அத்தியாயம் 107

என் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கடுமையாகும்போது, பலர் அவற்றின் காரணமாகப் பின்வாங்குகிறார்கள்—சரியாக இந்த நேரத்தில்தான் என் முதற்பேறான குமாரர்கள் வெளிப்படுத்தப்படுகின்றனர். எல்லா விஷயங்களையும் நிறைவேற்ற நான் என் வார்த்தைகளையே பயன்படுத்துகிறேனே தவிர ஒரு விரலைக் கூட உயர்த்துவதில்லை என்று நான் சொல்லியிருக்கிறேன். என் வார்த்தைகளால் நான் வெறுக்கும் எல்லோரையும் அழிக்கிறேன், மற்றும் அவற்றைப் பயன்படுத்தி என் முதற்பேறான குமாரர்களை பரிபூரணப்படுத்தவும் செய்கிறேன். (என் வார்த்தைகள் பேசப்படும்போது, ஏழு இடிகளும் முழங்கும். அந்த விநாடியில் என் முதற்பேறான குமாரர்களும் நானும் வடிவம் மாறி ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்போம்.) என் ஆவி தானே நேரடியாகக் கிரியைகளை நடத்துகிறது என்று நான் சொல்லும்போது, என் வார்த்தைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்றன என்பது அர்த்தம், மேலும் இதில் இருந்து நான் சர்வவல்லமையுள்ளவர் என்பது தெளிவாகிறது. ஆகையினால், நான் பேசும் ஒவ்வொரு வாக்கியத்தின் பின்னும் இருக்கும் இலக்கையும் நோக்கத்தையும் ஒருவரால் இன்னும் கூடுதலான தெளிவுடன் பார்க்க முடியும். நான் முன்னரே கூறியிருக்கிறபடி, என் மனிதத்தன்மைக்குள் நான் பேசும் யாவும் என் வெளிப்பாட்டின் ஓர் அம்சமாகும். இப்படி, என் சாதாரண மனிதத்தன்மைக்குள் நான் கூறுவதில் உறுதியாய் இருக்க முடியாதவர்களும் உண்மையாக விசுவாசிக்காதவர்களும் அகற்றப்படவேண்டும்! என் சாதாரண மனிதத்தன்மை என்பது என் பரிபூரண தெய்வீகத் தன்மையின் ஒரு தவிர்க்கமுடியாத அம்சம் என்று நான் திரும்பத்திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன், ஆனாலும் பலரும் பின்னதில் கவனம் செலுத்தி முந்தியதை அலட்சியப்படுத்துகிறார்கள். நீ குருடன்! உன் எண்ணங்களுக்கு என்னால் இணங்க முடியாது என்றும் மனிதனாகிய என்னால் உன்னோடு இணங்கவில்லை என்றும் நீ சொல்லுகிறாய். இந்த ஜனங்கள் என் ராஜ்யத்தில் இருக்க முடியுமா? நான் என் காலின் கீழ் உன்னை மிதிப்பேன்! என்னை எதிர்த்து மேலும் கலகம் செய் என்று நான் உனக்குச் சவால் விடுகிறேன்! இத்தகைய விருப்பத்துடன் தொடர நான் உன்னை தைரியப்படுத்துகிறேன்! என் புன்சிரிப்பு உன் எண்ணங்களோடு பொருந்தவில்லை, என் பேச்சு உன் காதுகளுக்கு இன்பமாக இல்லை, என் செயல்பாடுகள் உனக்கு நன்மை அளிக்கவில்லை—நான் கூறுவது சரிதானே? இந்த விஷயங்கள் எல்லாம் உன் விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். இப்படியா தேவன் இருப்பார்? இந்த ஜனங்கள் இன்னும் என் வீட்டில் இருந்துகொண்டு என் ராஜ்யத்தில் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறார்களா? நீ பகல்கனவு காணவில்லையா? எப்போதில் இருந்து விஷயங்கள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன! நீ எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க விரும்புகிறாய், இருந்தும் என்னிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற இன்னும் நீ விரும்புகிறாய். நான் உனக்குச் சொல்கிறேன்: நிச்சயமாக இல்லை! நான் பல முறை கூறியிருக்கிறபடி, என்னுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசித்து ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள் நான் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளை நான் ஏன் வலியுறுத்திக் கூறுகிறேன்? ஒவ்வொருவரும் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிவதோடு நான் புரிந்தும் கொள்ளுகிறேன்; ஒவ்வொன்றாக அவர்களுடைய சிந்தனைகளைச் சுட்டிக்காட்டுவது எனக்குத் தேவை இல்லை. என் நியாயத்தீர்ப்பு வார்த்தைகளின் மூலம் அவர்களுடைய உண்மை வடிவங்கள் வெளிப்படுத்தப்படும். என்னுடைய நியாயசனத்தின் முன் அவர்கள் யாவரும் துக்கத்தோடு அழுவார்கள். இது யாராலும் மாற்ற முடியாத வெளிப்படையான உண்மை. முடிவில், நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பாதாளக்குழிக்குள் பிரவேசிக்கச் செய்வேன். பிசாசான சாத்தானை நியாயந்தீர்ப்பதன் மூலம் இதுவே நான் அடைய விரும்பும் இறுதி பலன். ஒவ்வொருவரையும் கையாள நான் நியாயத்தீர்ப்பையும் நிர்வாகஆணைகளையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறுதான் நான் ஜனங்களைச் சிட்சிக்கிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆழமான உள்நோக்கு உள்ளதா? நான் சாத்தானுக்கு ஒரு காரணத்தை அளிக்க வேண்டியதில்லை; அது தன் மரணத்திற்கு ஓர் அங்குல இடைவெளியில் இருக்கும் வரை மற்றும் இரக்கத்திற்காகத் திரும்பத் திரும்பக் கெஞ்சும் வரை நான் என் இருப்புக்கோலைப் பயன்படுத்தி அதை அடிக்கிறேன். ஆகையினால், என் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை ஜனங்கள் வாசிக்கும்போது, அவர்களால் அதைச் சிறிதளவும் புரிந்துகொள்ள முடிவதில்லை, ஆனால் என் கண்ணோட்டத்தில் இருந்து, ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வாக்கியமும் என் நிர்வாக ஆணைகளின் நடைமுறைபடுத்துதல் ஆகும். இது ஒரு வெளிப்படையான உண்மை.

நான் இன்று நியாயத்தீர்ப்பைக் குறிப்பிட்டதால், இந்தத் தலைப்பு நியாயாசனத்தைப் பற்றிக் கூறுகிறது. கடந்த காலத்தில், கிறிஸ்துவின் நியாயசனத்தின் முன் நீங்கள் நியாயத்தீர்ப்பைப் பெறுவீர்கள் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். நியாயத்தீர்ப்பைப் பற்றி உங்களுக்குச் கொஞ்சம் புரிதல் இருக்கிறது, ஆனால் உங்களால் நியாயாசனத்தைக் கற்பனை செய்ய முடியாது. ஒருவேளை ஜனங்கள் நியாயாசனத்தை ஒரு ஜடப் பொருளாக நினைக்கலாம், அல்லது அவர்கள் அது ஒரு பெரிய மேசை, அல்லது ஒருவேளை மதச்சார்பற்ற உலகிலுள்ள ஒரு நீதிபதியின் ஆசனத்தைப் போல கற்பனை செய்யலாம். நிச்சயமாக, இம்முறை என்னுடைய விளக்கத்தில், நீங்கள் சொன்னதை நான் மறுக்க மாட்டேன், ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஜனங்களின் கற்பனையில் இருக்கும் விஷயங்கள் இன்னும் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இவ்வாறு மக்கள் கற்பனை செய்வதற்கும் என் அர்த்தத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளி இன்னும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருப்பது போன்று மிகப் பெரியதாகும். மக்களின் எண்ணங்களில், பலர் நியாயாசனத்தின் முன் துக்கத்தால் அழுது இரக்கத்திற்காகக் கெஞ்சி சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கிறார்கள். இதில் மனிதக் கற்பனை அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டது. அதை விட மேலாக யாராலும் எதையும் கற்பனை செய்ய முடியாது. அப்படியானால், நியாயாசனம் என்றால் என்ன? நான் இந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் முன்னர், நீங்கள் உங்களுடய முந்தையத் தவறான கருத்துக்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்; அப்படியானால்தான் என்னுடைய இலக்கை அடைய முடியும். இந்த வகையில் மட்டுந்தான் உங்கள் கருத்துக்களும் சிந்தனைகளும் அகற்றப்பட முடியும். நான் பேசும் போதெல்லாம், நீங்கள் செவிகொடுக்க வேண்டும். நீங்கள் இனியும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உலகத்தோற்ற முதலே என் நியாயாசனம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. கடந்த காலங்களிலும் தலைமுறைகளிலும், அதன் முன் பலர் இறந்தனர், அதன் முன் ஜீவனுக்குத் திரும்பி பலர் எழுந்தும் உள்ளனர். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, என் நியாயத்தீர்ப்பு ஒருபோதும் முடிவுறுவதில்லை, ஆகவே என் நியாயாசனம் எப்போதும் இருக்கிறது. நியாயாசனம் குறிப்பிடப்படும் போதெல்லாம், அனைத்து மனிதர்களும் கொஞ்சம் அச்சத்தை உணர்கிறார்கள். நிச்சயமாக, நான் மேலே கூறியதில் இருந்து, இந்த நியாயாசனம் என்ன என்பது பற்றி உங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. நியாயாசனம் நியாயத்தீர்ப்போடு இணைந்ததாக இருக்கிறது, ஆனால் அவை இரண்டும் இரு வகையான வஸ்துக்கள் ஆகும். (இங்கு “வஸ்து” ஜடப் பொருளைக் குறிக்கவில்லை, ஆனால் வார்த்தைகளைக் குறிக்கிறது. இந்த வஸ்துவை மனிதர்களால் பார்க்கவே முடியாது). நியாயத்தீர்ப்பு என் வார்த்தைகளைக் குறிக்கிறது. (அவை கடுமையாக அல்லது மென்மையாக இருந்தாலும், அவை எல்லாம் என் நியாயத்தீர்ப்பில் அடங்கியுள்ளன. இவ்வாறு என் வாயில் இருந்து வழங்கப்படும் எதுவும் நியாயத்தீர்ப்பே.) முன்னர், ஜனங்கள் என் வார்த்தைகளை வெவ்வேறு வகைகளாகப் பிரித்தனர். அதில், நியாயத்தீர்ப்பு வார்த்தைகள், மென்மையான வார்த்தைகள், ஜீவனை வழங்கும் வார்த்தைகள் அடங்கும். இன்று, உங்களுக்காக நான் தெளிவாக்குவது என்னவென்றால் நியாயத்தீர்ப்பும் என் பேச்சுக்களும் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, நியாயத்தீர்ப்பு என் வார்த்தைகளாக இருக்கின்றன, மேலும் என் வார்த்தைகளே நியாயத்தீர்ப்பாக இருக்கின்றன; நீங்கள் அவற்றைத் தனியாகப் பேசவே கூடாது. கடுமையான வார்த்தைகளே நியாயத்தீர்ப்பு என்று ஜனங்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய புரிதல் முழுமையானது அல்ல. நான் சொல்வது எல்லாம் நியாயத்தீர்ப்பே. கடந்த காலத்தில் பேசப்பட்ட நியாயத்தீர்ப்பின் ஆரம்பம் என் ஆவி அதிகாரப்பூர்வமாக எல்லா இடங்களிலும் கிரியைசெய்யவும் என் நிர்வாக ஆணைகளை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்த காலத்தைக் குறித்தது. இந்த வாக்கியத்தில், “நியாயத்தீர்ப்பு” உண்மையான எதார்த்தத்தைக் குறிக்கிறது. நான் இப்போது நியாயாசனத்தை விளக்குவேன்: நியாயாசனம் நித்தியத்தில் இருந்து நித்தியத்திற்கு நிலைத்து என்னுடைய நியாயத்தீர்ப்புக்கு அருகருகே செல்கிறது என்று நான் ஏன் கூறுகிறேன்? நியாயத்தீர்ப்பைக் குறித்த என் விளக்கத்தில் இருந்து நீங்கள் கொஞ்சம் புரிதலைப் பெற்றிருக்கிறீர்களா? நியாயாசனம் என்பது மனிதனாக இருக்கும் என்னைக் குறிக்கிறது. நித்தியத்தில் இருந்து நித்தியத்திற்கு நான் எப்போதும் குரலெழுப்பிப் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் என்றென்றும் ஜீவிக்கிறேன், ஆகவே என் நியாயாசனமும் என் நியாயத்தீர்ப்பும் நித்திய இணக்கத்தில் இருக்கின்றன. இப்போது இது தெளிவாகியிருக்க வேண்டும்! ஜனங்கள் தங்கள் கற்பனைகளில், என்னை ஒரு பொருளாக நடத்துகின்றனர், ஆனால் இதைப் பொறுத்தவரையில், நான் உங்களைக் குற்றம் சாட்டவுமில்லை அல்லது கண்டனம் செய்யவும் இல்லை. நீங்கள் கீழ்ப்படிந்து என் வெளிப்படுத்தல்களை ஏற்பீர்கள், அதிலிருந்து நான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய தேவன் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று மட்டுமே நம்புகிறேன்.

என் வார்த்தைகள் மனிதர்களுக்கு முற்றிலுமாக புரியாது, என் அடிச்சுவடுகளை அவர்களால் கண்டுபிடிக்க இயலாது. என்னுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு சாத்தியமில்லாதது. இப்படி, இன்று நீங்கள் இருக்கும் நிலை (என் வெளிப்படுத்துதலைப் பெறவும், என் சித்தத்தை அதனுள் இருந்து கிரகிக்கவும், என் அடிச்சுவட்டின் மூலம் என்னைப் பின்தொடரவும் முடியும் நிலை) முற்றிலுமாக என்னுடைய அதிசயச் செயல்களாலும், என் கிருபையாலும், என் இரக்கத்தாலும் கிடைத்தது. ஒரு நாள் என் ஞானத்தைப் பார்க்கவும், என் கரங்களால் நான் செய்தவற்றைப் பார்க்கவும், என் கிரியையின் அதிசயங்களைக் காணவும் உங்களை அனுமதிப்பேன். அந்த நேரம் வரும்போது, என் முழு நிர்வாகத் திட்டத்தின் வரைபடங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும். பிரபஞ்ச உலகம் முழுவதிலும், ஒவ்வொரு நாளும், என் அதிசயச் செயல்களின் பகுதிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. என் நிர்வாகத்திட்டம் நிறைவேற எல்லோரும் ஊழியம் செய்கிறார்கள். இது முற்றிலுமாக வெளிப்படுத்தப் படும்போது, ஊழியம் செய்வதற்கு எந்த வகையான ஜனங்களை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன், என் சித்தத்தை நிறைவேற்ற எந்த வகையான ஜனங்களை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன், சாத்தானைப் பயன்படுத்துவதன் மூலம் எதை நான் சாதித்திருக்கிறேன், நான் சொந்தமாக எதை நிறைவேற்றி இருக்கிறேன், எந்த வகையான மக்கள் விம்முகிறார்கள், எந்த வகையான மக்கள் பற்களைக் கடித்துக் கொள்ளுகிறார்கள், எந்த வகையான மக்கள் அழிவை அடைவார்கள், எந்த வகையான மக்கள் கேடடைவார்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்பட்டு முற்றிலுமாக எரிக்கப்படப் போகிறவர்களை “அழிவு” என்பதால் குறிக்கிறேன்; நித்தியத்திற்கும் வாடும்படி பாதாளக் குழிக்குள் போடப்படுபவர்களை “கேடு” என்பதால் நான் குறிக்கிறேன். ஆகையால், அழிவையும் கேட்டையும் ஒரே விஷயம் என்று தவறாக எண்ண வேண்டாம்; மாறாக, இவை இரண்டும் மிகவும் வேறானவை. என் நாமத்தை விட்டு விலகுகிற ஊழியம் செய்வோர் கேடடைவார்கள், என் நாமத்தினால் அல்லாதவர்கள் அழிவடைவார்கள். கேடடைபவர்கள் என் நியாயத்தீர்ப்புக்குப் பின் எனக்கு நித்திய துதியை அளிப்பார்கள் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் இதுதான்; ஆனாலும், அந்த ஜனங்கள் என் சிட்சையிலிருந்து விடுபடுவதில்லை, அவர்கள் எப்போதும் என் ஆளுகையை ஏற்றுக்கொள்வார்கள். ஜனங்களை சிட்சிக்க நான் பயன்படுத்தும் கரமே பாதாளக்குழி என்று நான் சொல்லுவதன் காரணம் இதுவே. எல்லாம் என் கையில் இருக்கிறது என்றும் நான் சொல்லுகிறேன். “பாதாளக்குழி” சாத்தானின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது என்று நான் சொல்லியிருந்தாலும், அதுவும் என் கரங்களில்தான் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி நான் ஜனங்களை சிட்சிக்கிறேன். இப்படி, எல்லாமே என் கரங்களில் இருக்கின்றன, முரண்பாடு எதுவும் இல்லை. என் வார்த்தைகள் பொறுப்பற்றவையாக இல்லை; அவை எல்லாம் சரியாகவும் ஒத்திசைவாகவும் இருக்கின்றன. அவை பொய்யானவையும் இல்லை, அர்த்தமற்றவையும் இல்லை, மேலும் ஒவ்வொருவரும் என் பேச்சுக்களை விசுவாசிக்க வேண்டும். எதிர்காலத்தில், இதனால் நீங்கள் துன்பம அடைவீர்கள். என் வார்த்தைகளினால் பலர் உணர்வற்றுப் போகிறார்கள் அல்லது வேதனைப்படுகிறார்கள், அல்லது ஏமாற்றம் அடைகிறார்கள், அல்லது மனம் முறிந்து அழுகிறார்கள் அல்லது விம்முகிறார்கள். எல்லாவகையான பதில்வினைகளும் இருக்கும். ஒருநாள், என்னால் வெறுக்கப்படும் எல்லா ஜனங்களும் பின்வாங்கும்போது, என் பெரும் கிரியை நிறைவேறும். எதிர்காலத்தில், முதற்பேறான குமார்களால் பலர் விழுவார்கள், முடிவில், அவர்கள் எல்லாரும் ஒரு நேரத்தில் ஒரு படியாக விட்டுப்போவார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், என் வீடு படிப்படியாக பரிசுத்தமாக மாறும், என் பக்கத்தில் இருந்து எல்லா வகையான பிசாசுகளும் படிப்படியாகப் பின்வாங்கிப்போகும், அமைதியாக, கீழ்படிதலோடு, ஒரு வார்த்தையும் குறை கூறாமல் வெளியேறும். அதன்பின்னர், என் முதற்பேறான குமாரர்கள் எல்லோரும் வெளிப்படுத்தப்படுவார்கள், நான் என் கிரியையின் அடுத்த படிநிலையைத் தொடங்குவேன். அதன் பின்னர்தான் முதற்பேறான குமாரர்கள் என்னோடு ராஜாக்களாகி முழு பிரபஞ்சத்தையும் அரசாளுவார்கள். இவையே என் கிரியையின் படிநிலைகள், மேலும் அவை என் நிர்வாகத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக அமையும். இதைப் புறக்கணிக்க வேண்டாம்; இல்லையென்றால், நீங்கள் ஒரு தவறைச் செய்து விடுவீர்கள்.

என் வார்த்தைகள் உனக்கு வெளிப்படுத்தப்படும் நேரமே நான் என் கிரியையைத் தொடங்கும் நேரம். என்னுடைய ஒரு வார்த்தை கூட நிறைவேறாமல் போகாது. எனக்கு, ஒருநாள் ஆயிரம் வருஷம் போன்றது, ஆயிரம் வருஷங்கள் ஒரு நாள் போன்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? காலம் பற்றிய உங்கள் கருத்துரு என்னுடையதை விட மிகவும் வேறுபட்டது, ஏனெனில் நான் பிரபஞ்ச உலகைக் கட்டுப்படுத்துகிறேன், நான் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறேன். ஒவ்வொரு நாளும் என் கிரியை படிப்படியாக, கட்டம் கட்டமாகச் செய்யப்படுகிறது; மேலும், முன்னேறிச் செல்லும் என் கிரியையின் போக்கு ஒரு நொடி கூட நிற்காது: ஒவ்வொரு நொடியிலும், அது தொடர்ந்து செய்யப்படுகிறது. என்னுடைய வார்த்தைகள் உலகத் தோற்றத்தில் இருந்து ஒருபோதும் தடைபட்டதில்லை. இந்நாள் வரை நான் தொடர்ந்து பேசி குரல் கொடுத்து வருகிறேன்; எதிர்காலத்துக்குள்ளும் இது மாறாமல் இருக்கும். இருந்தாலும், என்னுடைய நேரம் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, மேலும் அது மிகவும் ஒழுங்கு முறையாக உள்ளது. நான் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வேன் (என்னைப் பொறுத்தவரையில், எல்லாம் விடுவிக்கப்படும்; எல்லாம் சுதந்திரமாக இருக்கும்), என்னுடைய கிரியையின் படிநிலையைப் பொறுத்தவரையில் நான் கொஞ்சம் கூட தடைசெய்யப்படுவதில்லை. என்னால் என் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒழுங்குபடுத்த முடியும்; என்னால் உலகிலுள்ள ஒவ்வொருவரையும் ஒழுங்குபடுத்த முடியும்—இருந்தாலும், நான் அலுவலாகவே இல்லை, ஏனெனில் என் ஆவி கிரியைச் செய்கிறது. என் ஆவி எல்லா இடத்தையும் நிரப்புகிறது, ஏனெனில் நான்தான் தனித்துவமான தேவன், மேலும் முழு பிரபஞ்ச உலகமும் என் கைகளில் இருக்கிறது. இப்படி, நான் சர்வல்லமையுள்ளவர், நான் ஞானமுள்ளவர், என் மகிமை பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையையும் நிரப்புகிறது என்று ஒருவரால் பார்க்க முடியும்.

முந்தைய: அத்தியாயம் 106

அடுத்த: அத்தியாயம் 108

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக