புத்தகங்கள்

 • தேவனுடைய தோற்றமும் கிரியையும்

  தேவனுடைய தோற்றமும் கிரியையும்

  தம்முடைய கிரியையைச் செய்ய தோன்றிய சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர், மனிதகுலத்தைச் சுத்திகரித்து இரட்சிக்கும் அனைத்து சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார். அவை அனைத்தும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற உரையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வேதாகமத்தில் எழுதப்பட்டதை நிறைவேற்றியுள்ளது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது(யோவான் 1:1). மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதைப் பொறுத்தவரையில், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தேவன் எல்லா மனிதர்களிடமும் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும். இந்த வார்த்தைகள் மனிதர்களிடையே தேவன் வெளிப்படுத்திய முதல் உரையை உருவாக்குகின்றன. அதில் அவர் ஜனங்களை அம்பலப்படுத்தி, வழிநடத்துகிறார், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பளிக்கிறார், அவர்களுடைய மனதுடன் நெருக்கமாகப் பேசுகிறார். ஆகவே, தேவனுடைய அடிச்சுவடுகள், தேவன் இருக்கும் இடம், தேவனுடைய மனநிலை, தேவன் மற்றும் தேவனிடம் இருப்பது, தேவனுடைய எண்ணங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான அவருடைய அக்கறை என இவற்றை அறிந்துகொள்ள ஜனங்களுக்கு தேவன் தரும் அனுமதியின் முதல் வார்த்தைகள் இவை. சிருஷ்டிப்புக்குப் பின்னர் மூன்றாவது வானத்திலிருந்து தேவன் மனிதர்களிடம் பேசிய முதல் வார்த்தைகள் இவை என்றும், தேவன் தமது வார்த்தைகளின் மூலம் மனிதகுலத்திற்கு தமது இருதயத்தின் குரலை வெளிப்படுத்துவதற்கு தமது உள்ளார்ந்த அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம். சர்வவல்லமையுள்ள தேவனாகிய கடைசி நாட்களின் கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை (வார்த்தை என்று சுருக்கப்பட்டுள்ளது), தற்போது ஆறு தொகுதிகளைக் கொண்டுள்ளது: தொகுதி 1, தேவனுடைய தோற்றமும் கிரியையும்; தொகுதி 2, தேவனை அறிதல் பற்றி; தொகுதி 3, கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள்; தொகுதி 4, அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல்; தொகுதி 5, தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்; மற்றும் தொகுதி 6, சத்தியத்தைப் பின்தொடர்தல் பற்றி.
 • தேவனை அறிதல் பற்றி

  தேவனை அறிதல் பற்றி

  மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற நூலின் தேவனை அறிதல் பற்றி எனும் இரண்டாம் தொகுதி, தேவனுடைய தோற்றமும் கிரியையும் என்பதில் இருப்பவற்றின் தொடர்ச்சியாகக் கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனின் அனைத்து மனுக்குலத்துக்குமான உரைகளைக் கொண்டுள்ளது. உலகத்தைப் படைத்ததில் இருந்து தேவன் செய்துவந்திருக்கிற கிரியை, அதில் அடங்கி இருக்கும் மனுக்குலத்திற்கான அவருடைய சித்தம் மற்றும் அவருடைய எதிர்பார்ப்புகள், அவருடைய கிரியையிலிருந்து தேவன் என்ன கொண்டிருக்கிறாரோ மற்றும் என்னவாக இருக்கிறாரோ அவை எல்லவற்றினுடைய வெளிப்பாடு, அது மட்டும் அல்லாமல் அவருடைய நீதி, அவருடைய அதிகாரம், அவருடைய பரிசுத்தம் மற்றும் எல்லாவற்றிற்கும் அவரே ஜீவ ஆதாரம் எனும் உண்மை ஆகிய பல்வேறுபட்ட சத்தியங்களை தேவன் விளக்குகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்த பின், தேவனை உண்மையிலேயே விசுவாசிப்பவர்களே, இந்தக் கிரியையைச் செய்யக் கூடியவர் மற்றும் இந்த மனநிலைகளை பொழியக் கூடியவரே எல்லாவற்றையும் ராஜரிகம் செய்யும் ஒருவர் என்று உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் மேலும் அவர்களால் தேவனுடைய அடையாளம், அவரதுநிலை, மற்றும் அவருடைய சாராம்சம் ஆகியவற்றை உண்மையிலேயே அறிய முடியும், அதன் மூலம் கடைசிநாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனே தேவன், தனித்துவமானவர் என்று உறுதிப்படுத்துவார்கள்.
 • நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது

  நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறது

  இந்தப் புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பபட்ட தொகுப்புகள் அனைத்தும் பிரதானமாக “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை, தொகுதி 1, தேவனுடைய தோற்றமும் கிரியையும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்ட கடைசி நாட்களில் தமது நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளாகும். இவைதான் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையைத் தேடுகிற மற்றும் ஆராய்ந்து பார்க்கிற ஒவ்வொரு நபரும் அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களாகும். இந்தப் புத்தகத்திலுள்ள தேவனுடைய வெளிப்பாடுகள் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளதுபோலவே சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவர் சொல்லுபவையாக இருக்கின்றன. தேவனுடைய இந்த தற்போதயை வார்த்தைகள் அவர் தோன்றுவதற்கும் அவருடைய கிரியைக்கும் சிறந்த சாட்சியாக இருப்பதோடு, கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார் என்ற உண்மைக்கு சிறந்த சாட்சியாகவும் இருக்கின்றன. தேவனுடைய தோன்றலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவரும் முடிந்த அளவுக்கு விரைவாக அவருடைய குரலைக் கேட்க உதவுவதற்காகவே இந்தப் புத்தகம். கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கும் மற்றும் தேவன் தோன்றுவதையும் அவருடைய கிரியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவராலும் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
 • கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து வரும் இன்றியமையாத வார்த்தைகள்

  கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து வரும் இன்றியமையாத வார்த்தைகள்

  மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதில் கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய இன்றியமையாத வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. இந்த இன்றியமையாத வார்த்தைகள் சத்தியத்தை நேரடியாக தெளிவுபடுத்துகின்றன, மேலும் தேவனுடைய சித்தத்தை புரிந்துகொள்ளவும், அவருடைய கிரியையை அறிந்துகொள்ளவும், அவருடைய மனநிலையையும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பதையும் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் ஜனங்களுக்கு நேரடியாக உதவும். தேவனுடைய அடிச்சுவடுகளை நாட அவருடைய தோற்றத்திற்காக ஏங்கும் எல்லோருக்கும் அவை ஒரு வழிகாட்டியாக உள்ளன. பரலோக ராஜ்யத்தின் நுழைவாயிலைக் கண்டறிய அவை உங்களை வழிநடத்தும்.
 • தேவனுடைய அனுதின வார்த்தைகள்

  தேவனுடைய அனுதின வார்த்தைகள்

  இந்தப் புத்தகம், மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திகளைக் கொண்டுள்ளது. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவருடைய வார்த்தைகளிலிருந்து சத்தியத்தையும் ஜீவிதத்திற்க்கான அன்றாட தேவைகளையும் பெற முடியும் என்பதற்காக, ஜனங்கள் ஜீவிதத்தில் பிரவேசிப்பதை அறிவுறுத்தும் சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த அத்தியாவசியமான வார்த்தைகள், இங்கு ஜனங்களின் இன்பத்திற்காக விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, ஆகையால் இது சத்தியத்தை நேசிப்பவர்களை அதைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுக்கு முன்பாக ஜீவிப்பதற்கும், தேவனால் இரட்சிக்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுவதற்கும் அனுமதிக்கிறது. தேவனின் இந்த அத்தியாவசியமான வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடுகள் ஆகும்; மேலும், அவை ஜீவிதத்தின் அதிகபட்ச விஷயங்களுக்கு மிகவும் அவசியமானவை, மேலும் வேறு எந்த வார்த்தைகளும் ஜனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் இந்த வார்த்தைகளின் ஒரு பத்தியை நீங்கள் உண்மையிலேயே அனுபவிக்க முடிந்தால், இதுவே உங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருக்கும், நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.