அத்தியாயம் 17

உண்மையில், தேவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் எல்லா வார்த்தைகளும் மனுஷர்களுக்குத் தெரியாது; அவை அனைத்தும் மனிதர்கள் அறிந்திராதவையாகும். அதைப்போலவே, தேவனுடைய வார்த்தைகள் இரகசியமாகவே இருக்கின்றன என்று சொல்லலாம். ஜனங்களால் கருத்தியல் ரீதியாக விளக்கமுடியாத விஷயங்கள், இப்போது ஜனங்கள் அறிந்துகொள்ளும்படி தேவன் அனுமதிக்கும் பரலோக விஷயங்கள் அல்லது ஆவிக்குரிய உலகில் தேவன் என்ன செய்கிறார் என்ற உண்மை ஆகியவை மட்டுமே இரகசியங்களில் அடங்கும் என்று பெரும்பாலான ஜனங்கள் தவறாக நம்புகிறார்கள். இதிலிருந்து, ஜனங்கள் தேவனுடைய எல்லா வார்த்தைகளையும் சமமாகக் கருதுவதுமில்லை, அவற்றை அவர்கள் பொக்கிஷமாகக் கருதுவதுமில்லை என்பது தெளிவாகிறது; மாறாக, அவர்கள் தங்களுக்குத் தாங்களே “இரகசியங்கள்” என்று நம்புவதில் கவனம் செலுத்துகிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் என்னவாக இருக்கின்றன அல்லது இரகசியங்கள் என்னவாக இருக்கின்றன என்பது ஜனங்களுக்குத் தெரியாது என்பதை இது நிரூபிக்கிறது; அவர்கள் அவருடைய வார்த்தைகளைத் தங்கள் சொந்த கருத்துக்களின் எல்லைக்குள் மாத்திரமே படிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், தேவனுடைய வார்த்தைகளை உண்மையாக நேசிக்கும் ஒரு நபர் கூட இல்லை, மேலும் இதுவே “ஜனங்கள் என்னை ஏமாற்றுவதில் வல்லுநர்கள்” என்று அவர் சொல்வதற்கான மிகச் சரியான காரணமாகும். ஜனங்கள் எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் அல்லது முழுமையாகக் குழப்புகிறவர்கள் என்று தேவன் கூறவில்லை; இது மனிதனின் உண்மையான நிலைமையை விவரிக்கிறது. தேவன் உண்மையில் தங்கள் இருதயங்களில் எவ்வளவு இடத்தை ஆட்கொண்டிருக்கிறார் என்பதை ஜனங்கள் தெளிவாக அறியாதிருக்கிறார்கள்; தேவன் மட்டுமே இதை முழுமையாக அறிவார். எனவே, இந்த நேரத்தில், ஜனங்கள் பால் குடிக்கும் குழந்தைகளைப் போல உள்ளனர். அவர்கள் ஏன் பால் குடிக்கிறார்கள், ஏன் உயிர்வாழ வேண்டும் என்பதைப் பற்றி முற்றிலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு குழந்தையின் தேவைகளைத் தாய் மட்டுமே புரிந்துகொள்கிறாள்; அவள் அதைப் பட்டினி கிடந்து சாகவும் விடமாட்டாள், குழந்தை தன்னைத்தானே சாப்பிட்டு சாகவும் அனுமதிக்க மாட்டாள். ஜனங்களின் தேவைகளை தேவன் நன்றாக அறிந்திருக்கிறார், அதனால் சில சமயங்களில் அவருடைய அன்பு அவருடைய வார்த்தைகளில் பொதிந்திருக்கிறது, சில சமயங்களில் அவருடைய நியாயத்தீர்ப்பு அவற்றில் வெளிப்படுகிறது, சில சமயங்களில் அவைகள் ஜனங்களது இருதயங்களின் ஆழத்தைக் காயப்படுத்துகின்றன, சில சமயங்களில் அவை உண்மையாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றன. இது தேவனுடைய தயவு மற்றும் எளிதில் அணுகக்கூடிய தன்மையை ஜனங்கள் உணர அனுமதிக்கிறது, மேலும் அவர் தொட முடியாத, கற்பனை செய்யப்பட்ட, பிரம்மாண்டமான உருவம் அல்ல. அவர் ஜனங்களுடைய மனதில், அவரது முகத்தை நேரடியாகப் பார்க்க முடியாதபடிக்கு, அவர் பரலோகத்தின் குமாரனாகவும் அல்ல, அவர் ஜனங்கள் கற்பனை செய்வது போல் அப்பாவிகளைக் கொன்று குவிப்பவரும் அல்ல. தேவனுடைய முழு மனநிலையும் அவருடைய கிரியையில் வெளிப்படுகிறது; மாம்சத்தில் உள்ள தேவனுடைய மனநிலை இன்றும் அவரது கிரியையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவரது ஊழியம் வார்த்தைகளில் ஒன்றாக இருக்கிறதே தவிர, அவர் என்ன செய்கிறார் என்பதிலோ அல்லது அவர் வெளிப்புறமாக எப்படித் தோற்றமளிக்கிறார் என்பதிலோ இல்லை. இறுதியில், ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து பக்திவிருத்தி அடைவார்கள் மற்றும் அவைகளின் நிமித்தமாக முழுமையடைவார்கள். தேவனுடைய வார்த்தைகளால் வழிநடத்தப்பட்ட தங்களது அனுபவத்தின் மூலம், ஜனங்கள் நடக்க வேண்டிய பாதையை அடைவார்கள், மேலும் தேவனுடைய வாயின் வார்த்தைகள் மூலம் அவர்கள் அவருடைய முழு மனநிலையையும் அறிந்து கொள்வார்கள். அவருடைய வார்த்தைகளால், தேவனுடைய அனைத்து கிரியைகளும் நிறைவேறும், ஜனங்கள் உயிரோடு வருவார்கள், எல்லா சத்துருக்களும் தோற்கடிக்கப்படுவார்கள். இதுவே, யாரும் புறக்கணிக்க முடியாததாகிய முதன்மையான கிரியையாகும். அவருடைய வார்த்தைகளைப் பார்ப்போம்: “என் வெளிப்பாடுகள் இடி போல் ஒலிக்கின்றன, பூமி முழுவதிலும் எல்லாத் திசைகளிலும் வெளிச்சத்தைப் பரப்புகின்றன, மேலும் இடி மற்றும் மின்னலுக்கு இடையே மனிதன் அடித்து நொறுக்கப் படுகிறான். இடி மற்றும் மின்னலுக்கு இடையே எந்த மனிதனும் ஒருபோதும் உறுதியாக நின்றதில்லை; என் வெளிச்சத்தின் வருகையைப் பார்த்துப் பெரும்பாலான மனிதர்கள் மனக்கலக்கத்தினால் பெரும் பீதியடைகிறார்கள், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.” தேவன் தம்முடைய வாயைத் திறந்தவுடன் வார்த்தைகள் வெளிவருகின்றன. அவர் எல்லாவற்றையும் வார்த்தைகளால் நிறைவேற்றுகிறார், எல்லாமே அவைகளால் மறுரூபமாகியிருக்கின்றன, மேலும் ஒவ்வொருவரும் அவைகளின் மூலமாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். “இடி மற்றும் மின்னல்” என்பது எதைக் குறிக்கிறது? மேலும் “வெளிச்சம்” என்பது எதைக் குறிக்கிறது? தேவனுடைய வார்த்தைகளிலிருந்து ஒன்றும் தப்ப முடியாது. ஜனங்களின் மனதை வெளிப்படுத்தவும் அவர்களின் அசுத்தத்தை விவரிக்கவும் அவர் அவற்றைப் பயன்படுத்துகிறார்; அவர்களுடைய பழைய சுபாவங்களைக் கையாளவும், தம் ஜனங்கள் அனைவரையும் முழுமைப்படுத்தவும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதுவே, துல்லியமாக தேவனுடைய வார்த்தைகளின் முக்கியத்துவமாக இருக்கிறது அல்லவா? பிரபஞ்சம் முழுவதிலும், தேவனுடைய வார்த்தைகளின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு இல்லாமல், எல்லா மனுஷர்களும் நீண்ட காலத்திற்கு முன்பே ஒன்றுமில்லாமல் போய்விடும் அளவிற்கு அழிக்கப்பட்டிருந்திருக்கும். இதுவே தேவன் என்ன செய்கிறார் என்பதற்கான கொள்கையும், அவருடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின்போது அவர் கிரியை செய்யும் முறையுமாகும். இது தேவனுடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அவைகள் நேரடியாக ஜனங்களுடைய ஆத்துமாவின் ஆழங்களுக்குள் ஊடுருவுகின்றன. அவருடைய வார்த்தைகளைக் கண்டவுடனே, ஜனங்கள் திகைத்து, திகிலடைந்து, தலைதெறிக்க ஓடுகிறார்கள். அவர்கள் அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள், இந்த “அகதிகள்” எல்லா இடங்களிலும் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். தேவனுடைய வார்த்தைகள் வெளியிடப்பட்டவுடனே, ஜனங்கள் எழும்பி நின்றுவிடுகிறார்கள். இது தேவன் விவரிக்கும் மனிதனுடைய அசுத்தத்திற்கான உருவத்தின் அம்சமாகும். இப்போதுதான், அனைத்து ஜனங்களும் தங்கள் மயக்கத்திலிருந்து படிப்படியாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் முன்பு மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்படுகிறார்கள்—இப்போது அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பார்க்கும்போது, அந்த நோயின் எஞ்சிய விளைவுகளை அவர்கள் அனுபவித்து வருவதாகவும், மேலும் அவர்களின் முந்தைய நிலையை மீண்டும் பெற முடியவில்லை என்பது போலவும் தெரிகிறது. எல்லா ஜனங்களும் உண்மையில் இப்படித்தான் இருக்கிறார்கள், மேலும் இது இந்த வார்த்தைகளின் உண்மையான விளக்கமாகும்: “இந்த மங்கலாக ஒளிரும் வெளிச்சத்தின் உந்துதலால் பெரும்பாலான ஜனங்கள், தங்கள் மாயைகளிலிருந்து உடனடியாக விழிப்படைகின்றனர். என் வெளிச்சம் பூமியில் இறங்கும்போது எனது நாள் வந்துவிட்டது என்பதை அதுவரை யாரும் உணரவில்லை.” அதனால்தான் தேவன் சொன்னார், “வெளிச்சத்தின் திடீர் வருகையால் பெரும்பான்மையான மனிதர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.” இப்படிச் சொல்லுவது மிகவும் பொருத்தமானது. மனிதனைப் பற்றிய தேவனுடைய விளக்கத்தில் ஓர் ஊசியின் நுனியை விடுவதற்குக் கூட இடைவெளி இல்லை, மேலும் அவர் உண்மையிலேயே அதைத் துல்லியமாகவும் பிழையின்றியும் சொல்லியிருக்கிறார், அதனால்தான் எல்லா ஜனங்களும் முழுமையாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்களை அறியாமலேயே, தேவன்மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உருவாகத் தொடங்கியிருக்கிறது. இதனால் மட்டுமே அங்கு தேவனுடைய நிலை இன்னும் உண்மையானதாக மாறுகிறது, மேலும் இதுவும் தேவன் கிரியை செய்கிற ஒரு வழியாகும்.

“பெரும்பான்மையான மனிதர்கள் வெறுமனே திகைப்படைகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தால் கண்களில் காயமடைந்து சேற்றில் தள்ளப்படுகிறார்கள்.” அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகச் செல்வதால் (அதாவது, அவர்கள் தேவனை எதிர்ப்பதால்), அவருடைய வார்த்தைகள் வரும்போது, அவர்கள் தங்கள் கலகத்தனத்தால் சிட்சையை அனுபவிக்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் வெளிச்சத்தால் கண்களில் காயம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய ஜனங்கள் ஏற்கனவே சாத்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்; எனவே, புதிய கிரியையில் பிரவேசிக்கும் போது, அவர்கள் வெளிச்சத்தையும் பெற்றிருப்பதில்லை, அறிவொளியையும் பெற்றிருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பெற்றிராத அனைவரும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றனர், மேலும் அவர்களின் உள்ளத்தின் ஆழத்தில் தேவனுக்கு இடமில்லை. எனவேதான், இந்த ஜனங்கள் “சேற்றில் தள்ளப்படுகிறார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உள்ளவர்கள் அனைவரும் குழப்பமடைந்திருக்கின்றனர். அவர்களால் சரியான பாதையில் பிரவேசிக்கவும் முடிவதில்லை, இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முடிவதில்லை; அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் முரண்பட்டவைகளாக இருக்கின்றன. பூமியிலுள்ள ஒவ்வொருவரும் சாத்தானால் மிகவும் மோசமாகச் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனங்கள் ஜீவனை உடையவர்களாக இல்லை, பிணங்களின் துர்நாற்றத்தை வீசுகிறவர்களாக இருக்கிறார்கள். யாராலும் தப்ப முடியாத கிருமிகளின் கொள்ளை நோய்க்கு மத்தியில் பூமியின் ஜனங்கள் அனைவரும் உயிர்வாழ்கின்றனர். அவர்கள் பூமியில் உயிர்வாழத் தயாராக இல்லை, ஆனால் ஜனங்கள் தங்கள் சொந்தக் கண்களால் பார்ப்பதற்குப் பெரியதாக ஏதாவது நடக்கும் என்று அவர்கள் எப்போதும் உணர்கிறார்கள்; எனவே, ஜனங்கள் அனைவரும் தங்களைத் தொடர்ந்து வாழ கட்டாயப்படுத்துகிறார்கள். மிக நீண்ட காலமாக அவர்கள் இருதயத்தில் பெலனைப் பெற்றிருந்ததில்லை; அவர்கள் கண்ணுக்குத் தெரியாத தங்கள் நம்பிக்கைகளை ஆவிக்குரிய தூணாகப் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்கள் மனுஷர்களாக இருக்கிறார்கள் என்ற பாசாங்கில் தங்கள் தலையை முட்டுக்கொடுத்து பூமியின் மீதான தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜனங்களும் மாம்சமான பிசாசின் குமாரர்களாக இருப்பதைப் போல் காணப்படுகின்றனர். அதனால்தான் தேவன் சொன்னார், “சீர்குலைவு பூமியைச் சூழ்கிறது, அது தாங்கமுடியாத வருத்தம் தரும் காட்சி, நெருக்கமாக ஆராய்ந்தால், ஒருவரை மிகுந்த மனச்சோர்வு கொள்ளச் செய்யும்.” இந்தச் சூழ்நிலை ஏற்பட்டதால், தேவன் பிரபஞ்சம் முழுவதும் “என் ஆவியின் விதைகளைத் தூவுதல்” என்பதைத் தொடங்கினார், மேலும் அவர் தமது இரட்சிப்பின் கிரியையை பூமி முழுவதிலும் செயல்படுத்தத் தொடங்கினார். இந்தக் கிரியையைத் தொடர்ந்து செய்ததன் காரணமாகவே, தேவன் எல்லாவிதமான பேரழிவுகளையும் பொழியப் பண்ணத் தொடங்கி, இவ்வாறு கடின இருதயமுள்ள மனுஷர்களை இரட்சித்தார். தேவனுடைய கிரியையின் கட்டங்களில், இரட்சிப்பு பேரழிவுகளின் இன்னும் பல்வேறு வடிவத்தை எடுக்கிறது, மேலும் அழிவுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற எவரும் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. கடைசியில்தான் பூமியில், “மூன்றாம் வானம்போல அமைதியானது: இங்கே, பெரிய மற்றும் சிறிய உயிரினங்கள், ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றன, அவை ஒருபோதும் வாய்க்கும் நாக்குக்கும் இடையே மோதல்களில் ஈடுபடுவதில்லை” என்ற இப்படிப்பட்ட சூழ்நிலையை அடைய முடியும். தேவனுடைய கிரியையின் ஓர் அம்சமானது, எல்லா மனிதர்களையும் ஜெயங்கொள்வதும், அவரது வார்த்தைகள் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்வதும் ஆகும்; மற்றொன்று பல்வேறு பேரழிவுகள் மூலம் கலகத்தனத்தின் குமாரர்கள் அனைவரையும் ஜெயங்கொள்வதாகும். இது தேவனுடைய பெரிய அளவிலான கிரியையின் ஒரு பகுதியாகும். இவ்வாறு மட்டுமே தேவன் விரும்பும் பூமியின் மீதான ராஜ்யத்தை முழுமையாக அடைய முடியும், மேலும் இது சுத்தப் பொன்னாக இருக்கிற அவருடைய கிரியையின் ஒரு பகுதியாகும்.

பரலோகத்தின் வல்லமையை ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் தொடர்ந்து கோருகிறார். இதை அவர்களால் உண்மையிலேயே அடைய முடியுமா? உண்மை என்னவென்றால், 5,900 ஆண்டுகளுக்கும் மேலாக சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருக்கிற ஜனங்களின் தற்போதைய, உண்மையான நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களைப் பேதுருவுடன் ஒப்பிட முடியாது; எனவே, அவர்களால் இதை எளிதாக அடைய முடியாது. இது தேவனுடைய கிரியையின் வழிமுறைகளில் ஒன்றாகும். அவர் ஜனங்களைச் செயலற்ற நிலையில் காத்திருக்கும்படி செய்திருக்க மாட்டார்; அதற்குப் பதிலாக அவர்களைத் தீவிரமாகத் தேடச் செய்திருப்பார். அப்போதுதான் ஜனங்களிடத்தில் கிரியை செய்ய தேவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும். உனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமளிப்பது நல்லது; இல்லையெனில், ஜனங்கள் வெறும் மேலோட்டமான புரிதலைக் கொண்டிருப்பார்கள். தேவன் மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு ஆவிகளை வழங்கிய பிறகு, அவர்கள் அவரைக் கூப்பிடவில்லை என்றால், அவர்களால் அவருடைய ஆவியானவருடன் தொடர்பு கொள்ள முடியாது, எனவே, வானத்திலிருந்து “செயற்கைக்கோள் தொலைக்காட்சியை” பூமியில் பெறுவது இயலாததாகிவிடும் என்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். தேவன் ஜனங்களின் ஆவிகளில் இல்லாதபோது, மற்ற விஷயங்களுக்கென ஒரு காலி இருக்கை உண்டாகிறது, இதனால் சாத்தான் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். ஜனங்கள் தங்கள் இருதயத்திலிருந்து தேவனைத் தொடர்புகொள்ளும்போது, சாத்தான் உடனடியாகப் பீதியடைந்து தப்பிச்செல்ல விரைகிறான். மனுஷர்கள் கூப்பிடுவதன் மூலம், தேவன் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார், ஆனால் அவர் முதலில் அவர்களுக்குள் “வசிப்பதில்லை”. அவர்களது கூப்பிடுதலின் காரணமாக அவர் அவர்களுக்குத் தொடர்ந்து உதவி வழங்குகிறார், மேலும் அந்த உள்ளான சத்துவத்திலிருந்து ஜனங்கள் கடினத்தன்மையைப் பெறுகிறார்கள், இதனால் சாத்தான் அதன் விருப்பப்படி “செயல்பட” உள்ளே வரத் துணிவதில்லை. எனவே, ஜனங்கள் தொடர்ந்து தேவனுடைய ஆவியானவருடன் இணைந்திருப்பார்களானால், சாத்தான் வந்து இடையூறுகளை ஏற்படுத்தத் துணிவதில்லை. சாத்தானின் இடையூறுகள் இல்லாமல், எல்லா ஜனங்களுடைய வாழ்க்கையும் இயல்பானதாக இருக்கிறது, மேலும் தேவன் அவர்களுக்குள் தடையின்றி கிரியை செய்ய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். எனவே, தேவன் செய்ய விரும்புவதை மனுஷர்கள் மூலம் அடைய முடியும். ஜனங்கள் தங்கள் விசுவாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஏன் தேவன் எப்பொழுதும் கேட்டிருக்கிறார் என்பதையும், மேலும், “பூமியில் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருத்தமான கோரிக்கைகளை நான் வைக்கிறேன். நான் ஒருபோதும் யாரையும் சிரமத்திற்கு உள்ளாக்கவில்லை, என் இன்பத்திற்காக ‘அவனுடைய இரத்தத்தைப் பிழியும்படி’ நான் யாரையும் கேட்டதில்லை” என்று சொல்லியிருப்பதையும் இதிலிருந்து அறியலாம். பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய கோரிக்கைகளால் குழப்பமடைந்துள்ளனர். ஜனங்கள் அந்தத் திறனைப் பெற்றிராதிருந்தும், மீளமுடியாத அளவிற்கு சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருந்தும், தேவன் அவர்களிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைப்பது ஏன் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இது தேவன் ஜனங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதைப் போன்றது அல்லவா? அவர்களின் கம்பீரமான முகத்தைப் பார்த்து, அதன் பின்னர் அவர்களின் அருவருப்பான தோற்றத்தைப் பார்க்கும்போது, உன்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. மனுஷர்களின் பல்வேறு அசிங்கமான தோற்றங்கள் மிகவும் நகைப்புக்குரியவையாக இருக்கின்றன: சில சமயங்களில், அவர்கள் விளையாட விரும்பும் குழந்தைகளைப் போலவும். அதேபோல், சில சமயங்களில் அவர்கள் “அம்மா போல நடித்து” விளையாடும் சிறுமியைப் போலவும் இருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் எலியை உண்ணும் நாய் போல இருக்கிறார்கள். அவர்களின் இந்த அசிங்கமான நிலைகள் அனைத்தையும் பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று யாருக்கும் தெரியாது, பெரும்பாலும், எவ்வளவு குறைவாக ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதோ, அவர்கள் சிக்கலில் சிக்குவதற்கு அவ்வளவு அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, பின்வரும் தேவனுடைய வார்த்தைகள்—“நான் சிருஷ்டியின் மீது அமைதியைச் சுமத்தும் தேவனா?”—இது மனுஷர்கள் எவ்வளவு மூடர்கள் என்பதைக் காட்ட போதுமானதாகும், மேலும் அவை தேவனுடைய சித்தத்தை எந்த மனுஷனும் புரிந்து கொள்ள முடியாது என்பதைக் காட்டுகின்றன. அவருடைய சித்தம் என்ன என்பதை அவர் சத்தமிட்டுச் சொன்னாலும், அவர்கள் அதைக் கருத்தில் கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய கிரியையை மனுஷனுடைய விருப்பப்படி மட்டுமே செய்கிறார்கள். அப்படியிருக்க, அவர்களால் அவருடைய சித்தத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? “நான் பூமியில் நடந்து செல்கிறேன், என் நறுமணத்தை எல்லா இடங்களிலும் விநியோகிக்கிறேன், ஒவ்வொரு இடத்திலும், என் வடிவத்தை விட்டு வைக்கிறேன். ஒவ்வொரு இடமும் என் குரலின் ஒலியால் எதிரொலிக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் நேற்றைய அழகிய காட்சிகளின் நினைவுகள் அகலாது இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களும் கடந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள் …” ராஜ்யம் உருவாகியிருக்கும்போது இதுதான் நிலைமையாக இருக்கும். உண்மையில், பல இடங்களில், தேவன் ராஜ்யத்தை உணரும் அழகை ஏற்கனவே தீர்கதரிசனமாக உரைத்திருக்கிறார், மேலும் இவை அனைத்தும் இணைந்து ராஜ்யத்தின் முழுமையான படத்தை உருவாக்குகின்றன. இருப்பினும், ஜனங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை; அவர்கள் அதை ஒரு கேலிச் சித்திரம் போலப் பார்க்கிறார்கள்.

சாத்தானுடைய ஆயிரமாண்டுகளின் சீர்கேடு காரணமாக, ஜனங்கள் எப்பொழுதும் இருளில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள், அதனால் அவர்கள் அதின் நிமித்தமாகக் கலங்குவதுமில்லை, வெளிச்சத்திற்காக அவர்கள் ஏங்குவதும் இல்லை. இது பின்வருவனவற்றிற்கு வழிவகுத்தது, எனவே, இன்று வெளிச்சம் வரும்போது, “அவர்கள் அனைவரும் என் வருகையை வெறுக்கிறார்கள். மேலும், நான் பரலோகத்தில் இருக்கும் மனிதனின் எதிரி என்பது போலக் கருதி அவர்கள் வெளிச்சத்தின் வருகையைத் தடுக்கிறார்கள். மனிதன் தனது கண்களில் ஒரு பாதுகாப்பு வெளிச்சத்துடன் என்னை வரவேற்கிறான்.” பெரும்பாலான ஜனங்கள் தேவனை உண்மையுடன் நேசிக்க முயன்றாலும், அவர் இன்னும் திருப்தியடையவில்லை, மேலும் அவர் இன்னும் மனிதர்களைக் கண்டிக்கிறார். இது ஜனங்களுக்கு குழப்பமாக உள்ளது. அவர்கள் இருளில் வாழ்வதால், வெளிச்சம் இல்லாத காலத்திலும் அவர்கள் செய்வது போலவே, தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள். அதாவது, எல்லா ஜனங்களும் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்தி தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள், அவர் வரும்போது, அவர்களின் நிலை இப்படிப்பட்டதாக இருக்கிறது, மேலும் அவர்கள் புதிய வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறார்கள்; மாறாக, அவர்கள் தாங்கள் பெற்றிருந்த அனைத்து அனுபவங்களாலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள். தேவன் மனிதனின் “பக்தியிலிருந்து” இன்பத்தைப் பெறுவதில்லை, எனவே இருளில் உள்ள மனுஷர்களால் வெளிச்சத்தைப் புகழ முடியாது. இதனால்தான், தேவன் மேலே உள்ள வார்த்தைகளைப் பேசினார்; இது முற்றிலும் யதார்த்தத்திற்கு முரணானது அல்ல, மேலும் இது தேவன் மனிதர்களைத் தவறாக நடத்துவதும் இல்லை, அல்லது அவர் அவர்களுக்கு அநீதி இழைப்பதும் இல்லை. உலகம் உண்டானது முதற்கொண்டு, தேவனுடைய அன்பை ஒருவர் கூட உண்மையாகச் சுவைத்திருக்கவில்லை; ஜனங்கள் அனைவரும், தேவன் தங்களைத் தாக்கி அழித்துவிடுவார் என்று மிகவும் அஞ்சி, எல்லோரும் தங்களைத் தாங்களே தற்காத்து வந்திருக்கின்றனர். இவ்வாறு, இந்த 6,000 ஆண்டுகளில், தேவன் எப்போதும் ஜனங்களின் நேர்மைக்காக அன்பைப் பரிமாறியிருக்கிறார், மேலும் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர்களைப் பொறுமையாகத் தொடர்ந்து வழிநடத்தி இருக்கிறார். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்களால் தேவனுடைய சித்தத்தை முழுமையாக அறியவோ அல்லது அவரை முழு மனதுடன் நேசிக்கவோ முடியவில்லை, ஏனென்றால் அவர்களால் சாத்தானின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆயினும்கூட, தேவன் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார், மிகவும் பொறுமையாக இருந்த பிறகு ஒரு நாள்—அதாவது, அவர் உலகத்தைப் புதுப்பிக்கும்போது—அவர் இனி ஜனங்களை ஒரு தாயைப் போல கவனித்துக்கொள்ள மாட்டார். மாறாக, மனுஷர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார். இந்தக் காரணத்தினால்தான், இது நடக்கும்: “கடலின் மேற்பரப்பில் சடலங்கள் மிதக்கின்றன,” அதே நேரத்தில், “தண்ணீர் இல்லாத இடங்களில், நான் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளால், சிரிப்புக்கும் பாடலுக்கும் இடையில், மற்ற மனிதர்கள் இன்னும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.” இது தண்டிக்கப்படுபவர்களும் வெகுமதி பெறுபவர்களும் அடையும் சென்றடையும் இடங்களுக்கு இடையிலான ஒப்பீடு ஆகும். “கடலின் மேற்பரப்பு” என்பது தேவன் சொல்லியிருக்கிற, மனிதனின் தண்டனைக்கான பாதாளத்தைக் குறிக்கிறது. இதுவே சாத்தான் சென்றடையும் இடமாக இருக்கிறது, மேலும் இது தேவன் தம்மை எதிர்க்கும் அனைவருக்காகவும் ஆயத்தம் பண்ணியிருக்கும் “இளைப்பாறும் இடம்” ஆகும். தேவன் எப்போதும் மனிதர்களின் உண்மையான அன்பை விரும்பியிருக்கிறார், ஆனால் ஜனங்களோ இதை அறியாதிருக்கிறார்கள், உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள், இன்னும் தங்கள் சொந்த கிரியையைச் செய்கிறார்கள். இதன் காரணமாகவே, தேவன் தமது எல்லா வார்த்தைகளிலும் எப்போதும் ஜனங்களிடம் காரியங்களைக் கேட்கிறார், அவர்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார், மேலும் இந்த வார்த்தைகளின்படி அவர்கள் நடக்கும்படியாக அவர்களுக்கு நடப்பதற்கான பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். அவர் ஜனங்களுக்குத் தம்முடைய சொந்த மனப்பான்மையை இவ்வாறு காட்டியிருக்கிறார்: “ஆயினும்கூட, நான் எந்தவொரு மனித உயிரையும் சாதாரணமாக, ஒரு பொம்மைபோல நினைத்து விளையாடுவதற்கு எடுத்துக்கொள்ளவில்லை. மனிதன் எடுத்துக் கொண்ட சிரமங்களை நான் கவனிக்கிறேன், அவன் செலுத்திய கிரயத்தைப் புரிந்துகொள்கிறேன். அவன் என் முன்பாக நிற்கும்போது, அவனைச் சிட்சிக்க அவனைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை, அல்லது விரும்பத் தகாத விஷயங்களை அவனுக்கு வழங்கவும் நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, இவ்வளவு நாட்களும், நான் மனிதனுக்கு மட்டுமே வழங்கினேன், அவனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்.” தேவனிடமிருந்து வந்த, இந்த வார்த்தைகளை ஜனங்கள் படிக்கும்போது, அவர்கள் உடனடியாக அவருடைய அரவணைப்பை உணர்கிறார்கள், மேலும் இவ்வாறு நினைக்கிறார்கள்: உண்மையில், கடந்த காலத்தில் நான் தேவனுக்கு ஒரு விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறேன், ஆனாலும், சில சமயங்களில் நான் அவரைத் தவறாகவும் நடத்தியிருக்கிறேன், மேலும், நான் அவரிடம் குறையும் கூறியிருக்கிறேன். தேவன் எப்போதும் தம்முடைய வார்த்தைகளால் என்னை வழிநடத்தியிருக்கிறார், மேலும், அவர் என் வாழ்க்கையில் அதிகக் கவனம் செலுத்துகிறார், ஆனால் சில நேரங்களில், நான் அதை ஒரு பொம்மை போல அதனுடன் விளையாடுகிறேன். நான் உண்மையில் இப்படிச் செய்யக்கூடாது. தேவன் என்னை மிகவும் நேசிக்கிறார், ஆகவே, ஏன் என்னால் கடினமாக உழைக்க முடியாது? அத்தகைய எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படும் போது, ஜனங்கள் உண்மையில் தங்கள் முகத்தில் அறைந்து கொள்ள விரும்புகிறார்கள், மேலும் சிலரின் மூக்கு கூட விடைக்கிறது மற்றும் அவர்கள் சத்தமிட்டு அழுகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தேவன் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி பேசுகிறார், மேலும் கடினமானவையாகவோ அல்லது மென்மையானவையாகவோ இல்லாத இந்தச் சில வார்த்தைகளானது அவர் மீது ஜனங்களின் அன்பைத் தூண்டுகின்றன. இறுதியாக, பூமியில் ராஜ்யம் உருவாகியிருக்கும்போது தேவன் தம்முடைய கிரியையில் ஏற்படும் மாற்றத்தை முன்னறிவித்தார்: தேவன் பூமியில் இருக்கும்போது, ஜனங்கள் பேரழிவுகள் மற்றும் பேரிடர்களிலிருந்து விடுபட முடியும், மேலும் கிருபையில் மூழ்கித் திளைக்க முடியும்; இருப்பினும், அவர் மகாநாளின் நியாயத்தீர்ப்பைத் தொடங்கும் போது, அது, அவர் எல்லா ஜனங்கள் மத்தியிலும் தோன்றுகிற சமயமாகவும், மேலும் பூமியில் அவருடைய அனைத்துக் கிரியைகளும் நிறைவடையும் சமயமாகவும் இருக்கும். அந்த நாள் வந்திருக்கும் என்பதால், அந்த நேரத்தில், அது: “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” என்று வேதாகமத்தில் எழுதப்பட்டதைப் போலவே இருக்கும். அநீதியுள்ளவர்கள் தண்டனையைப் பெற வருவார்கள், பரிசுத்தமானவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக வருவார்கள். ஒரு நபர் கூட தேவனுடைய இரக்கத்தைப் பெற முடியாது; ராஜ்யத்தின் குமாரர்களும் ஜனங்களும் கூட பெற முடியாது. இவை எல்லாம் தேவனுடைய நீதியாக இருக்கிறது, மேலும் இவை அனைத்தும் அவரது மனநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. மனிதனின் பலவீனங்களுக்காக அவர் இரண்டாவது முறை பரிவு காட்ட மாட்டார்.

முந்தைய: அத்தியாயம் 16

அடுத்த: அத்தியாயம் 18

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக