அத்தியாயம் 17
என் வெளிப்பாடுகள் இடி போல் ஒலிக்கின்றன, பூமி முழுவதிலும் எல்லாத் திசைகளிலும் வெளிச்சத்தைப் பரப்புகின்றன, மேலும் இடி மற்றும் மின்னலுக்கு இடையே மனிதன் அடித்து நொறுக்கப் படுகிறான். இடி மற்றும் மின்னலுக்கு இடையே எந்த மனிதனும் ஒருபோதும் உறுதியாக நின்றதில்லை; என் வெளிச்சத்தின் வருகையைப் பார்த்துப் பெரும்பாலான மனிதர்கள் மனக்கலக்கத்தினால் பெரும் பீதியடைகிறார்கள், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கிழக்கில் தெளிவற்ற ஒரு மங்கலான வெளிச்சத்தைக் காணத்துவங்கும்போது, இந்த மங்கலாக ஒளிரும் வெளிச்சத்தின் உந்துதலால் பெரும்பாலான ஜனங்கள், தங்கள் மாயைகளிலிருந்து உடனடியாக விழிப்படைகின்றனர். என் வெளிச்சம் பூமியில் இறங்கும்போது எனது நாள் வந்துவிட்டது என்பதை அதுவரை யாரும் உணரவில்லை. வெளிச்சத்தின் திடீர் வருகையால் பெரும்பான்மையான மனிதர்கள் வாயடைத்து நிற்கிறார்கள், மேலும் சிலர், அடங்காத ஆர்வத்தால் கவரப்பட்டு, வெளிச்சத்தின் அசைவுகளையும் அது வருகின்ற திசையையும் கவனிக்கிறார்கள், சிலர் வெளிச்சத்தை எதிர்கொள்ளும்போது அதன் பிறப்பிடத்தை அவர்கள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அது எப்படியிருந்தாலும், இன்றைய வெளிச்சம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை யாராவது கண்டுபிடித்திருக்கிறார்களா? இன்றைய வெளிச்சத்தின் தனித்துவத்துக்கு எப்போதாவது யாராவது விழித்துக் கொண்டிருக்கிறார்களா? பெரும்பான்மையான மனிதர்கள் வெறுமனே திகைப்படைகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தால் கண்களில் காயமடைந்து சேற்றில் தள்ளப்படுகிறார்கள். இந்த வடிவமற்ற வெளிச்சத்தின் கீழ், சீர்குலைவு பூமியைச் சூழ்கிறது, அது தாங்கமுடியாத வருத்தம் தரும் காட்சி, நெருக்கமாக ஆராய்ந்தால், ஒருவரை மிகுந்த மனச்சோர்வு கொள்ளச் செய்யும் என்றும் கூறலாம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வெளிச்சம் மிக வலுவாக இருக்கும்போது, பூமியின் நிலைப்பாடானது மனிதர்கள் எனக்கு முன்பாக நிற்க அனுமதிக்க முடியாததாக இருக்கும். மனிதன் வெளிச்சத்தின் பிரகாசத்தை நம்பியிருக்கிறான்; மீண்டும், மனிதர்கள் அனைவரும் வெளிச்சத்தின் இரட்சிப்பையே நம்பியிருக்கிறார்கள், ஆனால் அதனால் காயப்படவும் செய்கிறது: வெளிச்சத்தின் கொடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகாதவர் யாராவது இருக்கிறார்களா? சுட்டெரிக்கும் வெளிச்சத்திலிருந்து தப்பிக்கக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? பிரபஞ்சமெங்கும் நான் நடந்து, என் கைகளால் என் ஆவியின் விதைகளைத் தூவியிருக்கிறேன், இதன் விளைவாகப் பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரும் என்னால் ஏவப்படுகிறார்கள். வானத்தின் மிக உயரமான இடத்திலிருந்து, நான் பூமியெங்கும் பார்க்கிறேன், பூமியில் உள்ள உயிரினங்களின் கோமாளித்தனமான மற்றும் அற்புதமான நிகழ்வுகளைப் பார்க்கிறேன். கடலின் மேற்பரப்பு பூகம்பத்தின் அதிர்ச்சியை அனுபவிப்பதாகத் தெரிகிறது: மீன்களை விழுங்குவதற்காகக் கடற்பறவைகள் இங்கும் அங்குமாகப் பறக்கின்றன. இதற்கிடையில், கடலின் அடிப்பகுதி அறியாமையில் மூழ்கியுள்ளது, மேலும் மேற்பரப்பின் நிலைமைகளால் அதைத் தூண்டி சுயநினைவிற்கு கொண்டுவரச் செய்வது முற்றிலும் இயலாதது, ஏனென்றால் கடலின் அடிப்பகுதி மூன்றாம் வானம்போல அமைதியானது: இங்கே, பெரிய மற்றும் சிறிய உயிரினங்கள், ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றன, அவை ஒருபோதும் வாய்க்கும் நாக்குக்கும் இடையே மோதல்களில் ஈடுபடுவதில்லை. எண்ணற்ற வினோதமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளுக்கு மத்தியில், மனிதர்களுக்கு என்னைப் பிரியப்படுத்துவது கடினமாக உள்ளது. நான் மனிதனுக்கு அளித்த நிலை மிக உயர்ந்தது, இதனால் அவன் அடைய விரும்பும் குறிக்கோள் மிகப் பெரியது, அவனுடைய பார்வையில், எப்போதும் ஓர் அளவுக்குக் கீழ்ப்படியாமை இருக்கிறது. நான் மனிதனை ஒழுங்குபடுத்தும்போது, அவனைப் பற்றிய எனது நியாயத்தீர்ப்புக்குள், அதிக ஜாக்கிரதை உணர்வும் இரக்க மனப்பான்மையும் உள்ளன, ஆனால் இந்த விஷயங்களில், மனிதர்களுக்கு இம்மியளவும் அது இல்லை. நான் எந்த மனிதனையும் ஒருபோதும் கடுமையாக நடத்தியதில்லை; மனிதன் கீழ்ப்படியாமல் இருந்தபோது மட்டுமே திருத்துவதற்காகப் பொருத்தமான தண்டனைகளைக் கொடுத்துள்ளேன், அவன் பலவீனமாக இருக்கும்போது மட்டுமே பொருத்தமான உதவிக்கரம் நீட்டியுள்ளேன். ஆனால், மனிதர்கள் என்னிடமிருந்து விலகி இருக்கும்போது, மேலும் எனக்கு எதிராகக் கலகம் செய்யச் சாத்தானின் வஞ்சகமான உத்திகளைப் பயன்படுத்தும்போது, எனக்கு முன்பாக அவர்களின் திறமைகளைப் பெருமளவில் காட்சிப்படுத்த மற்றொரு வாய்ப்பு இல்லாமல் போய்விடுமாறு நான் உடனடியாக மனிதகுலத்தை அழிப்பேன், இதனால் அவர்கள் இனிமேல் பூமியின் மேல் இறுமாப்புடன், பகட்டாக மற்றவர்களைக் கொடுமைப்படுத்த முடியாது.
நான் பூமியில் என் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன், என் கிரியையை அதன் முழுப்பரப்பிலுமாக விரிவுபடுத்துகிறேன். என் கிரியையில் உள்ள அனைத்தும் பூமியின் மேல் பிரதிபலிக்கின்றன; பூமியில் உள்ள மனிதகுலம் ஒருபோதும் பரலோகத்தில் என் அசைவுகளைப் புரிந்துகொள்ளவோ, என் ஆவியின் சுற்றுப்பாதைகள் மற்றும் எறி பாதைகளை முழுமையாகச் சிந்திக்கவோ முடியாது. ஆவியின் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆவிக்கு வெளியே இருக்கும் இம்மியளவை மட்டுமே மனிதர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்கிறார்கள். நான் மனிதர்களிடம் வைக்கும் கோரிக்கைகள் பரலோகத்தில் உள்ள என் தெளிவற்ற சுயத்திலிருந்தோ அல்லது நான் பூமியில் இருக்கிறேன் என்பதால் சிந்தித்து புரிந்துகொள்ள முடியாத சுயத்திலிருந்தோ வெளிவரவில்லை; பூமியில் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருத்தமான கோரிக்கைகளை நான் வைக்கிறேன். நான் ஒருபோதும் யாரையும் சிரமத்திற்கு உள்ளாக்கவில்லை, என் இன்பத்திற்காக “அவனுடைய இரத்தத்தைப் பிழியும்படி” நான் யாரையும் கேட்டதில்லை—எனது கோரிக்கைகள் அத்தகைய நிலைமைகளுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட முடியுமா? பூமியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களில், என் வாயிலுள்ள வார்த்தைகளின் மனநிலைகளுக்கு அடிபணியாதவர் யார்? எனக்கு முன்னால் வரும் இந்த உயிரினங்களில், என் வார்த்தைகளாலும் என் எரியும் நெருப்பினாலும் முழுமையாக எரிக்கப்படாதது எது? இந்த உயிரினங்களில் எனக்கு முன்பாகப் பெருமிதத்துடனும் சந்தோஷமாகவும் சுற்றிவரத் தைரியம் கொண்டது எது? இந்த உயிரினங்களில் எனக்கு முன் தலைவணங்காதது எது? நான் சிருஷ்டியின் மீது அமைதியைச் சுமத்தும் தேவனா? சிருஷ்டியில் உள்ள எண்ணற்ற விஷயங்களில், என் நோக்கத்தைப் பூர்த்திசெய்பவற்றை நான் தேர்வு செய்கிறேன்; மனிதகுலத்தின் எண்ணற்ற மனிதர்களில், என் இருதயத்தின்மீது அக்கறை கொள்பவர்களை நான் தேர்வு செய்கிறேன். எல்லா நட்சத்திரங்களிலும் சிறந்ததை நான் தேர்வு செய்கிறேன், இதன்மூலம் என் ராஜ்யத்திற்கு ஒரு மங்கலான வெளிச்சத்தைச் சேர்க்கிறேன். நான் பூமியில் நடந்து செல்கிறேன், என் நறுமணத்தை எல்லா இடங்களிலும் விநியோகிக்கிறேன், ஒவ்வொரு இடத்திலும், என் வடிவத்தை விட்டு வைக்கிறேன். ஒவ்வொரு இடமும் என் குரலின் ஒலியால் எதிரொலிக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் நேற்றைய அழகிய காட்சிகளின் நினைவுகள் அகலாது இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களும் கடந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள் …
எல்லா மனிதர்களும் என் முகத்தைக் காண ஏங்குகிறார்கள், ஆனால் நான் நேரில் வந்து பூமியில் இறங்கும்போது, அவர்கள் அனைவரும் என் வருகையை வெறுக்கிறார்கள். மேலும், நான் பரலோகத்தில் இருக்கும் மனிதனின் எதிரி என்பது போலக் கருதி அவர்கள் வெளிச்சத்தின் வருகையைத் தடுக்கிறார்கள். மனிதன் தனது கண்களில் ஒரு பாதுகாப்பு வெளிச்சத்துடன் என்னை வரவேற்கிறான், தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறான், அவனுக்காக நான் வேறு திட்டங்களை வைத்திருக்கலாம் என்று ஆழ்ந்த பயம் கொள்கிறான். மனிதர்கள் என்னை அறிமுகமில்லாத நண்பராகக் கருதுவதால், கண்மூடித்தனமாக அவர்களைக் கொல்லும் நோக்கத்தை நான் வைத்திருப்பதைப் போல அவர்கள் உணர்கிறார்கள். மனிதனின் பார்வையில், நான் ஒரு கொடிய எதிரி. பேரழிவின் மத்தியில் என் அரவணைப்பை ருசித்தபோதிலும், மனிதன் என் அன்பைப் பற்றி அறியாமல் இருக்கிறான், இன்னும் என்னைத் தவிர்ப்பதற்கும் என்னை எதிர்ப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ளான். அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவனது நிலையைப் பயன்படுத்திக் கொள்ளாமல், நான் மனிதனை அரவணைத்து, வாயை இனிமையால் நிரப்புகிறேன், தேவையான உணவை வயிற்றில் வைக்கிறேன். ஆனால், நான் கடுங்கோபத்துடன் வெகுண்டு மலைகளையும் நதிகளையும் உலுக்கும்போது, மனிதனின் கோழைத்தனத்தின் காரணமாக நான் இனிமேல் அவனுக்கு இந்த வெவ்வேறு வகையான உதவிகளை வழங்கமாட்டேன். இந்தத் தருணத்தில், என் ஆவேசம் அதிகரிக்கும், எல்லா உயிரினங்களுக்கும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பை மறுத்து, மனிதனுக்கான எனது எல்லா நம்பிக்கையையும் கைவிட்டு, அவனுக்கு மிகவும் தகுதியான தண்டனையை நிறைவேற்றுவேன். இந்த நேரத்தில், கடலில் அலைகள் கோபத்தில் பொங்கி எழுவது போல, பல்லாயிரக்கணக்கான மலைகள் கீழே விழுந்து நொறுங்குவது போல இடி இடிக்கும் மற்றும் மின்னல் வெட்டும். அவனது கிளர்ச்சி செய்யும் மனப்பான்மை காரணமாக, மனிதன் இடி மற்றும் மின்னலால் வீழ்த்தப்படுகிறான், மற்ற உயிரினங்கள் இடி மற்றும் மின்னலின் தாக்குதல்களில் அழிக்கப்படுகின்றன, மேலும் முழு பிரபஞ்சமும் திடீரெனக் குழப்பத்தில் ஆழ்கிறது, மேலும் சிருஷ்டியால் ஆரம்பக்கால ஜீவனை மீட்டெடுக்க முடியவில்லை. மனிதர்களின் எண்ணற்ற ஆதரவாளர்கள் இடியின் கர்ஜனையிலிருந்து தப்ப முடியாது; பளிச்சிடும் மின்னல்களுக்கு நடுவே, மனிதர்கள், கூட்டம் கூட்டமாகத் திரண்டு, விரைவான ஓட்டத்தில் கவிழ்ந்து, மலைகளிலிருந்து கீழே விழும் கடும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். திடீரென்று, “மனிதர்களின்” உலகம் மனிதனின் “இலக்குடன்” ஒன்று சேர்கிறது. கடலின் மேற்பரப்பில் சடலங்கள் மிதக்கின்றன. என் கடுங்கோபத்தின் காரணமாக மனிதர்கள் அனைவரும் என்னிடமிருந்து வெகுதொலைவாகச் செல்கிறார்கள், ஏனென்றால் மனிதன் என் ஆவியின் சாராம்சத்திற்கு எதிராகப் பாவம் செய்தான், அவனுடைய கிளர்ச்சி என்னைப் புண்படுத்தியது. ஆனால், தண்ணீர் இல்லாத இடங்களில், நான் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளால், சிரிப்புக்கும் பாடலுக்கும் இடையில், மற்ற மனிதர்கள் இன்னும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.
எல்லா மக்களும் அமைதியாக இருக்கும்போது, நான் அவர்களின் கண்களுக்கு முன்பாக வெளிச்சத்தின் மினுமினுப்பை வெளியிடுகிறேன். அதன்பிறகு, மனிதர்கள் மனதில் தெளிவாகவும், கண்ணில் பிரகாசமாகவும் இருப்பார்கள், இனி அமைதியாக இருக்க விரும்பமாட்டார்கள்; இதனால், ஆவியானவருடைய உணர்வு உடனடியாக அவர்களின் இதயங்களில் வரவழைக்கப்படுகிறது. இது நடக்கும்போது, எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். நான் அறிவிக்கும் வார்த்தைகளின் மூலம் உயிர்வாழ மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளதால், அவர்களது சொல்லொண்ணா துயரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வருகிறார்கள். இது ஏனென்றால், மனிதர்கள் அனைவரும் பூமியின் மீது வாழ விரும்புகிறார்கள். ஆயினும் அவர்களில் என் பொருட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் யார்? என் இன்பத்திற்காக அவன் அளிக்கும், அவனிடம் உள்ள அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்தவர் அவர்களில் யார்? அவர்களில் எனது வயப்படுத்தும் வாசனையை எப்போதாவது கண்டுபிடித்தவர் யார்? எல்லா மனிதர்களும் கரடுமுரடான மற்றும் சுத்திகரிக்கப்படாத ஜீவன்கள்: அவர்களது கண்கள் வெளிப்புறத்தில் பளபளப்பாக இருப்பதாகத் தோன்றுகின்றன, ஆனால் அவற்றின் சாராம்சம் என்னை நேர்மையாக நேசிப்பதல்ல, ஏனென்றால், மனித இருதயத்தின் ஆழமான இடுக்குகளில், என்னுடைய எந்த ஒரு காரியமும் இருந்ததில்லை. மனிதன் மிகவும் குறைவுபட்டவனாக இருக்கிறான்: அவனை என்னுடன் ஒப்பிடுவது வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான அளவுக்கு ஒரு பெரிய இடைவெளியைக் காட்டுகிறது. அப்படியிருந்தும், நான் மனிதனின் பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களைத் தாக்கவில்லை, அல்லது அவனுடைய குறைபாடுகளின் காரணமாக அவனை நான் எள்ளி நகையாடவில்லை. என் கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் கிரியை செய்கின்றன, எல்லா நேரங்களிலும், என் கண்கள் மனிதர்கள் அனைவரையும் கண்காணித்து வருகின்றன. ஆயினும்கூட, நான் எந்தவொரு மனித உயிரையும் சாதாரணமாக, ஒரு பொம்மைபோல நினைத்து விளையாடுவதற்கு எடுத்துக்கொள்ளவில்லை. மனிதன் எடுத்துக் கொண்ட சிரமங்களை நான் கவனிக்கிறேன், அவன் செலுத்திய கிரயத்தைப் புரிந்துகொள்கிறேன். அவன் என் முன்பாக நிற்கும்போது, அவனைச் சிட்சிக்க அவனைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை, அல்லது விரும்பத் தகாத விஷயங்களை அவனுக்கு வழங்கவும் நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, இவ்வளவு நாட்களும், நான் மனிதனுக்கு மட்டுமே வழங்கினேன், அவனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன். எனவே, மனிதன் என் கிருபையை அனுபவிக்கிறான், அவன் பெறும் அனைத்தும் என் கையிலிருந்து வரும் பொக்கிஷங்கள். நான் பூமியில் இருப்பதால், மனிதன் ஒருபோதும் பசியின் வேதனையை அனுபவிக்க வேண்டியதில்லை. மாறாக, மனிதன் அனுபவிக்கக்கூடிய பொருட்களை என் கைகளிலிருந்து பெற நான் அனுமதிக்கிறேன், என் ஆசீர்வாதங்களுக்குள் மனிதகுலம் வாழ நான் அனுமதிக்கிறேன். எல்லா மனிதர்களும் என் சிட்சையின் கீழ் வாழவில்லையா? மலைகளின் கீழே ஆழத்தில் வளங்களும், தண்ணீரில் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாகவும் இருப்பதைப் போல, இன்று என் வார்த்தைகளுக்குள் வாழும் மக்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பாராட்டவும் சுவைக்கவும் உணவு இல்லையா? நான் பூமியில் இருக்கிறேன், மனிதகுலம் பூமியில் என் ஆசீர்வாதங்களைப் பெறுகிறது. நான் பூமியை விட்டு வெளியேறும்போது, அந்த நேரத்தில் எனது கிரியையும் நிறைவடையும், மனிதகுலம் அவர்களின் பலவீனத்தின் காரணமாக இனி என் தலையீட்டைப் பெற மாட்டார்கள்.
மார்ச் 16, 1992