அத்தியாயம் 52

நான் நீதியின் சூரியனாக வெளிப்படுகிறேன், மற்றும் நீங்களும் நானும் ஒன்றாக மகிமையையும் நல்ல ஆசீர்வாதங்களையும் என்றென்றைக்கும் பகிர்ந்து கொள்கிறோம்! இது ஒரு மறுக்க முடியாத உண்மை, மேலும், இது ஏற்கனவே உங்களுக்குள் உறுதிப்படுத்தத் தொடங்கிவிட்டது. ஏனென்றால், நான் வாக்குறுதி அளித்த அனைத்தையும், நான் உங்களுக்காக நிறைவேற்றுவேன்; நான் கூறும் அனைத்தும் மெய்த்தன்மை கொண்டதாகும், மற்றும் அது வெறுமையாய்த் திரும்பாது. இந்த நல்ல ஆசீர்வாதங்கள் உங்கள் மீது உள்ளன, மற்றும் இவற்றை வேறு யாராலும் உரிமை கோர முடியாது; அவை ஒருமனதாக என்னுடன் ஒருங்கிணைந்து செய்த உங்களின் ஊழியத்தின் பலன்களாகும். உங்களின் மதம் சார்ந்த எண்ணங்களைத் தூக்கி எறியுங்கள்; என் வார்த்தைகளின் மெய்த்தன்மையை விசுவாசிக்கவும், மற்றும் சந்தேகத்துடன் இருக்க வேண்டாம்! நான் உங்களுடன் வேடிக்கையாகப் பேசவில்லை; நான் சொல்வது உண்மையே. நான் யார் மீது ஆசீர்வாதங்களை அருள்கிறேனோ, அவர்கள் அதைப் பெறுவார்கள், அதே வேளையில், நான் யார் மீது ஆசீர்வாதங்களை அருளவில்லையோ, அவர்கள் எதையும் பெறமாட்டார்கள். இவை அனைத்தும் என்னால் தீர்மானிக்கப்படுகின்றன. பூமி சார்ந்த செல்வ வளம் வெறுமனே முக்கியத்துவமற்றது! எனது பார்வையில், அது வேறொன்றுமில்லை, ஒரு பைசா கூட மதிப்பு இல்லாத சாணம் ஆகும். எனவே நீங்கள் பூமி சார்ந்த இன்பங்களை மிகவும் உயர்வாக மதிக்கக் கூடாது. என்னுடன் பரலோகம் சார்ந்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பது மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பலனளிப்பதாகவும் இல்லையா?

முன்னர், சத்தியம் வெளிப்படுத்தப்படவில்லை, மற்றும் நான் வெளிப்படையாகத் தோன்றவில்லை; அந்நாட்களில், நீங்கள் என் மீது சந்தேகப்பட்டு, என்னைக் குறித்து உறுதியாக உணரத் துணியவில்லை. இருப்பினும், இப்போது அனைத்து விஷயங்களும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன, மற்றும் நான் நீதியின் சூரியனாக வெளிப்பட்டுள்ளேன்—எனவே நீங்கள் இன்னும் சந்தேகத்தில் இருந்தால், அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்தகாரம் பூமியை மூடியபோது, உங்களால் ஒளியைக் காண முடியவில்லை என்பது மன்னிக்கக் கூடிய ஒன்றாகும், ஆனால் இப்போது சூரியனானது அனைத்து அந்தகார மூலைகளையும் ஒளிரச் செய்துள்ளது, மறைக்கப்பட்டவை இனி மறைக்கப்படுவதில்லை, மற்றும் மறைத்து வைக்கப்பட்டவை இனி மறைத்து வைக்கப்படுவதில்லை—நீங்கள் இன்னும் சந்தேகத்துடன் இருந்தால், நான் உங்களை எளிதில் மன்னிக்க மாட்டேன்! இப்போது என்னைப் பற்றி முழுமையான உறுதியுடன் இருப்பதற்கான நேரமாகும், உங்களை நீங்களே எனக்காக அர்ப்பணித்து, எனக்காக ஒப்புக் கொடுக்க விருப்பம் கொள்வதற்கான நேரமாகும். என்னைச் சிறிதளவு எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மாற்றுக் கருத்தின்றி அல்லது ஒரு கணம் தாமதமின்றி நியாயத்தீர்ப்பின் அக்கினிகளில் உடனடியாக இடப்படுவார்கள்—ஏனென்றால் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு வந்துவிட்டது, மற்றும் யாருடைய மனங்களும் இருதயங்களும் சரியாக இல்லையோ, நியாயத்தீர்ப்பு விரைவாக வழங்கப்படும். “என் கிரியை ஒளிரும் மின்னல் போன்றது” என்பதற்கான உண்மையான அர்த்தம் இதுவே.

அது வேகமாக முன்னேறுகிறது; அது ஜனங்களை வியப்படையச் செய்யாமல் இருக்க முடியாது, அது ஜனங்களை அச்சத்தை உணரும்படி செய்யாமல் இருக்க முடியாது, அதை இனியும் தாமதிக்க முடியாது, மற்றும் அதை நிறுத்த முடியாது. எந்த அளவு அதிகமாக என் கிரியை மேற்கொள்ளப்படுகிறதோ, அந்த அளவு வேகமாக அது முன்னோக்கிச் செல்லும்; விழிப்புடனும் ஆயத்தத்துடனும் இல்லாதவர்கள் தூக்கி எறியப்படும் ஆபத்தை எப்போதும் சுமப்பார்கள். சோதனையின் தூண்டுதலுக்கு இனி நீங்கள் இணங்க முடியாது. என் வார்த்தையானது முழுவதுமாகத் தொடங்கி, புறஜாதி தேசங்கள் மற்றும் பிரபஞ்ச உலகை நோக்கி விரிவடைகிறது. நியாயத்தீர்ப்பின் அக்கினிகள் இரக்கமற்றது, யாரிடமும் இரக்கமோ அல்லது அன்போ இல்லாதது. தேவனிடம் விசுவாசமாக இருப்பவர்கள் எனினும், தவறான சிந்தனைகள் மற்றும் யோசனைகளைக் கொண்டவர்கள் அல்லது சிறிதளவு எதிர்த்தால் கூட, அவர்களும் நீயாயந்தீர்க்கப்படுவார்கள்; இது குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. என் ஒளி யார் மீதெல்லாம் வீசப்படுகிறதோ, அவர்கள் ஒளியினுள் வாழ்ந்து ஒளியில் செயல்படுவார்கள், மற்றும் இறுதி வரை எனக்கு ஊழியம் செய்வார்கள். ஒளியினுள் வாழாதவர்கள் அந்தகாரத்தில் வாழ்கின்றனர். அவர்களின் சொந்தக் குற்றத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறைகளைச் சார்ந்து, அவர்களுக்கு நியாயத்தீர்ப்பிட்ட பின்னர் நான் ஒரு முடிவை எடுப்பேன்.

என்னுடைய நாள் வந்துவிட்டது. கடந்த காலத்தில் நான் குறிப்பிட்ட “என்னுடைய நாள்,” இப்போது உங்கள் கண் முன்னே இருக்கிறது, ஏனென்றால், நீங்கள் என்னுடன் சேர்ந்து கீழிறங்கினீர்கள். நான் உன்னுடன் மற்றும் நீ என்னுடன்; நாம் வானில் சந்தித்து, மகிமையில் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம். என்னுடைய நாள் உண்மையில் முழுமையாக வந்துவிட்டது!

முந்தைய: அத்தியாயம் 51

அடுத்த: அத்தியாயம் 53

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக