அத்தியாயம் 75

சிறிதளவு விலகலுமின்றி, என் வார்த்தைகள் பேசப்பட்டவுடனேயே அனைத்தும் நிறைவேறும். இப்போதிருந்து, மறைக்கப்பட்ட இரகசியங்கள் அனைத்தும் மறைக்கப்படாது, மேலும் அவை என் அன்புக்குரிய குமாரர்களான உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். என்னில் இன்னும் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும், மற்றும் பெரிய இரகசியங்களையும் நீ காணும்படி நான் செய்வேன். இந்த விஷயங்கள் நிச்சயமாக உங்களை வியப்படையச் செய்து, சர்வவல்லமையுள்ள தேவனாகிய என்னைப் பற்றிய ஒரு சிறப்பானப் புரிதலை உங்களுக்கு வழங்கி, அதில் என் ஞானத்தை விளங்கிக் கொள்ள உங்களை அனுமதிக்கும். சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் மனிதர்கள் பார்த்திராத ஒரே மெய்த்தேவனுக்கு முன்பாக இன்று நீங்கள் நேருக்கு நேர் கொண்டுவரப்பட்டுள்ளீர்கள், மேலும், என்னைக் குறித்து விசேஷமான எதுவும் இல்லை. நான் உங்களுடன் புசிக்கிறேன், வாழ்கிறேன், பேசுகிறேன், மற்றும் சிரிக்கிறேன், மேலும், நான் எப்போதும் உங்களுக்குள் வாழ்கிறேன், அதே நேரத்தில் உங்கள் மத்தியில் உலாவவும் செய்கிறேன். விசுவாசிக்காதவர்களுக்கு அல்லது தமக்கே உரித்தான கருத்துகளைக் கொண்டவர்களுக்கு, இது ஒரு தடைக்கல் ஆகும். இதுவே என் ஞானம். என் இயல்பான மனிதத்தன்மைக்குத் தெரியாத விஷயங்களையும் சில ஜனங்களுக்கு நான் வெளிப்படுத்துவேன். ஆனால் இதன் பொருள் நான் தேவன் இல்லை என்பதல்ல. அதற்கு மாறாக, நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை நிரூபிக்க இந்தக் கருத்தே போதுமானதாகும். விசுவாசிக்கும் ஜனங்களுக்கு, இந்தக் கருத்து ஒரு முடிவான விளைவைக் கொண்டிருக்கும், மேலும், இந்தக் கருத்தின் காரணமாக அவர்கள் என்மீது நூறு சதவிகிதம் உறுதியாக உள்ளனர். அதிகம் பதற்றமடைய வேண்டாம்; விஷயங்களை நான் உங்களுக்கு ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவேன்.

உங்களுக்கு நான் மறைக்கப்படாமல் வெளிப்படையாக உள்ளேன். எனினும், குறிப்பிட்ட அளவு சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட, துரோகிகளான அவிசுவாசிகளுக்கு—நான் மறைந்தே இருப்பேன். எனினும், அனைத்து ஜனங்களுக்கும் என்னை நான் வெளிப்படுத்துவேன் என்று நான் முன்பு கூறியபோது, நான் எனது நீதி, நியாயத்தீர்ப்பு மற்றும் மாட்சிமையைக் குறிப்பிட்டேன், எனவே, அவர்கள் பெரும் பலன் மூலமாக, பிரபஞ்சம் மற்றும் அனைத்து விஷயங்களுக்கும் நான் தான் பொறுப்பு என்று அவர்கள் அறிவார்கள். துணிவுடன் செயல்படுங்கள்! உங்கள் தலையை உயர்த்தியபடி இருங்கள்! அஞ்ச வேண்டாம்: உங்களின் பிதாவாகிய நான் உங்களை ஆதரிப்பதற்காக இங்குள்ளேன், மேலும், நீங்கள் துன்பப்பட மாட்டீர்கள். நீங்கள் அடிக்கடி என் முன் ஜெபம் செய்து மன்றாட்டை ஏறெடுக்கும் வரை, நான் அனைத்து விசுவாசத்தையும் உங்கள் மீது அருளுவேன். அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியிலிருந்து தீயவர்கள் போல் தோன்றலாம், ஆனால் அஞ்ச வேண்டாம், இதற்குக் காரணம் உங்களிடம் குறைவான விசுவாசம் உள்ளது என்பதாகும். உங்கள் விசுவாசம் வளரும் வரை, எதுவும் மிகவும் கடினமானதாக இருக்காது. உற்சாகமடைந்து, உங்கள் இதயத்தின் உள்ளடக்கத்திற்குச் செல்லுங்கள்! அனைத்தும் உங்கள் காலுக்கடியிலும், எனது பிடியிலும் உள்ளது. சாதனை அல்லது அழிவானது என் ஒற்றை வார்த்தையால் முடிவு செய்யப்படுகிறதல்லவா?

நான் இப்போது பயன்படுத்துபவை எல்லாம் என்னால் நீண்ட காலத்திற்கு முன் ஒவ்வொன்றாக அங்கீகரிக்கப்பட்டவையாகும். அதாவது, முதற்பேறான குமாரர்களின் குழுவில் உள்ள அந்த ஜனங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டனர், மேலும், நான் உலகைச் சிருஷ்டித்த நாள் முதலே அவர்கள் தீர்மானிக்கப்பட்டு விட்டனர். இதை யாராலும் மாற்ற முடியாது, மேலும், அனைவரும் என் கட்டளைப்படி இருக்க வேண்டும். எந்தவொரு மனிதராலும் இதைச் செய்ய முடியாது; இவை அனைத்தும் என் ஏற்பாடுகளாகும். அனைத்தும் என்னுடன் நிலையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்; அனைத்தும் என்னுடன் சிறிதளவு முயற்சியுமின்றி சரியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும். நான் பேசுகிறேன், அது நிறுவப்படுகிறது; நான் பேசுகிறேன், அது செய்து முடிக்கப்படுகிறது. சர்வதேசச் சூழ்நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் உங்களின் பயிற்சியைத் தொடங்க விரையவில்லை? எது வரை நீங்கள் காத்திருப்பீர்கள்? உங்களைச் சந்திப்பதற்காக வெளிநாட்டினர் சீனாவிற்குள் பெருக்கெடுத்து வரும் நாள் வரை நீங்கள் காத்திருப்பீர்களா? முன்பு நீங்கள் கொஞ்சம் மெதுவாக இருந்திருக்கலாம், ஆனால் உங்களை நீங்கள் தொடர்ந்து திருப்திப்படுத்திக் கொள்ள முடியாது! எனது குமாரர்களே! என்னுடைய மிகுந்த சிரத்தையுடன் கூடிய நோக்கங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்! அடிக்கடி என்னை நெருங்குபவர்கள் அனைத்தையும் ஆதாயப்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையா?

என்னுடைய கிரியை மின்னல் வேகத்தில் இருக்கும், ஆனால் நிச்சயமாக இடியின் கர்ஜனை ஒலியைப் போல் இருக்காது. இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? உங்களால் என்னுடன் சிறப்பாக ஒத்துழைக்க முடியவும், என் நோக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் வேண்டும். நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் துன்பத்தைக் குறித்து அஞ்சுகிறீர்கள்; இது உங்களின் இருமனப்போக்கு அல்லவா? நான் உன்னிடம் சொல்கிறேன்! இன்று ஒருவர் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறார் ஆனால் அதற்கான தியாகங்கள் அனைத்தையும் செய்யவில்லை என்றால், பின்னர் அவர்கள் அனைவரும் பெறுவது ஆக்கினைத்தீர்ப்பையும் எனது நியாயத்தீர்ப்பையும் ஆகும். எனினும், அனைத்துத் தியாகங்களையும் செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் சமாதானத்தை அனுபவிப்பார்கள் மற்றும் அனைத்தையும் மிகுதியாகக் கொண்டிருப்பார்கள், மேலும், அவர்கள் பெறும் அனைத்தும் என் ஆசீர்வாதங்களாக இருக்கும். உங்களின் விசுவாசமும், நீங்கள் ஒரு விலைக்கிரயத்தைக் கொடுப்பதும் தான் இன்று அவசரமாகத் தேவைப்படுகிறது. எனது நோக்கங்களைத் தவறாகப் பொருள்கொள்ள வேண்டாம். அனைத்தும் நிறைவேறும், மற்றும் அதை நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் பார்த்து, அதைத் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பீர்கள். என்னிடம் ஒரு தவறான வார்த்தையோ அல்லது பொய்யோ இல்லை; நான் கூறும் அனைத்தும் முற்றிலும் உண்மையாகும், மேலும் ஞானத்தில் குறைவில்லை. பாதி விசுவாசித்து, பாதி சந்தேகிக்க வேண்டாம். உங்கள் மத்தியில் அனைத்தையும் நிறைவேற்றுபவர் நானே, மேலும், பொல்லாப்பு செயல்களைச் செய்பவர்களை நியாயத்தீர்ப்பிட்டு தீர்த்து வைப்பதும் நானே. நான் உங்களை நேசிக்கிறேன், மேலும் நான் உங்களைப் பரிபூரணமாக்குகிறேன். எனினும், அவர்களுக்கு போக்கிடம் எதுவும் இல்லாமலும், எந்தவொரு தடயத்தையும் விட்டுவைக்காமலும், நான் முற்றிலும் எதிரானவன்: வெறுப்பு மற்றும் அழிவு. நான் சொல்லும் மற்றும் செய்யும் அனைத்திலும் என் செழிப்பு இயல்பாகவே உள்ளது. அவற்றை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்தீர்களா? சில வார்த்தைகளை நான் பல முறை கூறியுள்ளேன், எனவே, நான் சொல்வது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? நீங்கள் என் வார்த்தைகளை வாசித்த பின்னர், அனைத்தும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்குமா? அதன் பின் அனைத்தும் நிறைவேற்றப்படுமா? என் இருதயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்கு இல்லை. நானே முழு அதிகாரம் பெற்றவன், ஞானம் அனைத்தையும் கொண்டவன், ஜனங்களின் இருதயத்தில் ஆழமாகப் பார்க்கும் ஒரே மெய்த்தேவன் என்று நான் ஏன் கூறுகிறேன்? இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? நான் வலியுறுத்திக் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நீ மனப்பாடம் செய்துவிட்டாயா? நீ எப்படிச் செயல்படுகிறாய் என்பதற்கான கோட்பாடுகளாக உண்மையில் அவை மாறிவிட்டனவா?

ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் கவனித்தபடி நான் அனைத்திற்கும் மேல் நிற்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஜனங்களுக்கும் என் மாபெரும் வல்லமையையும், என் அனைத்து ஞானத்தையும் வெளிப்படுத்துவேன். இப்போதே இன்பத்தைப் பின்தொடர வெறுமனே உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டாம். உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று சேரும் போது, எது உங்களுடையதாக இருக்காது? இருப்பினும், நீங்கள் இப்போது குறைவுடன் இருக்கும்படி நான் விடமாட்டேன், அல்லது உங்களைத் துன்பப்பட நான் அனுமதிக்க மாட்டேன். நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை விசுவாசியுங்கள! அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மிகவும் சிறப்பானதாக மாறும்! என் முதற்பேறான குமாரர்களே! அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களை வந்து சேரும்! அவை முடிவில்லாமலும், வழங்கலில் தீராமலும், செழிப்பாகவும், மிகுதியாகவும் மற்றும் முழுவதும் பூரணமாகவும் உங்களால் அனுபவிக்கப்படும்!

முந்தைய: அத்தியாயம் 74

அடுத்த: அத்தியாயம் 76

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று...

அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண்...

இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்

நீ இயேசுவைப் பார்க்க விரும்புகிறாயா? நீ இயேசுவோடு வாழ விரும்புகிறாயா? இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறாயா? அப்படியானால்,...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக