அத்தியாயம் 93

ஒருவரின் கண்களுக்கு முன்பாக உண்மை நிறைவேறுகிறது, மேலும் ஒவ்வொரு காரியமும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது; எனது கிரியையின் வேகம் ஏவப்பட்ட ஏவுகணையைப் போல அதிவேகமாக உயரே எழும்புகிறது. இதை யாரும் எதிர்பார்த்ததே இல்லை. காரியங்கள் நடந்த பிறகு தான் எனது வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதற்கு சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததிகளும் விதிவிலக்கல்ல, மேலும் அவர்கள் சொந்தக் கண்களால் எனது அற்புதமான கிரியைகளைப் பார்ப்பதற்காக அவர்கள் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். எனது கிரியைகளைப் பார்த்த பிறகு நீ என்னைப் பற்றி உறுதியாக இருப்பதால், நான் உன்னைக் கைவிட மாட்டேன் என்று நினைக்காதே—அது அவ்வளவு எளிதல்ல! நான் சொன்ன வார்த்தைகளையும், நான் தீர்மானித்த நிகழ்வுகளையும் நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன், அவை வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாது. சீனாவில், எனது முதற்பேறான குமாரர்களான சிறுபான்மையினரைத் தவிர, எனது ஜனங்களாக இருப்பவர்கள் சிலரே. ஆகவே, இன்று நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுகிறேன் (என்னை மிகவும் கொடூரமாகத் துன்புறுத்திய சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி) நீங்கள் எந்தப் பெரிய நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டாம், மேலும் எனது கிரியையின் கவனம் (உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல்) எனது முதற்பேறான குமாரர்கள் மீதும், சீனாவிற்கு அப்பால் உள்ள பல நாடுகளின் மீதும் உள்ளது. இந்தக் காரணத்திற்காக, எனது முதற்பேறான குமாரர்கள் வளரும் போது, எனது சித்தம் நிறைவேறும். (எனது முதற்பேறான குமாரர்கள் வளர்ந்தவுடன், அனைத்துக் காரியங்களும் செய்யப்படும், ஏனென்றால் முன்னால் உள்ள பணி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.) சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெட்கப்படுத்துவதற்காக மட்டுமே நான் இப்போது இந்த ஜனங்களை என் அற்புதமான செயல்களின் ஒரு பகுதியைப் பார்க்க அனுமதிக்கிறேன். இந்த ஜனங்கள் வெறுமனே அதில் மகிழ்ச்சி அடைய முடியாது ஆனால் அவர்கள் எனக்கு ஊழியம் செய்வதில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவர்களுக்கு வேறு வழியில்லை, ஏனென்றால் என்னிடம் எனது ஆட்சிமுறை ஆணைகள் உள்ளன, யாரும் அவற்றுக்கு இடறலுண்டாக்கத் துணிவதில்லை.

வெளிநாட்டவர்களின் வருகையைப் பற்றிய சில சூழ்நிலைகளைப் பற்றி நான் இப்போது ஐக்கியம் கொள்வேன், அதனால் நீங்கள் முன்னரே அறிந்து, எனது நாமத்திற்குச் சாட்சிப் பகர எல்லாவற்றையும் ஒழுங்காக ஆயத்தம் செய்து, அவர்களைக் கண்காணித்து அவர்களை ஆளுங்கள். (“அவர்களைக் கண்காணித்து அவர்களை ஆளுங்கள்” என்று நான் சொல்லுகிறேன், ஏனென்றால் அவர்களுக்குள் பெரியவர்களாக இருப்பவர்கள் இன்னும் உங்களுக்குள் சிறியவர்களாக இருக்கிறார்கள்.) இந்த ஜனங்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டைப் பெற்றுள்ளனர், மேலும் எதிர்காலத்தில், அவர்கள் அனைவரும் முன் ஏற்பாட்டின்படி சீனாவில் ஒன்று கூடுவார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தன்னை அறியாமலேயே எழுந்து, எதிர்க்க முழுவதுமாக முயற்சிக்கிறது, ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! எனது நிர்வாகத் திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது, மேலும் எனது படிநிலைகளை எதுவும் யாரும் தடுக்கத் துணிவதில்லை. நான் அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் வெளிப்பாட்டைக் கொடுக்கிறேன், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றி செயல்படுகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அடிமைத்தனத்தை அவர்கள் நிச்சயமாக அனுபவிக்க மாட்டார்கள், ஏனென்றால் என்னில், அனைத்தும் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. நான் எல்லாவற்றையும் சரியான முறையில் ஏற்பாடு செய்துள்ளேன், அவர்களை மேய்ப்பதற்கான ஆயத்த வேலைகளை நீங்கள் செய்ய வேண்டுமென காத்திருக்கிறேன். நான் தொடக்கத்திலிருந்தே அப்படித் தான் சொல்லி வருகிறேன், ஆனால் உங்களில் பெரும்பாலோர் இன்னும் பாதி விசுவாசம் மட்டுமே கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது எப்படி இருக்கிறது? நீங்கள் வாயடைத்துப் போய்விட்டீர்கள், இல்லையா?

இந்தக் காரியங்கள் அனைத்தும் இரண்டாம் தரமானவை; முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் அனைத்து ஆயத்த வேலைகளையும் கூடிய சீக்கிரம் முடிக்க வேண்டும். பதற வேண்டாம். கிரியை செய்வது நான், நேரம் வரும்போது, எனது கிரியையை நானே செய்வேன். நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முற்றிலுமாக அழித்து விட்டேன். அதாவது, எனது முதற்பேறான குமாரர்களைத் தவிர, எல்லா ஜனங்களிடமிருந்தும் எனது ஆவியானவர் விலகியிருக்கிறார் (இப்போது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி யார் என்பதை வெளிப்படுத்துவது எளிதாகும்). இந்த ஜனங்கள் எனக்கு ஊழியம் செய்து முடித்து விட்டார்கள், நான் அவர்களைத் திரும்ப பாதாளக்குழிக்கே அனுப்புவேன். (இதற்கு நான் இவர்களில் ஒருவரையும் பயன்படுத்த மாட்டேன் என்று அர்த்தமாகும். இனிமேல், எனது முதற்பேறான குமாரர்கள் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படுவார்கள், எனது பக்கத்தில் இருப்பவர்களும், நான் பயன்படுத்த ஏற்றவர்களும் என்னுடைய முதற்பேறான குமாரர்களாக இருப்பார்கள்.) எனது முதற்பேறான குமாரர்களே, நான் உங்களுக்கு அளிக்கும் ஆசீர்வாதங்களை நீங்கள் அதிகாரப்பூர்வமாக அனுபவிக்கிறீர்கள் (நான் வெறுத்து ஒதுக்கும் அனைவரும் அவர்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தியுள்ளனர்), இனிமேல் உங்களிடையே என்னை மீறிய நிகழ்வுகள் எதுவும் இருக்காது. நீங்கள் உண்மையாக, என்னைப் பற்றி நூறு சதவிகிதம் உறுதியாக இருக்கிறீர்கள். (இன்றுதான் இது முழுமையாக நிறைவேற்றப்பட்டது, நான் இந்த நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்தேன்.) உங்கள் இருதயங்களிலும் சிந்தைகளிலும் நீங்கள் வைத்திருப்பதெல்லாம் என் மீது அளவற்ற அன்பும் பயபக்தியும் மட்டுமே, நீங்கள் என்னைத் துதித்து எல்லா நேரங்களிலும் என்னை மகிமைப்படுத்துகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மூன்றாம் வானத்தில் என் அன்பின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் வாழ்கிறீர்கள். என்ன ஈடுஇணையற்ற பேரின்பம் மற்றும் மகிழ்ச்சி! இது மற்றொரு உலகம், ஜனங்கள் கற்பனை செய்ய கடினமான ஒன்று—உண்மையான, ஆவிக்குரிய உலகம்!

அனைத்துப் பேரழிவுகளும் அடுத்தடுத்து எழுகின்றன, ஒவ்வொன்றும் முந்தினதைவிட மிகவும் கடுமையானவை, மேலும் நிலைமை நாளுக்கு நாள் பதற்றமாகிறது. இது பேரழிவுகளின் ஆரம்பம் மட்டுமே; வரவிருக்கும் மிகக் கடுமையான பேரழிவுகள் மனிதனால் கற்பனை செய்ய முடியாதவை. எனது குமாரர்கள் அவற்றை சரி செய்யட்டும்; இது எனது ஆட்சிமுறை ஆணை, நான் இதை நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்பாடு செய்தேன். இதுவரை மனிதன் கண்டிராத எல்லா அடையாளங்களும் அற்புங்களும், என்னிடமிருந்து எழும்பி, எல்லா மக்களுக்கும் (என் ராஜ்யத்தின் மக்கள் அனைவருக்கும்) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. ஆனால் இது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஒன்று. பதட்டப்படாதீர்கள். ராஜ்யத்திற்குள் நுழைவது, இதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்—ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான நிலை என்ன? மேலும் ராஜ்யம் என்றால் என்ன? இது ஒரு உண்மையான நகரமா? நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ராஜ்யம் என்பது பூமியிலோ அல்லது உண்மையான வானத்திலோ இல்லை, ஆனால் மனிதனால் பார்க்க முடியாத அல்லது தொட முடியாத ஆவிக்குரிய உலகத்தில் இருக்கிறது. எனது நாமத்தை ஏற்றுக்கொண்டு என்னாலே பரிபூரணமாக்கப்பட்டு, என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பவர்களால் மட்டுமே அதில் பிரவேசிக்க முடியும். முன்பு அடிக்கடி குறிப்பிடப்பட்ட ஆவிக்குரிய உலகம் என்பது ராஜ்யத்தின் மேற்பரப்பு ஆகும். எனினும், உண்மையிலேயே ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது எளிதான காரியம் அல்ல. அதில் பிரவேசிப்பவர்கள் எனது வாக்குத்தத்தத்தைப் பெற வேண்டும் மற்றும் என்னால் முன்குறிக்கப்பட்டவர்களாகவும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, ஆவிக்குரிய உலகம் என்பது ஜனங்கள் விரும்பியபடி வந்து செல்லக்கூடிய இடம் அல்ல. இதைப் பற்றிய ஜனங்களின் புரிதல் மிகவும் மேலோட்டமானது மற்றும் முற்றிலும் மனிதனின் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. ராஜ்யத்தில் நுழைபவர்களால் மட்டுமே ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும், எனவே இந்த ஆசீர்வாதங்களை மனிதனால் அனுபவிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவனால் அவற்றைப் பார்க்க முடியாது. இது எனது இறுதி ஆட்சிமுறை ஆணையாகும்.

முந்தைய: அத்தியாயம் 92

அடுத்த: அத்தியாயம் 94

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக