இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் செல்கின்றது
தேவனுடைய விசுவாசியின் பாதையில் ஒரு மிகச் சிறிய பகுதியளவு மட்டுமே நீங்கள் நடந்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் சரியான வழியில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. ஆகவே தேவனுடைய தரத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து நீங்கள் வெகுதொலைவில் உள்ளீர்கள். இப்போது உங்களுடைய வளர்ச்சி தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்குப் போதுமானதாக இல்லை. உங்களுடைய திறமையினாலும் சீர்கெட்ட சுபாவத்தினாலும் தேவனின் கிரியையை நீங்கள் எப்போதும் கவனக்குறைவாகவே நடத்துகிறீர்கள். அதைச் சிரத்தையுடன் நடத்துவதில்லை. இது உங்களுடைய மிக மோசமான குறைபாடு ஆகும். பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையை உறுதியாக அறிய ஒருவராலும் இயலாது; உங்களில் அநேகம் பேருக்கு அது புரிவதில்லை; அதனைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. மேலும், உங்களில் பலர் இந்தக் காரியத்திற்கு மனதளவில் கவனம் செலுத்துவதில்லை; அதிலும் இருதயத்திற்குக் கொண்டுச் செல்வதே இல்லை. இவ்வாறாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியை குறித்து அறியாமையில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றால், தேவனின் விசுவாசியாக நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை பயனற்றதாகிவிடும். ஏனெனில் தேவனின் சித்தத்தை நிறைவேற்ற உங்கள் வல்லமையில் அனைத்தையும் நீங்கள் செய்வது இல்லை, ஏனெனில் நீங்கள் தேவனுக்கு நல்ல ஒத்துழைப்பை நல்குவதில்லை. தேவன் உன் மேல் கிரியை செய்யவில்லை என்பதோ; அல்லது பரிசுத்த ஆவியானவர் உன்னை ஏவவில்லை என்பதோ அல்ல. நீங்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கின்றீர்கள் என்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நீங்கள் உடனடியாக இந்த நிலைமையை மாற்றி பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை வழநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இதுவே இன்றைய நாளின் முக்கிய தலைப்பாகும். “பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதை” என்பது ஆவியில் தெளிவு பெறுவதை; தேவனின் வார்த்தையைப் பற்றிய அறிவைப் பெறுவதை; எதிர்வரும் பாதை பற்றிய தெளிவைப் பெறுவதை; சத்தியத்திற்குள் படிப்படியாக பிரவேசிக்கும் திறனைப் பெறுவதை; தேவனைப் பற்றிய மாபெரும் அறிவை அடைவதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்ற பாதையானது முக்கியமாக மாற்றுக் கருத்துக்களும் தவறான கண்ணோட்டங்களும் இல்லாமல் தேவனின் வார்த்தையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஒரு பாதையாக இருக்கிறது, இந்தப் பாதையில் நடக்கின்றவர்கள் அதில் நேராக நடக்கின்றார்கள். இதை நீங்கள் அடைய வேண்டுமென்றால் தேவனுடன் நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டும், பின்பற்றுவதற்குச் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இது மனிதனின் ஒத்துழைப்பை உள்ளடக்கியுள்ளது: அதாவது உங்களைப் பற்றிய தேவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும்; மேலும் தேவன் மீதான சரியான விசுவாசப் பாதையில் பிரவேசிக்க நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிற பாதையில் அடி எடுத்து வைப்பது சிக்கலானதாகத் தோன்றலாம். ஆனால் பின்பற்றும் பாதை உனக்குத் தெளிவாகும் போது, நீ அதனை மேலும் எளிதானதாகக் காண்பாய். உண்மை என்னவென்றால் தேவன் எதிர்பார்ப்பதை எல்லாம் ஜனங்களால் செய்ய இயலும்—இது அவர் பன்றிகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது போன்றது அல்ல. எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவன் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கவலைகளைப் போக்கவும் முற்படுகிறார். நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேவனின் வார்த்தைக்கிணங்க பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையில் மக்கள் வழநடத்தப்படுகிறார்கள். ஏற்கனவே கூறியது போல், உங்கள் இருதயத்தை தேவனிடம் கொடுத்துவிட வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அத்தியாவசியமானதாகும். சரியான வழியில் பிரவேசிப்பதற்கு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். ஒருவர் தனது இருதயத்தை உணர்வுபூர்வமாக தேவனுக்குக் கொடுக்கும் வேலையை எவ்வாறு செய்கிறார்? உங்களுடைய தினசரி வாழ்க்கையில் தேவனின் கிரியையை அனுபவித்து அவரிடம் ஜெபிக்கும் போது, நீங்கள் அதை கவனக்குறைவாகச் செய்கின்றீர்கள்—நீங்கள் பணியாற்றும்போது ஜெபிக்கின்றீர்கள். உங்களது இருதயத்தை தேவனுக்கு கொடுப்பதாக இதைச் சொல்ல முடியுமா? நீங்கள் வீட்டு விஷயங்களைப் பற்றியோ மாம்ச காரியங்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் எப்போதும் இரு மனதுள்ளவராக இருக்கின்றீர்கள். தேவனுடைய பிரசன்னத்தில் உங்களது இருதயத்தை அமைதிப்படுத்துவதாக இதைக் கருத முடியுமா? ஏனெனில் உன் இருதயம் எப்போதும் வெளிக் காரியங்களில் ஒன்றித்து நிற்கிறது, மற்றும் தேவனுக்கு முன்பாக திரும்பி வர இயலாமல் உள்ளது. உங்கள் இருதயம் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருந்தால், உணர்வுபூர்வமாக ஒத்துழைக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். அதாவது உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் அனுதின தியானங்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தில் ஜனங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர காரியங்களை ஒதுக்கிவிட வேண்டும். உங்கள் இருதயத்தை நிலைப்படுத்தி தேவன் முன் உங்களை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட தியானக் குறிப்பேடுகளை வைத்திருக்க வேண்டும், தேவனுடைய வார்த்தை பற்றிய அவர்களது அறிவையும், அவர்களது ஆவி ஆழமாகவோ அல்லது மேலோட்டமாகவோ ஏவப்பட்டதையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்; அனைவரும் உணர்வுபூர்வமாக தேவனுக்கு முன்பாக அவர்களது இருதயத்தை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நீ ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தை உண்மையான ஆவிக்குரிய வாழ்விற்கு அர்ப்பணித்தால், அந்தநாளில் உன் வாழ்வு செழிப்பாகும். உன் இருதயம் பிரகாசமும் தெளிவும் அடையும். நீ தினந்தோறும் இத்தகைய ஆவிக்குரிய வாழ்வை வாழ்ந்தால், உனது இருதயம் தேவனின் ஆட்கொள்ளுதலுக்குள் அதிகமாகத் திரும்ப இயலும். உனது ஆவி மென்மேலும் வலிமை பெறும். உனது நிலைமை தொடர்ச்சியாக முன்னேற்றமடையும்; பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அதிகத் திறன் பெறுவாய். தேவன் உனக்கு அதிகமான ஆசீர்வாதங்களை அளிப்பார். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணர்வுபூர்வமாக பெறுவதே உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் நோக்கம் ஆகும். சட்டங்களைக் கடைபிடிப்பதோ மதச் சடங்குகளை அனுசரிப்பதோ அல்ல; மாறாக தேவனுடனான உடன்பாட்டுடன் உண்மையாக செயல்படுவதும், உனது சரீரத்தை உண்மையாக கட்டுப்படுத்துவதுமே ஆகும்—இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். எனவே நீ இதனை மிகச் சிறந்த முயற்சியுடன் செய்ய வேண்டும். உன்னுடைய ஒத்துழைப்பும் நீ எடுக்கக்கூடிய கூடுதலான முயற்சியும் எவ்வளவு சிறப்பானதாக உள்ளதோ, அந்தளவிற்கு உனது இருதயத்தால் தேவனிடம் திரும்பிவர இயலும் மற்றும் உனது இருதயத்தை தேவன் முன் உன்னால் சிறப்பாக அமைதிப்படுத்த இயலும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவன் உனது இருதயத்தை முழுமையாக ஆட்கொள்வார். வேறு யாராலும் உனது இருதயத்தை மாற்றவோ கைப்பற்றவோ இயலாது. நீ முழுமையாக தேவனுக்கு சொந்தமாவாய். நீ இந்தப் பாதையில் நடந்தால் தேவனின் வார்த்தை உனக்கு எந்நேரமும் வெளிப்பட்டு நீ புரிந்து கொள்ளாத அனைத்தையும் தெளிவுபடுத்தும்—இவை அனைத்தையும் உன்னுடைய ஒத்துழைப்பினால் பெற முடியும். இதனால்தான் தேவன் எப்போதும் “என்னுடன் இணக்கமாகச் செயல்படுகிற அனைவருக்கும் நான் இரட்டிப்பாக வெகுமதி அளிப்பேன்” என்று கூறுகிறார். நீங்கள் இந்தப் பாதையைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் சரியான பாதையில் நடக்க விரும்பினால், தேவனை திருப்திப்படுத்த உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். ஆவிக்குரிய வாழ்வை அடைய உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். தொடக்கத்தில் இந்த முயற்சிகளில் சிறப்பான முடிவுகளை நீ அடையாமல் போகலாம். ஆனால் நீ பின்னடைவதற்கோ, எதிர்மறை எண்ணங்களில் புறள்வதற்கோ உன்னை அனுமதிக்கக்கூடாது. நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நீ ஆவிக்குரிய வாழ்வை வாழ்கிறாயோ, அவ்வளவு அதிகமாக உனது இருதயமும் தேவனின் வார்த்தைகளினால் ஆட்கொள்ளப்படும்; அது எப்போதும் இந்தக் காரியங்களைப் பற்றி அக்கறைப்பட்டுக் கொண்டும், எப்போதும் இந்தப் பாரத்தைச் சுமந்து கொண்டும் இருக்கும். அதன் பிறகு உனது உள்ளத்தின் சத்தியங்களை ஆவிக்குரிய வாழ்வு மூலமாக தேவனிடம் வெளிப்படுத்து. நீ என்ன செய்ய விரும்புகிறாய், நீ எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உனது புரிதலும் கண்ணோட்டமும் என்ன என்பவற்றை அவரிடம் சொல். எதையும் மறைக்காதே, ஒரு சிறிய காரியத்தைக்கூட விட்டுவிடாதே! வார்த்தைகளை உனது இருதயத்தினுள் பேசிப் பயிற்சி செய் மற்றும் தேவனிடம் உனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்து. அது உனது இருதயத்தில் இருந்தால், எவ்வகையிலாவது அதனைச் சொல்லிவிடு. எவ்வளவு அதிகமாக இந்த வகையில் நீ பேசுகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அருமையை உணருவாய், அவ்வளவு அதிகமாக உனது இருதயம் தேவனை நோக்கி இழுக்கப்படும். இவ்வாறு நடக்கின்ற போது, மற்ற யாரையும் விட அதிகமாக தேவன் உன் அன்புக்குரியவராக இருக்கிறார் என்பதை உணருவாய். எந்நிலையிலும் தேவனின் அருகாமையில் இருந்து நீ விலக மாட்டாய். இத்தகைய ஆவிக்குரிய தியானத்தை நீங்கள் தினமும் பயிற்சி செய்தால், அதை உனது மனதைவிட்டு அகற்றாமல், அதை உனது வாழ்வின் மிக முக்கியமான காரியமாகக் கருதினால், தேவனின் வார்த்தை உனது இருதயத்தை ஆட்கொள்ளும். இதுவே பரிசுத்த ஆவியானவரின் தொடுதல் ஆகும். உனது இருதயம் எப்போதும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதைப் போலவும், நீ நேசிப்பது உனது இருதயத்தில் எப்போதும் இருப்பதைப் போலவும் இருக்கும். அதை யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது. இது நிகழ்கின்றபோது, தேவன் உண்மையிலேயே உனக்குள் வாழ்வார். உனது இருதயத்திற்குள் இடம்பிடிப்பார்.