அத்தியாயம் 34

ஒருமுறை நான் ஒரு மனிதனை விருந்தினனாக என் வீட்டுக்கு அழைத்தேன். ஆனாலும் அவனை நான் ஒரு விருந்தினனாக அழைப்பதற்குப் பதிலாக கொலைக்களத்திற்குக் கொண்டுவந்து விட்டதைப்போல் என்னுடைய அழைப்புகளால் அவன் அங்கும் இங்கும் ஓடினான். இவ்வாறு என் வீடு வெறுமையாக விடப்பட்டது, ஏனெனில் மனுஷன் எப்போதும் என்னை ஒதுக்கினான், மற்றும் எப்போதும் எனக்கு எதிராகத் தற்காப்பாகவே இருந்து வந்தான். என்னுடைய கிரியையின் ஒரு பகுதியை இதனால் என்னால் நடத்த முடியாமல் போய்விட்டது, அதாவது, நான் அவனுக்காக ஆயத்தம் செய்திருந்த விருந்தை திரும்பப்பெற்றேன், ஏனெனில் மனுஷன் இந்த விருந்தை அனுபவிக்க மனமில்லாதவனாக இருந்தான், மேலும் இதனால் அவனை நான் வற்புறுத்தவில்லை. இருந்தாலும் மனுஷன் திடீரெனப் பசியடைந்தான், ஆகவே அவன் வந்து என் உதவிக்காக என் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான்—இப்படிப்பட்ட கடுமையான நெருக்கடியில் நான் அவனைப் பார்க்கும்போது, எவ்வாறு நான் அவனைக் காப்பாற்றாமல் இருக்க முடியும்? இவ்வாறு, நான் மனிதன் அனுபவித்துமகிழ மறுபடியும் ஒரு விருந்தை அவனுக்காக ஒழுங்குசெய்கிறேன், அப்போதுதான் அவன் நான் எவ்வளவு தூரம் போற்றத்தக்கவர் என்பதை உணர்கிறான், இதனால் அவன் வந்து என்னைச் சார்ந்திருக்கிறான். படிப்படியாக, அவன் மீதான என்னுடைய நடத்தை காரணமாக, “தயக்கம் இல்லாமல்” அவன் என்னில் அன்புகூருகிறான், மேலும் அதற்குப் பிறகும் அவனிடம் நான் அவனை “மயான நிலத்திற்கு” அனுப்பிவிடுவேனோ என்ற சந்தேகம் இல்லை, ஏனெனில் இது என் சித்தம் இல்லை. அதனால், என் இருதயத்தைப் பார்த்த பின்னரே மனுஷன் உண்மையிலேயே என்னைச் சார்ந்திருக்கிறான். இது அவன் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இருந்தாலும் மனிதனுடைய வஞ்சகத்தின் காரணமாக நான் அவனிடம் எச்சரிக்கையாக இல்லை, ஆனால் என்னுடைய இதமான அரவணைப்பால் நான் ஜனங்களுடைய இருதயங்களை நெகிழவைக்கிறேன். இதை அல்லவா நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். தற்போதைய கட்டத்தில் இதுவல்லவா ஜனங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகையவற்றைச் செய்ய அவர்கள் ஏன் திறனுடையவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் இத்தகைய உணர்வுகளைப் பெற்றிருக்கிறார்கள்? இது அவர்கள் என்னை உண்மையாகவே அறிந்திருப்பதினாலா? இது அவர்களுக்கு என்பால் கரைகடந்த அன்பு உண்மையிலேயே இருப்பதனாலா? என்னில் அன்புகூர வேண்டும் என்று யாரையும் நான் வற்புறுத்துவதில்லை, ஆனால் தங்கள் சொந்த முடிவுகளை அவர்களே எடுத்துக்கொள்ள வெறுமனே அவர்களுக்குச் சுய சித்தத்தை மட்டுமே அளிக்கின்றேன்; இதில் நான் குறுக்கிடுவதுமில்லை, அவர்களுடைய விதியைப் பற்றிய முடிவுகளை எடுக்க நான் அவர்களுக்கு உதவுவதும் இல்லை. ஜனங்கள் தங்கள் தீர்மானத்தை எனக்கு முன் வைத்திருக்கிறார்கள், நான் அதைச் சோதனை செய்ய அவர்கள் எனக்கு முன் கொண்டு வந்திருக்கிறார்கள், “மனிதனின் தீர்மானம்” அடங்கிய பையை நான் இழுத்துத் திறந்த போது, நான் உள்ளே உள்ள பொருட்களைப் பார்த்தேன். அவைகள் தாறுமாறாகக் கிடந்தாலும் கூட மிகவும் “அபரிமிதமானதாக” இருந்தன. ஜனங்கள் தங்கள் கண்களை அகல விரித்து என்னை நோக்கினார்கள், அவர்களுடைய தீர்மானத்தை நான் பிடுங்கி எடுத்துவிடுவேனோ என்று உள்ளுக்குள் பயந்தார்கள். ஆனால் மனுஷனின் பலவீனம் காரணமாக நான் தொடக்கத்திலேயே நீயாயத்தீர்பு செய்யவில்லை, அதற்குப் பதிலாகப் பையை மூடிவைத்துவிட்டு நான் செய்ய வேண்டிய கிரியையைத் தொடர்ந்து செய்தேன். இருப்பினும், மனுஷன் என் கிரியையின் நிமித்தமாக என் வழிநடத்துதலுக்குள் பிரவேசிக்கவில்லை, ஆனால் அவனுடைய தீர்மானத்தை நான் பாராட்டி இருக்கிறேனா என்று அவன் தொடர்ந்து கவலையில் மூழ்குகிறான். நான் மிக அதிகமான கிரியைகளைச் செய்திருக்கிறேன் மேலும் அதிகமான வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன், ஆனால் இதுவரை, மனிதனால் என் சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் இவ்வாறு அவனது ஒவ்வொரு திகைப்பூட்டும் செயல்களும் என் தலையைச் சுழலச் செய்கிறது. அவனால் எப்போதும் ஏன் என் சித்தத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் அவனது விருப்பப்படி விஷயங்களை அவசர அவசரமாகச் செய்கிறான்? அவனது மூளை அதிர்ச்சி அடைந்திருக்கிறதா? நான் பேசும் வார்த்தைகளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அவன் ஏன் எப்போதும் தன் விழிகள் நேராக முன்புறம் நோக்க செயல்படுகிறான், ஆனால் அவனால் ஒரு பாதையை உருவாக்கவோ எதிர்கால மக்களுக்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கவோ முடியவில்லை? ஒரு முன்னுதாரணத்தை அமைக்க பேதுருவுக்கு முன்னால் யாராவது இருந்தார்களா? என்னுடைய வழிநடத்துதலின் கீழ் அல்லவா பேதுரு தப்பிப்பிழைத்தான்? இன்றைய ஜனங்கள் இதற்கு ஏன் திராணியில்லாதவர்களாக இருக்கிறார்கள்? பின்தொடர ஒரு முன்மாதிரி இருந்தும், அவர்களால் ஏன் இன்னும் என் சித்தத்தை நிறைவேற்ற முடியவில்லை? மனிதனுக்கு இன்னும் என் மேல் நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இதுதான் இன்றைய பரிதாபகரமான சூழ்நிலைகளுக்கு வழிகோலியுள்ளது.

வானத்தில் பறக்கும் சிறு பறவைகளைக் கவனிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவைகள் எனக்கு முன்னால் தங்கள் தீர்மானம் எதையும் வைக்கவில்லை என்றாலும், மேலும் எனக்கு “வழங்க” அவைகளிடம் எந்த வார்த்தைகளும் இல்லை என்றாலும், நான் அவைகளுக்கு அளித்துள்ள உலகில் அவைகள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளுகின்றன. இருந்தாலும் மனுஷனோ இதற்குத் திராணியில்லாதவனாக இருக்கிறான், மேலும் அவன் முகமெல்லாம் சோகமாக உள்ளது—திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனை நான் அவனுக்குக் கொடுக்கக் கடன்பட்டிருக்கிறேனோ? அவனது முகத்தில் எப்போதும் ஏன் கண்ணீர் கோடுகள் காணப்படுகின்றன? குன்றுகளில் பூத்திருக்கும் அல்லி மலர்களை நான் இரசிக்கிறேன்; சரிவுகளில் மலர்களும் புல்லும் படர்ந்து காணப்படுகின்றன, ஆனால் வசந்த காலம் வருவதற்கு முன் அல்லி மலர்களே என் மகிமைக்கு ஒளிசேர்க்கின்றன—மனிதனால் இத்தகைய விஷயங்களை சாதிக்க முடியுமா? என் வருகைக்கு முன் பூமியில் அவனால் சாட்சி பகர முடியுமா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டில் அவனால் என் நாமத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்க முடியுமா? மனிதனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் என்னுடைய பேச்சுக்களில் பரவி இருப்பது போல—இந்தத் கோரிக்கைகளின் நிமித்தமாக அவன் என்னை வெறுக்கிறான்; அவனுடைய உடல் மிகவும் பலவீனமாக இருப்பதால் அவன் என்னுடைய வார்த்தைகளுக்குப் பயப்படுகிறான், மற்றும் நான் கேட்பதை அடைய அவன் பொதுவாகவே திறனற்றவனாக இருக்கிறான். நான் என் வாயைத் திறக்கும் போது, பூமியின் மேல் இருக்கும் ஜனங்கள் பஞ்சத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வது போல எல்லா திசைகளை நோக்கியும் ஓடுகிறார்கள். நான் முகத்தை மூடிக்கொள்ளும்போதும் என்னுடைய சரீரத்தைத் திருப்பிக் கொள்ளும்போதும் ஜனங்கள் உடனடியாகத் திகிலால் பீடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை, ஏனெனில் நான் போய்விடுவேன் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்; அவர்களுடைய கருத்துக்களின்படி, நான் போய்விடும் நாளே வானத்தில் இருந்து பேரழிவு கீழே இறங்கி வரும் நாளகவும், அவர்களுடைய தண்டனை தொடங்கும் நாளாகவும் இருக்கும். இருப்பினும், நான் மனிதனின் கருத்துக்களுக்கு எதிரானவைகளையே சரியாகச் செய்கிறேன்; நான் ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்பட்டதில்லை. அவனது கருத்துக்கள் எனக்கு இணக்கமுடையதாக இருக்க நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஒன்றையும் மறைக்காமல் மனுஷன் வெளிப்படையாக இருக்கும்போதே நான் செயல்படுகிறேன். வேறு வகையில் சொன்னால், என்னுடைய செயல்களை மனித எண்ணங்களால் அளவிட முடியாது. சிருஷ்டிப்பின் காலத்தில் இருந்து இன்று வரை, நான் செய்யும் விஷயங்களில் ஒருவனும் ஒருபோதும் ஒரு “புதிய கண்டத்தைக்” கண்டுபிடித்ததில்லை; நான் செயலாற்றும் விதிகளை ஒருவனும் புரிந்துகொண்டது இல்லை. ஒருவனும் ஒருபோதும் ஒரு புதிய வெளியேறும் வழியைத் திறந்ததும் இல்லை. இவ்வாறு, மக்கள் இன்று சரியான பாதையில் பிரவேசிக்கத் திறனற்றவர்களாக இருக்கிறார்கள்—முற்றிலுமாக இதுவே அவர்களுடைய குறைபாடு. அவர்கள் இதனுள்தான் பிரவேசித்தாக வேண்டும். சிருஷ்டிப்பின் காலத்தில் இருந்து இன்று வரை, நான் இதுவரை இப்படிப்பட்ட ஒரு முற்சியில் இறங்கியதில்லை. கடைசி நாட்களில் என்னுடைய கிரியையில் நான் வெறுமனே பல புதிய விஷயங்களை மட்டுமே சேர்த்துள்ளேன். இருந்தாலும் இப்படிப்பட்ட வெளிப்படையான சூழல்களிலும் கூட, ஜனங்கள் என் சித்தத்தைப் புரிந்துகொள்ளும் திறன் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்—முற்றிலுமாக அவர்களிடம் இல்லாமல் இருப்பது இதுதானே?

புதிய கிரியைக்குள் நான் பிரவேசித்த பின்னர், மனிதனிடம் நான் முன்வைக்கும் புதிய கோரிக்கைகள் இருக்கின்றன. மனுஷனுக்குக் கடந்தகால கோரிக்கைகள் பலனற்றவை போல் இருப்பதால்தான், அவன் அவற்றை மறந்துபோகிறான். நான் கிரியை செய்யும் புதிய வழிகள் என்ன? நான் மனிதனிடம் என்ன கேட்கிறேன்? கடந்த காலத்தில் தாங்கள் செய்தவை என் சித்தத்துக்கு இணக்கமானதாக இருந்தனவா மற்றும் நான் கோரியதின் எல்லைக்குள் அவர்கள் செயல்கள் இருந்தனவா என்பதை ஜனங்களே அளவிட முடியும். ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் நான் சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை; அவர்களுக்குத் தங்கள் உயரத்தைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் அவர்களது மனதில் எவ்வளவு தூரத்துக்குத் தங்களால் செயல்பட முடியும் என்ற தெளிவு இருக்கிறது. வெளிப்படையாக நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஒருவேளை நான் பேசும்போது சிலர் தடுமாறக்கூடும்; இதன் விளைவாக ஜனங்கள் பலவீனமடைவதைத் தவிர்க்க நான் என்னுடைய வார்த்தைகளின் இந்தப் பகுதியைப் பேசுவதைத் தவிர்த்திருக்கிறேன். மனிதனின் தேடலில் இது அதிக நன்மையானது அல்லவா? கடந்த காலத்தை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வதை யார்தான் விரும்பமாட்டார்கள்? நான் பேசும் வழிகள் ஒரு புதிய பகுதிக்குள் ஏற்கெனவே பிரவேசித்துவிட்டதை ஜனங்கள் புரிந்துகொண்டார்களா என்பதைப் பற்றி என் “சிந்தனையில்லாமை” காரணமாக அறியாமல் நான் இருக்கிறேன். மேலும், நான் பேசும் தொனியை ஜனங்கள் புரிந்து கொள்ளுகிறார்களா இல்லையா என்பதை விசாரிக்கக் கூட நேரம் இல்லாமல் என் கிரியை என்னை “ஆக்கிரமிக்கிறது”. இவ்வாறு, என்னைக் குறித்து ஜனங்கள் அதிகப் புரிதலோடு இருக்கிறார்களா என்பது பற்றி மட்டுமே நான் கேட்கிறேன். என்னுடைய கிரியை என்னை மிகவும் “ஆக்கிரமிப்பதால்” மக்களுக்கு வழிகாட்ட என்னால் என் கிரியையின் தளங்களுக்குத் தனிப்பட்ட முறையில் செல்ல முடிவதில்லை. அதனால் அவர்களைப் பற்றி எனக்குச் “சிறிதளவு புரிதலே” இருக்கிறது. மொத்தத்தில், வேறு எதையும் பொருட்படுத்தாமல், ஒரு புதிய தொடக்கத்துக்குள்ளும் ஒரு புதிய வழிமுறைக்குள்ளும் முறையாக பிரவேசிக்க நான் மனுஷனை வழிநடத்தத் தொடங்கியுள்ளேன். என்னுடைய பேச்சுக்களில் எல்லாம் கேலியும், நகைச்சுவையும் மற்றும் குறிப்பாக நான் சொல்லுவதில் கடுமையான கிண்டலின் தொனியும் இருப்பதை ஜனங்கள் கண்டிருக்கிறார்கள். இவ்வாறு, அறியாமலேயே எனக்கும் மனுஷனுக்கும் இடையில் இருக்கும் இணக்கம் சீர்குலைந்துள்ளது. இது ஜனங்களின் முகங்களின் மேல் ஓர் அடர் மேகத்தைவர வைக்கிறது. இருந்தாலும் நான் இதனால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, ஆனால் நான் என் கிரியையைத் தொடர்கிறேன், ஏனெனில் நான் சொல்வது மற்றும் செய்வது எல்லாம் என் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்; என் வாயால் நான் பேசுவதெல்லாம் மனுஷனுக்கு உதவிசெய்கிறது, மேலும் நான் செய்வது எதுவும் அற்பமானதல்ல; நான் செய்வதெல்லாம் எல்லா ஜனங்களுக்கும் கற்பிப்பதாக இருக்கின்றன. இதன் காரணம் என்னவென்றால் மனிதன் குறையுள்ளவனாக இருக்கின்றான் எனவே நான் தாராளமாகப் பேசிக்கொண்டே இருக்கிறேன். சில ஜனங்கள், ஒருவேளை, நான் அவர்களிடம் கோரிக்கைகளை வைத்துவிடுவேனோ என்று பதற்றத்துடன் எனக்காகக் காத்துகொண்டிருக்கிறார்கள். அப்படியானால், நான் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை உனக்கு நான் ஞாபகப்படுத்த வேண்டும்: நான் பேசும்போது, ஜனங்கள் மேலும் உள்ளொளியை அடைவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் அதிக பகுத்தறிவுள்ளவர்களாக மாறுவார்கள் என நான் நம்புகிறேன். அதனால் அவர்களால் என் வார்த்தைகளில் இருந்து அதிகம் பெற முடியும். இதன் மூலம் அவர்களால் என் தேவைகளை நிறைவேற்ற முடியும். முன்னர், சபைகளில், கையாளப்படுவதிலும் நொறுக்கப்படுவதிலும் மக்களின் கவனம் இருந்தது. என் வார்த்தைகளின் நோக்கங்கள் மற்றும் ஆதாரத்தைப் புரிந்துகொள்ளுதல் என்னும் அஸ்திபாரத்தின் மேல்தான் என் வார்த்தைகளைப் புசித்தலும் பானம்பண்ணுலும் செய்யப்படுகிறது—ஆனால் இன்று கடந்த காலம் இருந்ததைப் போல இல்லை, என்னுடைய பேச்சுக்களின் ஆதாரத்தைப் புரிந்துகொள்ளும் திறன் ஜனங்களுக்கு முற்றிலுமாக இல்லை. இதனால் கையாளப்படவோ அல்லது நொறுக்கப்படவோ அவர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வெறுமனே என் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதினாலேயே தங்கள் ஆற்றலை செலவழித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சூழல்களிலும்கூட, என் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாதவர்களாய் இருக்கிறார்கள், அதனால் நான் அவர்களிடம் புதிய கோரிக்கைகளை வைக்கிறேன்: என்னோடு சேர்ந்து உபத்திரவங்களுக்குள் பிரவேசிக்குமாறு நான் கேட்கிறேன், அதனால் அவர்கள் சிட்சைக்குள் பிரவேசிப்பார்கள். இருந்தாலும் நான் உனக்கு ஒரு விஷயத்தை நினைப்பூட்டுகிறேன்: இது மனிதனை கொல்வதற்காக இல்லை, ஆனால் மாறாக இது எனது கிரியைக்குத் தேவைப்படுகிறது, ஏனெனில், தற்போதைய கட்டத்தில், என்னுடைய வார்த்தைகள் மனிதனுக்குப் புரியாமல் இருக்கின்றன, மேலும் மனிதனால் என்னோடு ஒத்துழைக்க முடியவில்லை—செய்வதற்கு ஒன்றுமே இல்லை! என்னோடு சேர்ந்து புதிய முறைக்குள் பிரவேசிக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது? மனிதனின் குறைபாடுகளின் காரணத்தால், மனிதன் பிரவேசிக்கும் பாதையில் நானும் பிரவேசிக்க வேண்டியுள்ளது—மக்களைப் பரிபூரணமாக்குகிறவர் நான் அல்லவா? இந்தத் திட்டத்தை உருவாக்கினவர் நான் அல்லவா? அடுத்த கோரிக்கையானது கஷ்டமானதாக இல்லாவிட்டாலும் கூட, அது முதலாம் கோரிக்கைக்கு இரண்டாம் பட்சமானது அல்ல. கடைசி நாட்களின் ஜனக்கூட்டத்தின் நடுவில் செய்யப்படும் என் கிரியை ஒரு முன்னெப்போதும் செய்யப்படாத ஒரு முயற்சியாகும், இவ்வாறு, என்னுடைய மகிமை பேரண்டத்தை நிரப்பும் விதமாக, எல்லா ஜனங்களும் கடைசிக்கால கஷ்டத்தை எனக்காக அனுபவிக்கத்தான் வேண்டும். நீ என் சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறாயா? இதுவே நான் மனிதனிடம் வைக்கும் கடைசி கோரிக்கையாகும், சொல்லப்போனால், பெரிய சிவப்பான வலுசர்ப்பத்திற்கு முன்னால் எனக்கு வலிமையான, சிறந்த சாட்சியை எல்லா மக்களாலும் பகர முடியும், அவர்களால் தங்களை எனக்காகக் கடைசி முறையாக அர்ப்பணிக்க முடியும், கடைசித் தடவையாக என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். உங்களால் உண்மையிலேயே இதைச் செய்ய முடியுமா? கடந்த காலத்தில் என் இருதயத்தைத் திருப்திப்படுத்த உங்களால் கூடாமல் இருந்தது—இந்தக் கடைசிக் கட்டத்தில் உங்களால் இந்த வழிமுறையை உடைக்க முடியுமா? ஜனங்களுக்குச் சிந்திப்பதற்கு நான் வாய்ப்பளிக்கிறேன்; எனக்கு இறுதியாக ஒரு பதிலை அளிக்கும் முன்னர் அவர்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கட்டும்—இதைச் செய்வது தவறா? நான் மனுஷனின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன், நான் அவனது “பதில் கடிதத்துக்காகக்” காத்திருக்கிறேன்—என் கோரிக்கைகளை நிறைவேற்ற உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா?

ஏப்ரல் 20, 1992

முந்தைய: அத்தியாயம் 33

அடுத்த: அத்தியாயம் 35

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக