அத்தியாயம் 10

இதற்கும் அதற்கும் நீ பயப்படக்கூடாது; நீ எத்தனை சிரமங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்தாலும், எனது சித்தம் தடையின்றி செயல்படுத்தப்படும்படி, நீ எனக்கு முன்னால் நிலையாக இருக்க முடியும், எந்த ஒரு இடையூறாலும் தடைசெய்யப்படாமல் இருக்க முடியும். இது உன்னுடைய கடமையாகும்; இல்லையெனில், நான் என் கோபத்தை உன் மீது கொண்டு வருவேன், என் கரங்களைக் கொண்டு, நான் கொண்டு வருவேன்…. அப்போது நீ முடிவில்லாத மனவேதனையைத் தாங்குவாய். நீ அனைத்தையும் தாங்க வேண்டும்; என்னைப் பொறுத்தவரை, என்னைப் பின்தொடரும்படி நீ வைத்திருக்கும் அனைத்தையும் விட்டுவிடவும், உன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவும் நீ ஆயத்தமாய் இருக்கவேண்டும், உன்னுடைய அனைத்தையும் செலவழிக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும். இதுவே நான் உன்னைச் சோதிக்கும் நேரமாகும்: நீ உன்னுடைய விசுவாசத்தை எனக்குத் தருவாயா? உன்னால் இறுதி வரை என்னை விசுவாசமாகப் பின்பற்ற முடியுமா? பயப்படாதே; எனது ஆதரவுடன், யார் இந்தப் பாதையைத் தடை செய்ய முடியும்? இதை நினைவில் கொள்! மறந்து விடாதே! நிகழும் அனைத்தும் எனது நல்ல நோக்கத்தினால் தான், அனைத்துமே எனது கவனிப்பின்கீழ் உள்ளன. நீ சொல்கிற மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் உன்னால் என் வார்த்தையைப் பின்பற்ற முடியுமா? அக்கினியின் சோதனைகள் உன்மீது வரும்போது நீ மண்டியிட்டு, கூப்பிடுவாயா? அல்லது முன்னேற முடியாமல் பயந்து ஒடுங்கிப் போவாயா?

நீ என் தைரியத்தை உனக்குள் கொண்டிருக்க வேண்டும், மேலும் விசுவாசிக்காத உறவினர்களை எதிர்கொள்ளும்போது உனக்குக் கொள்கைகள் இருக்க வேண்டும். என் பொருட்டு, நீ எந்த இருண்ட வல்லமைகளுக்கும் அடிபணியக்கூடாது. பரிபூரணமான வழியில் நடக்க என் ஞானத்தைச் சார்ந்து கொள்; சாத்தானின் எந்த சதித்திட்டங்களும் ஆட்கொள்ள அனுமதிக்காதே. உன் இருதயத்தை எனக்கு முன்பாக வைத்திருக்க, உன்னுடைய எல்லா முயற்சிகளையும் எடு, நான் உன்னை ஆறுதல்படுத்தி உனக்குச் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருவேன். மற்றவர்களுக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட வழியில் இருக்க முயற்சிக்காதே; என்னைத் திருப்திப்படுத்துவது அதிக மதிப்பையும் நிறையையும் கொண்டிருக்கவில்லையா? என்னைத் திருப்திப்படுத்துவதில், நீ இன்னும் நித்திய மற்றும் வாழ்நாளுக்கான சமாதானத்தாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்பப்பட மாட்டாயா? உன்னுடைய தற்போதைய துன்பங்களானது உன் எதிர்கால ஆசீர்வாதங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது; அவை விவரிக்க முடியாதவையாகும். நீ பெறப்போகும் ஆசீர்வாதங்களின் மகத்துவம் உனக்குத் தெரியாது; உன்னால் அதைக் கனவு காணக்கூட முடியாது. இன்று அது உண்மையானதாகிவிட்டது; மிகவும் உண்மையானதாகிவிட்டது! இது வெகு தொலைவில் இல்லை, உன்னால் இதைப் பார்க்க முடிகிறதா? இதனுடைய ஒவ்வொரு கடைசி துணுக்கும் எனக்குள் இருக்கிறது; எதிரே இருக்கும் பாதை எவ்வளவு பிரகாசமானது! உன் கண்ணீரைத் துடைத்துக் கொள், இனி எந்த வேதனையையோ துக்கத்தையோ உணராதே. எல்லாக் காரியங்களையும் என் கரங்களால் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன், விரைவில் உங்களை ஜெயிப்பவர்களாக்கி என்னுடன் உங்களை மகிமைப்படுத்தவதே எனது குறிக்கோளாகும். உனக்கு நடக்கும் எல்லாவற்றிற்கும், நீ அதற்கேற்ற நன்றியுணர்வுடன் இருந்து, துதிகளை நிறைவாய்க் கொண்டிருக்க வேண்டும்; அது எனக்கு ஆழ்ந்த திருப்தியைக் கொண்டுவரும்.

எல்லை கடந்து செல்கிற கிறிஸ்துவின் ஜீவன் ஏற்கனவே தோன்றிவிட்டது; நீ பயப்பட ஒன்றுமில்லை. சாத்தான்கள் நம் காலடியின் கீழ் இருக்கிறார்கள், அவர்களுடைய நேரம் வெகுகாலம் நீடிக்காது. விழித்தெழு! விபச்சார உலகத்தைத் தூக்கி எறி; மரணத்தின் படுகுழியில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்! எதுவாக இருந்தாலும் எனக்கு விசுவாசமாக இரு, தைரியமாக முன்னேறு; நான் உன்னுடைய பெலமான கன்மலை, எனவே என்னைச் சார்ந்துகொள்!

முந்தைய: அத்தியாயம் 9

அடுத்த: அத்தியாயம் 11

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக