அத்தியாயம் 16

மனுஷகுமாரனைக் கண்ட பின்னர், சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை நீதியின் சூரியனாக நமக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இதுதான் மலை மீது நடந்த மறுரூபமாதல்! அது இப்போது அதிக நிஜமாகியும், மிகவும் யதார்த்தமாகியும் வருகிறது. பரிசுத்த ஆவியானவர் எப்படிக் கிரியை செய்வார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம், மேலும், தேவன் தாமே மாம்சத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறார். அவர் மனிதனின் அல்லது விண்வெளியின் அல்லது பூகோளத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை; அவர் பூமி மற்றும் கடலின் எல்லைகளை மிஞ்சியவராக இருக்கிறார், அவர் பிரபஞ்சம் முழுவதும், பூமியின் கடையாந்தரங்கள் வரை விரிவடைந்துள்ளார், மேலும், அனைத்து நாடுகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் அவரது குரலுக்கு அமைதியாகச் செவி சாய்க்கின்றனர். நம் ஆவிக்குரிய கண்களைத் திறக்கும்போது, தேவனுடைய வார்த்தையானது அவருடைய மகிமையான சரீரத்திலிருந்து வெளிப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்; இது தேவன் தாமே, மாம்சத்திலிருந்து வெளிப்படுவதாகும். அவர் தாமே உண்மையான மற்றும் பரிபூரணமான தேவன். அவர் பகிரங்கமாகப் பேசுகிறார், அவர் நம்முடன் நேருக்கு நேராக பேசுகிறார், அவர் நமக்கு அறிவுரை கூறுகிறார், அவர் நம்மீது பரிதாபப்படுகிறார், அவர் நமக்காகக் காத்திருக்கிறார், அவர் நமக்கு ஆறுதல் அளிக்கிறார், அவர் நம்மை ஒழுங்குபடுத்துகிறார் மற்றும் அவர் நம்மை நியாயந்தீர்க்கிறார். அவர் நம் கையைப் பிடித்து வழிநடத்துகிறார், மேலும், நம்மீது அவர் வைத்திருக்கும் அக்கறை அவருக்குள்ளே ஒரு தீப்பிழம்பு போல் எரிகிறது; ஆர்வமுள்ள இருதயத்துடன், அவர் நம்மை விழித்தெழுந்து அவருக்குள் பிரவேசிக்கும்படி தூண்டுகிறார். அவரது எல்லை கடந்த ஜீவன் நம் அனைவருக்குள்ளும் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும், அவருக்குள் பிரவேசிக்கும் அனைவரும் எல்லை கடந்த நிலையை அடைந்து, உலகம் மற்றும் பொல்லாப்புகள் அனைத்தையும் கடந்து, என்னுடன் சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள். சர்வவல்லமையுள்ள தேவனே தேவனின் ஆவிக்குரிய சரீரமாவார். அவர் அதை ஆணையிட்டால், அது அப்படியே நடக்கும்; அவர் அதைப் பேசினால், அது அப்படியே நடக்கும், மேலும், அவர் அதைக் கட்டளையிட்டால், அது அப்படியே நடக்கும். ஒன்றான மெய்த்தேவன் அவரே! சாத்தான் அவர் காலுக்குக் கீழ், பாதாளக்குழியில் இருக்கிறான். பிரபஞ்சமும், அனைத்து விஷயங்களும் அவருடைய கரங்களில் இருக்கின்றன; நேரம் வந்துவிட்டது, அனைவரும் ஒன்றுமில்லா நிலைக்குத் திரும்பிச் சென்று, புதிதாகப் பிறப்பார்கள்.

முந்தைய: அத்தியாயம் 15

அடுத்த: அத்தியாயம் 17

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக