அத்தியாயம் 21
மனுஷன் என் வெளிச்சத்தின் நடுவே கீழே விழுந்து, என் இரட்சிப்பின் காரணமாக நிலையாக நிற்கிறான். முழு பிரபஞ்சத்திற்கும் நான் இரட்சிப்பைக் கொண்டு வரும்போது, என் மீட்டமைத்தலில் நுழைவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க மனுஷன் முயற்சிக்கிறான், ஆனாலும் இந்த மீட்டமைத்தலின் மூலம் எந்தத் தடயமும் இல்லாமல் அடித்துச்செல்லப்பட்டவர்கள் அநேகர் உள்ளனர்; நீரோட்டத்தால் மூழ்கடிக்கப்பட்டவர்களும் அநேர் உள்ளனர்; மேலும், நீரோட்டத்தின் மத்தியில் நிலையாக நிற்கும், திசை உணர்வை ஒருபோதும் இழக்காத, இன்று வரை நீரோட்டத்தைப் பின்பற்றியவர்களும் அநேகர் உள்ளனர். நான் மனுஷனுடன் படிப்படியாக முன்னேறுகிறேன், ஆனாலும், மனுஷன் என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை; நான் வெளியில் அணியும் ஆடைகளை மட்டுமே அவன் அறிந்திருக்கிறான், ஆனால் எனக்குள் மறைந்திருக்கும் செல்வத்தை அவன் அறிந்திருக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் மனுஷனுக்குச் செல்வத்தை வழங்கி, அவனுக்குக் கொடுக்கிறபோதிலும், அவன் அவற்றை உண்மையாக ஏற்றுக்கொள்ள இயலாதவனாகவும், என்னால் கொடுக்கப்படுகிற எல்லா செல்வங்களையும் அவனால் பெற முடியாமலும் இருக்கிறான். மனுஷனின் சீர்கெட்ட விஷயங்கள் எதுவும் என் கவனிப்பிலிருந்து தப்புவதில்லை; என்னைப் பொறுத்தவரை, அவனது உள் உலகம் தண்ணீரில் பிரதிபலிக்கும் பிரகாசமான நிலவைப் போல தெளிவாக இருக்கிறது. நான் மனுஷனை ஏனோதானோவென்று நடத்துவதில்லை, அவனுடன் இணைந்து இயங்குவதும் இல்லை; மனுஷன் தனக்குத்தானே பொறுப்பேற்க முடியாமல் போகிறான், இதனால் எல்லா மனுஷரும் எப்பொழுதும் மோசமடைந்து வருகின்றனர், மேலும் இன்றும் கூட இத்தகைய மோசமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. ஏழ்மையான, பரிதாபகரமான மனுஷர்களே! என் ஆவியின் நோக்கங்களைப் பின்பற்ற முடிவதில்லை, ஆனாலும் எதற்காக மனுஷன் என்னை நேசிக்கிறான்? நான் உண்மையில் மனுஷருக்கு என்னை வெளிப்படுத்தியிருக்கவில்லையா? மனுஷர்கள் உண்மையில் என் முகத்தைப் பார்த்திருக்கவில்லையா? மனுஷர்கள் மீது நான் மிகக் குறைந்த கருணை காட்டியிருக்கலாமோ? ஓ சகல மனுஷரின் கலகக்காரரே! அவர்கள் என் பாதங்களுக்கு அடியில் நசுக்கப்பட வேண்டும்; என் தண்டனையின் மத்தியில் அவர்கள் மறைந்து போக வேண்டும், என் பெரிய கிரியை முடியும் நாளில், அவர்கள் மனுஷர்களிடத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், இதனால் எல்லா மனுஷரும் அவர்களின் அசிங்கமான முகத்தை அறிந்து கொள்வர். மனுஷன் அரிதாகவே என் முகத்தைப் பார்க்கிறான் அல்லது என் குரலைக் கேட்கிறான், ஏனென்றால் உலகமே மிகவும் கொந்தளிப்பானது, அதன் இரைச்சல் மிகவும் பெரியது, இதனால் மனுஷன் என் முகத்தைத் தேடவும் என் இருதயத்தைப் புரிந்துகொள்ளவும் முடியாத சோம்பேறியாக இருக்கிறான். இது மனுஷனின் சீர்கேட்டிற்குக் காரணம் அல்லவா? இதனால்தான் மனுஷனுக்குத் தேவை இருக்கிறது அல்லவா? எல்லா மனுஷரும் எப்போதும் என் ஏற்பாட்டின் இடையே இருக்கிறார்கள்; அவ்வாறு இல்லையென்றால், நான் இரக்கமற்றவராக இருந்திருந்தால், இன்று வரை யார் பிழைத்திருப்பார்கள்? என்னில் இருக்கும் செல்வங்களுக்கு ஈடு இணை இல்லை, ஆனாலும் எல்லா பேரழிவுகளும் என் கைகளுக்குள் உள்ளன—அவர்கள் விரும்பும் போதெல்லாம் பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்ள யாரால் முடியும்? மனுஷனின் ஜெபங்கள், அல்லது அவனது இருதயத்திற்குள் அழும் அழுகை அவனை அவ்வாறு செய்ய அனுமதிக்கிறதா? மனுஷன் ஒருபோதும் என்னிடம் உண்மையாக ஜெபித்ததில்லை, அனைத்து மனுஷரும் அப்படியே, சத்திய வெளிச்சத்தின் மத்தியில் யாரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்ததில்லை; தோற்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொருந்துகின்ற ஒளிரும் வெளிச்சத்தில் மட்டுமே ஜனங்கள் வாழ்கிறார்கள். இதுதான் இன்று மனுஷர்களின் குறைபாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
அனைவரும் என்னிடமிருந்து எதையாவது பெறுவதற்காக என்னிடமிருந்து வெளியேற ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறார்கள், எனவே, மனுஷனின் உளவியலுக்கு ஏற்ப, அவனிடம் இருக்கும் உண்மையான அன்பை ஊக்குவிப்பதாக நான் அவனுக்கு வாக்குதத்தங்களை அளிக்கிறேன். உண்மையில் மனுஷனின் மெய்யான அன்புதான் அவனுக்கு வலிமையைத் தருகிறதா? வானத்தில் என் ஆவியை அசைத்துப் பார்த்தது மனுஷனின் விசுவாசமா? மனுஷனின் செயல்களால் பரலோகம் ஒருபோதும் சிறிதளவுகூட பாதிக்கப்படவில்லை, மேலும் மனுஷன் மீதான எனது கிரியைகள் அவனின் ஒவ்வொரு செயலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தால், என் தண்டனையின் மத்தியில்தான் அனைத்து மனுஷரும் வாழ்வார்கள். கன்னங்களில் கண்ணீர் வழிய நிற்கும் அநேக ஜனங்களை நான் கண்டிருக்கிறேன், மேலும் அநேகர் எனது செல்வங்களுக்கு ஈடாக தங்கள் இருதயங்களை ஒப்புக்கொடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இத்தகையப் “பக்தி” இருந்தபோதிலும், மனுஷனுக்கு இதெல்லாம் திடீரென தூண்டப்பட்டதன் விளைவாக நான் ஒருபோதும் அவனுக்கு அனைத்தையும் வெறுமனே கொடுக்கவில்லை, ஏனென்றால் மனுஷன் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் எனக்கு முன்பாகத் தன்னை நேர்ந்துகொள்ளத் தயாராக இல்லை. நான் எல்லா ஜனங்களின் முகமூடிகளையும் பறித்து, இந்த முகமூடிகளை அக்கினிக்கடலில் எறிந்தேன், இதன் விளைவாக, மனுஷனின் விசுவாசமும் வேண்டுகோளும் எனக்கு முன் ஒருபோதும் உறுதியாக இருந்ததில்லை. மனுஷன் வானத்தில் இருக்கும் மேகம் போன்றவன்: காற்று வீசும்போது, அதன் சக்தியின் வலிமைக்கு அவன் அஞ்சுகிறான், அதனால் தனது கீழ்ப்படியாமைக்காக தாம் தாக்கப்படுவோம் என்ற ஆழ்ந்த பயத்தில் அவன் காற்றின் பின்னே அவசரமாக மிதந்து செல்கிறான். இது மனுஷனின் அசிங்கமான முகம் அல்லவா? இது மனுஷனின் கீழ்ப்படிதல் என்று அழைக்கப்படுகிறது அல்லவா? இது மனுஷனின் “உண்மையான உள்ளுணர்வு” மற்றும் போலியான நல்லெண்ணம் அல்லவா? அநேகர் என் வாயிலிருந்து வெளிவரும் அனைத்து வார்த்தைகளையும் நம்ப மறுக்கிறார்கள், அநேகர் எனது மதிப்பீட்டை ஏற்றுக்கொள்வதில்லை, எனவே அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் அவர்களின் கலக நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. நான் பேசுவது மனுஷனின் பழைய இயல்புக்கு முரணானதா? “இயற்கையின் விதிகளின்” படி நான் மனுஷனுக்குப் பொருத்தமான வரையறையை வழங்கவில்லையா? மனுஷன் உண்மையிலேயே எனக்குக் கீழ்ப்படிவதில்லை; அவன் உண்மையிலேயே என்னைத் தேடியிருந்தால், நான் இவ்வளவு சொல்ல வேண்டியதில்லை. மனுஷன் ஒரு பயனற்ற குப்பை, அவனை முன்னோக்கிச் செல்ல கட்டாயப்படுத்த நான் என் தண்டனையைப் பயன்படுத்த வேண்டும்; நான் அவ்வாறு செய்யாவிட்டால், நான் அவனுக்குக் கொடுக்கும் வாக்குதத்தங்கள் அவனுடைய இன்பத்திற்குப் போதுமானதாக இருந்தாலும், அவனுடைய இருதயத்தை எப்படி அசைத்துப் பார்க்க முடியும்? மனுஷன் பல ஆண்டுகளாக வேதனையான போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்கிறான்; அவன் எப்போதும் விரக்தியில் வாழ்ந்தான் என்றும் சொல்லலாம். இதன் விளைவாக, அவன் நம்பிக்கையற்றவனாகவும், உடல் மற்றும் மன ரீதியாகச் சோர்ந்தவனாகவும் இருக்கிறான், எனவே நான் அவனுக்குக் கொடுக்கும் செல்வத்தை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. இன்றும் கூட, ஆவியின் அனைத்து இனிமையையும் என்னிடமிருந்து யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனங்கள் ஏழைகளாக மட்டுமே இருந்து, கடைசி நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அநேக ஜனங்கள் என்னை உண்மையாக நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுடைய இருதயங்கள் அவர்களுடையதாக இல்லை என்பதால், அவர்கள் மீதே அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை; நான் கொடுத்த சோதனைகளை அனுபவிக்கும் போது அநேகர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் நான் உண்மையிலேயே இருக்கிறேன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை, வெறுமனே என்னை வெறுமையாய் நேசிக்கிறார்கள், என் உண்மையான இருப்பு காரணமாக அல்ல; அநேகர் தங்கள் இருதயங்களை எனக்கு முன்பாக வைக்கின்றனர், பின்னர் தங்கள் இருதயங்களில் கவனம் செலுத்த மறுக்கின்றனர், இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்படுகின்றன, பின்னர் அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள்; நான் என் வார்த்தைகளை வழங்கும்போது பலர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் என் வார்த்தைகளை அவர்களின் ஆவிகளில் சிந்தையில் வைக்க மறுக்கின்றனர், அதற்குப் பதிலாகச் சாதாரணமாக அவற்றைப் பொதுச் சொத்து போலப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பத் தூக்கி எறிகிறார்கள். மனுஷன் வேதனையின் மத்தியில் என்னைத் தேடுகிறான், சோதனையின்போது என்னைக் காண்கிறான். சமாதான காலங்களில் அவன் என்னை ரசிக்கிறான், ஆபத்து நேரத்தில் என்னை மறுக்கிறான், அலுவலாக இருக்கும்போது என்னை மறந்துவிடுகிறான், அவன் தனியே இருக்கும்போது என் இயக்கங்களை கடந்து செல்கிறான்—ஆனாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் யாரும் என்னை நேசித்ததில்லை. மனுஷன் எனக்கு முன்பாக அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: அவன் எனக்கு எதையும் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, ஆனால் எல்லா ஜனங்களும் என்னைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதால் மட்டுமே, என்னை வாக்குவசீகரம் செய்வதற்குப் பதிலாக, மனுஷனின் நேர்மையை மீண்டும் கொண்டு வர அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள். எனது பிரகாசம், ஒளியூட்டல் மற்றும் எனது முயற்சிகளுக்கான செலவு அனைத்து ஜனங்களையும் வியாபிக்கின்றன, ஆனால் மனுஷனின் ஒவ்வொரு செயலின் உண்மையும் எல்லா ஜனங்களையும் வியாபிக்கிறது, அதேபோல் அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். இது மனுஷனின் ஏமாற்றுவதற்கான பொருட்கள் கருவறையிலிருந்து அவனுடன் இருப்பதைப் போலவும், பிறந்ததிலிருந்தே இந்தச் சிறப்புத் தந்திரங்களை அவர் பெற்றிருப்பதைப் போலவும் இருக்கிறது. மேலும், அவன் ஒருபோதும் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கவில்லை; இந்த வஞ்சகமான திறன்களின் பிறப்பிடத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை. இதன் விளைவாக, மனுஷன் அதை உணராமல் ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறான், அது அவன் தன்னையே மன்னிப்பதைப் போலவும், என்னை வேண்டுமென்றே ஏமாற்றுவது என்பதை விட தேவனுடைய ஏற்பாடுகள் போலவும் இருக்கிறது. மனுஷன் என்னை ஏமாற்றுவதற்கான ஆதாரம் இதுவல்லவா? இது அவனது தந்திரமான திட்டம் அல்லவா? மனுஷனின் தணிவான மற்றும் வஞ்சகமான பேச்சுக்களால் நான் ஒருபோதும் குழப்பமடையவில்லை, ஏனென்றால் அவனுடைய சாரத்தை நான் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன். அவனது இரத்தம் எவ்வளவு தூய்மையற்றதாக இருக்கிறது, அவனது மஜ்ஜையில் சாத்தானின் விஷம் எவ்வளவு உள்ளது என்பது யாருக்குத் தெரியும்? கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் மனுஷன் அதற்குப் பழக்கமாகி விடுகிறான், அதாவது சாத்தானால் செய்யப்பட்டத் தீங்கை அவன் உணர்வதில்லை, இதனால் “ஆரோக்கியமான இருப்புக்கான கலையைக்” கண்டுபிடிப்பதில் அக்கறை அவனுக்கு இருப்பதில்லை.
மனுஷன் என்னிடமிருந்து விலகி இருக்கும்போது, அவன் என்னைச் சோதிக்கும்போது, அவனிடமிருந்து என்னை நான் மேகங்களுக்கிடையில் மறைக்கிறேன். இதன் விளைவாக, அவனால் என்னைப் பற்றிய எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது, துன்மார்க்கரின் கையால் மட்டுமே வாழும் நிலைக்கு ஆளாகி, அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்பவனாகிறான். மனுஷன் எனக்கு நெருக்கமாக இருக்கும்போது, நான் அவன் முன் தோன்றுகிறேன், நான் அவனிடமிருந்து என் முகத்தை மறைக்கவில்லை, இந்த நேரத்தில், மனுஷன் என் கனிவான முகத்தைப் பார்க்கிறான். அவன் திடீரென்று தனது நினைவுக்கு வருகிறான், அவன் உணரவில்லை என்றாலும், அவனிடத்தில் எனக்கான அன்பு பிறக்கிறது. அவனது இதயத்தில், அவன் திடீரென்று ஒப்பிடமுடியாத இனிமையை உணர்கிறான், மேலும் பிரபஞ்சத்தில் எனது இருப்பை எப்படி அறிய முடியாமல் போனது என்று ஆச்சரியப்படுகிறான். இவ்வாறு மனுஷனுக்கு என் அருமை, மேலும், என் விலைமதிப்பற்ற தன்மை பற்றிய அதிக உணர்வு இருக்கிறது. இதன் விளைவாக, அவன் என்னை ஒருபோதும் விட்டுவிட விரும்பவில்லை, அவன் என்னைத் தனது உயிர்வாழ்வின் வெளிச்சமாகக் காண்கிறான், மேலும் நான் அவனை விட்டு விலகிவிடுவேன் என்ற ஆழ்ந்த பயத்தில் அவன் என்னை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறான். நான் மனுஷனின் விசுவாசத்தால் அசைக்கப்படவில்லை, ஆனால் அவனுடைய அன்பின் காரணமாக அவனிடம் இரக்கப்படுகிறேன். இந்த நேரத்தில், மனுஷன் என் சோதனைகளுக்கு மத்தியில் வாழ்கிறான். என் முகம் அவனது இருதயத்திலிருந்து மறைந்துவிடுகிறது, உடனடியாக அவன் தனது வாழ்க்கை வெறுமையாக இருப்பதாக உணர்கிறான், மேலும் அவனது எண்ணங்கள் தப்புவதில் கவனத்தைச் செலுத்துகின்றன. இந்த நேரத்தில், மனுஷனின் இருதயம் வெறுமையாக உள்ளது. என் மனநிலையால் அவன் என்னைத் தழுவுவதில்லை, ஆனால் என் அன்பின் காரணமாக நான் அவனைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்கிறான். ஆனாலும் என் அன்பு மனுஷனைத் தாக்கும்போது, அவன் உடனடியாகத் தனது மனதை மாற்றிக்கொள்கிறான்; அவன் என்னுடனான தனது உடன்படிக்கையைக் கிழித்துவிட்டு என் தீர்ப்பிலிருந்து விலகுகிறான், என் இரக்கமுள்ள முகத்தை மீண்டும் ஒருபோதும் பார்க்க மறுக்கிறான், எனவே அவன் என்னைப் பற்றிய தனது பார்வையை மாற்றிக்கொண்டு, நான் ஒருபோதும் மனுஷனை இரட்சிக்கவில்லை என்று கூறுகிறான். உண்மையான அன்பில் கருணையைத் தவிர வேறொன்றும் இல்லையா? என் பிரகாசிக்கும் ஒளியின் வெளிச்சத்தில் வாழ்ந்தால் மட்டுமே மனுஷன் என்னை நேசிப்பானா? அவன் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்க்கிறான், ஆனால் நிகழ்காலத்தில் வாழ்கிறான், இதுதான் மனுஷனின் நிலை அல்லவா? நீங்கள் உண்மையில் எதிர்காலத்திலும் இப்படித்தான் இருப்பீர்களா? நான் விரும்புவது என்னவென்றால், மனுஷன் மேலோட்டமாக என்னைத் திருப்திப்படுத்தும் இருதயத்தைக் கொண்டிருக்காமல் எனக்காக மிகவும் ஆழமாக ஏங்குகிற ஓர் இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
மார்ச் 21, 1992