கிரியையும் பிரவேசித்தலும் (2)

உங்கள் கிரியையும் பிரவேசமும் மிகவும் மோசமாக இருக்கிறது; மனுஷன் எவ்வாறு கிரியை செய்வது என்பதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மேலும் ஜீவிதப் பிரவேசம் குறித்து இன்னும் மிகவும் குழப்பமாகவே இருக்கிறான். இவற்றை பிரவேசிக்க வேண்டிய பாடங்களாக மனுஷன் கருதுவதில்லை; எனவே, உங்கள் அனுபவத்தில், மனுஷன் பார்க்கும் அனைத்தும் வெறும் பகல் கனவாகவே இருக்கின்றன. கிரியையைப் பொறுத்தவரை உங்களிடமிருந்து அதிகம் கேட்கப்படுவதில்லை, ஆனால், தேவனால் பூரணப்படுத்தப்பட வேண்டிய ஒருவனாக, தேவனுக்காகக் கிரியை செய்வதைப் பற்றிய உங்கள் படிப்பினைகளை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், இதன்மூலம் உங்களால் விரைவில் தேவனின் சித்தத்திற்கு இணங்க முடியும். யுகங்கள் முழுவதும், கிரியை செய்தவர்கள் ஊழியர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவை தேவனால் பயன்படுத்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான ஜனங்களைக் குறிக்கும் வார்த்தைகள் ஆகும். இருப்பினும், இன்று நான் பேசும் கிரியை அந்த ஊழியர்களையோ அல்லது அப்போஸ்தலர்களையோ மட்டும் குறிக்கவில்லை, மாறாக தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய அனைவரை நோக்கியும் செயல்படுத்தப்படுகிறது. ஒருவேளை இதில் ஆர்வம் இல்லாதவர்கள் அநேகர் இருக்கலாம், ஆனால், பிரவேசத்திற்காக, இந்த விஷயத்தில் சத்தியத்தைப் பற்றி பேசுவது தான் நல்லது.

கிரியையைப் பொறுத்தவரை, கிரியை என்பது தேவனுக்காக சுற்றித்திரிவது, எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பது மற்றும் அவருக்காகச் செலவு செய்வது என்பதுதான் என்று மனுஷன் விசுவாசிக்கிறான். இந்த விசுவாசம் சரியானதுதான் என்றாலும், இது மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது; தேவன் மனுஷனிடம் கேட்பது தமக்காகச் சுற்றித்திரிய வேண்டும் என்பது மட்டுமல்ல; இதையும் தாண்டி, இந்தக் கிரியையானது ஊழியம் செய்வது மற்றும் ஆவிக்குள் தேவையானவற்றை வழங்குவது ஆகியவற்றைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளதாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகால அனுபவங்களுக்குப் பிறகும், பல சகோதர சகோதரிகள் தேவனுக்காகக் கிரியை செய்வதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை, ஏனென்றால் மனுஷனால் சிந்திக்கப்படும் கிரியையானது தேவன் கேட்டுக்கொள்வதற்கு முரணானதாக இருக்கிறது. ஆகையால், கிரியை விஷயத்தில் மனுஷனுக்கு எந்த ஆர்வமும் இல்லை, மேலும் மனுஷனின் பிரவேசமும் ஒருதலைப்பட்சமாக இருப்பதற்கு இதுவே சரியான காரணமாகவும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் தேவனுக்காகக் கிரியை செய்வதன் மூலம் உங்கள் பிரவேசத்தைத் தொடங்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் அனுபவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதில் தான் நீங்கள் பிரவேசிக்க வேண்டும். கிரியை என்பது தேவனுக்காகச் சுற்றித்திரிவதைக் குறிக்காது, ஆனால் மனுஷனின் ஜீவனும் மனுஷன் ஜீவிக்கிறதும் தேவனுக்கு இன்பத்தை அளிக்க முடியுமா என்பதைக் குறிக்கிறது. தேவனைப் பற்றி சாட்சிக் கொடுப்பதற்கும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதற்கும் ஜனங்கள் தேவன் மீதுள்ள பக்தியையும், தேவனைப் பற்றிய அறிவையும் பயன்படுத்துவதைத்தான் கிரியை குறிக்கிறது. இதுவே மனுஷனின் பொறுப்பு, எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். உங்கள் பிரவேசம்தான் உங்கள் கிரியை என்றும், தேவனுக்காகக் கிரியை செய்யும் போது நீங்கள் பிரவேசிக்க முற்படுகிறீர்கள் என்றும் நீங்கள் கூறலாம். தேவனின் கிரியையை அனுபவிப்பது என்பது அவருடைய வார்த்தையைப் புசித்துக் குடிக்க உங்களுக்குத் தெரியும் என்று அர்த்தமல்ல; மிக முக்கியமாக, தேவனைப் பற்றி எவ்வாறு சாட்சிக் கொடுக்க வேண்டும் என்பதையும், தேவனுக்குச் சேவை செய்வதையும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதையும் மற்றும் வழங்குவதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். இது கிரியை மட்டுமல்ல, இது உங்கள் பிரவேசமுமாக இருக்கிறது; ஒவ்வொருவரும் இதைத்தான் செய்துமுடிக்க வேண்டும். தேவனுக்காகச் சுற்றித்திரிவதிலும், எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள் அநேகர் இருக்கின்றனர், ஆனால் அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தைக் கவனிக்காமல், ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இதுதான் தேவனுக்குச் சேவை செய்பவர்களை தேவனை எதிர்ப்பவர்களாக மாற வழிவகுத்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக தேவனைச் சேவித்து, மனுஷனுக்கு ஊழியம் செய்து வரும் இந்த ஜனங்கள், கிரியை செய்வதையும் பிரசங்கிப்பதையும் பிரவேசம் என்று வெறுமனே கருதியிருக்கின்றனர், யாரும் தங்களது தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவத்தை ஒரு முக்கியமான பிரவேசமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து அவர்கள் பெறும் தெளிவை மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான மூலதனமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரசங்கிக்கும்போது, அவர்களுக்கு பாரம் மிக அதிகமாகி, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுகிறார்கள், இதன் மூலம் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் குரலை வெளியிடுகிறார்கள். இந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது தங்களின் தனிப்பட்ட ஆன்மீக அனுபவமாக மாறியது போல, கிரியை செய்பவர்கள் மனநிறைவுடன் காணப்படுகிறார்கள்; அவர்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்று அவர்கள் உணர்கிறார்கள், ஆனால் மீண்டும், அவர்களின் சொந்த அனுபவமானது அவர்கள் விவரித்ததைப் போல தெளிவாக இல்லை என்பது போல இருக்கிறது. மேலும், பேசுவதற்கு முன்பு தாங்கள் என்ன பேசப்போகிறோம் என்பது பற்றி அவர்களுக்கு எந்தவிதமான விவரமும் தெரிந்திருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் கிரியை செய்யும்போது, அவர்களது வார்த்தைகள் ஒரு முடிவில்லாத பிரவாகம் போல வெளியேறுகின்றன. நீ ஒரு முறை அவ்வாறு பிரசங்கித்த பிறகு, உனது உண்மையான வளர்ச்சியானது நீ விசுவாசித்ததைப் போல சிறியதல்ல என்று உணர்கிறாய், மேலும் பரிசுத்த ஆவியானவர் உன்னில் பல முறை கிரியை செய்த சூழ்நிலையில், நீ ஏற்கனவே வளர்ச்சி கண்டவன் என்பதையும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன் சொந்தப் பிரவேசம் என்றும் அது உனக்குச் சொந்தமானது என்றும் நீ தவறாக விசுவாசித்திருக்கிறாய் என்பதையும் உணர்கிறாய். நீ தொடர்ந்து இவ்வாறு அனுபவிக்கும் போது, நீ உனது சொந்தப் பிரவேசத்தில் கண்டிப்புடன் இல்லாமல், அதைக் கவனிக்காமல் சோம்பலாக இருந்து, உன் தனிப்பட்ட பிரவேசத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதை நிறுத்திவிடுவாய். இந்தக் காரணத்திற்காக, நீ மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது, நீ உனது வளர்ச்சிக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இது உனது பிரவேசத்தை மேலும் எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், உனது அனுபவத்திற்கு அதிக நன்மையையும் தருகிறது. மனுஷன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தனது தனிப்பட்ட அனுபவமாக எடுத்துக் கொள்ளும்போது, இது சீர்கெடுதலின் ஆதாரமாக மாறுகிறது. இதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் எந்தக் கடமையைச் செய்தாலும், உங்கள் பிரவேசித்தலை ஒரு முக்கிய பாடமாக நீங்கள் கருத வேண்டும்.

தேவனின் சித்தத்தை நிறைவேற்றவும், தேவனின் இருதயத்தைப் பின்தொடரும் அனைவரையும் அவர் முன் கொண்டுவருவதற்கும், மனுஷனை தேவனிடம் கொண்டுவருவதற்கும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனின் வழிகாட்டுதலையும் மனுஷனுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அதன் மூலம் தேவனுடைய கிரியையின் பலனை நிறைவேற்றுவதற்கும் நீங்கள் கிரியை செய்கிறீர்கள். ஆகையால், நீங்கள் கிரியையின் சாராம்சம் குறித்து முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தேவனால் பயன்படுத்தப்படுபவனாக, ஒவ்வொரு மனுஷனும் தேவனுக்காகக் கிரியை செய்ய தகுதியானவன்தான், அதாவது அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், நீங்கள் உணர வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது: தேவனால் நியமிக்கப்பட்ட கிரியையை மனுஷன் செய்யும்போது, தேவனால் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் மனுஷனால் சொல்லப்படுவதும் அறியப்படுவதும் முற்றிலும் மனுஷனின் வளர்ச்சியாக இருப்பதில்லை. நீங்கள் உங்கள் கிரியையின் போது உங்கள் சொந்தக் குறைபாடுகளை நன்கு அறிந்துகொள்வதோடு, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிக தெளிவைப் பெறுவதும் நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் ஆகும். இவ்வாறாக, உங்கள் கிரியையின் போது சிறந்த பிரவேசித்தலைப் பெற நீங்கள் செயல்படுத்தப்படுவீர்கள். தேவனிடமிருந்து வரும் வழிகாட்டுதலை மனுஷன் தனது சொந்தப் பிரவேசம் என்றும் அது தனக்குள்ளேயே இயல்பாக இருக்கும் ஒன்று என்றும் கருதினால், மனுஷனின் வளர்ச்சியானது வளர்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் மனுஷனில் செயல்படுத்தும் தெளிவுபடுத்தும் கிரியையானது அவன் சாதாரண நிலையில் இருக்கும்போதுதான் நிகழ்கிறது; இதுபோன்ற சமயங்களில், ஜனங்கள் பெறும் தெளிவை தங்களது உண்மையான வளர்ச்சியாக அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தெளிவூட்டும் விதம் மிகவும் இயல்பானதாக இருக்கிறது, மேலும் மனுஷனுக்குள் இருக்கும் உள்ளார்ந்த விஷயத்தையும் அவர் பயன்படுத்துகிறார். ஜனங்கள் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், அல்லது அவர்கள் ஜெபிக்கும்போதும், ஆவிக்குரிய ஆராதனைகளைச் செய்யும்போதும், ஒரு சத்தியம் திடீரென்று அவர்களுக்குத் தெளிவாகிவிடும். இருப்பினும், உண்மையில், மனுஷன் பரிசுத்த ஆவியானவரின் தெளிவை மட்டுமே பார்க்கிறான் (இயற்கையாகவே, இந்த தெளிவு மனுஷனின் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது), மேலும் இது மனுஷனின் உண்மையான வளர்ச்சியைக் குறிப்பிடுவதும் இல்லை. மனுஷன் சில சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட கால அனுபவத்திற்குப் பிறகு, அத்தகைய சூழ்நிலைகளில் மனுஷனின் உண்மையான வளர்ச்சி தெளிவாகிறது. அப்போதுதான் தனது வளர்ச்சியானது அவ்வளவு பெரியதாக இல்லை என்பதை மனுஷன் கண்டுபிடிப்பான், மேலும் மனுஷனின் சுயநலம், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் பேராசை ஆகிய அனைத்தும் வெளிப்படும். இதுபோன்ற பல அனுபவ சுழற்சிகளுக்குப் பிறகுதான், தங்களது ஆவிகளுக்குள் விழித்துக் கொண்டவர்களில் பலர், கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த விஷயங்கள் தங்களது சொந்த யதார்த்தம் அல்ல என்பதையும், மாறாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்த ஒரு குறுகிய கால வெளிச்சம்தான் என்பதையும், மனுஷன் இந்த வெளிச்சத்தைத்தான் பெற்றான் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைப் புரிந்துகொள்ள மனுஷனுக்குத் தெளிவூட்டும்போது, விஷயங்கள் எவ்வாறு வந்தன அல்லது எங்கு செல்கின்றன என்பதை விளக்காமல், அது பெரும்பாலும் தெளிவான மற்றும் தனித்துவமான முறையில்தான் இருக்கும். அதாவது, மனுஷனின் சிரமங்களை இந்த வெளிப்பாட்டில் இணைப்பதற்குப் பதிலாக, அவர் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்துகிறார். மனுஷன் பிரவேசிக்கும் செயல்பாட்டில் சிரமங்களை எதிர்கொண்டு, அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவரின் தெளிவூட்டலை இணைத்துக்கொள்ளும்போது, இதுவே மனுஷனின் உண்மையான அனுபவமாகிறது. உதாரணமாக, திருமணமாகாத ஒரு சகோதரி, கூடுகையின்போது இவ்வாறு பேசினாள்: “நாங்கள் மகிமையையும் செல்வத்தையும் தேடுவதில்லை அல்லது கணவன் மனைவி இடையேயான அன்பின் மகிழ்ச்சியையும் விரும்புவதில்லை; நாங்கள் தூய்மையான, ஒருமனம் கொண்ட இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணிக்க மட்டுமே முயல்கிறோம்.” அவள் தொடர்ந்து சொன்னாள்: “ஜனங்கள் திருமணம் செய்துகொண்டவுடன், அவர்களைச் சுற்றிலும் நிறைய சிக்கல்கள் உருவாகின்றன, தேவனை நேசிக்கும் அவர்களின் இருதயம் இனியும் உண்மையானதாக இருப்பதில்லை. அவர்களின் இருதயங்கள் எப்போதுமே தங்கள் குடும்பத்தினருடனும், வாழ்க்கைத் துணையுடனுமே இருக்கின்றன, எனவே அவர்களின் உட்புற உலகம் மிகவும் சிக்கலானதாகிறது….” அவள் பேசும்போது, அவள் இருதயத்தில் என்ன நினைக்கிறாளோ அதுவே அவள் வாயிலிருந்து வெளிவந்தது போல் இருந்தது; அவள் சொன்னது எல்லாம் அவளுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வந்ததைப் போலவும், தன்னை முழுவதுமாக தேவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பது போலவும், அவளைப் போன்ற சகோதர சகோதரிகள் ஒரே தீர்மானத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டவள் போலவும், அவளுடைய வார்த்தைகள் பலமானவையாகவும், வல்லமைபெற்றவையாகவும் இருந்தன. இந்த நேரத்தில் உனது தீர்மான உணர்வுகள் மற்றும் அசைக்கப்படும் உணர்வுகள் ஆகியவை முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வந்தவை என்று கூறலாம். தேவனுடைய கிரியையின் முறை மாறும்போது, உனது வயதும் சற்றே அதிகரித்திருக்கும்; நீ உனது வயதில் இருக்கும் உனது வகுப்புத் தோழிகள் மற்றும் சிநேகிதிகள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களைக் கொண்டிருப்பதை நீ காண்பாய், அல்லது திருமணமான பிறகு, அவளுடைய கணவன் அவளை நகரத்தில் வசிக்க அழைத்துச் சென்றிருப்பதாகவும், அங்கே அவள் ஒரு பணியில் சேர்ந்திருப்பதாகவும் நீ கேள்விப்படுவாய். நீ அவளைப் பார்க்கும்போது, அவள் எப்படி வசீகரமாகவும், தலை முதல் கால் வரை அழகாகவும் இருக்கிறாள் என்பதையும், அவள் உன்னுடன் பேசும்போது, அவளிடம் இனியும் பாங்கறியாத நாட்டுப்புறத் தன்மை இல்லாமல், அதற்கு பதிலாக உலகளாவிய திறமை இருப்பதையும் கண்டு நீ பொறாமைப்படத் தொடங்குவாய். இதையெல்லாம் பார்ப்பது உனக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. தேவனுக்காக நீண்டகாலமாக உன்னையே செலவழிக்கும் உனக்கு, குடும்பமோ, தொழிலோ இல்லை, மேலும் நீ கையாளப்படுவதற்காக பெருமளவு கஷ்டங்களைத் தாங்கியிருக்கிறாய்; நீ சிறிது காலத்திற்கு முன்பு நடுத்தர வயதில் பிரவேசித்தாய், நீ ஒரு சொப்பனத்தில் இருந்ததைப் போல உனது இளமை நீண்ட காலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக நழுவிவிட்டது. அவ்வாறாக பயணித்து அப்படியே இப்போது நிகழ்காலத்திற்கு வந்துவிட்டதால், நீ எங்கு குடியேற வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில், நீ உனது புத்திசாலித்தனத்தை இழந்துவிட்டதைப் போல நீ சிந்தனைச் சூறாவளியில் சிக்கிக் கொள்கிறாய். தனியாகவும், நித்திரைகொள்ள முடியாமலும், நீண்ட இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறாய், அதை அறிவதற்கு முன்பே நீ உனது தீர்மானத்தைப் பற்றியும், தேவனுக்கு அளித்த உறுதிமொழிகளைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குகிறாய். பிறகு ஏன் நீ ஒரு வருந்தத்தக்க நிலைக்கு வந்துவிட்டாய்? யாருக்கும் தெரியாமல், நீ மௌனமாகக் கண்ணீர் விடுகிறாய், இருதயத்தைப் பிழியும் வலியை உணர்கிறாய். தேவனுக்கு முன்பாக ஜெபிக்க வரும்போது, நீ தேவனுடன் ஒன்றாக இருந்த நாட்களில், நீங்களிருவரும் எவ்வளவு நெருக்கமாகவும் பிரிக்கமுடியாதவர்களாகவும் இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறாய். ஒவ்வொரு காட்சியும் உனது கண்களுக்கு முன்பாக வருகிறது, அன்றைய தினம் நீ செய்த பொருத்தனை மீண்டும் உனது செவிகளில் ஒலிக்கிறது, “தேவன் மட்டுமே எனக்கு நெருக்கமான ஒருவர் அல்லவா?” இந்த நேரத்தில், நீ தேம்பித்தேம்பி: “தேவனே! அன்பான தேவனே! நான் ஏற்கனவே என் இருதயத்தை முழுவதுமாக உமக்கு வழங்கியிருக்கிறேன். நான் உமக்கே என்றென்றும் வாக்கு கொடுக்க விரும்புகிறேன், நான் ஜீவிக்கும் நாட்கள் முழுவதும் உம்மை நேசிப்பேன்….” என்கிறாய். அந்த ஆழ்ந்த துன்பத்தில் நீ போராடும்போதுதான், தேவன் எவ்வளவு அழகானவர் என்பதை நீ உண்மையிலேயே உணருகிறாய், அப்போதுதான் நீ தெளிவாக உணருகிறாய்: என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுக்குக் கொடுத்துவிட்டேன். அத்தகைய அடியைத் தாங்கிய பிறகு, இந்த விஷயங்களைப் பொறுத்தவரை நீ மிகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறாய், அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது மனுஷன் கொண்டிருந்த ஒன்றல்ல என்பதை நீ காண்கிறாய். இந்த நிலைக்குப் பிறகு உனது அனுபவங்களில், பிரவேசிப்பதற்கான இந்த அம்சத்தில் நீ இனியும் கட்டுப்படுத்தப்பட மாட்டாய்; உனது பழைய காயங்களிலிருந்து ஏற்பட்ட வடுக்களானது உனது பிரவேசித்தலுக்கு பெரிதும் பயனளித்திருப்பது போல தெரிகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நீ சந்திக்கும் போதெல்லாம், தேவனிடமிருந்து நீ பிரிந்து மீண்டும் அவருடன் ஒன்றிணைந்ததைப் போல நீ அன்றைய நாளில் சிந்திய கண்ணீரை உடனடியாக நினைவு கூர்வாய். மேலும், தேவனுடனான உனது உறவு மீண்டும் ஒரு முறை துண்டிக்கப்பட்டு, உனக்கும் தேவனுக்கும் இடையிலான உணர்ச்சி ரீதியான பிணைப்பு (இயல்பான உறவு) சேதமடையும் என்ற அச்சத்தில் இருக்கிறாய். இதுதான் உன்னுடைய கிரியையும், உன்னுடைய பிரவேசமும் ஆகும். ஆகையால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறும் அதே நேரத்தில், உங்கள் பிரவேசத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் கிரியையானது என்ன, உங்கள் பிரவேசம் என்ன என்பதைப் பார்ப்பதுடன், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உங்கள் பிரவேசத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் இன்னும் பல வழிகளில் பரிபூரணப்படுத்தப்படுவீர்கள், இதன்மூலம் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் உங்களிடத்தில் செய்யப்படலாம். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிய உங்கள் அனுபவத்தின் போது, நீங்கள் பரிசுத்த ஆவியானவரையும், உங்களையும் அறிந்து கொள்வீர்கள், மேலும், எத்தனை தீவிரமான துன்பங்களை யார் அறிவார்கள் என்பதற்கு மத்தியில், நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவை உருவாக்குவீர்கள், உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் நெருக்கமாக வளரும். கத்தரித்தல் மற்றும் சுத்திகரிப்பின் எண்ணற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, நீங்கள் தேவன் மீது உண்மையான அன்பை வளர்ப்பீர்கள். அதனால்தான் வேதனைப்படுதல், துன்புறுத்தல் மற்றும் இன்னல்கள் ஆகியவற்றைக் கண்டு நீங்கள் அஞ்சக்கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்; நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மட்டுமே கொண்டிருந்து, நீங்கள் உங்கள் பிரவேசத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. தேவனின் கிரியை நிறைவடையும் நாள் வரும்போது, நீங்கள் உழைத்ததற்கான பலனே இருக்காது; நீங்கள் தேவனின் கிரியையை அனுபவித்திருந்தாலும், நீங்கள் பரிசுத்த ஆவியானவரை அறிந்து கொண்டிருக்க மாட்டீர்கள் அல்லது உங்கள் சொந்த பிரவேசத்தைப் பெற்றிருக்க மாட்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் மனுஷனில் கிரியை செய்யும் தெளிவுபடுத்தலானது மனுஷனின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அல்ல, ஆனால் மனுஷனின் பிரவேசத்திற்கான பாதையைத் திறப்பதற்கும், அதேபோல் மனுஷனைப் பரிசுத்த ஆவியானவரை அறிந்துகொள்ள அனுமதிப்பதற்கும், மற்றும் இந்த நிலையில் இருந்து தேவனுக்கான பயபக்தி மற்றும் தேவனை வழிபடும் உணர்வுகளையும் வளர்ப்பதற்கும் செய்யப்படுகிறது.

முந்தைய: கிரியையும் பிரவேசித்தலும் (1)

அடுத்த: கிரியையும் பிரவேசித்தலும் (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக