடிய, தங்கள் ஜீவனை விட்டுவிடுவதில் மகிழ்ச்சியடைகிற, மேலும் தேவனுடைய அழகின் தெளிவற்ற உணர்வைக் கொண்டிருக்கும் நிலையை அடைந்துள்ளனர், அதன் அடிப்படையில் அவர்கள் மனுஷனுடைய இருப்பின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்கிறார்கள்—இவ்வாறு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தேவனுடைய கிரியை முடிவுக்கு வருகிறது. தேவன் பல ஆண்டுகளாக இந்த அசுத்த தேசத்தில் தமது ஆயத்தங்களைச் செய்து வருகிறார், ஆனால் ஜனங்கள் இப்போது அடைந்திருக்கிற நிலையை இதற்கு முன்பு அடைந்திருந்ததில்லை, அதாவது தேவன் இன்றுதான் தமது கிரியையை முறையாகத் தொடங்குகிறார். இதை இன்னும் அதிகமான விவரத்துடனோ அல்லது தெளிவுடனோ வழங்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கிரியை நேரடியாக தேவனுடைய தெய்வீகத்தின் மூலம் செய்யப்படுகிறது, ஆனாலும் அது மனுஷனின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று சொல்வது முற்றிலும் சரியானதாகும். இதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக, பூமியில் தேவனுடைய மாபெரும் வல்லமையின் காரணமாகவே, அவருடைய கிரியையால் இந்த காமவிகாரத்தால் நிறைந்த தேசத்தின் ஜனங்களில் தற்போது இருக்கும் அளவிற்கு அடைய முடிந்திருக்கிறது. ஜனங்களை நம்ப வைக்க இந்தக் கிரியையின் பலனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இது குறித்து எளிதில் நியாயத்தீர்ப்புச் செய்யவும், மறுக்கவும் யாரும் துணிய மாட்டார்கள்.