கிரியையும் பிரவேசித்தலும் (7)
மனுஷனுக்கு ஆவிக்குரிய வாழ்வின் ஆகாரமும் தேவனை அறிந்து கொள்ளும் அனுபவமும் இல்லாதிருப்பது மட்டுமல்லாமல், அதைவிட இன்னும் அதிக முக்கியமாக—மனுஷனது மனநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களும் இல்லாதிருக்கின்றன என்பதை உணர மனுஷனுக்கு இத்தனை நாள் ஆகியிருக்கிறது. தன் சொந்த இனத்தின் வரலாறு மற்றும் பண்டைய காலக் கலாச்சாரம் ஆகியவற்றைக் குறித்த முழுமையான அறிவின்மையின் காரணமாக மனுஷனுக்கு ஏற்பட்ட விளைவு என்னவென்றால், மனுஷன் தேவனுடைய கிரியையைப் பற்றி எதுவும் அறியாதிருக்கிறான். மனுஷன் தன் உள்ளத்தின் ஆழத்தில் தேவனுடன் இணைந்திருக்க முடியும் என்று எல்லா மனுஷர்களும் நம்புகிறார்கள், ஆனால் மனுஷனின் மாம்சம் மிகவும் சீர்கெட்டு இருப்பதாலும், உணர்ச்சியற்றதும் மழுங்கிப்போனதுமாக இருப்பதாலும், அது அவனை தேவனைப் பற்றி எதுவும் அறிந்துகொள்ளாதபடி செய்திருக்கிறது. இன்று மனுஷர்கள் மத்தியில் வருவதற்கான தேவனுடைய நோக்கமானது, ஜனங்களின் எண்ணங்களையும் ஆவிகளையும், அதோடு கூட, அவர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் இருதயங்களில் கொண்டிருந்த தேவனுடைய ரூபத்தையும் மாற்றுவதற்கே தவிர வேறொன்றும் இல்லை. அவர் மனுஷனைப் பரிபூரணப்படுத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வார். அதாவது, மனுஷனுடைய அறிவின் மூலம், ஜனங்கள் அவரை அறிந்துகொள்ளும் விதத்தையும், அவர் குறித்த அவர்களின் மனப்பான்மையையும் மாற்றி, தேவனை அறிந்துகொள்வதில் வெற்றிகரமான புதிய தொடக்கத்தை உருவாக்க மனுஷனுக்கு உதவி, அதன்மூலம், மனுஷனுடைய ஆவி புதுப்பிக்கப்படுதலையும் மறுரூபமாக்கப்படுதலையும் அடையச் செய்வார். கையாள்வதும் திருத்துதலும் வழிகளாய் இருக்கிற அதே சமயத்தில், ஜெயங்கொள்ளுதலும் புதுப்பித்தலும் குறிக்கோள்களாய் இருக்கின்றன. கண்ணுக்குப் புலப்படாத தேவனைப் பற்றி மனுஷன் வைத்திருக்கும் மூடநம்பிக்கை எண்ணங்களை அகற்றுவது எப்போதும் தேவனுடைய நோக்கமாக இருக்கிறது, மேலும் சமீபகாலமாக இதுவும் அவருக்கு அவசரமான விஷயமாக மாறியுள்ளது. எல்லா ஜனங்களும் இந்தச் சூழலைக் கருத்தில் கொள்வதில் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் உணரும் விதத்தை மாற்றுவதன் தேவனுடைய இந்த அவசர எண்ணம் விரைவில் நிறைவேறும், மேலும் அதன்மூலம், பூமியின் மீதான கடைசிக் கட்ட தேவனுடைய கிரியையை முழுமையாகக் கொண்டு வர முடியும். தேவனுக்குக் கொடுக்கும்படி உங்களை ஏவுகிற விசுவாசத்தைக் கொடுங்கள். இறுதியாக ஒருமுறை, தேவனுடைய இருதயத்திற்கு ஆறுதலளியுங்கள். சகோதர சகோதரிகள் மத்தியில், யாரும் இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் கூடாது, அதன் போக்கில் செல்வதைப் போல வெறுமனே நடிக்கவும் கூடாது. இந்த முறை ஓர் அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாகவும், மனுஷனின் நிலைக்குச் சுட்டிக்காட்டப்பட்ட பதிலுக்காகவும் தேவன் மாம்சத்தில் வருகிறார். அதாவது, மனுஷனுக்குத் தேவையானதை அவனுக்கு வழங்க அவர் வருகிறார். சுருக்கமாகக் கூறினால், மனுஷனின் திறமை அல்லது வளர்ப்பு எப்படி இருந்தாலும், தேவனுடைய வார்த்தையைக் காணவும், அவருடைய வார்த்தையிலிருந்து, தேவன் இருக்கிறார் என்பதையும், அவரது வெளிப்பாட்டையும் பார்க்கவும், தேவன் அவனைப் பரிபூரணப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவும் செய்து, மனுஷனின் எண்ணங்களையும் கருத்துக்களையும் மாற்றி, அதனால் தேவனுடைய உண்மையான முகம் மனுஷனின் இருதயத்தின் ஆழத்தில் உறுதியாக வேரூன்றப்படுகிறது. இதுவே பூமியின் மீதான தேவனுடைய ஒரே விருப்பமாகும். மனுஷனுடைய ஜென்ம சுபாவம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அல்லது மனுஷனுடைய சாராம்சம் எவ்வளவு குறைவாக இருந்தாலும், அல்லது கடந்த காலத்தில் மனுஷனின் நடத்தை உண்மையில் எப்படி இருந்திருந்தாலும், தேவன் இவற்றைக் கருத்தில் கொள்வதில்லை. மனுஷன், அவனது உள்ளான இருதயத்தில் கொண்டிருக்கும் தேவனுடைய ரூபத்தை முற்றிலும் புதிதாக உருவாக்கவும், மனிதகுலத்தின் சாராம்சத்தை அறிந்து, அதன் மூலம் மனுஷனின் கருத்தியல் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு, உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்காக ஏங்கவும் நித்திய பந்தத்தை எழுப்பவும் கூடியவனாக வேண்டும் என்று மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார்: இதுவே தேவன் மனுஷனிடத்தில் வைக்கும் ஒரே கோரிக்கையாகும்.
பல ஆயிரம் ஆண்டுகளாகப் பரந்துவிரிந்திருக்கிற, பழமையான கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றிய அறிவு மனுஷனின் சிந்தனையையும் கருத்துக்களையும் மற்றும் அவனது மனக் கண்ணோட்டத்தையும், அவற்றை எளிதில் மாற்ற முடியாத வகையிலும் எளிதில் உடைக்கப்பட[1] முடியாத வகையிலும் மிகவும் இறுக்கமாக மூடியிருக்கிறது. தாங்கள் ஒருபோதும் வெளிச்சம் காணப்படாத பாதாளக்குழிக்குள் இப்போதுதான் தேவனால் தள்ளப்பட்டதைப் போல, ஜனங்கள் நரகத்தின் பதினெட்டாவது வட்டத்தில் வாழ்கிறார்கள். பழமைவாத சிந்தனையானது ஜனங்கள் மூச்சுவிட முடியாமல்போய், மூச்சுத் திணறுகிற அளவிற்கு அவர்களை மிகவும் நெருக்கியிருக்கிறது. எதிர்த்து நிற்க அவர்களுக்குச் சிறிதளவு பலமும் இல்லை; அவர்கள் செய்வதெல்லாம் மௌனமாக சகித்துக்கொண்டே இருப்பதுதான்…. நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடவோ அல்லது எழும்பி நிற்கவோ யாரும் துணிந்ததில்லை; பழைமைவாத நெறிமுறைகளின் அடிகள் மற்றும் துஷ்பிரயோகத்தின் கீழ், ஜனங்கள் நாளுக்கு நாள், ஆண்டுதோறும் ஒரு மிருகத்தை விட மோசமான வாழ்க்கையை மட்டுமே வாழ்கின்றனர். மனித உலகில் மகிழ்ச்சியை அனுபவிக்க தேவனைத் தேட வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. உதிர்ந்த காய்ந்துபோன, பழுப்பு நிறத்தில் இருக்கும் இலையுதிர்காலத்தின் இலைகளைப் போலவும், அவ்வளவு அடிக்கப்பட்டதைப் போலவும் ஜனங்கள் காணப்படுகின்றனர். ஜனங்கள் நீண்ட காலமாகத் தங்கள் நினைவாற்றலை இழந்திருக்கின்றனர்; மனித உலகம் என்று அழைக்கப்படும் நரகத்தில் அவர்கள் ஆதரவற்றவர்களாக வாழ்ந்து, அவர்கள் இந்த நரகத்துடன் சேர்ந்து அழிந்துபோகும்படி, ஏதோ, அவர்கள் ஏங்கும் கடைசி நாள் மனுஷன் நிம்மதியான சமாதானத்தை அனுபவிக்கும் நாளாக இருக்கும் என்பதைப் போல, கடைசி நாளின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். பழமைவாத நெறிமுறைகள் மனுஷனின் வாழ்க்கையைப் “பாதாளத்திற்குக்” கொண்டு சென்றிருக்கின்றன, மேலும் மனுஷனின் எதிர்க்கக்கூடிய வல்லமையைப் பலவீனப்படுத்துகின்றன. எல்லாவிதமான அடக்குமுறைகளும் மனுஷனைப் படிப்படியாக, பாதாளத்தில் ஆழமாகக் கீழே விழும்படிக்கும், தேவனிடமிருந்து மென்மேலும் தூரமாய் விலகி, இன்று அவன் தேவனுக்கு முற்றிலும் அந்நியனாக மாறிப்போகும் வரைக்கும் மற்றும் அவர்கள் சந்திக்கும் போது அவரைத் தவிர்க்கத் துரிதப்படுகிற அளவிற்கும் அவனைத் தள்ளுகின்றன. இதுவரை அவரை அறிந்திருக்கவில்லை என்பது போலவும், அவரைப் பார்த்ததில்லை என்பது போலவும், மனுஷன் அவருக்கு செவிசாய்க்காமல், அவரை ஒரு பக்கமாகத் தனித்து நிற்க வைக்கிறான். ஆயினும்கூட, மனுஷனுடைய நீண்ட வாழ்க்கைப் பயணம் முழுவதும் தேவன் மனுஷனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார், மனுஷன் மனந்திரும்பி புதிதாகத் தொடங்கும்படிக்கு, அடக்கமுடியாத கோபத்தை ஒருபோதும் அவன் மீது காட்டாமல், ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகக் காத்திருக்கிறார். மனித உலகின் துன்பங்களை மனிதனுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் தேவன் வெகு காலத்திற்கு முன்பே மனித உலகிற்கு வந்தார். அவர் மனுஷனுடன் வாழ்ந்த எல்லா வருஷங்களிலும், அவர் இருக்கிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. தேவன் தாமாகச் செய்து முடிக்கும்படிக்குத் தாம் கொண்டுவந்த கிரியையைச் செய்யும்போது, மனித உலகில் உள்ள மோசமான துன்பங்களை அமைதியாக சகித்துக்கொள்ள மட்டுமே செய்கிறார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தினிமித்தமும், மனிதகுலத்தின் தேவைகளின் நிமித்தமும் அவர் தொடர்ந்து சகித்துக்கொண்டிருந்து, இதுவரை மனுஷன் அனுபவித்திராத துன்பங்களை அனுபவித்து வருகிறார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின் நிமித்தமும், மனிதகுலத்தின் தேவைகளின் நிமித்தமும், அவர் மனுஷனுக்கு முன்பாக அமைதியாக அவனுக்காகக் காத்திருக்கிறார், மற்றும் மனுஷனுக்கு முன்பாக அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். பண்டைய கலாச்சாரத்தின் அறிவு மனுஷனை தேவனுடைய பிரசன்னத்திலிருந்து இரகசியமாகத் திருடி, அவனைப் பிசாசுகளின் ராஜா மற்றும் அதன் சந்ததியினரிடம் ஒப்படைத்திருக்கிறது. நான்கு புத்தகங்களும் ஐந்து புகழ்பெற்ற நூல்களும்[அ] மனுஷனின் சிந்தனையையும் கருத்துக்களையும் கலகத்தனத்தின் இன்னொரு காலத்திற்குக் கொண்டு சென்று, முன்பு புத்தகம்/புகழ்பெற்ற நூல்களின் ஆவணங்களைத் தொகுத்தவர்களை விட அதிகப் புகழையும், அதன் விளைவாக தேவனைப் பற்றிய அவனது கருத்துக்களை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. மனுஷனுக்குத் தெரியாமலேயே, பிசாசுகளின் ராஜா இரக்கமின்றி தேவனை அவனது இருதயத்திலிருந்து வெளியேற்றி, பின்னர் அதை வெற்றிகரமான மகிழ்ச்சியுடன் ஆக்கிரமித்தான். அப்போதிருந்து, மனுஷன் அசுத்தமான மற்றும் பொல்லாத ஆத்துமாவையும், பிசாசுகளின் ராஜாவின் முகத்தையும் கொண்டிருக்கிறான். தேவன் மீதான வெறுப்பு அவனுடைய நெஞ்சை நிரப்பியது, பிசாசுகளின் அரசனின் வெறுக்கத்தக்க தீமை, அவன் முழுவதுமாக அழிக்கப்படும் வரை, மனுஷனுக்குள் நாளுக்கு நாள் பரவி வருகிறது. மனுஷன் கொஞ்சம் விடுதலையைக் கூட ஒருபோதும் பெற்றிருக்கவில்லை, பிசாசுகளின் ராஜாவின் பிடியிலிருந்து விடுபட வழி இருத்ததில்லை. அதே இடத்தில் சிறைபிடிக்கப்பட்டு, அதன் முன்பாக சரணடைந்து கீழ்ப்படியும்படிக்குத் தாழ விழுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. நீண்ட காலத்திற்கு முன்பு, மனுஷனின் இருதயமும் ஆத்துமாவும் இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் இருந்தபோது, பிசாசுகளின் ராஜா அதில் நாத்திகம் என்ற கட்டியின் விதையை விதைத்து, “விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் படியுங்கள்; நான்கு நவீனமயமாக்கல்களை உணருங்கள்; மேலும் உலகில் தேவன் என ஒருவரும் இல்லை” என்று அவனுக்குத் தவறான உபதேசங்களை போதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது: “அழகான தாயகத்தை உருவாக்க நமது உழைப்பை சார்ந்திருப்போம்” என்று கூக்குரலிட்டு, ஒவ்வொரு நபரும் குழந்தைப் பருவத்திலிருந்தே தங்கள் நாட்டிற்கு உண்மையுடன் சேவை செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது. அறியாமலேயே மனுஷன் அதற்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டான், அங்கு அது தயக்கமின்றி எல்லாப் புகழையும் (எல்லா மனுஷர்களையும் தமது கரங்களில் வைத்திருப்பதனால் ஏற்படுகிற தேவனுக்குச் சொந்தமான புகழ்) தயக்கமின்றி கர்வத்துடன் தனக்கென எடுத்துக்கொண்டது. அதற்கு ஒருபோதும் அவமான உணர்வைப் பெற்றிருந்ததில்லை. மேலும், அது வெட்கமின்றி தேவனுடைய ஜனங்களைக் கைப்பற்றி, அவர்களை மீண்டும் தனது வீட்டிற்கு இழுத்துச் சென்றது, அங்கு அது ஓர் எலியைப் போல மேசையின் மீது குதித்து அமர்ந்து, மனுஷன் தன்னை தேவனாக வணங்கும்படி செய்தது. என்ன ஒரு துணிச்சல்! “தேவன் என்ற ஒருவர் உலகில் இல்லை. காற்று இயற்கை விதிகளின்படி ஏற்படும் மாற்றங்களிலிருந்து வருகிறது; நீராவி, குளிர்ந்த வெப்பநிலையுடன் சேர்ந்து, பூமியில் விழும் துளிகளாக உறையும்போது மழை வருகிறது; பூகம்பம் என்பது புவியியல் மாற்றங்களால் பூமியின் மேற்பரப்பு அசைக்கப்படுவது; சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நியூக்ளியோனிக் இடையூறு காரணமாக காற்றில் ஏற்படும் ஈரப்பதக் குறைவினால் வறட்சி ஏற்படுகிறது. இவை இயற்கை நிகழ்வுகள். இதிலெல்லாம் தேவனுடைய செயல் எங்கே இருக்கிறது?” என்று இது போன்ற அவதூறான, அதிர்ச்சியூட்டும் விஷயங்களைக் கூக்குரலிடுகிறது. சொல்லக்கூடாத கூற்றுகளைப் போன்ற கீழ்க்கண்ட கூற்றுகளைக் கூறி கூச்சலிடுபவர்களும் கூட இருக்கிறார்கள்: “மனுஷன் பண்டைய காலத்தில் குரங்கிலிருந்து உருவானான், இன்றைய உலகம் ஏறக்குறைய ஒரு யுகத்திற்கு முன்பு தொடங்கி, ஆதிகால சமூகங்களின் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஒரு நாடு வளர்ச்சியடைகிறதா அல்லது வீழ்ச்சியடைகிறதா என்பது முழுக்க முழுக்க அதன் ஜனங்களுடைய கைகளில்தான் இருக்கிறது.” பின்னணியில், அது மனுஷனை அதைச் சுவரில் தொங்கவிட்டு அல்லது அதை மேசையில் வைத்து வழிபாடு செய்து, அதற்குப் பலிகளை செலுத்தச் செய்கிறது. “தேவன் இல்லை” என்று கூக்குரலிடும் அதே நேரத்தில், தேவனுடைய இடத்திலேயே நின்றுகொண்டு பிசாசுகளின் ராஜா என்னும் பாத்திரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், கடினத்தன்மையுடன் தேவனை மொத்தத்தில் பூமியின் எல்லைகளுக்கு வெளியே தள்ளி, அது தன்னைத்தானே தேவனாக ஏற்படுத்துகிறது. எவ்வளவாய் முற்றிலும் பகுத்தறிவில்லாமல் இருக்கிறது! இது ஒருவனை அதை வேரோடு வெறுக்கச் செய்கிறது. தேவனும் அதுவும் பரம எதிரிகள் என்பது போலத் தெரிகிறது, இருவரும் இணைந்து வாழ முடியாது. சட்டத்தின் எல்லைக்கு வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும்[2] அதே சமயத்தில் தேவனை விரட்டியடிக்க அது திட்டமிட்டுள்ளது. அது அப்படிப்பட்டதொரு பிசாசுகளின் ராஜா! அதன் இருப்பை எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும்? அது தேவனுடைய கிரியையை குழப்பமடையச் செய்து, அனைத்தையும் ஒரு முழுமையான குழப்பத்தில்[3] விட்டு, கசப்பான முடிவுக்காக தேவனை எதிர்க்க விரும்புவது போல, மீன் இறக்கும் வரை அல்லது வலை கிழியும் வரை, வேண்டுமென்றே தேவனுக்கு எதிராகத் தன்னை அமைத்துக் கொள்ளும் வரை மற்றும் எப்போதும் நெருக்கமாக அழுத்தம் கொடுக்கும் வரை அது ஓயாது. அதன் அருவருப்பான முகம் நீண்ட காலமாக முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அது இப்போது காயப்பட்டுள்ளது மற்றும் நொறுக்கப்பட்டுள்ளது[4] மற்றும் ஒரு வருத்தமான நிலையில் உள்ளது, ஆனாலும் தேவனை ஒரே வாயில் விழுங்குவதன் மூலம் மட்டுமே தனது இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க முடியும் என்பது போல அது தேவனை வெறுப்பதில் மனந்திரும்பாது. தேவனுடைய இந்த எதிரியாகிய, இதை நாம் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்! அதன் ஒழிப்பு மற்றும் முழுமையான அழிவு மட்டுமே நம் வாழ்வின் விருப்பத்தை நிறைவேற்றும். அது தொடர்ந்து தலைவிரித்தாடுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? மனுஷன் வானத்தின் சூரியனைக் கூட அறியாதவனாகி, மரித்துப்போய் உணர்வற்றவனாகிவிடும் அளவுக்கு மனிதனைச் சீர்கெடுத்திருக்கிறது. மனுஷன் இயல்பான மனித அறிவை இழந்திருக்கிறான். எதிர்காலத்திற்கான அனைத்துக் கவலைகளையும் நீக்கி, தேவனுடைய கிரியை முன்பு இல்லாத அளவு மகிமையை விரைவில் அடையப்பண்ண, அதை அழிக்கவும், அதை சுட்டெரிக்கவும் ஏன் நம் முழுமையையும் அர்ப்பணிக்கக்கூடாது? இந்த அயோக்கியக் கும்பல் மனுஷர்களுடைய உலகத்தில் வந்து பெருங்குழப்பம் உண்டாகும் அளவிற்கு அதைக் குறைத்திருக்கிறது. அவர்களது பிணங்களை விழுங்கிப்போடும்படியாக எத்தனித்து, அவர்கள் நொறுங்கி அழிந்துபோகும்படியாக தள்ளிவிடும்படிக்கு இரகசியமாகத் திட்டமிட்டு, அவர்கள் எல்லா மனுஷர்களையும் ஒரு செங்குத்தான பாறையின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய திட்டத்தை உடைத்து, அவருடன் ஒரு போட்டியில் நுழைவார்கள் என்று வீணாக நம்பி, ஒரேயடியாக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள்.[5] இது எந்த வகையிலும் எளிதானது அல்ல! எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் கொடூரமான குற்றங்களில் குற்றவாளியாகிய பிசாசுகளின் ராஜாவுக்காகச் சிலுவை ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. தேவன் சிலுவைக்கு சொந்தமானவர் அல்ல. அவர் அதை ஏற்கனவே பிசாசுக்காக ஒதுக்கி வைத்துவிட்டார். தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே ஜெயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், மேலும் மனுஷர்களின் பாவங்களுக்காக இனி வருத்தப்படுவதில்லை, ஆனால் அனைத்து மனுஷர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருவார்.
சாத்தானானவன் தேவனுடைய கிரியையை முழுமையாகவும் மற்றும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் சீர்குலைத்து, அவருக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறான். “பண்டைய கலாச்சாரப் பாரம்பரியம்,” மதிப்புமிக்க “பண்டைய கலாச்சாரத்தின் அறிவு,” “தாவோயிசம் மற்றும் கன்பூசியனிசத்தின் போதனைகள்” மற்றும் “புகழ்பெற்ற கன்பூசிய நூல்கள் மற்றும் பழமைவாதச் சடங்குகள்” பற்றிய இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் மனுஷனை நரகத்திற்குக் கொண்டு சென்றுவிட்டன. மேம்பட்ட நவீன கால விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், அதோடு கூட, மிக அதிகமாக வளர்ந்திருக்கும் தொழில், விவசாயம் மற்றும் வணிகம் எங்கேயும் காணப்படவில்லை. மாறாக, அது செய்வதனைத்தும் தேவனுடைய கிரியையை வேண்டுமென்றே சீர்குலைக்கவும், எதிர்க்கவும், சிதைக்கவும் பண்டைய காலத்தின் “குரங்குகள்” பரப்பிய பழமைவாத சடங்குகளை வலியுறுத்துவது மட்டுமேயாகும். இந்நாள் வரை அது மனுஷனைத் தொடர்ந்து துன்புறுத்துவது மட்டுமல்லாமல், அது மனுஷனை முழுவதுமாக விழுங்க[6] விரும்புகிறது. பழமைவாதத்தின் தார்மீக மற்றும் நெறிமுறை போதனைகளின் பரிமாற்றம் மற்றும் பண்டைய கால கலாச்சாரத்தின் அறிவை வழங்குவது ஆகியவை மனிதகுலத்தை நீண்ட காலமாகப் பாதித்துப் பெரிய மற்றும் சிறிய பிசாசுகளாக அவர்களை மாற்றியிருக்கின்றன. தேவனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்கள் வெகு சிலரே, அவருடைய வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பவர்களும் சிலரே. எல்லா மனுஷர்களின் முகமும் கொலை செய்யும் நோக்கத்தால் நிரம்பியுள்ளது, மேலும் ஒவ்வொரு இடத்திலும், ஒரு கொலை செய்யும் மூச்சு காற்றில் பரவுகிறது. அவர்கள் இந்தத் தேசத்திலிருந்து தேவனைத் துரத்த நாடுகிறார்கள்; அவர்கள் தேவனை “அழிப்பதற்கு” கையில் கத்திகள் மற்றும் வாள்களுடன், ஒரு யுத்த அமைப்பில் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள். தேவன் இல்லை என்று மனுஷனுக்குத் தொடர்ந்து கற்பிக்கும் இந்தப் பிசாசின் தேசம் முழுவதும், விக்கிரகங்கள் பரவிக்கிடக்கின்றன, மேலே உள்ள காற்றானது எரியும் காகிதம் மற்றும் தூபத்தின் குமட்டல் வாசனையால் ஊடுருவி, மூச்சுத் திணறுகிற அளவிற்கு மிகவும் அடர்த்தியாக இருக்கிறது. அது விஷப் பாம்பின் நெளிவினால் வீசுகிற துர்நாற்றத்தைப் போல, ஒருவனால் வாந்தி எடுக்காமல் இருக்க முடியாதபடி அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொல்லாத பிசாசுகள் வேதத்தை உச்சரிக்கும் சத்தத்தை லேசாகக் கேட்க முடிகிறது, அது நரகத்தில் வெகு தொலைவிலிருந்து வரும் சத்தத்தத்தைப் போல் தெரிகிறது, அதனால் ஒருவர் நடுங்குவதை நிறுத்த முடியாது. இந்த தேசத்தில் எல்லா இடங்களிலும் வானவில்லின் அனைத்து வண்ணங்களிலும் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு, தேசத்தைச் சிற்றின்பத்தின் உலகமாக மாற்றுகிறது, அதே நேரத்தில் பிசாசுகளின் ராஜா தனது கொடூரமான சதி வெற்றியடைந்ததைப் போல பொல்லாத முறையில் சிரிக்கிறான். இதற்கிடையில், மனுஷன் முற்றிலும் மறதியில் இருக்கிறான், மேலும் அவன் அறிவற்றவனாகவும், தோல்வியில் தலையைத் தொங்கவிடுகிறவனாகவும் மாறியிருக்கும் அளவிற்கு, பிசாசு ஏற்கனவே அவனைக் கெடுத்திருக்கிறான் என்ற எண்ணமும் அவனுக்கு இல்லை. தேவனைப் பற்றிய எல்லாவற்றையும் சடுதியில் அழித்துவிடவும், மறுபடியும் அவரைத் தீட்டுப்படுத்தவும், படுகொலை செய்யவும் அவன் விரும்புகிறான். அவருடைய கிரியையை கிழித்தெறிந்து, சீர்குலைக்கும் நோக்கத்தை அவன் கொண்டுள்ளான். அவனால் எப்படி தேவனை சம அந்தஸ்தில் இருக்க அனுமதிக்க முடியும்? பூமியில் உள்ள மனிதர்களிடையே தான் செய்யும் கிரியைகளில் தேவன் தலையிடுவதை அவனால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அவனுடைய கோரமான முகத்தை வேஷங்கலைக்க அவனால் எப்படி தேவனை அனுமதிக்க முடியும்? தனது கிரியையைச் சீர்குலைக்க அவனால் எப்படி தேவனை அனுமதிக்க முடியும்? மிகுந்த கோபத்துடன் இருக்கும் இந்தப் பிசாசு எப்படி பூமியிலுள்ள அவனுடைய ஏகாதிபத்திய நீதிமன்றத்தை தேவன் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியும்? அவருடைய உயர்வான வல்லமைக்கு அவன் எப்படி மனதார தலைவணங்க முடியும்? அவனுடைய கோரமான முகம் அவனுடைய உண்மையான தன்மையின்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் ஒருவர் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா என்று தெரியவில்லை, அதைப்பற்றி பேசுவது உண்மையாகவே கடினமானதாகும். இதுவே அவனுடைய சாராம்சம் அல்லவா? ஓர் அசிங்கமான ஆத்துமாவுடன், அவன் இன்னும் நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருப்பதாக நம்புகிறான். குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் கும்பல்[7] இது! அவைகள் இன்பங்களில் ஈடுபடவும், குழப்பத்தை ஏற்படுத்தவும், உலகமே நிலையற்றதாகவும், நிலையற்ற இடமாகவும் மாறி, மனுஷனின் இருதயம் பீதியாலும் நிம்மதியின்மையாலும் நிரம்பி வழியும் அளவுக்குக் குழப்பத்தை உண்டாக்க அழிந்துபோகும் உலகத்தில் இறங்கி வருகின்றன, அவனது தோற்றம் ஒரு மனிதாபிமானமற்ற, மிகவும் அசுத்தமான வெளியின் மிருகமாக மாறிப்போய் மேலும், அதிலிருந்து உண்மையான பரிசுத்த மனுஷனின் கடைசித் தடயமும் இல்லாமல்போயிருக்கும் அளவிற்கு அவை மனுஷனுடன் மிகவும் விளையாடியிருக்கின்றன. மேலும், அவை பூமியில் ராஜ்யபாரத்திற்கான அதிகாரத்தைப் பெற விரும்புகின்றன. அவை தேவனுடைய கிரியை ஒரு இம்மியளவும் முன்னேற்றமடையாதபடிக்கு அவை மிகவும் தடை செய்கின்றன, மேலும் அவை செம்பு மற்றும் எஃகு சுவர்களைப் போல மனுஷனை மிகவும் இறுக்கமாக மூடுகின்றன. எத்தனையோ கொடிய பாவங்களைச் செய்துவிட்டு, எத்தனையோ பேரழிவுகளை விளைவித்துவிட்டு, இன்னும் தண்டனையைத் தவிர வேறு எதையாவது அவை எதிர்பார்க்கின்றனவா? பிசாசுகள் மற்றும் பொல்லாத ஆவிகள் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டுக்கடங்காமல் செயல்பட்டு வருகின்றன, மேலும் தேவனுடைய சித்தம் மற்றும் கடினமான முயற்சி இரண்டையும், அவை ஊடுருவ முடியாத அளவிற்கு மிகவும் இறுக்கமாக மூடியுள்ளன. உண்மையாகவே, இது ஓர் அழிவுக்கேதுவான பாவம்! தேவனால் எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? தேவனால் எப்படிக் கோபப்படாமல் இருக்க முடியும்? அவைகள் தேவனுடைய கிரியையை மோசமாகத் தடுத்து, எதிர்த்திருக்கின்றன: எவ்வளவு கலகத்தனம்! பெரியவர்களும் சிறியவர்களுமான அந்தப் பிசாசுகள் கூட, சிங்கத்தின் குதிங்கால்களில் குள்ளநரிகள் போல நடந்துகொண்டு, தீய போக்கைப் பின்பற்றி, அவர்கள் போகிற போக்கில் இடையூறுகளை உண்டாக்குகின்றனர். சத்தியத்தை அறிந்தும் வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள் இந்தக் கலகக்கார குமாரர்கள்! இப்போது அவர்களது நரகத்தின் ராஜா, ராஜ சிங்காசனத்தில் ஏறியிருப்பதைப் போல் இருக்கிறது, அவர்கள் மற்றவர்களை இழிவாக நடத்துவதில் சுய திருப்தியும் மனநிறைவும் அடைந்துள்ளனர். அவர்களில் எத்தனை பேர் சத்தியத்தை நாடி நீதியைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் அனைவரும் மிருகங்கள், பன்றிகளையும் நாய்களையும் விடவும் சிறந்தவர்கள் அல்ல, துர்நாற்றம் வீசும் ஈக்களின் கும்பலின் தலையில், சாணக் குவியலுக்கு நடுவில், சுய திருப்தியிலும் சுய-வாழ்த்துக்களிலும் தங்கள் தலைகளை அசைத்து, எல்லா வகையான பிரச்சனைகளையும் தூண்டி வருகின்றனர்[8]. தங்களது நரகத்தின் ராஜாதான் எல்லாவற்றிலும் பெரிய ராஜா என்று அவர்கள் நம்புகிறார்கள், தாங்கள் துர்நாற்றம் வீசும் ஈக்களே அல்லாமல் வேறு இல்லை என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். இன்னும், தேவன் இருக்கிறார் என்பதைக் கேவலப்படுத்த பெற்றோராக அவர்கள் கொண்டிருக்கும் பன்றிகள் மற்றும் நாய்களின் வல்லமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய ஈக்களாக இருந்துகொண்டு, அவர்கள் தங்கள் பெற்றோர்கள் பல் கொண்ட நீலத் திமிங்கலங்களைப்[9] போல பெரியவர்களாயிருப்பதாக நம்புகிறார்கள். தாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது, தங்களது பெற்றோர்கள் அசுத்தமான பன்றிகளும் நாய்களுமாய் இருக்கிறார்கள் என்பதும், தங்களை விடக் கோடிக்கணக்கான மடங்கு பெரியவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தங்களுடைய தாழ்ந்த நிலையை அறியாமல், அந்தப் பன்றிகள் மற்றும் நாய்களால் வெளிவிடப்படுகிற அழுகிய நாற்றத்தை நம்பி, வெட்கக்கேடாய் நடந்து, வீணாக வருங்கால சந்ததியினரைப் பிறப்பிக்க நினைக்கிறார்கள், அவமானத்தை மறந்திருக்கிறார்கள்! முதுகில் பச்சை நிற இறக்கைகளுடன் (இது அவர்கள் தேவனை விசுவாசிப்பதாகக் கூறுவதைக் குறிக்கிறது), அவர்கள் சுயத்தினால் நிறைந்து, தங்கள் சொந்த அழகு மற்றும் கவர்ச்சியை எல்லா இடங்களிலும் பெருமையடித்துக்கொள்கிறார்கள், அதே நேரத்தில், அவர்கள் தங்கள் உடலில் உள்ள அசுத்தங்களை இரகசியமாக மனுஷனின் மீது வீசுகிறார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய சொந்த அசுத்தங்களை மறைக்க ஒரு ஜோடி வானவில் நிற இறக்கைகளைப் பயன்படுத்த முடியும் என்பதைப் போல அவர்கள் தங்களைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் இதன் மூலம் அவர்கள் உண்மையான தேவன் இருக்கிறார் என்பதற்குத் தங்கள் அடக்குமுறையைக் கொண்டுவருகிறார்கள் (இது மத உலகில் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைக் குறிக்கிறது). ஒரு ஈயின் இறக்கைகள் மயக்கும் அளவிற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும், அந்த ஈ வயிறு முழுவதும் அசுத்தத்தாலும் உடல் முழுவதும் கிருமிகளாலும் மூடப்பட்டு இருக்கும் ஒரு சிறிய உயிரினமே அல்லாமல் வேறொன்றுமல்ல என்பது மனுஷனுக்கு எப்படித் தெரியும்? தங்களுக்குப் பெற்றோராக வைத்திருக்கும் பன்றிகள் மற்றும் நாய்களின் பெலத்தினால், அவர்களது காட்டுமிராண்டித்தனத்தில் கட்டுப்பாடற்று தேசம் முழுவதும் அவர்கள் வெறிகொண்டு ஓடுகிறார்கள் (இது தேவனைத் துன்புறுத்தும் மத அதிகாரிகள் மெய்யான தேவனுக்கும் சத்தியத்திற்கும் எதிராகக் கலகம் செய்ய தேசத்தின் அரசாங்கத்தின் வலுவான ஆதரவை நம்பியிருக்கும் முறையைக் குறிக்கிறது). யூத பரிசேயர்களாகிய பிசாசுகள் தேவனோடு கூடவே சேர்ந்து சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்திற்கு, அதாவது, தங்கள் பழைய கூட்டிற்குத் திரும்பி வந்திருப்பதைப் போல இருக்கிறது. அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்களது கிரியையைத் தொடங்கி, மற்றொரு சுற்றுத் துன்புறுத்தலைத் தொடங்கியுள்ளனர். இந்த சீரழியும் கூட்டம் இறுதியில் பூமியில் அழிந்து போவது உறுதி! பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அசுத்த ஆவிகள் இன்னும் தந்திரமானதாகவும் கபடமானதாகவும் மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. இரகசியமாக தேவனுடைய கிரியையை அழிப்பதற்கான வழிகளை அவர்கள் தொடர்ந்து சிந்திக்கிறார்கள். ஏராளமான தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகளால், அவர்கள் தங்கள் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சோகத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார்கள், கிட்டத்தட்ட தேவனை அழும் நிலைக்கு சீற்றமடையச் செய்கிறார்கள். அவர்களை நிர்மூலமாக்குவதற்கு மூன்றாம் வானத்திற்குத் திரும்பிச் செல்லாதபடி அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது. மனுஷன் தேவனை நேசிப்பதற்கு, அவன் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அவருடைய சந்தோஷங்களையும் துக்கங்களையும் அறிந்துகொள்ள வேண்டும், அவர் வெறுப்பது எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் செய்வது மனுஷனின் பிரவேசத்தை இன்னும் அதிகமாகத் தூண்டும். மனுஷனின் பிரவேசம் எவ்வளவு விரைவாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவாக தேவனுடைய சித்தம் நிறைவேறுகிறது, மனுஷன் பிசாசுகளின் ராஜாவை இன்னும் தெளிவாகப் பார்க்கிறான், மேலும் அவன் தேவனிடம் இன்னும் நெருங்கிச் செல்கிறான், அதன்மூலம், அவனது விருப்பம் நிறைவேறும்.
அடிக்குறிப்புகள்:
1. “எளிதில் உடைக்கப்படாத” என்பது ஜனங்கள் தங்கள் அறிவு, கலாச்சாரம் மற்றும் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் கடினமானவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில், இங்கு நையாண்டியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. “சட்டத்தின் எல்லைக்கு வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும்” என்பது பிசாசு பித்துப் பிடித்து வெறித்தனமாக ஓடுவதைக் குறிக்கிறது.
3. “ஒரு முழுமையான குழப்பம்” என்பது பிசாசின் வன்முறையான நடத்தையானது எப்படிப் பார்ப்பதற்கு பொறுத்துக்கொள்ள முடியாதாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
4. “காயப்பட்டுள்ளது மற்றும் நொறுக்கப்பட்டுள்ளது” என்பது பிசாசுகளின் ராஜாவின் அருவருப்பான முகத்தைக் குறிக்கிறது.
5. “ஒரேயடியாக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள்” என்பது இறுதியில் வெற்றி பெறும் நம்பிக்கையில் ஒருவரின் பணத்தை ஒரே பந்தயத்தில் வைப்பதாகும். இது பிசாசின் தீய மற்றும் கொடிய திட்டங்களுக்கான உருவகமாகும். வெளிப்பாடு கேலி செய்யும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
6. “விழுங்க” என்பது ஜனங்களை முழுவதுமாக ஆட்கொள்ளும் பிசாசுகளின் ராஜாவின் தீய நடத்தையைக் குறிக்கிறது.
7. “குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் கும்பல்” என்பது “முரட்டுத்தனமான கும்பல்” என்பதைப் போலவே இருக்கிறது.
8. “எல்லா வகையான பிரச்சனைகளையும் தூண்டி வருகின்றனர்” என்பது பிசாசு பிடித்த ஜனங்கள் எவ்வாறு கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என்பதையும், தேவனுடைய கிரியையைத் தடுத்து எதிர்க்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது.
9. பல் கொண்ட “நீலத் திமிங்கலங்கள்” என்பது பரியாசம் பண்ணும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பன்றிகள் மற்றும் நாய்கள் திமிங்கலங்களைப் போல் பெரியதாக தோன்றும் அளவுக்கு ஈக்கள் எவ்வளவு சிறியவைகளாய் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் உருவகம்.
அ. நான்கு புத்தகங்களும் ஐந்து புகழ்பெற்ற நூல்களும் என்பவை சீனாவில் கன்பூசியனிசத்தின் அதிகாரப்பூர்வ புத்தகங்களாகும்.