முன்னுரை

1991 பிப்ரவரி 11 அன்று, தேவன் திருச்சபையில் தனது முதல் வெளிப்பாட்டினைச் சொன்னார். அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலில் வாழும் ஒவ்வொரு மனிதன் மீதும் இந்த வார்த்தை ஒரு விஷேசித்த தாக்கத்தைக் கொண்டிருந்தது. “தேவனுடைய வாசஸ்தலம் தோன்றியுள்ளது” என்பதையும், மற்றும் “பிரபஞ்சத்தின் அதிபதி, கடைசி நாட்களின் கிறிஸ்து—அவர் பிரகாசிக்கும் சூரியன்” என்பதையும் இந்த வெளிப்பாடு குறிப்பிட்டது. இந்த ஆழமான குறிப்பிடத்தக்க வார்த்தைகளால், அனைத்து ஜனங்களும் ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த வெளிப்பாட்டை வாசித்த அனைவருமே புதிய கிரியையைப் பற்றியும், தேவன் தொடங்கவிருக்கும் பெரிய கிரியையைப் பற்றியும் ஒரு அறிவிப்பை உணர்ந்தார்கள். இந்த அழகான, மெல்லிய மற்றும் துல்லியமான வார்த்தை தான் எல்லா மனிதர்களையும் தேவனுடைய புதிய கிரியைக்குள்ளும் புதிய யுகத்திற்குள்ளும் கொண்டு வந்தது மற்றும் இந்த மனுஷரூபத்தில் தேவனுடைய கிரியைக்கான அடித்தளத்தையும், களத்தையும் அமைத்தது. இந்த நேரத்தில் உரைக்கப்பட்ட தேவனுடைய வெளிப்பாடு யுகங்களை இணைக்கிறது என்றும், கிருபையின் யுகத்தின் தொடக்கத்திலிருந்து பார்த்தால், தேவன் மனித இனத்திடம் பகிரங்கமாகப் பேசியது இதுவே முதல் முறை என்றும் ஒருவர் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த பிறகு அவர் பேசுவது இதுவே முதல் முறையாகும். மேலும், ராஜ்யத்தின் யுகத்தில் தேவன் மேற்கொள்ளவிருக்கும் கிரியைக்கு இது ஒரு முன்னணியானதும், ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியும் ஆகும்.

முதன்முறையாக தேவன் ஒரு வெளிப்பாட்டைச் சொன்னபோது, அவர் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் பாராட்டு வழங்குவது போன்றும், ஒரே நேரத்தில் நேர்த்தியான மற்றும் தெளிவான மொழியிலும், உடனடியாகவும், எளிதாகவும் புரிந்து கொள்ளக் கூடிய ஜீவ ஏற்பாடாகவும் வெளிப்படுத்தினார். இதனுடன், கர்த்தராகிய இயேசுவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதே நேரத்தில் அவருடைய கிருபையை எப்படி அனுபவிப்பது என்பதை மட்டுமே அறிந்த இந்தச் சிறு ஜனக்கூட்டத்தை அவர் அழைத்துச் சென்று, தேவனுடைய ஆளுகைத் திட்டத்தின் அடுத்த கட்ட கிரியைக்குள் மௌனமாகக் கொண்டு வந்தார். இந்தச் சூழ்நிலைகளில், தேவன் இறுதியில் என்ன வகையான கிரியையைச் செய்யப் போகிறார் என்றோ அல்லது முன்னால் செல்லும் சாலையில் என்ன இருக்கிறது என்றோ மனிதகுலத்திற்குத் தெரியாது. அதனை அவர்கள் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. அதன்பிறகு, புதிய யுகத்திற்கு மனிதகுலத்தைப் படிப்படியாகக் கொண்டுவர தேவன் தொடர்ந்து பல வெளிப்பாடுகளைச் சொன்னார். ஆச்சரியப்படும் விதமாக, தேவனுடைய ஒவ்வொரு வெளிப்பாடும் உள்ளடக்கத்தில் வேறுபட்டது, மற்றும் பல்வேறு புகழ்ச்சியின் வகைகளையும் வெளிப்பாட்டு முறைகளையும் பயன்படுத்துகிறது. இந்த வெளிப்பாடுகள், ஒரே தொனியில் இருப்பினும் உள்ளடக்கத்தில் வேறுபட்டவை. தேவனுடைய அக்கறை மற்றும் விசாரணையின் உணர்வுகளால் மாறாமல் நிரப்பப்படுகின்றன மற்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் ஜீவனின் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அத்துடன் தேவனிடமிருந்து மனிதனுக்கு நினைவூட்டலின் வார்த்தைகளையும், அறிவுரையையும், ஆறுதலையும் கொண்டுள்ளன. இந்த வெளிப்பாடுகளில், இது போன்ற பத்திகள் மீண்டும் மீண்டும் தோன்றும்: “ஒரே உண்மையான தேவன் மாம்சமாகிவிட்டார், அவர் பிரபஞ்சத்தின் அதிபதி, அவர் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார்”; “ஜெயமுள்ள ராஜா தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்”; “அவர் பிரபஞ்சத்தைத் தமது கரங்களில் வைத்திருக்கிறார்”; மற்றும் பலவாகும். இந்தப் பத்திகளில் ஒரு செய்தி சொல்லப்படுகிறது என்றோ, அல்லது இந்தப் பத்திகள் மனித இனத்திற்கு ஒரு செய்தியை அனுப்புகிறது என்றோ ஒருவர் கூறலாம்: தேவன் ஏற்கனவே மனித உலகிற்கு வந்துவிட்டார், தேவன் இன்னும் பெரிய கிரியையைத் தொடங்கப் போகிறார், தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தின் மத்தியில் இறங்கி விட்டது மற்றும் தேவன் ஏற்கனவே மகிமையைப் பெற்று, அவருடைய எண்ணிக்கைக்கு அடங்காத பகைஞரைத் தோற்கடித்துள்ளார். தேவனுடைய ஒவ்வொரு வெளிப்பாடும் ஒவ்வொரு மனிதனின் இருதயத்தையும் ஆட்கொள்ளும். தேவன் இன்னும் பல புதிய வார்த்தைகளைப் பேசுவதற்காக மனிதர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தேவன் பேசும்போது, அவர் மனிதனின் இருதயத்தை அதன் வேர்களிலேயே அசைக்கிறார். மேலும், அவர் மனிதனின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு உணர்ச்சியையும் நிர்வகித்துப் பராமரிக்கிறார். இதனால் மனிதகுலம் தேவனுடைய வார்த்தைகளை நம்பத் தொடங்குகிறது மற்றும் போற்றுகிறது…. இவ்வாறு, அறியாமலேயே ஏராளமான ஜனங்கள் அடிப்படையில் வேதாகமத்தை மறந்து விட்டார்கள். மேலும், பழமையாகக் கருதப்படும் பிரசங்கங்களையும் ஆவிக்குரிய நபர்களின் எழுத்துக்களையும் ஏற்பதில்லை. ஏனென்றால், அந்த எழுத்துக்களில் இந்த தேவனுடைய வெளிப்பாடுகளுக்கான எந்த அடிப்படையையும் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது இந்த வெளிப்பாடுகளுக்கான தேவனுடைய நோக்கத்தை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியிருக்க, ஆதிகாலத்திலிருந்து, தேவனை நம்புகிற எந்தவொரு நபரின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, அவர்கள் காண முடியாத, கேட்க முடியாத மற்றும் இதுவரை ஆவிக்குரிய தாசர்களால் சொல்லப்பட்ட எதையும் மிஞ்சியிருக்கும் இந்த வெளிப்பாடுகளானது தேவனுடைய சத்தமாகும் என்பதை மனிதர் ஒப்புக் கொள்வது எவ்வளவு அவசியமானதாக இருக்கும்? இந்த ஒவ்வொரு வெளிப்பாடாலும் தூண்டப்பட்ட மனிதர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வெளிச்சத்துக்குள், புதிய யுகத்தின் முன் தரவரிசைக்குள் அறியாமலேயே பிரவேசித்துள்ளனர். தேவனுடைய வார்த்தைகளால் தூண்டப்பட்ட, எதிர்பார்ப்பு நிறைந்த மனிதர்கள், தேவனுடைய வார்த்தைகளால் நேரில் வழிநடத்தப்படுவதன் இனிமையைச் சுவைத்தனர். இந்த விரைவான காலகட்டம் ஒவ்வொரு மனிதனும் நீடித்த நினைவோடு திரும்பிப் பார்க்கும் ஒரு காலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், இந்தக் காலகட்டத்தில் மனிதகுலம் அனுபவித்தவை பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வெளிச்சத்துக்கு மேலாக இல்லை, அல்லது மாத்திரைக்கு மேலாகப் பூசப்படும் இனிப்பைப் போன்றது என ஒருவர் அதனைக் கூறலாம். ஏனென்றால், இந்தக் கட்டத்தில் இருந்து, தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பிரகாசத்தில், மனிதர்கள் இன்னும் அறியாமலேயே தேவனுடைய வார்த்தைகளின் மற்றொரு கட்டத்திற்கு வழிநடத்தப்பட்டனர். இதுவே அந்தக் கிரியையின் முதல் படி மற்றும் ராஜ்யத்தின் யுகத்தில் வழங்கப்படும் தேவனுடைய வெளிப்பாடும் ஆகும்—ஊழியம் செய்பவர்களின் சோதனையாகும்.

ஊழியம் செய்பவர்களின் சோதனைக்கு முந்தைய வெளிப்பாடுகளானது பெரும்பாலும் அறிவுறுத்தல், புத்திமதி, கண்டனம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் வடிவத்தில் இருந்தன. மேலும், சில இடங்களில் அவை கிருபையின் யுகத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய முறையினைப் பயன்படுத்தி வெளிப்பட்டன—அதாவது மனிதன் தேவனிடம் நெருங்கி வருவதை எளிதாக்கும் பொருட்டு, அல்லது மனிதர்களுடனான தேவனுடைய உறவை நெருக்கமாக்கும் பொருட்டு, தேவனைப் பின்பற்றியவர்களுக்கு “என் புத்திரர்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு, மனிதனின் சுய எண்ணம், ஆணவம் மற்றும் பிற கேடான மனநிலைகளுக்கு தேவன் அளித்த நியாயத்தீர்ப்பு எதுவாக இருந்தாலும், “பிதாவாகிய தேவன்” என்ற வார்த்தைகளுக்கு விரோதப் போக்கைக் காட்டாமல், “பிதாவாகிய தேவன்” தம்முடைய “புத்திரர்களுக்கு” அளித்த வாக்குத்தத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்காமல், மனிதனானவன் “புத்திரர்” என்ற அந்தஸ்துடன் அதனைப் பெற்றான். இந்தக் காலகட்டத்தில், எல்லா மனிதர்களும் ஒரு குழந்தையைப் போல பிரச்சனைகளிலிருந்து இருந்து விடுபட்ட ஒரு ஜீவிதத்தை அனுபவித்தனர். இது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. அதாவது, அவர்கள் “இளமைப் பருவத்தில்” பிரவேசித்ததும், அவர் அவர்களுக்குத் நியாயத்தீர்ப்பளிக்கத் தொடங்குவார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவன் முறையாகத் தொடங்கவிருக்கும் மனித இனத்தை நியாயந்தீர்க்கும் கிரியைக்கு இது அடித்தளம் அமைத்தது. ஏனென்றால், இந்த மனுஷரூபமெடுத்தலில் தேவனுடைய கிரியையானது, முக்கியமாக முழு மனித இனத்தையும் நியாயந்தீர்ப்பதும், ஜெயங்கொள்வதும் ஆகும். மனிதன் தன் கால்களைத் தரையில் உறுதியாக நாட்டியவுடன், தேவன் தனது கிரியையின் வழிமுறையில் பிரவேசித்தார்—அதாவது அவர் மனிதனை நியாயந்தீர்க்கும் மற்றும் சிட்சிக்கும் கிரியையில் பிரவேசித்தார். வெளிப்படையாகவே, ஊழியம் செய்பவர்களின் சோதனைக்கு முன்னர் கூறப்பட்ட அனைத்து வெளிப்பாடுகளும் மாற்றத்தை அடைவதற்காகவே செய்யப்பட்டன. இதுவே அதன் உண்மையான நோக்கமன்றி வேறு எதுவும் இல்லை. தேவனுடைய வாஞ்சையுள்ள நோக்கமாக இருந்தது என்னவென்றால், அவர் விரைவில், ராஜ்யத்தின் யுகத்தில் அவரால் தனது கிரியையை முறையாகத் தொடங்க முடியும் என்பதே. இனிப்பு பூசப்பட்ட மாத்திரைகளால் உணவளிப்பதன் மூலம் மனிதனை தொடர்ந்து அறிவுறுத்த அவர் விரும்பவில்லை. மாறாக, ஒவ்வொரு மனிதனின் உண்மையான முகத்தையும் தனது நியாயாசனத்திற்கு முன்பாகக் காண அவர் வாஞ்சையாக இருந்தார். மேலும், அவருடைய கிருபையை இழந்தபின், முழு மனிதகுலமும் அவரிடம் காட்டும் உண்மையான மனப்பான்மையைக் காண அவர் இன்னும் வாஞ்சையாக இருந்தார். செயல்முறையை அல்ல, முடிவுகளைப் பார்க்க மட்டுமே அவர் விரும்பினார். ஆனால், அந்த நேரத்தில் தேவனுடைய வாஞ்சையுள்ள நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால், மனித இருதயமானது அதன் இலக்கு மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மட்டுமே அக்கறை கொண்டிருந்தது. தேவனுடைய நியாயத்தீர்ப்பானது முழு மனித இனத்தின் மீதும் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் மனிதகுலம் தங்களின் இயல்பான ஜீவிதத்தை ஜீவிக்கத் தொடங்கியபோது தான் மனிதகுலத்தின் மீதான தேவனுடைய மனநிலை மாறியது.

1991 ஆம் ஆண்டு ஒரு அசாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டை “பொற்காலம்” என்று அழைப்போம். தேவன் ராஜ்யத்தின் யுகத்தினுடைய புதிய கிரியையைத் தொடங்கினார். மேலும், மனித இனம் முழுவதிலும் தம்முடைய வெளிப்பாட்டை வழங்கினார். அதே சமயம், மனிதகுலம் அதுவரை இல்லாத வகையில் அரவணைப்பை அனுபவித்தது. மேலும், அதுவரை இல்லாத வகையில் மனிதனுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து வரும் வலியை அனுபவித்தது. மனித இனம் அதுவரை அறியாத ஒரு இனிமையை ருசித்து, அதுவரை அறியாத நியாயத்தீர்ப்பு மற்றும் கைவிடப்படுதலை, தேவனைப் பெற்றது போலவும், மீண்டும் தேவனை இழந்ததைப் போலவும் மனித இனம் உணர்ந்தது. உடமையில் துன்பம் மற்றும் தனிமையில் துன்பம் ஆகிய இந்த உணர்வுகள் தனிப்பட்ட முறையில் அவற்றை அனுபவித்தவர்களால் மட்டுமே அறியப்படுகின்றன. அவற்றை மனிதனுக்கு விவரிக்கும் திறனோ வழிமுறையோ இல்லை. இந்த வகையான காயங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புலனற்ற அனுபவமாக மற்றும் சொத்தாக தேவன் அளித்தவை ஆகும். இந்த ஆண்டில் தேவன் கூறிய வெளிப்பாடுகளின் உள்ளடக்கம் உண்மையில் இரண்டு முக்கியப் பிரிவுகளாக அமைகிறது: முதலாவது, தேவன் மனிதர்களின் உலகில் இறங்கினார், மனிதர்களைத் தனது சிங்காசனத்திற்கு முன்பாக விருந்தினர்களாக வருமாறு அழைக்கிறார்; இரண்டாவதாக, புசித்துக் குடித்து தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் மனிதகுலம், தேவனால் ஊழியம் செய்பவர்களாகப் பயன்படுத்தப்பட்டது. நிச்சயமாக, முதல் பகுதி மனிதகுலத்தின் அன்பான மற்றும் மிகவும் வாஞ்சையுள்ள விருப்பம் என்று சொல்லாமலே புரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய எல்லாவற்றையும் அனுபவிப்பதை மனிதர்கள் நீண்ட காலமாக பழக்கப்படுத்தியிருப்பதால், தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் பொருளாக இது அமைகிறது. இதனால்தான், தேவன் தம்முடைய வெளிப்பாடுகளை உரைக்கத் தொடங்கியவுடன், மனிதகுலம் அனைத்தும் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும், அவர்களுக்கு வெவ்வேறு வெகுமதிகளை வழங்குவதற்காக அங்கேயே காத்திருக்கவும் தேவன் தயாராக இருந்தார். இந்தச் சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தங்களது மனநிலையை மாற்றுவதன் மூலமும், தேவனைத் திருப்திப்படுத்த முற்படுவதன் மூலமும், தேவனுடைய சித்தத்தின் மீது அக்கறை காட்டுவதன் மூலமும் மற்றும் பலவற்றின் மூலமும் சரியான விலைக்கிரயத்தை செலுத்தவில்லை. ஒரு மேலோட்டமான பார்வையில், மனிதர்கள் தங்களை தேவனுக்காகச் செலவழித்து உழைக்கும்போது, அது தொடர்ந்து சலசலப்பதாகத் தோன்றியது. உண்மையில், அந்த நேரத்தில், அவர்களின் உள்ளான இருதயங்களின் இரகசிய இடைவெளிகளில், ஆசீர்வாதங்களைப் பெற அல்லது ராஜாக்களாக ஆட்சி செய்ய அவர்கள் செயல்படுத்த வேண்டிய அடுத்த கட்டத்தை அவர்கள் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். மனித இருதயம் தேவனை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, அது தேவனை கணக்கிடுகிறது என்று ஒருவர் சொல்லலாம். இந்த நிலையில் உள்ள மனிதகுலமானது தேவனுடைய ஆழ்ந்த வெறுப்பு மற்றும் கசப்பைச் சந்திக்கிறது. தேவனுடைய மனநிலையானது எந்த மனிதனும் அவரை ஏமாற்றுவதையோ அல்லது பயன்படுத்துவதையோ பொறுத்துக் கொள்ளாது. ஆனால் தேவனுடைய ஞானம் எந்த மனிதனுக்கும் எட்டாததாக இருக்கிறது. இந்தத் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதன் மத்தியில் தான் அவர் தனது வெளிப்பாடுகளின் முதல் பகுதியைப் பேசினார். தேவன் எவ்வளவு துன்பங்களைத் தாங்கினார் என்பதையும், இந்த நேரத்தில் அவர் எவ்வளவு அக்கறையையும் சிந்தனையையும் செலவிட்டார் என்பதையும், எந்த மனிதனும் கற்பனை செய்ய இயலாது. தன்னுடைய நிலை மற்றும் லாபத்தை எதிர்கொள்ளும் போது, மனிதன் காட்டும் அனைத்து விதமான அசுத்தங்களையும் அம்பலப்படுத்துவதும், மனிதனின் பேராசை மற்றும் அவமதிப்பை அம்பலப்படுத்துவதும் இந்த வெளிப்பாடுகளின் முதல் பகுதியின் நோக்கம் ஆகும். தேவன் பேசும்போது, தனது வார்த்தைகளை அன்பான தாய் போல நேர்மையாக மற்றும் வாஞ்சையுள்ள தொனியில் பயன்படுத்தினாலும், அவருடைய உள்ளத்தில் உள்ள கோபமானது அவருடைய எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதைப் போன்றும், நண்பகல் சூரியனைப் போன்றும் எரிகிறது. மனித இனத்தின் இயல்பான சாயல் இல்லாத ஒரு ஜனக்கூட்டத்துடன் எந்தச் சூழ்நிலையிலும் தேவன் பேச விரும்பவில்லை. எனவே, அவர் பேசும் போதெல்லாம், அவர் தனது இருதயத்திற்குள் இருக்கும் கோபத்தை அடக்குகிறார். அதே நேரத்தில், வெளிப்பாட்டைக் கொடுக்க தன்னைத் தானே கட்டுப்படுத்துகிறார். மேலும் என்னவென்றால், ஒரு சாதாரண மனிதத்தன்மை இல்லாத, பகுத்தறிவு இல்லாத, தீவிரவாதம் நிறைந்த, பேராசையை தனது இயல்பாகக் கொண்ட, தேவனுக்கு எதிராகக் கீழ்ப்படியாத மற்றும் தான் அழியும் வரையில் தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணும் மனித இனத்திடம் அவர் பேசுகிறார். மனித இனம் எந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும், மனித இனம் குறித்த தேவனுடைய வெறுப்பு மற்றும் வெறுப்பின் அளவையும் எளிதில் கற்பனை செய்யலாம். மனித இனம் கற்பனை செய்வதற்கு கடினமானது என்னவென்றால், அவர்கள் தேவனுக்கு ஏற்படுத்திய காயம் ஆகும்—இது வார்த்தைகளில் விவரிக்க இயலாது. எனினும், தேவனுடைய இருதயம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும் மனித இனம் எவ்வளவு நியாயமற்றது மற்றும் சரிசெய்ய முடியாதது என்பதையும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பின்னணிக்கு அது நிச்சயமாக எதிரானது ஆகும். ஒவ்வொரு மனிதனும், சிறிதளவிலும் அவமானம் அல்லது தடுமாற்றம் இல்லாமல், மனிதனுக்காக அவர் ஆயத்தப்படுத்திய எல்லா வெகுமதிகளையும் எடுத்துக் கொள்ள, தேவனுடைய புத்திரர்களாக அவர்களுக்கு உரிமை உண்டு என எண்ணி, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, அனைவரும் தாங்கள் அதை இழந்துவிடக் கூடாது என்ற ஆழ்ந்த பயத்துடன் ஒருவருக்கொருவர் போட்டியிட்டார்கள், யாரும் பின்வாங்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் ஜனங்கள் தேவனுடைய பார்வையில் எந்த மாதிரியான நிலையை வகித்தார்கள் என்பதை நீ இப்போது அறிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு இனம் தேவனுடைய வெகுமதிகளை எவ்வாறு அடைய முடியும்? ஆனால் மனிதன் தேவனிடமிருந்து பெறுவது எல்லா நேரத்திலும் மிக அருமையான பொக்கிஷம் ஆகும். மாறாக, மனிதனிடமிருந்து தேவன் பெறுவது மிகுந்த வேதனையாகும். தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியிலான உறவின் தொடக்கத்திலிருந்தே, மனிதன் இதைத்தான் தேவனிடமிருந்து எப்போதும் பெற்றிருக்கிறான் மற்றும் இதைத்தான் அவன் எப்போதும் தேவனுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறான்.

தேவன் வியாகுலத்தினால் எரிந்த அளவுக்கு, மிகவும் சீர்கெட்ட இந்த மனித இனத்தைக் கண்டபோது, அதைச் சுத்திகரிக்கும் பொருட்டு அதை அக்கினிக் கடலில் வீசுவதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லாதிருந்தது. இது தேவனுடைய வெளிப்பாடுகளின் இரண்டாவது பகுதியாகும். இதில் தேவன் மனிதகுலத்தைத் தனது ஊழியம் செய்பவர்களாகப் பயன்படுத்தினார். இந்தப் பகுதியில், தேவன் மென்மையானவர் முதல் கடுமையானவர் வரை, சிலர் முதல் பலர் வரை, வழிமுறை மற்றும் தூரத்தின் அடிப்படையில், மனிதனின் கேடான தன்மையை அம்பலப்படுத்த “தேவனுடையவர்” என்ற நிலையை தூண்டிலாகப் பயன்படுத்தினார். அதே நேரத்தில், வெவ்வேறு வகையான[அ] ஊழியம் செய்பவர்கள், தேவனுடைய ஜனங்கள், மற்றும் தேவனுடைய புத்திரர்களை முன்வைத்து மனிதகுலத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். தேவன் முன்னறிவித்ததைப் போலவே, யாரும் தேவனுக்கு ஊழியம் செய்பவராக மாறத் தேர்வு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அனைவரும் தேவனுடையவராக மாற முயன்றனர். இந்தக் காலகட்டத்தில், தேவனுடைய தீவிரமான பேச்சு என்பது மனிதர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத இன்னும் கேள்விப்படாத ஒன்றாகும். ஆயினும்கூட, அந்தஸ்தைப் பற்றி அதிக அக்கறை கொண்டு, அதற்கும் மேலாக, ஆசீர்வாதங்களைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபடும் மனிதர்களுக்கு, தேவனுடைய பேசும் தன்மை மற்றும் அவர் பேசும் முறையைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. மாறாக, அவர்களுடைய சொந்த அந்தஸ்தைப் பற்றியும், எதிர்காலம் அவர்களுக்காக வைத்திருப்பவற்றைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கின்றனர். இவ்வாறு மனிதர்கள், அவர்கள் அறியாதவண்ணம், தேவனுடைய வார்த்தைகளால் அவர் அவர்களுக்காக வகுத்த “வலைக்குள்” கொண்டுவரப்படுகிறார்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும், எதிர்காலத்தின் கவர்ச்சி மற்றும் அவர்களின் விதியால் மயக்கமடைந்து, மனிதர்கள் தங்களை தேவனுடைய புத்திரராக மாற்றுவதற்கு அவர்கள் போதுமானவர்கள் அல்ல என்பதை அறிந்திருந்தனர். ஆனாலும், அவருடைய ஊழியம் செய்பவர்களாக மாறத் தயங்கினர். இந்த முரண்பாடான மனநிலைகளுக்கு மத்தியில் சிதைந்த அவர்கள், மனிதகுலத்திற்கு தேவன் அளித்த முன்னுதாரணம் இல்லாத நியாயத்தீர்ப்பையும் சிட்சிப்பையும் அவர்கள் அறியாமலேயே ஏற்றுக் கொண்டனர். இயற்கையாகவே, இந்த நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை மனிதகுலம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆயினும் கூட, விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ முடிவிலே அவர்கள் பலனளிக்க, மனிதர்களை இந்தக் கேடு நிறைந்த இனத்திலிருந்து சாந்தமாகச் சமர்ப்பிக்க வைக்க தேவனுக்கு மட்டுமே ஞானமும் வல்லமையும் உள்ளது. மனிதகுலத்திற்கு வேறு வழிகள் இல்லை. தேவனுக்கு மட்டுமே இறுதியான தீர்ப்பை சொல்லும் உரிமை உள்ளது. மேலும், தேவன் மட்டுமே இதுபோன்ற ஒரு முறையைப் பயன்படுத்தி மனிதனுக்கு சத்தியத்தையும் ஜீவனையும் வழங்கவும் அவனுக்கு வழிநடத்துதலைக் காட்டவும் முடியும். இந்த வழிமுறையானது மனிதனின் மீதான தவிர்க்க முடியாத தேவனுடைய கிரியையாகும். மேலும், இது சந்தேகத்திற்கோ அல்லது சர்ச்சைக்கோ அப்பாற்பட்டதாகும். இது மனிதனின் இன்றியமையாத தேவை ஆகும். இந்த உண்மையை மனிதகுலத்திற்கு உணர்த்துவதற்காக தேவன் இதுபோன்ற ஒரு முறையில் பேசுகிறார், செயல்படுகிறார்: மனிதகுலத்தை இரட்சிக்கவே தேவன் அவ்வாறு செய்கிறார். அவருடைய அன்பு மற்றும் இரக்கம் மற்றும் அவரது ஆளுகையின் பொருட்டு; தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதில், மனித இனம் அவ்வாறு செய்கிறது. ஏனென்றால், தேவனால் தனிப்பட்ட முறையில் மனிதனிடம் பேசமுடியாத நிலைக்கு மனிதன் வீழ்ந்துள்ளான். மனிதன் தேவனுடைய இரட்சிப்பைப் பெறும்போது, அது மிகப் பெரிய கிருபையாகும். அது ஒரு விசேஷித்த தயவாகும். அதாவது, தேவன் நேரில் தனது வெளிப்பாடுகளை உரைக்காதிருந்தால், மனித இனத்தின் தலைவிதி அழிந்திருக்கும். தேவன் மனித இனத்தை அருவருக்கும் அதே நேரத்தில், மனிதனின் இரட்சிப்புக்கு எந்த விலைக்கிரயத்தையும் கொடுக்க அவர் இன்னும் தயாராக இருக்கிறார். இதற்கிடையில், மனிதன் தேவன் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும், அனைவரையும் தேவனுக்கு எவ்வாறு பரிசுத்தப்படுத்துகிறான் என்பதையும் அவன் பெருமையாகக் கூறும் அதே நேரத்தில், அவன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறான், எல்லா வகையான கிருபையையும் தேவனிடமிருந்து பறிக்கிறான், அதே சமயம் தேவனைத் துன்புறுத்துகிறான், மற்றும் சொல்ல முடியாத வேதனையை அவர் இருதயத்தில் செலுத்துகிறான். தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியிலான தன்னலமற்ற தன்மை மற்றும் சுயநலத்தின் கூர்மையான வேறுபாடு இதுதான்!

கிரியை செய்வதிலும் பேசுவதிலும், எந்தவொரு குறிப்பிட்ட முறையையும் பின்பற்ற தேவன் தடைசெய்யப்படவில்லை. ஆனால் முடிவுகளை அடைவது அவருடைய குறிக்கோளாக அமைகிறது. இந்தக் காரணத்திற்காக, தேவன் தனது வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியில், தனது சொந்த அடையாளத்தைத் தெளிவாகக் காட்டாமல், “கடைசி நாட்களின் கிறிஸ்து”, “பிரபஞ்சத்தின் அதிபதி” போன்ற சில வெளிப்பாடுகளை மட்டுமே வெளிப்படுத்தினார். இது எந்த வகையிலும் கிறிஸ்துவின் ஊழியத்தையோ அல்லது தேவனைப் பற்றிய மனிதகுலத்தின் அறிவையோ பாதிக்காது. குறிப்பாக, அந்த ஆதி காலத்தில் மனிதகுலம் “கிறிஸ்து” மற்றும் “மனுஷரூபமெடுத்தல்” போன்ற கருத்துக்களை முற்றிலும் அறியாததால், அவருடைய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த ஒரு “சிறப்புச் செயல்பாடாக”, தேவன் தன்னை ஒரு நபராகத் தாழ்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. இது தேவனுடைய சிரத்தை மிகுந்த அக்கறை மற்றும் சிந்தனையாக இருந்தது. ஏனென்றால், அந்த நேரத்தில் ஜனங்களால் இந்த வகைப் பேச்சை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். தேவன் எந்த விதமான வெளிப்படுத்தலைப் பயன்படுத்தினாலும், அவருடைய கிரியையின் முடிவுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், தேவன் செய்யும் எல்லாவற்றிலும் மனிதன் மாறுவதற்கும், தேவனுடைய இரட்சிப்பை அடைய மனிதனுக்கு உதவுவதற்கும் தேவன் நோக்கமாய் இருக்கிறார். தேவன் என்ன செய்தாலும், அவர் எப்போதும் மனிதனுடைய தேவைகளை மனதில் வைத்திருப்பார். தேவனுடைய கிரியை மற்றும் பேசுதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இதுதான். மனிதகுலத்தின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வதில் தேவன் மிகவும் கவனத்துடன் இருக்கிறார். அவர் செய்யும் எல்லாவற்றிலும் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறார் என்பதை என்னால் சொல்ல முடியும்: தேவன் தனக்கு சாட்சியம் அளிக்கவில்லை என்றால், சிருஷ்க்கப்பட்ட மனிதர்களின் இனத்தில் தேவனை அடையாளம் காணும் திறன் கொண்டவர் அல்லது தேவனுக்கு சாட்சியம் அளிக்க எழுந்து நிற்கும் திறன் கொண்ட ஒருவர் இருக்க மாட்டார். தேவன் தனது கிரியையில் “ஒரு சிறப்புக் கிரியையைக் கொண்ட ஒரு நபரை” வெளிப்பாட்டின் வடிவமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், தேவனை தேவனாகக் கருதக்கூடிய மனிதர், ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்—இது மனிதகுலத்தின் வருத்தமாகும். அதாவது, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் இனத்தில் தேவனை அறிந்து கொள்ளக் கூடியவர்கள் யாரும் இல்லை. தேவனை நேசிக்கவும், தேவனைப் பற்றி அக்கறைக் கொள்ளவும், தேவனிடம் நெருங்கி வரவும் யாரும் இல்லை. மனிதனின் விசுவாசம், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளது. ஒரு சிறப்புக் கிரியையைக் கொண்ட நபர் என்னும் தேவனுடைய அடையாளமானது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளது: சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் இனத்தில் ஒருவராக தேவனைக் கருதுவது மனிதகுலத்திற்கு எளிதானதாகும். தேவன் வெளிப்படையாகத் தோன்றும்போது அல்லது கிரியை செய்ம்போது, அவர் இன்னும் மனிதனால் நிராகரிக்கப்படுகிறார், அவனால் மறக்கப்படுகிறார் என்பது மனிதகுலம் தேவனுக்கு இழைக்கும் மிகப் பெரிய வேதனையையும் அவமானத்தையும் துல்லியமாகக் காட்டுகிறது. மனித இனத்தை இரட்சிப்பதற்காக தேவன் மிகப்பெரிய அவமானத்தைத் தாங்குகிறார். எல்லாவற்றையும் கொடுப்பதில், அவருடைய நோக்கமானது மனிதகுலத்தை இரட்சிப்பதும், மனிதகுலத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதும் ஆகும். இவை அனைத்திற்கும் தேவன் செலுத்திய விலைக்கிரயம் மனசாட்சி உள்ள அனைவரும் பாராட்டக்கூடிய ஒன்றாகும். மனித இனம் தேவனுடைய வெளிப்பாடுகளையும் கிரியைகளையும் பெற்றுள்ளது. மேலும், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், இதைக் கேட்பது யாருக்கும் நடக்கவில்லை: தேவன் மனிதகுலத்திடமிருந்து எதைப் பெற்றார்? தேவனுடைய ஒவ்வொரு சொல்லிலிருந்தும், மனிதகுலம் சத்தியத்தைப் பெற்றுள்ளது, மாறுவதில் வெற்றி பெற்றுள்ளது, ஜீவிதத்தில் திசையைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தேவன் பெற்றிருப்பது, தேவனுக்கு தாங்கள் கடன்பாட்டை வெளிப்படுத்த மனிதகுலம் பயன்படுத்தும் வார்த்தைகளும், புகழ்ச்சியின் சில தளர்வான முணுமுணுப்புகளும் அன்றி வேறு ஒன்றும் இல்லை. நிச்சயமாக, மனிதனிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் கூலி இது இல்லை, அல்லவா?

தேவனுடைய பல வெளிப்பாடுகள் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளால், ஆதியில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் புரிதலுக்குள் இன்னும் இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னேறவில்லை—இது உண்மையிலேயே துன்பமான ஒன்றாகும். “ஆதிகாலத்தின் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்னும் இந்தப் பகுதி மனித இருதயத்தைத் திறப்பதற்கான ஒரு திறவுகோல் மட்டுமே. இங்கே இடைநிறுத்துவது என்பது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தடை போடுவதாகும். தேவனுடைய வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியைப் பேசுவதில், தேவனுடைய நோக்கமாக இருப்பது கிருபையின் யுகத்திலிருந்து மனிதகுலத்தை ராஜ்யத்தின் யுகத்திற்குக் கொண்டு வருவது மட்டுமேயாகும். அவருடைய வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியில் மனிதகுலம் நின்றுவிடவோ அல்லது அவரது வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளவோ அவர் விரும்பவில்லை. இல்லையெனில், தேவனுடைய எதிர்கால வெளிப்பாடுகள் அவசியமானவையாகவோ அர்த்தமுள்ளவையாகவோ இருக்காது. தேவன் தனது வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியில் மனிதன் அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவற்றில், இன்னும் பிரவேசிக்க முடியாதவராக ஒருவர் இருந்தால், அந்த நபரின் பிரவேசம் அறியப்படாததாகவே இருக்கும். தேவனுடைய வெளிப்பாடுகளின் இந்தப் பகுதியானது, ராஜ்யத்தின் யுகத்தில் தேவன் மனிதனிடம் எதிர்பார்க்கும் மிக அடிப்படையான தேவையாகும் மற்றும் மனிதகுலம் சரியான பாதையில் பிரவேசிப்பதற்கான ஒரே வழி இதுதான். நீ எதையும் புரிந்து கொள்ளாத ஒரு நபராக இருந்தால், இந்தப் பகுதியில் உள்ள வெளிப்பாடுகளைப் படித்ததன் மூலம் நீ சிறப்பானத் தொடக்கத்தைப் பெற்றிருப்பாய்!

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “வெவ்வேறு வகையான” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: முகவுரை

அடுத்த: அத்தியாயம் 1

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக