அத்தியாயம் 22

தேவனை விசுவாசிப்பது எளிதான காரியம் அல்ல. எல்லாவற்றையும் புசித்து, எல்லாவற்றையும் மகிழ்வூட்டுவதாகவும், மிகவும் ருசியானதாகவும் நினைத்து நீங்கள் குழப்பமடைகிறீர்கள்! தங்களுடைய ஆவியில் எந்தப் பகுத்தறிவும் இல்லை என்று சிலர் இன்னும் மெச்சிக் கொள்கிறார்கள். இது உங்கள் முழுமையான விளக்கத்திற்குத் தகுந்த ஓர் அனுபவமாகும். கடைசி நாட்களில், தேவனுடைய பிள்ளைகளின் முன்னேற்றத்தை வெளிப்படையாக எதிர்க்கும்படியாகவும், மற்றும் திருச்சபையின் கட்டுமானத்தை நாசப்படுத்துவதில் பங்கேற்கும்படியாகவும் எல்லா வகையான ஆவிகளும் தங்கள் பங்கை ஆற்றுவதற்கு வெளிப்படுகிறது. இதை நீங்கள் எளிதாக எடுத்துக் கொண்டு சாத்தானுக்குக் கிரியை செய்ய வாய்ப்பளித்தால், அது திருச்சபையில் குழப்பத்தை ஏற்படுத்தும், ஜனங்கள் பீதியடைந்து நம்பிக்கையற்றவர்களாகி விடுவார்கள், தீவிர நிகழ்வுகளில் ஜனங்களின் தரிசனங்கள் மறைந்து விடும். இதனால், பல ஆண்டுகளாக நான் செலுத்திய கடினமான உழைப்பிற்கான விலைக்கிரயம் ஒன்றுமில்லாமல் போய்விடும்.

திருச்சபை கட்டப்பட வேண்டிய நேரமானது சாத்தான் தன் வெறியின் உச்சத்தை அடையும் நேரமாகவும் இருக்கும். சாத்தான் அடிக்கடி ஒரு சில ஜனங்கள் மூலம் தொந்தரவுகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்துகிறான், ஆவியை அறியாதவர்களும், புதிய விசுவாசிகளும் சாத்தானுடைய பங்கை மிக எளிதாக வகிக்க முடியும். பெரும்பாலும், ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் புரிந்து கொள்ளாததால், அவர்கள் தன்னிச்சையாகவும், முற்றிலும் தங்கள் சொந்த விருப்பத் தேர்வுகள், காரியங்களைச் செய்யும் சொந்த வழிகள் மற்றும் தங்கள் சொந்தக் கருத்துக்களின்படியும் செயல்படுகிறார்கள். உன் நாவை அடக்கிக் கொள்—இது உன் சொந்த பாதுகாப்புக்காகவேயாகும். கவனித்து நன்றாகக் கீழ்ப்படி. திருச்சபையானது சமுதாயத்திலிருந்து வேறுபட்டதாகும். உன்னைத் திருப்திப்படுத்துகிறவைகளை வெறுமனே நீ சொல்லக் கூடாது; நீ நினைப்பது எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. இது தேவனுடைய வீடாக இருக்கிறபடியால், இதை இங்கே செய்யலாகாது. ஜனங்கள் காரியங்களைச் செய்யும் விதத்தை தேவன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆவியானவரைப் பின்பற்றுவதன் மூலம் நீ காரியங்களைச் செய்ய வேண்டும்; நீ தேவனின் வார்த்தைகளை வாழ்ந்து காட்ட வேண்டும், அதன் பின்பு, மற்றவர்கள் உன்னைப் பாராட்டுவார்கள். தேவனைச் சார்ந்து கொள்வதன் மூலம் உனக்குள் இருக்கும் அனைத்துச் சிரமங்களையும் நீ முதலில் தீர்க்க வேண்டும். உன் சீர்குலைந்த மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உன் சொந்த நிலையை உண்மையாகப் புரிந்து கொள்ளவும், நீ எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்; உனக்குப் புரியாத எதையும் குறித்து தொடர்ந்து ஐக்கியங்கொள். ஒரு நபர் தன்னைத் தானே அறியாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். முதலில் உன் சொந்த வியாதியைக் குணப்படுத்து, மேலும், என் வார்த்தைகளை அடிக்கடி புசித்து, பானம்பண்ணி, அவற்றைச் சிந்திப்பதன் மூலம், உன் வாழ்க்கையை வாழ்ந்து, என் வார்த்தைகளின் அடிப்படையில் உன் கிரியைகளைச் செய்; நீ வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ இருந்தாலும், தேவன் உனக்குள் அதிகாரம் செலுத்த நீ அனுமதிக்க வேண்டும். மாம்சத்தையும் மற்றும் இயல்பையும் தூக்கி எறிந்துவிடு. தேவனின் வார்த்தைகள் எப்போதும் உனக்குள் ஆளுகை செய்யட்டும். உன் வாழ்க்கை மாறவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை; காலப்போக்கில், உன் மனநிலை அதிகமாக மாறியிருப்பதை நீ உணருவாய். முன்பு, நீ ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமாக இருந்தாய், நீ யாருக்கும் கீழ்ப்படியாதவனாகவும் பேரார்வம் உள்ளவனாகவும், சுய-நீதி அல்லது பெருமை உள்ளவனாகவும் இருந்தாய்—இவற்றிலிருந்து நீ படிப்படியாக விலகுவாய். நீ இப்போதே அவற்றைத் தூக்கியெறிய விரும்பினால், அது சாத்தியமற்றது! ஏனென்றால், உன் பழைய சுயமானது மற்றவர்கள் தன்னைத் தொட அனுமதிக்காது, அதன் வேர்கள் மிகவும் ஆழமானவை. எனவே, நீ ஒரு அகநிலை முயற்சியைச் செய்ய வேண்டும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நேர்மறையாகவும் உற்சாகமாகவும் கீழ்ப்படிய வேண்டும், தேவனுடன் ஒத்துழைக்க உன் விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும், என் வார்த்தைகளை நடைமுறைப்படுத்த விருப்பத்துடன் இருக்க வேண்டும். நீ பாவம் செய்தால், தேவன் உன்னைத் திருத்துவார். நீ மறுபடியும் மனந்திரும்பிப் புரிந்து கொள்ளும்போது, அனைத்தும் உடனடியாக உனக்குள் நன்றாக இருக்கும். நீ மழுப்பலாகப் பேசினால், உனக்குள்ளாகவே உடனடியாகத் திருத்தப்படுவாய். இதுபோன்ற விஷயங்களில் தேவன் மகிழ்ச்சியடைவதில்லை என்பதை நீ காண்கிறாய், எனவே நீ உடனடியாக நிறுத்தினால், நீ உள்ளான சமாதானத்தை அனுபவிப்பாய். ஜீவிதத்தின் உணர்வுகள் என்ன அல்லது அந்த உணர்வுகளுக்குள் எப்படி வாழ்வது என்று புரியாத சில புதிய விசுவாசிகள் இருக்கிறார்கள். நீ எதுவும் சொல்லவில்லை என்றாலும், உனக்குள் ஏன் அமைதியற்றவனாக உணர்கிறாய்? என்று சில நேரங்களில் நீ ஆச்சரியப்படுகிறாய். இத்தகைய சமயங்களில், உன் எண்ணங்களும் உன் மனமும் தான் தவறானதாக இருக்கும். சில நேரங்களில் உங்களுக்கு உங்கள் சொந்த விருப்பங்கள், உங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் கருத்துகள் உள்ளன; சில நேரங்களில் நீ மற்றவர்களை உன்னை விடக் குறைவானவர்களாக இருப்பதாகக் கருதுகிறாய்; சில நேரங்களில் நீ உன் சொந்த சுயநலமான கணக்கைப் போடுகிறாய் மற்றும் ஜெபிப்பதோ உன்னை ஆராய்ந்து பார்ப்பதோ இல்லை. இதனால்தான் நீ உள்ளத்தில் அமைதியற்றவனாக உணர்கிறாய். ஒருவேளை பிரச்சனை என்னவென்று உனக்குத் தெரிந்திருக்கலாம், ஆகவே, தேவனின் நாமத்தை உடனடியாக உன் இருதயத்தில் அழைத்து, தேவனிடத்தில் நெருங்கி வா, நீ குணமடைவாய். உன் இருதயம் மேலும் மேலும் குழப்பமடைந்து, அமைதியற்றதாக இருக்கும்போது, தேவன் உன்னைப் பேச அனுமதிக்கிறார் என்று நீ நிச்சயமாக நினைக்கக்கூடாது. புதிய விசுவாசிகள் இதில் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். சமாதானம், மகிழ்ச்சி, தெளிவு மற்றும் உறுதி ஆகிய இவையே தேவன் மனுஷனுக்குள் வைக்கும் உணர்வுகளாகும். பெரும்பாலும், புரிந்து கொள்ளாத ஜனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தித் தன்னிச்சையாக செயல்படுவார்கள்—இவை அனைத்தும் இடையூறுகள்; இதற்கு மிகுந்த கவனம் செலுத்தவும். நீ இந்த நிலைமைக்கு ஆளாகிறாய் என்றால், அதைத் தடுக்க நீ “தடுப்பு மருந்து” எடுக்க வேண்டும்; இல்லையெனில், நீ இடையூறுகளை விளைவிப்பாய், தேவன் உன்னை அடிப்பார். சுயநீதியுள்ளவனாக இருக்காதே; உன் குறைபாடுகளை ஈடுசெய்ய மற்றவர்களின் பலத்தை எடுத்துக் கொள், தேவனுடைய வார்த்தைகளால் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று கவனித்துப் பார்; அவர்களின் வாழ்க்கைகள், செயல்கள் மற்றும் பேச்சு ஆகியவை முன்மாதிரியானவைகளா என்று பார்க்கவும். மற்றவர்களை உன்னை விடக் குறைவாகக் கருதினால், நீ சுயநீதியுள்ளவனும் அகந்தையுள்ளவனும் யாருக்கும் பயனில்லாதவனுமாய் இருக்கிறாய். இப்போது முக்கியமானது என்னவென்றால், ஜீவிதத்தில் கவனம் செலுத்துவதும், என் வார்த்தைகளை அதிகமாகப் புசித்துக் குடிப்பதும், என் வார்த்தைகளை அனுபவித்து உணர்வதும், என் வார்த்தைகளை அறிந்து கொள்வதும், என் வார்த்தைகளை உண்மையிலேயே உன் ஜீவிதமாக மாற்றுவதும் ஆகும். இவையே முக்கியமான விஷயங்களாகும். தேவனுடைய வார்த்தைகளின்படி யாரேனும் ஒருவரால் ஜீவிக்க முடியாவிட்டால், அவர்களின் ஜீவிதம் முதிர்ச்சியடைய முடியுமா? இல்லை, முதிர்ச்சியடைய முடியாது. நீ எப்போதுமே என் வார்த்தைகளின்படி ஜீவிக்க வேண்டும். என் வார்த்தைகளை ஜீவிதத்துக்கான நடத்தை நெறியாகக் கொண்டிருக்க வேண்டும். இதனால் அந்த நெறிமுறையின்படி செயல்படுவதில் தான் தேவன் மகிழ்ச்சியடைகிறார் என்பதையும், வேறு வழியில் செயல்படுவதை தேவன் வெறுக்கிறார் என்பதையும் நீ உணருவாய். மெதுவாக, நீ சரியான பாதையில் நடக்கத் தொடங்குவாய். தேவனிடமிருந்து வருவதையும் சாத்தானிடமிருந்து வருவதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். தேவனிடமிருந்து வருவது உனக்கு அதிகத் தெளிவுடன் கூடிய தரிசனங்களைத் தருகிறது மற்றும் ஒருபோதும் இல்லாத அளவிற்கு உன்னைத் தேவனுக்கு அருகில் கொண்டு வருகிறது; நீ உன் சகோதர சகோதரிகளுடன் ஊக்கமான அன்பைப் பகிர்ந்து கொள்கிறாய், தேவனின் பாரத்தை நீ கருத்தில் கொள்ளக் கூடியவனாகிறாய், மேலும் தேவனை நேசிக்கும் இருதயம் ஒருபோதும் குறையாது. நீ நடந்து செல்ல ஒரு சாலை உனக்கு முன்னால் உள்ளது. சாத்தானிடமிருந்து வருவது உன்னுடைய தரிசனங்களை மறைந்து போகச் செய்கிறது, முன்பு நீ கொண்டிருந்த அனைத்தையும் இழந்து போகச் செய்கிறது; நீ தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவனாகிறாய், உன் சகோதர சகோதரிகள் மீது உனக்கு அன்பு இல்லை, மேலும் நீ வெறுப்பைக் கொண்டிருக்கிற இருதயத்தைப் பெற்றிருக்கிறாய். நீ நம்பிக்கையற்றவனாகிறாய், நீ இனி ஒருபோதும் திருச்சபை வாழ்க்கையை வாழ விரும்பவில்லை, உன் தேவனை நேசிக்கும் இருதயம் இனி இல்லை. இது சாத்தானின் கிரியை, மேலும் இது அசுத்த ஆவிகள் நடத்துகிற கிரியைக்கான விளைவே ஆகும்.

இப்போது ஒரு முக்கியமான தருணம். உங்களது இறுதி மாற்றம் வரும் வரையில் உங்களது நிலையிலேயே நீங்கள் தங்கியிருக்க வேண்டும். நன்மை மற்றும் தீமைக்கு இடையிலான வேறுபாட்டைக் காண்பதற்கு உங்கள் ஆவியின் கண்களைத் தெளிவுபடுத்துங்கள், திருச்சபையைக் கட்டியெழுப்புவதில் உங்களுடைய முழு பலத்தையும் பிரயோகப்படுத்துங்கள். சாத்தானுடைய ஆட்கள், மதரீதியானத் தொந்தரவுகள் மற்றும் பொல்லாத ஆவிகளுடைய கிரியைகளை அழித்துப் போடுங்கள். திருச்சபையைச் சுத்திகரியுங்கள், என் சித்தத்தைத் தடையின்றி செய்து முடியுங்கள், மெய்யாகவே, பேரழிவுகளுக்கு முந்தைய இந்தக் குறுகிய காலகட்டத்தில், முடிந்த வரை நான் உங்களை விரைவாக முழுமையாக்கி, உங்களை மகிமைக்குள் கொண்டு வருவேன்.

முந்தைய: அத்தியாயம் 21

அடுத்த: அத்தியாயம் 23

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக