அத்தியாயம் 72

உங்களுக்குள் ஏதேனும் குறைபாடு அல்லது பலவீனம் இருப்பதை நீங்கள் கண்டுபிடித்தால், அதிலிருந்து விடுபட நீங்கள் உடனடியாக என்னைச் சார்ந்து கொள்ள வேண்டும். தாமதிக்காதே; இல்லையெனில், பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன்னிடமிருந்து வெகு தூரமாயிருக்கும், மேலும் நீ மிகவும் பின்தங்கிவிடுவாய். நான் உங்களிடம் ஒப்புவித்த வேலையை அடிக்கடி கிட்டிச் சேர்ந்து, ஜெபித்து, என் பிரசன்னத்தில் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். நீங்கள் இவற்றைச் செய்யாவிட்டால், எந்த முடிவும் எட்டப்படாது, மேலும் அனைத்தும் வீணாகச் செய்யப்பட்டிருக்கும். இன்று எனது கிரியை கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லை; நான் நேசிக்கும் ஜனங்களின் வாழ்க்கையின் அளவு முன்பு இருந்ததை விட மிகவும் வித்தியாசமானது. அவர்கள் அனைவருக்கும் எனது வார்த்தைகள் பற்றிய தெளிவானப் புரிதலும், அத்துடன் அவற்றுக்குள் ஆழ்ந்த நுண்ணறிவும் உள்ளது. இது எனது கிரியையின் அதிசயத்தைப் பிரதிபலிக்க அதிகத் திறன் கொண்ட மிகவும் வெளிப்படையான அம்சமாகும். எனது கிரியையின் வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்தக் கிரியையானது நிச்சயமாக கடந்த காலத்திலிருந்து வேறுபட்டது. ஜனங்களுக்குக் கற்பனை செய்வது கடினம், மேலும், அவர்களால் ஆராய்ந்து முடியாது. இனி உங்களுக்கு எதுவும் இரகசியமாக இருக்காது; மாறாக, அனைத்தும் அறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது வெளிப்படையானது, அது வெளியிடப்பட்டது, மேலும் என்னவென்றால், அது முற்றிலும் இலவசமானது. நான் நேசிப்பவர்கள் நிச்சயமாக எந்த நபராலும், நிகழ்வாலும் அல்லது பொருளாலும் அல்லது எந்த இடத்தாலும் அல்லது நிலபரப்பாலும் கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள்; அவர்கள் எல்லாச் சூழல்களாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டைத் தாண்டிச் சென்று மாம்சத்திலிருந்து எழும்புவார்கள். இதுதான் எனது மகத்தான கிரியையின் நிறைவு. அதன்பிறகு செய்ய எதுவும் இருக்காது; அது முற்றிலுமாக முடிவடையும்.

பெரிய கிரியையின் நிறைவானது முதற்பேறான குமாரர்கள் அனைவருக்கும் மற்றும் நான் நேசிக்கும் ஜனங்கள் அனைவருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிமேல், நீங்கள் எந்த நபராலும், நிகழ்வாலும் அல்லது பொருளாலும் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள். நீங்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வீர்கள், முழுப் பிரபஞ்சத்தையும் கடந்து, உங்கள் கால்தடங்களை எல்லா இடங்களிலும் பதிப்பீர்கள். இதை வெகு தூரமாகக் கருத வேண்டாம்; இது, அதிசீக்கிரத்தில், உங்கள் கண் முன்னே நிஜமாகப் போகும் ஒன்று. நான் செய்யும் காரியம் உங்களிடம் ஒப்புவிக்கப்படும், மற்றும் நான் கால் மிதிக்கும் இடங்களிலெல்லாம் உங்கள் கால்தடங்கள் இருக்கும். மேலும், நாம் என்பதற்கான உண்மையான அர்த்தம் இது தான்—நீங்களும் நானும்—இணைந்து இராஜாக்களாக ஆளுகை செய்வோம். நான் வழங்கும் வெளிப்பாடுகள் ஏன் கொஞ்சமும் மறைக்கப்படாமல் இன்னும் தெளிவாகவும், அதிகமதிகமாக வெளிப்படையாகவும் வளர்ந்து வருகின்றன என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? நான் ஏன் மிக உயர்ந்த சாட்சியாக இருந்து, இந்த எல்லா இரகசியங்களையும், இந்த எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொன்னேன்? காரணம் என்னவென்றால் மேற்கூறிய கிரியையே தவிர வேறொன்றுமில்லை. இருப்பினும், உங்கள் கிரியையின் வளர்ச்சி, தற்போது, மிகவும் மெதுவாக உள்ளது. உங்களால் எனது வேகத்தைத் தொடர முடியவில்லை, உங்களால் என்னுடன் நன்றாக ஒத்துழைக்க முடியாது, இப்போது, நீங்கள் எனது சித்தத்தை அடையத் திறனற்றவர்களாக இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு இன்னும் தீவிரமாக பயிற்சி அளித்து. நான் உங்களைப் பரிபூரணமாக்குவதைத் தீவிரப்படுத்த வேண்டும், இதன் மூலம் உங்களால் அதிசீக்கிரத்தில் என் இருதயத்திற்குத் திருப்தியைக் கொண்டு வர முடியும்.

தற்போது, மிகவும் வெளிப்படையான விஷயம் என்னவென்றால், முதற்பேறான குமாரர்களின் குழு முழுமையாக உருவாகியுள்ளது. அனைத்தும் என்னால் அங்கீகரிக்கப்பட்டன, மேலும் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதலே என்னாலே முன்குறிக்கப்பட்டும் தெரிந்துகொள்ளவும்பட்டன. ஒவ்வொன்றும் எனது சொந்தக் கரங்களால் விருத்தியாகின. இதில் மனிதப் பரிசீலனைக்கு இடமில்லை. இது உன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. பெருமை கொள்ளாதே; இது முற்றிலும் எனது இரக்கமும் மனதுருக்கமுமே. எனது பார்வையில், எல்லாம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் கண்கள் மிகவும் தெளிவற்றதாகிவிட்டது தான் காரியம், இப்போதும் கூட, எனது கிரியைகளின் அற்புதத்தைப் பற்றிய தெளிவான பார்வையை உங்களால் பெற முடியவில்லை. உங்களில் எவருக்கும் எனது சர்வவல்லமை, எனது ஞானம், எனது ஒவ்வொரு செயல் அல்லது எனது ஒவ்வொரு வார்த்தையும் கிரியையும் பற்றிய முற்றிலும் தெளிவான அல்லது உண்மையான புரிதல் இல்லை. இந்தக் காரணத்திற்காக, நான் தெளிவாகப் பேசுகிறேன். எனக்குப் பிரியமானவர்களே, எனது குமாரன்களுக்காக, நான் முழு கிரயத்தைச் செலுத்தவும், பிரயாசப்படவும், என்னையே ஒப்புக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மூலம் நீ என்னை அறிந்திருக்கிறாயா? நான் இன்னும் தெளிவாக அவற்றை உனக்குச் சொல்ல வேண்டுமா? இனியும் ஒழுக்கம் கெட்டு இருக்காதே; என் இருதயத்தைக் கருத்தில்கொள்! இப்போது இவ்வளவு பெரிய இரகசியம் உங்களுக்குச் சொல்லப்பட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டும்? உங்களிடம் இன்னும் ஏதேனும் முறையீடுகள் உள்ளதா? நீங்கள் விலைக்கிரயம் செலுத்தாமலும் கடினமாக உழைக்காமலும் இருந்தால், நான் எடுத்த அனைத்து கடுமையான பிரயாசத்துக்கும் நீங்கள் தகுதியுடையவர்களாக இருக்க முடியுமா?

இன்றைய ஜனங்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் தயை பாராட்டாதவர்கள் விரும்பினாலும் அவர்களுக்குள் என்மீது அன்பு தோன்ற முடியாது. நான் முன்குறித்து தெரிந்துகொண்ட ஜனங்கள், அவர்கள் விரும்பினாலும் எவ்விதத்திலும் விலகி ஓட முடியாது; அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களால் என் கரத்திலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடைய மகத்துவம் இப்படிப்பட்டது, இன்னும் அதிகமாக, என்னுடைய நியாயத்தீர்ப்பு இப்படிப்பட்டது. எல்லா ஜனங்களும் எனது திட்டம் மற்றும் எனது சித்தத்தின்படி தங்கள் காரியங்களைச் செய்ய வேண்டும். இந்த நாளில் இருந்து, முற்றிலும் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து எனது கரத்துக்கு வருகிறது. அனைத்தும் என்னால் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஜனங்கள் சிறிய அளவில் பங்கேற்றால், அவர்களை நான் சும்மா விடமாட்டேன். இன்று முதல்—எல்லாவற்றையும் சிருஷ்டித்த, மனுக்குலத்திற்கு மத்தியில் வந்து அவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு நிந்திக்கப்பட்டு, மற்றும் எல்லாவற்றையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் ஒரே மெய்யான தேவன்; ராஜ்யத்திற்குப் பொறுப்பான இராஜா; பிரபஞ்சத்தையே நிர்வகிக்கும் தேவன்; மேலும், மனுக்குலத்தின் ஜீவனையும் மரணத்தையும் கட்டுப்படுத்தும் தேவன் மற்றும் பாதாளத்தின் திறவுகோலை உடையவர் என்று எல்லா ஜனங்களுக்கும் என்னை அறிந்து கொள்ளத் தொடங்க அனுமதிப்பேன். எல்லா மனிதர்களும் (பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள், அவர்களுக்குள் ஆவி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் முட்டாள்களோ இல்லையோ அல்லது குறைபாடுகள் உள்ளவர்களோ, எவராக இருந்தாலும்) என்னை அறிந்து கொள்ள அனுமதிப்பேன். இந்த வேலையில் இருந்து யாருக்கும் விலக்கு கிடையாது; இது மிகக் கடுமையான வேலை, நான் நன்றாக ஆயத்தமாக்கிய வேலை, மேற்கொள்ளப்படும் ஒன்று, இப்போதே தொடங்கும் வேலையாகும். நான் சொல்லுவது செய்து முடிக்கப்படும். உனது ஆவிக்குரியக் கண்களைத் திறந்து, உன் தனிப்பட்டக் கருத்துக்களை விட்டுவிட்டு, பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் ஒரே மெய்யான தேவன் நான் தான் என்பதை அடையாளம் கண்டு கொள்! நான் யாருக்கும் மறைவாக இல்லை, மேலும் எனது ஆட்சிமுறை ஆணைகளை அனைவர் மீதும் செயல்படுத்துகிறேன்.

உங்கள் சொந்த விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வையுங்கள். என்னிடமிருந்து நீங்கள் பெறுகின்ற விஷயங்கள் அதிக மதிப்புள்ளவை, மற்றும் அதிக விசேஷமானவை அல்லவா? அவர்களுக்கும் உன்னிடம் இருக்கும் தேவையற்றவைகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லையா? தாமதிக்காமல் தேவையற்ற அனைத்தையும் தூக்கி எறியுங்கள்! நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்களா அல்லது துரதிர்ஷ்டத்தைச் சந்திப்பீர்களா என்பது இப்போது தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான தருணம்; இது மிகவும் முக்கியமான தருணமும் கூட. உன்னால் இதை உண்மையிலேயே பார்க்க முடிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 71

அடுத்த: அத்தியாயம் 73

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக