யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி

தேவன் நடைமுறையான தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் வெளிப்படுத்துகிற சத்தியங்கள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன. அவருடைய வார்த்தைகளாக இல்லாதவைகளெல்லாம் வெறுமையும், இல்லாதவையும், ஆதாரம் அற்றவையும் ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவர் மக்களைத் தேவனின் வார்த்தைகளுக்குள் வழிநடத்துகிறார். மக்கள் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமானால், அவர்கள் யதார்த்தத்தைத் தேட வேண்டும், யதார்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் யதார்த்தத்தை அனுபவித்து, யதார்த்தமாக வாழ வேண்டும். மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அவர்களால் பிறரின் வார்த்தைகள் உண்மையானவையா என்பதை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிவார்களோ, அவர்களிடம் அவ்வளவு குறைவான கருத்துக்களே உள்ளன. மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்கள் யதார்த்தத்தைக் குறித்த தேவனின் கிரியைகளை அவ்வளவு அதிகம் அறிவார்கள், மேலும் அவர்களுடைய சீர்கேடான, சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து விடுதலையாவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கிறது. மக்கள் எவ்வளவு யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை அறிவார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் மாம்சத்தை வெறுக்கிறார்கள் மற்றும் சத்தியத்தை நேசிக்கிறார்கள். மேலும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார்களோ, தேவனின் தேவைகளின் தரநிலைகளுக்கு அவ்வளவு நெருக்கமாக வருகிறார்கள். தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் யதார்த்தத்தைப் பெற்றவர்களாகவும், யதார்த்தத்தை அறிந்தவர்களாகவும், தேவனின் உண்மையான கிரியைகளை யதார்த்தத்தை அனுபவிப்பதன் மூலம் அறிந்து கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். நீ ஒரு நடைமுறையான வழியில் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு ஒத்துழைத்து, உன் சரீரத்தை கீழ்ப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ பெற்றுக்கொள்வாய், அவ்வளவு அதிகமாக நீ யதார்த்தத்தைப் பெற்றுக்கொள்வாய், மேலும் நீ தேவனால் அவ்வளவு அதிகமாய் வெளிச்சத்தைப் பெறுவாய், இதனால் தேவனின் உண்மையான கிரியைகளைப் பற்றிய உனது அறிவு அவ்வளவு அதிகமாக பெருகும். உன்னால் பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வெளிச்சத்தில் வாழ முடிந்தால், உனக்கு நடைமுறைக்கான தற்போதைய பாதை தெளிவானதாகிவிடும், மேலும் உனக்கு கடந்தகால மதக் கருத்துக்கள் மற்றும் பழைய நடைமுறைகளிலிருந்து உன்னைப் பிரிக்க அதிக வாய்ப்பு இருக்கும். யதார்த்தம் தான் இன்றைய கவனமாயிருக்கிறது. மக்களிடம் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறதோ, சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறிவு அவ்வளவு தெளிவாயிருக்கிறது, மேலும் அவர்களுக்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து அவ்வளவு அதிக புரிதல் இருக்கும். யதார்த்தத்தால் எல்லா எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மேற்கொள்ள முடியும், அது எல்லா கோட்பாடுகளையும் திறமைகளையும் மேற்கொள்ள முடியும், மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை உண்மையாக நேசித்து, அவருடைய வார்த்தைகளுக்காக பசியும் தாகமுமாயிருக்கிறார்கள். எப்போதும் நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தினால், வாழ்க்கை, மதக் கருத்துக்கள் மற்றும் இயல்பான குணங்கள் குறித்த உன்னுடைய தத்துவம் இயல்பாகவே தேவனின் கிரியையைப் பின்பற்றி நீக்கப்படும். யதார்த்தத்தைப் பின்தொடராத, யதார்த்தத்தைக் குறித்த எவ்வித அறிவும் இல்லாதவர்களாகிய அவர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவோ அதைப் பின்தொடருவார்கள், மேலும் அவர்கள் எளிதாக ஏமாற்றமடைவார்கள். இதுபோன்றோரில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கான வழியில்லை, எனவே அவர்கள் வெறுமையாக உணர்கிறார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாயிருக்கிறது.

நீ உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, உண்மையாக ஜெபித்து, சத்தியத்தைத் தேடுவதின் நிமித்தம் துன்பப்பட தயாராக இருக்கும் போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்ய முடியும். சத்தியத்தைத் தேடாதவர்களிடம் இருப்பது எழுத்துக்களும், கொள்கைகளும் வெற்றுக் கோட்பாடுகளுமே அன்றி வேறொன்றும் இல்லை, சத்தியம் இல்லாதவர்களிடம் இயல்பாகவே தேவனைக் குறித்த பல கருத்துக்கள் உள்ளன. இதுபோன்றவர்கள் தேவனால் தங்கள் மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்படுவதினால் மூன்றாம் வானத்திற்கு ஏறிச்செல்ல மட்டுமே ஏங்குகிறார்கள். இவர்கள் எவ்வளவு முட்டாள்கள்! இதுபோன்ற காரியங்களில் தேவனைக் குறித்தோ, யதார்த்தத்தைக் குறித்தோ ஞானமில்லை என்று சொல்லும் இதுபோன்றோரால் பெரும்பாலும் தேவனுடன் ஒத்துழைக்கவும் முடியாது, செயலற்று காத்திருக்க மட்டுமே முடியும். மக்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு, சத்தியத்தைத் தெளிவாகக் கண்டு, அதற்கும் மேல் அவர்கள் சத்தியத்திற்குள் பிரவேசித்து அதைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் கண்டிப்பாக உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, சத்தியத்தின் மீது பசியும் தாகமுமாய் இருக்க வேண்டும். நீ பசியும் தாகமுமாய் இருந்து, நீ உண்மையில் தேவனோடு ஒத்துழைக்கும் போது, தேவ ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொட்டு உனக்குள் கிரியை செய்வார், இது உனக்கு அதிக வெளிச்சத்தைத் தரும், மேலும் உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அதிக அறிவைத் தந்து, உன் ஜீவனுக்கு பேருதவியாக இருக்கும்.

மக்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், தேவன் ஒரு நடைமுறையான தேவன் என்பதை அவர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் அவர்கள் தேவனின் வார்த்தைகளையும், மாம்சத்தில் தேவனுடைய நடைமுறைத் தோற்றத்தையும், தேவனின் நடைமுறைக் கிரியைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனின் கிரியைகள் எல்லாம் நடைமுறையானவை என்பதை அறிந்த பின்புதான் உன்னால் தேவனுடன் உண்மையில் ஒத்துழைக்க முடியும், மேலும் இவ்வழியில் மட்டுமே நீ உன் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய முடியும். யதார்த்தத்தைப் பற்றிய அறிவில்லாதவர்கள் யாராலும் தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதற்கான எந்த வழியும் இல்லை, அவர்களின் கருத்துக்களில் மாட்டிக் கொண்டு, அவர்களின் கற்பனையில் வாழ்கிறார்கள், இதனால் அவர்களுக்கு தேவனின் வார்த்தைகளைப் பற்றிய அறிவேதும் இல்லை. யதார்த்தத்தைப் பற்றிய உன் அறிவு எவ்வளவு அதிகமோ, நீ தேவனோடு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறாய், மேலும் நீ அவருடன் மிகவும் அன்யோன்யமாக இருக்கிறாய். நீ தெளிவின்மை, கவனச் சிதறல் மற்றும் கோட்பாட்டை எவ்வளவு அதிகமாகத் தேடுகிறாயோ, நீ அவ்வளவு அதிகமாக தேவனிடமிருந்து விலகிச் செல்வாய், ஆகவே மேலும் தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதை மிகவும் சோர்வானதாகவும் கடினமானதாகவும், உன்னால் பிரவேசிக்க இயலாது என்றும் நீ அதிகமாக உணருவாய். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள்ளும், உன் ஆவிக்குரிய வாழ்க்கையின் சரியான பாதையிலும் நீ பிரவேசிக்க விரும்பினால், முதலில் நீ யதார்த்தத்தை அறிந்து, தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு மாறான காரியங்களிலிருந்து உன்னை தனிமைப்படுத்து, அதாவது முதலில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வெளிச்சமூட்டி உள்ளிருந்து உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை நீ கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இவ்விதமாக, மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான கிரியையை உன்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிந்தால், தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான சரியான பாதையில் நீ பிரவேசித்திருப்பாய்.

இன்று, எல்லாமே யதார்த்தத்திலிருந்து ஆரம்பமாகிறது. தேவனின் கிரியை மிக உண்மையானது, மேலும் மக்களால் தொடக்கூடியதாக இருக்கிறது. மக்கள் அதைத் தான் அனுபவிக்கவும் அடையவும் முடியும். மக்களில் உள்ள நிறைய தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள், தேவனின் தற்போதைய கிரியையை அவர்கள் தெரிந்துகொள்வதைத் தடுக்கிறது. இவ்வாறு, தங்கள் அனுபவங்களில் அவர்கள் எப்போதும் விலகி, காரியங்கள் கடினமானவை என்று எப்போதும் உணர்கிறார்கள், இவையெல்லாம் அவர்களின் கருத்துக்களாலேயே உண்டாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் கொள்கைகளை மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, யதார்த்தம் அவர்களுக்குத் தெரிவதில்லை, எனவே அவர்களின் பிரவேசிக்கும் பாதையில் அவர்கள் எப்போதும் எதிர்மறையாக இருக்கிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்தே தேவனின் தேவைகளைப் பார்க்கிறார்கள், அவற்றை அடைய முடிவதில்லை. தேவனின் வார்த்தைகள் உண்மையில் நல்லவை என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள், ஆனால் பிரவேசிக்கும் வழியைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்தக் கொள்கையின்படி கிரியை செய்கிறார். மக்களின் ஒத்துழைப்பு மூலம், அவர்கள் மூலமாக தீவிரமாய் ஜெபிப்பது, தேடுவது மற்றும் தேவனிடம் நெருங்குவதன் மூலம், முடிவுகளை அடைய முடியும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவொளியூட்டப்பட்டு பிரகாசிக்கப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், அல்லது மனிதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறான் என்பதல்ல. இரண்டும் இன்றியமையாதவை, மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இணைக்கப்பட்ட மக்களின் உண்மையான ஒத்துழைப்பு மட்டுமே உண்மையான அனுபவங்களையும் தேவனின் வார்த்தைகளைக் குறித்த அத்தியாவசியமான அறிவையும் உருவாக்க முடியும். படிப்படியாக, இவ்விதமாக அனுபவிப்பதால், இறுதியில் ஒரு பரிபூரண நபர் உருவாகிறார். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. மக்களின் கருத்துக்களில், தேவன் சர்வவல்லவர், மற்றும் எல்லாமே தேவனால் செய்யப்படுகிறது, இதனால் மக்கள் செயலற்ற முறையில் காத்திருந்து, தேவனின் வார்த்தைகளை வாசிக்காமலும் அல்லது ஜெபிக்காமலும், பரிசுத்த ஆவியானவரின் தொடுதலுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள். இருப்பினும், சரியான புரிதலுடன் இருப்பவர்கள் இதை நம்புகிறார்கள்: எனது ஒத்துழைப்பு வரைக்கே தேவனின் செயல்கள் செல்ல முடியும், மேலும் என்னில் தேவனின் கிரியை ஏற்படுத்தும் விளைவு நான் எப்படி ஒத்துழைக்கிறேன் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் பேசும்போது, தேவனின் வார்த்தைகளை நாடித் தேடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்ய வேண்டும்; நான் இதைத்தான் அடைய வேண்டும்.

பேதுரு மற்றும் பவுலின் உதாரணங்களில் நீங்கள் யதார்த்தத்திற்கு அதிக கவனம் செலுத்தியது பேதுரு தான் என்பதை தெளிவாக பார்க்கலாம். பேதுரு கடந்துவந்தவற்றிலிருந்து, அவனுடைய அனுபவங்கள் கடந்த காலங்களில் தோல்வியுற்றவர்களின் சுருக்கப்பதிவு என்பதையும், கடந்த கால பரிசுத்தவான்களின் பலங்களை அவர் கிரகித்துக்கொண்டதையும் காணலாம். இதிலிருந்து பேதுருவின் அனுபவங்கள் எவ்வளவு உண்மையாக இருந்தன, இந்த அனுபவங்களை மக்கள் அடையவும் தொடவும், அவற்றைப் பெறவும் முடிந்தது என்பதைக் காண்லாம். ஆயினும், பவுல் மாறுபட்டவர். அவர் பேசியதெல்லாம் தெளிவற்றவையும், கண்ணுக்குப் புலப்படாதவையும், மூன்றாவது வானத்திற்கு ஏறுவதும், சிங்காசனத்திற்கு ஏறுவதும், நீதியின் கிரீடம் போன்றவையும் ஆகும். அவர் வெளியார்ந்தவற்றில் கவனம் செலுத்தினார்: அந்தஸ்து மற்றும் மக்களுக்குப் போதனை செய்தல், அவருடைய மூப்பர்த்துவத்தைக் காட்டுவது, பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவது, மற்றும் பலவற்றில் கவனம் செலுத்தினார். அவர் பின்தொடர்ந்தவை எதுவும் உண்மையல்ல, அவை பெரும்பாலும் கற்பனையானவை, ஆகவே இவையெல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்டவை என்பதைக் காணலாம், மக்களைப் பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு தொடுகிறார், மக்கள் அனுபவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி, மூன்றாவது வானத்திற்குச் செல்வது, அல்லது அவர்கள் எந்த அளவிற்கு வழக்கமான பயிற்சியை அனுபவிக்கிறார்கள், அவர்கள் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதை எவ்வளவு அனுபவிக்கிறார்கள், இவை எதுவும் உண்மையல்ல. பரிசுத்த ஆவியானவரின் அனைத்து கிரியையும் இயல்பானது, உண்மையானது. நீ தேவனின் வார்த்தைகளை வாசித்து ஜெபம் செய்யும்போது, உனக்குள் நீ பிரகாசத்துடனும் உறுதியுடனும் இருப்பாய், வெளி உலகம் உன்னில் இடைபட முடியாது; உள்ளே, நீ தேவனை நேசிக்க விரும்புகிறாய், நேர்மறையான காரியங்களில் ஈடுபட விரும்புகிறாய், தீய உலகத்தை வெறுக்கிறாய். இது தேவனுக்குள் வாழ்வதாகும். இது மக்கள் சொல்வதைப் போல, மிகுந்த இன்பம் அனுபவிப்பது அல்ல—இதுபோன்ற பேச்சு நடைமுறையானது அல்ல. எல்லாம் இன்று யதார்த்தத்திலிருந்து தொடங்க வேண்டும். தேவன் செய்வது எல்லாம் நிஜமானவை, நீ உண்மையிலேயே தேவனை உன் அனுபவங்களில் அறிந்து கொள்வதிலும், தேவனின் கிரியையின் அடிச்சுவடுகளையும் பரிசுத்த ஆவியானவர் மக்களைத் தொட்டு அறிவொளியூட்டுவதற்கான வழிமுறைகளையும் தேடுவதில் கவனம் செலுத்த வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, ஜெபம் செய்து, மிகவும் நிஜமான வழியில் ஒத்துழைத்தால், சென்ற காலங்களிலிருந்து நல்லதைச் சேகரித்து, பேதுருவைப் போன்று கெட்டதை விட்டுவிட்டால், நீ உன் காதுகளால் கேட்டு, உன் கண்களால் கவனித்தால், அடிக்கடி ஜெபித்து, உன் இருதயத்தில் ஆழ்ந்து சிந்தித்து, தேவனுடைய கிரியையுடன் ஒத்துழைக்க உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால், இதனால் தேவன் நிச்சயமாய் உன்னை வழிநடத்துவார்.

முந்தைய: தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

அடுத்த: ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக