செயல்படுத்தலில் கவனம் செலுத்துபவர்களை மட்டுமே பரிபூரணப்படுத்த முடியும்

கடைசி நாட்களில், தேவன் தாம் செய்யவேண்டிய கிரியையைச் செய்வதற்கும் அவருடைய வார்த்தைகளின் ஊழியத்தைச் செய்வதற்கும் மாம்சமானார். அவர் தமது இருதயத்திற்கு ஏற்ற ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் குறிக்கோளுடன் மனிதர்களிடையே கிரியை செய்ய நேரில் வந்தார். சிருஷ்டிப்பின் காலத்திலிருந்து இன்று வரையிலும், இவ்வகையான கிரியையை அவர் கடைசி நாட்களில் மட்டுமே செய்துள்ளார். இத்தகைய பெரிய அளவிலான கிரியையைச் செய்ய கடைசி நாட்களில் மட்டுமே தேவன் மனுவுரு எடுத்துள்ளார். ஜனங்கள் சகித்துக்கொள்ளக் கடினமாயிருக்கும் கஷ்டங்களை அவர் தாங்கினாலும், அவர் பெரிதான தேவனாயிருந்தும் சாதாரண மனிதனாக மாறும் தாழ்மையைக் கொண்டிருந்தாலும், அவருடைய கிரியையின் எந்த அம்சமும் தாமதிக்கப்படவில்லை, அவருடைய திட்டம் எந்த ஒரு சிறிய அளவிலும் குழப்பத்திற்கு இரையாகவில்லை. அவருடைய உண்மையான திட்டத்தின்படி அவர் கிரியை செய்கிறார். இந்த மனுவுருவின் நோக்கங்களில் ஒன்று ஜனங்களை ஜெயங்கொள்ளுவதும், மற்றொன்று அவர் நேசிக்கும் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதும் ஆகும். அவர் தாம் பரிபூரணப்படுத்தும் ஜனங்களைத் தமது சொந்தக் கண்களால் பார்க்க விரும்புகிறார், மேலும் அவர் பரிபூரணப்படுத்தும் ஜனங்கள் அவருக்காக எவ்வாறு சாட்சியமளிக்கிறார்கள் என்பதையும் தாமே பார்க்க விரும்புகிறார். பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் ஒன்றோ அல்லது இரண்டு பேரோஅல்ல. மாறாக, அது வெறும் ஒரு சில நபர்கள் மட்டுமே இருக்கிற ஒரு குழுவாகும். இக்குழுவில் உள்ளவர்கள் உலகின் பல்வேறு தேசங்களிலிருந்தும், உலகத்தின் பல்வேறு தேசியங்களிலிருந்தும் வருகிறார்கள். இந்தக் குழுவினரை ஆதாயப்படுத்துவதும், இந்த ஜனக்குழு அவருக்காக வைத்திருக்கும் சாட்சியைப் பெறுவதும், அவர்களிடமிருந்து பெறக்கூடிய மகிமையைப் பெறுவதுமே இவ்வளவு கிரியையைச் செய்வதன் நோக்கமாகும். அவர் முக்கியத்துவமில்லாத கிரியையைச் செய்வதில்லை, மதிப்பில்லாத கிரியையையும் அவர் செய்வதில்லை. இவ்வளவு கிரியைகளைச் செய்கிறதில், அவர் பரிபூரணப்படுத்த விரும்பும் அனைவரையும் பரிபூரணப்படுத்துவதே தேவனுடைய நோக்கம் என்று கூறலாம். இதற்கு வெளியே கிரியை செய்யாத நேரத்தில், பொல்லாதவர்களை அவர் வெளியேற்றுவார். பொல்லாதவர்கள் காரணமாக அவர் இந்தப் பெரிய கிரியையைச் செய்யவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; மாறாக, அவரால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஜனங்களுக்காக அவர் எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர் செய்யும் கிரியை, அவர் பேசும் வார்த்தைகள், அவர் வெளிப்படுத்தும் இரகசியங்கள் மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை அனைத்துமே அந்த மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவே. பொல்லாதவர்கள் காரணமாக அவர் மாம்சாகவில்லை, மேலும் அந்தப் பொல்லாத ஜனங்கள் அவர்கள் பெருங்கோபத்தைத் தூண்டி விடுகிறதினாலும் அல்ல. பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களின் நிமித்தம் அவர் சத்தியத்தைப் பேசுகிறார், நுழைவைப் பற்றி பேசுகிறார்; அவர் அவர்களுக்காக மாம்சமானார், மேலும் அவர்களுக்காக அவர் வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்கிறார். சத்தியம், நுழைவு, மற்றும் மனுக்குல வாழ்வைப் பற்றி அவர் பேசுகிறவை பொல்லாதவர்களுக்காக மேற்கொள்ளப்படுவதில்லை. அவர் பொல்லாதவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக அனைத்து சத்தியங்களையும் பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களுக்கு அளிக்க விரும்புகிறார். அது அவருடைய கிரியைக்குத் தேவைப்படுவதானாலும், கொஞ்ச காலத்திற்கு அவருடைய ஐசுவரியங்களை அனுபவிக்க பொல்லாதவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சத்தியத்தை நிறைவேற்றாவர்கள், தேவனைத் திருப்திப்படுத்தாதவர்கள், அவருடைய கிரியையைச் சீர்குலைப்பவர்கள் அனைவரும் பொல்லாதவர்களாவர். அவர்கள் பரிபூரணப்படுத்தப்பட முடியாது, மேலும் அவர்கள் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். மாறாக, சத்தியத்தைக் கடைபிடித்து தேவனைத் திருப்திப்படுத்தக்கூடியவர்கள் மற்றும் தேவனுடைய கிரியைகளில் தங்கள் முழு சுயத்தையும் ஒப்புக்கொடுப்பவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களாவர். தேவன் பரிபூரணமாக்க விரும்புவது இந்த ஜனக்குழுவைத் தவிர வேறு யாரையுமல்ல, மேலும் இந்த ஜனங்களுக்காகவே தேவன் கிரியை செய்கிறார். அவரால் பேசப்படுகிற சத்தியமானது அதை கடைப்பிடிக்க விரும்புகிற ஜனங்களை நோக்கியே செயல்படுத்தப்படுகிறது. சத்தியத்தைக் கடைப்பிடிக்காத ஜனங்களிடம் அவர் பேசுவதில்லை. அவரால் பேசப்படுகிற உள்ளுணர்வு அதிகமாகுதலும் பகுத்தறிவின் வளர்ச்சியும் சத்தியத்தைக் கடைபிடிக்கிற ஜனங்களை இலக்காகக் கொண்டிருக்கின்றன. அவர் பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்களைப் பற்றி பேசுகையில், அவர் இந்த ஜனங்களைப் பற்றியே பேசுகிறார். சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஜனங்களை நோக்கியே பரிசுத்த ஆவியானவரின் கிரியை செயல்படுத்தப்படுகிறது. சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஜனங்களை நோக்கியே ஞானம் மற்றும் மனிதத்தன்மை போன்ற விஷயங்களைக் கொண்டிருப்பது செயல்படுத்தப்படுகின்றன. சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் சத்தியத்தைப் பற்றிய பல வார்த்தைகளைக் கேட்கலாம், ஆனால் அவர்கள் இயல்பாகவே மிகவும் பொல்லாதவர்களாயும் மற்றும் சத்தியத்தில் ஆர்வம் காட்டாதவர்களாயுமிருப்பதால், ஜீவனுக்குள் நுழைவதைப் பற்றி சிறிதும் மதிப்பின்றி, அவர்கள் புரிந்து கொள்வது வெறும் உபதேசங்களும், வார்த்தைகளும் மற்றும் வெற்றுக் கோட்பாடுகளுமே ஆகும். அவர்களில் ஒருவரும் தேவனுக்கு விசுவாசமானவர்களாக இல்லை; அவர்கள் அனைவரும் தேவனைக் கண்டும் அவரைப் பெற முடியாதவர்களாவர்; அவர்கள் அனைவரும் தேவனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள்.

பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நபரிடமும் ஈடுபட ஒரு பாதையைக் கொண்டிருக்கிறார், மேலும் ஒவ்வொரு நபரும் பரிபூரணப்படுத்தப்பட வாய்ப்பை அளிக்கிறார். உன் எதிர்மறைத் தன்மையின் மூலம் நீ உன் சொந்தச் சீர்கேட்டை அறிய வைக்கப்பட்டாய், பின்னர் எதிர்மறையைத் தூக்கி எறிவதன் மூலம் நீ நடக்க ஒரு பாதையைக் காண்பாய்; இவை அனைத்தும் நீ பூரணப்படுத்தப்படும் வழிகளாகும். மேலும், உனக்குள் இருக்கும் சில நேர்மறையான விஷயங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் வெளிச்சத்தின் மூலம் நீ உன் செயல்பாட்டை முன்னெச்சரிக்கையாக நிறைவேற்றி, உள்ளுணர்வில் வளர்ந்து, பகுத்தறிவை அடைவாய். உன் நிலைமைகள் நன்றாக இருக்கும்போது, நீ குறிப்பாக தேவனுடைய வார்த்தையைப் படிக்க விரும்புகிறாய், குறிப்பாக தேவனிடத்தில் ஜெபிக்க விரும்புகிறாய், மேலும் நீ கேட்கும் பிரசங்கங்களை உன் சொந்த நிலையுடன் தொடர்புபடுத்த முடிகிறது. இதுபோன்ற சமயங்களில் தேவன் உன்னை உள்ளாகப் பிரகாசமாக்கி ஒளியூட்டி உன்னை நேர்மறையான அம்சத்தின் சில விஷயங்களை உணர்ந்தறியச் செய்கிறார். இப்படித்தான் நீ நேர்மறையான அம்சத்தில் பரிபூரணப்படுத்தப்படுகிறாய். எதிர்மறையான நிலைகளில், நீ பலவீனமாகவும் செயலற்றும் இருக்கிறாய்; உன் இருதயத்தில் தேவன் இல்லை என்று நீ உணர்கிறாய், ஆனாலும் நடக்க ஒரு பாதையைக் கண்டுபிடிக்க உதவிசெய்து தேவன் உன்னை ஒளியூட்டுகிறார். இதிலிருந்து வெளியேறுவது எதிர்மறையான அம்சத்தில் பரிபூரணத்தை அடைவது ஆகும். தேவனால் மனிதனை நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் என இரண்டிலும் பரிபூரணப்படுத்த முடியும். அது உன்னால் அனுபவிக்க முடிகிறதா, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட பின்தொடர்கிறாயா என்பதைப் பொறுத்ததாகும். நீ தேவனால் உண்மையிலேயே பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், எதிர்மறையால் உன்னை இழப்பைச் சந்திக்க செய்யமுடியாது, ஆனால் மிகவும் உண்மையான விஷயங்களை உனக்கு வருவிக்க முடியும், மேலும் உனக்குள் இல்லாததை உன்னை அதிகளவில் அறியப் பண்ணமுடியும், உன் உண்மையான நிலையை உன்னைப் புரிந்து கொள்ளச் செய்ய முடியும், மேலும் மனிதனிடம் எதுவும் இல்லை என்றும் அவன் ஒன்றும் இல்லை என்றும் காணப்பண்ண முடியும்; நீ உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றால், உனக்குத் தெரியாமலேயே, நீ மற்றவர்களைவிட மேலானவன் என்றும், மற்ற எல்லாரை விடவும் நீ சிறந்தவன் என்றும் எப்போதும் எண்ணுவாய். இவை அனைத்தின் மூலமும், முன்பு வந்த அனைத்தும் தேவனால் செய்யப்பட்டவை என்றும் தேவனால் பாதுகாக்கப்பட்டவை என்றும் நீ காண்பாய். உபத்திரவங்களுக்குள் நுழைவது உன்னை அன்பு மற்றும் விசுவாசம் இல்லாதவனாய்ச் செய்துவிடுகிறது, நீ ஜெபத்தில் குறைவுபடுகிறாய், பாடல்களைப் பாட முடியாமல் இருக்கிறாய், அதை உணர்ந்து கொள்ளாமல், இதற்கு மத்தியில் நீ உன்னைப் பற்றியே அறிந்து கொள்கிறாய். மனிதனைப் பரிபூரணப்படுத்துவதில் தேவனுக்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவர் மனிதனின் சீர்கேடான மனநிலையைக் கையாள அனைத்து வகையான சூழல்களையும் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனை அம்பலப்படுத்த பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்துகிறார்; ஒரு விஷயத்தில், அவர் மனிதனைக் கையாள்கிறார், மற்றொன்றில் மனிதனை அம்பலப்படுத்துகிறார், மற்றொன்றில் மனிதனை வெளிப்படுத்துகிறார், மனிதனுடைய இருதயத்தின் ஆழங்களில் உள்ள “இரகசியங்களைத்” தோண்டியெடுத்து வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதனுடைய பல நிலைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மனிதனின் சுபாவத்தைக் காட்டுகிறார். வெளிப்படுத்துதல் மூலம், மனிதனைக் கையாள்வதன் மூலம், மனிதனின் சுத்திகரிப்பு மற்றும் சிட்சையின் மூலம், இப்படி தேவன் பல முறைமைகளில் மனிதனைப் பரிபூரணப்படுத்துகிறார், இதனால் தேவன் யதார்த்தமானவர் என்பதை மனிதன் அறிகிறான்.

நீங்கள் இப்போது நாடித்தேடுவது என்ன? தேவனால் பரிபூரணப்படுத்தப்பட, தேவனை அறிய, தேவனைப் பெற்றுக் கொள்ள அல்லது ஒருவேளை நீங்கள் 90களின் பேதுருவின் பாணியில் நடந்துகொள்ள, அல்லது யோபுவை விடப் பெரிதான விசுவாசம் கொள்ள நீங்கள் நாடலாம், அல்லது தேவனால் நீதிமான் என்று அழைக்கப்பட்டு தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் வரும்படி நீங்கள் நாடலாம், அல்லது பூமியில் தேவனை வெளிப்படுத்தவும், தேவனுக்காக வல்லமையாக மற்றும் மிகப் பெரிதாக சாட்சிப் பகரவும் நீங்கள் நாடலாம். நீங்கள் எதை நாடித் தேடுகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்தமாக, தேவனால் இரட்சிக்கப்படுவதற்காக நீங்கள் நாடித் தேடுகிறீர்கள். நீ நீதிமானாக இருக்க நாடினாலும், நீ பேதுருவின் பாணியை நாடினால் அல்லது யோபுவின் விசுவாசத்தை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை நாடினால், இவை அனைத்தும் தேவன் மனிதனிடத்தில் செய்யும் கிரியையே ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நீ எதைத் தேடுகிறாய் என்பதைப் பொருட்படுத்தாமல், அவை அனைத்தும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவே, அனைத்தும் தேவனுடைய வார்த்தையை அனுபவிப்பதற்காகவே, தேவனுடைய இருதயத்தைத் திருப்திபடுத்துவதற்காகவே ஆகும்; நீ எதை நாடித் தேடினாலும், அது தேவனுடைய அன்பைக் கண்டுபிடிப்பதற்காகவும், உன் கலகத்தனமான மனநிலையைத் தூக்கி எறியவும், உனக்குள் ஓர் இயல்பான நிலையை அடையவும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் இணங்க முடியவும், சரியான நபராக மாறவும், நீ செய்யும் எல்லாவற்றிலும் சரியான நோக்கம் கொண்டிருக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மையான அனுபவத்தில் நடப்பதற்கான பாதையைத் தேடுவதற்காகவும் ஆகும். தேவனை அறிந்து கொண்டு வாழ்வின் வளர்ச்சியை அடைவதற்காகவே நீ இவை அனைத்தையும் அனுபவிக்கிறாய். நீ அனுபவிக்கிறது தேவனுடைய வார்த்தை மற்றும் உண்மையான நிகழ்வுகள், அதோடுகூட உன் சுற்றுப்புறத்தில் உள்ள ஜனங்கள், விஷயங்கள் மற்றும் பொருட்கள் என்றாலும், இறுதியில் நீ தேவனை அறிந்து கொள்ளவும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் முடியும். ஒரு நீதிமானானின் பாதையில் நடக்க அல்லது தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க முற்பட இவையே ஓடும் தளமாகும், தேவனை அறிந்து கொள்வதும் மற்றும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதும் இலக்காகும். நீ இப்போது தேவனால் பரிபூரணப்பட தேடினாலும் அல்லது தேவனுக்காகச் சாட்சியமளிக்க நாடினாலும் அவையெல்லாம் தேவனை அறிவதற்காகவே; அவர் உன்னில் செய்யும் கிரியை வீணாகாமல் போகும் பொருட்டு, இதனால் இறுதியில் நீ தேவனுடைய யதார்த்தத்தை அறிந்து, அவருடைய மகத்துவத்தை அறிந்து, மேலும் தேவனுடைய தாழ்மையையும் மற்றும் மறைவையும் அறிந்து, மேலும் தேவன் உன்னில் செய்யும் பேரளவிலான கிரியையை அறிந்து கொள்வாய். இந்த அருவருப்பான மற்றும் சீர்கேடான ஜனங்களுக்குள் தமது கிரியையைச் செய்யும் அளவிற்கு தேவன் தம்மையே தாழ்த்தியுள்ளார், மேலும் அவர் இந்த ஜனக்குழுவை பரிபூரணப்படுத்துகிறார். தேவன் மனிதர்களிடையே வாழவும், போஜனம்பண்ணவும், ஜனங்களை மேய்க்கவும், ஜனங்களுக்குத் தேவையானதை வழங்கவும் மட்டுமே மாம்சமாகவில்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் தமது வல்லமையான இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார் மற்றும் சகித்துக் கொள்ள முடியாத சீர்கேடான ஜனங்களை ஜெயங்கொள்ளுகிறார். ஜனங்களில் இந்த மிகச் சீர்கேடானவர்களை இரட்சிக்கவும், இதனால் அனைத்து ஜனங்களும் மாற்றப்பட்டு, புதியவர்களாக மாறவும் அவர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் இதயத்திற்கு வந்தார். தேவன் சகிக்கும் பெரிதான கஷ்டம் தேவனுடைய மனுவுரு சகிக்கும் கஷ்டம் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுடைய ஆவியானவர் மிகுந்த அவமானத்தை அனுபவிக்கிறார், அவர் ஒரு சாதாரண நபராக மாறும் அளவிற்கு தம்மையே தாழ்த்தி மறைத்துக் கொள்கிறார். அவர் சாதாரண மனித வாழ்க்கையையும் சாதாரண மனிதனின் தேவைகளையும் கொண்டிருப்பதை ஜனங்கள் பார்க்கும்படி, தேவன் மனுவுருவெடுத்து மாம்ச ரூபத்தை எடுத்தார். தேவன் மிகப் பெரிய அளவிற்குத் தம்மையே தாழ்த்தினார் என்பதை நிரூபிக்க இது போதுமானதாகும். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் உணரப்படுகிறார். அவரது ஆவியானவர் மிக உயர்ந்தவரும் பெரியவரும் ஆவார், ஆனாலும் அவருடைய ஆவியானவரின் கிரியையைச் செய்வதற்காக அவர் ஒரு சாதாரண மனித ரூபத்தை, ஓர் அற்பமான மனித ரூபத்தை எடுத்துக் கொள்கிறார். உங்கள் ஒவ்வொருவரின் தகுதிப்பாடும், உள்ளுணர்வும், உணர்வும், மனிதத்தன்மையும் மற்றும் வாழ்க்கையும் இவ்வகையான தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ள நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. உனக்காக இத்தகைய கஷ்டங்களை தேவனைச் சகிக்க அனுமதிப்பதற்கு நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள். தேவன் மிகவும் பெரியவர். அவர் மிகவும் உயர்ந்தவர், ஜனங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள், ஆனாலும் அவர் இன்னும் அவர்களிடம் கிரியை செய்கிறார். அவர் ஜனங்களுக்கு வழங்குவதற்காக, ஜனங்களிடம் பேசுவதற்காக மனுவுரு எடுத்தது மட்டுமின்றி, அவர் ஜனங்களுடனும் ஒன்றாக வாழ்கிறார். தேவன் மிகவும் தாழ்மையானவர், மிகவும் அன்பானவர். தேவனுடைய அன்பு குறிப்பிடப்பட்டவுடன், தேவனுடைய கிருபை குறிப்பிடப்பட்டவுடன், நீ பெரிதான துதியைச் சொல்கையில் கண்ணீர் வடித்தாயென்றால், நீ இந்த நிலையை அடைந்தால், அப்போது நீ தேவனைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருப்பாய்.

இப்போதெல்லாம் ஜனங்களுடைய தேடுதலில் ஒரு வழிவிலகல் உள்ளது; அவர்கள் தேவனை நேசிக்கவும் தேவனைத் திருப்திப்படுத்தவும் மட்டுமே நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தேவனைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, மேலும் தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் புறக்கணித்து விடட்னர். தேவனைப் பற்றிய உண்மையான அறிவின் அடித்தளம் அவர்களிடம் இல்லை. இப்படி, அவர்கள் அனுபவம் வளர்ச்சி அடையும்போது ஆர்வத்தை இழக்கிறார்கள். தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுவதற்கு நாடுகிற அனைவரும், அவர்கள் கடந்த காலத்தில் நல்ல நிலையில் இல்லாமல் இருந்திருந்தாலும், எதிர்மறை மற்றும் பலவீனத்தை நோக்கிச் சென்றிருந்தாலும், மேலும் அவ்வப்போது கண்ணீர் சிந்தியிருந்தாலும், மனமுறிவில் விழுந்து, நம்பிக்கையை இழந்திருந்தாலும் கூட, இப்போது, அவர்கள் அதிக அனுபவத்தைப் பெறுகையில் அவர்களுடைய நிலைகள் மேம்படுகின்றன. கையாளப்பட்டு மற்றும் உடைக்கப்பட்ட ஓர் அனுபவத்திற்குப் பிறகு, ஓர் உபத்திரவம் மற்றும் சுத்திகரிப்பு வழியே கடந்து சென்றதன் மூலம், அவர்கள் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எதிர்மறையான நிலைகள் குறைந்து, அவர்களின் வாழ்க்கை மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அதிக உபத்திரவங்களுக்கு உட்படுகையில், அவர்களின் இருதயங்கள் தேவனை நேசிக்கத் தொடங்குகின்றன. தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதில் ஒரு விதி உள்ளது, அதாவது நடக்க ஒரு பாதை உனக்கிருக்கவும், எல்லா எதிர்மறையான நிலைகளில் இருந்து உன்னை நீயே விலக்கிக் கொள்ளவும், உன் ஆவி விடுதலையடைய உதவி, நீ அவரை அதிகமாக நேசிக்கும்படி பண்ணவும் உன்னில் விரும்பத்தக்க பகுதியைப் பயன்படுத்தி அவர் உன்னைப் பிரகாசமாக்குகிறார். இவ்வாறாக, உன்னால் சாத்தானின் சீர்கேடான மனநிலையைத் தூக்கி எறிய முடியும். நீ கபடற்றவன் மற்றும் வெளிப்படையானவன், உன்னை நீயே அறிந்து கொள்ளவும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் நீ விரும்புகிறாய். தேவன் உன்னை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார், எனவே நீ பலவீனமாகவும் எதிர்மறையாகவும் இருக்கும்போது, உன்னை நீயே அதிகமாய் அறிந்துகொள்ள உதவவும், நீயாகவே மனந்திரும்ப அதிக விருப்பங்கொள்ளவும், நீ கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கடைப்பிடிக்க முடியவும், அவர் உன்னை இரு மடங்கு பிரகாசமாக்குகிறார். இவ்வழியில் மட்டுமே உன் இருதயம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும். வழக்கமாக தேவனை அறிவதில் கவனம் செலுத்தும் ஒரு நபர், தன்னை அறிவதில் கவனம் செலுத்துபவர், தனது சொந்த நடத்தையில் கவனம் செலுத்துபவர், அவ்வப்போது தேவனுடைய கிரியையைப் பெறமுடியும், அத்துடன் அவருடைய வழிநடத்துதல் மற்றும் வெளிச்சத்தைப் பெறமுடியும். அத்தகைய நபர் எதிர்மறையான நிலையில் இருந்தாலும் கூட, மனசாட்சியின் செயலாலோ அல்லது தேவனுடைய வார்த்தையிலிருந்து வரும் வெளிச்சத்தினாலோ, அவர் உடனடியாக விஷயங்களை மாற்றிப் போட முடியும். ஒரு நபர் எப்பொழுதும் தன்னுடைய உண்மையான சொந்த நிலை மற்றும் தேவனுடைய மனநிலை மற்றும் கிரியையை அறிந்தவுடன், அவன் மனநிலையில் மாற்றம் அடையப்படுகிறது. தன்னையே தெரிந்து கொள்ளவும் தன்னையே வெளிப்படுத்திக் காண்பிக்கவும் விரும்பும் ஒருவரால் சத்தியத்தை நிறைவேற்ற முடியும். இவ்வகையான நபர் தேவனுக்கு உண்மையுள்ள ஒரு நபராவார், தேவனுக்கு உண்மையுள்ள ஒரு நபர் தேவனைப் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பார், இந்தப் புரிதலானது ஆழமாக அல்லது ஆழமற்றதாக, சொற்பமாக அல்லது நிறைவாகக் கூட இருக்கலாம். இதுவே தேவனுடைய நீதியாகும், மேலும் இது ஜனங்கள் அடையும் ஒன்றாகும்; இது அவர்களின் சொந்த ஆதாயமாகும். தேவனைப் பற்றிய அறிவைக் கொண்ட ஒரு நபர் அடிப்படையைக் கொண்டவர், தரிசனத்தைக் கொண்டவர். இவ்வகையான நபர் தேவனுடைய மாம்சத்தைக் குறித்த நிச்சயத்துடன் இருக்கிறார், மேலும் தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய கிரியையைக் குறித்த நிச்சயத்துடன் இருக்கிறார். தேவன் எப்படிக் கிரியை செய்கிறார் அல்லது பேசுகிறார் அல்லது மற்ற ஜனங்கள் எப்படி தொந்தரவு செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவனால் தன் காரியத்தை விட்டுவிடாமல், தேவனுக்காகச் சாட்சியாக நிற்க முடியும். ஒரு நபர் இப்படியாக எவ்வளவு அதிகமாக இருக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவன் புரிந்து கொள்கிற சத்தியத்தை அவனால் கடைப்பிடிக்க முடியும். ஏனென்றால் அவன் எப்போதும் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதால், அவன் தேவனைப் பற்றிய அதிகப் புரிதலைப் பெறுகிறான், மேலும் என்றென்றும் தேவனுக்காகச் சாட்சியாக இருக்க வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்கிறான்.

பகுத்தறிவைப் பெற்றிருத்தல், கீழ்ப்படிதலைப் பெற்றிருத்தல், மற்றும் நீ ஆவியில் மிகுந்த முனைப்புடன் இருக்க விஷயங்களின் உண்மையான இயல்பைக் கண்டறியும் திறனைப் பெற்றிருத்தல், இவையனைத்தும் நீ எதையாவது சந்திக்கையில் தேவனுடைய வார்த்தைகள் உன்னை உள்ளாக ஒளியூட்டிக் கொண்டும் வெளிச்சமாக்கிக் கொண்டும் இருக்கின்றன என்று அர்த்தமாகும். இதுவே ஆவியில் முனைப்புடன் இருப்பதாகும். தேவன் செய்யும் அனைத்தும் ஜனங்களின் ஆவிகளை உயிர்ப்பிக்க உதவுவதற்காகவே ஆகும். ஜனங்கள் உணர்ச்சியற்றவர்களாகவும் மந்த புத்தியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தேவன் ஏன் எப்போதும் கூறுகிறார்? ஏனென்றால் ஜனங்களின் ஆவி மரித்துப் போயிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆவியின் விஷயங்களைப் பற்றி முழுவதும் உணர்விழந்து மிகவும் உணர்ச்சியற்றவர்களாகி விட்டனர். தேவனுடைய கிரியை ஜனங்களின் வாழ்க்கையை முன்னேற்றமடையச் செய்கிறது மற்றும் ஜனங்களின் ஆவிகள் உயிரடைய உதவி செய்கிறது, இதனால் ஆவியின் விஷயங்களின் உண்மையான தன்மையை அவர்கள் கண்டறியவும், தேவனை அவர்கள் இருதயங்களில் நேசிக்கவும் தேவனைத் திருப்திப்படுத்தவும் அவர்களால் முடிகிறது. இந்தக் கட்டத்திற்கு வருவது ஒரு நபரின் ஆவி உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது, அடுத்த முறை அவன் எதையாவது சந்திக்கும்போது, அவன் உடனடியாக எதிர்வினையாற்ற முடிகிறது. அவன் பிரசங்கங்களுக்கு உணர்ச்சியுள்ளவனாகிறான், மேலும் சூழ்நிலைகளுக்கு விரைவாக எதிர்வினையாற்றுகிறான். இதுதான் ஆவியில் முனைப்பை அடைவதாகும். வெளிப்புற நிகழ்வுக்கு விரைவாக எதிர்வினையாற்றுகிற பலர் உள்ளனர், ஆனால் யதார்த்தத்துக்குள் நுழைதல் அல்லது ஆவியின் விரிவான விஷயங்கள் குறிப்பிடப்பட்டவுடன் அவர்கள் உணர்ச்சியற்றவர்களாகவும் மந்த புத்தியுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வெளிப்படையாக தெரிந்தால் மட்டுமே அவர்கள் எதையாவது புரிந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும் ஆவிக்குரிய உணர்வின்மை மற்றும் மந்தபுத்தியுடன் இருப்பது, ஆவியின் விஷயங்களைப் பற்றிய அனுபவம் இல்லாமல் இருப்பதன் அறிகுறிகளாகும். சிலர் ஆவியின் மீது முனைப்புடன் இருப்பார்கள் மற்றும் பகுத்தறிவைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் நிலைகளைச் சுட்டிக்காட்டும் வார்த்தைகளைக் கேட்டவுடன் அவற்றை விரைவாக எழுதிக் கொள்வார்கள். நடைமுறைக் கோட்பாடுகளைப் பற்றிய வார்த்தைகளை அவர்கள் கேட்டவுடன், அவற்றை ஏற்றுக் கொள்ளவும், அடுத்தடுத்த அனுபவத்திற்கு அவைகளைப் பயன்படுத்தவும், அதன் மூலம் தங்களை மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியும். இவனே ஆவியில் முனைப்புள்ள ஒரு நபராவான். அவர்களால் எப்படி இவ்வளவு விரைவாகச் செயல்பட முடிகிறது? ஏனென்றால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, அவர்கள் தங்கள் நிலைகளை அவர்களோடு ஒப்பிட்டு சரிபார்த்துத் தங்களைப் பற்றிக் கவனமாகச் சிந்திக்க முடிகிறது. அவர்கள் ஐக்கியத்தை மற்றும் பிரசங்கங்களைக் கேட்கும்போது, மற்றும் அவர்களுக்குப் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் தரும் வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர்களால் அவைகளை உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. இது பசித்தவருக்கு உணவு கொடுப்பதைப் போன்றதே ஆகும்; அவர்களால் உடனே சாப்பிட முடியும். பசி இல்லாத ஒருவருக்கு நீ உணவைக் கொடுத்தால், அவர்களால் அவ்வளவு விரைவாக எதிர்வினையாற்ற முடியாது. நீ அடிக்கடி தேவனிடம் ஜெபம் செய்கிறாய், பின் நீ எதையாவது சந்திக்கும்போது, இந்த விஷயத்தில் தேவன் என்ன விரும்புகிறார், நீ எப்படிச் செயல்பட வேண்டும் என்று உன்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடிகிறது. கடந்த முறை இவ்விஷயத்தில் தேவன் உன்னை வழிநடத்தினார்; இன்று நீ இதே போன்ற விஷயத்தை எதிர்கொள்ளும்போது, இயல்பாகவே நீ தேவனுடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில் செயல்படுவது எப்படி என்பதை அறிந்திருப்பாய். நீ எப்போதுமே இந்த வழியில் செயல்பட்டால் எப்போதுமே இவ்வழியில் அனுபவம் பெற்றால், ஒரு கட்டத்தில் அது உனக்கு எளிதாகிவிடும். தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது, தேவன் எவ்வகையான நபரைக் குறிப்பிடுகிறார் என்பது உனக்குத் தெரியும், அவர் எவ்வகையான ஆவியின் நிலைமைகளைப் பற்றி பேசுகிறார் என்பது உனக்குத் தெரியும், மேலும் நீ முக்கிய விஷயத்தைப் புரிந்துகொண்டு அதைக் கடைபிடிக்க முடியும்; நீ அனுபவத்தைப் பெற முடியும் என்பதை இது காட்டுகிறது. இவ்விஷயத்தில் சிலர் ஏன் குறைவுபடுகிறார்கள்? ஏனென்றால் அவர்கள் நடைமுறையில் அதிக முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க விருப்பங்கொண்டாலும், அவர்கள் வாழ்க்கையில் ஊழியத்தைப் பற்றிய விவரங்களில் மற்றும் சத்தியத்தின் விவரங்களில் உண்மையான உள்ளுணர்வைப் பெற்றிருக்கவில்லை. ஏதாவது நடக்கும்போது அவர்கள் குழப்பமடைகிறார்கள். இவ்வாறு ஒரு கள்ளத்தீர்க்கதரிசியோ அல்லது அப்போஸ்தலனோ வெளிப்படும்போது நீ வழிதவறக்கூடும். தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியையைப் பற்றி நீ அடிக்கடி ஐக்கியங்கொள்ள வேண்டும், இவ்வழியில் மட்டுமே நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளவும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உனக்கு சத்தியம் புரியவில்லையென்றால், உனக்குப் பகுத்தறிவு இருக்காது. உதாரணமாக, தேவன் என்ன பேசுகிறார், தேவன் எப்படிக் கிரியை செய்கிறார், மக்களிடமான அவருடைய கோரிக்கைகள் என்ன, நீ எவ்வகையான நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வகையான நபர்களை நீ நிராகரிக்க வேண்டும், இவ்விஷயங்களைப் பற்றி நீ அடிக்கடி ஐக்கியங்கொள்ள வேண்டும். இவ்வழியில் நீ எப்போதும் தேவனுடைய வார்த்தையை அனுபவிப்பாயானால், நீ சத்தியத்தைப் புரிந்து கொள்வாய் மற்றும் பல விஷயங்களை முழுமையாகப் புரிந்து கொள்வாய், மேலும் நீ பகுத்தறிவையும் பெறுவாய். பரிசுத்த ஆவியானவரால் ஒழுங்குபடுதல் என்றால் என்ன, மனித சித்தத்தால் உண்டான குற்றம் என்ன, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் வழிகாட்டுதல் என்ன, ஒரு சுற்றுச்சூழலை ஏற்பாடு செய்வது என்றால் என்ன, உள்ளாக தேவனுடைய வார்த்தைப் பிரகாசித்தல் என்றால் என்ன? இவ்விஷயங்களைப் பற்றி நீ தெளிவாக இல்லையெனில், உனக்கு எந்தப் பகுத்தறிவும் இருக்காது. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து என்ன வருகிறது, கலகத்தனமான மனநிலை என்றால் என்ன, தேவனுடைய வார்த்தைக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும், உன் சொந்தக் கலகத்தன்மையை எப்படித் தூக்கியெறியவேண்டும் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்; இவ்விஷயங்களை நீ அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்வாயானால், உனக்கு ஓர் அடித்தளம் இருக்கும்; ஏதாவது நடக்கும் போது, அதை அளவிடுவதற்கான தகுந்த சத்தியமும், அடித்தளமாகப் பொருத்தமான தரிசனங்களும் உன்னிடம் இருக்கும். நீ செய்யும் எல்லாவற்றிலும் உனக்குக் கொள்கைகள் இருக்கும், மேலும் சத்தியத்தின்படி உன்னால் செயல்பட முடியும். பின்னர் உன் வாழ்க்கை தேவனுடைய வெளிச்சமும், தேவனுடைய ஆசீர்வாதங்களும் நிறைந்ததாக இருக்கும். தேவன் தம்மை உண்மையாகத் தேடுகிற, அல்லது அவரைப் போல வாழ்ந்து அவருக்காக சாட்சியமளிக்கிற எந்த நபரையும் நியாயமற்ற முறையில் நடத்த மாட்டார், மேலும் சத்தியத்திற்காக உண்மையாகத் தாகம் கொள்ளக்கூடிய எந்த நபரையும் அவர் சபிக்க மாட்டார். தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, உன்னால் உன் சொந்த நிலைமையை அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த முடிந்தால், உன் சொந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடிந்தால், உன் சொந்தப் புரிதலில் கவனம் செலுத்த முடிந்தால், பின்னர், நீ ஒரு பிரச்சனையைச் சந்திக்கும் போது, நீ வெளிச்சத்தைப் பெறுவாய் மற்றும் நடைமுறைப் புரிதலை அடைவாய். அப்போது எல்லா விஷயங்களிலும் செயல்படுத்தும் மற்றும் பகுத்தறியும் ஒரு பாதையை நீ கொண்டிருப்பாய். சத்தியத்தைக் கொண்ட ஒரு நபர் வஞ்சிக்கப்பட வாய்ப்பில்லை, சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொள்ளவோ அல்லது அளவுக்கு மீறி செயல்படவோ வாய்ப்பில்லை. சத்தியத்தின் காரணமாக, அவன் பாதுகாக்கப்படுகிறான், மேலும் சத்தியத்தின் காரணமாக, அவன் அதிகப் புரிதலைப் பெறுகிறான். சத்தியத்தின் காரணமாக, நடக்க அவனுக்குப் பல பாதைகள் இருக்கும், பரிசுத்த ஆவியானவர் அவனிடம் கிரியை செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கும், மேலும் பரிபூரணப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும்.

முந்தைய: தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்

அடுத்த: பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக