கிரியையும் பிரவேசித்தலும் (8)

ஒவ்வொரு நபரின் ஆவியை மாற்றுவதற்காகவும், ஒவ்வொரு நபரின் ஆத்துமாவை மாற்றுவதற்காகவும், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர்களது இருதயம் சீர்படுத்தப்பட்டு, அதன்மூலம், தீமையினால் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருக்கிற அவர்களது ஆத்துமாவை மீட்பதற்காகவும், கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை செய்யப்படுகிறது என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது ஜனங்களுடைய ஆவிகளை எழுப்புவதற்கும், அவர்களது குளிர்ந்த இருதயங்களைக் கரைப்பதற்கும், அவர்களைப் புத்துயிர் பெற அனுமதிப்பதற்குமே ஆகும். இது தேவனுடைய மாபெரும் சித்தமாகும். மனுஷனின் வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் எவ்வளவு உயர்ந்தவை அல்லது ஆழமானவை என்பதைப் பற்றி பேசுவதை ஒதுக்கி வையுங்கள்; ஜனங்களுடைய இருதயங்கள் விழித்தெழும்பியிருக்கும்போது, அவர்கள் தங்கள் கனவுகளிலிருந்து எழுப்பப்பட்டு, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தினால் ஏற்படும் தீங்கை நன்கு அறிந்திருக்கும்போது, தேவனுடைய ஊழியத்தின் கிரியை நிறைவேறியிருக்கும். தேவனுடைய கிரியை முடியும் நாளே மனுஷன் அதிகாரப்பூர்வமாக தேவன் மீதான விசுவாசத்தின் சரியான பாதையில் நடக்கத் தொடங்கும் நாளாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில், தேவனுடைய ஊழியம் முடிவுக்கு வந்திருக்கும்: தேவன் மாம்சமாக மாறும் கிரியை முற்றிலும் முடிந்திருக்கும், மேலும் மனுஷன் அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தொடங்குவான்—அவன் தனது ஊழியத்தைச் செய்வான். இவைகளே தேவனுடைய கிரியையின் படிகளாகும். எனவே, இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான அடித்தளத்தின் மீது பிரவேசிப்பதற்கான உங்கள் பாதையை நீங்கள் தேட வேண்டும். இவை அனைத்தையும் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனுஷனுடைய உள்ளத்தின் ஆழத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே மனுஷனின் பிரவேசம் மேம்படும், ஏனென்றால், மீட்கப்பட்டிருக்கிற, அந்தகார ஆதிக்கத்தின் கீழ் இன்னும் வாழ்கிற, பிசாசுகள் ஒன்றுகூடும் இந்த இடத்திலிருந்து ஒருபோதும் தன்னைத்தானே எழுப்பாத மனுஷனின் முழுமையான இரட்சிப்பே தேவனுடைய கிரியையாகும்; அது மனுஷன் ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாவத்திலிருந்து விடுவிக்கப்படவும், தேவனுக்குப் பிரியமானவனாக இருக்கவும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முற்றிலுமாக வீழ்த்தவும், தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், விரைவில் தேவனுடைய இருதயத்திற்கு இளைப்பாறுதலைக் கொண்டு வரவும் வேண்டும் என்பதற்காகத்தான்; அது உங்கள் மார்பை வீங்கச் செய்யும் வெறுப்பிற்குத் தடையின்றி காற்றோட்டத்தைக் கொடுப்பதற்கும், அந்தப் பூஞ்சைக் கிருமிகளை ஒழிப்பதற்கும், எருது, குதிரை போன்றவற்றிலிருந்து எந்தவிதத்திலும் வேறுபாடில்லாத இந்த வாழ்க்கையை விட்டுவிட உங்களுக்கு உதவுவதற்கும், இனி ஒருபோதும் அடிமையாக இல்லாமல் இருக்கவும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் இனி சுதந்திரமாக மிதிக்கப்படவோ அல்லது கட்டளையிடப்படவோ கூடாதபடிக்குமே ஆகும்; நீங்கள் இனி இந்த தோற்றுப்போன தேசத்தைச் சேர்ந்தவராக இருக்க மாட்டீர்கள், இனி கொடூரமான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தைச் சேர்ந்தவராக இருக்க மாட்டீர்கள், மேலும் நீங்கள் இனி அதனால் அடிமைப்படுத்தப்பட மாட்டீர்கள். பிசாசுகளின் வலை நிச்சயமாகவே தேவனால் துண்டு துண்டாகக் கிழிக்கப்படும், மேலும் நீங்கள் தேவனுக்கு அருகில் நிற்பீர்கள்—நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள், இந்த அடிமைகளின் சாம்ராஜ்யத்திற்குச் சொந்தமானவர்கள் அல்ல. தேவன் இந்த அந்தகார சமூகத்தை நீண்ட காலமாக அடியோடு வெறுத்திருக்கிறார். அவர் தம்முடைய பற்களைக் கடித்துக்கொண்டு, இந்தப் பொல்லாத, கொடூரமான பழைய சர்ப்பத்தின் மீது கால்களைப் பதிக்க ஆவலாய் இருக்கிறார், அதனால் அது ஒருபோதும் திரும்ப எழுந்திருக்காது, மேலும் மனுஷனை ஒருபோதும் மறுபடியும் துஷ்பிரயோகம் செய்யாது; கடந்த காலத்தில் அது செய்த செயல்களை அவர் மன்னிக்க மாட்டார், மனுஷனுக்கு அது செய்த வஞ்சகத்தை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார், மேலும் காலங்காலமாக அது செய்த ஒவ்வொரு பாவத்திற்குமான சரிக்கட்டுதலை அவர் கொடுத்துத் தீர்ப்பார். எல்லாத் தீமைகளுக்கும் காரணமான கலகக்காரத் தலைவனை[1] தேவன் லேசாக விட்டுவிடமாட்டார், அவர் அதை முற்றிலும் அழித்துவிடுவார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இது அசுத்தமான நிலமாக இருந்து வருகிறது. இது தாங்க முடியாத அழுக்கும், மிகுந்த துன்பமும், எங்கும் தலைவிரித்தாடும் பிசாசுகளும், சூழ்ச்சி மற்றும் வஞ்சகமும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துதலும்,[2] இரக்கமற்றும் கொடூரமாகவும், இந்தப் பிசாசு நகரத்தை மிதித்தும், மரித்த உடல்களின் குப்பைகளால் நிரம்பியதுமாய் இருக்கிறது; அழுகியதனால் ஏற்படுகிற துர்நாற்றம் தேசத்தை மூடுகிறது மற்றும் காற்றில் பரவுகிறது, மேலும் அது பலத்தப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது[3]. வானங்களுக்கு அப்பால் உள்ள உலகத்தை யாரால் பார்க்க முடியும்? மனுஷனின் சரீரம் முழுவதையும் பிசாசு இறுக்கமாகப் பிடிக்கிறது, அது அவனது இரு கண்களையும் மறைக்கிறது, மேலும் அவனது உதடுகளை இறுக்கமாக மூடுகிறது. பிசாசுகளின் நகரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் போது, ஏதோ அது ஊடுருவ முடியாத பிசாசுகளின் அரண்மனையாக இருப்பதைப் போலப் பிசாசுகளின் ராஜா பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரை வெறித்தனமாய்ச் செயல்பட்டிருக்கிறான்; இதற்கிடையில், இந்தக் காவல் நாய்களின் கூட்டம், தாங்கள் அறியாத வேளையில் தேவன் தங்களைப் பிடித்து, தங்களுக்குச் சமாதானம் மற்றும் சந்தோஷத்திற்கான ஓர் இடத்தையும் விட்டுவைக்காமல், அனைவரையும் அழித்துவிடுவார் என்ற மிகுந்த பயத்துடன், ஒளிரும் கண்களால் கூர்ந்து நோக்குகின்றனர். இது போன்ற பிசாசின் நகரத்து ஜனங்கள் தேவனை எப்படிப் பார்த்திருக்க முடியும்? அவர்கள் எப்போதாவது தேவனுடைய அன்பையும் தயவையும் அனுபவித்திருக்கிறார்களா? மனுஷ உலக விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவர்களில் யாரால் தேவனுடைய ஆர்வமுள்ள சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்? அப்படியானால், மனுவுருவாகிய தேவன் முழுவதுமாக மறைந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்: இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற பிசாசுகள்இருக்கிற இதைப் போன்ற இருண்ட சமுதாயத்தில், எவ்வித இரக்கமும் இல்லாமல் ஜனங்களைக் கொல்லும் பிசாசுகளின் ராஜா, அன்பாகவும், தயவாகவும் மற்றும் பரிசுத்தமாகவும் இருக்கிற தேவன் இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்வான்? அது எப்படி தேவனுடைய வருகையைப் பாராட்டி உற்சாகமடைய முடியும்? இந்தக் கீழ்த்தரமானவர்கள்! அவர்கள் தயவுக்குப் பதிலாக வெறுப்பைத் திருப்பிச் செலுத்துகிறார்கள், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தேவனை ஒரு சத்துருவாகக் கருத ஆரம்பித்தனர், அவர்கள் தேவனைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அவர்கள் அளவுக்கதிகமான காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள், அவர்கள் தேவனைச் சிறிதும் கருத்தில்கொள்வதில்லை, அவர்கள் கொள்ளையடித்துக், கன்னமிட்டுத் திருடுகிறார்கள், அவர்கள் மனச்சாட்சியை முழுவதுமாக இழந்துவிட்டார்கள், அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் அப்பாவிகளை உணர்வற்ற நிலைக்குத் தள்ளுகிறார்கள். பண்டைய காலத்தின் முன்னோர்களா? அன்பான தலைவர்களா? அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள்! அவர்களின் தலையீடு வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் இருளிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது! மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்! தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டவன் யார்? தேவனுடைய கிரியைக்காகத் தன் உயிரைக் கொடுத்தவன் அல்லது இரத்தத்தைச் சிந்தியவன் யார்? தலைமுறை தலைமுறையாகப் பெற்றோர்கள் முதல் பிள்ளைகள் வரை, அடிமைப்படுத்தப்பட்ட மனுஷன் தேவனைத் தயக்கமின்றி அடிமைப்படுத்தினான்—இது எப்படிக் கோபத்தைத் தூண்டாமல் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருதயத்தில் வெறுப்பு குவிந்துள்ளது, மில்லியன்கணக்கான பாவங்கள் இருதயத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளன—இது எப்படி வெறுப்பைத் தூண்டாமல் இருக்க முடியும்? தேவன் சார்பாகப் பழிவாங்கு, அவரது எதிரியை முற்றிலுமாக சடுதியில் அழித்துவிடு, அது இனிமேல் வெறிகொண்டு ஆட அனுமதிக்காதே, மேலும் அது கொடுங்கோலனாக ஆட்சி செய்ய அனுமதிக்காதே! இதுதான் சமயம்: இந்தப் பிசாசின் கொடூரமான முகத்தைக் கிழித்து, கண்கள் குருடாக்கி வைக்கப்பட்டிருந்த மற்றும் எல்லாவிதமான துன்பத்தையும் பாடுகளையும் சகித்துக்கொண்டிருந்த ஜனங்களை அவர்களது வேதனையிலிருந்து எழுப்பி, இந்தப் பொல்லாத பழைய பிசாசிற்கு முதுகைக் காட்டச் செய்யும்படி மனுஷன் நீண்ட காலமாகத் தனது முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது எல்லா முயற்சிகளையும் அர்ப்பணித்து, ஒவ்வொரு விலைக்கிரயத்தையும் செலுத்தியிருக்கிறான். தேவனுடைய கிரியைக்கு இப்படிப்பட்டதொரு அசாத்தியமான தடையை ஏன் வைக்க வேண்டும்? தேவனுடைய ஜனங்களை வஞ்சிக்க ஏன் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்? உண்மையான சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள் எங்கே உள்ளன? நேர்மை எங்கே? ஆறுதல் எங்கே? அன்பு எங்கே? தேவனுடைய ஜனங்களை ஏமாற்ற ஏன் வஞ்சகத் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும்? தேவனுடைய வருகையை ஒடுக்குவதற்கு ஏன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்? தேவனை ஏன் தாம் சிருஷ்டித்த பூமியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதை அனுமதிக்கக்கூடாது? தேவனுக்குத் தலைசாய்க்க இடமில்லாத வரை ஏன் அவரை வேட்டையாட வேண்டும்? மனுஷர்கள் மத்தியில் அன்பு எங்கே இருக்கிறது? ஜனங்கள் மத்தியில் வரவேற்பு எங்கே இருக்கிறது? தேவனிடம் ஏன் இவ்வளவு நம்பிக்கையற்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறாய்? ஏன் தேவனைத் திரும்பத் திரும்பக் கூப்பிடச் செய்கிறாய்? தம்முடைய நேச குமாரனுக்காகக் கவலைப்படும்படி தேவனை ஏன் கட்டாயப்படுத்துகிறாய்? இந்த இருண்ட சமூகத்தில், அதன் மன்னிப்புக்காகக் கேட்க வேண்டிய காவல் நாய்கள், தாம் சிருஷ்டித்த உலகத்தில் சுதந்திரமாக வந்து செல்ல ஏன் தேவனை அனுமதிப்பதில்லை? மனுஷன் ஏன் வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் வாழும் மனுஷனைப் புரிந்துகொள்வதில்லை? உங்கள் நிமித்தமாக, தேவன் மிகுந்த வேதனையை அனுபவித்திருக்கிறார், மிகுந்த வேதனையுடன் அவர் தம்முடைய நேச குமாரனையும், அவரது மாம்சத்தையும் இரத்தத்தையும் உங்களுக்கு அருளியிருக்கிறார்—ஆகையால், நீங்கள் ஏன் இன்னும் கண் சொருகிப்போன குருடர்களாய் இருக்கிறீர்கள்? எல்லாருடைய முழுப் பார்வையிலும், நீங்கள் தேவனுடைய வருகையை நிராகரித்து, தேவனுடைய நட்பை மறுக்கிறீர்கள். நீங்கள் ஏன் மிகவும் மனச்சாட்சி இல்லாதவர்களாய் இருக்கிறீர்கள்? இது போன்ற இருண்ட சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைச் சகித்துக்கொள்ள நீங்கள் தயாரா? உங்கள் வயிற்றைப் பல்லாயிரம் ஆண்டுகாலப் பகைமையால் நிரப்புவதற்குப் பதிலாக, ஏன் பிசாசுகளின் ராஜாவின் “கழிவினால்” உங்களை நிரப்பிக் கொள்கிறீர்கள்?

தேவனுடைய கிரியைக்கு எவ்வளவு அதிகமான தடைகள் உள்ளன? இதுவரை யாராவது அறிந்திருக்கிறார்களா? ஆழமான மூடநம்பிக்கை வண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஜனங்களில், யாரால் தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்ள முடியும்? மிகவும் மேலோட்டமானதும் முட்டாள்தனமானதுமாகிய, இந்தப் பின்தங்கிய கலாச்சார அறிவைக் கொண்டு, தேவன் சொன்ன வார்த்தைகளை அவர்களால் எப்படி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்? அவர்களுடன் நேருக்கு நேர் பேசினாலும், வாய்க்கு வாய் ஊட்டப்பட்டாலும், அவர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? சில சமயங்களில் தேவனுடைய வார்த்தைகள் செவிடன் காதில் விழுந்தது போல் இருக்கிறது: ஜனங்கள் கொஞ்சம் கூட அசைவைப் பெற்றிருப்பதில்லை, அவர்கள் தலையை ஆட்டுகிறார்கள், எதையும் புரிந்துகொள்வதில்லை. இது எப்படிக் கவலைக்குரிய ஒன்றாக இருக்க முடியாது? இந்தத் “தொலைதூர[4], பண்டைய கலாச்சார வரலாறு மற்றும் கலாச்சார அறிவு” இத்தகைய ஒன்றுக்கும் உதவாத ஒரு கூட்ட ஜனங்களை வளர்த்துவிட்டிருக்கிறது. விலைமதிப்பற்ற பாரம்பரியமாகிய இந்த பண்டைய காலத்துக் கலாச்சாரம் ஒரு குப்பைக் குவியலாகும்! இது நீண்ட காலத்திற்கு முன்பே என்றும் நீங்காத அவமானமாக மாறிவிட்டது, மேலும் இது குறிப்பிடுவதற்குக் கூட தகுதியில்லாதது! இது தேவனை எதிர்ப்பதற்கான தந்திரங்களையும் நுட்பங்களையும் ஜனங்களுக்குக் கற்பித்திருக்கிறது, மேலும் தேசியக் கல்வியின் “ஒழுங்குபடுத்தப்பட்ட, மென்மையான வழிகாட்டுதல்”[5] ஜனங்களை தேவனுக்கு இன்னும் கீழ்ப்படியாதவர்களாக மாற்றியிருக்கிறது. தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் கடினமானது, மேலும் பூமியில் அவர் செய்யும் கிரியையின் ஒவ்வொரு அடியும் தேவனுக்கு வருத்தமளிப்பதாக இருந்து வருகிறது. பூமியில் அவருடைய கிரியை எவ்வளவு கடினமானது! பூமியில் தேவனுடைய கிரியையின் படிகள் பெரும் சிரமங்களை உள்ளடக்கியது: மனுஷனின் பலவீனம், குறைபாடுகள், குழந்தைத்தனம், அறியாமை மற்றும் மனுஷனின் எல்லாவற்றிற்காகவும், தேவன் கவனமாய் திட்டங்களையும் கருத்தாய் பரிசீலனைகளையும் செய்கிறார். மனுஷன் தூண்டுவதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ துணியாத ஒரு காகிதப் புலியைப் போன்றவன்; ஒரே தொடுதலில் அவன் மீண்டும் கடிப்பான், இல்லையெனில் கீழே விழுந்து வழி தவறிவிடுவான், கொஞ்சம் கவனக் குறைவு ஏற்படும் போது, அவன் மீண்டும் பின்வாங்குவது போலவும், இல்லையெனில், தேவனைப் புறக்கணிப்பது போலவும், அல்லது பன்றிகள் மற்றும் நாய்களாகிய அவனது பெற்றோரின் உடலின் தூய்மையற்ற காரியங்களில் ஈடுபட ஓடுவது போலவும் இருக்கும். எவ்வளவு பெரிய தடை! நடைமுறையில் தம்முடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும், தேவன் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார், கிட்டத்தட்ட ஒவ்வொரு படியிலும் தேவன் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவைகளும், நேர்மையானவைகளும், மற்றும் தீங்கிழைக்காதவைகளுமாய் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள யார் தயாராக இருக்கிறார்கள்? யார் முழுமையாகக் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறார்கள்? இது தேவனுடைய இருதயத்தை உடைக்கிறது. அவர் மனுஷனுக்காக இரவும் பகலும் பாடுபடுகிறார், அவர் மனுஷனுடைய வாழ்க்கைக்கான கவலையால் சூழப்பட்டுள்ளார், மேலும், அவர் மனுஷனின் பலவீனத்திற்காக அனுதாபப்படுகிறார். அவர் தமது கிரியையின் ஒவ்வொரு படியிலும், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் சகித்துள்ளார்; அவர் எப்பொழுதும் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறார், மேலும் மனுஷனின் பலவீனம், கீழ்ப்படியாமை, குழந்தைத்தனம் மற்றும் பாதிக்கப்படும் தன்மை ஆகியவற்றைப் பற்றித் திரும்பத் திரும்பச் சிந்திக்கிறார். இதுவரை இதை அறிந்தவன் யார்? அவரால் யாரிடத்தில் நம்பிக்கை வைக்க முடியும்? யாரால் புரிந்து கொள்ள முடியும்? மனுஷனின் பாவங்களையும், தைரியமின்மையையும், மனுஷனின் பெலவீனத்தையும் அவர் எப்பொழுதும் வெறுக்கிறார், மேலும் மனுஷனின் பாதிப்பைப் பற்றி அவர் எப்போதும் கவலைப்படுகிறார், மேலும் மனுஷனுக்கு முன்னால் இருக்கும் பாதையைப் பற்றிச் சிந்திக்கிறார். எப்பொழுதும், அவர் மனுஷனின் வார்த்தைகளையும் செயல்களையும் கவனிக்கிறபடியால், அவர் இரக்கத்தினாலும், கோபத்தினாலும் நிறைந்திருக்கிறார், மேலும் எப்போதும் இவற்றைப் பார்ப்பது அவரது இருதயத்திற்கு வலியை ஏற்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பாவிகள் உணர்ச்சியற்றவர்களாகிவிட்டனர்; தேவன் ஏன் எப்போதும் அவர்களுக்கு விஷயங்களைக் கடினமாக்க வேண்டும்? பலவீனமான மனுஷன் விடாமுயற்சியை முற்றிலும் இழக்கிறான்; தேவன் எப்பொழுதும் அவன் மீது ஏன் இப்படிப்பட்ட தணியாத கோபத்தைக் கொண்டிருக்க வேண்டும்? பலவீனமான மற்றும் வல்லமையற்ற மனுஷனுக்கு இனி சிறிதளவு ஆற்றலும் இல்லை; அவனுடைய கீழ்ப்படியாமைக்காக தேவன் ஏன் அவனை எப்போதும் கண்டிக்க வேண்டும்? பரலோகத்தில் தேவனுடைய அச்சுறுத்தல்களை யார் தாங்க முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எளிதில் உடைந்து போகக்கூடியவன், மற்றும் நம்பிக்கையற்ற நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் தேவன், மனுஷன் மெதுவாகத் தன்னைப் பற்றி சிந்திக்கும்படிக்கு தமது கோபத்தை அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஊற்றிவிட்டார். ஆயினும், பெரும் பிரச்சனையில் இருக்கும் மனுஷனுக்கு, தேவனுடைய சித்தத்தைப் பற்றி சிறிதும் புரிதல் இல்லை; மனுஷன் பழைய பிசாசுகளின் ராஜாவால் மிதிக்கப்பட்டு வந்திருக்கிறான், ஆனாலும் அவன் முற்றிலும் அறியாதவனாகவே இருக்கிறான், அவன் எப்போதும் தேவனுக்கு எதிராகத் தன்னை நிறுத்திக்கொள்கிறான், இல்லையெனில், தேவனிடத்தில் அவன் அன்பாகவும் இருப்பதில்லை வெறுப்புடனும் இருப்பதில்லை. தேவன் எத்தனையோ வார்த்தைகளைப் பேசி இருக்கிறார், ஆனாலும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவன் யார்? மனுஷன் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்வதில்லை, ஆனாலும் அவன் கலங்காமலும், ஏக்கங்கொள்ளாமலும் இருக்கிறான், மற்றும் பழைய பிசாசின் சாராம்சத்தை உண்மையாக அறியாமலிருக்கிறான். ஜனங்கள் நரகத்தில் உள்ள பாதாளத்தில் வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் கடற்பரப்பின் அரண்மனையில் வாழ்வதாக நம்புகிறார்கள்; அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள், இருப்பினும் தங்களைத் தேசத்தால் “ஆதரிக்கப்பட்டவர்கள்”[6] என்று நினைக்கிறார்கள்; அவர்கள் பிசாசால் பரியாசம் பண்ணப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மாம்சத்தின் மிக உயர்ந்த கலைத்திறனை அனுபவிப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அழுக்கும், கீழ்த்தரமுமான தாழ்ந்தவர்கள்! மனுஷன் துரதிர்ஷ்டத்தைச் சந்தித்திருக்கிறான், ஆனால் அதை அவன் அறியாதிருக்கிறான், இந்த இருண்ட சமுதாயத்தில் அவன் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறான்[7]. ஆனாலும், அவன் இதிலிருந்து விழித்துக்கொள்ளவில்லை. அவன் எப்போது தன் சுய பரிதாபம் மற்றும் அடிமை மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுவான்? தேவனுடைய இருதயத்தைப் பற்றி அவன் ஏன் மிகவும் அக்கறையற்றவனாக இருக்கிறான்? இந்த அடக்குமுறையையும் கஷ்டத்தையும் அவன் அமைதியாக பொறுத்துக்கொள்கிறானா? அவன் இருளை ஒளியாக மாற்றக் கூடிய நாளை அவன் விரும்புவதில்லையா? நீதிக்கும் சத்தியத்திற்கும் எதிரான அநீதிகளை மீண்டும் ஒருமுறை சரி செய்ய அவன் விரும்புவதில்லையா? ஜனங்கள் சத்தியத்தைக் கைவிட்டு, உண்மைகளைத் திரிப்பதைப் பார்த்தும் அவன் எதுவும் செய்யத் தயாராக இல்லையா? இந்தத் துன்புறுத்தலைத் தாங்கிக் கொள்வதில் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறானா? அவன் அடிமையாக இருக்க விரும்புகிறானா? இந்தத் தோல்வியுற்ற நிலையில் உள்ள அடிமைகளுடன் சேர்ந்து தேவனுடைய கரங்களால் அழிந்து போவதற்கு அவன் தயாராக இருக்கிறானா? உன் மனவுறுதி எங்கே? உன் லட்சியம் எங்கே? உன் கண்ணியம் எங்கே? உன் நேர்மை எங்கே? உன் சுதந்திரம் எங்கே? பிசாசுகளின் ராஜாவான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு உன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க[8] நீ தயாராக இருக்கிறாயா? அது மரணம் வரைக்கும் உன்னைச் சித்திரவதை செய்ய அனுமதிப்பதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? ஆழத்தின் முகப்பு குழப்பமாகவும் இருளாகவும் இருக்கிறது, அதே சமயத்தில் சாதாரண நாட்டுப்புற ஜனங்கள், இதுபோன்ற துன்பங்களால் அவதிப்பட்டு, பரலோகத்தை நோக்கி அழுது, பூமியில் முறையிடுகிறார்கள். மனுஷன் எப்போது தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவனாவான்? மனுஷன் இளைத்தவனாகவும், மெலிந்தவனாகவும் இருக்கிறான், இந்தக் கொடூரமான மற்றும் கொடுங்கோல் பிசாசுடன் அவனால் எப்படிப் போராட முடியும்? அவன் தன் உயிரை தேவனுக்கு எவ்வளவு சீக்கிரமாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஏன் கொடுப்பதில்லை? அவன் ஏன் இன்னும் அலைந்து திரிகிறான்? தேவனுடைய கிரியையை அவனால் எப்போது முடிக்க முடியும்? இவ்வாறு நோக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டால், அவனது முழு வாழ்க்கையும் இறுதியில் வீணாகவே கழிந்திருக்கும்; அவன் ஏன் வருவதற்கு இவ்வளவு துரிதமாகவும், புறப்படுவதற்கு இவ்வளவு அவசரமாகவும் இருக்கிறான்? தேவனுக்குக் கொடுக்க அவன் ஏன் விலையேறப்பெற்ற ஒன்றை வைத்திருப்பதில்லை? மில்லியன்கணக்கான ஆண்டுகளின் வெறுப்பை அவன் மறந்திருக்கிறானா?

ஒருவேளை, அநேகர் தேவனுடைய வார்த்தைகள் சிலவற்றை வெறுக்கலாம், அல்லது ஒருவேளை அவர்கள் வெறுக்காமலும் இருக்கலாம் அல்லது அவற்றில் எந்த ஆர்வமும் இல்லாதிருக்கலாம். எவ்வாறாயினும், உண்மைகள் முட்டாள்தனமான பகுத்தறிவு ஆக முடியாது; உண்மைக்கு மாறான வார்த்தைகளை யாரும் பேசாமல் இருக்கலாம். தேவன், இத்தகைய கிரியையைச் செய்யவும், அவர் இன்னும் முடிக்க வேண்டிய கிரியையை முடிக்கவும், இந்தக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், இந்தக் காலத்தை நியாயந்தீர்க்கவும், பாவத்தில் மூழ்கியிருப்பவர்களைத் துன்பக் கடலின் உலகத்திலிருந்து முற்றிலும் இரட்சித்து, அவர்களை முற்றிலும் மறுரூபப்படுத்தவும், இந்த முறை மாம்சமாகியிருக்கிறார். யூதர்கள் தேவனை சிலுவையில் அறைந்தனர், இதனால் யூதேயாவில் தேவனுடைய பயணங்கள் முடிவுக்கு வந்தன. கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, தேவன் தனிப்பட்ட முறையில் மீண்டும் ஒருமுறை மனுஷர்கள் மத்தியில் வந்து, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டிற்குள் அமைதியாக வந்தடைகிறார். உண்மையில், யூத அரசின் மத சமூகம் நீண்ட காலமாகத் தங்கள் சுவர்களில் இயேசுவின் சொரூபத்தைத் தொங்கவிட்டிருந்தது, மேலும் ஜனங்கள் தங்கள் உதடுகளால் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே” என்று கூப்பிட்டனர். இன்னும் முடிவடையாத இரண்டாம் கட்டக் கிரியையை முடிப்பதற்கு மனுஷர்கள் மத்தியில் திரும்பி வர வேண்டும் என்ற பிதாவின் கட்டளையை, இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்றுக்கொண்டார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இதன் விளைவாக, ஜனங்கள் அவரைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் மூழ்கினர்: அவர் அநேக காலங்கள் கடந்துபோயிருக்கிற உலகில் பிறந்திருந்தார், மேலும் அவர் மிகவும் சாதாரணமான தோற்றத்துடன் மனுஷர்கள் மத்தியில் தோன்றினார். உண்மையில், காலங்கள் செல்லச் செல்ல, அவர் மறுபடியும் பிறந்திருந்ததைப் போல, அவரது உடையும் முழு தோற்றமும் மாறிவிட்டது. சிலுவையிலிருந்து இறங்கி வந்து உயிர்த்தெழுந்த அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவர்தான் என்பதை ஜனங்களால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? யேகோவாவுக்கு ஒத்த எந்த ஒற்றுமையும் இயேசுவுக்கு இல்லாதது போலவே, அவர் காயத்தின் சிறிய தடயமும் இல்லாமல் இருக்கிறார். இன்றைய இயேசு நீண்ட காலமாகக் கடந்த காலங்களுக்கான எதையும் கொண்டிராமல் இருக்கிறார். ஜனங்களால் அவரை எப்படி அறிந்து கொள்ள முடியும்? வஞ்சகனாகிய “தோமா” அவர்தான் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவா என்று எப்போதும் சந்தேகிக்கிறான், மேலும் அவன் தனது மனதை அமைதிப்படுத்துவதற்கு முன்பு இயேசுவின் கரங்களில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளை எப்போதும் பார்க்க விரும்புகிறான்; அவைகளைப் பார்த்திராமல், அவன் எப்போதும் சந்தேகத்தின் மேகத்தின் மீது நின்று கொண்டிருப்பான், மேலும் திடமான தளத்தின் மீது தன் கால்களை வைத்து இயேசுவைப் பின்தொடர இயலாதவனாய் இருக்கிறான். அப்பாவி “தோமா”—பிதாவாகிய தேவனால் கட்டளையிடப்பட்ட கிரியையைச் செய்ய இயேசு வந்திருக்கிறார் என்பதை அவனால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? சிலுவையில் அறையப்பட்டதன் தழும்புகளை இயேசு ஏன் சுமக்க வேண்டும்? சிலுவையில் அறையப்பட்ட தழும்புகள்தான் இயேசுவின் அடையாளமா? அவர் தமது பிதாவின் சித்தத்திற்காகக் கிரியை செய்ய வந்துள்ளார்; அவர் ஏன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதனைப் போல உடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டவராய் வர வேண்டும்? தேவன் மாம்சத்தில் எடுக்கும் ரூபத்தால் தேவனுடைய கிரியையைத் தடை செய்ய முடியுமா? இது யாருடைய கோட்பாடு? தேவன் கிரியை செய்யும் போது, ஏன் அது மனுஷனின் கற்பனைக்கு ஏற்ப இருக்க வேண்டும்? தேவன் தமது கிரியையில் கவனம் செலுத்தும் ஒரே விஷயமானது, அது விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அவர் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, அவருடைய கிரியைக்கு எந்த விதிமுறைகளும் இல்லை—மனுஷனால் அதை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? மனுஷன் தனது கருத்துக்கள் மற்றும் கற்பனைகளை நம்பி தேவனுடைய கிரியையை எவ்வாறு முழுமையாக அறிந்துகொள்ள முடியும்? எனவே நீங்கள் சிறந்த சமாளிப்பை முறையாகக் கொண்டிருந்தீர்கள்: அற்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தாதே, உனக்குப் புதிதான விஷயங்களை நீ பெரிதாய் எடுத்துக் கொள்ளாதே—இது உன்னை நீயே கேலி செய்வதையும், ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பதையும் தடுக்கும். இத்தனை வருடங்களாக நீ தேவனை விசுவாசித்திருக்கிறாய், ஆனாலும், நீ தேவனை இன்னும் அறியாதிருக்கிறாய். இறுதியில், நீ சிட்சைக்குள் தள்ளப்படுகிறாய்; “வகுப்பில் முதலிடத்தில்”[9] வைக்கப்பட்டுள்ள நீ சிட்சிக்கப்படுபவர்களின் வரிசையில் சேர்க்கப்படுகிறாய். உன் சிறிய தந்திரங்களைக் காட்ட நீ புத்திசாலித்தனமான வழிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஆதி முதல் அந்தம் வரை பார்க்கும் தேவனை உன் குறுகிய பார்வையால் உண்மையிலேயே உணர முடியுமா? உன் மேலோட்டமான அனுபவங்கள் தேவனுடைய சித்தத்தை முழுமையாகப் பார்க்க உன்னை அனுமதிக்குமா? கர்வம் கொள்ளாதே. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல—ஆகையால், அவருடைய கிரியையானது நீ எதிர்பார்த்தபடி எப்படி இருக்க முடியும்?

அடிக்குறிப்புகள்:

1. “எல்லாத் தீமைகளுக்கும் காரணமான கலகக்காரத் தலைவனை” என்பது பழைய பிசாசைக் குறிக்கிறது. இந்த சொற்றொடர் அளவுக்கதிகமான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.

2. “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துதலும்” என்பது பிசாசு ஜனங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் முறைகளைக் குறிக்கிறது.

3. “பலத்தப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது” என்பது பிசாசு ஜனங்களைத் துன்புறுத்தும் முறைகள் குறிப்பாகத் தீயவை என்பதையும், மேலும் ஜனங்கள் அசைய இடமில்லாத அளவுக்கு அவர்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் குறிக்கிறது.

4. “தொலைதூர” என்பது பரியாசம்பண்ணும்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

5. “ஒழுங்குபடுத்தப்பட்ட, மென்மையான வழிகாட்டுதல்” என்பது பரியாசம்பண்ணும்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

6. “ஆதரிக்கப்பட்டவர்கள்” என்பது மரக்கட்டை போல உணர்வற்ற மற்றும் சுய விழிப்புணர்வு இல்லாத நபர்களைப் பரியாசம்பண்ணப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

7. “துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறான்” என்பது ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதையும், மேலும் அவர்களால் தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை என்பதையும் குறிக்கிறது.

8. “உன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க” என்பது ஓர் இழிவான அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.

9. “வகுப்பில் முதலிடத்தில்” என்பது தேவனை விடாமுயற்சியுடன் பின்தொடர்பவர்களைப் பரியாசம்பண்ணும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (7)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (9)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக