அத்தியாயம் 120

சீயோனே! களிகூரு! சீயோனே! கெம்பீரித்துப் பாடு! வெற்றியுடன் திரும்பியுள்ளேன், ஜெயத்துடன் திரும்பியுள்ளேன்! அனைத்து ஜனங்களே! ஒழுங்கின்படி வரிசைப்படத் துரிதப்படுங்கள்! அனைத்துச் சிருஷ்டிப்புகளே! இப்போது நிறுத்துங்கள், ஏனென்றால் என் ஆள்தத்துவம் முழுப் பிரபஞ்சத்தையும் எதிர்கொண்டு உலகின் கிழக்குத் திசையில் தோன்றுகிறார்! முழங்காற்படியிட்டு ஆராதிக்காமல் இருக்க யார் துணிகிறார்கள்? என்னை உண்மையான தேவன் என்று அழைக்காமல் இருக்க யார் துணிகிறார்கள்? யார் பயபக்தியுடன் நோக்கிப் பார்க்காமலிருக்க துணிகிறார்கள்? துதி செலுத்தாமலிருக்க யார் துணிகிறார்கள்? களிகூராமலிருக்க யார் துணிகிறார்கள்? என் ஜனங்கள் என் சத்தத்தைக் கேட்பார்கள், என் குமாரர்கள் என் ராஜ்யத்தில் பிழைப்பார்கள்! மலைகள், ஆறுகள் மற்றும் அனைத்துக் காரியங்களும் முடிவில்லாமல் ஆரவாரம் செய்யும், மேலும் இடைவிடாமல் துள்ளிக் குதிக்கும். இந்த நேரத்தில், யாரும் பின்வாங்கத் துணிய மாட்டார்கள், யாரும் எதிர்க்கும்படி எழும்பத் துணிய மாட்டார்கள். இது எனது அற்புதமான செயலாகும், அதை விட மேலாக, இது என்னுடைய பெரிதான வல்லமையாகும்! எல்லாவற்றையும் அவைகளின் இருதயத்தில் என்னை வணங்கும்படி செய்வேன், இதையும் தாண்டி, எல்லாவற்றையும் என்னைத் துதிக்கச் செய்வேன்! இதுவே எனது ஆறாயிரம் ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் இறுதி நோக்கமாகும், மேலும் இதுவே நான் நியமித்த ஒன்றாகும். எந்த ஒரு நபரோ அல்லது பொருளோ அல்லது ஒரு நிகழ்வோ என்னை தடுக்க அல்லது என்னை எதிர்க்கத் துணிகிறதில்லை. என் ஜனங்கள் அனைவரும் என் மலைக்கு (வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நான் பின்னர் உருவாக்கும் உலகத்திற்கு) ஓடி வருவார்கள் மற்றும் என்னிடம் மாட்சிமையும் நியாயத்தீர்ப்பும் இருப்பதால், நான் அதிகாரத்தைக் கொண்டிருப்பதால் அவர்கள் என் முன் சரணடைவார்கள். (இது நான் சரீரத்தில் இருக்கும் போது நடப்பதைக் குறிக்கிறது. எனக்கு மாம்சத்திலும் அதிகாரம் உண்டு, ஆனால் மாம்சத்தில் இருக்கையில் நேரம் மற்றும் இடத்தின் வரம்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதால் நான் முழு மகிமையைப் பெற்றேன் என்று கூற முடியாது. நான் மாம்சத்தில் முதற்பேறான குமாரர்களைப் பெற்றாலும் நான் மகிமை பெற்று விட்டேன் என்று சொல்ல முடியாது. நான் சீயோனுக்குத் திரும்பி எனது தோற்றத்தை மாற்றும் போது தான் நான் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாகக் கூறமுடியும், அதாவது நான் மகிமை பெற்றதாகக் கூறமுடியும்.) ஒன்றும் எனக்குக் கடினமாக இருக்காது. என் வாயின் வார்த்தைகளால் அனைத்தும் அழிக்கப்படும், என் வாயின் வார்த்தைகளால் அனைத்தும் உருவாகி முழுமையாக்கப்படும். இதுவே என் பெரிதான வல்லமையும் இதுவே என் அதிகாரமும் ஆகும். நான் வல்லமை நிறைந்தவராகவும் அதிகாரத்தால் நிரம்பியவராகவும் இருப்பதால் என்னைத் தடை செய்ய ஒரு நபரும் துணிய முடியாது. நான் ஏற்கனவே எல்லாவற்றையும் ஜெயித்து விட்டேன், கலகத்தின் குமாரர் யாவர் மீதும் ஏற்கனவே நான் ஜெயம் பெற்று விட்டேன். சீயோனுக்குத் திரும்புவதற்காக என் முதற்பேறான குமாரர்களை என்னுடன் அழைத்து வருகிறேன். நான் மட்டும் தனியாகச் சீயோனுக்குத் திரும்புவதில்லை. ஆகையால் அனைவரும் என் முதற்பேறான குமாரர்களைக் காண்பார்கள், இதனால் எனக்காகப் பயபக்தியுள்ள இருதயத்தை வளர்த்துக் கொள்வார்கள். முதற்பேறான குமாரர்களைப் பெறுவதில் இதுவே என் குறிக்கோளாகும், மேலும் இது உலகம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து நான் கொண்ட என் திட்டமும் ஆகும்.

அனைத்தும் ஆயத்தமானதும், அது நான் சீயோனுக்குத் திரும்பும் நாளாக இருக்கும், மேலும் இந்த நாள் அனைத்து ஜனங்களாலும் நினைவுகூரப்படும். நான் சீயோனுக்குத் திரும்பும்போது, பூமியில் உள்ள அனைத்தும் அமைதியாக இருக்கும், மேலும் பூமியில் உள்ள அனைத்தும் சமாதானத்துடன் இருக்கும். நான் சீயோனுக்குத் திரும்பும்போது, அனைத்தும் அதன் உண்மையான தோற்றத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளும். பின்னர், நான் சீயோனில் என் கிரியையைத் தொடங்குவேன். நான் பொல்லாதவர்களைத் தண்டித்து நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பேன், என் நீதியை நான் செயல்படச் செய்து, நான் என் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவேன். எல்லா ஜனங்களையும் எல்லாக் காரியங்களையும் என் தண்டிக்கும் கையை அனுபவித்து உணரச் செய்யும்படி, எல்லாவற்றையும் நிறைவேற்ற என் வார்த்தைகளை நான் பயன்படுத்துவேன், மேலும் எல்லா ஜனங்களையும் என் முழு மகிமையையும் என் முழு ஞானத்தையும் என் முழு தயாளகுணத்தையும் காணச் செய்வேன். எந்த நபரும் நியாயத்தீர்ப்பில் எழும்பத் துணிய மாட்டார்கள், ஏனென்றால் என்னில், அனைத்தும் நிறைவேற்றப்பட்டது; மேலும் இங்கே, ஒவ்வொரு மனிதனும் என் முழு மேன்மையைக் காணட்டும், என் முழு வெற்றியை ருசிக்கட்டும், ஏனென்றால் என்னில் அனைத்தும் வெளிப்படும். இதிலிருந்து, என்னுடைய பெரிதான வல்லமையையும் என் அதிகாரத்தையும் காண முடியும். யாரும் என்னை அவமதிக்கத் துணிய மாட்டார்கள், யாரும் என்னைத் தடுக்கவும் துணிய மாட்டார்கள். என்னில், அனைத்தும் திறக்கப்பட்டே உள்ளன. யார் எதையும் மறைக்கத் துணிவார்கள்? நான் அந்த நபருக்கு நிச்சயம் இரக்கம் காட்ட மாட்டேன்! இப்படிப்பட்டப் பாதகர்கள் என் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும், மேலும் அத்தகையக் கழிவுகள் என் பார்வையில் இருந்து அகற்றப்பட வேண்டும். நான் அவர்களை இருப்புக்கோலால் ஆட்சி செய்வேன், சிறிதும் இரக்கமில்லாமல் அவர்களின் உணர்வுகள் காயப்படுவதை கண்டுகொள்ளாமல், அவர்களை நியாயந்தீர்க்கும்படி நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் உணர்ச்சியும் மாட்சிமையும் இல்லாத, அவமதிக்கப்பட முடியாத தேவன் நானே. அனைவரும் இதைப் புரிந்து கொள்ளவும் காணவும் வேண்டும், இல்லையெனில் “எந்த நோக்கமும் அல்லது காரணமும் இல்லாமல்” என்னால் அடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுவார்கள், ஏனென்றால் என்னை அவமதிக்கும் அனைவரையும் என்னுடைய கோல் அடிக்கும். அவர்களுக்கு எனது ஆட்சிமுறை ஆணைகள் தெரியுமா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அது என்னிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் என்னுடைய ஆள்தத்துவம் யாராலும் அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். நான் ஒரு சிங்கம் என்று கூறப்படுவதற்கு இதுவே காரணமாகும்; நான் யாரைத் தொட்டாலும், நான் அடிக்கிறேன். அதனால் தான் நான் இரக்கமுள்ள கிருபையுள்ள தேவன் என்று சொல்வது இப்போது தூஷணம் என்று கூறப்படுகிறது. சாராம்சத்தில், நான் ஒரு ஆட்டுக்குட்டி அல்ல, ஆனால் ஒரு சிங்கம். ஒருவரும் என்னை அவமதிக்கத் துணிவதில்லை; யார் என்னை அவமதித்தாலும் நான் உடனடியாக இரக்கமின்றி மரணத் தண்டனை அளிப்பேன். என் மனநிலையைக் காண்பிக்க இது போதுமானதாகும். ஆகையால் இறுதி காலத்தில் ஒரு பெரிய குழுவான ஜனங்கள் பின்வாங்குவார்கள், இதைத் தாங்கிக் கொள்வது ஜனங்களுக்குக் கடினமாக இருக்கும், ஆனால் என் பங்கிற்கு நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், நான் இதைக் கடினமான வேலையாகவேப் பார்க்கவில்லை. என் மனநிலை அப்படிப்பட்டதாகும்.

என்னைக் குறித்த அனைத்திற்கும் கீழ்ப்படிவதற்கு ஜனங்கள் கீழ்ப்படிகிற இருதயத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; அவர்கள் அப்படிச் செய்தால், நிச்சயமாக நான் மனுக்குலத்தைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன், ஏனென்றால், நான் சொன்னது போல், என்னுடன் இணக்கமாக இருப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், அதே நேரத்தில் எனக்கு விரோதமாக இருப்பவர்கள் சபிக்கப்படுவார்கள். நான் இதை நியமித்தேன், யாராலும் இதை மாற்ற முடியாது. நான் தீர்மானித்த விஷயங்கள் நான் நிறைவேற்றியவையாகும், அதை எதிர்க்கிற யாரானாலும் உடனடியாகத் தண்டிக்கப்படுவார்கள். சீயோனில் எனக்குத் தேவையான அனைத்தும் மற்றும் நான் விரும்பும் அனைத்தும் என்னிடம் உள்ளன. சீயோனில் உலகத்தின் தடம் எதுவும் இல்லை, உலகத்துடன் ஒப்பிடுகையில், அது ஒரு செல்வச் செழிப்பான, பிரம்மாண்டமான அரண்மனையாகும்; ஆனால் ஒருவர் கூட அதில் இதுவரையிலும் நுழைந்தில்லை, ஆகையால், மனிதனின் கற்பனையில், அது இருக்கவே இருக்காது. சீயோனில் வாழ்க்கையானது பூமியிலுள்ள வாழ்க்கையைப் போல் அல்ல; பூமியில் வாழ்க்கை என்பது உண்பது, உடைகளை உடுத்துவது, விளையாடுவது மற்றும் இன்பத்தைத் தேடுவது போன்றதல்ல, ஆனால் சீயோனிலோ அது மிகவும் வித்தியாசமானதாகும். அது பிரபஞ்சத்தின் முழு இடத்தையும் நிரப்பி, ஆனால் எப்போதும் ஒன்றிணைந்து இருக்கும்படி கூடிவரும் பிதா மற்றும் குமாரர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிற வாழ்க்கையாகும். இப்போது அது இந்த அளவிற்கு வந்து விட்டபடியால், சீயோன் எங்கிருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் வசிக்கும் இடமே சீயோன் ஆகும்; அது என் ஆள்தத்துவத்தின் இருப்பிடமாகும். ஆகையால், சீயோன் ஒரு பரிசுத்த இடமாக இருக்க வேண்டும், மேலும் அது பூமியிலிருந்து வெகுதொலைவில் இருக்க வேண்டும். அதனால் தான் நான் பூமியின் ஜனங்கள், பொருட்கள் மற்றும் பூமிக்குரிய காரியங்களை வெறுக்கிறேன் என்றும், நான் உண்பதையும், குடிப்பதையும், விளையாடுவதையும், மாம்சத்தின் இன்பம் தேடுதலையும் வெறுக்கிறேன் என்றும் சொல்கிறேன், ஏனென்றால் பூமிக்குரிய இன்பங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவற்றை சீயோனில் இருக்கிற வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது; அதுவே வானத்திற்கும் பூமிக்குமுள்ள வித்தியாசமாகும், மேலும் இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவே வழியில்லை. ஜனங்கள் சீயோனைக் குறித்து ஒன்றும் கேள்விப்படவில்லை என்பது தான் பூமியில் மனிதனால் தீர்க்க முடியாத பல புதிர்கள் இருப்பதற்கான காரணமாகும். நல்லது, சீயோன், மிகச் சரியாக எங்கே இருக்கிறது? ஜனங்கள் கற்பனை செய்வது போல, அது வேறொரு கிரகத்தில் இருக்கிறதா? இல்லை! அது மனிதனின் மனதில் உள்ள ஒரு கற்பனை மட்டுமே. நான் குறிப்பிட்ட மூன்றாம் வானமானது, முன்பே கற்பனை செய்யப்பட்ட அர்த்தத்தைக் கொண்டதாக மனிதனால் கருதப்படுகிறது, ஆனால் ஜனங்கள் தங்கள் கருத்துக்களில் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது என் அர்த்தத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாம் வானம் என்பது சிறிதும் பொய்யில்லை. அதனால் தான் நான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானத்துக்குரிய காரியங்களை அழிக்க மாட்டேன் என்று சொல்கிறேன், நான் வானத்தையும் பூமியையும் அகற்ற மாட்டேன். என்னுடைய வாசஸ்தலத்தை நான் அழிக்க முடியுமா? நான் சீயோன் மலையை அகற்ற முடியுமா? இது சிரிக்கத் தக்கதல்லவா? மூன்றாம் வானம் என் வாசஸ்தலம்; அது சீயோன் மலை, மேலும் இது முழுமையானது. (அது முழுமையானது என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனென்றால் நான் இப்போது சொல்வதை மனிதனால் சிறிதளவும் புரிந்து கொள்ள முடியாது; அவனால் கேட்க மட்டுமே முடியும். மனிதனின் சிந்தனையின் நோக்கம் வெறுமனே அதை உள்ளடக்க முடியாது, எனவே ஜனங்கள் இதை ஒரு கட்டுக்கதையாகக் கருதாதபடி நான் இப்போது சீயோனைப் பற்றி மேலும் எதையும் சொல்லப் போவது இல்லை.)

நான் சீயோனுக்குத் திரும்பியவுடன், பூமியில் உள்ளவர்கள் கடந்த காலங்களைப் போலவே என்னைத் தொடர்ந்து புகழ்வார்கள். விசுவாசமாக ஊழியஞ்செய்கிற அவர்கள் எனக்கு ஊழியஞ்செய்ய எப்போதும் போல் காத்திருப்பார்கள், ஆனால் அவர்களின் செயல்பாடு முடிவுக்கு வந்திருக்கும். பூமியில் என் சமூகத்தின் சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதே அவர்கள் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஒன்றாகும். அந்த நேரத்தில், பேரிடரை அனுபவிப்பவர்களின் மீது நான் பேரழிவை தணிக்கத் தொடங்குவேன்; ஆனாலும் நான் ஒரு நீதியுள்ள தேவன் என்று எல்லோரும் நம்புகிறார்கள். விசுவாசமாக ஊழியஞ்செய்கிற அவர்களை நான் நிச்சயமாகத் தண்டிக்க மாட்டேன், ஆனால் அவர்கள் என் கிருபையை மட்டுமே பெற்றுக் கொள்ளச் செய்வேன். நான் எல்லாத் தீமை செய்பவர்களையும் தண்டிப்பேன் என்றும், நல்ல செயல்களைச் செய்பவர்கள் நான் அளிக்கும் பொருள் இன்பத்தைப் பெறுவார்கள் என்றும் நான் சொல்லியிருப்பதால், நானே நீதியின் தேவன் என்றும் உண்மையுள்ள தேவன் என்றும் நிரூபிக்கப்படுகிறது. நான் சீயோனுக்குத் திரும்பியவுடன், நான் உலகின் ஒவ்வொரு தேசத்தையும் நோக்கித் திரும்புவேன்; நான் இஸ்ரவேலர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்து எகிப்தியர்களைத் தண்டிப்பேன். இதுவே எனது கிரியையின் அடுத்த படியாகும். அப்போது இன்று இருப்பதைப் போலவே என் கிரியை இருக்காது: அது மாம்சத்தில் செய்யும் கிரியையாய் இருக்காது, ஆனால் மாம்சத்தை முழுமையாகத் தாண்டிச் செல்லும், நான் சொன்னது போலவே, அப்படியே ஆகும்; நான் கட்டளையிட்டபடியே, அது நிற்கும். பேசப்பட்ட எதுவாயினும், அது என் வாயிலிருந்து பேசப்படும் வரை, அது உண்மை நிலையில் உடனடியாக நிறைவேறும்; இதுவே என் வார்த்தைப் பேசப்பட்டு, அதே நேரத்தில் அது நிறைவேறுவதின் உண்மையான அர்த்தமாகும், ஏனென்றால் என் வார்த்தையே அதிகாரமாகும். பூமியில் உள்ள ஜனங்கள் அதைப் பற்றிப் பெருமளவில் புரிந்து கொள்ளாமல் இருக்க, அவர்களுக்குச் சில தடயங்களை வழங்குவதற்கான ஒரு முறையாக இருக்க, நான் இப்போது சில பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன். அந்த நேரம் வரும்போது, எல்லாம் என்னால் ஏற்பாடு செய்யப்படும், யாரும் தீமை செய்யும்படி வேண்டுமென்றே செயல்படக் கூடாது, இல்லையெனில் அவர்கள் என் கரத்தால் அடிக்கப்படுவார்கள். மனிதர்களின் கற்பனைகளில், நான் பேசுவது அனைத்தும் தெளிவற்றதாக இருக்கிறது, ஏனென்றால், என்ன இருந்தாலும், மனிதனின் சிந்தனை முறை குறுகியதாகும், மேலும் மனிதனின் சிந்தனையானது பரலோகத்திலிருந்து பூமி எவ்வளவு தொலைவில் உள்ளது என்று சொன்னேனோ அவ்வளவு தொலைவில் உள்ளது. எனவே இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. செய்ய வேண்டிய ஒரே காரியம் நான் சொல்கிறதோடு இணைந்து ஆதரவு தருவதே ஆகும்; இது காரியங்களின் தவிர்க்க முடியாத போக்காகும். நான் சொன்னேன்: “கடைசி நாட்களில், என் ஜனங்களைத் துன்புறுத்துவதற்காக மிருகம் எழும்பும், மேலும் மரணத்திற்குப் பயப்படுபவர்கள் மிருகத்தால் எடுத்துப் போகப்பட முத்திரையினால் குறிக்கப்படுவார்கள். என்னைப் பார்த்தவர்கள் மிருகத்தால் கொல்லப்படுவார்கள்.” இவ்வார்த்தைகளில் “மிருகம்” என்பது சந்தேகத்திற்கு இடமின்றி, மனுக்குலத்தை வஞ்சிக்கும் சாத்தானையே குறிக்கிறது. அதாவது, நான் சீயோனுக்குத் திரும்பும் போது ஊழியஞ்செய்கிற ஒரு பெரிய குழு பின்வாங்குவார்கள்; அதாவது அவர்கள் மிருகத்தால் கொண்டு போகப்படுவார்கள். இந்த சிருஷ்டிப்புகள் அனைத்தும் என் நித்திய தண்டனையைப் பெறும்படி பாதாளக் குழிக்குள் போவார்கள். “என்னைப் பார்த்தவர்கள்” என்பது விசுவாசமாக ஊழியஞ்செய்கிற என்னால் ஜெயங்கொள்ளப்பட்டவர்களைக் குறிக்கிறது. “என்னைப் பார்த்தது” என்பது, அவர்கள் என்னால் ஜெயங்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. “மிருகத்தால் கொல்லப்பட்டார்கள்” என்பது என்னால் ஜெயங்கொள்ளப்பட்டு, என்னை எதிர்த்து நிற்கத் தைரியமில்லாத சாத்தானைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊழியஞ்செய்கிற இவர்கள் மேல் சாத்தான் எந்தக் கிரியையும் செய்யத் துணிய மாட்டான், எனவே, இந்த ஜனங்களின் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும்; இது எனக்கு விசுவாசமாக இருக்கத் தக்க அவர்களின் ஆற்றல் காரணமாகக் கூறப்படுகிறது, மேலும் அதற்கு விசுவாசமாக ஊழியஞ்செய்கிற அவர்கள் என்னுடைய கிருபையையும் என்னுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று அர்த்தம் ஆகும். ஆகையால், அவர்களின் ஆத்துமா இரட்சிக்கப்படும் என்று நான் கூறுகிறேன். (இது மனிதனின் கருத்து மட்டுமே, மூன்றாம் வானத்திற்கு ஏறுவதைக் குறிக்கவில்லை.) ஆனால் அந்தப் பொல்லாத ஊழியர்கள் மீண்டும் சாத்தானால் கட்டப்பட்டு பின்னர் பாதாளக் குழிக்குள் வீசப்படுவார்கள். இதுவே அவர்களுக்கான என் தண்டனையாகும்; இதுவே அவர்களுக்கான சரியானத் தண்டனையும் அவர்கள் பாவங்களுக்கான பலனுமாகும்.

எனது கிரியையின் வேகம் விரைவாகும்போது, பூமியில் எனது நேரம் படிப்படியாகக் குறைகிறது. நான் சீயோனுக்குத் திரும்பும் நாள் நெருங்கிவிட்டது. பூமியில் என் கிரியை முடிவுக்கு வரும்போது, அதுவே நான் சீயோனுக்குத் திரும்புவதற்கான நேரமாகும். நான் பூமியில் வாழ்வதற்குச் சிறிதும் விரும்பவில்லை, ஆனால் என் நிர்வாகத்தின் பொருட்டு, எனது திட்டத்தின் பொருட்டு, நான் எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டேன். இன்று, நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நான் என் வேகத்தை விரைவுபடுத்துவேன், யாரும் என்னுடன் ஈடு கொடுக்க முடியாது. மனிதனால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ, மனிதன் புரிந்து கொள்ள முடியாத, ஆனாலும் பூமியின் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியவை அனைத்தையும் நான் உங்களுக்கு விரிவாகச் சொல்லுவேன். ஆகையால் நானே தேவனானவர், நான் காலத்தையும் இடத்தையும் தாண்டிச் செல்கிறவர் என்று நான் சொல்கிறேன். முதற்பேறான குமாரர்களைப் பெற்று இதனால் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எனது நோக்கம் மட்டும் இல்லாவிட்டால், நான் ஏற்கனவே சீயோனுக்குத் திரும்பியிருப்பேன்; இல்லையெனில் நான் முற்றிலும் மனுக்குலத்தை உருவாக்கி இருக்கவே மாட்டேன். மனுக்குலம் முழுவதையும் ஒரே நேரத்தில் அழிக்க நினைக்கும் அளவிற்கு மனித உலகத்தை நான் அருவருத்து, என்னை விட்டுத் தூரமாய் இருக்கிற ஜனங்களை நான் வெறுக்கிறேன். இருப்பினும் எனது கிரியைக்கு ஒழுங்கு மற்றும் அமைப்பு உள்ளது, விகிதாச்சாரமும் மிதவாதத் தன்மையும் உள்ளது மற்றும் அது தற்செயலானது அல்ல. நான் செய்வதெல்லாம் சாத்தானைத் தோற்கடிப்பதற்காக மட்டுமே, அதை விட அதிகமாக அது நான் எனது முதற்பேறான குமாரர்களுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இருக்கப் பண்ணும்படியாய்ச் செய்யப்படுகிறது. இதுவே என் குறிக்கோளாகும்.

முந்தைய: அத்தியாயம் 119

அடுத்த: முன்னுரை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக