வேதாகமத்தைக் குறித்து (4)

வேதாகமத்தைப் புரிந்துகொண்டு அதை விளக்க இயலுவதும் மெய்யான வழியைக் கண்டுபிடிப்பதும் ஒன்றுதான் என்று பலர் நம்புகின்றனர், ஆனால் உண்மையிலேயே, காரியங்கள் மிகவும் எளிதானவையா? வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஓர் ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா? கடந்த கால காரியங்களை இன்றைக்கு கொண்டுவருவது அவற்றை வரலாறாக்குகிறது. அவை எவ்வளவு உண்மையானதாக அல்லது நிஜமானதாக இருந்தாலும், அவை இன்னும் வரலாறாகவே இருக்கின்றன. வரலாற்றால் நிகழ்காலத்தைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் தேவன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதில்லை! ஆகவே, நீ வேதாகமத்தை மட்டுமே புரிந்துகொண்டு, தேவன் இன்று செய்ய விரும்பும் கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும் நீ தேவனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவில்லை என்றால், தேவனைத் தேடுவது என்றால் என்ன என்பதன் அர்த்தம் உனக்குப் புரியவில்லை. இஸ்ரவேலின் வரலாற்றை வாசிப்பதற்காகவும், வானத்தையும் பூமியையும் தேவன் சிருஷ்டித்த எல்லா வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காகவும் நீ வேதாகமத்தை வாசித்தால், நீ தேவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் இன்று, நீ தேவனை விசுவாசித்து, ஜீவனைப் பின்தொடர்ந்தால், மேலும் நீ தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்ந்து, மரித்துப்போன எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் அல்லது வரலாறு பற்றிய புரிதலையும் பின்தொடரவில்லை என்றால், நீ இன்றைய தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வழிகாட்டுதலை நாட வேண்டும். நீ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்திருந்தால், உன்னால் வேதாகமத்தை வாசித்திருக்க முடியும், ஆனால் உன்னால் முடியாது, நீ தேவனை விசுவாசிக்கிற ஒருவன், மேலும் நீ தேவனுடைய இன்றைய சித்தத்தைச் சிறப்பாகத் தேடியிருக்கிறாய். வேதாகமத்தை வாசிப்பதன் மூலம், அதிகபட்சமாக நீ இஸ்ரவேலின் வரலாற்றைச் சிறிதளவே புரிந்துகொள்வாய். ஆபிரகாம், தாவீது மற்றும் மோசேயின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வாய். அவர்கள் யேகோவாவை எவ்வாறு வணங்கினார்கள், யேகோவா தன்னை எதிர்த்தவர்களை எவ்வாறு சுட்டெரித்தார் மற்றும் அக்கால ஜனங்களுடன் அவர் எப்படிப் பேசினார் என்பதையும் கண்டறிவாய். கடந்த காலத்தில் தேவன் செய்த கிரியையைப் பற்றி மட்டுமே நீ கண்டறிவாய். இஸ்ரவேலின் ஆரம்பகால ஜனங்கள் எவ்வாறு தேவனை வணங்கி, யேகோவாவின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்ந்தனர் என்பதை வேதாகமத்தின் பதிவுகள் தொடர்புபடுத்துகின்றன. இஸ்ரவேலர் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக இருந்ததால், இஸ்ரவேல் ஜனங்கள் யேகோவாவுக்கு விசுவாசமாக இருந்ததையும், யேகோவாவுக்குக் கீழ்ப்படிந்த எல்லோருமே அவரால் எவ்வாறு பராமரித்துக்கொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டனர் என்பதை நீ பழைய ஏற்பாட்டில் காணலாம். தேவன் இஸ்ரவேலில் கிரியை செய்தபோது அவர் இரக்கமும் அன்பும் நிறைந்தவராக இருந்தார், அத்துடன் பட்சிக்கும் அக்கினியைக் கொண்டிருந்தார் என்பதையும், சிறுமைப்பட்டவர் முதல் வலிமைமிக்கவர் வரை இஸ்ரவேலர் எல்லோரும் யேகோவாவை வணங்கினர், ஆதலால் முழு தேசமும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதையும் நீ காணலாம். இதுவே பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட இஸ்ரவேலின் வரலாறாகும்.

வேதாகமம் என்பது இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியை பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவாகும். மேலும், இது பழங்கால தீர்க்கதரிசிகளின் பல முன்னறிவிப்புகளையும், அக்காலத்தில் யேகோவாவின் கிரியையில் அவருடைய சில வெளிப்பாடுகளையும் ஆவணப்படுத்துகிறது. ஆகவேதான், ஜனங்கள் எல்லோரும் இப்புத்தகத்தை பரிசுத்தமாகவே பார்க்கின்றனர் (ஏனென்றால் தேவன் பரிசுத்தமானவராகவும், மகத்துவமானவராகவும் இருக்கிறார்). நிச்சயமாகவே, இவை அனைத்தும் யேகோவா மீதான அவர்களுடைய பயபக்தி, தேவன் மீதான போற்றுதலினால் உண்டான விளைவாகும். தேவனுடைய சிருஷ்டிப்புகள் தங்கள் சிருஷ்டிகரை அதிகமாக ஆராதிப்பதினாலும், வணங்குவதினாலும், ஜனங்கள் இப்புத்தகத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். மேலும், இப்புத்தகத்தை ஒரு பரலோகப் புத்தகம் என்று அழைப்பவர்களும் உள்ளனர். உண்மையிலே, இது ஒரு மனிதப் பதிவு மட்டுமேயாகும். இது யேகோவாவால் தனிப்பட்ட முறையில் பெயரிடப்படவுமில்லை, யேகோவா தனிப்பட்ட முறையில் அதன் உருவாக்கத்திற்கு வழிகாட்டவுமில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இப்புத்தகத்தின் ஆசிரியர் மனிதனே தவிர தேவன் அல்ல. பரிசுத்த வேதாகமம் என்பது மனிதனால் கொடுக்கப்பட்ட மரியாதைக்குரிய தலைப்பு மட்டுமேயாகும். யேகோவாவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பிறகு இந்த தலைப்பானது அவர்களால் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு மனிதக் கருத்தே தவிர வேறில்லை. இப்புத்தகம் யேகோவாவாலும் எழுதப்படவில்லை, இயேசுவாலும் எழுதப்படவில்லை. அதற்குப் பதிலாகப், பல பழங்கால தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் ஞானதிருஷ்டிக்காரர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட விவரங்களாகும், இவை பழங்கால எழுத்துக்களின் புத்தகமாக பிற்கால தலைமுறையினரால் தொகுக்கப்பட்டன. இது குறிப்பாக ஜனங்களுக்குப் பரிசுத்தமான புத்தகமாகத் தோன்றுகிறது. இப்புத்தகத்தில் எதிர்கால தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படக் காத்திருக்கும் பல புரிந்துகொள்ள முடியாத மற்றும் ஆழமான இரகசியங்கள் உள்ளன என்று அவர்கள் நம்புகின்றனர். இதனால், இப்புத்தகம் ஒரு பரலோகப் புத்தகம் என்று நம்புவதற்குத் தயாராக உள்ள ஜனங்கள் இன்னும் அதிகமாக உள்ளனர். நான்கு சுவிசேஷங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகம் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம், அதைப் பற்றிய ஜனங்களுடைய மனப்பான்மை வேறு எந்தப் புத்தகத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது, ஆகையால் இந்தப் “பரலோகப் புத்தகத்தைப்” புறந்தள்ளுவதற்கு ஒருவரும் துணிவதில்லை, ஏனென்றால் இது மிகவும் “புனிதமானது”.

ஜனங்கள் வேதாகமத்தை வாசித்ததும், அவர்களால் ஏன் அதன்படி நடப்பதற்கான ஒரு சரியான பாதையைக் கண்டுபிடிக்க முடிகிறது? அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியாததைப் பெற முடிகிறது? இன்று, நான் வேதாகமத்தை இவ்விதமாகப் புறந்தள்ளுகிறேன், அதற்காக நான் அதை வெறுக்கிறேன் என்றோ அல்லது குறிப்புக்கான அதன் மதிப்பை மறுக்கிறேன் என்றோ அர்த்தமல்ல. நீ அந்தகாரத்தில் வைக்கப்படுவதைத் தடுக்க வேதாகமத்தின் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் உருவான விதங்களை உனக்கு விளக்கி, தெளிவுபடுத்துகிறேன். வேதாகமத்தைக் குறித்து ஜனங்களிடமுள்ள பல கருத்துக்களில், பெரும்பாலானவை தவறானவையாகவே இருக்கின்றன. வேதாகமத்தை இவ்விதமாக வாசிப்பது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுப்பது மட்டுமின்றி, மிக முக்கியமாக, நான் செய்ய விரும்பும் கிரியைக்கும் தடையாக இருக்கிறது. இது எதிர்கால கிரியையில் பெரிதும் தலையிடுகிறது, மேலும் இது தீமைகளை மட்டுமே வழங்குகிறதே தவிர, நன்மைகளை வழங்குவதில்லை. ஆகவே, நான் உனக்குப் போதிப்பது வேதாகமத்தின் சாராம்சமும் உள் சம்பவமும் மட்டுமேயாகும். நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்றோ அல்லது நீ போய் அது மதிப்பில்லாதது என்று அறிவிக்குமாறோ நான் கேட்டுக்கொள்ளவில்லை. நீ வேதாகமத்தைக் குறித்த சரியான அறிவையும் கண்ணோட்டத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்காதே! வேதாகமம் மனிதர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புத்தகம் என்கிறபோதிலும், இது பழங்கால பரிசுத்தவான்களும் தீர்க்கதரிசிகளும் தேவனுக்கு ஊழியம் செய்த பல கொள்கைகளையும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் சமீபத்திய அப்போஸ்தலர்களின் அனுபவங்களையும் ஆவணப்படுத்துகிறது. இவை அனைத்தும் உண்மையிலேயே இந்த ஜனங்களால் பார்க்கப்பட்டன மற்றும் அறிந்துகொள்ளப்பட்டன, மேலும் இவை மெய்யான வழியைப் பின்பற்றுவதில் இக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்புகளாக செயல்பட முடியும். ஆகவே, வேதாகமத்தை வாசிப்பதன் மூலம் பிற புத்தகங்களில் காண முடியாத பல வாழ்க்கை முறைகளையும் ஜனங்களால் பெற முடியும். இவ்வழிகள் கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் அனுபவித்த பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வாழ்க்கை முறைகளாக இருக்கின்றன. பல வார்த்தைகள் விலையேறப்பெற்றவையாக இருக்கின்றன, மேலும் இவற்றால் ஜனங்களுக்குத் தேவையானவற்றை வழங்க முடியும். ஆகவே, ஜனங்கள் எல்லோரும் வேதாகமத்தை வாசிக்க விரும்புகின்றனர். வேதாகமத்தில் அநேக காரியங்கள் மறைந்துள்ளதால், அதைப் பற்றிய ஜனங்களுடைய பார்வைகள் சிறந்த ஆவிக்குரிய நபர்களின் எழுத்துக்களைப் போல இல்லை. வேதாகமம் என்பது பழைய மற்றும் புதிய காலத்தில் யேகோவாவிற்கும் இயேசுவிற்கும் ஊழியம் செய்தவர்களின் அனுபவங்கள் மற்றும் அறிவின் பதிவு மற்றும் தொகுப்பு ஆகும், ஆகவே பிற்கால தலைமுறையினரால் அதிக அறிவொளி, வெளிச்சம் மற்றும் அதன்படி நடக்கும் பாதைகளைப் பெறுவதற்கான பாதைகளைப் பெற முடிகிறது. எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் எழுத்துக்களையும் விட வேதாகமம் உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அவர்களுடைய எழுத்துக்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும், அவர்களுடைய அனுபவங்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து வந்தவையாகும், அவை அனைத்தும் வேதாகமத்தையே விளக்குகின்றன. ஆகவே, எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் புத்தகங்களிலிருந்தும் ஜனங்களால் ஏற்பாட்டைப் பெற முடியும் என்கிறபோதிலும், அவர்கள் இன்னும் வேதாகமத்தையே ஆராதிக்கின்றனர். ஏனென்றால், அது அவர்களுக்கு மிகவும் உயர்ந்ததாகவும் ஆழமானதாகவும் தெரிகிறது! பவுலின் நிருபங்கள் மற்றும் பேதுருவின் நிருபங்கள் போன்ற ஜீவ வார்த்தைகளின் சில புத்தகங்களை வேதாகமம் ஒன்றாகக் கொண்டுவருகின்றபோதிலும், இந்த புத்தகங்களால் ஜனங்களுக்கு வழங்கவும் உதவவும் முடியும் என்கிறபோதிலும், இப்புத்தகங்கள் இன்னும் காலாவதியானவையாகவும், இன்னும் பழங்காலத்திற்குரியவையாகவும் இருக்கின்றன. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை ஒரு காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, நித்தியகாலத்திற்கும் அல்ல. தேவனுடைய கிரியை எப்போதுமே வளர்ந்து கொண்டே இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் காலத்திற்குள் மட்டுமே இதை நிறுத்திவிட முடியாது அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்ட கிருபையின் காலத்திலேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. ஆகவே, இப்புத்தகங்கள் கிருபையின் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, கடைசி நாட்களின் ராஜ்ய காலத்திற்கு அல்ல. இவற்றால் கிருபையின் காலத்தின் விசுவாசிகளுக்கு மட்டுமே வழங்க முடியும், ராஜ்ய காலத்தின் பரிசுத்தவான்களுக்கு அல்ல. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை இன்னும் காலாவதியானவையாகவே இருக்கின்றன. யேகோவாவினுடைய சிருஷ்டிப்பின் கிரியையும் அல்லது இஸ்ரவேலில் அவர் செய்த கிரியையும் இதுதான்: இந்தக் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது இன்னும் காலாவதியாகிவிடும், அது கடந்து செல்லும் நேரம் வரும். தேவனுடைய கிரியையும் இதேதான்: இது மிகப் பெரியது, ஆனால் இது முடிவடையும் காலம் வரும். இது சிருஷ்டிப்பின் கிரியைக்கு மத்தியிலோ, சிலுவையில் அறையப்படுதலுக்கு மத்தியிலோ எப்போதும் நிலைத்திருக்க முடியாது. சிலுவையில் அறையப்பட்ட கிரியையானது எவ்வளவு நம்பகமானதாக இருந்தாலும், சாத்தானைத் தோற்கடிப்பதில் அது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாகக், கிரியை என்பது இன்னும் கிரியைதான் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, காலங்கள் என்பவை இன்னும் காலங்கள்தான். கிரியை எப்போதும் ஒரே அஸ்திபாரத்தில் இருக்க முடியாது, அல்லது காலங்களை ஒருபோதும் மாற்ற முடியாது. ஏனென்றால், சிருஷ்டிப்பு என்பது இருந்தது, கடைசி நாட்கள் என்பதும் இருக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது! ஆகவே, இன்று புதிய ஏற்பாட்டிலுள்ள ஜீவ வார்த்தைகள், அதாவது அப்போஸ்தலர்களின் நிருபங்களும் நான்கு சுவிசேஷங்களும், வரலாற்றுப் புத்தகங்களாக மாறியுள்ளன. இவை பழைய பஞ்சாங்கங்களாக மாறியுள்ளன, பழைய பஞ்சாங்கங்களால் எப்படி ஜனங்களைப் புதிய காலத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்? இந்த பஞ்சாங்கங்கள் மக்களுக்கு ஜீவனை வழங்குவதில் எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், ஜனங்களைச் சிலுவைக்கு நேராக வழிநடத்த எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், இவை காலாவதியானவை அல்லவா? இவை மதிப்பில்லாதவை அல்லவா? ஆகவே, இந்தப் பஞ்சாங்கங்களை நீ கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று நான் உனக்குச் சொல்கிறேன். இவை மிகவும் பழமையானவை, இவற்றால் உன்னை புதிய கிரியைக்குள் கொண்டு வர முடியாது, அவற்றால் உனக்கு சுமையை ஏற்ற மட்டுமே முடியும். இவை உன்னை புதிய கிரியைக்குள், புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வர முடியாமல் போவது மட்டுமின்றி, இவை உன்னைப் பழைய மதவாத சபைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. காரியம் இவ்வாறாக இருந்திருந்தால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ பின்வாங்கியிருக்கமாட்டாயா?

இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களால் செய்யப்பட்ட சில காரியங்கள் உட்பட இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியையையே வேதாகமம் ஆவணப்படுத்துகிறது. சேர்க்கப்பட வேண்டிய அல்லது நீக்கப்பட வேண்டிய சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இருந்தபோதிலும், பரிசுத்த ஆவியானவர் அங்கீகரிக்காவிட்டாலும், அவர் எந்தக் குற்றத்தையும் சுமத்தவில்லை. வேதாகமம் என்பது முற்றிலும் இஸ்ரவேலின் வரலாறாகும், இது தேவனுடைய கிரியையைக் குறித்த வரலாறாகும். ஏசாயா, தானியேல் மற்றும் பிற தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் அல்லது யோவானின் தரிசன புத்தகத்தைத் தவிர, இது பதிவு செய்கிற ஜனங்கள், காரியங்கள் மற்றும் விஷயங்கள் அனைத்தும் நிஜமானவை, அவற்றைப் பற்றிய எதுவும் அடையாள அர்த்தமுள்ளவை அல்ல. இஸ்ரவேலின் ஆரம்பகால ஜனங்கள் அறிவுள்ளவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய பண்டைய அறிவும் கலாச்சாரமும் நன்கு முன்னேற்றமடைந்தவையாக இருந்தன, ஆகவே அவர்கள் எழுதியது இன்றைய ஜனங்கள் எழுதுவதைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தது. இதன் விளைவாகவே, அவர்களால் இப்புத்தகங்களை எழுத முடிந்தது என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், யேகோவா அவர்களிடையே அதிக கிரியைகளைச் செய்திருந்தார், அவர்கள் அநேக காரியங்களைக் கண்டிருந்தனர். தாவீது யேகோவாவின் செயல்களை தனது கண்களால் கண்டான், அவன் தனிப்பட்ட முறையில் அவற்றை அனுபவித்தான். பல அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டான், ஆகவே அவன் யேகோவாவின் செயல்களைப் போற்றி அந்த சங்கீதங்கள் அனைத்தையும் எழுதினான். இப்புத்தகங்களை சில சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் எழுத முடிந்தததே தவிர, அவர்களுக்கு அபூர்வமான திறமை இருந்ததால் அல்ல. அவர்கள் யேகோவாவைக் கண்டிருந்ததால் அவரைத் துதித்தார்கள். நீங்கள் யேகோவாவைப் பற்றிய எதையும் கண்டிருக்கவில்லை என்றால் மற்றும் அவர் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்றால், உங்களால் எப்படி அவரைத் துதிக்க முடியும்? நீங்கள் யேகோவாவைக் கண்டிருக்கவில்லையென்றால், அவரைத் துதிக்கவோ, அவரை ஆராதிக்கவோ உங்களுக்குத் தெரியாது, அவரைப் போற்றிப் பாடும் பாடல்களை உங்களால் எழுதவும் முடியாது. யேகோவாவின் சில செயல்களைக் கண்டுபிடிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், உங்களால் அவ்வாறு செய்ய முடியாது. இன்று, நீங்கள் தேவனைக் கண்டு, அவருடைய கிரியையை அனுபவித்திருப்பதினாலேயே உங்களால் தேவனைத் துதிக்கவும், அவரை நேசிக்கவும் முடிகிறது. உங்கள் திறன் மேம்பட்டால், உங்களாலும் தாவீதைப் போல தேவனைத் துதித்து சங்கீதங்களை எழுத முடியாதா?

வேதாகமத்தைப் புரிந்துகொள்வது, வரலாற்றைப் புரிந்துகொள்வது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் இன்று என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது—அது தவறானது! வரலாற்றைப் படிப்பதில் நீ மிகவும் சிறந்து விளங்குகிறாய், நீ ஓர் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறாய், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இன்று செய்யும் கிரியையைப் பற்றி உனக்கு எதுவும் புரியவில்லை. இது முட்டாள்தனம் அல்லவா? மற்றவர்கள் உன்னிடம் கேட்கின்றனர்: “தேவன் இன்று என்ன செய்கிறார்? இன்று நீ எதற்குள் பிரவேசிக்க வேண்டும்? வாழ்வின் போக்கில் உனது நாட்டம் எப்படி உள்ளது? தேவனுடைய சித்தம் உனக்குப் புரிகிறதா?” அவர்கள் கேட்பதற்கு உன்னிடம் பதில் இல்லை, அப்படியானால் உனக்கு என்ன தெரியும்? நீ சொல்லுவாய்: “நான் மாம்சத்திற்கு எனது முதுகைக் காட்டி என்னை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நான் அறிவேன்.” அதன்பிறகு அவர்கள், “உனக்கு வேறு என்ன தெரியும்?” என்று கேட்டால், தேவனுடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும் உனக்குத் தெரியும் என்றும், வேதாகமத்தின் வரலாறை சிறிதளவு புரிந்துகொள்கிறாய் என்றும், அவ்வளவுதான் என்றும் நீ சொல்லுவாய். இத்தனை ஆண்டுகளாக தேவனை விசுவாசித்தலிருந்து நீ பெற்றுக்கொண்டது அவ்வளவுதானா? நீ புரிந்துகொள்வது அவ்வளவுதான் என்றால், நீ மிகவும் அதிமாகக் குறைவுபடுகிறாய். ஆகவே, உங்களுடைய தற்போதைய வளர்ச்சியானது நான் உங்களிடம் கோருவதை அடிப்படையில் அடைய முடியாததாக இருக்கிறது. மேலும், நீங்கள் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் உங்களுடைய வேறுபாட்டு ஆற்றல்களுடன் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அதாவது உங்கள் விசுவாசம் மிகவும் மேலோட்டமானதாக இருக்கிறது! நீங்கள் அதிகச் சத்தியங்களைக் கொண்டிருக்க வேண்டும், உங்களுக்கு அதிக அறிவு தேவை, நீங்கள் அதிகமானவற்றைக் காண வேண்டும், அப்போதுதான் உங்களால் சுவிசேஷத்தைப் பரப்ப முடியும், ஏனென்றால் நீங்கள் அடைய வேண்டியது இதுதான்!

முந்தைய: வேதாகமத்தைக் குறித்து (3)

அடுத்த: பயிற்சி (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக