பிற்சேர்க்கை: அத்தியாயம் 1

நான் உங்களிடம் செய்யும்படி கேட்பது, நான் பேசும் தெளிவற்ற மற்றும் வெற்றுக் கோட்பாட்டையும் அல்ல, அது மனுஷனின் மூளையால் கற்பனை செய்ய முடியாததும், மனுஷனின் மாம்சத்தால் அடைய முடியாததும் அல்ல. என் வீட்டிற்குள் யாரால் முழு விசுவாசத்துடன் இருக்க முடியும்? என் ராஜ்யத்திற்குள் யாரால் தங்களுக்குரிய அனைத்தையும் கொடுக்க முடியும்? என் சித்தத்தின் வெளிப்படுத்துதலுக்காக இல்லை என்றாலும், நீங்கள் என் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே உண்மையிலேயே கோருவீர்களா? யாரும் என் இருதயத்தை ஒருபோதும் புரிந்து கொண்டதில்லை, என் சித்தத்தை யாரும் ஒருபோதும் உணர்ந்துகொண்டதுமில்லை. எப்போதாவது என் முகத்தைப் பார்த்திருந்தவன் அல்லது என் குரலைக் கேட்டிருந்தவன் யார்? பேதுருவா? அல்லது பவுலா? அல்லது யோவானா? அல்லது யாக்கோபா? என்னால் உடுத்தப்பட்டு, அல்லது என்னால் ஆட்கொள்ளப்பட்டு, அல்லது என்னால் பயன்படுத்தப்பட்டு இருந்தவன் யார்? நான் முதன்முதலாக மாம்சமாக மாறியது தெய்வீகத்திற்குள்ளேயே நடந்தாலும், நான் எனக்கு உடுத்திய மாம்சமானது மனுஷனின் துன்பங்களை அறியாதிருந்தது, ஏனென்றால், நான் ஒரு வடிவத்தில் மனுவுருவாகவில்லை, எனவே அந்த மாம்சம் என் சித்தத்தை முழுமையாகச் செய்தது என்று சொல்ல முடியாது. சாதாரண மனிதத்தன்மையுள்ள ஒரு நபரிலிருந்து என் தெய்வீகத்தன்மையானது, இடையூறோ அல்லது தடையோ இல்லாமல், நான் செய்வது போல் செய்யும் போதும் மற்றும் நான் பேசுவது போல் பேசும் போதும் மட்டுமே, என் சித்தம் மாம்சத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். எனது சாதாரண மனிதத்தன்மை எனது தெய்வீகத்தன்மையைப் பாதுகாக்கும் திறன் கொண்டதால், தாழ்மையாகவும் மறைவாகவும் இருக்க வேண்டிய எனது நோக்கம் அடையப்படுகிறது. மாம்சத்தில் கிரியை செய்யும் கட்டத்தில், தெய்வீகத்தன்மை நேரடியாகச் செயல்பட்டாலும், இதுபோன்ற செயல்களை ஜனங்கள் பார்ப்பது எளிதானது அல்ல, இது வெறுமனே சாதாரண மனிதத்தன்மையின் வாழ்க்கை மற்றும் செயல்களின் காரணத்தினாலேயே ஆகும். இந்த மனுவுருவானவர் முதல் மனுவுருவானவரைப் போல 40 நாட்கள் உபவாசம் இருக்க முடியாது, ஆனால் சாதாரணமாகக் கிரியை செய்கிறார் மற்றும் பேசுகிறார்; அவர் இரகசியங்களை வெளிப்படுத்தினாலும், அவர் மிகவும் சாதாரணமானவராய் இருக்கிறார்; அது, ஜனங்கள் கற்பனை செய்வது போல் அல்ல—அவருடைய சத்தம் இடி முழக்கம் போன்றது அல்ல, அவருடைய முகம் ஒளியால் பிரகாசிப்பதில்லை, அவர் நடக்கும்போது வானம் நடுங்குவதில்லை. அப்படி இருந்தால், இதில் என்னுடைய ஞானம் எதுவும் இருக்காது, மேலும் சாத்தானை அவமானப்படுத்துவதும் தோற்கடிப்பதும் சாத்தியமற்றதாக இருக்கும்.

நான் என் தெய்வீகத்தன்மையை சாதாரண மனிதத்தன்மையின் கேடயத்திற்குப் பின்னால் இருந்து காட்டும்போது, நான் முழு மகிமையைப் பெறுகிறேன், எனது மகத்தான கிரியை நிறைவேற்றப்படுகிறது, எதுவும் எந்த சிரமத்தையும் அளிக்காது. ஏனென்றால், என் மனுவுருவாதலின் நோக்கமே, முதலாவதாக, என்னை விசுவாசிக்கும் அனைவரையும் மாம்சத்தில் உள்ள எனது தெய்வீகத்தன்மையின் செயல்களைக் காண அனுமதிப்பதும், மற்றும் நடைமுறை தேவனையே காண அனுமதிப்பதும் ஆகும், இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத, புலப்படாத தேவனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை ஜனங்களின் இருதயங்களிலிருந்து அகற்றுவதும் ஆகும். நான் சாதாரண மனுஷனைப் போல நானே புசிப்பதாலும், உடுத்திக்கொள்ளுவதாலும், உறங்குவதாலும், வசிப்பதாலும், செயல்படுவதாலும், முழு தெய்வீகத்தன்மையின் சாராம்சத்தையும் கொண்டிருக்கிற அதே நேரத்தில், நான் சாதாரண மனுஷனைப் போல பேசுவதாலும், சிரிப்பதாலும், சாதாரண மனுஷனுடைய தேவைகளையும் பெற்றிருப்பதாலும் “நான் நடைமுறை தேவன்” என்று அழைக்கப்படுகிறேன். இது கடினமான ஒன்றல்ல, இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது; இதில் எனது கிரியையின் மையப்பகுதி எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்பதையும், எனது கவனம் எந்த கட்ட கிரியையில் உள்ளது என்பதையும் பார்க்கலாம். எனது மனுவுருவாதலின் முக்கிய நோக்கமே, சாதாரண மனிதத்தன்மையின் மூலம் எனது தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துவதாகும். எனது கிரியையின் மையமானது நியாயத்தீர்ப்பு காலத்தின் இரண்டாம் பகுதியில் இருப்பதைப் பார்ப்பது கடினமான ஒன்றல்ல.

என்னில், ஒருபோதும் மனித வாழ்வோ, மனிதனின் எந்த தடயமுமோ இருந்ததில்லை. மனித வாழ்க்கை ஒருபோதும் என்னில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கவில்லை, என்னுடைய தெய்வீகத்தன்மையின் வெளிப்பாட்டை ஒருபோதும் அடக்கியதில்லை. இவ்வாறு, பரலோகத்தில் என் சத்தமும் என் ஆவியின் சித்தமும் எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாகச் சாத்தானால் வெட்கப்பட முடியும், அதனால் சாதாரண மனிதத்தன்மைக்குள் என் சித்தத்தைச் செய்வது எளிதாகிறது. இதுவே சாத்தானை தோற்கடித்தது; சாத்தான் ஏற்கனவே முற்றிலும் வெட்கப்பட்டுப்போயிருக்கிறான். நான் மறைந்திருந்தாலும், இது எனது தெய்வீகத்தன்மையின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தடையாக இருப்பதில்லை—நான் ஜெயங்கொண்டிருக்கிறேன் மற்றும் முழுமையான மகிமையைப் பெற்றுள்ளேன் என்பதைக் காட்ட இதுவே போதுமானதாகும். மாம்சத்தில் என் கிரியை தடையின்றி இருப்பதாலும், நடைமுறை தேவன் இப்போது ஜனங்களின் இருதயங்களில் ஓர் இடத்தைப் பெற்றிருப்பதாலும், அவர்களின் இதயங்களில் வேரூன்றியிருப்பதாலும், சாத்தான் என்னால் தோற்கடிக்கப்பட்டான் என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சாத்தான் மனுஷர்கள் மத்தியில் இனி எதையும் செய்ய இயலாதவனாய் இருக்கிறான் என்பதாலும், மனுஷனின் மாம்சத்தில் சாத்தானின் குணத்தைப் புகுத்துவது கடினம் என்பதாலும், என் சித்தம் தடையின்றி நடைபெறுகிறது. எனது கிரியையின் நோக்கம், முக்கியமாக, எல்லா ஜனங்களையும் எனது அற்புதமான செயல்களைப் பார்க்கச் செய்யவும், என் உண்மையான முகத்தைப் பார்க்க வைக்கவும் வேண்டும் என்பதாகும்: நான் அடைய முடியாதபடி தூரத்தில் உள்ளவர் அல்ல, நான் வானத்தில் உள்ள கோபுரமாக இல்லை, நான் உருவமற்றவரோ மற்றும் வடிவமில்லாதவரோ அல்ல. நான் காற்றைப் போல கண்ணுக்குத் தெரியாதவர் அல்ல, எளிதில் அடித்துச் செல்லப்படும் மிதக்கும் மேகத்தைப் போன்றவராகவும் நான் இல்லை; மாறாக, நான் மனுஷனிடையே வாழ்ந்து, மனுஷனிடையே இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரத்தன்மையை அனுபவித்தாலும், என் மாம்சமானது மனுஷனின் சரீரத்திலிருந்து கணிசமாக வேறுபட்டதாய் இருக்கிறது. என்னுடன் பழகுவதில் பெரும்பாலோர் சிரமப்படுகிறார்கள், ஆனாலும் பெரும்பாலானவர்கள் என்னுடன் பழக ஏங்குகிறார்கள். மனுவுருவான தேவனுக்குள் மிகப்பெரிய, புரிந்துகொள்ள முடியாத இரகசியங்கள் இருப்பது போல் இருக்கிறது. தெய்வீகத்தன்மையின் நேரடி வெளிப்பாடு மற்றும் மனிதத் தோற்றத்தின் கவசம் காரணமாக, ஜனங்கள் என்னை இரக்கமுள்ள மற்றும் அன்பான தேவன் என்று விசுவாசித்தும், என் மாட்சிமை மற்றும் கோபத்திற்குப் பயந்து என்னிடமிருந்து மரியாதைக்குரிய தூரத்தைக் கடைபிடிக்கிறார்கள். இவ்வாறு, அவர்கள் தங்கள் இருதயத்தில், என்னுடன் ஆர்வத்துடன் பேச விரும்புகிறார்கள், ஆனாலும் அவர்கள் விரும்பியபடி செய்ய முடியாதவர்களாய் இருக்கிறார்கள்—அவர்களின் இருதயம் விரும்புவதைச் செய்ய, அவர்களுக்கு சத்துவமில்லாதிருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் ஒவ்வொருவருடைய நிலையும் இப்படித்தான் இருக்கிறது—மனுஷர்கள் எவ்வளவு அதிகமாக இப்படி இருக்கிறார்களோ, என்னுடைய மனநிலையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதற்கான மகத்தான ஆதாரம் அதிகமாகிறது, இதனால் தேவனைப் பற்றி ஜனங்கள் அறிந்துகொள்வதன் நோக்கம் அடையப்படுகிறது. ஆனால் இது இரண்டாம் பட்சமாகும்; என் மாம்சத்தின் செயல்களிலிருந்து என் அதிசயமான செயல்களை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவது, அவர்களை தேவனுடைய சாராம்சத்தை அறியச் செய்வதே முக்கியமானதாய் இருக்கிறது; ஜனங்கள் கற்பனை செய்வது போல் நான் அசாதாரணமானவரோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவரோ இல்லை. மாறாக, நான் எல்லாவற்றிலும் சாதாரணமாக இருக்கும் நடைமுறை தேவனாக இருக்கிறேன். ஜனங்களின் எண்ணங்களுக்குள் இருக்கும் எனது ஸ்தானம் அகற்றப்பட்டு, அவர்கள் என்னை நிஜத்தில் அறிந்து கொள்கிறார்கள். அப்போதுதான் நான் ஜனங்களுடைய மனதில் எனது உண்மையான ஸ்தானத்தைப் பிடித்துக்கொள்கிறேன்.

எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, நான் மனுஷர்களால் போற்றப்படுகிற இயற்கைக்கு அப்பாற்பட்ட எதையும் ஒருபோதும் செய்ததில்லை, ஆனால் நான் மிகவும் சாதாரணமானவராகவும் இயல்பானவராகவும் இருக்கிறேன்; நான் வேண்டுமென்றே ஜனங்களை எனது மனுவுருவான மாம்சத்தில் தேவனைப் பற்றிய குறிப்பைக் கொண்ட எதையும் பார்க்க அனுமதிப்பதில்லை. ஆனால் என் வார்த்தைகளால், ஜனங்கள் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் என் சாட்சிக்குக் கீழ்ப்படிகிறார்கள். இவ்வாறுதான், ஜனங்கள் மாம்சத்தில் இருக்கிற என்னை அறிந்து கொள்கிறார்கள், சந்தேகங்கள் இல்லாமல், தேவன் உண்மையிலேயே இருக்கிறார் என்ற முழுமையாக விசுவாசத்தின் அடித்தளத்தின் மீது நிற்கிறார்கள். இவ்வாறு, என்னைப் பற்றிய ஜனங்களது அறிவு மிகவும் உண்மையானதாகவும், தெளிவானதாகவும், அவர்களின் நல்ல நடத்தையால் முற்றிலும் கறைபடாததாகவும் மாறும்; இவை அனைத்தும், என் தெய்வீகத்தன்மையைப் பற்றிய அதிக அறிவை ஜனங்களுக்குக் கொடுப்பதன் மூலம், என் தெய்வீகத்தன்மை நேரடியாகச் செயல்பட்டதன் விளைவேயாகும், ஏனென்றால், தெய்வீகத்தன்மை மட்டுமே தேவனுடைய உண்மையான முகம் மற்றும் தேவனுடைய உள்ளான குணநலன்களாக இருக்கிறது. ஜனங்கள் இதைப் பார்க்க வேண்டும். நான் விரும்புவது என்னவென்றால், தெய்வீகத்தன்மையில் உள்ள வார்த்தைகள், கிரியைகள் மற்றும் செயல்களே—நான் மனிதத்தன்மையில் உள்ள வார்த்தைகள் மற்றும் செயல்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தெய்வீகத்தன்மையில் வாழ்வதும் செயல்படுவதுமே என் நோக்கமாகும்—நான் மனிதத்தன்மையில் வேரூன்றி துளிர்க்க விரும்புவதில்லை, மனிதத்தன்மையில் தங்கியிருக்கவும் விரும்புவதில்லை. நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதா? நான் மனிதத்தன்மையில் விருந்தாளியாக இருந்தாலும், இதை நான் விரும்புவதில்லை; நான் முழுவதும் தெய்வீகத்தன்மையில் செயல்படுகிறேன், இவ்வாறு மட்டுமே ஜனங்களால் எனது உண்மையான முகத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

முந்தைய: அத்தியாயம் 9

அடுத்த: அத்தியாயம் 10

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக