பாதை … (6)

தேவனுடைய கிரியையினால்தான் நாம் இன்றைய நாள் வரை அழைத்துக்கொண்டு வரப்பட்டிருக்கிறோம், இப்படியாக நாம் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தில் பிழைத்திருப்பவர்களாய் இருக்கிறோம். நாம் இன்று இருப்பது தேவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு பெரிய உயர்வாகும், ஏனென்றால் தேவனுடைய திட்டத்தின்படி, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாடு அழிக்கப்பட வேண்டும். ஆனால் ஒருவேளை அவர் வேறொரு திட்டத்தை வகுத்திருக்கலாம் அல்லது அவருடைய கிரியையின் மற்றொரு பகுதியை செய்ய விரும்பலாம் என்று நான் நினைக்கிறேன், ஆகவே இன்றுவரை என்னால் இதைத் தெளிவாக விளக்க முடியவில்லை—இது தீர்க்க முடியாத புதிர் போன்றதாகும். ஆனால் ஒட்டுமொத்தமாக, எங்களது இந்தக் கூட்டம் தேவனால் முன்குறிக்கப்பட்டிருக்கிறது, மேலும் தேவன் நம்மில் செய்ய வேறு கிரியையை வைத்திருக்கிறார் என்று நான் தொடர்ந்து நம்புகிறேன். நாம் அனைவரும் பரலோகத்தை நோக்கி இவ்வாறு வேண்டிக்கொள்வோமாக: “உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக, மேலும் நீர் மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் தோன்றுவீராக, மற்றும் உம்மை மறைத்துக்கொள்ளாதிருப்பீராக, அதனால் உமது மகிமையையும் உமது முகத்தையும் நாங்கள் இன்னும் தெளிவாகக் காண்போம்.” தேவன் நம்மை வழிநடத்தும் பாதையானது நேராக மேலே செல்லாது, அது குழிகளால் நிறைந்த வளைவுச் சாலை என்பது எனது நிலையான உணர்வாகும்; தேவன் மேலும் சொல்கிறார், பாதை எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது நம் அன்பான இருதயங்களை வெளிப்படுத்த முடியும். ஆயினும் நம்மில் எவரும் அத்தகைய பாதையை வெளிப்படுத்த முடியாது. என் அனுபவத்தில், நான் அநேகக் கடினமான, ஏமாற்றத்தால் நிறைந்த பாதைகளில் நடந்திருக்கிறேன், நான் பெரும் துன்பத்தைத் தாங்கி இருக்கிறேன்; நான் வெளிப்படையாக அழ வேண்டும் என்ற அளவிற்கு, சில சமயங்களில் நான் மிகவும் துயரத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறேன். ஆனாலும் நான் இன்றுவரை இந்தப் பாதையிலேயே நடந்திருக்கிறேன். இது தேவனால் வழிநடத்தப்பட்ட பாதை என்று நான் நம்புகிறேன், அதனால்தான் நான் துன்பத்தின் எல்லா வேதனையும் அனுபவித்துத் தொடர்ந்து முன்னேறுகிறேன். ஏனென்றால் இதைத்தான் தேவன் நியமித்திருக்கிறார், அதனால் இவைகளிலிருந்து யாரால் தப்பிக்கக் கூடும்? எதாவது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நான் கேட்கவில்லை; நான் கேட்பதெல்லாம் தேவனுடைய சித்தத்தின்படி நான் நடக்க வேண்டிய பாதையில், என்னால் நடக்க இயல வேண்டும் என்பதுதான். மற்றவர்களைப் போல நடந்துகொள்ளவும், அவர்கள் நடந்து செல்லும் பாதையில் நடந்து செல்லவும் நான் நாடுவதில்லை; நான் நாடுவதெல்லாம் முடிவுபரியந்தம் எனக்காக நியமிக்கப்பட்ட பாதையில் நடப்பதற்கு என் பக்தியை அடைய வேண்டும் என்பதுதான். நான் மற்றவர்களின் உதவியைக் கேட்பதில்லை; வெளிப்படையாகச் சொன்னால், என்னாலும் வேறு யாருக்கும் உதவி செய்யவும் முடியாது. இந்த விஷயத்தில் நான் பயங்கரமான உணர்ச்சிமிக்கவர் என்பதாகத் தெரிகிறது. மற்ற ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால், ஒரு தனிநபர் துன்பப்பட வேண்டிய அளவும், தங்கள் பாதையில் நடக்க வேண்டிய தூரமும் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும், மேலும் உண்மையில் வேறு யாரும், யாருக்கும் உதவ முடியாது என்றும் நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். நமது வைராக்கியமுள்ள சகோதர சகோதரிகளில் சிலர் நான் அன்பு இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லலாம், ஆனால் இதைத்தான் நான் நம்புகிறேன். தேவனுடைய வழிகாட்டுதலை சார்ந்துகொண்டு ஜனங்கள் தங்கள் வழிகளில் நடக்கிறார்கள், பெரும்பாலான என் சகோதர சகோதரிகள் என் இருதயத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அம்சத்தில் தேவன் நமக்கு அதிக வெளிச்சத்தை வழங்குவார் என்று நான் நம்புகிறேன், இதனால் நம்முடைய அன்பு தூய்மையானதாகவும், நம்முடைய நட்பு மிகவும் விலையேறப்பெற்றதாகவும் இருக்கும். இந்தத் தலைப்பில் நாம் குழப்பமடையாதிருந்து, அதிகத் தெளிவை மட்டுமே பெறுவோமாக, இதன் மூலமாக தேவனுடைய தலைமைத்துவம் என்னும் அஸ்திபாரத்தின் மீது ஒருவருக்கொருவர் இடையிலான தனிப்பட்ட உறவுகள் கட்டியெழுப்பப்படுவதாக.

தேவன் பல வருஷங்களாக முக்கிய நிலமான சீனாவில் கிரியை செய்திருக்கிறார், இறுதியாக இன்று நாம் இருக்கும் இடத்திற்கு எல்லா ஜனங்களில் இருந்தும் நம்மை அழைத்துவர அவர் மிகப்பெரிய விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறார். ஒவ்வொருவரையும் சரியான பாதையில் வழிநடத்தும்படியாக, இந்தக் கிரியையானது ஒவ்வொருவரும் எங்கு மிகவும் பெலவீனமாக இருக்கிறார்களோ அங்கிருந்து தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் அவர்கள் முதல் தடையை மீறித் தொடர்ந்து முன்னேற முடியும். இது சிறந்ததல்லவா? ஆயிரக்கணக்கான வருடங்களாக சீர்கெடுக்கப்பட்ட சீன தேசமானது, இன்றுவரை பிழைத்திருக்கிறது, எல்லா விதமான “வைரஸ்” நிற்காமல் முன்னேறி, கொள்ளை நோய் போல எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்றன; ஜனங்களுக்குள் எத்தனை “கிருமிகள்” பதுங்கியுள்ளன என்பதைப் பார்க்க, ஜனங்களுக்கு இடையேயான உறவுகளைப் பார்த்தாலே போதுமானதாகும். மிக இறுக்கமாக மூடப்பட்ட மற்றும் வைரஸ் பாதித்த பகுதியில் தேவன் தம்முடைய கிரியையைப் பெருகச் செய்வது மிகவும் கடினமாகும். ஜனங்களுடைய குணநலன்கள், பழக்கவழக்கங்கள், அவர்கள் காரியங்களைச் செய்யும் விதம், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும் அனைத்தும் மற்றும் அவர்களுக்கிடையேயான உறவுகள்—ஆகிய இவைகள் அனைத்தும், மனித அறிவும் கலாச்சாரங்களும் தேவனால் மரண ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு சிதைந்துவிட்டன. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமுதாயத்திலிருந்து கற்றுக்கொண்ட பல்வேறு அனுபவங்களைக் குறிப்பிடுவதற்காக அல்ல—இவை அனைத்தும் தேவனுடைய பார்வையில் குற்றங்களாக தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், இந்த நிலத்தில் வசிப்பவர்கள் அதிகமான வைரஸ்களை உட்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்குத் தொழில் செய்வதைப் போல வழக்கமானதாகும், அவர்கள் அதைப் பற்றி எதுவும் நினைப்பதில்லை. எனவே, ஓர் இடத்தில் சீர்கெட்ட ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கிடையேயான உறவுகள் அவ்வளவு அசாதாரணமானவைகளாக இருக்கும். ஜனங்களுடைய உறவுகள் சூழ்ச்சியால் நிரம்பியுள்ளன, அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் சதி செய்கிறார்கள், மற்றும் நரமாமிசம் உண்ணும் பிசாசுகளின் கோட்டையில் இருக்கும் சிலரைப் போல ஒருவருக்கொருவர் படுகொலை செய்கிறார்கள். பிசாசுகள் பரவலாக இருக்கும் பொல்லாப்பு நிறைந்த இடத்தில், தேவனுடைய கிரியையைச் செய்வது மிகவும் கடினமாகும். நான் மனுஷனைச் சந்திக்க வேண்டியிருக்கும் போது, நான் தேவனிடத்தில் நிறுத்தாமல் ஜெபம் செய்கிறேன், ஏனென்றால் நான் அவர்களைச் சந்திப்பதற்குப் பயப்படுகிறேன், மேலும் என் மனநிலையால் அவர்களின் “கண்ணியத்தை” நான் புண்படுத்திவிடுவேன் என்று பயப்படுகிறேன். என் இருதயத்தில், இந்த அசுத்த ஆவிகள் பொறுப்பற்ற முறையில் செயல்படும் என்று நான் எப்போதும் பயப்படுகிறேன், எனவே என்னைப் பாதுகாக்கும்படி தேவனிடத்தில் நான் எப்போதும் ஜெபிக்கிறேன். ஒவ்வொரு அசாதாரண உறவின் முறையும் நம்மிடையே வெளிப்படையாக இருக்கிறது, இவை அனைத்தையும் பார்க்கும்போது, என் இருதயத்தில் வெறுப்பு இருக்கிறது, தங்களுக்குள், ஜனங்கள் எப்போதும் மனிதனின் “வியாபாரத்தில்” ஈடுபட்டிருக்கிறார்கள், தேவனுக்காக எந்த சிந்தனையையும் கொடுப்பதில்லை. நான் மிகக் கடுமையாக அவர்களின் நடத்தையை வெறுக்கிறேன். முக்கிய நிலமான சீனாவில் உள்ள ஜனங்களுக்குள் காணப்படுவது சீர்கெட்ட சாத்தானிய மனநிலையே தவிர வேறில்லை, எனவே இந்த ஜனங்களுக்குள்ளான தேவனுடைய கிரியையில், அவர்களுக்குள் பயனுள்ள எதையாவது கண்டுபிடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது; எல்லாக் கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றன, மேலும் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஜனங்களை அதிகமாக ஏவுகிறார், மற்றும் அவர்களில் கிரியை செய்கிறார். அந்த ஜனங்களைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது; அதாவது, ஜனங்களுடைய ஒத்துழைப்புடன் இணைந்து செய்யப்படுகிற, ஜனங்களை ஏவுகிற பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை ஏவும்படி தொடர்ந்து கிரியை செய்கிறார், ஆனால் அப்படியிருந்தும், ஜனங்கள் உணர்ச்சியற்றவர்களாகவும் சொரணையற்றவர்களாகவும் இருக்கிறார்கள், தேவன் என்ன செய்கிறார் என்பதைப்பற்றி எந்தவொரு எண்ணமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, முக்கிய நிலமான சீனாவில் தேவனுடைய கிரியையானது வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கும் அவருடைய கிரியைக்கு ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது. அவர் எல்லா ஜனங்களையும் மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் பயனுள்ள எதுவும் அவர்களுக்குள் இல்லாததால் அவர்களுடைய அனைத்தையும் மாற்றுகிறார். இது மிகவும் இருதயத்தை உடைப்பதாய் இருக்கிறது. இந்த ஜனங்களுக்காக நான் அடிக்கடி துக்கத்துடன் ஜெபம் செய்கிறேன்: “தேவனே, இந்த ஜனங்களில் உமது மகத்தான வல்லமை வெளிப்படட்டும், அதன் மூலம் உமது ஆவியானவர் அவர்களை அதிகமாக ஏவுவாராக, மேலும் இந்த உணர்ச்சியற்ற மற்றும் மந்தப் புத்தியுள்ள பாதிக்கப்பட்டவர்கள் விழிப்படைந்து, இனி மந்தமான உறக்கத்தில் இல்லாமல், உமது மகிமையின் நாளைப் பார்ப்பார்களாக.” நாம் அனைவரும் தேவனுக்கு முன்பாக ஜெபித்து, தேவனே! எங்கள் இருதயங்கள் உம்மிடம் முழுவதுமாகத் திரும்பும்படியாக நீர் மீண்டும் ஒருமுறை இரக்கம் காட்டி, எங்களைப் பராமரிப்பீராக, இதனால் இந்த அசுத்தமான தேசத்திலிருந்து நாங்கள் தப்பித்துக்கொள்ளவும், எழும்பி நிற்கவும், நீர் எங்களிடம் ஒப்படைத்துள்ளதை செய்து முடிக்கவும் கூடியவர்களாவோம். நாம் அவருடைய வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக தேவன் மீண்டும் ஒருமுறை நம்மை ஏவுவார் என்று நான் நம்புகிறேன், மேலும் அவர் நம்மீது இரக்கமாய் இருப்பார் என்றும், இதனால் நம் இருதயங்கள் படிப்படியாக அவரிடம் திரும்பவும், அவர் நம்மை ஆதாயப்படுத்திக்கொள்ளவும் முடியும் என்றும் நான் நம்புகிறேன். நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் ஆசை இதுதான்.

நாம் நடக்கும் பாதையானது முற்றிலும் தேவனால் நியமிக்கப்பட்டதாகும். சுருக்கமாகக் கூறினால், நான் நிச்சயமாக இந்தப் பாதையில் இறுதிவரை நடப்பேன் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் தேவன் எப்போதும் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார், நான் எப்போதும் அவரது கரத்தால் வழிநடத்தப்படுவதைப் போல இருக்கிறது. இவ்வாறு என் இருதயம் வேறொன்றினாலும் கறைபடாதிருக்கிறது, மேலும் இவ்வாறுதான் நான் எப்போதும் தேவனுடைய கிரியையைக் கவனத்தில் கொள்கிறேன். தேவன் எனக்கு ஒப்புவித்தவைகள் அனைத்தையும் நான் என் முழு பெலத்துடனும் பக்தியுடனும் செய்கிறேன், எனக்கு ஒதுக்கப்படாத பணிகளில் நான் ஒருபோதும் தலையிடுவதில்லை, அல்லது வேறு யார் அதைச் செய்கிறார்கள் என்பதிலும் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை—ஏனென்றால் ஒவ்வொரு நபரும் தங்களுக்குச் சொந்தமான பாதையில் நடக்க வேண்டும் என்றும், மற்றவர்களுடையதில் தலையிடக் கூடாது என்றும் நான் நம்புகிறேன். நான் அப்படித்தான் அதைப் பார்க்கிறேன். ஒருவேளை இது எனது சொந்த குணநலனின் விளைவாகக் கூட இருக்கலாம், ஆனால் என் சகோதர சகோதரிகள் என்னைப் புரிந்துகொண்டு மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் என் பிதாவின் கட்டளைகளுக்கு எதிராகச் செல்லத் துணிவதில்லை. பரலோகத்தின் சித்தத்தை மீறுவதற்கு நான் துணிவதில்லை. “பரலோகத்தின் சித்தத்தை மீற முடியாது” என்பதை நீ மறந்துவிட்டாயா? சிலர் என்னை சுயம் சார்ந்தவராக நினைக்கலாம், ஆனால் நான் குறிப்பாக தேவனுடைய நிர்வாகக் கிரியையின் ஒரு பகுதியைச் செய்து முடிக்க வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் ஒருவருக்கொருவர் இடையிலான உறவுகளில் ஈடுபட வரவில்லை; மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவது பற்றி நான் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டேன். இருப்பினும், தேவனுடைய கட்டளையில், எனக்கு தேவனுடைய வழிகாட்டுதல் உள்ளது, மேலும் இந்தக் கிரியையைத் தொடர்ந்து செய்ய எனக்கு நம்பிக்கையும் உறுதியும் இருக்கிறது. ஒருவேளை நான் மிகவும் “சுயம் சார்ந்தவராக” இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் தேவனுடைய நீதியான மற்றும் தன்னலமற்ற அன்பை உணர முயற்சிக்கவும், தேவனுடன் ஒத்துழைக்க முயற்சிக்கவும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். தேவனுடைய மகத்துவத்தின் இரண்டாவது வருகைக்காக காத்திருக்க வேண்டாம்; அது யாருக்கும் நன்மையாக இருக்காது. நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இதுதான் என்பதை நான் எப்போதும் நினைக்கிறேன்: “தேவனை திருப்திப்படுத்த நாம் செய்யக் கூடிய அனைத்தையும் செய்ய வேண்டும். நம் ஒவ்வொருவருக்கான தேவனுடைய கட்டளையும் வேறுபட்டது; நாம் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும்?” நீ நடக்கும் பாதை என்ன என்பதை நீ உணர வேண்டும்—இதைப் பற்றி நீ தெளிவாக இருப்பது அவசியமாகும். நீங்கள் அனைவரும் தேவனைத் திருப்திப்படுத்த விரும்புவதால், ஏன் உங்களை அவரிடம் ஒப்படைக்கக்கூடாது? நான் முதல் முறையாக தேவனிடம் ஜெபித்தபோது, என் முழு இருதயத்தையும் நான் அவரிடம் கொடுத்துவிட்டேன். என்னைச் சுற்றியுள்ள ஜனங்களாகிய—பெற்றோர்கள், சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் சகாக்கள்—ஆகிய இவர்கள் அனைவரும், நான் தீர்மானித்ததன் நிமித்தமாக, என் மனதில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர், இனிமேல் அவர்கள் எனக்காக வாழவில்லை என்பது போல் இருந்தது. ஏனென்றால், என் மனம் எப்போதும் தேவன், அல்லது தேவனுடைய வார்த்தைகள் அல்லது அவருடைய ஞானத்தின் மீதே இருந்தது; இந்த விஷயங்கள் எப்போதும் என் இருதயத்தில் இருந்தன, மேலும் அவைகள் என் இருதயத்தில் மிகவும் விலையேறப்பெற்ற இடத்தைப் பிடித்தன. இவ்வாறு, வாழ்வதற்கான தத்துவங்கள் நிறைந்த ஜனங்களுக்கு, நான் இரக்கமற்ற மற்றும் உணர்வற்ற ஒருவராக இருக்கிறேன். நான் எப்படி என்னை நடத்துகிறேன் என்றும், நான் எப்படிக் காரியங்களைச் செய்கிறேன் என்றும், என் ஒவ்வொரு அசைவினாலும் அவர்களின் இருதயங்கள் வேதனைப்படுகின்றன. நான் இருக்கிற ஆள்தத்துவமானது ஏதோ சில தீர்க்க முடியாத புதிராக இருப்பதைப் போல, அவர்கள் என்னை நோக்கிக் விசித்திரமாகப் பார்த்தனர். அவர்கள் மனதில், நான் அடுத்து என்ன செய்வேன் என்று தெரியாமல், நான் இருக்கும் ஆள்தத்துவத்தை அவர்கள் இரகசியமாக மதிப்பிடுகிறார்கள். அவர்கள் செய்யும் எதுவும் என் வழியில் எப்படி நிற்க முடியும்? ஒருவேளை, மிகுந்த பசி மற்றும் தாகத்துடன் நான் தேவனுக்கு முன்பாக நாள் முழுவதும் ஜெபிக்கிறேன் என்பதைப் போலவும், ஒரே உலகத்தில் நானும் அவரும் மட்டும்தான் இருந்தோம், வேறு யாரும் இல்லை என்பதைப் போலவும், எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், அல்லது வெறுக்கிறார்கள், அல்லது பரியாசம் பண்ணுகிறார்கள். எப்போதுமே வெளி உலகத்தின் கூட்டம் என்னைச் சுற்றி நெருங்கி வருகின்றன—ஆனால், தேவனால் ஏவப்பட்டிருக்கும் உணர்வானது எனக்குள் எழுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி, நான் தேவனுக்கு முன்பாகத் தலை வணங்கினேன்: “தேவனே! உமது சித்தத்திற்கு நான் எப்படி எதிரானவனாக இருக்க முடியும்? உமது கண்கள் என்னை கனம் பொருந்தியவராகவும், பொன்னால் அலங்கரித்தவராகவும் பார்க்கின்றன, ஆனாலும் என்னால் அந்தகார வல்லமைகளிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் உமக்காகத் துன்பப்படுவேன், நான் உமது கிரியையை என் வாழ்க்கையின் தொழிலாக மாற்றுவேன், மேலும் என்னை உமக்கு அர்ப்பணிக்கும்படியாக, எனக்கு ஒரு சரியான இளைப்பாறுதல் அளிக்கும் இடத்தைக் கொடுக்கும்படி நான் உம்மிடம் கெஞ்சுகிறேன். தேவனே! நான் என்னையே உமக்கு காணிக்கையாக்க விரும்புகிறேன். மனிதனின் பலவீனத்தை நீர் நன்கு அறிவீர், எனவே நீர் ஏன் என்னிடமிருந்து உம்மை மறைத்துக்கொள்கிறீர்?” அதன் பின்னர், நான் ஒரு மலை லீலி புஷ்பமாக இருந்ததைப் போல், ஒருவருக்கும் தெரியாமலேயே, அதன் வாசனை தென்றலால் தூண்டிவிடப்பட்டது. பரலோகம் அழுததால், என் இருதயமும் அழுதுகொண்டே இருந்தது; என் இருதயத்தில் இன்னும் அதிக வலி இருந்ததைப் போல உணர்ந்தேன். மனுஷனுடைய எல்லா வல்லமைகள் மற்றும் மனுஷரின் முற்றுகை—அவைகள் தெளிவான பகலின் இடி முழக்கம் போல் இருந்தன. என் இருதயத்தை யாரால் புரிந்துகொள்ள முடியும்? அதனால் நான் மீண்டும் ஒருமுறை தேவனுக்கு முன்பாக வந்து, “தேவனே! இந்த அசுத்த தேசத்தில் உமது கிரியையைச் செய்து முடிக்க வழியே இல்லையா? உபத்திரவம் இல்லாத ஒரு வசதியான, ஆதரவான சூழலில் மற்றவர்கள் உமது இருதயத்தைக் குறித்து ஏன் சிந்தை உள்ளவர்களாக இருக்க முடியாது? நான் என் செட்டைகளை விரிக்க விரும்புகிறேன், ஆனாலும் பறந்து செல்வது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? நீர் ஒப்புதலளிக்கவில்லையா?” பல நாட்களாக நான் இதை நினைத்து அழுதேன், ஆனாலும் தேவன் என் துக்கம் நிறைந்த இருதயத்திற்கு ஆறுதல் அளிப்பார் என்று நான் எப்போதும் நம்பினேன். யாரும் என் கவலையை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவேளை இது தேவனுடைய நேரடி கருத்தாக இருக்கலாம்—அவருடைய கிரியைக்காக நான் எப்பொழுதும் எனக்குள் ஒரு வைராக்கியம் கொண்டிருந்தேன், மேலும் சுவாசிப்பதற்குக் கூட எனக்கு நேரம் இல்லாதிருந்தது. இன்றுவரை, நான் இன்னும் ஜெபிக்கிறேன், “தேவனே! உமக்குச் சித்தமானால், இன்னும் அதிகமான உமது கிரியைகளைச் செய்து முடிக்க என்னை வழிநடத்துவீராக, அதனால் அது பிரபஞ்சம் முழுவதும் பரவக் கூடும், மேலும் அது ஒவ்வொரு தேசத்திற்கும் பிரிவினருக்கும் ஒரு வழியை ஏற்படுத்தும், அதன் மூலமாக கொஞ்சம் சமாதானம் என் இருதயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அதனால் நான் இளைப்பாறும் இடத்தில் உமக்காக வாழ முடியும், மேலும் நான் உமக்காகத் தடையில்லாமல் கிரியை செய்து, சமாதானமுள்ள என் இருதயத்துடன், என் வாழ்நாள் முழுவதும் உமக்கு ஊழியம் செய்ய முடியும்.” இதுவே என் இருதயத்தின் விருப்பமாகும். ஒருவேளை நான் அகந்தை மற்றும் இறுமாப்பு கொண்டவர் என்று சகோதர சகோதரிகள் சொல்லுவார்கள்; நானும் இதை ஒப்புக்கொள்கிறேன், ஏனென்றால் இது உண்மைதான்—வாலிபர்கள் அகந்தையுள்ளவர்களாக இல்லை என்றால் அதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு உண்மைகளை மீறாமல், அது உண்மையில் எப்படி இருக்கிறது என்று நான் சொல்கிறேன். என்னில் நீ ஒரு வாலிபனுடைய அனைத்து குணநலன்களின் பண்புகளையும் பார்க்க முடியும், அதே சமயத்தில், மற்ற வாலிபர்களிடமிருந்து நான் எங்கே வித்தியாசமாக இருக்கிறேன் என்பதையும் நீ பார்க்க முடியும்: என் அமைதியிலும் பொறுமையிலுமே ஆகும். இதிலிருந்து நான் ஒரு தலைப்பை உருவாக்கவில்லை; நான் என்னை அறிந்திருப்பதை விட தேவன் என்னை நன்கு அறிவார் என்று நான் விசுவாசிக்கிறேன். இவை என் இருதயத்திலிருந்து வருகிற வார்த்தைகளாகும், மேலும் சகோதர சகோதரிகள் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். நம் இருதயங்களில் உள்ள வார்த்தைகளைப் பற்றி நாம் பேசுவோமாக, நம்மில் ஒவ்வொருவரும் எதைப் பின்தொடர்கிறோம் என்பதைப் பார்ப்போமாக, தேவன் மீதான நம்முடைய அன்பின் இருதயங்களை ஒப்பிட்டுப் பார்ப்போமாக, தேவனிடத்தில் நாம் முணுமுணுக்கும் வார்த்தைகளைக் கவனிப்போமாக, நம்முடைய இருதயங்களில் மிக அருமையான பாடல்களைப் பாடுவோமாக, மற்றும் நம்முடைய இருதயங்களில் உள்ள பெருமையைக் எடுத்துரைப்போமாக, அதனால் நம்முடைய வாழ்க்கை மிகவும் அழகாக மாறும். கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்குங்கள். தேவன் நமக்காக ஒரு பாதையைத் திறந்தருள்வார்!

முந்தைய: பாதை … (5)

அடுத்த: பாதை … (7)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக