தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள தேவனைப் பற்றி அவர்கள் எப்போதுமே முற்றிலும் மாறுபட்ட இரு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர், இது தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக அல்ல, ஆனால் சில நன்மைகளைப் பெறுவதற்காக அல்லது பேரழிவு ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் அவர்கள் ஓரளவு கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கீழ்ப்படிதல் நிபந்தனையுள்ளதாகும்; அது அவர்களின் சொந்த வாய்ப்புகளுக்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இது உங்கள் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் உங்கள் தலைவிதிக்காகவும் மட்டுமே இருந்தால், நீங்கள் முற்றிலும் விசுவாசிக்காமலிருப்பதே நல்லது. இவ்வாறான விசுவாசமானது சுய-வஞ்சகம், சுய-நம்பிக்கை, மற்றும் சுய-போற்றுதல் சார்ந்ததாகும். உங்கள் விசுவாசமானது தேவனுக்குக் கீழ்படிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை எனில், அவரை எதிர்த்ததற்காக நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்படிதலைத் தேடாதவர்கள் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். மக்கள் சத்தியத்தைத் தேடவும், அவருடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளவும், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும், அருந்தவும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவற்றைக் கடைபிடிக்குமாறும் தேவன் கேட்டுக்கொள்கிறார். இவை உங்களுடைய உண்மையான நோக்கங்களாக இருந்தால், தேவன் நிச்சயமாக உங்களை உயர்த்துவார் மற்றும் உங்களிடம் கிருபையுள்ளவராக இருப்பார். இது சந்தேகிக்க இயலாத மற்றும் மாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் நோக்கம் தேவனுக்குக் கீழ்படியாததாக இருந்தால் மற்றும் உங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்குமானால், நீங்கள் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும், அதாவது தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உங்கள் ஜெபங்களும் மற்றும் உங்களுடைய அனைத்துச் செயல்களும் அவருக்கு எதிரானதாக இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவராகவும் கனிவான நடத்தையுள்ளவராகவும் இருக்கலாம், உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் சரியானதாகத் தோன்றலாம் மற்றும் நீங்கள் கீழ்ப்படியும் ஒருவராக தோன்றலாம், ஆனால் உங்கள் நோக்கங்களுக்கும், தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் வரும்போது, நீங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதும், நீங்கள் செய்யும் அனைத்தும் தீமையானதுமாகும். ஆடுகளைப் போலக் கீழ்ப்படிந்தவர்களாகத் தோன்றினாலும், இதயத்தில் தீய நோக்கங்கள் கொண்டவர்கள், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாவர். அவர்கள் நேரடியாக தேவனைப் புண்படுத்துகிறார்கள், மேலும் அவர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி வெளிப்படுத்துவார், நயவஞ்சகர்கள் அனைவருமே, நிச்சயமாக, பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பார். கவலைப்பட வேண்டாம். தேவன் அவர்களில் கடைசியில் உள்ளவர் வரை அனைவரையும் சரிக்கட்டி அப்புறப்படுத்துவார்.

தேவனிடமிருந்து வரும் புதிய ஒளியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், மற்றும் இன்று தேவன் செய்கிற அனைத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், நீங்கள் அதை நாடாமல் அல்லது நீங்கள் அதைச் சந்தேகித்து, அதை நியாயந்தீர்த்தீர்களேயானால், அல்லது ஆராய்ந்து பகுப்பாய்வு செய்தால், தேவனுக்குக் கீழ்ப்படிய உங்களுக்கு மனம் இல்லை. இப்பொழுது இங்குள்ள ஒளி தோன்றும் பொழுது, நீங்கள் நேற்றைய தினத்தின் ஒளியைப் பொக்கிஷமாக மதித்து தேவனின் புதிய செயலை எதிர்த்தால், நீங்களும் அபத்தமானவரே, அதாவது தேவனை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களில் நீங்களும் ஒருவர். புதிய ஒளியைப் பாராட்டுவதும், அதை ஏற்றுக்கொண்டு அதைக் கடைப்பிடிப்பதும்தான் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான திறவுகோல் ஆகும். இது மட்டுமே உண்மையான கீழ்ப்படிதல் ஆகும். தேவன் மீது ஏக்கம் கொள்வதற்கான விருப்பம் இல்லாதவர்கள் வேண்டுமென்றே அவருக்குக் கீழ்ப்படிய இயலாதவராவர், மேலும் அவர்கள் அந்தஸ்தில் திருப்தி அடைந்ததன் விளைவாக தேவனை எதிர்க்கலாம். அந்த மனிதன் தேவனுக்குக் கீழ்படிய முடியாது, ஏனெனில் அவன் முன்பு வந்த காரியத்தினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளான். இதற்கு முன் வந்த காரியங்கள் தேவனைப் பற்றிய எல்லா விதமான கருத்துக்களையும் கற்பனைகளையும் மக்களுக்கு அளித்துள்ளன, மேலும் அவர்களுடைய மனதில் இவை தேவனின் உருவமாகிவிட்டன. இவ்வாறு, அவர்கள் விசுவாசிப்பது அவர்களின் சொந்தக் கருத்துக்களும், அவர்களின் சொந்தக் கற்பனைகளும் ஆகும். உங்கள் சொந்தக் கற்பனையிலுள்ள தேவனுடன் இன்று உண்மையான ஊழியம் செய்யும் தேவனை நீங்கள் அளவிட்டால், உங்கள் விசுவாசம் சாத்தானிடமிருந்து வருகிறது, மேலும் உங்கள் சொந்த விருப்பங்களால் கறைபட்டுள்ளது. தேவன் இந்த வகையான விசுவாசத்தை விரும்புவதில்லை. அவர்களுடைய உயர்ந்த சான்றுகளை பொருட்படுத்தாமல் மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய பணிக்காக அவர்கள் தம்முடைய ஜீவநாள் முழுவதும் முயற்சிகளை அர்ப்பணித்து, தங்களைத் தியாகம் செய்திருந்தாலும் கூட, இது போன்ற விசுவாசமுள்ள எவரையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் வெறுமனே அவர்களுக்கு ஒரு சிறிய கிருபையை அளித்து, அதை ஒரு காலத்திற்கு அனுபவிக்க அனுமதிக்கிறார். இது போன்ற மக்களால் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாது. பரிசுத்த ஆவியானவர் இவர்களுக்குள் கிரியை செய்யமாட்டார், மேலும் தேவன் அவர்களில் ஒவ்வொருவரையும் அவரவர் முறைப்படி புறம்பாக்கி விடுவார். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட இளைஞர்களும் வயதானவர்களும்தான் எதிர்ப்பவர்களாகவும் குறுக்கிடுபவர்களாகவும் இருக்கின்றனர், அத்தகையவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனால் புறம்பாக்கப்படுவார்கள். தேவனுக்குச் சிறிதளவும் கீழ்ப்படிதல் இல்லாமல், அவருடைய நாமத்தை வெறுமனே ஏற்றுக்கொண்டு, தேவனின் தயவு மற்றும் அன்பைப் பெற்றவர்களாக இருந்தாலும், பரிசுத்த ஆவியின் அடிச்சுவடுகளில் நடவாமல் மற்றும் பரிசுத்த ஆவியின் தற்போதைய செயல் மற்றும் சொல்லுக்குக் கீழ்படியாமல் இருப்பவர் தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்தாலும், இம்மாதிரியான மக்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படாமலும் பரிபூரணப்படுத்தப்படாமலும் இருப்பர். தேவன் மக்களைத் தங்கள் கீழ்ப்படிதலின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதன் மூலமாகவும், அருந்துவதன் மூலமாகவும், அனுபவிப்பதன் மூலமாகவும், அவர்களின் ஜீவனில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சுத்திகரிப்பு மூலமாகவும் பரிபூரணமாக்குகிறார். இது போன்ற விசுவாசத்தின் மூலம் மட்டுமே மக்களின் மனநிலையை மாற்ற முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற முடியும். தேவனின் கிருபையின் மத்தியில் ஜீவித்திருப்பதில் திருப்தி அடையாமல், தீவிரமாக மிக்க ஆவல் கொள்வது மற்றும் சத்தியத்தைத் தேடுவது மற்றும் தேவனால் ஆதாயப்படுவதை நாடுவது ஆகியவையே உணர்வுபூர்வமாக தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும், மேலும் இதுதான் துல்லியமாக அவர் விரும்பும் விசுவாசமாகும். தேவனின் கிருபையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாதவர்களைப் பரிபூரணமாக்கவோ அல்லது மாற்றவோ முடியாது; மேலும் அவர்களின் கீழ்ப்படிதல், பக்தி, அன்பு மற்றும் பொறுமை அனைத்தும் மேலோட்டமானவை ஆகும். தேவனின் கிருபையை மட்டுமே அனுபவிப்பவர் உண்மையிலேயே தேவனை அறிந்துகொள்ள முடியாது, மேலும் அவர்கள் அவ்வாறு தேவனை அறிந்தாலும் கூட அவர்களுடைய அறிவானது மேலோட்டமானதாகும், மேலும் அவர்கள் “தேவன் மனிதனை நேசிக்கிறார்,” அல்லது “தேவன் மனிதனிடம் இரக்கமுள்ளவராக இருக்கிறார்” போன்ற விஷயங்களை கூறுகிறார்கள். இது மனிதனின் ஜீவனைக் குறிக்கவில்லை, மேலும் மக்கள் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டவில்லை. தேவனின் வார்த்தைகள் அவர்களைச் செம்மைப் படுத்தும்போது, அல்லது தேவனுடைய சோதனைகள் அவர்கள் மீது வரும்போது, மக்கள் தேவனுக்கு கீழ்படியாமல், அவர்கள் சந்தேகம் அடைந்து, விழுந்துபோனால், அவர்கள் குறைந்தபட்சம்கூட கீழ்ப்படிந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன; பல வருட விசுவாசத்தின் விளைவாக ஏற்படும் பழைய அனுபவங்கள் அல்லது வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விதிகள் உள்ளன. இது போன்றவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? மனித காரியங்களால் நிறைந்துள்ளவர்களால் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும்? அவர்களின் “கீழ்ப்படிதல்” தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப ஆனதாகும். தேவன் இவ்வாறான கீழ்ப்படிதலை விரும்புகிறாரா? இது தேவனுக்குக் கீழ்ப்படிதல் அல்ல, மாறாக விதிகளைக் கடைப்பிடிப்பதாகும். அது அவர்களுடைய திருப்தி மற்றும் சந்தோஷம் ஆகும். இது தேவனுக்குக் கீழ்படிதல் என்று நீங்கள் கூறினால், நீங்கள் அவருக்கு எதிராக அவரை நிந்திக்கவில்லையா? நீங்கள் ஒரு எகிப்திய பார்வோன். நீங்கள் தீமையைச் செய்கிறீர்கள், தேவனை எதிர்க்கும் வேலையில் நீங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இவ்வாறு ஊழியம் செய்வதைத்தான் தேவன் விரும்புகிறாரா? நீங்கள் மனந்திரும்ப விரைந்து, சுய விழிப்புணர்வைப் பெற முயற்சி செய்வது நல்லது. அதைச் செய்யத் தவறினால், நீங்கள் வீட்டுக்குச் செல்வது நல்லது. தேவனுக்கு நீங்கள் வெளிப்படையாக செய்த ஊழியத்தை விட அது உங்களுக்கு அதிக நலனைத் தரும். நீங்கள் குறுக்கிட்டு தொந்தரவு செய்ய மாட்டீர்கள்; உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அறிந்து, நன்றாக ஜீவிப்பீர்கள். அது நன்றாக இருக்காதா? தேவனை எதிர்த்ததற்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள்!

முந்தைய: மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்

அடுத்த: தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக