அத்தியாயம் 20

என் வீட்டிலிருக்கும் செல்வங்கள் கணக்கிட முடியாதவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை, ஆனாலும் அவற்றை அனுபவிக்க மனுஷன் ஒருபோதும் என்னிடம் வருவதில்லை. மனுஷன் தன்னையே அனுபவிக்க இயலாதவன், அல்லது தனது சொந்த முயற்சிகளைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவன்; அதற்கப் பதிலாக, அவன் எப்போதும் மற்றவர்கள் மீதே நம்பிக்கை வைத்திருக்கிறான். நான் காண்பவர்களில், ஒருவரும் என்னை வேண்டுமென்றோ, நேரடியாகவோ தேடியிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் எனக்கு முன்பாக வருகிறார்கள், அநேகரைப் பின்பற்றுகிறார்கள், அவர்கள் அதற்கான விலையைச் செலுத்தவோ அல்லது தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த நேரத்தைச் செலவிடவோ தயாராக இல்லை. எனவே, மனுஷர்களிடையே, யாரும் நிஜத்தில் வாழ்ந்ததே இல்லை, எல்லா ஜனங்களும் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். மனுஷனால் நீண்டகாலமாக நிறுவப்படும் வழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காரணமாக, அனைத்து ஜனங்களின் சரீரங்களும் பூமிக்குரிய மண்ணின் வாசனையால் பரவி நிற்கின்றன. இதன் விளைவாக, மனுஷன் உணர்ச்சியற்றவனாக வளர்ந்து, உலகம் பாழடைந்ததை உணராமல் இருக்கிறான், அதற்குப் பதிலாக உறைந்துபோன இந்த உலகில் தன்னை அனுபவிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்துகிறான். மனுஷனின் வாழ்க்கையில் சிறிதளவும் வெதுவெதுப்பு இல்லை, மனுஷர்கள் அல்லது வெளிச்சத்தின் எந்தத் தடயமும் இல்லை—ஆனாலும் அவன் எப்போதுமே தன் இன்பத்தில் திளைப்பவனாக இருக்கிறான், வாழ்நாள் முழுவதும் மதிப்பைக் குறைத்து, எதையும் சாதிக்காமல் விரைந்து செல்கிறான். கண் இமைக்கும் நேரத்தில், மரணிக்கும் நாள் நெருங்குகிறது, மனுஷன் துன்புற்று மரணிக்கிறான். இந்த உலகில், அவன் ஒருபோதும் எதையும் சாதிக்கவில்லை, எதையும் பெறவில்லை—அவசர அவசரமாக இங்கு வந்து, அவசர அவசரமாகப் புறப்படுகிறான். என் பார்வையில் இருப்பவர்கள் யாரும் இதுவரை எதையும் கொண்டும் வரவில்லை, எதையும் எடுத்துச் செல்லவும் இல்லை, எனவே உலகம் நியாயமற்றது என்று மனுஷன் உணர்கிறான். இருப்பினும் யாரும் விரைந்து செல்ல தயாராக இல்லை. வானத்திலிருந்து என் வாக்குறுதி திடீரென்று வரும் நாளுக்காக மனுஷர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் வழிதவறிய நேரத்தில், நித்திய ஜீவ வழியை மீண்டும் ஒரு முறை பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆகவே, மனுஷனுக்கு நான் அளித்த வாக்குறுதியை நான் உண்மையிலேயே பின்பற்றுகிறேனா என்பதை பார்க்க எனது ஒவ்வொரு காரியத்தையும் செய்கையையும் நிர்ணயிக்கிறான். அவன் துன்பங்களுக்கு மத்தியில் இருக்கும்போது, அல்லது மிகுந்த வேதனையில் இருக்கும்போது, அல்லது சோதனைகளால் மூழ்கி வீழ்ச்சியடையும்போது, மனுஷன் விரைவில் தன் கஷ்டங்களிலிருந்து தப்பித்து வேறொரு சிறந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்று அவன் தனது பிறந்த நாளையே சபிக்கிறான். ஆனால் சோதனைகள் கடந்துவிட்டால், மனுஷன் மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறான். அவன் பூமியில் தான் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான், அவனுடைய பிறந்த நாளை நான் ஆசீர்வதிக்கும்படி கேட்கிறான்; இந்த நேரத்தில், மனுஷன் கடந்த காலத்தின் உறுதிமொழிகளைக் குறிப்பிடுவதில்லை, இரண்டாவது முறை மரணம் வந்துவிடுமோ என்ற ஆழ்ந்த பயம். என் கைகள் உலகை உயர்த்தும்போது, ஜனங்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள், அவர்கள் இனி துக்கப்படுவதில்லை, அவர்கள் அனைவரும் என்னைச் சார்ந்து இருக்கிறார்கள். நான் என் கரங்களால் என் முகத்தை மூடிக்கொண்டு, நிலத்திற்கு அடியில் ஜனங்களை அழுத்தினால், அவர்கள் உடனடியாக மூச்சுத் திணறலை உணர்கிறார்கள், மேலும் உயிர்பிழைப்பது மிகக் கடினமாகிறது. நான் அவர்களை அழித்துவிடுவேன் என்று பயந்து, அவர்கள் அனைவரும் என்னை நோக்கிக் கூக்குரலிடுகிறார்கள், ஏனென்றால், நான் மகிமை அடையும் நாளை அவர்கள் அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள். மனுஷன் எனது நாளை தனது இருப்பின் மூலதனமாக எடுத்துக்கொள்கிறான், ஏனென்றால் என் மகிமை வரும் நாளுக்காக ஜனங்கள் ஏங்குகிறார்கள் என்பதால்தான் மனுஷர்கள் இன்று வரை உயிர் பிழைத்திருக்கிறார்கள். என் வாயால் கட்டளையிடப்பட்ட ஆசீர்வாதம் என்னவென்றால், கடைசி நாட்களில் பிறந்தவர்கள் என் மகிமை அனைத்தையும் காணும் அதிர்ஷ்டசாலிகள் என்பதே ஆகும்.

காலங்கள் முழுவதும், அநேகர் இந்த உலகத்திலிருந்து ஏமாற்றத்தோடும், தயக்கத்தோடும் புறப்பட்டுவிட்டார்கள், அநேகர் நம்பிக்கையோடும் உண்மையோடும் பூமிக்கு வந்துள்ளனர். அநேகர் வர நான் ஏற்பாடு செய்திருக்கிறேன், பலரை அனுப்பிருக்கிறேன். எண்ணற்ற ஜனங்கள் என் கைகளை கடந்துபோயிருக்கிறார்கள். அநேக ஆவிகள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன, அநேக ஆவிகள் மாம்சத்தில் வாழ்ந்திருக்கின்றன, அநேக ஆவிகள் மரித்துப் பூமியில் மறுபிறப்பை எடுத்திருக்கின்றன. ஆயினும்கூட அவற்றில் எதற்கும் இன்று ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் மனுஷனுக்கு நிறைய கொடுத்திருக்கிறேன், ஆனாலும் அவன் கொஞ்சமாகத்தான் அடைந்திருக்கிறான், ஏனென்றால் சாத்தானின் படைகளின் தாக்குதலால் அவனுக்கு என் செல்வங்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. அவன் அவற்றைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெற்றிருக்கிறான், ஆனால் அவற்றை ஒருபோதும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வானத்தின் செல்வத்தைப் பெற மனுஷன் தனது உடலில் உள்ள புதையலை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை, அதனால் நான் அவனுக்கு அளித்த ஆசீர்வாதங்களை அவன் இழந்துவிட்டான். மனுஷனின் ஆவிக்கு அவனை என் ஆவியுடன் இணைக்கும் திறனில்லையா? மனுஷன் ஏன் என்னை ஒருபோதும் தன் ஆவியுடன் ஈடுபடுத்தவில்லை? மனுஷன் ஆவியால் என்னை நெருங்க இயலாதபோது மாம்சத்தில் என்னை ஏன் நெருங்குகிறான்? என் உண்மையான முகம் மாம்சத்தின் முகமா? என் சாராம்சத்தை மனுஷன் ஏன் அறியவில்லை? உண்மையிலேயே மனுஷனின் ஆவியில் என்னைப் பற்றிய தடயம் ஏதாவது ஒருபோதும் இருந்ததில்லையா? மனுஷனின் ஆவியிலிருந்து நான் முற்றிலும் மறைந்துவிட்டேனா? மனுஷன் ஆவிக்குரிய ராஜ்யத்திற்குள் நுழையவில்லை என்றால், அவன் என் நோக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? மனுஷனின் பார்வையில், ஆவிக்குரிய ராஜ்யத்தில் நேரடியாக ஊடுருவக்கூடியது ஏதேனும் இருக்கிறதா? என் ஆவியின் மூலம் நான் மனுஷனை பல முறை அழைத்துள்ளேன், ஆனால் மனுஷனை நான் வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்வேன் என்ற பயத்தில், ஏதோ நான் அவனை முட்களால் குத்தியது போல, தூரத்திலிருந்தே என்னைப் பார்க்கிறான். மனுஷனின் ஆவியை நான் பலமுறை விசாரித்திருக்கிறேன், ஆனாலும் அவன் முற்றிலும் மறந்துவிட்டான், நான் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனுடைய உடைமைகள் அனைத்தையும் பறிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று ஆழ்ந்த பயம் கொண்டிருக்கிறான். இவ்வாறு, அவன் என்னை வெளியே தள்ளிவிட்டு, குளிர்ந்த, இறுக்கமாக மூடிய கதவைத் தவிர வேறு எதையும் பார்க்க விடாமல் செய்கிறான். மனுஷன் பலமுறை வீழ்ந்திருக்கிறான், நான் அவனைப் பலமுறை காப்பாற்றியிருக்கிறேன், ஆனால் எழுந்தபின் அவன் உடனடியாக என்னை விட்டு வெளியேறுகிறான், என் அன்பால் தீண்டப்படாமல், விருப்பமில்லாத பார்வையை என் மீது வீசுகிறான்; நான் ஒருபோதும் மனுஷனின் இதயத்தைக் கதகதப்பாக்கவில்லை. மனுஷன் உணர்ச்சியற்ற, குளிர்ந்த இரத்தமுள்ள ஒரு மிருகம். என் அரவணைப்பால் அவன் கதகதப்பாக இருந்தாலும், அவன் ஒருபோதும் அதனால் தூண்டப்படவில்லை. மனுஷன் ஒரு மலைவாழ் காட்டுமிராண்டி போன்றவன். மனுஷர் மீதான என் நேசத்தை அவன் ஒருபோதும் பொக்கிஷமாகக் கருதவில்லை. அவன் என்னை அணுக விரும்பவில்லை, மலைகளுக்கு மத்தியில் வசிக்க விரும்புகிறான், அங்கு அவன் மிருகங்களின் அச்சுறுத்தலைத் தாங்குகிறான்—ஆனாலும் அவன் எனக்குள் அடைக்கலமாக விரும்பவில்லை. நான் எந்த மனுஷனையும் கட்டாயப்படுத்தவில்லை: நான் என் கிரியையை மட்டுமே செய்கிறேன். மனுஷன் வலிமைமிக்க சமுத்திரத்தின் நடுவில் இருந்து என் பக்கமாக நீந்தி வரும் நாள் வரும், அதனால் அவன் பூமியில் உள்ள அனைத்து ஐசுவரியங்களையும் அனுபவித்து, சமுத்திரத்தினால் விழுங்கப்படும் அபாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும்.

என் வார்த்தைகள் முழுமையடைந்ததும், ராஜ்யம் படிப்படியாக பூமியில் உருவாகிறது, மனுஷன் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறான், இதனால் என் இதயத்தில் நிற்கும் ராஜ்யம் பூமியில் நிலைநாட்டப்படுகிறது. ராஜ்யத்தில், தேவனுடைய ஜனங்கள் அனைவரும் சாதாரண மனுஷனின் வாழ்க்கையை மீட்டுக்கொள்கிறார்கள். உறைபனி குளிர்காலம் சென்றுவிட்டது, அதற்குப் பதிலாக வசந்தகால நகரங்களின் உலகமாக மாற்றப்படுகிறது, அங்கு வசந்தம் ஆண்டு முழுவதும் நீடிக்கும். மனுஷனின் இருண்ட, பரிதாபகரமான உலகத்தை இனி ஜனங்கள் எதிர்கொள்ள மாட்டார்கள், இனி அவர்கள் மனுஷ உலகின் குளிர்ச்சியைத் தாங்க மாட்டார்கள். ஜனங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில்லை; நாடுகள் ஒன்றோடொன்று போருக்குச் செல்வதில்லை; இனி படுகொலைகளும், படுகொலைகளிலிருந்து பாயும் ரத்தமும் இருப்பதில்லை; எல்லா நிலங்களும் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன, எல்லா இடங்களிலும் மனுஷர்களுக்கு இடையே அரவணைப்பு இருக்கிறது. நான் உலகம் முழுவதும் நகர்கிறேன், நான் என் சிங்காசனத்தின் மேல் இருந்து அனுபவிக்கிறேன், நான் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வாழ்கிறேன். தேவதூதர்கள் எனக்குப் புதிய பாடல்களையும் புதிய நடனங்களையும் அர்ப்பணிக்கிறார்கள். இனி அவர்களின் சொந்த பலவீனம் அவர்களின் முகங்களில் கண்ணீரை வழிந்தோடச் செய்யாது. இனி, எனக்கு முன்பாக, தேவதூதர்கள் அழும் சத்தத்தை நான் கேட்பதில்லை, இனி யாரும் என்னிடம் துன்பம் குறித்து குறைகூற மாட்டார்கள். இன்று, நீங்கள் அனைவரும் எனக்கு முன்பு ஜீவித்திருக்கிறீர்கள்; நாளை, நீங்கள் அனைவரும் என் ராஜ்யத்தில் இருப்பீர்கள். இது மனுஷனுக்கு நான் அளிக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் அல்லவா? இன்று நீங்கள் செலுத்தும் விலையின் காரணமாக, நீங்கள் எதிர்காலத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், என் மகிமையின் மத்தியில் வாழ்வீர்கள். என் ஆவியின் சாராம்சத்துடன் நீங்கள் இன்னும் ஈடுபட விரும்பவில்லையா? நீங்கள் இன்னும் உங்களையே கொல்ல விரும்புகிறீர்களா? ஜனங்கள் தங்களுக்குப் புலப்படும் வாக்குதத்தங்களைத் தொடர தயாராக இருக்கிறார்கள், அவை குறுகிய காலத்திற்கானதாக இருந்தாலும் கூட; நித்திய காலத்திற்கு நீடிக்கும் என்றாலும், நாளைய வாக்குதத்தங்களை ஏற்க யாரும் தயாராக இல்லை. மனுஷனுக்குத் தெரியும் காரியங்கள் நான் நிர்மூலமாக்கக்கூடிய காரியங்கள், மனுஷனுக்கு அசாத்தியமான காரியங்கள் நான் நிறைவேற்றக்கூடிய காரியங்கள். தேவனுக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

எனது நாள் எப்போது வரும் என்று மனுஷன் கணக்கிட்டிருக்கிறான், ஆனால் இதுவரை சரியான தேதியை யாரும் அறியவில்லை, இதனால் மனுஷன் உணர்ச்சியற்ற மயக்கநிலையில் மத்தியில் மட்டுமே வாழ முடியும். மனுஷனின் ஏக்கங்கள் வரம்பற்ற வானங்களைத் தாண்டிப் பின்னர் மறைந்து விடுவதால், மனுஷன் மீண்டும் மீண்டும் நம்பிக்கையை இழந்துவிடுகிறான், அதாவது அவன் தற்போதைய சூழ்நிலைகளுக்கு இறங்குகிறான். எனது வார்த்தைகளின் குறிக்கோள், மனுஷனை தேதிகளைக் கடக்கச் செய்வதோ, அவனுடைய விரக்தியின் விளைவாக அவனது சொந்த அழிவுக்கு இட்டுச் செல்வதோ அல்ல. என் வாக்குதத்தத்தை மனுஷன் ஏற்றுக்கொள்ளச் செய்ய நான் விரும்புகிறேன், உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் எனது வாக்குதத்தத்தின் ஒரு பங்கைப் பெற விரும்புகிறேன். நான் விரும்புவது ஜீவனுள்ள ஜந்துக்களைத்தான், மரணத்தில் மூழ்கியிருக்கும் பிரேதங்களை அல்ல. நான் ராஜ்யத்தின் மேஜையில் சாய்ந்திருப்பதால், பூமியில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் என் பார்வையிடலைப் பெறும்படி கட்டளையிடுவேன். எனக்கு முன்பு எந்த அசுத்தமான காரியத்தையும் நான் அனுமதிக்கவில்லை. எனது கிரியையில் எந்தவொரு மனுஷனின் குறுக்கீட்டையும் நான் அனுமதிப்பதில்லை; என் கிரியையில் தலையிடுவோர் அனைவரும் காவல் கிடங்குகளில் தள்ளப்படுகிறார்கள், அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர்கள் பேரழிவில் மூழ்கி, பூமியின் தீப்பிழம்புகளைப் பெறுகிறார்கள். நான் எனது மனுஉருவான மாம்சத்தில் இருக்கும்போது, என் மாம்சத்தோடு என் கிரியையை விவாதிக்கிற எவனும் என்னால் வெறுக்கப்படுவான். நான் பூமியில் உறவினர்கள் இல்லாமல் இருக்கிறேன் என்பதையும், என்னை சமமாகப் பார்க்கும் எவரும், என்னுடன் கடந்த காலங்களைப் பற்றி நினைவூட்டுவதற்காக என்னத் தங்களிடம் இழுக்கும் எவரும் அழிவுக்கு ஆளாக நேரிடும் என்பதை எல்லா மனுஷர்களுக்கும் நான் பலமுறை நினைவூட்டியதுண்டு. இதைத்தான் நான் கட்டளையிடுகிறேன். இதுபோன்ற காரியங்களில் நான் மனுஷனிடம் சிறிதும் சலுகை காட்ட மாட்டேன். என் கிரியையில் தலையிட்டு எனக்கு அறிவுரை கூறுபவர்கள் அனைவரும் என்னால் தண்டிக்கப்படுகிறார்கள், ஒருபோதும் என்னால் மன்னிக்கப்பட மாட்டார்கள். நான் தெளிவாகப் பேசாவிட்டால், மனுஷன் ஒருபோதும் தன் நினைவுக்கு வரமாட்டான், அறியாமலே என் தண்டனையில் விழுவான்—ஏனென்றால் என் மாம்சத்தில் மனுஷன் என்னை அறிந்திருக்க மாட்டான்.

மார்ச் 20, 1992

முந்தைய: அத்தியாயம் 19

அடுத்த: அத்தியாயம் 21

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக