உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்

பழைய காலம் கடந்துபோய்விட்டது, புதிய காலம் வந்துவிட்டது. ஆண்டுகள்தோறும், நாளுக்கு நாள், தேவன் அதிகப்படியான கிரியைகளைச் செய்திருக்கிறார். அவர் உலகத்திற்கு வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தச் சுழற்சியானது பல தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் நடந்தேறியிருக்கிறது. தேவன் இன்னும் செய்து முடிக்காமல் இருக்கும் தாம் செய்யவேண்டிய கிரியையை இன்றும் முன்போலவே தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார், அதனால்தான் இந்நாள்வரையிலும் அவர் ஓய்வுக்குள் பிரவேசிக்கவில்லை. சிருஷ்டிப்பின் காலம் தொடங்கி இன்று வரை தேவன் அதிகப்படியான கிரியையைச் செய்திருக்கிறார். ஆனால், தேவன் இன்று முன்னெப்போதையும் விட அதிகக் கிரியையைச் செய்கிறார் என்பதையும் அவர் செய்யும் கிரியையின் அளவு முன்னெப்போதையும் விட மிகவும் அதிகமானது என்பதையும் நீ அறிந்திருக்கிறாயா? இதனால்தான் நான், தேவன் மனிதர்களுக்குள்ளே ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார் என்று சொல்கிறேன். மனிதனுக்காக இருந்தாலும் அல்லது தேவனுக்காக இருந்தாலும், தேவனுடைய எல்லா கிரியைகளும் மிக முக்கியமானவையாகும், ஏனென்றால் அவருடைய கிரியையின் ஒவ்வொரு விஷயமும் மனிதனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

தேவனுடைய கிரியை காணவோ தொடவோ முடியாததாக இருக்கிறது—அதாவது அது உலகத்தால் மிகக் குறைவாகவே கண்டுகொள்ளப்படுகிறது—அப்படியிருக்க, அது எப்படி பெரியதான ஒன்றாக இருக்க முடியும்? எந்த வகையான காரியம்தான் பெரியதாகக் கருதப்படும்? நிச்சயமாக, தேவன் எப்படிப்பட்ட கிரியையைச் செய்தாலும், அது பெரியதாகக் கருதப்படலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது, ஆனால் தேவன் இன்று செய்யும் கிரியையைப் பற்றி நான் ஏன் இதைச் சொல்கிறேன்? தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்துள்ளார் என்று நான் கூறும்போது, இது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மனிதனுக்கு இன்னும் புரியாத பல இரகசியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இப்போது நாம் அவற்றைப் பற்றி பேசுவோம்.

இயேசு ஜீவிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு காலத்தில்தான் இயேசு ஒரு முன்னணையிலே பிறந்தார், ஆயினும்கூட, உலகம் அவருடைய வழியில் நிற்க முடியவில்லை, அவர் தேவனுடைய பராமரிப்பில் முப்பத்து மூன்று ஆண்டுகள் மனிதர்களிடையே வாழ்ந்தார். அவர் வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில், அவர் உலகத்தின் கசப்பை அனுபவித்தார், மற்றும் பூமியின்மேல் துக்கத்தின் வாழ்க்கையை ருசித்தார். எல்லா மனிதர்களையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும்படிக்கு பெரும் பாரத்தை அவர் சுமந்தார். சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வந்த அனைத்து பாவிகளையும் அவர் மீட்டுக்கொண்டார், இறுதியில், அவருடைய உயிர்த்தெழுந்த சரீரம் அவர் ஓய்வெடுக்கும் இடத்திற்குத் திரும்பியது. இப்போது தேவனுடைய புதிய கிரியை தொடங்கியிருக்கிறது, மேலும் இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கமுமாகும். தம்முடைய புதிய இரட்சிப்பின் கிரியையைத் தொடங்க மீட்கப்பட்டவர்களை தேவன் தம்முடைய வீட்டிற்குள் கொண்டு வருகிறார். இரட்சிப்பின் கிரியை கடந்த காலங்களில் இருந்ததைக் காட்டிலும் இந்த முறை முழுமையானதாக இருக்கிறது. மனிதனுக்குள்ளாகக் கிரியை செய்வது பரிசுத்த ஆவியானவர் அல்ல, இந்தக் கிரியையைச் செய்யும்படிக்கு மனிதர்களிடையே தோன்றுவது இயேசுவின் சரீரமும் அல்ல, குறிப்பாக இந்த வேலையானது வேறு வழிகளில் செய்து முடிக்கப்படுகிறது. மாறாக, மனுவுருவான தேவனே கிரியையைச் செய்து அதைத் தாமே வழிநடத்துகிறார். மனிதனைப் புதிய கிரியைக்குள் வழிநடத்திச்செல்லும் பொருட்டு அவர் இவ்வாறு செய்கிறார். இது ஒரு பெரிய காரியம் அல்லவா? தேவன் இந்தக் கிரியையை மனிதகுலத்தின் ஒரு பகுதியினூடாகவோ அல்லது தீர்க்கதரிசனங்களின் மூலமாகவோ செய்வதில்லை; மாறாக, தேவன் தாமாகவே அதைச் செய்கிறார். சிலர் இது ஒரு பெரிய காரியம் அல்ல என்றும் அது மனிதனுக்குப் பரவசத்தைக் கொண்டு வர முடியாது என்றும் கூறலாம். ஆனால் தேவனுடைய கிரியையானது இது மட்டுமல்லாது அது மிகப் பெரியதும் இன்னும் அதிகமானதாகவும் இருக்கிறது என்று நான் உனக்குச் சொல்லுவேன்.

இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?

தேவனுடைய கிரியை என்பது நீ புரிந்து கொள்ள முடியாத ஒன்று. உன்னுடைய தேர்வு சரியானதா என்பதையும் உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அல்லது தேவனுடைய கிரியை வெற்றிபெற முடியுமா என்பதையும் உன்னால் அறிய முடியாவிட்டால், பிறகு இந்த சாதாரண மனிதர் உனக்குப் பெரிதும் உதவக்கூடும் என்பதைப் பார்க்கவும் மற்றும் தேவன் உண்மையில் பெரிய கிரியை செய்தாரா என்பதை அறியவும் உன் அதிர்ஷ்டத்தை ஏன் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது? இருப்பினும், நோவாவின் காலத்தில், மனிதர்கள் புசித்தும், குடித்தும், பெண்கொண்டும், பெண்கொடுத்தும் தேவனால் பார்க்க சகிக்கமுடியாத அளவிற்கு இருந்ததை நான் உனக்குச் சொல்லியே ஆக வேண்டும், எனவே அவர் மனிதகுலத்தை அழிக்க ஒரு பெரிய ஜலப்பிரளயத்தை அனுப்பினார், நோவாவின் குடும்பத்திலுள்ள எட்டுபேர் மற்றும் அனைத்து வகையான பறவைகள் மற்றும் மிருகங்களை மட்டுமே தப்பும்படிச் செய்தார். எவ்வாறாயினும், கடைசி நாட்களில், தேவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் கடைசி வரை அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஆவர். இரண்டு யுகங்களும் தேவனால் பார்க்க சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரும் சீர்கேடு நிறைந்த காலங்களாக இருந்தபோதிலும், இரு யுகங்களிலும் மனிதகுலம் மிகவும் சீர்கெட்டுப் போயிருந்தாலும், தேவன் தான் தங்களுடைய கர்த்தர் என்பதை மறுதலித்தபோதிலும், தேவன் நோவாவின் காலத்திலுள்ள ஜனங்களை மட்டுமே அழித்தார். இரு யுகங்களிலும் மனிதகுலம் தேவனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது, ஆனாலும் தேவன் கடைசி நாட்களின் மனிதர்களிடம் இப்போது வரை பொறுமையாக இருக்கிறார். இது ஏன்? ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படவே இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே தெரியாவிட்டால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். கடைசி நாட்களில் தேவன் ஜனங்களுக்குக் கிருபையை அளிக்க முடிந்தது என்பதற்கான காரணம், அவர்கள் நோவாவின் காலத்தில் இருந்தவர்களை விட குறைவான அளவே சீர்கெட்டுப்போயிருந்தார்கள் என்பது அல்ல, அல்லது அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்புதலைக் காண்பித்திருக்கிறார்கள் என்பதும் அல்ல, கடைசி நாட்களில் தேவன் அவர்கள் மேல் அழிவைக் கொண்டுவருவதற்கு முடியாதபடிக்கு தொழில்நுட்பமானது மிகவும் நவீனமாக உள்ளது என்பதும் அல்ல. மாறாக, கடைசி நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தில் தேவன் செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது, மேலும் தேவன் தனது மனுவுருவில் இந்த கிரியையைத் தானே செய்வார். மேலும், தேவன் தனது இரட்சிப்பின் பாத்திரங்களாகவும், அவருடைய நிர்வாகத் திட்டத்தின் பலனாகவும் இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தேர்வுசெய்து, இந்த ஜனங்களை அடுத்த யுகத்திற்குக் கொண்டு வருவார். ஆகையால் எதுவாக இருந்தாலும், தேவன் செலுத்திய இந்த விலையானது, அவருடைய மனுவுருவான மாம்சம் கடைசி நாட்களில் செய்யும் கிரியைக்கான முழு ஆயத்தமாகவே இருந்தது. நீங்கள் இன்று வந்துவிட்டீர்கள் என்ற உண்மைக்கு இந்த மாம்சமே காரணமாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் நீங்கள் ஜீவனோடு வாழ வாய்ப்பு உள்ளது. இந்தச் சாதாரண மனிதரால் இந்த நல்ல அதிர்ஷ்டம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்தச் சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சித்த அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்து கொடுத்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவரும் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தைப் பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா? அவருடைய வாயிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நீங்கள் நிராகரித்து, உங்களிடையே அவர் ஜீவிப்பதை வெறுக்கிறீர்கள் என்றால், இறுதியில் உங்களின் நிலை என்னவாகும்?

தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்தச் சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களைக் கொண்டுவரும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி மற்றும் செய்து முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவரைத் தவிர்க்கவும் என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்குப் பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுவுருவெடுத்தல் இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்தச் சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பிருக்காது, அல்லது அதைக் காண நீங்கள் தகுதியடைந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுப்போக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுவுருவாக இருக்கும் இந்தச் சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்.

முந்தைய: கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

அடுத்த: கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக