கிரியையும் பிரவேசித்தலும் (3)

தேவன் மனுஷர்களிடம் அதிக விஷயங்களை ஒப்படைத்திருக்கிறார், மேலும் அவர்களின் பிரவேசித்தலையும் எண்ணற்ற வழிகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஜனங்களின் திறமை கணிசமான அளவிற்கு மோசமாக இருப்பதால், தேவனின் பல வார்த்தைகள் வேரூன்றத் தவறியிருக்கின்றன. இந்த மோசமான திறமைக்கு, மனுஷனின் சிந்தனை மற்றும் ஒழுக்கச் சீர்கேடு மற்றும் வளர்த்தவிதம் சரியில்லாதது; மனுஷனின் இருதயத்தைத் தீவிரமாகப் பிடித்திருக்கும் பழமையான மூடநம்பிக்கைகள்; மனுஷ இருதயத்தின் ஆழமான மூலைகளில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் மோசமான மற்றும் சீர்கேடான ஜீவித முறைகள்; கலாச்சார கல்வியறிவில் மேலோட்டமான நாட்டம், அதாவது கிட்டத்தட்ட தொண்ணூற்றெட்டு சதவிகித ஜனங்கள் கலாச்சார கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அதிலும், மிகக் குறைந்த அளவிலானவர்களே உயர்மட்ட கலாச்சாரக் கல்வியைப் பெறுகிறார்கள், இதுபோன்ற பல்வேறு காரணங்கள் மனுஷனின் மோசமான திறமைக்குக் காரணங்களாக இருக்கின்றன. ஆகையால், தேவன் அல்லது ஆவியானவர் என்பது எதைக் குறிக்கிறது என ஜனங்களுக்கு அடிப்படையிலேயே தெரியவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக பழமையான மூடநம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்ட தேவனின் தெளிவற்ற மற்றும் துல்லியமற்ற பிம்பத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகால “தேசியவாதத்தின் உயர்ந்த ஆவியானது” மனுஷ இருதயத்தில் ஆழமாக விட்டுச்சென்ற அபாயகரமான தாக்கங்கள்; அதே போல் சுதந்திரம் இல்லாமல், ஆசைப்படவோ அல்லது விடாமுயற்சியோ இல்லாமல், முன்னேற்றத்திற்கான விருப்பம் இல்லாமல், அதற்கு பதிலாக செயலற்றவர்களாக மற்றும் பிற்போக்குத்தனமானவர்களாக இருப்பது, அடிமை மனநிலையில் நிலைபெற்றிருப்பது, மற்றும் பல பழமையான சிந்தனையால் ஜனங்கள் கட்டப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது—இந்த நிஜ காரணங்கள், கருத்தியல் கண்ணோட்டம், இலட்சியங்கள், அறநெறி மற்றும் மனுஷகுலத்தின் மனநிலை ஆகியவற்றிற்கு அழியாத, இழிந்த மற்றும் அசிங்கமான பங்கை வழங்கியிருக்கின்றன. யாரும் மீற முற்படாத பயங்கரவாதம் கொண்ட ஓர் இருண்ட உலகில் மனுஷர் ஜீவித்திருப்பது போல தெரியும், அவர்களில் யாரும் ஒரு சிறந்த உலகத்திற்குச் செல்லவும் நினைப்பதில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஜீவிதத்தில் நிறைய விஷயங்களில் திருப்தி கொள்கிறார்கள், குழந்தைகளைச் சுமந்து அவர்களை வளர்ப்பது, பாடுபடுவது, வியர்வை சிந்துவது, தங்கள் வேலைகளைச் செய்வது, ஒரு வசதியான மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கனவு காண்பது, மற்றும் கனிவான பாசம், கடமை தவறாத குழந்தைகள், தங்கள் ஜீவிதங்களை நிம்மதியாக ஜீவிக்கும்போது அவர்களின் அந்தி ஆண்டுகளில் இருக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கனவு காண்பது…. பல தசாப்தங்களாக, ஆயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஜனங்கள் இவ்வாறாகவே தங்கள் நேரத்தை வீணடித்து வருகிறார்கள், யாரும் ஒரு முழுமையான ஜீவிதத்தை உருவாக்கவில்லை, அனைவருமே இந்த இருண்ட உலகில் பரஸ்பரப் படுகொலை செய்யவும், புகழ் மற்றும் அதிர்ஷ்டம் பெறுவதற்கான பந்தயத்தில் பங்கெடுக்கவும், மற்றும் ஒருவருக்கொருவர் சதி செய்வதை மட்டுமே நோக்கங்களாகக் கொண்டிருக்கிறார்கள். தேவனின் சித்தத்தைத் தேடியவன் யார்? தேவனின் கிரியையை யாராவது கவனித்திருக்கிறார்களா? இருளின் ஆதிக்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மனுஷகுலத்தின் அனைத்து பகுதிகளும் நீண்ட காலமாக மனுஷ சுபாவங்களாக மாறியிருக்கின்றன, ஆகவே தேவனின் கிரியையைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது, மேலும் இன்று தேவன் தங்களிடம் ஒப்படைத்துள்ளவற்றில் கவனம் செலுத்துவதற்கு ஜனங்களுக்கு மனதே இருப்பதில்லை. எப்படியிருந்தாலும், இந்த வார்த்தைகளை நான் உச்சரிப்பதை ஜனங்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் பேசுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறாக இருக்கிறது. வரலாற்றைப் பற்றி பேசுவது என்பது உண்மைகளைப் பற்றி பேசுவதுதான், மேலும், அனைவருக்கும் வெளிப்படையான அவதூறான விஷயங்களைப் பேசுவதும் வரலாறுதான், எனவே உண்மைக்கு முரணான விஷயங்களைச் சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? ஆனால் நியாயமான ஜனங்கள், இந்த வார்த்தைகளைப் பார்த்தவுடன், விழித்தெழுந்து முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள் என்றும் நான் நம்புகிறேன். மனுஷர் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் ஜீவிக்கவும் அதே நேரத்தில் தேவனை நேசிக்கவும் முடியும் என்று தேவன் நம்புகிறார். மனுஷகுலம் முழுவதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது தேவனின் சித்தம்; இதை விட, தேசங்கள் முழுவதையும் தேவனின் மகிமையால் நிரப்புவது தேவனின் பெரிய ஆசை. மனுஷர் மறதிக்குள் மூழ்கி, விழித்திருக்காமல், சாத்தானால் மோசமாக சீர்கெட்டிருப்பது வெட்கக்கேடானது, இன்று அவர்களிடம் மனுஷரின் இயல்பும் இருப்பதில்லை. எனவே மனுஷ சிந்தனை, அறநெறி மற்றும் கல்வி ஆகியவை ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்குகின்றன, கலாச்சாரக் கல்வியறிவுக்கான பயிற்சி இரண்டாவது இணைப்பை உருவாக்குகிறது, இவற்றின்மூலம் மனுஷரின் கலாச்சாரத் திறனை உயர்த்தவும் அவர்களின் ஆவிக்குரிய கண்ணோட்டத்தை மாற்றவும் முடியும்.

உண்மையில், மனுஷகுலத்திற்காக தேவனின் தேவைகள் அவ்வளவு அதிகமானவை அல்ல, ஆனால் ஜனங்களின் திறனுக்கும் தேவனுக்குத் தேவைப்படும் தரத்திற்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியதாக இருப்பதால், பெரும்பாலான ஜனங்கள் தலையை உயர்த்தி, தேவனுடைய தேவைகளின் திசையைப் பார்க்கிறார்கள், ஆனால் அவற்றை நிறைவேற்றும் திறன்தான் இருப்பதில்லை. ஜனங்களின் உள்ளார்ந்த ஆஸ்தி, பிறப்புக்குப் பிறகு அவர்கள் பெற்றிருக்கும் விஷயங்கள் ஆகியவை தேவனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் வெறுமனே இந்த நிலையை அங்கீகரிப்பது ஓர் உறுதியான தீர்வு அல்ல. தொலைதூரத்தில் இருக்கும் தண்ணீரால் உடனடி தாகத்தைத் தணிக்க முடியாது. ஜனங்கள் தங்களைப் புழுதியை விடத் தாழ்ந்தவர்கள் என்று அறிந்திருந்தாலும், தேவனின் இருதயத்தைத் திருப்திப்படுத்தும் தீர்மானம் அவர்களிடம் இல்லையென்றால், தேவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மேம்பட்ட வழியை அவர்கள் பின்வற்றவில்லை என்றால், அந்த வகையான அறிவுக்கு என்னதான் மதிப்பு இருக்க முடியும்? இது மூங்கில் கூடையால் தண்ணீரை இரைப்பது போன்றது இல்லையா—முற்றிலும் பயனற்றதாக இல்லையா? நான் சொல்லும் விஷயத்தின் சாராம்சம் பிரவேசத்துடன் தொடர்புடையது; அதுதான் முக்கிய சங்கதியாக இருக்கிறது.

மனுஷனுடைய பிரவேசத்தின் போது, ஜீவிதம் எப்போதும் சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது; ஜெபிப்பது, தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவது, அல்லது கூட்டங்களை நடத்துவது போன்ற ஆவிக்குரிய ஜீவிதத்தின் சலிப்பான காரியங்கள் நிறைந்தவையாக ஜீவிதம் இருக்கிறது, எனவே தேவனை விசுவாசிப்பது பெரிய இன்பத்தைத் தருவதில்லை என்று ஜனங்கள் எப்போதும் கருதுகிறார்கள். இத்தகைய ஆவிக்குரிய நடவடிக்கைகள் எப்போதுமே சாத்தானால் சீர்கெட்டிருக்கும் மனுஷகுலத்தின் உண்மையான மனநிலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஜனங்களால் சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவைப் பெற முடியும் என்றாலும், அவர்களின் உண்மையான சிந்தனை, மனநிலை, ஜீவித முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்னும் உள்ளுக்குள்ளேயே வேரூன்றியிருக்கின்றன, எனவே அவர்களின் சுபாவம் மாறாமல் இருக்கின்றன. ஜனங்கள் ஈடுபடும் மூடநம்பிக்கை நடவடிக்கைகளை தேவன் மிகவும் வெறுக்கிறார், ஆனால் அந்த மூடநம்பிக்கை நடவடிக்கைகள் தேவனால் கட்டளையிடப்பட வேண்டும் என்று நினைத்து, இன்னும் பலரால் அவற்றை விட்டுவிட முடியவில்லை, இன்றும் கூட அவற்றை முழுமையாக நீக்கிடவும் இல்லை. அவை திருமண விருந்துகள் மற்றும் மணமகள் அலங்காரங்களுக்கு இளவயதினர் செய்யும் ஏற்பாடுகள் போன்று இருக்கின்றன; பணப் பரிசுகள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் கொண்டாடப்படும் ஒத்த வழிகள்; வழங்கப்பட்ட பழங்கால சூத்திரங்கள்; இறந்தவர்களுக்காக நடத்தப்படும் அர்த்தமற்ற மூடநம்பிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பின்விளைவுகள்: இவை தேவனுக்கு இன்னும் வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன. தொழுதுகொள்ளும் நாள் கூட (மத உலகத்தால் அனுசரிக்கப்படும் ஓய்வுநாள் உட்பட) அவருக்கு வெறுக்கத்தக்கது தான்; மனுஷனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான சமூக உறவுகள் மற்றும் உலக தொடர்புகள் அனைத்தும் தேவனால் வெறுக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன. அனைவருக்கும் தெரிந்திருக்கும் வசந்தகால விழா மற்றும் கிறிஸ்துமஸ் தினம் கூட தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கவில்லை, இந்த பண்டிகை விடுமுறை நாட்களுக்கான ஈரடி செய்யுள், பட்டாசுகள், விளக்குகள், திருவிருந்து, கிறிஸ்துமஸ் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கான பொம்மைகள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவையும் தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கவில்லை—அவை மனுஷரின் மனதில் விக்கிரங்களாக இருப்பதில்லையா? ஓய்வுநாளில் அப்பம் பிட்குதல், திராட்சைரசம் குடிப்பது, மற்றும் புத்தாடை அணிவது ஆகியவை இன்னும் விக்கிரங்களாக இருக்கின்றன. வலுசர்ப்பத் தலைகளை உயர்த்தும் தினம், வலுசர்ப்பப் படகு விழா, மத்திய இலையுதிர்காலப் பண்டிகை, லாபா பண்டிகை மற்றும் புத்தாண்டு தினம் போன்ற சீனாவில் பிரபலமான அனைத்து பாரம்பரியப் பண்டிகை நாட்கள், ஈஸ்டர், ஞானஸ்நான தினம், மற்றும் கிறிஸ்துமஸ் தினம் போன்ற மத உலகப் பண்டிகைகள்—இந்த நியாயப்படுத்த முடியாத பண்டிகைகள் அனைத்தும் பழங்காலத்தில் பல ஜனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இப்போது வரை வழங்கப்பட்டு வருகின்றன. மனுஷகுலத்தின் வளமான கற்பனையும் தனித்துவமான கருத்தாக்கமும்தான் அவற்றை இன்று வரை செழித்தோங்க அனுமதித்திருக்கின்றன. அவை குறைபாடுகள் இல்லாததாகத் தோன்றுகின்றன, ஆனால் உண்மையில் அவை சாத்தான் மனுஷகுலத்தின் மீது செயல்படுத்தும் தந்திரங்கள் ஆகும். ஓர் இடத்தில் சாத்தான்கள் எவ்வளவு அதிகமாக இருக்கின்றனவோ, அந்த இடம் அவ்வளவு அதிகமாகப் பழமையான மற்றும் பின்தங்கிய நிலையில் இருக்கும், அவ்விடத்தில் பழமையான பழக்கவழக்கங்கள் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கும். இந்த விஷயங்கள் இயக்கத்திற்கு இடம்விடாமல் ஜனங்களை இறுக்கமாகப் பிணைக்கின்றன. மத உலகில் நடத்தப்படும் பல பண்டிகைகள் பெரும் உண்மைத்தன்மையைக் காண்பிப்பதாகவும், தேவனின் கிரியைக்கு ஒரு பாலத்தை உருவாக்குவதாகவும் தெரிகிறது, ஆனால் அவை உண்மையில் கண்ணுக்குத் தெரியாத இணைப்புகள் ஆகும், அந்த இணைப்பைக் கொண்டுதான் சாத்தான் ஜனங்களைப் பிணைத்திருக்கிறான், ஜனங்கள் தேவனை அறிந்து கொள்வதைத் தடுக்கிறான்—அவை அனைத்தும் சாத்தானின் தந்திரமான உத்திகள்தான். உண்மையில், தேவனுடைய கிரியையின் ஒரு கட்டம் முடிந்ததும், எந்தத் தடயத்தையும் விட்டுவிடாமல், அந்தக் காலத்தின் கருவிகளையும் பாணியையும் அவர் ஏற்கனவே அழித்திருக்கிறார். இருப்பினும், “பக்தியுள்ள விசுவாசிகள்” அந்த உறுதியான பொருட்களைத் தொடர்ந்து வணங்குகிறார்கள்; இதற்கிடையில், தேவனிடம் இருப்பதை அவர்கள் தங்கள் மனதின் பின்புறத்திற்கு அனுப்புகிறார்கள், அதற்குமேல் அதை படிப்பதில்லை, ஆனாலும் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, சாத்தானை வழிபடுவதற்காக அவனை மேசையில் வைத்தது தேவன் மீது அவர்கள் நிறைய அன்பு கொண்டவர்களாக தெரிவது போல இருக்கிறது. இயேசு, சிலுவை, மரியாள், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இராப்போஜனம் இந்த விஷயங்களைப் பரலோகத்தின் கர்த்தர் என்று வணங்குகிறார்கள், எல்லா நேரங்களிலும், “கர்த்தரே, பரலோகத்தின் பிதா,” என்று கூக்குரலிடுகிறார்கள். இதெல்லாம் நகைச்சுவையல்லவா? இன்றுவரை, மனுஷகுலத்தின் மத்தியில் நிறைவேற்றப்பட்ட ஒரேமாதிரியான பல வார்த்தைகளும் நடைமுறைகளும் தேவனுக்கு வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன; அவை தேவன் முன்னோக்கி செல்லும் பாதையைத் தீவிரமாகத் தடுக்கின்றன, மேலும், மனுஷகுலத்தின் பிரவேசத்திற்குப் பெரும் பின்னடைவுகளையும் உருவாக்குகின்றன. சாத்தான் எந்த அளவிற்கு மனுஷகுலத்தைச் சீர்கெடுத்துவிட்டான் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், விட்னஸ் லீயின் நியாயப்பிரமாணம், லாரன்ஸின் அனுபவங்கள், வாட்ச்மேன் நீயின் ஆய்வுகள் மற்றும் பவுலின் கிரியை போன்ற விஷயங்களால் ஜனங்களின் உட்புறங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. மனுஷர் மீது தேவன் கிரியை செய்ய வழியே இல்லை, ஏனென்றால் அவர்களுக்குள் தனித்துவம், நியாயப்பிரமாணங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அமைப்புகள் போன்றவை அதிகம் உள்ளன; ஜனங்களின் பழமையான மூடநம்பிக்கை போக்குகள் தவிர, இந்த விஷயங்களும் மனுஷகுலத்தை கைப்பற்றி விழுங்கியிருக்கின்றன. ஜனங்களின் எண்ணங்கள் அற்புதமான ஜீவன்கள் மேகங்களில் பயணிக்கும் ஒரு விசித்திரக் கதையை முழு வண்ணத்தில் விவரிக்கும் ஒரு சுவாரஸ்யமான படம் போல மிகவும் கற்பனையானது, இது ஜனங்களை ஆச்சரியப்படுத்துகிறது, அவர்களை திகைக்கவைத்து வாயடைக்க வைக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், இன்று தேவன் செய்யவந்திருக்கும் கிரியையானது முக்கியமாக மனுஷரின் மூடநம்பிக்கைகளைக் கையாண்டு அவற்றை அகற்றி, அவர்களின் மனக் கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றுவதாகத்தான் இருக்கிறது. மனுஷகுலத்தால் தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்ட மரபுரிமை காரணமாக தேவனின் கிரியை இன்று வரை நீடித்திருக்கவில்லை; இது ஒரு தனிப்பட்ட ஆவிக்குரிய மனுஷனின் மரபுக்கு அடுத்தடுத்து செல்ல வேண்டிய அவசியமின்றி, அல்லது வேறு ஏதேனும் யுகத்தில் தேவனால் செய்யப்பட்ட பிரதிநிதித்துவ தன்மை கொண்ட எந்தவொரு கிரியையையும் மரபுரிமையாகப் பெற வேண்டிய அவசியமின்றி, தனிப்பட்ட முறையில் அவரால் தொடங்கப்பட்டு மற்றும் அவரால் நிறைவு செய்யப்பட்ட கிரியை ஆகும். இந்த விஷயங்கள் எதிலும் மனுஷர் தங்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. தேவன் இன்று பேசுவதற்கும் கிரியை செய்வதற்கும் மற்றொரு பாணியைக் கொண்டிருக்கிறார், எனவே மனுஷர் ஏன் தங்களைத் தாங்களே தொந்தரவு செய்துகொள்ள வேண்டும்? மனுஷர் தங்கள் “மூதாதையர்களின்” பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு தற்போதைய பிரவாகத்தினுள் இருக்கும் இன்றைய பாதையில் நடந்தால், அவர்கள் தாங்கள் சென்றுசேரும் இடத்தை அடைய மாட்டார்கள். தேவன் மனுஷ உலகின் ஆண்டுகள், மாதங்கள் மற்றும் நாட்களை வெறுக்கிறதைப் போலவே, இந்தக் குறிப்பிட்ட மனுஷ நடத்தைக்கும் கடும் வெறுப்பை உணர்கிறார்.

மனுஷ மனநிலையை மாற்றுவதற்கான சிறந்த வழி என்னவென்றால் மிகுந்த நச்சுத்தன்மையுள்ள ஜனங்களுடைய இருதயங்களின் உள்ளார்ந்த பகுதிகளைச் சரிசெய்து, ஜனங்களைத் தங்கள் சிந்தனையையும் ஒழுக்கத்தையும் மாற்றத் தொடங்க அனுமதிப்பதுதான். முதலாவதாக, இந்த மதச் சடங்குகள், மத நடவடிக்கைகள், ஆண்டுகள் மற்றும் மாதங்கள், மற்றும் பண்டிகைகள் ஆகிய அனைத்தையும் தேவன் வெறுக்கிறார் என்பதை ஜனங்கள் தெளிவாகக் காண வேண்டும். பழமையான சிந்தனையின் இந்தப் பிணைப்புகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும், மேலும் மூடநம்பிக்கைக்கான அவர்களது ஆழ்ந்த மனப்பான்மையின் ஒவ்வொரு தடயத்தையும் அவர்கள் அழிக்க வேண்டும். இவை அனைத்தும் மனுஷகுலத்தின் பிரவேசத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தேவன் ஏன் மனுஷகுலத்தை மதச்சார்பற்ற உலகத்திலிருந்து வெளியேற்றுகிறார் என்பதையும், ஏன் அவர் மனுஷகுலத்தை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளிலிருந்து விலக்குகிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பிரவேசிக்கவிருக்கும் நுழைவாயில் இதுதான், இந்த விஷயங்களுக்கு உங்கள் ஆவிக்குரிய அனுபவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், அவை உங்கள் பிரவேசித்தலைத் தடுப்பதற்கும், தேவனை அறிந்து கொள்வதிலிருந்து உங்களைத் தடுப்பதற்கும் மிகப்பெரிய தடைகளாக இருக்கின்றன. அவை ஜனங்களை கவர்ந்திழுக்கும் ஒரு வலையை உருவாக்குகின்றன. அநேக ஜனங்கள் வேதாகமத்தை அதிகம் படிக்கிறார்கள், மேலும் வேதாகமத்திலிருந்து ஏராளமான பத்திகளை நினைவில் வைத்துக் கொண்டு மனப்பாடமாக ஒப்புவிக்கவும் செய்கிறார்கள். இந்த ஜனங்களின் இன்றைய பிரவேசத்தில், தேவனுடைய கிரியையின் இந்த கட்டத்தின் அடிப்படை வேதாகமம்தான் என்பது போலவும், அதன் ஆதாரம் வேதாகமம்தான் என்பது போலவும் தேவனின் கிரியையை அளவிட ஜனங்கள் தங்களை அறியாமலே வேதாகமத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேவனின் கிரியை வேதாகமத்துடன் ஒத்துப்போகும்போது, ஜனங்கள் தேவனின் கிரியையை கடுமையாக ஆதரிக்கிறார்கள், மேலும் அவரைப் புதிய மரியாதையுடன் நடத்துகிறார்கள்; தேவனின் கிரியை வேதாகமத்துடன் முரண்படும்போது, ஜனங்கள் மிகவும் கவலையாகி, வியர்வை சிந்தி, வேதாகமத்தில் தேவனுடைய கிரியையின் அடிப்படையைத் தேடுகிறார்கள்; தேவனின் கிரியை வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால், ஜனங்கள் தேவனைப் புறக்கணிப்பார்கள். இன்று தேவனின் கிரியையைப் பொருத்தவரை, பெரும்பாலான ஜனங்கள் அதை எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் அதற்குக் குறிப்பிட்ட அளவு கீழ்ப்படிதலைக் கொடுக்கிறார்கள், மேலும் அதை அறிந்து கொள்வதில் அலட்சியமாக உணர்கிறார்கள்; கடந்த கால விஷயங்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு பாதியைப் பிடித்துக் கொண்டு மற்றொன்றைக் கைவிடுகின்றனர். இதை பிரவேசித்தல் என்று அழைக்க முடியுமா? மற்றவர்களின் புத்தகங்களைப் பொக்கிஷங்களாகப் பிடித்துக்கொண்டு, அவற்றை ராஜ்யத்தினுடைய வாயிலின் தங்கச் சாவியாகக் கருதி, தேவன் இன்று தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. மேலும், தேவனின் வார்த்தைகள் முற்றிலும் சரியானவை என்பதை நிரூபிக்க தலைசிறந்த படைப்புகளுக்குள் இன்றைக்கான தேவனின் வார்த்தைகளின் அடிப்படையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது போல, பல “அறிவார்ந்த வல்லுநர்கள்” தேவனின் வார்த்தைகளை இடது கையிலும், மற்றவர்களின் “தலைசிறந்த படைப்புகளை” வலது கையிலும் வைத்திருக்கிறார்கள். மேலும், அவர்கள் கிரியை நிகழும்போது அங்கு இருந்தவர்கள் போல, தேவனின் வார்த்தைகளைத் தலைசிறந்த படைப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மற்றவர்களுக்கு விளக்குகின்றனர். உண்மையைச் சொல்வதானால், இன்றைய சமீபத்திய விஞ்ஞான சாதனைகள், அதாவது முந்தைய விஞ்ஞான சாதனைகள் (அதாவது தேவனின் கிரியை, தேவனின் வார்த்தைகள் மற்றும் ஜீவித பிரவேசித்தலுக்கான பாதை) பற்றி அதிகம் சிந்திக்காத பல “அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” மனுஷகுலத்தில் இருக்கின்றனர். எனவே, ஜனங்கள் அனைவரும் “தன்னம்பிக்கை உடையவர்களாக” இருக்கிறார்கள், தங்கள் நாவன்மையைக் கொண்டு தொலைதூரம் வரை “பிரசங்கிக்கிறார்கள்,” “தேவனின் நல்ல நாமத்தைப்” பகட்டாக வெளிப்படுத்துகிறார்கள். இதற்கிடையில், அவர்களின் சொந்த பிரவேசம் ஆபத்தில் இருக்கிறது, மேலும் சிருஷ்டிப்பானது இந்தத் தருணத்திலிருந்து துவங்குவதால் அவர்கள் தேவனின் தேவைகளுக்கு வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது. தேவனின் கிரியையைச் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது? தங்களது மனச்சாட்சியை எளிதாக்குவதற்கும், ஒருவித ஆறுதலையும் உணருவதற்கும் இதுவே வழி என, ஜனங்கள் தங்களில் பாதியைக் கடந்தகாலத்தில் விட்டுவிட்டு, தற்போதைய காலத்திற்கு மற்றொரு பாதியைக் கொண்டு வரவும், பாதியைச் சாத்தானுக்கு வழங்கவும், மீதிப் பாதியை தேவனிடம் முன்வைக்கவும் ஏற்கனவே தங்கள் மனதை தயார்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ஜனங்களின் உட்புற உலகங்கள் மிகவும் நயவஞ்சகமானவை, அவர்கள் வருங்காலத்தை மட்டுமல்ல, கடந்த காலத்தையும் இழக்க நேரிடும் என்று பயப்படுகிறார்கள், சாத்தானையும் இன்றைய தேவனையும் புண்படுத்தி விடுவோம் என்று ஆழ்ந்த பயங்கொள்கிறார்கள்; அவ்வாறு நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம். ஜனங்கள் தங்கள் சிந்தனையையும் ஒழுக்கத்தையும் சரியாக வளர்த்துக் கொள்ளத் தவறியதால், அவர்கள் விவேகத்துடன் இருப்பதில்லை, மேலும் இன்றைக்கான கிரியை தேவனின் கிரியையா இல்லையா என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. ஜனங்களின் பழமையான மற்றும் மூடநம்பிக்கை சிந்தனை ஆகியவை மிகவும் ஆழமாக இருப்பதால், அவர்கள் நீண்டகாலமாக மூடநம்பிக்கையையும் சத்தியத்தையும், தேவனையும் விக்கிரங்களையும் ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள். இந்த விஷயங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை, மேலும் அவர்களின் மூளைகளைக் கசக்கினாலும் தெளிவாகப் பாகுபாடு காட்ட முடிவதில்லை. அதனால்தான் மனுஷர் தங்கள் பாதைகளிலேயே நின்றுவிட்டார்கள், இனியும் முன்னேறப் போவதில்லை. இந்தச் சிக்கல்கள் அனைத்தும் சரியான கருத்தியல் கல்வி வகையின் பற்றாக்குறையிலிருந்து எழுகின்றன, இது அவர்களின் பிரவேசத்திற்குப் பெரும் சிரமங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவாக, மெய்யான தேவனுடைய கிரியையில் ஜனங்கள் ஒருபோதும் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் மனுஷனின் கிரியையில் (அவர்கள் பெரிய மனுஷராகக் கருதுபவர்களைப் போன்றவர்கள்) முத்திரை குத்தப்பட்டதைப் போல தொடர்ந்து ஒட்டிக்கொள்கிறார்கள்[1]. மனுஷகுலம் பிரவேசிக்க வேண்டிய சமீபத்திய தலைப்புகள் இவை அல்லவா?

அடிக்குறிப்பு:

1. “தொடர்ந்து ஒட்டிக்கொள்வது” கேலிக்குரியதாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சொற்றொடரானது ஜனங்கள் பிடிவாதமானவர்களாகவும் சிக்கலானவர்களாகவும், காலங்கடந்த விஷயங்களை இன்னும் இறுக்கி பிடித்துக் கொள்பவர்களாகவும், அவற்றை விடுவிக்க விரும்பாதவர்களாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (2)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (4)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக