தெரிந்துகொள்ளப்பட்ட சீன ஜனங்கள் இஸ்ரவேலின் எந்த ஒரு கோத்திரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவர்கள் அல்லர்

யேகோவாவின் வாக்குத்தத்தங்களையும் சுதந்தரத்தையும் ஆதியில் பெற்ற ஒரு குடும்பம் தாவீதின் வீடாகும். ஆதியில் அது இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாக இருந்தது மேலும் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் மத்தியில் ஒன்றாக இருந்தது. அக்காலத்தில், இஸ்ரவேலர்களுக்காக யேகோவா ஒரு நியாயப்பிரமாணத்தைப் பிரகடனப்படுத்தினார். தாவீதின் வீட்டைச் சேர்ந்த யூத ஜனங்கள் எல்லோரும்—அந்த வீட்டில் பிறந்த யாவரும்—அவரது சுதந்தரத்தைப் பெறுவார்கள் என்று அது கூறியது. நூறு மடங்காய்ப் பெறுபவர்களும், முதற்பேறான குமாரர்கள் நிலையைப் பெறுபவர்களுமாய் அவர்கள் இருப்பார்கள்; அக்காலத்தில், அவர்கள் எல்லா இஸ்ரவேலர்களுக்குள்ளும் உயர்த்தப்பட்ட ஜனங்களாய், இஸ்ரவேலின் அனைத்துக் குடும்பங்களுக்குள்ளும் உயர் நிலையில் இருப்பார்கள், மேலும் அவர்கள் ஆலயத்தில் நேரடியாக ஆசாரியர்களின் அங்கிகளையும் கிரீடங்களையும் அணிந்து யேகோவாவைத் தொழுதுகொள்ளுவார்கள். அப்போது யேகோவா அவர்களை உண்மையும் பரிசுத்தமுள்ள ஊழியக்காரர்கள் என்று அழைத்தார், மேலும் அவர்கள் இஸ்ரவேலின் பிற கோத்திரத்தார் அனைவரது நன்மதிப்பையும் பெற்றனர். இவ்வாறு, அப்போது, அவர்கள் பிரபுக்கள் என்று மரியாதையாகக் குறிப்பிடப்பட்டனர்—இவை எல்லாம் கிருபையின் காலத்தில் யேகோவாவின் கிரியையாக இருந்தது. இன்று, அவர்கள் இன்னும் ஆலயத்தில் அத்தகைய ஊழியத்தை யேகோவாவுக்குச் செய்கின்றனர், ஆகவே எப்போதுமே அவர்கள் யேகோவாவால் சிங்காசனத்தில் உட்காரவைக்கப்பட்ட ராஜாக்களாக இருக்கின்றனர். அவர்களது கிரீடத்தை ஒருவராலும் எடுத்துப்போட முடியாது, மேலும் ஒருவரும் அவர்களுடைய ஊழியத்தை மாற்ற முடியாது, ஏனெனில் அவர்கள் ஆதியிலேயே தாவீதின் வீட்டாராக இருக்கிறார்கள்; இதுவே யேகோவா அவர்களுக்கு வழங்கியது. நீங்கள் ஆதியிலேயே தாவீதின் வீட்டைச் சேர்ந்தவர்களாக இல்லாததற்குக் காரணம் நீங்கள் இஸ்ரவேலர்கள் அல்லாததுதான். அதற்குப் பதிலாக நீங்கள் இஸ்ரவேலுக்கு வெளியே புறஜாதியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், யேகோவாவைத் தொழுதுகொள்ளுவது அல்ல அவரை எதிர்ப்பதுதான் உங்கள் சுபாவமாக உள்ளது. ஆகவே இயல்பாகவே, உங்கள் நிலை தாவீதின் வீட்டாரில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறது, மற்றும் நீங்கள் என்னுடைய சுதந்தரத்தைப் பெறுபவர்கள் அல்லர், அதைவிட நூறுமடங்காய்ப் பெறப்போகிறவர்களும் அல்லர்.

அக்காலத்தில், இஸ்ரவேலர் பல்வேறு வீடுகளாகவும் பல வேறுபட்ட கோத்திரங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தனர், இருந்தாலும் அவர்கள் யாவருமே தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக இருந்தனர். இருப்பினும், அதன் ஜனங்கள் கோத்திரங்களாலும், யேகோவாவின் முன்னால் அவர்களின் நிலைகளாலும் மற்றும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தேசத்தாலும் இஸ்ரவேல் பிற தேசங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறது. இஸ்ரவேல் தவிர்த்தப் பிற நாடுகளில், தாவீது, யாக்கோபு அல்லது மோசேயின் வீடுகளில் ஒருவர் சாதாரணமாக அங்கத்தினர் உரிமை கோரமுடியாது. இது உண்மைக்கு முரணாக இருக்கும்—இஸ்ரவேலின் கோத்திரங்களைச் சாதாரணமாகக் கூட பிற நாடுகளைச் சார்ந்தவராக தவறாகக் கற்பித்துக் கூறக்கூடாது. ஜனங்கள் அடிக்கடி தாவீது, ஆபிரகாம், ஏசா போன்றவர்களின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அல்லது அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் இப்போது தேவனை ஏற்றுக்கொண்டோம், ஆகவே நாங்கள் யாக்கோபின் வீட்டார்.” இவ்வாறு கூறுவது அடிப்படையற்ற மனுஷனுடய தர்க்கவாதமேயன்றி வேறல்ல; அது யேகோவாவிடம் இருந்து நேரடியாக வரவில்லை, அல்லது என்னுடைய சொந்த கருத்தில் இருந்தும் வரவில்லை. அது முற்றிலும் மனுஷீக முட்டாள்தனமே! பொய்யான கட்டுக் கதைகளைப் புனையும் ஒரு பேச்சாளரைப் போல, ஜனங்கள் தங்களைத் தாவீதின் வம்சம் அல்லது யாக்கோபின் குடும்பத்தின் ஒரு பகுதி என்று அடிப்படை இல்லாமல் நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் தாங்கள் அப்படி இருக்கத் தகுதி உடையவர்கள் என்றும் நம்புகிறார்கள். தாவீதின் வீட்டார் நீண்ட காலத்துக்கு முன்னரே யேகோவாவால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பதையும், ராஜாவாகத் தனக்குத் தானே தாவீது கிரீடம் சூட்டிக்கொள்ளவில்லை என்பதையும் ஜனங்கள் அறியார்களா? இருப்பினும், பலர் வெட்கமின்றித் தங்களைத் தாவீதின் வீட்டுச் சந்ததியார் என்று கூறுகின்றனர்—ஜனங்கள் மிகவும் அறியாமையில் இருக்கிறார்கள்! இஸ்ரவேலர்களின் காரியங்களுக்கும் புறஜாதியாரின் காரியங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை—அவை இருவேறு விஷயங்கள், முற்றிலும் சம்பந்தம் அற்றவை. புறஜாதியாருக்குச் சம்பந்தம் இல்லாதவைகளாதலால், இஸ்ரவேலின் விவகாரங்களை இஸ்ரவேல் ஜனங்களிடம்தான் பேச முடியும். அதுபோல புறஜாதியார் மத்தியில் இப்போது செய்யப்பட்டுவரும் கிரியை இஸ்ரவேல் மக்களுக்குச் சம்பந்தம் அற்றவை. நான் இப்போது கூறுவது எதுவோ அது புறஜாதியார் பற்றி கூறப்படுவதைத் தீர்மானிக்கிறது, மற்றும் இஸ்ரவேலில் செய்யப்பட்ட கிரியை, புறஜாதியார் மத்தியில் செய்யப்படும் கிரியைக்கு “முன்னடையாளம்” என்று எடுத்துக்கொள்ள முடியாது. தேவன் மிகவும் மரபுசார்ந்தவர் என்று அது காட்டாதா? புறஜாதியார் மத்தியில் கிரியை பரவத் தொடங்கும் போதே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டது அல்லது அவர்களின் முடிவு வெளிப்படுத்தப்படும். அதனால், கடந்த காலத்தில் சொன்னது போல ஜனங்கள் சொல்லப்போகும், “நாங்கள் தான் தாவீதின் சந்ததியார்,” அல்லது “இயேசுவே தாவீதின் குமாரர்” ஆகியவை மிகவும் அபத்தமானவை. என் கிரியை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நான் “ஒரு மானைக் குதிரை என்று அழைக்கமாட்டேன்”; மாறாக, கிரியை அதன் வரிசைமுறைப்படி பகுக்கப்பட்டுள்ளது.

முந்தைய: கற்றுக் கொள்ளாதவர்கள் மற்றும் அறியாமையில் இருப்பவர்கள்: அவர்கள் மிருகங்கள் அல்லவா?

அடுத்த: ஆசீர்வாதங்களைக் குறித்த உங்கள் புரிதல் என்ன?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக